07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, March 31, 2012

கதம்பம் - 7 (வலைச்சரத்தில் இன்று)

இன்று வலைச்சரத்தில் எனக்கு ஏழாவது நாள். அதாவது கடைசி நாள். இன்றும் சில பதிவுகளைப் அறிமுகம் செய்து நெகிழ்ச்சியுடன் விடைபெறுகிறேன். அறிமுகங்களைப் பார்த்து விடலாம்.

1. ராஜ்குமார் நடத்தும் தமிழ்க்குறிஞ்சி தளத்தில் இருக்கும் இந்தக் கட்டுரையைப் பாருங்கள. இது கட்டுரையா அல்லது கவிதையா என வியக்க வைக்கும் அருமையான பதிவு. உணர்வுகள் நெருடுகின்றன. நெஞ்சம் கனத்துப் போகிறது. கண்கள் பனிக்கிறது. உங்களுக்காக இதோ அந்த பதிவு. ஒரு குருவிக்கு நிகழ்ந்தது. ஆனால் இப்பதிவர் நீண்ட நாட்களாக பதிவெழுதாமல் இருந்து வருகிறார். இவரைப் போன்றவர்கள் தொடர்ந்து எழுத வேண்டும்.

2. சுபா நடத்தும் சுபாவின் குறிப்பு தளத்தில் உள்ள இந்த பதிவைப் படியுங்கள். வீட்டிலுள்ள பொருட்களைப் பாதுகாக்க டிப்ஸ். பல மருத்துவக் குறிப்புகளும் எழுதியுள்ளார்.

3. ச.பிரேம்குமார் நடத்தும் மொழியோடு ஒரு பயணம் என்கிற வலைப்பூவில் உள்ள இந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்ற கவிதையைப் பாருங்கள். காதலிக்கு ஏக்கத்தோடு வாழ்த்து சொல்லும் கவிதை. ஏன் என்று நீங்களே படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

4. இந்த மண்குதிரை எனும் வலைப்பூவில் ஆசிரியர் தேவதச்சனின் கவிதை நூல் ஒன்றை விமர்சனம் செய்து எழுதியுள்ள இந்த ஒரு கணத்தின் நூற்றாண்டு அனுபவம் என்கிற கட்டுரையை வாசித்துப் பாருங்கள். நவீனத்துவக் கவிதைகளும் விமர்சனங்களும் விரவிக் கிடக்கிற தளம் இது.

5. தமிழ்த்தேனீயின் தளத்தை (அவரது தளத்தின் பெயரும் அதுவே) வாசிக்கத் தவறாதீர்கள். அருமையாக உள்ளது. அவரது உணவும் ஆரோக்கியமும் ஒரு ஒப்பற்ற மருத்துவக் கட்டுரையாகும். அது எப்படி உணவையே மருந்தாக மாற்றுவது என்ற அழகாக விவரிக்கிறது.

6. தமிழ் உதயத்தின் (தளத்தின் பெயரும் அதுவே) சிறுகதைகளை வாசிக்கத் தவறாதீர்கள். தரமான கதைகள். வார இதழ்களிலும் எழுதி வருகிறார். கல்கி இதழில் வெளிவந்த அவரது மீசைக்கார அப்பா என்ற இக்கதையை வாசியுங்கள்.

7. இதோ தமிழ்ப்புத்தாண்டு வரப் போகிறது. ஆனால் இந்த சங்கப்பலகை எனும் தளத்தின் ஆசிரியர் தை முதல் தேதிதான் தமிழ்ப்புத்தாண்டு என்று அடித்துச் சொல்கிறார். அதற்கு சில காரணங்களும் சொல்கிறார். முடிவு எடுக்க வேண்டியது உங்க பொறுப்பு.

நன்றி சொல்லும் நேரமிது.

- இந்த அருமையான வலைச்சரப் பணியை எனக்கு வழங்கி கௌரவப்படுத்திய அன்பின் சீனா சார் அவர்களுக்கும் மற்றும் பிரகாஷ் சார் அவர்களுக்கும் மற்றும் வலைச்சர ஆசிரியர் குழு அத்தனை பேருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதைவிட இந்த ஏழு நாட்களும் நான் தொடுத்த வலைச்சரங்களை பார்வையிட்டு வாக்கிட்டு கருத்துரையிட்டு எனக்குப் பேராதரவு வழங்கிய அத்தனை வலையுலக சொந்தங்களுக்கும் உன் உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றிகளை நெகிழ்சியுடன் தெரிவிக்கிறேன். நன்றி! நன்றி! நன்றியைத் தவிர வேறில்லை....!

12 comments:

 1. அன்புள்ள துரை டேனியல் அவர்களே,

  எனது 'பூவனம்' தளத்தைப் பற்றி வலைச்சர நண்பர்களுக்குச் சொல்லி ஆற்றுப்படுத்தியமைக்கு மனமார்ந்த நன்றி. தங்கள் பணிகள் சிறக்கட்டும்.

  மிக்க அன்புடன்,
  ஜீவி

  ReplyDelete
 2. வலைச்சர வாரத்தை அழகாக நடத்தி நிறைவாக்கியிருக்கிறீர்கள்.இனி உங்கள் தளத்தோடு தொடர்வோம்.வாழ்த்துகள் டானியல் !

  ReplyDelete
 3. ஏழு நாட்களும் தங்களுக்கான ஆசிரியர் பணியினை
  மிகச் சிறப்பாகச் செய்து மிகச் சிறந்த
  பதிவுகளை மிக அழகாக அறிமுகப்படுத்தியமைக்கு
  மனமார்ந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. சிறப்பாக செய்தீர்கள்.வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 5. வலையாசிரியர் பணியை செவ்வனே முடித்தமைக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 6. பணிமுடித்து வரைம் துரையே வருக வருக!
  வாழ்த்துக்கள்!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 7. ஏழுநாட்களும் ஏழுநிற வண்ணமாய்
  வலைச்சரத்தில் தங்கள் பணியை..
  அழகுற முடித்தமைக்கு
  வாழ்த்துக்கள் நண்பரே......

  ReplyDelete
 8. சிறப்பாக வலைச்சர ஆசிரியர் பணி ஆற்றிய நண்பருக்கு வாழ்த்துகள்.... பாராட்டுகள் நண்பரே...

  ReplyDelete
 9. ஒரு வாரம் சிறப்பான பங்காற்றிய துரை டேனியல் அவர்களுக்கு வாழ்த்துகள் !

  ReplyDelete
 10. சிறப்பாக செய்தீர்கள்.வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 11. கடந்த ஒரு வாரமாக சிறப்பாக பணியாற்றிய தங்களுக்கு பாராட்டுகள்.

  ReplyDelete
 12. துரை டேனியல் அவர்களுக்கு,
  என்னுடைய தைத் தமிழ்ப் புத்தாண்டு பற்றிய பதிவைச் சுட்டியதற்கு நன்றி.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது