07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, March 31, 2012

கதம்பம் - 7 (வலைச்சரத்தில் இன்று)





இன்று வலைச்சரத்தில் எனக்கு ஏழாவது நாள். அதாவது கடைசி நாள். இன்றும் சில பதிவுகளைப் அறிமுகம் செய்து நெகிழ்ச்சியுடன் விடைபெறுகிறேன். அறிமுகங்களைப் பார்த்து விடலாம்.

1. ராஜ்குமார் நடத்தும் தமிழ்க்குறிஞ்சி தளத்தில் இருக்கும் இந்தக் கட்டுரையைப் பாருங்கள. இது கட்டுரையா அல்லது கவிதையா என வியக்க வைக்கும் அருமையான பதிவு. உணர்வுகள் நெருடுகின்றன. நெஞ்சம் கனத்துப் போகிறது. கண்கள் பனிக்கிறது. உங்களுக்காக இதோ அந்த பதிவு. ஒரு குருவிக்கு நிகழ்ந்தது. ஆனால் இப்பதிவர் நீண்ட நாட்களாக பதிவெழுதாமல் இருந்து வருகிறார். இவரைப் போன்றவர்கள் தொடர்ந்து எழுத வேண்டும்.

2. சுபா நடத்தும் சுபாவின் குறிப்பு தளத்தில் உள்ள இந்த பதிவைப் படியுங்கள். வீட்டிலுள்ள பொருட்களைப் பாதுகாக்க டிப்ஸ். பல மருத்துவக் குறிப்புகளும் எழுதியுள்ளார்.

3. ச.பிரேம்குமார் நடத்தும் மொழியோடு ஒரு பயணம் என்கிற வலைப்பூவில் உள்ள இந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்ற கவிதையைப் பாருங்கள். காதலிக்கு ஏக்கத்தோடு வாழ்த்து சொல்லும் கவிதை. ஏன் என்று நீங்களே படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

4. இந்த மண்குதிரை எனும் வலைப்பூவில் ஆசிரியர் தேவதச்சனின் கவிதை நூல் ஒன்றை விமர்சனம் செய்து எழுதியுள்ள இந்த ஒரு கணத்தின் நூற்றாண்டு அனுபவம் என்கிற கட்டுரையை வாசித்துப் பாருங்கள். நவீனத்துவக் கவிதைகளும் விமர்சனங்களும் விரவிக் கிடக்கிற தளம் இது.

5. தமிழ்த்தேனீயின் தளத்தை (அவரது தளத்தின் பெயரும் அதுவே) வாசிக்கத் தவறாதீர்கள். அருமையாக உள்ளது. அவரது உணவும் ஆரோக்கியமும் ஒரு ஒப்பற்ற மருத்துவக் கட்டுரையாகும். அது எப்படி உணவையே மருந்தாக மாற்றுவது என்ற அழகாக விவரிக்கிறது.

6. தமிழ் உதயத்தின் (தளத்தின் பெயரும் அதுவே) சிறுகதைகளை வாசிக்கத் தவறாதீர்கள். தரமான கதைகள். வார இதழ்களிலும் எழுதி வருகிறார். கல்கி இதழில் வெளிவந்த அவரது மீசைக்கார அப்பா என்ற இக்கதையை வாசியுங்கள்.

7. இதோ தமிழ்ப்புத்தாண்டு வரப் போகிறது. ஆனால் இந்த சங்கப்பலகை எனும் தளத்தின் ஆசிரியர் தை முதல் தேதிதான் தமிழ்ப்புத்தாண்டு என்று அடித்துச் சொல்கிறார். அதற்கு சில காரணங்களும் சொல்கிறார். முடிவு எடுக்க வேண்டியது உங்க பொறுப்பு.

நன்றி சொல்லும் நேரமிது.

- இந்த அருமையான வலைச்சரப் பணியை எனக்கு வழங்கி கௌரவப்படுத்திய அன்பின் சீனா சார் அவர்களுக்கும் மற்றும் பிரகாஷ் சார் அவர்களுக்கும் மற்றும் வலைச்சர ஆசிரியர் குழு அத்தனை பேருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதைவிட இந்த ஏழு நாட்களும் நான் தொடுத்த வலைச்சரங்களை பார்வையிட்டு வாக்கிட்டு கருத்துரையிட்டு எனக்குப் பேராதரவு வழங்கிய அத்தனை வலையுலக சொந்தங்களுக்கும் உன் உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றிகளை நெகிழ்சியுடன் தெரிவிக்கிறேன். நன்றி! நன்றி! நன்றியைத் தவிர வேறில்லை....!

மேலும் வாசிக்க...

கதம்பம் - 6 (வலைச்சரத்தில் இன்று)





இனறைக்கு வலைச்சரத்தில் ஆறாவது நாள். இன்றும் சில அறிமுகங்களைக் காணலாம்.

1. நளாயினி ஸ்விட்சர்லாந்தில் வசிக்கிறார். இவரது தளமான உயிர்கொண்டு தளத்தில் கவிதை, கட்டுரை போன்ற அருமையான பதிவுகள் எழுதியிருக்கிறார். சமீப காலங்களில் எழுதியதாக தெரியவில்லை. ஆனால் இவரது பழைய பதிவுகள் சுவையாக இருக்கின்றன. இவரது கவிதையான பால் கடன் படித்துப் பாருங்கள். ஒரு தாயின் ஏக்கம் தெரிகிறது.

2.ஜீவி நடத்தும் பூவனம் தளத்தில் பல்சுவைக் கட்டுரைகள் நிறைந்துள்ளன. தினம் தினம் சந்தோஷம் என்ற அவரது வாழ்வியல் தொடரை வாசித்துப் பாருங்கள். நதியோரம் காற்று வாங்கிய உணர்வு வரும்.

3. தமிழ்ச்சித்தன் எழுதும் ஒரு அகதியின் டைரிக்குறிப்பு என்ற தளத்தில் இருக்கும் இந்த கட்டுரையைப் பாருங்கள். நாட்டைப் பற்றி நினைக்கையில் வெட்கமாக இருக்கிறது - அருந்ததிராய். இந்த தளத்தில் அருமையான தமிழ் தளங்களின் நீண்ட பட்டியல் ஒன்று உள்ளது. க்ளிக்கிப் பாருங்கள்.

4. துமிழ் (தமிழ் அல்ல) நடத்தும் மருத்துவம் பேசுகிறது என்ற தளத்தில் அனைத்து வியாதிகளுக்கும் தேவையான ஆலோசனை மற்றும் குறிப்புகள் இருக்கிறது. உங்களுக்கு ஏதேனும் வியாதியிருந்தாலும் அதைப்பற்றி இமெயில் அனுப்பினால் பதில் தருவேன் என்கிறார். இதை விட வேறென்ன வேணும்? உடனே விஜயம் செய்யுங்கள். உதாரணத்திற்கு அவரது மருத்துவக் கட்டுரையான சர்க்கரை வியாதியும் சளியும் படித்துப் பாருங்கள்.

4. ரமேஷ் நடத்தும் தமிழ் நகைச்சுவை தளத்தில் ஏராளமான நகைச்சுவைத் துணுக்குகள் குவிந்து கிடக்கின்றன. கவலை மறந்து சிரிக்க இந்த தளத்தை அணுகுங்கள். உதாரணத்துக்கு சிரிப்பைத் தூண்டும் புகைப்படங்கள் என்ற பதிவை வாசியுங்கள். இல்லை இல்லை பாருங்கள். சிரிப்பு பொத்துக் கொண்டு வரும்.


5. தமிழ் இனிது என்ற இத்தளத்தில் அழகான கவிதைகள் இருக்கின்றன. படியுங்கள் இக்கவிதையை நெடுஞ்சாலையில் சிதறிய மனிதநேயம்.


6. தமிழ் அமுதன் நடத்தும் கண்ணாடி தளத்தில் பல்சுவைப் பதிவுகள் எழுதுகிறார். ஒரு சிறுகதை. நிஜக்கதை போல் இருக்கிறது. ஒரு இடத்தை விற்கிறார். பிறகு வருந்துகிறார். காரணம் நெஞ்சைப் பிழிகிறது. கனமான கதை. படியுங்கள். கருவேல மனம்.

7. ஜீவநதி தளத்தில் தங்கராசு எழுதியுள்ள இந்த மாரடைப்பு பற்றிய மருத்துவக் கட்டுரையைப் படியுங்கள். நிச்சயம் கவரும். படங்களுடன் விளக்குகிறார். மேலும் பல சுவாரஸ்யமான பதிவுகள் எழுதியிருக்கிறார்.


நாளை வலைச்சரத்தில் கடைசி நாள். மீதமுள்ள சில பதிவுகளை நாளை அறிமுகப்படுத்துகிறேன். நன்றி!



.
மேலும் வாசிக்க...

Friday, March 30, 2012

கதம்பம் - 5 (வலைச்சரத்தில் இன்று)

வலைச்சரத்தில் இன்று ஐந்தாவது நாள். இன்றும் சில அறிமுகங்களைப் பார்க்கலாம்.

1. ஜ்யோவ்ராம் சுந்தர் தளமான மொழிவிளையாட்டு என்கிற வலைப்பூவில் அருமையான பல்சுவைப் பதிவுகள் எழுதி வருகிறார். நவீனத்துவம் மற்றும் முற்போக்கான படைப்புகளை படைத்து வருகிறார். நன்றாக எழுதுகிறார். கதை, கட்டுரை, கேள்வி-பதில் என்று நிறைய எழுதியிருக்கிறார். படித்துப் பாருங்கள்.

இவரது விமலாதித்த மாமல்லன் என்ற விமர்சனக் கட்டுரையை வாசித்துப் பாருங்கள்.

2. நீங்கள் மொழிப்பற்று மிக்கவரா? தமிழ் மொழி பற்றி அறிந்துகொள்ள வேண்டுமா? மொழி, பண்பாடு பற்றிய நிறைய தகவல்கள், தமிழ் அகராதிகள், கட்டுரைகள், பழந்தமிழ் இலக்கியங்கள் என்று அனைத்தும் இத்தளத்தில் குவிந்து கிடக்கின்றன. பார்க்கத் தவறாதீர்கள். உதாரணத்துக்கு அனைத்துலக தாய்மொழி நாள் என்ற கட்டுரையை வாசியுங்கள். தமிழ் வளர என்ன செய்ய வேண்டும்? என அருமையாக கூறுகிறார் சுப.நற்குணன்.


3. மரு.ஜா.மரியானோ என்பவர் நடத்தும் பயணங்கள் என்ற தளத்தில் அருமையான அற்புதமான கட்டுரைகள் மற்றும் பல்சுவைப் பதிவுகள் குவிந்து கிடக்கின்றன. அருமையாக எழுதுகிறார். உதாரணத்திற்கு அவரது சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு வேண்டுமா வேண்டாமா என்ற கட்டுரையை வாசியுங்கள்.

4. பூங்குழல் நடத்தும் பூச்சரம் வலைப்பூவில் அருமையான கவிதைகள், கட்டுரைகள் என்று குவிந்திருக்கின்றன. நன்றாக எழுதுகிறார். கூடங்குளம் அணுமின் நிலையம் பற்றிய அவரது வித்தியாசமான பார்வையை கூடங்குளம் என்ற அவரது கட்டுரையில் காணுங்கள்.

5. ஜீவா வெங்கட்ராமன் நடத்தும் என்வாசகம் வலைப்பூவை சுவாசித்துப் பாருங்கள். இளைப்பாறுதலாக உணர்வீர்கள். இசையும் தெய்வீகமும் விஞ்ஞானமும் கலந்து அருமையான படைப்புகளை படைத்துள்ளார். பாடல்களை கர்நாடிக் ராகம் மெட்டுப் போட்டு ராக தாள குறிப்புகளுடன் படைக்கிறார். மனம் ஏதய்யா என்ற தெய்வீகப் பாடலைப் படியுங்கள். பாடுங்கள்.

6. உழவன் என்பவர் நடத்தும் தமிழோடு என்ற வலைப்பூவில் கவிதைகள், கட்டுரைகள் மற்றும் பல தளங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் என்று அருமையான படைப்புகள் பல உள்ளன. உதாரணத்துக்கு வால்மீகி என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? என்ற தகவல் கட்டுரையைப் படியுங்கள்.

7. தீஷு மதுரையில் வசிக்கிறார். இவர் நடத்தும் பூந்தளிர் வலைப்பூவில் குழந்தைகளுக்கான ஏராளமான விஷயங்கள் குவிந்திருக்கின்றன. பெரியவர்களும் படித்தால் குஷியாகிவிடுவீர்கள். திடீரென நாம் கார்ட்டூன் படம் பார்க்கிறோமே. அதுபோலத்தான். இவரது தளத்தில் பழைய அம்புலிமாமா புத்தகங்களைக் காணும் லிங்கை கொடுத்திருக்கிறார். இன்னும் ஏராளமான விஷயங்கள் உண்டு. பேப்பரை வெட்டி அழகாக கலர்புல்லாக பேப்பர் வியூவிங் செய்வது எப்படி? என்ற பதிவை படித்துப் பாருங்கள்.



- அடுத்த அறிமுகங்களோடு நாளை வருகிறேன். நன்றி.


டிஸ்கி:

இந்த பதிவை எழுதுவதற்குள் இரண்டு முறை கரண்ட் கட் ஆகிவிட்டது. என்னுடையது ரொம்ப ஸ்லோ கனெக்‌ஷன். இல்லையென்றால் இன்னும் நிறைய நிறைய பதிவர்களை அறிமுகப்படுத்தலாம். முடியவில்லை. காலத்தின் கோலம். வாய்பிருந்தால் பிற்காலத்தில் அவ்வாறு செய்கிறேன். இன்றைய பதிவு அறிமுகங்கள் இத்துடன் நிறைவு பெறுகின்றன. நாளை மற்றும் சில அற்புத பதிவர்களோடு உங்களைச் சந்திக்கிறேன். தொடர்ந்து எனக்கு ஆதரவுக் கரம் நீட்டும் பதிவுலக சொந்தங்களுக்கு என் நெஞ்சம் கனிந்த நன்றியை உரித்தாக்கிக் கொண்டு இன்றைய அறிமுகங்களை நிறைவு செய்கிறேன். நன்றி!
மேலும் வாசிக்க...

Thursday, March 29, 2012

கதம்பம் - 4 (வலைச்சரத்தில் இன்று)

இன்று வலைச்சரத்தில் நான்காவது நாள். இன்றும் கதம்பமாக சில பதிவுகளைப் பட்டியலிடுகிறேன். வளவளன்னு பேசிட்டு இருக்காமல் நேரா அறிமுகங்களுக்குப் போய் விடலாம்.

1. சந்தனமுல்லை எழுதிய பப்பு டைம்ஸ் படித்துப் பாருங்கள். நகைச்சுவைப் பதிவுகள் அருமையாய் எழுதுகிறார். இவரது தளத்தில் அருமையான பல பல்சுவைப் பதிவுகள் குவிந்திருக்கின்றன.

2. ரத்னா எழுதிய இந்த பூமியைத் தாக்கப் போகும் சூரியப் புயல் என்ற பதிவைப் பாருங்கள். அருமையாக உள்ளது. இவரது தளத்தில் பல்சுவைப் பதிவுகள் அழகழகாகப் பதியப்பட்டுள்ளது. தேடி வாசியுங்கள்.

3. வடிவேலன் எழுதும் இந்த gouthaminfotech.com தளத்தில் தொழில்நுட்பத் தகவல்களும் ஏராளமான இலவச சாப்ட்வேர்களும் குவிந்து கிடக்கின்றன. அருமையான தகவல் தொழில் நுட்பத் தகவல் களஞ்சியம். உதாரணத்துக்கு 101 தொழில்நுட்ப தளங்களின் பட்டியல் தரும் இவரது பதிவொன்றை படித்துப் பாருங்கள். 101 தளங்களின் தொகுப்பு.

4. தாமரைச் செல்வன் எழுதும் படிச்சதும் கடிச்சதும் படிச்சுப் பாருங்க. அவர் தளத்தை தவற விட மாட்டீங்க.

5. பத்ரிசேஷாத்ரி என்பர் அருமையான பல்சுவைக் கட்டுரைகள் பலவற்றை எழுதிவருகிறார். எல்லாமே சும்மா 'நச்' 'நச்' னு இருக்குதுங்க. தரமான கட்டுரைகளைப் படிக்க இந்த தளத்தை அவசியம் பாருங்க. பாலுறவு பற்றிய திருநங்கைகளின் (ரோஸ்) கருத்தை வைத்து தொலைக்காட்சியில் இவர் பங்கு கொண்ட ஒரு கலந்தாய்வுப் பேட்டியை பற்றி இவர் எழுதியிருக்கும் கட்டற்ற பாலியல் சுதந்தரம் என்ற கட்டுரையை இப்போதே வாசியுங்கள்.

6. கீதா சாம்பசிவம் என்பவர் அருமையாக நடத்தி வரும் வலைப்பூதான் எண்ணங்கள். இதில் அருமையான பல்சுவைப் பதிவுகளை ரசிக்கும் வண்ணமாக வெளியிட்டு வருகிறார். எல்லா லேபிள்களையும் படித்துப்பார்த்தால் ருசிக்கிறது. உதாரணமாக தேயிலைத் தரத்தைப் பற்றி இவர் எழுதிய டீ குடிக்க வாங்க...! என்ற பதிவை வாசித்துப் பாருங்கள்.

மின்சாரத் தட்டுபாட்டால் நிறைய பதிவுகளை அறிமுகப்படுத்த முடியாமல் போகிறது. சரி. அடுத்த பதிவில் சந்திப்போம்.
மேலும் வாசிக்க...

Wednesday, March 28, 2012

கதம்பம் - 3 (வலைச்சரத்தில் இன்று)

இன்று வலைச்சரத்தின் 3-வது நாள். எனக்குப் பிடித்த பதிவுகளை நேற்று பட்டியலிட்டிருந்தேன். இன்றும் அதைத் தொடர்கிறேன். போலாம்...ரைட்...!

1. இவர் ஒரு ஆல்ரவுண்டர். கதை, கவிதை, கட்டுரை, படத்தோடு கூடிய அற்புத செய்திகள், நகைச்சுவைத் துணுக்குகள் என்று எல்லாப் பகுதியிலும் அசத்தக் கூடியவர். பிரபலமான பதிவரும் கூட. வேற யாரைச் சொல்றேன்னு நினைக்கறிங்க... நம்ம சென்னைப் பித்தன் அவர்களைத்தான். அருமையான பதிவர். சும்மா சாம்பிளுக்கு ஒண்ணு.

நேரம் போதவில்லை!

2. தோழி சசிகலா அவர்கள் எல்லா கருப்பொருள்களையும் கொண்டு அழகழாய் கவிதை படைத்து வருகிறார்.அவரது சமீபத்திய கவிதையான தொடர்ந்திடுவோம் பயணமதை என்ற கவிதையை படித்துப் பாருங்கள்.

3. சகோதரர் ஹைதர் அலி அவர்கள் அறிவுபூர்வமான அருமையான கட்டுரைகளை அற்புதமாய் படைத்தளித்து வருகிறார். ஆக்கபூர்வமான இவரது படைப்புகள் தவறாமல் படிக்க வேண்டியவை. இவரது சமீபத்திய கட்டுரையான தொடாமலேயே ஷாக் அடிக்கும் கூடங்குளம் படித்துப் பாருங்கள். எத்தனை வித்தியாசமான அணுகுமுறை. இதைவிட அற்புதமான கட்டுரைகள் நிறைய உண்டு இவரது தளத்தில். படிக்கத தவறாதீர்கள்.

4. புதிதாக வலைப்பூ உருவாக்கம் செய்ய விரும்புவர்களுக்கும். வலைப்பூவை உருவாக்கிவிட்டு எப்படி அதை மேம்படுத்துவது என தொழில்நுட்பத் தகவல்கள் தெரியாதவர்களும் அவசியம் படிக்க வேண்டிய தொடர்தான் இந்த பிளாக் எழுதுவது எப்படி? என்கிற தொடர். எழுதியது நம்ம அப்துல் பாசித் அவர்கள். அற்புதமான தொழில்நுட்ப பதிவராவார். இவரது தளத்தைப் போய் பாருங்களேன்.அசந்து விடுவீர்கள்.அத்தனை அருமையான தொழில்நுட்பத் தகவல்கள். பிளாக் ஆரம்பிக்கணும்னா இவரது தளத்தை ஒரு விசிட் அடிச்சா போதுங்க. உதாரணத்துக்கு பிளாக் தொடங்குவது எப்படி - பகுதி 1 படித்துப் பாருங்கள்.


5. நண்பர் ஹாஜாமைதீன் அருமையான கட்டுரைகளை படைத்தளித்து வருகிறார். பிரயோஜனமான தகவல்கள் இவரது தளத்தில் ஏராளம் உண்டு. அதிரடி ஹாஜாதான் இவர். ஆபத்தை ஏற்படுத்தும் நான் ஸ்டிக் பாத்திரங்கள் என்ற இவரது பதிவை படித்துப் பாருங்களேன்.

6. அடுத்து பதிவர் வெங்கட் நாகராஜ். இவர் பல்சுவைப் பதிவுகள் எழுதினாலும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால் இவரது பிரயாணப் பதிவுகள். அந்நகரை நாமே சுற்றிப் பார்த்தது போல உணரச் செய்வன. மத்தியபிரதேசம் அழைக்கிறது என்ற தலைப்பில் ஒரு அருமையான தொடரை எழுதியிருக்கிறார். படித்துப் பாருங்கள். சாம்பிளுக்கு கீழே லிங்க்.

ஜான்சியில் ரயில் எஞ்சின்


7. அடுத்து ரஹீம் கசாலி. இவர் அரசியல் பதிவுகளை அட்டகாசமாய் எழுதி வருகிறார்.
சங்கரன்கோவிலில் ஜெயித்தது யார்?


மற்றவை அடுத்த பதிவில்.
மேலும் வாசிக்க...

Tuesday, March 27, 2012

கதம்பம் - 2 (வலைச்சரத்தில் இன்று)

இன்று எனக்குப் பிடித்த சில பதிவுகளை பட்டியலிடுகிறேன்.

எனக்குப் பிடித்த சில வலைப்பதிவுகள்:

1. இவர் அற்புதமான கவிஞர். நான் பதிவுலகில் கண்ட சிறந்த பதிவர்களில் இவரும் ஒருவர். வெறும் பொழுதுபோக்குக்காக காதல், கத்தரிக்காய் என்று எழுதாமல் ஆழமான கருப்பொருள் கொண்டு அழகான படிமம், குறியீடு உள்ளடக்கி அற்புதமாய் கவிதைகளைப் படைப்பவர். இன்றைய பதிவுலகக் கவிஞர்களில் இவர் தலைசிறந்தவர் எனலாம். மற்ற படைப்பாளிகள் இருக்கின்றனர். அநேகர் நல்ல கவிதைகளை தந்தாலும் பலரது கவிதைகளை படித்தவர்கள் தவிர பாமரர்கள் புரிந்துகொள்ள முடியாது. ஆனால் இவரது கவிதைகள் எளிமையின் மறுஉருவம். எளிமையாய் இருந்தாலும் அசத்தல் வார்த்தைகள். அலங்கார நடை. வானம் வரை எட்டும் உரைவீச்சு. இவா யார்? அவர்தான் ரமணி சார். இவரது கவிதைத் திறத்துக்கு ஓர் உதாரணமாக இந்த பரிணாமம் அல்லது யதார்த்தம் கவிதையை படித்துப் பாருங்கள். நீங்களே நான் சொல்வதனைத்தையும் ஒத்துக்கொள்வீர்கள். நல்ல தரமான பதிவர். தவறவிடாதீர்கள் இவரது கவிதைகளை.


2. அடுத்தது நம்ம முனைவர் இரா.குணசீலன். இவர் அற்புதமான படைப்பாளி. இந்த பரபரப்பான வாழ்க்கையில் இலக்கியங்களை நாம் மறந்துவிட்டோம். டென்சனாய் இருக்கும் நேரங்களில் இவரது படைப்புகளில் சற்று இலக்கியச் சாறு அருந்தினீர்களானால் நிச்சயம் உங்கள் இதயத்துக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். சந்தேகமில்லை. இவர் நம்மிடையே பதிவுலகில் இருப்பது நாம் செய்த பாக்கியமே. சாம்பிளுக்கு இந்த படைப்பை பாருங்கள்.

மனசை வாசித்தவள்

3. அடுத்து நாம் பார்க்க இருப்பது சகோதரி ஹேமா. இவர் அற்புதமான கவிஞராவார். கவிதை இவர் கரங்களில் துள்ளி விளையாடுகிறது. வார்த்தைகள் சரம் சரமாய் வந்து விழுகிறது. இவரது படைப்புகள் அனைத்துமே அருமையானவை. தவறவிடக் கூடாதவை. உதாரணத்துக்கு இந்த படைப்பைப் பாருங்கள்.

கனவு

4. அடுத்து நாம் பார்க்க இருக்கும் நபர் சகோதரர் மகேந்திரன் அவர்கள். வசந்தமண்டபம் மகேந்திரன் என்றால் பதிவுலகில் பிரசித்தம். எளிமையான வார்த்தைகளால் கவிதைச் சரம் தொடுக்கும் அற்புதப் படைப்பாளி. அழகழாய் கவிதை புனைகிறார். நாட்டுப்புற மெட்டில் சில நேரம் இவர் படைக்கும் பாடல்கள் அற்புதம். அழகு. உதாரணமாக இவரது கீழ்க்கண்ட படைப்பைப் பாருங்கள்.

நதிக்கரை தாகங்கள்


5. அடுத்து நாம் பார்க்க இருக்கும் நபர் சகோதரர் கணேஷ் அவர்கள். இவர் பயங்கர படிப்பாளி என்பது இவரது படைப்புகளைப் பார்த்தாலே புரியும். எழுத்துக்கள் அட்சர சுத்தம். கண்ணைப் பறிக்கும். நடைவண்டிகள் என்று ஒரு தொடர் எழுதுகிறார் பாருங்கள். அருமையிலும் அருமை. மற்றும் பல்சுவைப் பதிவுகளும் எழுதுகிறார். உதாரணத்துக்கு இவரது நடைவண்டிகள் தொடரின் 9-ம் பகுதியைப் பாருங்கள்.

நடைவண்டிகள் 9


6. அடுத்தது சகோதரி கீதா. கீதமஞ்சரி என்னும் வலைப்பூவினூடாக இவர் அற்புதமான படைப்புகளை படைத்து வருகிறார். இவர் உண்மையான கலைப் படைப்புகளை ஆழமாய் சுவாசிக்கும் குணமுடையவர். மேலோட்டமாக படிக்காமல் பதிவை நன்றாக உள்வாங்கி அழகாக பின்னூட்டமிடுவார். அதுவே அவரது ரசிப்புத்திறனையும், படைப்புத்திறனையும் வெளிப்படுத்துகிறது. படிப்பாளிதான் படைப்பாளி ஆக முடியும் என்பது அறிஞர்களுக்கே புரியும். அருமையான படைப்பாளி. எடுத்துக்காட்டாக இவரது ஓர் படைப்பு கீழே.

உயிரின் வலி

7. அடுத்து நாம் பார்க்கப் போகும் நபர் பதிவுலகிற்கு கிடைத்த சொத்து. இன்றைக்கு கவிதைகள் என்ற பெயரில் கவிதையின் அடிப்படைக் கூறுகளே தெரியாத கவிஞர்கள் என்ற பெயர் படைத்தவர்கள் பதிவுலகிலே பரவியிருக்கிற இந்த நேரத்திலே அற்புதமான மரபுக் கவிஞர் இவர். மரபுக் கவிதைகள் அநாயசமாய் அற்புதமாய் படைப்பவர். இவரைச் சொல்லாமல் இப்பதிவு நிறைவடையாது. இவரது திறமைக்கு ஓர் உதாரணம் கீழே.

மாற்றம் ஒன்றே நிலையாகும்


நேரமாகிவிட்டபடியாலும் பதிவு பெரிதாகிவிடக் கூடாதென்பதாலும் அடுத்த பதிவில் எனக்குப் பிடித்த மற்ற பதிவர்களைப் பற்றி சொல்கிறேன். இந்த பட்டியல் இதோடு முடிந்து விடவில்லை. அற்புதமான பதிவர்களுடன் நாளையும் நீளுகிறது...! காத்திருங்கள்!
மேலும் வாசிக்க...

Monday, March 26, 2012

கதம்பம் - 1 (வலைச்சரத்தில் இன்று)

வலைச்சரப் பணியின் தொடக்கமான முதல் பதிவில் என்னைப் பற்றி, என் பதிவுகளைப் பற்றி பேசியாச்சு. இனி நேரா பதிவுகள் அறிமுகத்துக்குப் போயிரலாம். பதிவுகளை ஒரு கதம்பம் போல தொகுத்திரலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். போலாமா ரைட்...!

1. முதலில் கடவுள் வாழ்த்துலருந்து ஆரம்பிச்சுருவோமா? கடவுள் வாழ்த்துன்னவுடனே நமக்கு ஞாபகத்துக்கு வர்றது திருக்குறள்தான் இல்லையா. அந்த திருக்குறள் பதிவை வாசிச்சிருங்க. இந்த தளத்துல 1330 குறளும் அழகா வரிசைப்படுத்தப்பட்டு ஆங்கில மொழியாக்கத்துடன் உள்ளது. படிச்சா பிரமிச்சு போயிருவீங்க. உடனே போங்க.

2. நம்ம பதிவர் சந்தானம் என்ன சொல்ல வர்றார்னா அட இப்படியா சங்கதி னு சொல்றார். இவரோட தளத்துல என்ன விசேஷம்னா நம்ம தென்கச்சி சுவாமிநாதன் இன்று ஒரு தகவல் என்று தினமும் சொல்வாரே அதைப் போல அருமையான தகவல்களை இவரும் என்றும் ஒரு தகவல் அப்படின்னு சொல்றார். அத்தனையும் அருமை. படிச்சுத்தான் பாருங்களேன்.

3. நம்ம பதிவர் இளங்கோ அழகழகா கவிதை எழுதறார். என்னைக் கவர்ந்த கவிதை ஒன்னு கொஞ்சம் சொற்கள் மட்டுமே. மீதி கவிதைகளையும் நீங்களே போய் படிங்க. ஓ.கே.வா?

4. நம்ம தோழர் தமிழன் தன்னோட ஒரு பதிவில் கூகுளில் எப்படி நேர்த்தியா சர்ச் பண்றது (அதாவது வித்தியாசமான முறையில்) அப்படின்னு சொல்றார். கேளுங்க. கூகுள் தேடலுக்கு சில டிப்ஸ்.

5. பதிவர் சிவகுமார் தன்னுடைய உள்ளத்தை திறந்து சுவையான நடையில் சொல்லும் ஒரு நடுத்தரக் குடும்பத்தின் கதையைக் கேளுங்கள். மறுபரிசீலனை.


6. சர்க்கரை வியாதிக் கட்டிகளுக்கும், சூட்டினால் வரும் கட்டிகளுக்கும் பதிவர் டாக்டர் குயீர்ஷ்யூர் (Curesure) ஒரு எளிய ஆயுர்வேத மருத்துவ தீர்வு படியுங்கள். இந்த தளத்தில் எல்லா வியாதிகளுக்கும் அருமையான தீர்வுகள் உள்ளன. விசிட் பண்ணத் தவறாதீர்கள். அருமையான தளம்.

7. பதிவர் பிரபாதமு (பேரு தமிழ்ல கரெக்டான்னு அவர்தான் சொல்லணும்) ஓட்ஸ் சாப்பிட்டா முதுமைய விரட்டலாமா அப்படின்னு ஒரு அருமையான பதிவு இட்டிருக்கிறார். மற்ற அவரது அத்தனை மருத்துவ பதிவுகளும், பல்சுவைப் பதிவுகளும் அருமை. போய்ப் பாருங்கள்.

அடுத்த பதிவில் சந்திப்போம். நன்றி!
மேலும் வாசிக்க...

சுய அறிமுகம் செய்து கொள்கிறேன் (வலைச்சரம்)

இன்று (26.03.2012) துவங்கும் வலைச்சர வாரத்தில் அன்பின் சீனா சார் மற்றும் பிரகாஷ் சார் ஆகியோரின் அன்பு கட்டளைக்கிணங்க ஆசிரியர் பொறுப்பை ஏற்க (தகுதியிருக்கா அப்படின்னு தெரியலை) இசைவு தெரிவித்தேன்.

என்னுடைய வலைப்பூவின் பெயரும் துரைடேனியல் தான். படித்து ஆதரவு தாருங்கள்.


முதலில் என்னுடையதில் சிறந்த பதிவுகளை பட்டியலிட சீனா சார் கேட்டுக்கொண்டார். இது கொஞ்சம் தர்மசங்கடமான விஷயம்தான். அடுத்தவங்க பதிவுன்னா பாய்ஞ்சு பாய்ஞ்சு எழுதிடலாம். நல்லதா பார்த்து பொறுக்கிடலாம். எனக்கேன்னா? சீரியஸ் மேட்டர்தான். என்னுடைய பதிவுகள் சிறந்தவையா இல்லையா என்பதை வாசகப் பதிவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.

என்னுடையதுன்னா தயங்க வேண்டியிருக்கு. காரணம் இங்கே நீதிபதிகள் நான் இல்லை. நீங்கள்தான். இருந்தாலும் அடியேன் துணிகிறேன். முதலில் என்னைப் பற்றி ஒரு சிறு அறிமுகம். சீனா சார் என்னை ஏற்கனவே நேற்றே அறிமுகப்படுத்திட்டாரு. ஆனாலும் நானும் என்னைப் பற்றி சில வார்த்தைகள் சொல்ல விழைகிறேன். கொஞ்சம் பொறுமையா படிங்க.

நான் வலைப்பூ தொடங்கியது ஒரு விபத்துத்தான். கணினி கிடைச்சா போதும் நேரம் போவது தெரியாம விளையாடிட்டும், வெப்சைட் பார்த்துட்டும் இருப்பேன். கூகுளில் ஒரு நாள் அப்படித்தான் என்னென்ன இருக்குன்னு நோண்டிப் பார்த்துகிட்டு இருந்தப்பதான் இந்த BLOG பத்தி பார்த்தேன். GOOGLE காட்டின வழிமுறையின் படி Step by Step ஆ முயற்சி செய்தப்போ பிளாக் ஓப்பன் ஆயிடுச்சி.

ரொம்ப நாளு எதுவுமே செய்யாம அப்படியே விட்டுட்டேன். ரொம்ப நாள் கழிச்சி ஒருநாள் தமிழ்மணம் என் கண்ணுல பட்டுச்சு. அப்பத்தான் தெரிஞ்சது. அடடா இப்படி ஒரு உலகம் இருக்குதான்னு. அப்புறம் என்னோட வலைப்பூவை நானே கூகுளின் வழிகாட்டுதலின் படியும் தமிழ்மணம் மூலமா அறிமுகமான தொழில்நுட்ப வலைத்தளங்கள் மூலமாகவும் வலைப்பூவை வடிவமைச்சேன் (ஆமா இவரு பெரிய வெப் டிசைனரு, போய்யா....!) அப்படின்னு நீங்க சொல்றது சரிதான். எல்லாம் இந்த கூகுளின் கைங்கர்யம்தான்.

இப்படித்தான் நான் இந்த வலையுலகிற்கு வந்தேன். இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னன்னா நான் வலைப்பூ எழுத ஆரம்பித்து ஐந்து மாதங்கள் தான் ஆகிறது. அதற்குள்ள இந்த வலைச்சர ஆசிரியப் பணி. ஆனாலும் என் மேல் நம்பிக்கை வைத்து இந்த பொறுப்பை தந்த சீனா சாருக்கும், பிரகாஷ் சாருக்கும் நன்றிகள் பல.

சரி. போதும் சுயபுராணம். இனி என் பதிவுகளைப் பற்றி பேசுவோம். இரத்தினச் சுருக்கமாத்தான் பேசப் போறேன்.


நான் அடிப்படையில் ஒரு கவிஞன். (அப்படித்தான் நான் நெனைச்சிகிட்டு இருக்கேன்.) ஆகவே நான் எதைச் சொன்னாலும், செய்தாலும் அதில் ஒரு கவிதைத்தனம் இருக்கும். அது என் பழக்கமாகி விட்டது. என் பதிவுகளில் நிறைய கவிதைகள் தான் இருக்கும்.

அப்புறம் சின்னச் சின்னச் சிந்தனைகள் என்ற பெயரில் சில சிந்தனைப் பதிவுகளை இட்டு வருகிறேன். மருத்துவக் குறிப்புகளும் அவ்வப்போது எழுதி வருகிறேன். இவைதான் பிரதானம்.

மற்றவை பொன்மொழிகள், இதர கட்டுரைகள். ஆனாலும் பிரதானமாக கவிதைகளும், சின்னச் சின்ன சிந்தனைகளுமே எனக்குப் பிடித்தவை. இன்னும் சொல்லப் போனால் அவைதான் என் சொந்த படைப்புகள். மற்றவை நான் படித்து ரசித்து உள்வாங்கிய விஷயங்களையே படைப்புகளாக மாற்றி தருகிறேன். ஆனால் கவிதைகள் என்னுடைய சொந்த படைப்புகளாகும். ஆகவே கவிதை எழுதும்போது மட்டும் ஒரு தாயின் சந்தோஷம் எனக்குக் கிடைக்கும். சந்தேகமில்லை.

என்னுடைய கவிதைகள்

எனக்குப் பிடித்த என்னுடைய கவிதைகளில் இரண்டை மட்டும் தருகிறேன். மற்றவற்றை நீங்களே படித்துக் கொள்ளுங்கள் (விருப்பமிருந்தால்)

சாம்பிளுக்கு இரண்டு.

1. இன்றைய சினிமாவும் பத்திரிக்கையும் எவ்வளவு தரம் கெட்டுப் போயிருக்கின்றன. அதனால் சமுதாயத்தில் எவ்வளவு சீரழிவு என்பதை சுட்டிக்காட்டும் விதமாக இந்த கவிதையை எழுதினேன். லிங்க் கீழே.

வாழ்க்கை நடத்தின காம பாடம்

2. நான் பிறந்த ஊரில் ஓடும் ஒரு நதியின் அழுகையாக, கால மாற்றத்தினால் மனிதர்களால் அது எவ்வளவு சீரழிந்திருக்கிறது என்பதை ஒரு கவிதையாக வடித்தேன். அதன் லிங்க் கீழே.

ஒரு நதியின் அழுகை


சின்னச் சின்ன சிந்தனைகள் என்ற தலைப்பில் சில சிந்தனைத்துளிகளை வடித்து வருகிறேன். அவற்றின் சாம்பிளுக்கு இரண்டு மட்டும் கீழே:-

1. பிள்ளைகளை கண்டித்தால் மட்டும் போதாது. நாமும் அவர்களுக்கு முன்னுதாரணமாய் நடந்துகொள்ள வேண்டும் என்பதைப் பற்றிய ஒரு சிந்தனைத்துளியின் லிங்க் கீழே:-

பார்த்தலும் கேட்டலும்

2. நம்முடைய வாழ்க்கையில் பல பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் ஒரு எளிய முறையை ஒரு சிந்தனைத்துளியாக வடித்தேன். அதன் லிங்க் கீழே:-

பிரச்சினைகளுக்குத் தீர்வு சிந்தனை அழிப்பான் (Thoughts Eraser)


எஞ்சியிருக்கும் கவிதை மற்றும் சின்னச் சின்ன சிந்தனைகளை என்னுடைய பதிவில் போய்ப் படித்துக் கொள்ளுங்கள்.

அவ்வப்போது மருத்துவக் குறிப்புகளையும், விஞ்ஞானக் கட்டுரைகளையும் எழுதுகிறேன். அவைதான் பெரும் வரவேற்பைப் பெறுகின்றன. அவற்றில சாம்பிளுக்கு சிலவற்றின் இணைப்பைத் தருகிறேன்.


1. சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவது குறித்து நான் எழுதிய பதிவின் லிங்க் கீழே:-

சிகரெட் சில உண்மைகள்

2. வாழை இலையில் சாப்பிடுவது குறித்த ஒரு மருத்துவப் பதிவின் லிங்க் கீழே:-

வாழை இலையில் சாப்பிடுவது உண்மையில் நல்லதா?


விஞ்ஞானப் பதிவுகளும் அவ்வப்போது இடுகிறேன். அதில் சாம்பிளுக்கு ஒன்று மட்டும். மீதமுள்ளவற்றை வியப்பூட்டும் உண்மைகள் என்ற லேபளில் சென்று படித்துக் கொள்ளுங்கள்.

1. நாம் விண்வெளியில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் பிரயாணம் செய்து கொண்டே இருக்கிறோம். தெரியுமா உங்களுக்கு?

போதும் என்று நினைக்கிறேன். என்னுடைய பதிவுகளைப் பற்றிய ஒரு புரிதல் உங்களுக்கு வந்திருக்கும். என்னுடைய எல்லாப் பதிவுகளுமே பிரயோஜனமானவைதான். சினிமாப் பதிவுகளும், மொக்கைப் பதிவுகளும் நான் இடுவதில்லை. ஒவ்வொரு பதிவுமே ஏதாவது ஒரு வகையில் மனிதர்களுக்கு பிரயோஜனமாக இருக்க வேண்டும் என்பதே என் அவா.

மற்ற என் பதிவுகள் அனைத்தையும் நீங்கள் என்னுடைய வலைப்பதிவில் போய் படித்து கருத்துரை இட்டு ஆதரவு தரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நாளை மறுபடியும் பார்க்கலாம். என்னைக் கவர்ந்த பழைய மற்றும் புதிய பதிவர்களின் அறிமுகங்களோடு தொடர்வோம். நன்றி!
மேலும் வாசிக்க...

Sunday, March 25, 2012

துரை டேனியல் பொறுப்பேற்கிறார்

அன்பின் சக பதிவர்களே

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ள துரை டேனியல் தூத்துக்குடியில் மாவட்டக் காவல் அலுவலகத்தில் அமைச்சுப் பணியாற்றுகிறார். இலக்கியத்தில் தீராத ஆர்வம் கொண்ட இவர் கவிதை புனைவதிலும் பல்சுவைப் பதிவுகள் எழுதுவதிலும் திறமைசாலி.

தேடல் மிகுந்த வாழ்க்கை. தரிசனம் தேடும் கண்கள். கவிதையோடிணைந்த வாழ்வு. இதுவே இவரது தற்போதைய போக்கு. எதிர்காலம் கடவுளின் கையில் என்ற நம்பிக்கையோடு வாழ்க்கையை நடத்திவருகிறார்..

நண்பர் துரை டேனியலை வருக வருக என வரவேற்று வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

இன்றுடன் முடியும் வாரத்திற்கு பொறுப்பேற்ற சகோதரி ஜோஸபின் பாபா எட்டு பதிவுகள் இட்டு எண்பது மறுமொழிகள் பெற்று விடை பெறுகிறார். அவரை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் ஜோஸபின் பாபா

நல்வாழ்த்துகள் துரை டேனியல்

நட்புடன் சீனா

மேலும் வாசிக்க...

வலைப்பதிவுகள் வலைப்பதிவர்கள்....


வலைப்பதிவுகள் 2009 ல் என் பாடப்பகுதியாக அறிமுகம் ஆனது. முதல் முதலில் தேர்வுக்கு மதிப்பெண் வாங்க எழுதி பதிந்து வெளியான என் முதல் பதிவை இணையத்தின் வாயிலாக கண்ட போது கொண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஜெ.பி ஜோசபின் பாபா பின்பு வாரப்பத்திரிக்கை மாதபத்திரிக்கை வாசிப்பு தளம் வலைப்பதிவுகளாக மாறியது. செய்தியை, தகவல்களை பகுந்தாய்வு செய்து சுதந்திரமாக யாருடைய அச்சுறுத்தலும் அற்று கிடைப்பது வாசிப்பது மகிழ்ச்சியாகவே இருந்தது.

பின்பு வலைப்பதிவுகள் மேல் கொண்ட ஆற்வத்தால் என் ஆராய்சியையும் ஆய்வு ஈழ வலைப்பதிவுfகள் சார்ந்து மேற் கொண்டேன். என் ஆராய்ச்சியில் ஈழ தமிழர்கள் தங்கள் அடையாளத்தை நிலைநாட்ட மற்றும் போர் சூழலில் பல உலக நாடுகளில் தஞ்சம் அடைந்த நிலையில் தங்கள் மறுக்கப்பட்ட உரிமைகள், தங்கள் சோகங்கள், உணர்வுகளை பகிர்ந்து கொள்ள, தங்கள் கலாச்சாரத்தை பாதுகாக்க என வலைப்பதிவுகளை காத்திரமாக பயன்படுத்தினர். சிறப்பாக வலைப்பதிவுகளை ஒரு மாற்று ஊடகமாக பயன்படுத்தினர் என்றால் மிகையல்ல!

வலைப்பதிவுகள் ஆராய்ச்சியின் இருந்த போது தெரிந்து கொண்டது வலைப்பதிவுகள் என்பது; சிறப்பாக அறிவு சார்ந்த எழுத்து என்பதை விட இதயத்திலிருந்து வரும் தனி மனித கருத்துரையாடல்கள் என்பதாகும். என்னுடன் வகுப்பறையில் கற்ற 14 பேரில் நாங்கள் இரு மாணாக்கள் மட்டுமே தொடர்ந்து வலைப்பதிவர்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றோம்


வலைப்பதிவு வழியாக பல அரிய நட்பு கிடைத்தது. தந்தையை போல் நேசிக்கும் ரத்தின வேல் ஐயா அறிமுகம் பெரிய வரபிரசாதம் ஆகும். இன்றும் எனக்கென சிறந்த புத்தகங்களை வாசிக்க அனுப்பி தருகின்றார்.அதே போல் என் எழுத்தை ஊக்கப்படுத்தும் பேராசிரியர் பழனி கந்தசாமி ஐயா அவர்கள், இலங்கையை சேர்ந்த மருத்துவர் முருகானந்தம் அவர்கள் என எண்ணிலடங்காத நல் உள்ளங்கள் என் எழுத்தின் பின் உண்டு. சமீபத்தில் நான் சந்தித்த போது வலைப்பதிவை பற்றி வகுப்புகள் எடுத்த பேராசிரியர் ரவீந்தரின் அவர்களும் நிறைய எழுத வேண்டும் என ஊக்கப்படுத்தினது மறக்க முடியாதவை. குமரகுரு, பத்மன் போன்ற அருமையான அண்ணாக்கள் நட்பு வலைப்பதிவு வழியாக கிடைத்தது. அதே போல் நெல்லையை சேர்ந்த பல வலைப்பதிவர்களுடன் நட்பு பேண இயன்றது. கவுசல்யா, சித்திரா போன்ற சிறந்த பதிவர்கள் தோழிகளாக பெற்றேன் செல்ல நாய்க்குட்டி. எழுத்து வழியாக கண்டவர்களை பதிவர் சங்கமத்தில் நேரில் சந்தித்தது இன்னும் ஆச்சரியமான அனுபவமாக இருந்தது. http://rajasheik.blogspot.in/, ஜோதிஜி திருப்பூர், .http://www.panithulishankar.com/,

அரசு அதிகாரிகளான வலைப்பதிவர்களின் பதிவுகள் இன்னும் பல தகவல்களை பெற்று தந்தது.http://imsaiarasan-babu.blogspot.in/2011/12/blog-post.html இளைஞர் பதிவர்களின் வழியாக இளமையான பல கவிதைகள் ஆக்கங்கள் வாசிக்க வாய்ப்பு கிடைத்து. வெறும் பய. வலைப்பதிவில் பல அறிய கருத்துக்களை மிகவும் நகைச்சுவையாக எழுதும் செல்வாவின் இப்பதிவுகள் மிகவும் கலைதன்மை கொண்டது.http://www.koomaali.blogspot.in/. மொக்கை பதிவுகள் சினிமா பதிவுகள் என்று விமர்சர்கள் புரட்டி எடுத்தாலும் தன் நுட்பமான கேலி கிண்டலில் பதிவு எழுதுவதில் தனக்கு என்று ஒரு இடத்தை தக்க வைத்துள்ள நண்பர் சென்னிமலை செந்தில் பதிவுகளும் சுவாரசியமானவை.சென்னி மலை செந்தில்.


இப்படி தமிழக தமிழ் பதிவுகள் வேக நடை போட்டாலும் பதிவுகளுக்கு என்றுள்ள சிறப்பம்சம், தனி தன்மையுடன் எழுதும் பதிவுகள் இன்னும் வர வேண்டும் என்பதே என் ஆவல். ஈழ பதிவர்கள் போல் போர், பிரிவு போன்ற துயர், சுதந்திரம் என்ற வேட்கை எழும் சூழல் இல்லை என்பதால் என்னவோ ஈழ பதிவுகள் போல் காத்திரமாக தமிழக வலைப்பதிவுகளை சமூக மாற்றத்திற்க்கு பாவிக்கின்றோமா என்றால் இல்லை என்றே எனக்கு தோன்றுகின்றது.

ஊடகத்தில் காணும் அதிகாரம் ஆணவம் அற்று அனைவரும் தங்கள் கருத்துக்களை பகிர தகுந்த மக்கள் ஊடகமே வலைப்பதிவுகள் என்றாலும் சில பதிவர்களின் அச்சுறுத்தல் இங்கு உண்டு என்றால் கோபப்படகூடாது. சில சிறந்த பதிவர்கள் என்று தங்களை நினைத்து கொள்பவர்கள் புதிதாய் வருபவர்களை எழுத்து பிழை, அப்படி இப்படி என்று கேலிக்குரியவர்களாக மாற்றுவது உண்டு. அதுவும் போக சில ஊடக எழுத்தாளர்கள் என்று மார் தட்டி கொள்பவர்கள் வலைப்பதிவர்களை பற்றி ஒரு மோசமான கருத்தாக்கத்தை பரப்பவும் தயங்குவதில்லை. மேலும் சின்ன சின்ன பிரச்சனைக்கும் வேட்டியை வரிந்து கட்டி சண்டை இடுவதையும் வலைப்பதிவர்கள் மத்தியில் காண்கின்றோம். அவரவர் கருத்து அவரவருடையது. இதில் நான் சிரியவர் பெரியவர் சிறந்தவர் மோசமானவர் என்ற கருத்துக்கே இடம் இல்லை என்றே என் கருத்து.

10 க்கு மேற்ப்பட்ட நாடுகளில் வசிக்கும் ஈழ வலைப்பதிவர்கள் கருத்துக்களால் வேற்பட்டிருந்தாலும் நட்பு என்ற வட்டத்தில் சிறந்து விளங்குகின்றனர். நம்மில் நெல்லை பதிவர், சேலம் பதிவர், சென்னை பதிவர் என்ற பெரிய சுவர்களை எழுப்பி வைத்துள்ளனர். ஒருவர் கருத்தை இன்னொருவர் ஏற்று கொள்ள விரும்பாவிடிலும் குழு சேர்ந்து ஆழுமை செய்வதை தவிர்க்கலாம்.

மேலும் பதிவை வாசிக்காது பின்னூட்டங்கள் என்ற பெயரில் "வடை போச்சு" .....என்று விளையாட்டாக பதிந்து செல்வதால் வலைப்பதிவின் சமூக பங்களிப்பான கருத்துரையாடல்கள் நடைபெறுவதில்லை. இங்கு உறவினர்கள் வீட்டு விசேடத்திற்க்கு முறை செய்வது போல் தங்களுக்குள்ளே பின்னூட்டம் கருத்துக்கள் பகிர்ந்து கொள்கின்றனர்.

தமிழ் சசிவலைப்பதிவு என்பது உண்மையான செய்தி தகவல்களை சுத்த இதயத்தோடு தைரியமாகவும் உண்மையாகவும் கதைப்பவையாக இருக்க வேண்டும். பரமக்குடி துப்பாக்கி சூடு நடந்த சமயம் நான் பத்திரிக்கை செய்தியை நம்பாது பரமக்குடி வலைப்பதிவர் என்ன எழுதி உள்ளார் என்றே தேடினேன். ஆனால் பல பதிவுகள் பத்திரிக்கை செய்தியை மறு பிரதி செய்பவையும் அரசியல் பேசுபவையாகவே இருந்தது. சமூகத்தின் மனசாட்சியாக நிலவ வேண்டிய ஊடகம் தவறும் போது வலைப்பதிவர்கள் பங்களிப்பு பெரிதாக உள்ளது. கிழக்கு நாடுகளில் தேசிய புரட்சிக்கு வித்திட்டதே சமூக தளங்களான வலைப்பதிவுகள் முகநூல்கள் போன்றவை என்று நாம் அறிந்ததே. ஆனால் நம்மூரில் வலைப்பதிவர்களுக்குள் பெரிய அரசியல் உள்ளது என்றால் அதுவே உண்மை!http://stop-the-vanni-genocide.blogspot.in/2009/06/blog-post.html

என் பிறந்த ஊர் வண்டிப்பெரியார் என்பதால் முல்லைப்பெரியார் பிரச்சனை நேரங்களில் செய்தி ஊடகம் தமிழர்களை எவ்வாறு முட்டாளாக்கியது என்று செய்தி கண்டு; நான் கண்ட மிகவும் அருகில் உணர்ந்த செய்தியை இட்ட போது சில கேடுகெட்ட எண்ணம் கொண்டவர்கள் பின்னூட்டம் என்ற பெயரில் தேவையற்ற அருவருக்க தகுந்த தளங்களை அனுப்பினார். இந்த செயலால் ஆக்கபூர்வமான சுதந்திரமான செய்தி மரிமாற்றம் தடை படும். முள்ளி வாய்க்கலில் நடந்ததை இன்று பத்திரிக்கைகள் செய்தியாக விற்க்கின்றனர், ஈழவலைப்பதிவர்கள் வழியாக 2009 மே-ஆகஸ்து அன்றே அறிந்த செய்திகளே இவை அனைத்தும்.ஈழ வலைப்பதிவுகள்

http://www.eelavayal.com/2012/03/blog-post_24.htmlசிலோனில் இருந்து கொண்டே ராஜபக்சேவை கேலி செய்து எழுதும் ஊக்கம் ஈழ வலைப்பதிவுகளுக்கு உண்டு. அதனால் அந்த வலைப்பதிவர் தண்டிக்கப்பட்ட போது ஈழ வலைப்பதிவர்கள் ஒன்று சேர்ந்து தங்கள் ஆதரவை தெரிவித்து வலைப்பதிவருக்கு பக்கபலமாக இருந்தனர்,. தமிழகத்தில் அப்படி ஒரு நிலை உருவாகினால் வலைப்பதிவர்கள் என்ன செய்வார்கள் என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

தமிழ் தமிழக வலைப்பதிவுகள் இன்னும் அதன் உண்மையான பணி, நோக்கம் அறிந்து செயல் ஆற்ற வேண்டியுள்ளது என்பதே என் எளிய கருத்து. வெறும் தொடர்பாடல் பொழுது போக்கு என்றிருந்தால் ஊடகம் போன்றே இதும் வெறும் கருவியாக மாறி விடும்.
மேலும் வாசிக்க...

பாடல்கள் அறிமுகம்!

பாசமிகு தோழர்களுக்கு காலை வணக்கம். விடுமுறை நாளில் நிம்மதியாக பாட்டு கேட்க வேண்டும் என்ற ஆசையில் சில வலைத்தளங்களை அறிமுகப்படுத்துகின்றேன்.http://en-jannal.blogspot.in/2009/04/blog-post_26.html

பாடல்கள் கேட்பது மகிழ்ச்சியான, அதே போல் துக்கமான வேளைகளிலும் உதவுகின்றது. இன்று பாட்டுகள் கேட்கவும் நிறைய வசதிகள். பிடித்த பாடல்களை நம் தொலைபேசியில் பதிந்து கொண்டோம் என்றால் எப்போதும் கேட்கலாம். பாட்டு கேட்டு கொண்டே இவை இடம் பெறும் திரைப்படங்களை பற்றியும் பார்ப்போம்.http://www.cablesankaronline.com/2012/03/blog-post_06.html
என் கணவர் பாட்டு கேட்பதில் ஈடுபாடு (அடிமையாகவே) உள்ளவராக இருந்தார். திருமணம் முடிந்த நாட்களில் நாங்கள் ஒரு வனப்பகுதியில் வசித்து வந்திருந்தோம். எனக்கு காலை நேரம் அமைதியான சூழலில் குருவி, மரம் கொத்தி குயில் சத்தம் கேட்க பிடிக்கும் என்றால், வீட்டில் எப்போதும் இளையாராஜா பாட்டுகள் ஓடி கொண்டே இருக்கும். பல நாட்கள் காதில் பஞ்சு வைத்தும் நடந்துள்ளேன். http://panduashok.blogspot.in/2011/12/2011.html, தமிழ் திரைப்பட பாடல்கள்.பாட்டு கேட்கும் போது, அந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம் எடுத்த பின்புலன் கதை அறிவதும் பாட்டை புரிந்து கொள்ள ரசிக்க இன்னும் உதவும் . மறுபடியும் பூக்கும்

சினிமா பாடல்கள் போன்றே சுவாரசியமான ரசிக்கும் படியான நாட்டுப்புற பாடல்களும் உண்டு .http://tamilmoviesongs.net/vijayalakshmi-navaneetha-krishnan/


கேரளாவில் 25 வருடம் மேல் வசித்துள்ளதால் தமிழ் பாடல்கள் போலவே
மலையாள திரைப்படப் பாடல்கள், மலையாள கவிதைகளும் விரும்பி கேட்பது உண்டு.http://malayalam-kavithakal.blogspot.in/ சில பொழுது பல இனிமையான இதமான பாடல்கள் மலையாள மொழியில் கேட்கலாம். மலையாளப் பாடல்கள் ஒரு அனுபவமாகவே நம்மிடம் கடந்து செல்வதை உணரலாம். மலையாள கவிதைகள்!http://malayalam-kavithakal.blogspot.in/
http://joelantonypaul.blogspot.in/2010/03/malayalam-nadan-pattukal-kuttappan.html

மலையாள பண்டிகையான ஓணம் சார்ந்து பல பாட்டுகள் உண்டு. அவை கேட்க இன்னும் மிகவும் இனியானவை, அந்த நாடு சார்ந்த பல தகவல்கள் தருபவை. ஓணம் பாடல்கள்.

சரிங்க நேரம் ஆயிட்டு. 9 மணிக்கு மின்சாரம் போய் விடும் . காப்பி கேட்டு விட்டார் என்னவர். இன்று பொங்கல் சாப்பாடு. மகிழ்ச்சியுடன் பாட்டை கேட்டு கொண்டிருங்கள் . மறுபடியும் சந்திப்போம். பாசமுடன் ஜோஸபின் பாபா.
மேலும் வாசிக்க...

Saturday, March 24, 2012

பெண்கள் உரிமைகள்!

பெண்கள் பாதுகாப்பில் அச்சுறுத்தல் கொண்ட நாடுகள்வரிசையில் 4 வது இடைத்தை பெண்கள் நிலைவரம் பிடித்துள்ளது இந்தியா. ஒரு புறம் பெண்களை கடவுளாக பூஜிக்கின்றோம் என்று பண்டைய காலம் தொட்டுசொல்லி கொண்டிருந்தாலும் பெண்கள் நிலை சங்ககாலம் முதல் இன்று வரை கவலைக் கிடமான நிலையில்தான் உள்ளது. கொத்தடிமைகள், தொழுத்தைமார், போர் அடிமைகள், வீட்டு அடிமைகள், தேவரடியார்,பொட்டு கட்டுதல் என்ற பல பெயர்களில்; மதம், பஞ்சம்,போர் போன்ற பல காரணங்களால் பெண்கள் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.


தஞ்சைமராட்டிய மன்னர் படை எடுப்பு வேளைகளில் சொல்லி மாழாத துன்பத்தில் வீழ்ந்து கிடந்தனர்பெண்கள். தென் தமிழகத்தில் ஆகட்டும் திருவிதாம் கூர் மன்னர்களால் மேல் சட்டை அணிய மறுக்கப்பட்டவர்கள் பெண்கள். என்றும் பெண்கள் துன்பம் மதம், ஜாதி,நிலைகள் கடந்து பொதுவானதாக தான் உள்ளது. வயல்வெளியில்வேலை செய்த பெண்கள் துவங்கி அரச பரம்பரயில் வாழ்ந்த பெண்கள் வரை பல வித துன்பத்திற்க்குஉள்ளாகினர். அரச குடும்ப பெண்கள் 1843ல் அடிமை ஒழிப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டு அடிமை சங்கலிமுறிக்கப்பட்டாலும் சுதந்திரம் கிடைத்த பின்பு குடும்ப நலச்சட்டம் என பல சட்டங்களால் பெண் உரிமை பாதுகாப்பு பேணப்படுவதாகசொல்லி கொண்டாலும் இன்றும் பெண்கள் அடிமைகளாக வேலை வாங்கப்படுவதும் பெண்களை பல காரணங்களுக்காக பொருள் போன்று வாங்கப்படுவதும் விற்கப்படுவதும் இன்றும் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கின்றது. பெண் உரிமை

http://solvanam.com/?p=17369 சில பெண்களை பொறுத்த வரை எந்த சட்டங்களால் பெண்கள்வாழ்மை வழமையாக்கலாம் என்று நினைத்தார்களோ அந்த சட்டங்களை பெண்கள் வாழ்க்கையை அழிக்கும் சுறுக்கு கயிறாகவும் மாறியது. கால் முளம் வரை சேலை அணியவும் மார்பு சட்டை அணியவும் போராடியபெண்கள் இன்றைய நிலையில் தங்களுக்கு பிடித்த உடை என்ற போற்வையில் அரைகுறை உடை அணியவும் அணியாதும் இருப்பதை சுதந்திரம் என்று எண்ணும் நிலைக்கு எட்டியுள்ளனர்.

பல பெண்கள் தங்களுக்குகிடைத்த பதவி, அதிகாரங்களில் அடிமைப்பட்டு கொண்டு மற்றவர்களிடம் ஒட்டாது வெட்டி நிற்கவும் காரணமாகின்றதுஎன்றால் அதுவும் உண்மையே. இதுவும் ஒரு அடிமை நிலை தான்! இன்று அரசு அலுவலங்கள் ஆகட்டும் சேவைத் துறையிலாகட்டும்கையூட்டு பெறுவது பதவி துஷ்பிரோயகம் செய்வதில் பெண்கள் சளைத்தவர்கள் அல்ல ஆண்களுக்குநிகர் என்றே நிரூபித்து வருக்கின்றனர். பல படித்த பெண்கள் சமூகத்தில் தப்பான உதாரங்களாக மாறுகின்றனர். http://www.jeyamohan.in/?p=199
படித்த பெண்கள்மத்தியிலும் கல்லூரி- பல்கலைகழக நிகழ்ச்சிக்கும்பட்டு சேலை நகை அணிந்து வருவதே அந்தஸ்து மதிப்பு என்ற கருத்தாக்கத்தில் மூழ்கி கிடக்கின்றனர். சமீபத்தில் நான் பங்கு கொண்ட ஒரு கல்வி சார்ந்தநிகழ்ச்சியில், ஆடம்பரம் அற்ற உடையணிந்த தேவைக்கு அதிகமாக நகை அணியாத பெண்ணை, மற்று பெண்கள் மறித்து "இப்படி இருந்தா உங்களை மதிக்கமாட்டாங்க நீங்க இன்னும் கொஞ்சம் பொலிவாக வர வேண்டும் என்று தங்கள் சாயம் பூசிய உதடுகளால்உபதேசித்து கொண்டிருந்தனர்". அப்பெண்ணும் சலிக்காதுஎன் ஆளுமை, நான் அணியும் உடை நகையை சாந்தது அல்ல என் செயல் எண்ணங்கள் சார்ந்ததே. என்புறப்பொலிவை பார்த்துள்ள கிடைக்கும் மதிப்பு எனக்கு தேவை இல்லைஎன்று விளக்கிய போதும் இளக்காரமான சிரிப்புடன் நகர்ந்து சென்றனர்.http://abdullasir.blogspot.in/2011/12/blog-post_21.html

90 களில் பிரபஞ்ச, அழகி உலக அழகிகளை இந்தியா கொடுத்ததுமுதல் பெண்கள் அணிகலன்கள் சார்ந்த வியாபார சந்தைக்கு மதிப்பு கூடி விட்டது. தெருக்கு தெரு டாஸ்மார்க்கடை போன்றே ,அழகு நிலையங்களும் காட்சி தருகின்றன. கண் புருவ அலங்கராம் 30 – 50 ரூபாய் சிகை அலங்காரம்50-300 ரூபாய், தலை வெள்ளை முடியை கறுப்பாகமாற்ற 300 ரூபாய் முகம் சுத்தம் செய்ய 300 ரூபாய் பொலிவான முக அலங்காரத்திற்க்கு 500 ரூபாய், கை அலங்காரம் 300 ரூபாய் என அழகுநிலையங்கள் சக்கை போடு போடுகின்றது.

http://www.vinavu.com/2010/04/29/kuspu-i-today/ கொள்கை- உரிமை என்று போராடிய பெண்கள் இன்று, ஆண்கள்செய்தால் நாங்கள் ஏன் செய்யக்கூடாது நாங்களும் எல்லா விதத்திலும் சமமானவர்கள் என்று தங்கள் நிலையை மறந்துபோராட ஆரம்பித்து விட்டனர். பெண்களுக்காக போராடுபவர்களாககுஷ்பு குஷ்புபோன்றவர்கள் என்ற முரண்களும் உண்மையான பெண்கள் போராட்டம் மழுங்கடிக்கப்பட்டுள்ளது. கல்லூரியில் படிக்கும் இளம் பெண்களும் தங்கள் அறிவு ஆற்றலுக்கு கொடுக்கும் இடத்தை விட உடல் அழகு அலங்காரத்திற்க்கு கொடுத்து எப்போதும் சலசலப்பாக பேசிகொண்டே இருப்பவர்களாக மாறி வருகின்றனர்.http://kiliyanur.net/index.php?option=com_content&view=article&id=407:women-missed-everday&catid=60:ladies&Itemid=176

ஆணும் பெண்ணும் சமம் என்று மாயயை திணித்து பெண்கள்உடல் நிலைகளுக்கு ஒவ்வாத சுமடு தூக்கும் பணிக்கு வரை உட்படுத்தி விட்டனர். இன்று பட்டணங்களில் கடை இரும்பு கதவுகளை திறப்பதுமுதல் கடை அடைக்கும் மட்டும் 12-14 மணி நேரம் வேலை செய்ய தள்ளப்பட்டனர். ஆனால் ஆண்களுக்குநிகரான ஊதியமா என்றால் அங்கும் பெண்கள் சுரண்டப்படுகின்றனர். http://www.yarl.com/forum3/index.php?showtopic=90800இப்படியாக ஒரு புறம் பெண்கள்அடிமைப்படுத்தும் போது கேள்வி கேட்க இயலாத சூழலிலும் மறுபுறம் சுதந்திரமான வாழ்க்கை நாங்கள்அடிமை அல்ல என்று பல பெண்கள் தங்கள் பதவியிலும் ஆணவத்திலும் அடிமைப்பட்டு கிடைக்கின்றனர்.http://seeni-kavithaigal.blogspot.in/2012/03/blog-post_09.html?showComment=1332490866258#c4390523296229320968

மேலும் வாசிக்க...

Friday, March 23, 2012

பயனுள்ள இணைய தளங்கள்

நண்பர்களுக்கு நான் விரும்பி சந்திக்கும் சில தளங்களை அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கின்றேன்.

பயண பிரியர்கள் இதை பயன்படுத்தலாம்.
http://isohunt.com/torrent_details/221907385/?tab=summar

இந்த தளங்கள் புத்தக பிரியர்கள் விரும்பலாம்.
  1.  
மேலும் வாசிக்க...

மறுக்கபடும் குடிமக்கள் உரிமைக் குரல்கள்!


எப்படியோஅதிகாரம், காங்கிரஸ், பிஜேபி, கம்னிஸ்டு பணக்கார அரசியல் ஜெயித்து விட்டது எப்போதும் போல் சாதாரணமக்கள் குரல் நசுக்கப்பட்டு தோற்கடிப்பட்டுள்ளனர்.

மக்கள்கோரிக்கைக்கு இணங்க எந்த விஞ்ஞானக் குழுவும் மக்களோடு பேசியதாக தெரியவில்லை அதே போன்றுமக்கள் பயத்தை போக்க நடவடிக்கை எடுக்கவும் இல்லை. எல்லோரும் ஊடகத்துடன் பேசினர் தங்கள்கருத்துக்களை சொல்லி விட்டு சென்றனர். ஊடகங்களும் தெளிவான கருத்துக்களை மக்களிடம் கொண்டுசேர்த்தாக இல்லை. சில பத்திரிக்கைகள் மேலும் பயம்காட்டி செய்தி வெளியிட்டனர். சிலர் மக்கள் கருத்தாக்கதைகுழப்பத்திற்க்குள் இட்டு சென்றனர். தினமணி போன்றபத்திரிக்கை வேறு வழியில்லை சிலுவையை ஏற்று கொள்ளுங்கள் என உபதேசித்தது. அரசுவும் மக்கள்பக்கம் நிற்பது போல் நின்று திடீர் என தங்கள் 144 என்ற ஆயுதத்தை பயன்படுத்தி தங்கள்அதிகாரத்தை தக்க வைத்து தன் விருப்பதை நிறைவேற்றி கொண்டது.

சமூகத்தில்வருங்கால தூண்களான மாணவர்கள் வாழ்க்கையை எண்ணி பார்த்திருந்தால் +2 தேற்வு நிம்மதியாக எழுதவாவது ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கலாம். ஏற்கனவே 8 மணிநேர மின் தட்டுப்பாடால் பெரிதும்துன்பப்பட்டுள்ள நிலையில் இடிந்தகரை குழந்தைகள் மற்றும் மக்களுக்கு இன்னும் ஆழமான காயங்களை ஏற்படுத்தி விட்டது நமதுஅரசு.


மக்கள்வசிக்கும் பகுதியில் அணு உலை நிறுவியது வழியாக சர்வதேச கட்டுபாட்டை தாண்டிய இந்தியஅரசு கூறும் வாக்குறுதிகளை நம்பும் படியாக இன்று மக்கள் இல்லை. மேலும் அணு உலையால் ஆபத்துஏற்றப்பட்டால் மக்களுக்கு தரும் இழப்பீட்டை பற்றியும் இன்னும் ஒன்றும் சொல்லாத நிலையில்கலாம் அவர்களால் 10 மக்கள் நலன் பரிந்துரைகளை பெற்றுள்ள அரசு என்ன செய்ய போகின்றது எனபார்க்க வேண்டியிருக்கின்றது. 24 வருடம் என்ன செய்து கொண்டிருந்தனர் என்ற கேள்வி போராட்ட குழுவினருக்கு வைப்பது போலவே அரசு நிறுவனங்களுக்கு இதே கேள்வையை கேட்க தோன்றுகின்றது.

இந்தபிரச்சனையால் இதில் துளி ஏதும் சம்பந்தமில்லாத பல சமூக நல சங்கம் கணக்குகளை முடக்கியதால்அவர்களை சார்ந்த பல மக்கள் துன்பத்திற்கேஉள்ளாகியுள்ளனர். மேலும் திட்டமிட்ட மின்சார தட்டுப்பட்டால் அணு உலையால் பாதிப்பு இருந்தாலும் பரவாயில்லை உள்ளளவு காலம் மின்சார வசதியுடன்நிம்மதியாக வாழ்ந்து போய் சேர வேண்டும் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர் பல மக்கள்! அதிகாலை5 முதல் 6 வரை, காலை 9 முதல் 12 வரை அதே போன்று மாலை 3 முதல் 6 இரவு 7.30 முதல் 8.30 மறுபடியும் இரவு 9.30 முதல்10.30மின் தட்டுபாடு நடு இரவு 12யில் இருந்து 1 மணி வரை என மக்களை வாட்டி வதக்கி, அணு உலை இருந்துவிட்டு போகட்டும் என்ற மனநிலைக்கு தள்ளி விட்டது இந்த அரசு நிறுவனங்கள்.

முல்லைப்பெரியார்என்றதும் உருவாகிய தமிழ் உணர்வலைகள் கூடங்குளம் விடயத்தில் உணவர்வற்று போனதும் நகைப்புகுரியதே.

மக்களைநியாயமாக புரியவைக்காது சட்டத்தால் ராணுவ- போலிஸ் அச்சுறுத்தல் கொடுத்து முடக்கி விட்டனர்.உதயகுமாரிடம் குற்றம் என்றால் அவரை தண்டிக்காது விடுத்து அவர் மனைவி நடத்தும் பள்ளியைகூட நொறுக்கியுள்ளர் .

வெள்ளைக்காரன்ஆட்சிகளில் கூட மக்கள் இந்தளவு அடக்குமுறைக்கு உள்ளாகியிருபார்களா என்பது சந்தேகமே.இதில் ஆச்சரியமான சூழல் என்னவென்றால் இளம் சமூகத்தினர் தங்கள் நாட்டு மக்கள் கருத்துசுதந்திரம் பறிமுதல் ஆகுவதிலோ அடக்கப்படுவதிலோ துளியும் வருத்தம் கொள்ளவில்லை. மேலும் இயற்கை சீரழிவு, வரும் காலம் என்பதே பற்றி கவலையற்றுஎப்படியும் மின்சாரம் கிடக்க வேண்டும், இன்றைய தினம் தங்கள் தேவை பூரித்தி ஆகுகின்றதா என்பதில் தான் மும்முரமாக உள்ளனர்.
கூடங்குளம்பிரச்சனையில் கத்தோலிக்க சபையினருக்கு இருக்கும் கருத்து மற்று கிரிஸ்தவ பிரிவுகளுக்குஇல்லை என்பதும் ஆச்சரியமே. ஈழத்தில் மக்கள் குரல் எவ்வாறு ஒரு சிங்கள அரசால் நசுக்கப்படதோஅதே போன்றே ஒரு தமிழ் அரசால் தமிழ் மக்களின் உரிமைகள் மீறப்பட்டது என்பதும் வருந்ததக்கதே. அடிதட்டு மக்களில் குரலை உணர்வுகளைபுரக்கணிப்பது அவர்கள் குரல்கள் நசுக்கப்படுவது குடியரசு நாட்டில் செயல்பாட்டுக்குநல்லதல்ல இதன் பின் விளைவுகள் பயங்ககரமாக தான் இருக்கும்..

மேலும் வாசிக்க...

Thursday, March 22, 2012

றிக்கியை காணவில்லை!

றிக்கியை காணவில்லை! நாங்கள் நாலும் பேரும் நாலுவாறு தேடி கொண்டே இருக்கின்றோம்.நான் வீட்டு வாசல் கதவை ஒவ்வொரு தடவை திறக்கும்போதும் நுழைவு வாசலை உற்று நோக்குகின்றேன். அவனுக்கு கொடுக்கும் பால் அவன் விரும்பி உண்ணும்சோறு எல்லாம் மிஞ்சி கிடைக்கின்றது. நாங்கள்வழிப்பயணம் கிளம்பும் போது வருத்ததுடன் எங்களை வழிஅனுப்புவதும் திரும்பி வரும் போது மகிழ்ச்சியுடன் துள்ளி குதித்து வரவேற்பதற்க்கும் அவன் மட்டுமே இருந்தான். நாலும் பேரும் நாலு திசையில் அவரவர் வேலைக்குசென்றதும் ஏங்கள் வீட்டு வாசலை விட்டு நகருவதில்லை அவன். பொறுப்பான காவலாளியை போல்வாசல் படியிலே இருந்து காத்து கிடந்தான்.

நாலு வருடம் முன்பு ஒரு மழையோடு தெருவில் நடந்துபோனவனை அழைத்து வந்தான் எங்கள் இளைய மகன். அதனால் என்னவோ எங்கள் சிறிய மகனிடம் அவனுக்கு அதீத பாசம் இருந்தது. பக்கத்துவீட்டு பிளைகளுடன் விளையாடும் போது விளையாட்டுக்கு அடித்தால் கூட உறுமி தன் கோபத்தைவெளிப்படுத்துவான். அவன் வரும் போது வீட்டு படி கூட ஏற இயலாத ஒரு சிறு குட்டியாக இருந்தான். மழை முடியுமட்டும்இருக்கட்டும் என்ற அனுமதியில் ஒரு மரப்பேட்டியில்கம்பிளி விரித்து பழைய சாக்கு விரித்து குளிராது தூங்க இடம் கொடுத்தோம். அன்று முதல்எங்களை காலையில் தன் குரலால் எழுப்பி விடுவதும் அவனாகவே இருந்தான் . அவனை தினம் குளிப்பித்து பக்கத்து தெருவில் குடியுருக்கும்நாய்- விரும்பி பேராசிரியரிடம் நாய் வளர்க்கும் வழிமுறைகளைகேட்டு வந்தனர் எங்கள் பிள்ளைகள்.

வீட்டில் அவனை வளர்க்க முடிவு செய்த போது அத்தானுக்குகொஞ்சம் கூட பிடிக்கவில்லை. எல்லாமே சிறு குட்டியாக இருக்கும் போது அழகாக தான் இருக்கும்வளர்ந்த பின்பு அதன் முசடு நாற்றம் பிடிக்காது என்று தன் முதல் எதிர்ப்பை தெரிவித்தார். ஆனால் எங்களுக்கு சாம்பார் சாதம் என்றால் அவன்பட்டிணியே என்று அறிந்து அவனுக்கு பிடித்த புரோட்டா வாங்கி கொடுப்பதும் அவராகவே இருந்தார். அவனும் அத்தான் வீட்டில் உள்ள போது ரொம்ப நல்லபிள்ளையாக பணிவன்புடன் நடந்து கொல்வான்.

அவன் இருக்கும் போது அவனை நினைத்ததாக நினைவு இல்லைஆனால் அவன் காணாமல் போன முதல் தேடிகொண்டே இருக்கின்றோம். குழந்தைகளுடன் பந்து விளையாடுவது,பள்ளி வாகனம் சத்தம் கேட்டதும் முதல் ஆளாக வரவேற்க நிற்பது, எங்களுடன் நடைபயணம் வருவதுஅவன் உண்ணும் உணவு தட்டு, திட்டும் போது அவன் நிற்பது, வீட்டு நுழைவு வாசல் பக்கம்வந்து நின்று எங்களை அழைப்பது என எங்கள் நினைவில்வந்து கொண்டே இருக்கின்றான். 5 வது நாளாக அவன் திரும்பி வருவான் என்ற நம்பிக்கையுடன் றிக்கியை தேடி கொண்டே இருக்கின்றோம்.

மேலும் வாசிக்க...

Tuesday, March 20, 2012

நான் ஏன் கதைக்கின்றேன்!

என் வலைப்பதிவை வலைச்சரம்வழியாக அறிமுகப்படுத்துவதில் பெரும் மகிழ்ச்சி கொள்கின்றேன். 2009 ல் ஒரு பாடப்பகுதியாகஅறிமுகமாகிய வலைப்பதிவுகள் இன்று என்னுடைய ஒரு மாற்று ஊடகமாக மாறி விட்டது.

தற்போது நான் பாளைதூய சவேரியார் கால்லூரியில் காட்சி தொடர்பியல்த் துறையில் விரிவுரையாளராக பணியாற்றுகின்றேன். திருமணம் பொழுது வெறும் பட்டாதாரியாக இருந்த நான், கணவரின் முயற்ச்சியால் என் அயராத உழைப்பால்மற்றும் இறைவனின் அருளால் முதுகலை பட்டம் 2009 லும் மற்றும் இளம் முனைவர் பட்டம் 2010 லும் பெற்றேன். என்னவரின் பெயரின்பகுதியான பாபா என்ற பெயரை என்னுடன் இணைத்து ஜெ.பி ஜோஸபின் பாபா என்று எழுதி வருகின்றேன்.

என் வலைப்பதிவில் தலைப்புவிளக்கம் போலவே என்னை பாதிக்கும் விடயங்களை அமைதி காக்க இயலாத சூழலில் அதை பதிவாக பதிந்துவர முயல்கின்றேன். என்னுடைய சுய விருப்பு வெறுப்பு கடந்து சமூக கருத்தாக்கங்கள், என்னைபாதித்த விடயங்கள், வாழ்வில் சந்தித்த நபர்கள், சிந்திக்கவைத்த நிகழ்வுகள், என் தனிப்பட்டவாழ்க்கையில் நான் சந்தித்த சவால்கள் என் என் வலைப்பதிவு முன் செல்கின்றது.

என் வலைப்பதிவின் தலைப்பான“கதைக்கிறேன்” என்ற சொல்லாடல் ஈழ வலைப்பதிவின் ஆராய்ச்சியில் இருந்த போது ஈழ தமிழின் மேல் கொண்டுள்ள என் பாதிப்பால் சேர்த்து கொண்டது. மேலும் ‘கதைக்கிறேன்’ என்ற சொல்லாடல் நட்புஅன்பு பாசம் கலந்த பேச்சு, கதை சொல்லலை குறிப்பதாக இருப்பதால் மிகவும் பிடித்து போகஎன் வலைப்பதிவு தலைப்பாகவே சேர்த்துள்ளேன். ஈழ தமிழர்களை போலவே கேரளா தமிழர்களான எங்கள் வாழ்க்கையும் எங்கள் சுயத்தை அடையாளத்தை தேடிய பயணமாகவே அமைகின்றது. வலைப்பதிவும் இதன் பரிணாமமாகவே ப்ல பொழுதும் உள்ளது.

வாரம் ஒரு பதிவு இருந்தநிலை வேலைப்பழு மற்றும் தமிழக மின் தடையால் பாதித்திருப்பினும் வலைப்பதிவு எழுதுவதுஎன்பது இனம் புரியாத மன மகிழ்ச்சியும் உணர்வு பூர்வமான நிம்மதியும் மட்டுமல்ல ஒரு அடையாளத்தையும்தருவதாக உணருகின்றேன். சிறப்பாக பெண்களுக்கு தங்கள் கருத்துக்களை எந்த அச்சுறுத்தலும்தடையும் கட்டுபாடும் இல்லாது திறம்பட வெளியிட ஒரு தளமாக அமைகின்றது. வலைப்பதிவால் பல அறிய நட்புகள் உறவினர்கள் போன்றஉறவுகளை பெற்று தருகின்றது என்றால் மிகை அல்ல!நம் தன்னம்பிக்கை வளருவதற்க்கும் துணை செய்கின்றது.


என் வலைப்பதிவுகளில்எனக்கு பிடித்த பதிவு எது என்ற முடிவுக்கு வர இயல்வது இல்லை! ஏன் என்றால் ஒவ்வொரு பதிவும் ஒவ்வொரு பின் புலனில்நான் பெற்ற மறக்க இயலாத அனுபவத்தினால் எழுதப்பட்டது தான். http://josephinetalks.blogspot.in/2011/11/11.htmlhttp:
என் பால்ய பள்ளி நண்பர்கள் என் முதல் ஆசிரியை நினைவுகள்அலையாக மனதில் அடித்து கொண்டிருந்த போது எழுதப்பட்டதே http://josephinetalks.blogspot.in/2010/08/blog-post_27.htmlஇதுவே என் வாசகர் வட்டத்திலும் மிகவும் விரும்பிய பதிவாக இருந்து வருகின்றது.

கூடன்குளம் அணு உலையால்மனிதனுக்கு மட்டுமல்ல இயற்கைக்கும் பாதிப்பு அதுவும் மிகவும் கோரமான ஆபத்து என்று அறிந்தபோது என் ஆதங்கம் வருத்தம் கவலையை வெளிப்படுத்திய பதிவே http://josephinetalks.blogspot.in/2010/12/blog-post_03.html

என் பிறந்த வீட்டிற்க்குஒரு முறை சென்ற போது நான் வாழ்ந்த வீடு, நான் நேசித்த என் அறை சன்னல்கள் எனக்கு சொந்தமல்லஎன்று அறிந்த போது உணர்ச்சி கொந்தளிப்பால் நொறுங்கிய நிலையில் எழுதப்பட்டதே “வீடு" http://josephinetalks.blogspot.in/2010/10/blog-post_30.html என்றபதிவு .

http://josephinetalks.blogspot.in/2010/11/blog-post_13.htmlஎன் ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பித்த மகிழ்ச்சியில்என் மகிழ்ச்சியை என் நண்பர்களிடமும் சிறப்பாக எனக்கு ஆராய்ச்சிக்கு உதவிய ஈழ சகோதரர்களையும்நினைத்து எழுதப்பட்டதே.

என் குழந்தைப்பருவத்தில்என் பாசத்திற்க்கு உரிய என் அப்பா வழி தாத்தா- பாட்டி, பெரியப்பா சித்தப்பா மரணத்தைநினைத்த போது எழுதப்பட்ட பதிவை இதுhttp://josephinetalks.blogspot.in/2011/01/blog-post_18.html

கேரளா தமிழச்சி என்று சில மனித நேயமற்ற மனிதர்களால் அச்சுறுத்தலுகளுக்குஉள்ளாக்கப்பட்டபோதும் என் சொந்த ஊர் ‘முல்லைப்பெரியார்’ பகுதி உண்மை அற்ற செய்திகளால் மறைக்கப்பட்டு; மறுக்கப்பட்டசெய்தியால் ஊடக வெளிச்சத்தில் இருந்த போது எழுதப்பட்டதே http://josephinetalks.blogspot.in/2011/12/blog-post_20.html

பெண்கள் மன அழுத்தத்தால்பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என்ற பாதிப்பால் எழுதப்பட்டதே மனஅழுத்தம்இப்பதிவு. இதை பெரிதும் விரும்பி பலர் வாசித்துள்ளனர்.
3 பேருக்கு தூக்குஎன்ற செய்தி சட் டம் தீட்டி மனிதனை இன்னொரு மனிதன் பலியாக்கலாமா என்ற கேள்விக்கு பதிலாக இந்த பதிவு http://josephinetalks.blogspot.in/2011/09/blog-post_07.htmlஅமைந்துள்ளது.

நெல்லையில் மிகவும்சிறப்பாக கொண்டாடும் தசராhttp://josephinetalks.blogspot.in/2011/10/blog-post_14.html திருவிழாவை நேரடியாக கண்டு 3 பதிவுகள் தொடர்ந்து எழுதினேன்.


மேலும் என் கணவர் குழந்தைகளுடன்பயணித்த விடுமுறை நாட்களை கொண்டு பல பதிவுகள்http://josephinetalks.blogspot.in/2011/04/blog-post_15.html எழுத வாய்த்தது.

நான் ரசித்து வெறுத்து பார்த்தசினிமா படங்களை என் நண்பர்களுடன் பகிர வேண்டும் என்ற ஆற்வத்தில் சில பதிவுகள் எழுதியுள்ளேன் http://josephinetalks.blogspot.in/2011/06/blog-post_28.htmlமேலும்

நான் ருசித்து சமைத்த சில சமையல் http://josephinetalks.blogspot.in/2011/09/fish-curry.htmlநுணுக்கங்களையும்பகிர்ந்துள்ளேன்.

இப்படியாக என் வலைப்பதிவுகள் நான் காணும் சமூக நிகழ்வுகள், மகிழ்ச்சிகள், என் மகிழ்ச்சிகள் என் வருத்தங்கள் என பதிவாக மாற்றுகின்றேன். என் வாழ்வின் வலைப்பதிவுகள் சிறப்பான அங்கமாக பயணிக்கின்றது.உங்களையும் என்னுடன் என் வலைப்பதிவுடன் பயணிக்கஅழைக்கின்றேன் மேலும் உங்கள் கருத்துக்களையும் எதிர் நோக்குகின்றேன்.பாசமுடன் கதைக்கும்உங்கள் ஜோஸபின் பாபா!

மேலும் வாசிக்க...

Monday, March 19, 2012

நான் விரும்பும் சில பதிவுகள், நீங்கள் விரும்பக் கூடியவையும்!

நான்விரும்பும் பதிவுகள் என குறிப்பிட்டு சொல்ல தயங்குகின்றேன். எழுதப்படும் நபரை பொறுத்து ஒவ்வொரு பதிவுக்கும்ஒரு தன்மை, சிறப்பு, ஆளுமை, உண்டு. சிலர் சம்பவங்களை மிகவும்கண்டிப்புடன் காணும் பொழுது சிலரோ விளையாட்டாகவும் நகைச்சுவையாகவும் நோக்கி பார்க்கின்றனர்.சிலர் பல அரிய புத்தகங்களை தேடி வாசித்து பதிவாக வெளியிடும் போது சில தங்கள் வாழ்க்கையில்காணும் சம்வங்களை மிகவும் நுணுக்கமாகவும் அருமையாகவும் கோர்த்து எழுதுகின்றனர்.

தகவல் பரிமாற்றம் குறிப்பிட்ட நபர்களின் கைகளில் மட்டும் தேங்காது; விரும்பும் அனைவரின் கைகளிலும் வலைப்பதிவு என்ற ஊடகம் வழியாக தவிழ்கின்றது என்பதே இதன்சிறப்பு. இதனால் ஊடகம் என்பது சில நிறுவனங்கள் குறிப்பிட்ட நபர்களை தாண்டி சமூகத்தில்எல்லா நிலைகளிலும் உள்ள தனி நபர்களால் எடுத்து செல்லப்படுகின்றது என்றால் அதற்க்கு மிகவும்சரியான எடுத்து காட்டு வலைப்பதிவுகளே. பெரியபெரிய பத்திரிக்கை தொலைகாட்சிகள் சொல்ல தயங்கும் விடயங்களை தனி நபர் வலைப்பதிவுகள்கையாளுகின்றது எழுதுகின்றது என்பதே இதன் மிகப்பெரிய சிறப்பு. பல வலைப்பதிவுகள் என் வாசிப்பு தளங்களைமுழுமையாக ஆக்கிரமிக்கின்றது என்றால் அதுவே உண்மை. அவ்வகையில் என் நினைவில் வந்த சிலபதிவுகளை மட்டும் பதிகின்றேன்.

முதன்முதலாக வலைப்பதிவு என்றால் எப்படியிருக்கும், எப்படி இருக்க வேண்டும் என கற்று கொடுத்தஎன் பேராசிரியரின் வலைப்பதிவே http://blogs.widescreenjournal.org/?p=2261 எனக்கு பிடித்தமானது. கொஞ்சம் நேரம் எடுத்து வாசிக்கவேண்டும் என்றிருந்தாலும் அறிவு களஞ்சியமான இப்பதிவு நான் என்றும் விரும்பி படிக்கும் பதிவாகும்.

ஒரு சிறந்த வலைப்பதிவின் தன்மை கொண்டதும், பத்திரிக்கையாளரும் உலகம் முழுதும் சுற்றுபயணம் செய்யும் டேவிட்என்பவரின் ‘பனியன்மான்’http://banyanman.blogspot.in/ என்ற வலைப்பதிவு எனக்கு மிகவும் பிடித்தமானது.

ஜெயமோகனால்எழுதப்படும் வலைப்பதிவை http://www.jeyamohan.in/நான் விரும்பி வாசிப்பது உண்டு. சில கருத்துக்கள் முரண்பட்டிருந்தாலும் சமூகத்தை எழுத்தால் ஆளுமை செய்யும் கருவியாக எடுத்து செல்லும் ஜெயமோகன் வலைப்பதிவுகள் என்றும்சிறந்ததே. எழுத்தை வெறும் பொழுது போக்காக மட்டுமே பார்க்காது காத்திரமான சமூக அக்கறையுடன் எடுத்து செல்கின்றார்.

விரும்பி படிக்கும் பதிவுகளில் ஒன்றாகும் ஈழ சகோதரி தமிழ் நதியுடைய வலைப்பதிவுகள் http://tamilnathy.blogspot.in/. பெண்களால் தைரியமாகவும் உணர்வு பூர்வமாகவும் எழுத இயலும் என்று நிரூபித்தவரே தமிழ் நதி அவர்கள். ஈழம் சம்பந்தமாக தன் கருத்துக்களை ஆணித்தரமாகஎழுதி வருபவர். தன் துயரைவிட தன் மக்கள் துயரை உள் கொண்டு ஈழ நாடு என்ற கருத்தாக்கத்தில்பல பதிவுகள் கானடாவில் இருந்து எழுதி வருகின்றார். எழுத்து என்ற ஆயுதத்துடன் உரிமைக்காக போராடும் கருவியாகவும் மாற்றி எழுதி வருபவர்.கவிதை, கதை, அரசியல் - அலசல் என இவருடைய பதிவுகளுக்கு ஒரு தனி இடம் உண்டு.

ஏனோ தானோ என்று வலைப்பதிவை பயன்படுத்துபவர்கள் மத்தியில், கானாபிரபாவுடைய வலைப்பதிவு கருத்து பரிமாற்றத்திற்க்கும் வலைப்பதிவை ஒரு மாற்று ஊடகமாகவும் பாவித்து எழுதி வருபவர். திரைப்படவிமர்சனம், தங்கள் நாட்டு செய்தி, ஈழ தமிழர்களின் அரசியல் வாழ்வியல் காலச்சார செய்திஎன விளாவாரியாக எழுதி வருகின்றவர். தன் கருத்தை திடமாக நிலைநாட்டும் இவருடைய வலைப்பதிவு http://kanapraba.blogspot.com/வாசிக்க சுவாரசியமானதாகும்.

'அவர்கள்உண்மைகள்' http://avargal-unmaigal.blogspot.in/2012/03/never-give-up.html என்ற வலைப்பதிவு வழியாக தான் சார்ந்த தான் காணும் சிறு சம்பவங்களையும் விருவிருப்பாகஎழுதி பதிவிடுவதில் கில்லாடியானவரே இப்பதிவர். அமெரிக்காவில் வாழும் தமிழர் என்றாலும்அமெரிக்காவில் நம் இந்தியர்கள் தமிழர்கள் செய்யும் தில்லாலங்கடி செயல்களையும் உரிப்பதுமட்டுமல்லாது தான் சந்திக்கும் நிகழ்வுகளை அக்மார்க்கு தங்கம் போல் பதிபவரே இவர். அவருடையவலைப்பதிவை அலுப்பு தட்டாது வாசிக்க இயலும்.

எனக்கு பிடித்த வலைப்பதிவுகளில் ஒன்றாகும் கோமதி சங்கர் என்ற நண்பர் போகனுடைய வலைப்பதிவுகள் http://ezhuththuppizhai.blogspot.in/2011/01/3.html. உளவியல் தளங்களை அலசி ஆராயும், பிரத்தியேக யுக்தியுடன் நுணுக்கமாகஎழுதும் இப்பதிவு விருவிருப்பானதே. கற்பனையும் உண்மையும் ஒன்றை ஒன்று சந்திக்கும் இவருடையபல பதிவுகள் நம்மை திகிலுக்கு கொண்டு செல்கின்றது.

நாஞ்ஜில் நாட்டு நண்பர்மனோவின் வலைப்பதிவும் http://nanjilmano.blogspot.in/2012/03/blog-post_18.htmlவிரும்பி வாசிப்பது உண்டு. தனி நபரால் தான் வாழும் சூழலை சமூகத்தைதளமாக கொண்டு விருவிருப்பாக உண்மையாக எழுதலாம் என்றால் இப்பதிவையும் எடுத்து கொள்ளலாம். நையாண்டியாக கதை சொல்லும் பாங்கு இவர் பதிவுகளில் காணலாம்.

தான்தருசிக்கும் ஆலயங்கள், சமூகத்திற்க்கு பயனுள்ள தகவல்கள் தரவேண்டும் என்ற பிரஞ்யில்எழுதும் ரத்தின வேல் ஐயாவில் வலைப்பதிகளையும் http://rathnavel-natarajan.blogspot.in/2011/10/blog-post_20.htmlவிரும்பி படிப்பது உண்டு. அடுத்தவர்கள் பதிவையும்ஆர்வமாக வாசிக்க தூண்டுவது ஐயாவின் சிறந்த பணியாகும்.

அடுத்தாகஸ்ரீலங்காவை சேர்ந்த மருத்துவர் முருகானந்தன் அவர்களுடைய பதிவு ஆகும்.http://hainallama.blogspot.in/2012/03/blog-post.html மனித உடல் நலம் மருத்தவம் பற்றி அலசிஆராயும் சிறந்த வலைப்பதிவாகும். சிறந்த வலைப்பதிவர் என விருது பெற்றவர் ஆவார் டொக்டர் சாப்!

'சாமியின் மனஅலைகள்' என எழுதி வரும் ஓய்வு பெற்ற டாக்டர் பழனி கந்தசாமி அவர்களின் பதிவுகள் ஒரு தனி தன்மையுடன்விளங்குகின்றது. பல அரிய தகவல்களை நமக்கு அள்ளி வழங்குகின்றது.http://swamysmusings.blogspot.in/

மதுரைசெய்திகள் நோக்க வேண்டும் என்றால் தம்பி தமிழ் வாசியின் வலைப்பதிவுக்கு http://www.tamilvaasi.com/2012/03/atube-catcher.htmlசெல்வது போல்இலங்கை ஈழ தமிழர்களின் உண்மையான செய்தி அறிய நண்பர் அம்பலத்தார் http://ampalatharpakkam.blogspot.in/2012/03/blog-post_13.html?spref=fbபக்கம் செல்கின்றேன். இவரின் ஈழ தமிழ் எழுத்து நடை சுவாரசியமானது!

அதேபோல் நாட்டு மன்னர்களின், அரசியல்வாதிகள், சமூகத்தளத்தில் விளங்கியவர்களின் வரலாற்றை வாசித்துவந்த நமக்கு சமூகத்தில் சாதராணமானவனின் சரித்திரத்தையும் உண்மையாக எழுத இயலும் எனதைரியமாக நிரூபித்து வரும் நோர்வை ஈழ தமிழரான என் அண்ணன் விசரன் என்ற சஞ்சயன் பதிவுகள்http://visaran.blogspot.in/2012/03/blog-post_18.html சிறந்தவை!

சுவிஸ்ஈழ சகோதரான ஸ்ரீ அண்ணாவின் வலைப்பதிவுகள் பக்தியை கையாளுவது போலவே வாழ்வியலையும் கையாளுகின்றது.அவருக்கு என ஒரு தனி பாணியை வைத்து கொண்டு நிலைக்கண்ணாடிhttp://srikandarajahgangai.blogspot.in/2012/03/blog-post_14.html என்ற பெயரில் எழுதி வருகின்றார்.

குழந்தைகளுக்குஎன கதை சொல்லும் அருட் தந்தை சேவியர் அவர்களின் வலைப்பதிவும் http://xavierantonyskidsstories.blogspot.in/2012/01/blog-post_5931.htmlஒரு சிறந்த இடத்தை தக்க வைக்கின்றது.

பெண் பத்திரிக்கையாளர் தமிழ் மலரின் http://tamilmalarnews.blogspot.in/2012/02/blog-post_24.html வலைப்பதிவும் கேரளா- தமிழக அரசியல் செய்திகள் கொண்ட சிறந்த வலைப்பதிவு ஆகும்.

இதைபதிந்து முடிக்கும் போது இன்னும் சிறந்த பதிவுகள் நினைவுக்கு வரலாம். சற்று மன்னியுங்கள்.விடுபட்டவையை அடுத்த பதிவில் பகிர்வேன். அன்புடன்….ஜெ.பி ஜோஸபின் பாபா
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது