07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, September 30, 2010

பயண மலர்கள்

பயணங்கள் - நமது வாழ்வின் ஒரு அங்கமாக இருக்க வேண்டிய சமாச்சாரம். பெரும்பாலான தமிழர்களுக்கு அப்படி இருப்பதில்லை. நெடும் தொலைவு பயண வாய்ப்பு இல்லாதவர்களுக்கு, பயணக்கட்டுரைகள் அக்குறை தீர்த்து வைக்கும். இன்று பயணக்கட்டுரைகள் நிறைந்த வலைப்பூக்களை காண்போம்.

பயணம் என்றால், வலையுலகில் நினைவுக்கு வருபவர் துளசி அம்மாவாகத்தான் இருக்கும். இவங்களோட வலைத்தளத்திற்குள் நுழைந்தால் போதும். கன்னியாக்குமரியில் இருந்து வாகா பார்டர் வரை, நியூசிலாந்தில் இருந்து தாய்லாந்து வரை, ஒரு பைசா இல்லாமல் உலகைச் சுற்றி பார்த்துவிடலாம். பார்த்த ஒரு விஷயம் விடாமல், கேட்ட ஒரு விஷயம் விடாமல் அனைத்தும் பதிவு செய்யப்பட்டிருக்கும். தகவல் ரீதியில் ஒரு முழுமையான அனுபவத்தை, அம்மாவின் பதிவுகள் கொடுக்கும்.

சர்வேசன் அடிக்கடி ஊர் சுற்ற மாட்டார். எப்ப காசு செலவழிக்க தோணுதோ, அப்ப மட்டும் போவாரு. :-) ஆனா, எப்பலாம் போறாரோ, அப்ப எல்லாம் நமக்கு தரமான கண்ணில் ஒத்திக்கிற மாதிரியான படங்கள் கிடைக்கும். இங்கே, இவர் அலாஸ்காவில் எடுத்த படங்கள் இருக்கிறது. அலாஸ்காவை மட்டுமல்ல, பல்லாவரத்தையும் அழகா படம் பிடிப்பாரு.

பதிவர் சௌந்தர், சென்னையில் இருந்து வத்தலக்குண்டு பக்கமிருக்கும் ஒரு கோவிலுக்கு காரில் சென்ற அனுபவத்தை இங்கே பகிர்ந்திருக்கிறார். வாசித்தால், நாமும் அவருடைய குடும்பத்துடன் சென்ற வந்த உணர்வு கிடைக்கிறது.

வடகிழக்கு மாநிலங்களுக்கு சென்ற வந்த அனுபவத்தை, பதிவர் சிதம்பரநாதன் அவருடைய வலைப்பூவில் பதிவிட தொடங்கியிருக்கிறார். இப்போது தான் தொடங்கியிருக்கிறார். வாருங்கள், நாமும் சேர்ந்து கொள்ளலாம்.

அதேபோல், பதிவர் சிவா அவர்கள் திருநெல்வேலி சீமையை சுற்றிக்காட்ட போகிறார். அதற்கும் தயாராகுங்கள்.

வெங்கட் நாகராஜ், டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த சென்ற ரயில் பயண அனுபவத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறார். பயணங்களின் போது, அவர் சந்தித்த வித்தியாசமானவர்களைப் பற்றி இப்பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார்.

ஷபீக் அவர்கள் குற்றாலத்தின் அருமை பெருமைகளை இப்பதிவில் பட்டியலிட்டு இருக்கிறார். கூடவே, குற்றாலம் சென்றால் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்றெல்லாம் குறிப்பிட்டு இருக்கிறார். குற்றாலம் செல்லும் முன்பு, வாசித்துவிட்டு செல்ல வேண்டிய பதிவு.

இப்படி எல்லோரும் அவுங்கவுங்க பயண அனுபவங்களை சொன்னது போல், உறவுக்காரன் அவர்கள் உலக அமைதிக்காக தொடர் பயணம் மேற்கொண்ட ஒரு பெண்மணியை பற்றி இப்பதிவில் சொல்லியிருக்கிறார். அந்தம்மா அமெரிக்கா, கனடா, மெக்சிக்கோ என நாடு விட்டு நாடு, நடை நடை’ன்னு நடந்திருக்காங்க.

சேகுவரா பல்வேறு நாட்டு மக்களின் சுதந்திரத்திற்காக மேற்கொண்ட உலக பயணங்கள் மட்டுமல்லாமல், அவருடைய வாழ்க்கை பயணத்தை பற்றியும் இக்கட்டுரை பேசுகிறது.

இங்கு பார்த்ததுபோல், பயணங்கள் என்பது புது இடங்களை காண்பது என்பதில் இருந்து உலக மக்களின் நன்மை என்ற வகையில் வரை முக்கியத்துவம் பெறுகிறது. இதை படித்துவிட்டு, எங்காவது சென்று வரலாம் என்று தோன்றுகிறதா? அது போதும் எனக்கு.

நாளை உங்களை கவரும் இன்னொரு வகை மலர்களுடன் சந்திக்கிறேன். டாடா... பை... பை...!!!

.
மேலும் வாசிக்க...

Wednesday, September 29, 2010

நகைச்சுவை மலர்கள்

எழுத்தைக் கொண்டு பிறருக்கு என்ன விதமான நன்மைகள் செய்ய முடியும்? நகைச்சுவையாக ஒரு பதிவை எழுதி, படிப்பவர்களை கவலை மறந்து சிரிக்க வைத்தால், அதுவே ஒரு பெரிய நல்ல விஷயம் தானே? அப்படி நகைச்சுவையான நடையில் எழுதுபவர்களை பற்றிய தொகுப்பு இன்று.

ஜவஹர் சார் எழுதும் அனுபவ பதிவுகளில், எங்காவது ஒரு இடத்திலாவது வாய்விட்டு சிரிக்க வைத்துவிடுவார். உதாரணத்திற்கு, காரில் குறுக்கு வழியில் சென்ற அனுபவம் கூறும் இந்த பதிவை பாருங்கள்.

அம்மாஞ்சி என்ற வலைப்பூவில் எழுதும் அம்பி, எதை எழுதினாலும் அதில் அவருடைய நகைச்சுவையான நடை கண்டிப்பாக இருக்கும். ஐசிஐசிஐ விளம்பரம் பற்றி இவர் எழுதிய பதிவு, என்னால் மறக்க முடியாதது.

படங்களை போட்டு அதில் உள்ளவர்களை கலாய்ப்பது, சுகுமாரின் வேலை. ராமராஜனை எப்படி வாரியிருக்கிறார் என்று இங்கு சென்று பாருங்கள். விஜய்யை எஸ்.எம்.எஸில் கலாய்த்திருக்கிறார்கள். மெயிலில் கலாய்த்திருக்கிறார்கள். பதிவெழுதி கலாய்த்திருக்கிறார்கள். இவர் ப்ளாஷில் கலாய்த்திருக்கிறார்.

ரஜினியின் எந்திரனை தயாரித்த சன் பிக்சர்ஸ், அடுத்து கமலின் மருதநாயகத்தை தயாரித்தால் எப்படி இருக்கும் என்பதை பாலகுமார் இங்கே சொல்லியிருக்கிறார். யோசித்தே சிரியுங்கள். இவை நடந்தாலும் நடக்கும்!

இன்றைய பதிவுலக இலக்கியவாதிகளின் பழைய உண்மை வாழ்க்கையை ’ப்ளாஷ்பேக்’காக புட்டு புட்டு வைத்திருக்கிறார் குசும்பன் இப்பதிவில். இதை படிச்சிட்டு சிற்றிதழ், புத்தகக்கண்காட்சி என்றெல்லாம் பேச முடியுமா, என்ன?

’ஆஹா பக்கங்கள்’ அப்துல் காதர், மனைவியை கைக்குள் போட்டு கொள்வது எப்படி? என்பதை இப்பதிவில் விளக்கியிருக்கிறார். முடிவில் சீரியஸாக ஐடியாக்கள் கொடுத்திருந்தாலும், ஆரம்ப ஐடியாக்கள் ஜோர்.

நெகிழ வைக்கும் பதிவுகளை அவ்வப்போது எழுதினாலும், அவிய்ங்க ராசா துள்ளலான நகைச்சுவை எழுத்திற்கு சொந்தக்காரர். கல்யாண வீட்டு பந்தியில் அவர் பட்ட பாட்டை, இங்கே பாருங்கள்.

வெகுஜன பத்திரிக்கைகளில் தென்படும் நகைச்சுவை துணுக்குகள், வலையுலகிலும் காணக்கிடைக்கின்றன. கணவன் - மனைவி ஜோக்குகளை ஆண்டோ நாம் சிரிப்பதற்காக இங்கு பதிந்திருக்கிறார்.

இந்த கால பசங்ககிட்ட மாட்டிக்கிட்டு ஒரு வாத்தியார் படும் பாட்டை, இந்த பதிவில் ராஜ்குமார் கேள்வி-பதில் வகையாக எழுதியிருக்கிறார்.

இந்த வலைப்பூக்கள் உங்களை மகிழ்வித்திருந்தால், அந்த புண்ணியம் அந்த எழுத்துக்களின் சொந்தக்காரருக்கே போய் சேரும். அதனால், புண்ணியம் சேர்க்க இப்படியும் ஒரு வழியிருக்கிறது.

நாளை வேறொரு வகை பூக்களுடன், உங்களை சந்திக்கிறேன்.

.
மேலும் வாசிக்க...

Tuesday, September 28, 2010

இன்னிசை மலர்கள்

முன்பே சொன்னதுபோல், பாட்டு கேட்பது ரொம்ப பிடித்த விஷயம். அதேப்போல் பாடல்களைப் பற்றி எழுத்துக்களும் பிடிக்கும். இன்று இசை தொடர்பான பதிவுகளைப் பார்க்கலாம்.

ரவிஷங்கர் எழுதும் இளையராஜாவின் பாடல்கள் தொடர்பான பதிவுகளை படித்துவிட்டால், உடனே அந்தந்த பாடல்கள் கேட்க தோன்றிவிடும். அதுவும் பாடலில் இந்த இந்த இடங்கள் என்று விநாடி விவரம் சொல்லி அவர் குறிப்பிடும் இசைத்துணுக்குகள் கேட்டால், அவர் எப்படி இப்படி இசையை ஆழ்ந்து கவனிக்கிறார் என்ற ஆச்சரியம் வரும். அவர் இளையராஜாவை வியந்து எழுதியிருப்பார். நான் இவரை வியந்துக் கொண்டிருப்பேன்.

ஷாஜியின் இசைப்பதிவுகள் பற்றி இசை ரசிகர்கள் அனைவரும் அறிந்திருப்பார்கள். மலேசியா வாசுதேவன் பற்றி வந்த சமீபத்திய பதிவு தவறவிட கூடாதது. பதிவு வந்த சில நாட்களிலேயே, மலேசியா வாசுதேவனின் இன்றைய நிலை பற்றிய கட்டுரை ஆனந்த விகடனில் வந்தது.

பாடல் பிறந்த கதையை தெரிந்துக்கொள்வதில் ஆர்வம் உண்டா? எனக்கு உண்டு. கவிஞர் யுகபாரதி ‘முன்னாள் சொற்கள்’ என்ற தலைப்பில் அவருடைய வலைப்பூவில் எழுதி வருவது பெரும்பாலோருக்கு தெரிந்திருக்கும். அதைப்போல, புகழ்பெற்ற பழைய பாடல்கள் உருவான விதம் பற்றி ஆர்வியின் இந்த தளத்தில் காணலாம். காதலிக்க நேரமில்லை ‘விஸ்வநாதன் வேலை வேண்டும்’ பாடலின் சுவாரஸ்ய பிண்ணனி இங்கே இருக்கிறது.

அகி மியூசிக் அகிலனின் வலைத்தளத்தில் இளையராஜா, ரஹ்மான் என இவ்விரு இசை பிரம்மாக்களுடனான அவருடைய அனுபவங்கள் காணக் கிடைக்கிறது.

இசையமைப்பாளர் விவேக் நாராயணின் வலைப்பூ இது. எழுத்தாளர் சுஜாதாவின் கவிதைக்கு இவர் அமைத்துள்ள இசை, இங்கே இருக்கிறது.

ஆனந்த் என்ற இசையமைப்பாளரின் வயலின் வில் வாங்கிய கதை, நீங்களும் வில் வாங்கினால் உதவலாம். டிஜிட்டல் இசை பற்றிய அவருடைய பதிவு, இசையுலகில் தொழில்நுட்ப வளர்ச்சியின் அருமை பெருமையை கூறுவதாக அமைந்துள்ளது.

கவிஞர் மரபின் மைந்தன் முத்தையாவின் வலைப்பூவில், கண்ணதாசன் பற்றிய நினைவுகளுடன் கூடிய பதிவுகள் நிறைய உண்டு. சமீபத்தில் மரணமடைந்த ஸ்வர்ணலதாவுக்கு அவர் அஞ்சலி செய்து எழுதிய பதிவு இது.

டேப் ரிக்கார்டர் காலத்தில், ஒரு கேசட் வாங்கி ஒவ்வொரு படத்தில் இருந்தும் நன்றாக இருக்கும் பாடல்கள் என்று தேர்வு செய்து பனிரெண்டு பாடல்கள் பதிவோம் அல்லவா? இப்ப, அப்படி தேர்ந்தெடுக்க வேண்டுமானால், மோகன் உதவுவார். ஒவ்வொரு மாதமும் சிறந்த பத்து பாடல்கள் வரிசை ஒன்று வெளியிடுவார். போன மாத வரிசை இங்கே.

ஸ்ரீ சரவணகுமார், பாடகி ஜானகியின் தீவிரமான ரசிகர். ஜானகி பாடிய பாடல்களைப் பற்றி பதிவெழுதியவர். சமீப காலங்களில் எழுவதில்லை. தொடர்ந்து எழுதினால் நன்றாக இருக்கும்.

ராகவனும், அமைதிச்சாரலும் தங்களுக்கு பிடித்த பாடலை கேட்டு விட்டு மட்டும் போகாமல், ரசித்த பாடலின் வரிகளை முழு விவரத்துடன் பதிந்தும் வருகிறார்கள்.

பாடல்கள் கொண்டாட்டத்தை கொடுக்கும். மனக்கஷ்டத்தை குறைக்கும். போலவே இப்பதிவுகளும்.

பாடல்களைப் பற்றி இவ்வளவு பதிவுகளைப் பார்த்தோம் அல்லவா? அப்படியே, பாட்டு பாடிக்கொண்டே இன்றைய தினத்தை சிறப்பாக தொடருங்கள் பார்க்கலாம்!!! நாளை உங்களை கவரும் இன்னொரு வகை பூக்களுடன் சந்திக்கிறேன். :-)
மேலும் வாசிக்க...

Monday, September 27, 2010

என் தோட்டத்து மலர்கள்

வலைச்சரத்தில் மலர் தொடுக்க வாய்ப்பளித்ததற்காக வலைச்சரக்குழுவிற்கு எனது நன்றிகள். இவ்வாரம் நான் வலைச்சரத்தில் வலைப்பூக்கள் கொண்டு மாலைக்கட்ட போகிறேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பூக்கள் கொண்டு மாலை தொடுக்க திட்டம். இன்று என் தோட்டத்து மலர்கள்.

ஒவ்வொரு வலைப்பூவை வைத்தும், அந்த வலைப்பூவின் சொந்தக்காரர் பற்றி அறிந்துக்கொள்ளலாம். அவருடைய ஆர்வங்கள், திறமைகள், பண்புகளை பற்றி அறிந்துக்கொள்ளலாம். போலவே என் வலைப்பூவும்.

ஆரம்பத்தில் நகைச்சுவையை மையமாக வைத்து நிறைய பதிவுகள் எழுதியிருக்கிறேன். chaos தியரி பற்றி எழுதிய இப்பதிவு எனக்கு ஸ்பெஷல். ஆனந்த விகடனில் இதை வெளியிட்டு இருந்தார்கள்.

கதைகள் எழுதவும் முயற்சி செய்ததுண்டு. அப்படி ஒரு முயற்சி, இண்டர்வியூ செல்லும் ஒருவனைப் பற்றிய கதை. நன்றாக இருந்ததாகவே அப்பொழுது நண்பர்கள் சொன்னார்கள். நீங்களும் படிச்சிட்டு சொல்லுங்க.

பெரும்பாலும் நகைச்சுவை அனுபவங்கள் சார்ந்தே கதைகள் எழுதியிருக்கிறேன். கன்சல்டன்சி, சரக்கும் சைடு டிஷ்ஷும், காத்திருந்து காத்திருந்து, ட்டுடூர்ர்ர்ர், சாவுடன் ஒரு பந்தயம் போன்ற இந்த கதைகளை வாசித்தால் நீங்கள் சிரிக்க வாய்ப்பிருக்கிறது. அன்றைய காலக்கட்ட சூழலை பொறுத்து எழுதிய கதை - விடாது வெறி!!!

வலைப்பூ தொடங்க காரணமாக இருந்த வாசிக்கும் பழக்கம் இன்னும் தொடர்கிறது. எப்பொழுதும் ஒரு புத்தகத்துடனேயே வாழ்வது பழக்கமாகிவிட்டது. அவ்வப்போது அப்படி வாசிப்பதை பதிந்திருக்கிறேன். என் இனிய இயந்திரா, துணையெழுத்து, கனவு தொழிற்சாலை, பெரியார், எம்.ஆர்.ராதா, கலைவாணர், சந்திரபாபு, ரஹ்மான், 2 ஸ்டேட்ஸ் என வாசித்து பகிர நினைத்தவை அனைத்தையும் பகிர்ந்திருக்கிறேன்.

வாசித்து பதிந்த எல்லா புத்தகங்களையும் இங்கே காணலாம்.

அடுத்ததாக சுதந்திரமான பயணங்கள் ரொம்பவும் பிடிக்கும். ஊர் ஊராக சுற்றியதை அவ்வப்போது பதிந்திருக்கிறேன்.

கன்னியாகுமரி, மணப்பாடு, கொற்கை, ராமேஸ்வரம், தஞ்சை, ஒகேனக்கல், பூனே, டெல்லி, ஆக்ரா என்று சென்ற வந்த இடங்களையெல்லாம் புகைப்படத்துடன் பதிவிட்டு இருப்பதால், அந்த நினைவுகள் தொலைந்து போகாமல் இருக்கிறது. ப்ளாக்கர் இருக்கும் வரை இருக்கும். :-)

பாட்டு கேட்பது இன்னொரு முக்கியமான விஷயம். பொழுதுபோக்கு என்று சொல்ல முடியாது. வேலை நேரத்திலும் கேட்க பிடிக்கும். கேட்ட பாடல்களை பற்றி நானே நிறைய எழுதியிருந்தாலும், நண்பர் மகேந்திரன் எனது தளத்தில் எழுதியிருக்கும் இசை தொடர்பான கட்டுரைகள் பிரபலமானவை. வாசிக்க தவறாதீர்கள்.

நீங்கள் உணவு ரசிகர் என்றால், இப்பதிவையும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த பக்கத்தையும் பாருங்கள். உபயோகமாக இருக்கலாம்.

இனி வரும் நாட்களில் நான் ரசித்த, வாசித்த மற்ற தோட்டத்து மலர்களை, உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

நன்றி.
மேலும் வாசிக்க...

Sunday, September 26, 2010

சூப்பர் ஜெய்லானி - வாங்க கலக்க வாங்க சரவண குமரன்

அன்பின் சக பதிவர்களே

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியராகப் பொறுப்பேற்ற அருமை நண்பர் ஜெய்லானி, ஏற்ற பொறுப்பினை மன நிறைவுடன் நிறைவேற்றி நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் வித்தியாசமான முறையில் - தினம் ஒரு தலைப்பாக - பதிவர்களை அறிமுகப்படுத்தி உள்ளார். முன்னுரை அறிமுகம் முடிவுரை என மூன்று பகுதிகளாகப் பிரித்து அழகாக சரத்தினைத் தொகுத்திருக்கிறார்.

சென்ற வாரத்தில் ஏழு இடுகைகள் இட்டு, ஐநூற்று எண்பது மறு மொழிகள் பெற்று, நூற்றி இருபது இடுகைகளை அறிமுகப் படுத்தி உள்ளார். சாதாரணமாக - ஆசிரியர்கள் இவ்வளவு பதிவர்களை அறிமுகப் படுத்துவது கிடையாது. இவ்வளவு அறிமுகங்கள் செய்ய வேண்டுமென்றால் - அத்தனையையும் படித்திருக்க வேண்டும். சுட்டிகள் - இடுகைகளின் தொடர்பு அறிமுகத்தில் அளிக்க வேண்டும். அது அவர்களின் கடும் உழைப்பினை வெளிப்படுத்துகிறது. வழக்கமான, அவரது சொந்த வலைப்பூவில் எளிதாக இடும் இடுகைக்கு உழைப்பதை விட இங்கு அதிகம் உழைத்திருக்கிறார்.

நண்பர் ஜெய்லானியினை பாராட்டி, நல்வாழ்த்துகளுடன் விடை அளிப்பதில் பெருமை அடைகிறேன்.

அடுத்து நாளை செப்டம்பர் 27ம் நாள் துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க வருகிறார் நண்பர் சரவணமுமரன். இவர் குமரன் குடில் என்னும் பதிவினில் எழுதி வருகிறார். இவர் ஒரு சாதாரண தமிழனாக வாழ விரும்புபவர் - வாழ்பவர். இவர் பெங்களூரில் மென்பொருட்துறையில் பணி புரியும் ஒரு தென் தமிழக இளைஞர். பெரும்பாலும் எழுதுவதை விட வாசிப்பதில் அதிக ஆர்வமுடையவர். வாசிப்பின் தாக்கம் எழுதத் தூண்டி எழுதவும் செய்கிறார்.

நண்பர் சரவண குமரனை வருக ! வருக ! ஆசிரியப் பொறுப்பேற்க வருக ! என வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் சரவனா குமரன்
நட்புடன் சீனா
மேலும் வாசிக்க...

ஆத்தா நா பாஸாயிட்டேன்---ஏழாம் நாள் (விடை பெறுதல் )

             ஒரு வாரம் எப்படி ஓடியதே தெரியல .இங்கு நிறைய பேரை அறிமுகம் செய்ய ஆசைதான் .என் ஒருவனால் மட்டும் இது முடிகிற காரியம் இல்லை. அதுவுமில்லாமல்  அடுத்து வருபவர்க்கும் இடம் வைக்கனுமே. அதனால் இதில் இன்னும் சிலரை மட்டும் அறிமுகம் செய்கிறேன் ( பின்னால யாரோ முனகும் சத்தம் கேக்குது)

சைவகொத்துப்பரோட்டா -  இந்தகிரீன் பார்க்படிக்கும் போது  சிலநேரம் இப்படியும் வருமான்னு தோனுது

சூர்யா கண்ணன்  இவரும் தமிழில் அனைத்து கம்ப்யூட்டர்  டெக்னிக்களையும் எழுதி வருகிறார்...

சாமக்கோடங்கி ... -  இவரின்  கார்பன் சுவடுகள்  மனதில் ஒரு பயம் வருவதை கானலாம்.

உபுண்டு -  நாம அதிகம் உபயோகிக்கும் விண்டோசை விட இது ரொம்ப நல்லா இருக்கு .சில சஃப்ட் வேர்  மட்டுமே இதில் வேலை செய்யல. எதையும் புதுசா என்னை மாதிரி டிரை பண்ணுபவர்க்கு இது பெஸ்ட்

இதயம் பேசுகிறது -  இதுவும் ஒரு வித இலுப்பை பூவும் இன்ஸ்டன்ட் காப்பியும் ! மாதிரிதான் தெரியுது


ILLUMINATI -  ஆங்கில .படங்களை பற்றி  தமிழில் எழுதுகிறார்


பனன்காட்டுநரி -  இப்படியெல்லாம் பேர் இருக்கு என்னசெய்ய ஆனா சில மனிதர்கள் எனும் மிருகங்கள்    தெரிஞ்சுக்க வேண்டிய பதிவு


"ஷ‌ஃபிக்ஸ்" -இதில எப்படி அணுகலாம்?  


              எந்த வேலையை செய்தாலும் அதை நேர்த்தியாக செய்யனும் என்பது  எனது கனவு..ஆனால் அதில் சிலநேரம் தவறாக கூட முடிந்து விடும்.  இதில(( வலைசர விதிகளில் ))    ஏதாவது மாற்றமாக  .இல்லை மீறி இருக்கிறேனா தெரியாது. தலைவர் வந்து சொல்லும் போதுதான் தெரியும். .இது வரை இதில் தொடர்ந்து ஆதரவு கொடுத்த  அனைத்து வலையுலக சகோதர , சகோதரிகளுக்கும் ,மற்றும் இதன் ஆசிரிய குடும்பத்தாருக்கும் , இங்கு வாய்பளித்த சீனா அய்யா அவர்களுக்கும்   என் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி வணக்கம்
மேலும் வாசிக்க...

Saturday, September 25, 2010

மசாலா மிக்ஸ் --ஆறாவது நாள்

      டிஸ்கி முன்னாலேயே சொல்லிக்கிறேன் வார்த்தைகள் இதுல என்னோட ஒரிஜினல் கமெண்ட்  ஸ்டைலில வரும் .. நோ சீரியஸ் , நோ ..டென்ஷன் பிளிஸ்.... ஹி..ஹி..
                       சமையலில் என்னந்தான் காய்கறி  , பருப்பு , மட்டன் ,சிக்கன் போட்டாலும் அதை அப்படியே சாப்பிடமுடியாது .அதுக்கு சில மசாலா பொடிகள் சேர்க்க வேண்டி வருது...அது மாதிரி தினம் ஒரு தலைப்புல போட்டாலும் சில பதிவர்கள் விட்டு போய்விடுகிறார்கள் .  ஏனென்றால் இது வேனுமின்னே செய்வது இல்லை..அவர்களை  எதில வகைப்படுத்து வதுன்னு ஒரு குழப்படி அதான்  ..எப்பவுமே நான் குழம்பிதான் அடுத்தவங்க்ளை குழப்புவது வழக்கம் .
                    இந்த பதிவில் இலவங்கம் , ஜாதிக்காய் , உப்பு , மிளகா மாதிரி அறு சுவையும் வரும்   பாருங்க ..
இரா பக்கங்கள் ஒரே மாதிரி விஷயங்கள எப்படி மாறுதுன்னு சொல்ற கட்டுரையா கவிதையா...?  யாருக்கு தெரியும்  வாழ்ந்திருத்தல்

அப்பு! உங்க ...உறவுகாரன்பா நானு!   இப்படி சொல்லிட்டு இதையும் வேண்டாமுன்னு சொல்ரார் என்ன செய்ய அவரைதான் கேக்கோனும் .♥ப்ரியமுடன்......வசந்த் -ன் இந்த கதை நானும் நித்யாவும் காதலும் ! எதிர் பாராத சினிமா முடிவுமாதிரி ஆனா இல்லை


‘என்’ எழுத்து இகழேல்  எல்லாமே கொட்டி கிடக்குது ..பாட்டா, பிளாகர் டிப்ஸா, கவிதையா ,கட்டுரையா , மொத்ததுல ஒரு நந்தவனம்  மாதிரி . .வாத்தியாரம்மாவுக்கு மூளை அதிகம்ஹாய் அரும்பாவூர் - எந்த சின்ன மேட்டர் கிடைத்தாலும்  அதை ஆராய்ந்து  பதிவு தேத்துவதில செம கில்லாடியான ஆள்


ஸ்டார்ட் மியூசிக்! -இது நம்ம பன்னிகுட்டியோட பிளாக்  ஆட்டத்தை பாருங்க, இப்பதான் வளர்ந்து வருது .இன்னும் தெளிவாக நாள் பிடிக்குமோ


வேலன் -  எல்லாருக்கும் புரியரமாதிரி  படங்களோட ஒன்னாம் கிளாஸ் வாத்தியார்  மாதிரி தெளிவா சொல்றார் . இவர்கிட்ட கத்துக்காட்டி அந்த ஆளை  ஒன்னும் பண்ண முடியாது. நேரம் அப்படி

சேட்டைக்காரன் -  பேருக்கேத்த மாதிரி  சேட்டை செம கெட்டி

விக்னேஷ்வரி    நகைச்சுவையும் , கொசு வர்த்தியும் கலந்து வரும் ரகம்


வார்த்தைச் சித்திரங்கள் -ஒரு வேளை டைரி தரமாட்டேன்னு சொல்லிட்டாங்க போல வீட்டில ரெண்டு நாளைக்கு ஒரு இடுகைன்னு  போட்டு தீத்துகிறாங்க கோவத்தை இந்த புது வரவு . வாழ்க வளமுடன்வந்தேமாதரம் - இவருக்கும் அந்த வியாதியான்னு தெரியல படிச்சி முடிக்கும் முன்னே  அடுத்த இடுகை ரெடி.. ஆனா இவர் பிளாகர் டிப்ஸ்  ஸ்பெஷல்.

லினக்ஸ் -அருமையா சொல்றார் நம்ம வடுவூர் குமார் ஆனா எனக்குதான் மண்டையில  ஏற மாட்டேங்குது.  இவர்கிட்ட புத்திசாலி மக்கா நீங்கலாவது கத்துக்கோங்க


ருத்ரனின் பார்வை - இது நம்ம டாக்டர் ஐயா .பிளாக் ஆனா நான் விவேக் மாதிரி நைசா படிச்சிட்டு மட்டும் வந்துடுவேன் ராத்திரியோட ராத்திரியா இவருடைய் பதிவை  .


யாவரும் நலம் -இவங்க வெளியூரு போவதை பார்தால் நமக்கும் ஆசையாவரும்  டிக்கிலயாவது உட்கார்துகிட்டே போகலாமுன்னு. அழகா சொல்வாங்க .


மௌனராகங்கள் -இவங்க சொல்ரதை பார்த்தா  ஏன் எல்லாரும் மரத்தை  வெட்றாங்கன்னு இப்பதான் புரியுது


மலர்வனம் - ஆனா ஒன்னு வருடாந்திர பொருட்களின் அளவுகள்.
சரியா இருந்தா எப்படி சிக்கனமா சுவையா செய்யலாமுன்னு சொல்லும் விதம் சூப்பர் .. ஆனா மொத்தமா வாங்கினா டப்பா டான்ஸ் ஆடிடாதா என்ன.?

ப்ரியா கதிரவன்  இவங்க பயம் இவங்களுக்கு வெட்டுக்கிளி(என்னை தேடுதே)
ஆனா எனக்கும் தேடுதே எங்கே போய் தேட


பொன் மாலை பொழுது  எனக்கு இவரது பதிவுகளியே ரொம்ப பிடிச்சது  இதுதான்  நான் அந்த தப்பை இதுவரை செஞ்சதில்லை .ஆனா நடப்பதை என்னி சிரிப்பேன் அடிக்கடி .. ஏன்னா அதான் அடிக்கடி நடக்குது இங்கே..

பிரியாணி - கலந்து கட்டி அடிச்சிகிட்டு இருந்த வங்களை ( ? ) ரொம்ப நாளா கானோம் . வரட்டும் அதுவரை அரபி காரங்க மண்டையும், அதுல உள்ள கொண்டையும்.. பாத்துகிட்டு இருக்கலாம்


பாடினியார் -  இது அறிவொளி இயக்கம் சாதித்தது என்ன?  என்ற நல்ல பதிவு .இது மாதிரி யாரும் ஏன் போடமாட்டேங்கிறாகன்னு தெரியல ..


நிஜாம் பக்கம் பல்சுவை பக்கம்   இவரின் வானொலி குறுக்கெழுத்துப் போட்டி! அனுபவத்தை பார்த்துட்டு எதை நம்புவது எதை நம்பகூடாதுன்னே புரியல


அலைவரிசை - எப்போ எதுன்னு தெரியாம எல்லாமே வரும்


நாஞ்சில் எக்ஸ்பிரஸ் - போடரது மொக்கைன்னு புரியாம சிலர் சீரியஸான கமெண்ட போடற ஆளும் இருக்கு அதுல ."எந்தி"ரனும், "எந்தி"ரிக்காதவனும்...

தெரியாததை தெரிந்து கொல்வது  தமிழ் தகறாரு செய்தாலும் சரியாய் நச்ன்னு அடிக்கும் இவரது பதிவு இறப்பு


தின சிந்தனை - நாம  நம்மை ரிஃபெரஷ்  செய்ய உதவும் சின்ன இடுகைகள்


இது இமாவின் உலகம் -  இவரின் உலகமே தனிதான் போட்டோ கிராபி , கை வண்ணம்  , எல்லாத்தயும் கலந்து செய்த கலவை ..பெண் கமல்ஹாசன்    மாதிரி.

என் பக்கம் - இவங்களும் அதே மாதிரி  ஆனா ஒரு மாசமா ஆளையே கானோம். தேடுதல் வேட்டையும் ஒரு பக்கம் நடக்குது..


இதயம் பேசுகிறது -  பிளாக் நல்லாவே பேசுகிறது   படித்தேன் ரசித்தேன் !..

மனதோடு மட்டும் -   குடும்ப விவகாரத்துறை  கொஞ்சம் அதிகமா இருக்கும் அவ்வளவுதான் . ஆள் ஜாலி  டைப் ஆனா பதிவுதான் சீரியஸாம் .
               ரொம்ப நாளா ரூம் பக்கமே வராதவனை கடைத்தெருவில் வச்சி பிடிச்சேன்  நான் .ஏண்டா ராஸ்கோல் ரூம் பக்கமே கானோம் .அந்த அளவுக்கு காசு அதிகம் வந்துடுச்சா, பழசெல்லாம் மறந்துட்டியா ன்னு கேட்டதுக்கு அமைதியா இருந்தவன் அப்புறம் மெதுவா சொன்னான் ..சரி நீ இவ்வளவு சொல்றே நான் வரேன் உன் ரூமுக்கு ஆனா வந்தா காஃபி , டீ , பச்சதண்ணி குடிக்க மாட்டேன் . இஷ்டமிருந்தா சொல்லு வரேன்னு கண்டிஷன் போட்டான்.
                      வந்துச்சே கோவம் எனக்கு அப்போ நீ வரவேண்டாம் போடான்னு திட்டிட்டேன் . அப்புறம் ரெண்டாவது நிமிஷமே கோவம் போயி ஏன் இப்படி அழிச்சாட்டியம் பண்ரேன்னு கேட்டேன் . அதுக்கு அவன் சொல்றான் .டேய்...சுலைமானி டீயில  ((  பால் சேர்காத டீ ,  )) சீனிக்கு பதிலா உப்பை போட்டு குடிச்சி பாத்துட்டு அப்புறம் எனக்கு போன் பண்ணி சொல்லுன்னு பதிலை கூட கேக்காம பயபுள்ள என்னா ஓட்டம் ஓடிட்டான் ..
                    அப்பதான் என் மரமண்டைக்கு லேசா புரிஞ்சுது...ச்சே முதல்ல சீனி பாட்டலை மாத்தனும் .இல்லாட்டி அதில மார்கரால பேராவது எழுதி வைக்கனு ம். வெளிநாடு வந்தும் திருந்தாட்டி என்னதான் செய்யறதான் . நா என்னை சொன்னேன் .((இப்பதான் புரியுது  ஏன் ஃபிரண்ட்ஸ வீட்டுக்கு கூப்புட்டா வர பயப்படரானுகன்னு)) அவ்வ்வ்வ்வ்
                        மீண்டும் சந்திப்போம்  :-))
மேலும் வாசிக்க...

Friday, September 24, 2010

சிரிக்கலாம் வாங்க --ஐந்தாம் நாள்

         இந்த பூலோகத்துல  சிரிக்க தெரிஞ்ச உயிரினம் மனுஷந்தாங்க ..அதே மாதிரி சிரிப்பா சிரிக்கக் கூடியதும் மனுஷந்தாங்க..   அப்போ குரங்கு சிரிக்கலையான்னு யாரும் கேள்வி கேக்கக்கூடாது (( டால்ஃபினும் சிரிக்கிறதா சொலறாங்க )) ஏன்னா அது சிரிக்காது.ஈ....ஈ...ன்னு இளிக்கும் .நாமளும் யாராவது ஃபிகர பார்த்தா சிலநேரம் அப்படி பண்ணி மாட்டிக்கிறது வழக்கம் தங்ஸ்கிட்ட.. .அதுவும் இஞ்சி தின்ன குரங்கு மாதிரீஈ.....ஈ....ஈ...ன்னு ..

         நாம சிரிக்கும் போது மட்டும்  மனசு லேசாகிறது..கவலை மேகங்கள் சிதறடிக்கப்படுகிறது.  வாழ்க்கை வாழ்வு நேரம்,  காலம் நீடிக்கப்படுகிறது.. அதனால எப்பவும் சந்தோஷமா இருப்பது முக்கியம் . அதுக்கு நல்ல ஹியூமர் சென்ஸ் உள்ள ஆட்கள் கூட நட்பு வைத்து கொள்வதும் , இல்லை நல்ல சிரிப்பு புத்தகம் ,  படம் பார்பதும் ரொம்ப அவசியம்  . அதே நேரத்துல  அதிக அளவு சந்தோஷமும் , துயரமும் ஒரு ஆளை இதய நோயாளியா ஆக்கிடும்


     இன்றைய  ஐந்தாம் நாளில் நல்ல சிரிப்பு  பதிவுகளை பார்க்கலாம் கொஞ்ச நேரம்  மனசு விட்டு சிரிக்கலாம் வாங்க

ஹா..ஹா...ஹாஸ்யம் -  பேருக்கேத்த மாதிரி  கோமாக்காவின் இட்லியின் அருமை  பெருமைகளை பாருங்கள் அவஸ்தை புரியும் 


வெளியூர்க்காரன்-னின் உச்சிமாங்காளி..

Just for Laugh -காயத்திரியின்  நானும் நாப்பது கொள்ளையர்களும் ரசிக்கவும் ,சிரிக்கவும் வைக்கிறது


Scribblings - இது வித்யாவின் வித்யாசமான  விண்வெளியில் விசயகாந்த்

அநன்யாவின் எண்ண அலைகள் -இவரின் பேச்சு வழக்கில் சிரிக்க வைக்கும் பேன்களும் சில பெண்களும்.

அவிய்ங்க -ராசாவின் நினைவில் ஆத்தா..நான் பிரபல பதிவர் ஆயிட்டேன்….

"ஆஹா பக்கங்கள்" -சிஷ்யப்பிள்ளையின்.(அப்படி சொன்னாதான் பிடிக்குமாம்)வியாழக் கிழமையானா வரும் ஜுரம்! !

எங்கே செல்லும் இந்த பாதை ..... -  கே ஆர் பி .செந்திலின் பயோடேட்டா  சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் .


என் இனிய தமிழ் மக்களே... -அன்னுவின்  அப்டேட்டும் ஒரு கதையும்.

எல்லாப்புகழும் இறைவனுக்கே -  இதில உப்புமா  சாப்பிட்ட கையோடு  இவரையும் பாருங்கள் பிய்ந்த பொட்டி பீதாம்பரம்

ஒண்ணுமில்லை.....ச்சும்மா - எம் எம் அப்துல்லாஹ்வின்  சின்ன ஒரு விஷயத்தை  சுவைபட சொல்லிய ஆxதிக்க பயங்கரவாதி குசும்பனே.. வெளியே வா.!

கவிப்பக்கம்(new)  கூட்டாக கலக்கிய  ஒரு சிரிப்பு

இடுகையூரில் ஒரு பதிவர் சந்திப்பூஊஊஊ


கொஞ்சம் வெட்டி பேச்சு சித்ரா டீச்சரின்  ஆண் பேச நினைப்பதெல்லாம் .......

கோகுலத்தில் சூரியன் வெங்கட்டின்   யதார்த்தம்..!!!

சிநேகிதன் -அக்பரின் மேனேஜரை டேமேஜர் ஆக்குபவர்களுக்கு

சிரிப்பு போலீஸ்   ரமேஸின் ராங்நம்பர்

பட்டாபட்டி...  இவரின்     10 நாளில் கோடிஸ்வரன் ஆவதெப்படி ?... நல்ல சிரிப்பு வெடி  .சில அரசியல் பதிவுகளை ( தேவையற்ற வார்த்தை ) தவிர்த்து  விட்டால் சிரிப்புக்கு பஞ்சமில்லை.


பட்டிகாட்டான் ( பட்டணத்தில்)     ஜேயின் அதிசயம்...ஆனால் உண்மை...

பூங்கதிர் தேசம்... - எல் போர்ட்.. பீ சீரியஸ்.ஆனா சீரியஸ் இல்லை டம்மி பீஸ் ஹி..ஹி.. இதிலே இப்படித் தான் முடியும் 

மங்குனி அமைச்சர் - இதில மட்டும் கொஞ்சம் எக்டிராவா தனக்கு தானே சூனியம் வச்சுகிறது இது தானோ ?

            ஒரு தடவை என் மனைவி கேட்டாள்,  ஏங்க அந்த பொண்ணு  நல்லா இருக்கு அதையே கல்யாணம் பண்ணிக்கன்னு உங்க ஃபிரண்டுகிட்டபோய்   பொய் சொல்றீங்கன்னு கேட்டள் . அந்த நேரம்  பார்த்து ஏதோ நினைவில இருந்த நான் ஏன் என் கல்யணத்துக்கு மட்டும் அவன் என்ன  உண்மையா சொன்னான் படுபாவின்னு  சொல்லிட்டேன்.  இதுல என்ன தப்புன்னே தெரியலை எனக்கு .  


         அப்புறமென்ன எனக்கு  ரெண்டு நாளைக்கு கொஞ்சம் நொண்டி நொண்டி நடக்க வேண்டியதா போச்சி  . வருத்த படாத வாலிபர்கள் வாழ்க்கையில இதெல்லாம் சகஜம்ப்பா சகஜம்.
மேலும் வாசிக்க...

Thursday, September 23, 2010

கதை கேளு...கதைகேளு....நான்காம் நாள்

            சின்ன வயசுல யாரும் தாத்தா கிட்டையோ  இல்லை பாட்டிகிட்டயோ கதை கேக்காத ஆளே இருக்க முடியாது.. அப்பவே அவங்க அழகா கதை சொல்லியே தூங்கவச்ச  சம்பவங்களும் நடந்திருக்கும் ..

            எனக்கு சில தின  , வார பத்திரிக்கைகளை திறந்தாலே கொட்டாவி வந்து விடும் அவ்வளவு மரண மொக்கையா இருக்கும் அது .தூக்கம் வராத இரவுகளுக்கு இது ஒரு நல்ல பிரண்டு மாதிரி ,   அடுத்த பத்தாவது நிமிடத்துல யாராவது வந்து ரூம் லைட்ட அனைச்சாதான்  உண்டு .இல்லாட்டி அடுத்த நாள் காலை வரை  ஓடிக்கிட்டே இருக்கும்

           சில கதைகள் பெரிய புரட்சியே பண்ணியிருக்கு வரலாற்றில.. வலையுலகில  இன்னைக்கு மனதை தொட்ட சில கதைகளைப் பார்கலாம் 

மசக்கவுண்டனின் கிறுக்கல்கள்   இவர் பழைய காலத்து திருமண நிகழ்வுகளை சுவைபட கிராமத்து பாஷையில  (( நகரத்து பாஷைன்னு சொன்னா  டமில்ல சம்திங் ஏதோ டாக்கிங்  ஆமா ஐ நோ ))  சொல்வதை நாள் முழுசும்  கேக்கலாம்

ஹுஸைனம்மா    இது வீட்டுக்கதை   கேள்வியின் நாயகன் படிச்சிப்பாருங்கப் புரியும் ஹா..ஹா..

வெறும்பய -பேருதான் வெரும் பய ஆனா கதைய ஆரம்பிச்சதே இவருதான் இதையும் பாருங்க சரித்திரம் புரிபடும் 

முகிலனின் பிதற்றல்கள் படிக்கும் போதே ஆர்வததை தூண்டியது  இந்த
உறவுகள்

பித்தனின் வாக்கு -  பேருதான் இப்படி ஆனா சிந்து சமவெளியில் ஒருவன் சொன்ன விதம் கலக்கல்


பாகீரதி   ஒரு மர்ம நாவலை படித்த திருப்தி  பாவத்தின் பரிசு

நாடோடியின் பார்வையில் - நல்லா எழுத ஆரம்பிச்சு   சில‌ துரோக‌ங்க‌ள்  
திடீர்ன்னு முடிச்சி நமக்கும்   பண்ணிட்டாரு  :-)


செ.சரவணக்குமார் பக்கங்கள் - இவருடையது எல்லாமே கதைதான் அதாவது  வாசித்தது நேசித்தது ..நாம தனியா புக் வாங்கி படிக்க வேண்டியதில்லை. இவருடைய  விமர்சனம் படிச்சாவே போதுங்கிற மாதிரி ஃபீலிங் .

குடந்தையூர் -  ஆர் வி எஸ்ஸின்  இருமன அழைப்பிதழ் 

சாந்தினி வரதராஜன்  இதில  பிடிச்சது  சாய்மனை கதிரை
 
அப்பாவி தங்கமணி -  ஆனா இவங்களின்  அதே கண்கள் பார்த்தா அடப்பாவின்னு சொல்ற மாதிரி இருக்கு.


Vanathy's -  மனசுக்கு பிடிச்ச கதாசிரியர் லிஸ்டில இப்போ இவங்களும் ஒன்னு. இதை படிச்சு பார்த்தா  இவங்க புதுசா இப்பதான் கதை எழுத ஆரம்பிச்ச மாதிரி தெரியல.. கதையின் தாக்கம் அப்படி இன்னும் அடி  மனசில ஓடுது..
   
ஆடுமாடு இதுல கொள்ளி
 
எம்.ரிஷான் ஷெரீப்  இவரிடம் தனியாகவே   எம்.ரிஷான் ஷெரீப் சிறுகதைகள் ன்னு  முழு பிளாகே இருக்கு ..


சேட்டிலைட் டீ வி. வருவதுக்கு முன்னே  நிறைய நாவலகள் ,சிறுகதைகள் . பொழுது போகவும் , லெண்டிங் லைப்ரரிகளிலும் கிடைத்து வந்தது . ஆனா இப்போ பொழுதே கிடப்பதில்லை .  டீவீ சீரியலே பாதி  (? ) நேரமே நம்மை அழவச்சிகிட்டு இருக்கும் போது புக் வேர தனியா படிச்சி அழனுமா என்ன ஹி..ஹி..ஆனாலும் வலையுலகில் நல்ல கதைகளுக்கு பஞ்சமில்லை. தேடிப்ப்டிப்பதில் தனி சுகமே..!!
மேலும் வாசிக்க...

Wednesday, September 22, 2010

விருந்து இல்லை மருந்து--மூன்றாம் நாள்

           ””செவிக்கில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈ.....”” இதுமாதிரி யாரோ சொன்னாங்க ..இருங்க ..இருங்க ..இதை பத்தி கடைசியா சொல்றேன் .. சாப்பாடு ஒரு மனுஷனுக்கு  ரொம்ப முக்கியம் ... பசி வந்தால் பத்து இல்லை  ஆயிரம் இருந்தாலும் பத்தாது. நமக்கு பேப்பரா  முக்கியம் .. நடை பாதை கடைக்கு பத்து போதும் ..இருங்க அடிக்க வராதீங்க ..ஒரு இட்லி ஒரு வடைக்கு போதும்  இப்ப உள்ள விலைவாசிக்கு  , ஆயிரம் ஸ்டார் ஹோட்டலுக்கு. கூட இப்போ பத்தாது.

        உண்னும் உணவை மருந்து மாதிரி  சாப்பிடற வரை  வியாதி நம்மளை நெருங்காது ஆனா அதே அளவுக்கு அதிகமா  சாப்பிட்டா கட்டாயம் மருந்து சாப்பிட்டே ஆகனும்..தினமும் நாம் சாப்பிடும் அளவு முக்கியமில்லை  அதன் சத்து தரம்தான்  முக்கியமா இருக்கனும் .குண்டா இருப்பதும் நோய் லிஸ்டில வந்தாச்சு.

       சமையல்ன்னு சொன்னா அது நிறைய பேர் இது பெண்களுக்கு மட்டுமேன்னு தப்பா நினைச்சுகிட்டு இருக்காங்க .ஹோட்டல்களில் நூற்றுக்கு 99 பேர் சமையல் ஆண்கள்தான் .ஆனா அதை டேபிள சர்வ் செய்வது பெண்களா இருக்கலாம். வீடுகளில் அப்படியே தலைகீழா இருக்கும் .

     இதுல முக்கியமா நாம கவணிக்க வேண்டியது. ஒன்னுதான்  அது குடும்பத்தில பெண்கள் செய்யும் சிக்கனமா , சுவையா செய்யும் பக்குவத்துல அவங்க பக்கத்திலே கூட நாம  நெருங்க முடியாது..நா ஆம்லட் போட்டா கால் லிட்டராவது எண்னெய் வேனும் . வடை பொறிப்பது மாதிரி இருக்கும் .  இதே  வீட்டில அழகா சின்னதா ஒரு ஸ்பூனிலேயே ( ஙே..? ) சப்பாத்தி மாதிரி செஞ்சிடுவாங்க . கேட்டாஇப்போ  இருக்கிற கொழுப்பு  பத்தாதா இன்னும் வேனுமான்னு ஒரு நக்கல்  ( அவ்வ்வ்)இது ஆரோக்கியமா..இல்லை கிண்டலான்னே இன்னும் புரியல.
    ஓக்கே ..இப்ப வலையில கலக்கும் சமையல் பதிவர்களை பார்க்கலாம்..

சமையல் அட்டகாசங்கள் -  என்னுடைய முதல் ஓட்டு இவங்களுக்குதான் ..கிட்டதட்ட ஐந்நூறு  விதமான சமைய்ல குறிப்புகள இது வரை குடுத்திருக்காங்க .. யாரும் இது மாதிரி வலையுலகத்தில குடுத்திருக் காங்களான்னு தெரியல.... பேருக்கேத்த அட்டகாசம்..இவங்க செய்யாத ஐட்டமே  இல்லை

 சமைத்து அசத்தலாம் .  குறுகிய காலத்துல வேகமா போய்கிட்டிருகாங்க . சமயத்தில கவிதையும்  , கதையும் கூட இலவச இனைப்பா வருது.

CREATIONS - இது விஜிகிச்சனின் சமையல் கூடம் .சிலநேரம் போரடிகாம நமக்கு ஊரையும் சுத்தி காட்டுவாங்க.

என் இனிய இல்லம் - இவங்க சமையல் மட்டும் இல்லாம பெண்களுக்கு தேவையான அத்தனை கலைகளையும் கத்து தரவங்க .என்னுடைய இரண்டாவது ஓட்டு இவங்களுக்கு

SASHIGA    எப்பவுமே  கிச்சனுக்குள்ளேயே இருப்பங்களோன்னு எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் . வித விதமா சமையல் செய்வதில கில்லாடி. என்னுடைய மூனாவது ஓட்டு இவங்களுக்குதான்..

கலைச்சாரல்     இவங்களை ஒரு  கவிஞரா பார்த்தாலும் அரபி சமையல் வரை கலக்கலா வருது. சமையல் வாசனை ஊரை கூட்டினாலும் , என்னா ஒன்னு பார்ஸல்தான் வரமாட்டேங்குது.. ஹா..ஹா..  :-)

முத்துச்சிதறல் -  பலதரப்பட்ட கலைகள் கற்றவர்.. மலாய் குலோப்ஜாமூன் -னை ஒரு ஓவியம் மாதிரி செய்து காட்டியிருக்கிறார் . அமீரகத்தில் நிறைய வருட அனுபவமிக்கவர்.

திவ்யாம்மா    முதல்ல கேரட் ஹல்வா குடுத்தவர்  கொஞ்ச நாள்ளயே  கேரட் இல்லாம  குடுத்துட்டார்.. ஆளையே கானோம் ..வாங்க..

தமிழ்குடும்பம்  இங்கே போனா நிறைய பேரை பார்க்கலாம்.. சமையல் குறிப்புக்கள் எழுதும் பெண்கள்  ஒன்னு கூடும் இடம்

south indian dishes -  மலர் விழி எழுதுறாங்க ..ஆனா ஆங்கிலத்துல ..என்னால ஃபைன் , சூப்பர் இப்பிடி பீட்டர்  அடிக்க முடியாது .அதானால படிக்கிறதோட சரி..

Priya's Easy N Tasty Recipes -  இதுவும் ஆங்கிலத்திலேயே வரும் பதிவுகள்,,ஹி..ஹி.. ஒரு வேண்டுகோள் .தமிழிலும் கூடவே பதிந்தால் நல்லா இருக்கும்

Aparna's Kitchen--  தமிழ்ல எப்படி எழுதனு முன்னு இன்னும் தெரியல அதனால இந்த புத்தம்புது வரவை இந்த தடவை மன்னிச்சிடலாம். ””ஆத்தா வையும் சீக்கிரம் கத்துக்கோங்க “”    :-))

நித்து பாலாஇவங்களும் ஆங்கிலத்துலதான் அருமையான குறிப்புக்கள் தராங்க . இவங்க கிட்ட உள்ள சிறப்பு என்னனா .ஒவ்வொரு திங்கள் கிழமையும் ஒரு பெண் கலைஞரை பேட்டி எடுத்து அவங்களை அறிமுகப்படுத்துவது.

 அம்முவின் சமையல் -  நல்லா சமையல் செஞ்சிகிட்டு இருந்தவங்கள மூனுமாசமா கானல  ஒருவேளை ஊருக்கு போயிருக்கலாம்

ஆஹா என்ன ருசி...  பேரிலேயே  ஆஹா என்னே ருசின்னு சொல்ற மாதிரி சின்ன சின்னதா அழகா சொல்லி தறாங்க..நீங்களே பாருங்களேன்.

என் சமையலறையில் -வித்தியசமா ஒரு வெஜிடேரியனுக்காக காளான் பிரியாணி  செஞ்சிப்பாருங்க..டேஸ்டியா இருக்கும் .ஆனா நான் சாப்பிட்டதில்லை.
சின்னு ரேஸ்ரி  இலங்கையை சேர்ந்த இவரது மலேசியன் ஸ்டைல் ஹொட் சிக்கின்
என் சமையல் அறையில் - இவங்க செய்யும் சமையல்  வித்தியாசமா அதுக்கு சத்து விபரத்தை சொல்லிட்டு  போடும் முறையும் அழகா இருக்கும் . பார்லி எலுமிச்சை சாதம்.  சாப்பிட்டுதான் பாருங்க .திரும்பவும் கேப்பீங்க..


சமையலும் கைப்பழக்கம் -  இப்ப இரண்டு மாசமா ஆள கானேம் .இவங்களும் ஊருக்கு போய் இருக்கலாம்


Welcome to Mahi's Space... -  பேரை பார்த்து பயப்பட வேனாம் .ஆனா எழுதறது  சுந்தர தமிழிலதான் .. . என்னால எப்படியெல்லாம் பயந்து போய் செய்த  தயிர் பச்சடி யை பார்த்தா உங்களுக்கே புரியும்..ஹா..ஹா..

          இந்த வலையுலகில தேடி பார்த்ததுல ஓரே ஆண் சமையல் பிளாக் வச்சிருக்கிற  இவர்  செஞ்சது,  வெறும் வாசனையிலேயே வயிறு நிறைஞ்சது அது என்னன்னு சொன்னாராஜ‌ இறால் மிள‌கு வ‌றுவ‌ல் (Lobster pepper fry) இத்தனை பெரிய சைஸ்தான் கிடைக்கனும் விலை குறைவா 


          ஓக்கே இப்ப கேள்விக்கு வருவோம்..செவிக்கு உணவில்லாத போதுன்னா அப்போ..காதுகேக்காத , பிறவி செவிடுக்கு இந்த பழமொழி செல்லாதே...!! ஒரு பழமொழி சொன்னா அது எல்லாருக்குமே பொதுவா இருக்கனும் . இதையெல்லாம் யார்தான் கேப்பாங்களோ  . பசி ருசி அறியாது .ருசி வருதுன்னா அங்கே பசி இல்லை .. இங்கே சமையல் பதிவர்களை சொல்லிட்டு இதையும் சொல்றேன்னா அதுக்கு காரணம் இருக்கு.

           ஒரு தடவை  பேச்சிலர்ஸ்ஸா இருக்கும் போது ஆரம்ப புதுசுல குழம்பு வைச்சேன். சாப்பிட்டவங்க புளிக்குழம்பு ரொம்ப நல்லா இருந்துச்சின்னு பாராட்டி சாப்பிட்டு விட்டு ஆனா அதுல எப்படி  மீன் முள்ளா கிடக்குதுன்னுதான் தெரியலன்னு சொன்னானுங்க ..

         நான் சொன்னேன் ..அடப்பாவிங்களா இது மீன் குழம்புடா. ((  மீனை ஆரம்பத்திலேயே போட்டதுல கரைஞ்சி போய்ட்டுது. ))

மீண்டும் நாளைக்கு சந்திக்கலாம் .
மேலும் வாசிக்க...

Tuesday, September 21, 2010

ஜெய்லானி டிவியில் இன்று ஒரு கவிதை --இரண்டாம் நாள்

            வணக்கம் நேயர்களே  ஜெய்லானி டீவியில இன்னைக்கு சில முக்கிய நண்பர்களை நாம பார்க்கப் போறோம்  நமக்கு பொதுவா கவிதைன்னு சொன்னா  அந்த காலத்தில பாரதியார் , கவிக்குயில்  சரோஜினி நாயுடு இப்படி விரல் விட்டு என்னக்கூடிய ஆளைதான் தெரியும்..அதுக்கு பிறகு சினிமான்னு ( மீடியா ) ஒன்னு வந்ததும் தான் கொஞ்சம் பரவலா எல்லாருக்கும் தெரிய ஆரம்பிச்சது  யப்பா யாராவது சித்தர் அப்படி இப்படின்னு சொல்லி சண்டைக்கு வந்துடக்கூடாது .எற்கனவே டீவி நஷ்டத்துல ஓடுது.. ((ஒரு மாசம் கரண்டு கட் --இது எதிரிகளின் சதி ))


         கவிதை என்பது  எல்லாருமே  அத்தனை ஈஸியா எழுதிட முடியாது ..ஆனா சிலருக்கு வாயை திறந்தாலே  கவிதை கொட்டும் ....காரணம்  ரசிக்கத் தெரிஞ்சவங்களுக்கு கவிதை ரொம்ப ஈஸியா வருது. அது யாரை , எதைன்னு சொன்னா தவளை தன் வாயால கெடும்ன்னு சொல்றமாதிரி  என்னை நீங்க கேள்வி கேக்க ஆரம்பிச்சிடுவீங்க அனுபவம் அப்படி ஹி..ஹி..

       இன்னைக்கி சில கவிஞர்களை இங்கே  நாம  பார்க்கலாம்..

அன்புடன் ஆனந்தி -  இவங்க கொஞ்சம் நகைச்சுவையுடன்  நடு நடுவில கொஞ்சம் குழம்பி   கவிதையா  ஹாஸ்யமான்னு  பெண்டுலம்   மாதிரி  இருக்காங்க .ஆனா  உன் நினைவில்..கவிதையை படிச்சா  இவங்களையும் இந்த லிஸ்டில சேர்த்திடலாம். கவிஞர் தான் .


எழுத்தோசை   தமிழரசி  இவங்களோட இந்த   வெட்கம் பார்த்துட்டு எனக்கும் வெட்க  வெட்கமா  வந்துச்சின்னா பாத்துக்கோங்களேன்  பாருங்கள்  உங்களுக்கும்  பிடிக்கும்


முபீன் ஸாதிகா -  இவங்களோட எல்லாமே சுத்த தமிழ்ல இலக்கண சுத்தமா இருக்கும்.. அதனால தமிழ் பற்று உள்ள எல்லாருக்குமே  அவளகரம் அவனகரம் இது பிடிக்கும்

சோமாயணம் -  வித்தியாசமான பேர்தான் இன்னும் கொஞ்சம் டிரை பண்ணீனா  நல்லா வர சான்ஸ் இருக்கு மணசாட்சி  கொஞ்சமா குத்துதே..!!

வாரியர் ..இல்லாட்டி வாரியார் -  யாரு நம்ம தேவாதான்   கவிதை எழுதிட்டு புரியாதவங்களுக்கு மூனு ஆப்ஷன் குடுத்த வள்ளல் ..((எல்லாம் நம்ம தொல்லை தாங்காம தான் ) வெளி...! அது கவிதையா கட்டுரையான்னு நீங்க கேக்க பிடாது  ..  இவர்  என்ன கட்டுரை போட்டாலும் இவரை ஒரு கவிதையாளராதான் சரியா பார்க்க முடியுது..சிலநேரம் சாமியார் மாதிரி பேசுறார் அதான் பயமா இருக்கு..


அன்புடன் அருணா   இவங்க  எழுதுவது எளிய நடையில,,   கவிதையை   படிச்சா நமக்கும் அது போல வே எழுததூண்டும்  இதை பாருங்க கை விரித்துச் சிரித்தது மரம்!!

அன்புடன் நான்   கருணாகரசு அவர்கள் வாயை திறக்கும் போதே சிலதில் அனல் பறக்கும்  ,மென்மையும் இருக்கும்  இதில  காணாமல் போகும் முன் 

ஆயிரத்தில் ஒருவன்   சங்கர்  இலங்கையை சேர்ந்த  இவர் ஆரம்பத்தில நல்ல கவிதையா குடுத்தவர் ....  வெள்ளி கிழமையும் என் காதலும்      ஒரு வேளை கேட்டது கிடச்சுதான்னு தெரியல பயபுள்ள இப்ப கவித பக்கமே போவதில்லை ஆசை அதுவும் .அதுமேல ...பேராசைதான்

இந்திராவின் கிறுக்கல்கள்  புதியவர்  இன்னும் இவரிடம் எதிர் பார்க்கலாம் படித்தில பிடித்தது  நமக்கான நம் முகங்கள்  


ஹேமாவின் வானம் வெளித்த பின்னும்   முழு பிளாகும் கவிதையாவே இருக்கும் ..படிக்க படிக்க இனிமையா இருக்கும் .

என் உயிரே...! - அப்துல் மாலிக்கின் விளையாட்டாய் ஒரு முயச்சி   வலைப்பதிவுகளின் பெயரில் ஒரு கவிதை

கனவு பட்டறை..... - நடத்தி  அசத்தி வரும் சீமான் கனி இதில ராச்சஷி பூக்கள்...

காகிதஓடம் -  பத்மாவின் முத்தக் கப்பல்

சும்மா  வாவது பேருக்கு தலைப்ப வச்சிகிட்டு  இவங்க வாய திறந்தாலே அது கவிதைதான் . இவங்க எழுதுவதில எது நல்லா இருக்குன்னு தனியா  பிரிக்கிரது ரொம்ப கஷ்டம்  . யாரு நம்ம தேனக்கா தான்

நான் வாழும் உலகம்...! -  ரியாஸின் மனசு...! புரிகிறது...

விஜய் கவிதைகள்   இதில  விளிம்பு நிலை  என்ன சொல்ல....!!!!!!!!!

நிலாரசிகன் பக்கங்கள்  கவிதைகள் மென்மையாய்   பறவை வேடமிட்ட புல்லுருவி

கவிதை நேரமிது.   இது ஒரு அமைதிச்சாரலில் நடக்கும் ஒரு சாகசப்பயணம்...

நானும் என் கவிச்சாரலும்.   கானவில்லை என்ன செய்ய பாருங்க ஐ லவ் யூடா புருஷா

தியாவின் பேனா பேசுகிறது...படிக்கும் போதே வலிக்கும் தேவதைகள் உலவுகிற தேசம்

நிலா அது வானத்து மேல!  -ன்னு சொல்லிகிட்டு அப்படியே கவிதையில் அவ்வபொழுது பிரமிக்க வைக்கும் ஸ்டார் நான் கோவலன் அல்ல..   இப்பிடி சொன்னா நாங்க நம்பிடுவோமா .

நீரோடைபெயருக்கேத்த ஓடை இல்லை ..இது மலையருவி மாதிரி துள்ளும் , ஆடும் பாடும் சாதாரணமா எளிய நடையில் படிக்க முடியும்.. வலையுலகில் நான் படிக்க ஆரம்பிச்ச முதல் கவிதை பிளாக் இவங்கதான் ..குறிப்பிட்டு இது நல்லா இருக்குன்னு சொல்ல முடியாதபடி .எல்லாமே நல்லா இருக்கும்..

பலா பட்டறை ஷங்கருக்கு எதிர்  கவிதைகள் நல்லாவே வருது  மோதல்..

பனித்துளிச்சங்கர்   இவரின்  காதல் சிலுவைகள்   நல்ல ரசனையா இருக்கும்    கவிஞர்களை பாராட்டி அவங்களுக்கு ஊக்கமா ஒரு கருத்துப் போட்டா அது அவங்களை இன்னும் நல்லா கவிதை எழுத வைக்கும்  .

.
       இவங்க கவிதைகளை படிப்பதாலோ என்னவோ எனக்கும் சில நேரம் மண்டைக்குள்ள பல்ப் சின்னதா கண் சிமிட்டும்.திரும்ப .நல்லா படிங்க எரியாது.. இதை என் மொக்கை பதிவுகளில் சில நேரம் போடுவேன் . பாத்துட்டு , படிச்சிட்டு பல பேர் எனக்கு ஸ்வீட்டு  பரிசா வாங்கி  தந்திருக்காங்க பார்ஸலும் வந்திருக்கு பாராட்டி  இன்னும் நிறைய எழுதுன்னு  சொல்லி இல்ல   இனிமே இப்படி எழுதி எங்களை கொல்லாதேன்னு... ஸ்வீட்ட பார்த்தா ஆசையாவும் இருக்கு..

             எழுதாட்டி இது கிடைச்சி இருக்குமான்னு ஒரு சந்தேகமாவும் இருக்கு. இப்படி இங்கேயும் என்னை சந்தேகம் கேக்க வச்சிட்டாங்களே..சில கவிஞர்களுக்கு ஸ்வீட் வாங்கி தருவதன் ரகசியம் ஒரு வேளை இதானோ..?

         பெண்கள் தன்னுடைய பணிச்சுமையின் நடுவிலும்  பிளாகில கொடிகட்டி பறப்பதை பார்க்கும் போது உண்மையில ஆச்சிரியமும் பெருமையும் தோனுது. ஒரு பெண்ணின் வெற்றிக்கு பின்னே ஆணும் இருக்கிறான் .அது ப்போல ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னே கண்டிப்பாக ஒரு பெண்ணும் இருக்கிறாள்...

       சரிங்க இந்த கவிதை ., கவிதைன்னு எழுதறவங்களுக்கு கமெண்ட் போடற எல்லாருக்குமே அந்த கவிதை புரிஞ்சுதான் கமெண்ட் போடறாங்களா..???  . ஹி..ஹி.. ஏன்னா ஒருத்தரோட கவிதையை படிச்சிட்டு (பேரெல்லாம் கேக்கப்பிடாது  , அவர் இங்கேதான் இருக்கார் ) ரெண்டு நாள் வேலைக்கு லீவு போட்டுட்டு  முழுசும் அழுதிருக்கேன் அது என்னான்னே  புரியாம..அவ்வ்வ்வ்வ்வ்

   எலேய்.மக்கா  கேமராவை மூடுலே  ஆள் அரிவாளோட வருதூஊஊஊஊஊ.எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்
(    ஜெய்லானி டீவியில் திரும்பவும் பவர் கட் நாளை திரும்பவும் சந்திப்போம் )

  
மேலும் வாசிக்க...

Monday, September 20, 2010

அறிமுகம் --முதல் நாள்

       வலையுலக நண்பர்கள்  அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள்
         வலைச்சரம் என்ற வலைக்குள் என்னையும் ஏற்றி அழகு பார்க்க வைத்துள்ளார் சீனா அய்யா அவர்கள். அவருக்கு என் முதல் நன்றி. எத்தனையோ பேராற்றல் படைத்தவர்கள் வந்து கலக்கி சென்ற இந்த இடத்தில் இப்போது நான் வந்திருக்கிறேன் ..இதற்கு முழு , பாதி , இல்லை இல்லை கால்வாசியாவது தகுதி  இருக்கான்னு என் உள் மனசு இன்னும் கேக்குது...
         ஆனாலும் முன்னே கால எடுத்து வச்சிட்டேன் ... இனி வழுக்கி விழுந்தாலும்  , ஓடி நடந்தாலும் (எப்படின்னு குறுக்கு கேள்வி கேக்க பிடாது.) ஒரு வாரம் இங்கும் சில மொக்கை தொடரும்..
          என்னை பத்தி அறிமுகம் என்ன சொல்றது ஆங்...மகா மொக்கை..பெரும்பாலான பிளாக் போய் எடக்கு மடக்கா ஏதாவது கமெண்ட போட்டுட்டு வரதுதான் வேலையே.. இது பத்தாம என் பேரிலேயே சொந்தமா ( நல்லா கவனியுங்க ) ஒரு பிளாக் வச்சி இம்சை குடுத்துட்டு வரேன் .நமக்கு மனசுக்கு பிடிச்சுதான் எழுதரோம் அதனால நான் எழுதினதுல எதுன்னு குறிப்பிட்டு சொல்ல முடியல
          நிறைய பிளாக்  படிக்க பிடிக்கும் ஆசையும்தான் ..ஆனால் நேரம் கிடைப்பதில்லை (எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டி வருது பாருங்க ) முதல்ல நாளே ஏதாவது சொல்லி உங்களை விரட்டி அடிக்க விரும்பல அதனால நல்ல (?) பிள்ளையா இப்போ போயிட்டு ..மீண்டும் நாளை சந்திப்போம்  வருவீங்கத்தானே..!!! .

இப்படிக்கு 
ஜெய்லானி , 
தலைவர் , வருத்தபடாத வாலிபர் சங்கம் .
ஷார்ஜா கிளை , யூ ஏ ஈ.
மேலும் வாசிக்க...

Sunday, September 19, 2010

சென்று வருக மோகன் குமார் ! வருக ! வருக ! ஜெய்லானி

அன்பின் பதிவர்களே !

இன்றுடன் முடியும் வாரத்திற்கு, ஆசிரியப் பொறுப்பேற்ற அருமை நண்பர் மோகன்குமார், தான் ஏற்ற பொறுப்பினை, மன மகிழ்வுடன் நிறைவேற்றி நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் கடந்த ஒரு வார காலத்தில் ஏழு இடுகைகள் இட்டு , ஏறத்தாழ நூற்றுப் பத்து மறுமொழிகள் பெற்றிருக்கிறார். புதுமையான முறையில், பல்வேறு துறைகளின் கீழ், சில தலைப்புகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றின் கீழ், நாளுக்கு ஒரு பதிவராக, தினந்தோறும் அறிமுகப்படுத்தி உள்ளார். இது நல்ல வரவேற்பினைப் பெற்றது.

நண்பர் மோகன் குமாரினை, வலைச்சரம் குழுவினர் சார்பினில், பாராட்டு கலந்த வாழ்த்துகளைக் கூறி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.

நாளை துவங்கும் வாரத்திற்கு பொறுப்பேற்க வருகிறார் நண்பர் ஜெய்லானி.
இவர் ஷார்ஷாவில் வசிக்கிறார். "ஜெய்லானீ' என்ற வலைப்பூவினில் எழுதி வருகிறார். சக பதிவர்களால் வழங்கப்படும் விருதுகள் ஏழு பெற்றிருக்கிறார். சென்ற ஆண்டு துவங்கப்பட்ட பதிவில் இதுவரை பல்வேறு தலைப்புகளில் அறுபத்தைந்து இடுகைகள் இட்டுள்ளார். இவரை ஏறத்தாழ நூற்று எண்பது பதிவர்கள் பின் தொடர்கின்றனர்.

நண்பர் ஜெய்லானியினை வருக! வருக! என வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் ஜெய்லானி
நட்புடன் சீனா
மேலும் வாசிக்க...

அந்த ஏழு நாட்கள்.. விடை பெறுகிறேன் நண்பர்களே

வி.ஐ.பி சந்திப்புகள் 

விகடனில் பணி புரியும் திரு. ரவி பிரகாஷ் அவர்கள் நிருபராக பல வி.ஐ.பி களுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு பெற்றிருக்கிறார். அவற்றை அவ்வபோது சுவையாக பகிர்கிறார். சுஜாதாவுடனான சந்திப்பும், கலைஞர் உடனான சந்திப்பும் இன்னும் நினைவில் உள்ளவை!

மருத்துவ பக்கம்

என்னது நானு யாரா என்ற வித்யாசமான பெயரில் எழுதும் இந்த நண்பரின் மருத்துவ பதிவை வாசியுங்கள். குடி பழக்கம் பற்றிய நல்ல பதிவு இது

கட்டுரை 

நண்பர் வெங்கட் நாகராஜ் நெய்வேலியில் பிறந்தவர். தற்சமயம் டில்லியில் உள்ளார். டில்லி பற்றி அறிமுக படுத்தி அவர் எழுதும் பதிவுகள் தலை நகரை நேரில் பார்க்கும் ஆவலை தூண்டுபவை..

எழுதாமல் இருப்பவர்

நண்பர் ஆதி மனிதன் அவ்வபோது எழுதி வருபவர். டாக்டர் சொக்கலிங்கம் ஒரு முறை பேசியது பற்றி அவர் எழுதிய பதிவு அருமையானது. நண்பர் ஏனோ தற்போது அதிகம் எழுதுவதில்லை.. ஆதி மனிதன்.. எங்கிருந்தாலும் மீண்டு(ம்) வாங்க ..

ஆன்மீக பக்கம் 

வேதாத்திரி மகரிஷி அவர்களின் கருத்துக்களை சொல்லும் ப்ளாக் இது. வாழ்க்கைக்கு தேவையான கருத்துக்கள் எளிய முறையில் காண கிடைக்கிறது. அவசியம் வாசிக்க வேண்டிய பதிவுகள் சில இங்கு உள்ளன. வாசியுங்கள் ..

புதிர் பக்கம்

அவ்வபோது புதிர் போடுகிறார் மாதவன்.. இந்த புதிரை வாசித்து பாருங்கள்

புத்தக விமர்சனம்

செ. சரவண குமார் நெகிழ்வான எழுத்துக்கு சொந்தக்காரர்.. தான் வாசித்த நல்ல புத்தகங்கள் குறித்து நம்மோடு பகிர்வார்.. அப்படி ஒரு பகிர்வு.. ஜெய மோகன் புத்தகம் குறித்து...

***
இந்த ஏழு நாட்களும் உங்களை சந்திக்க வாய்ப்பு தந்த வலைச்சரம் குழுவிற்கும், குறிப்பாக சீனா ஐயாவிற்கும் நன்றிகள்.. ஒரு வாரம் வாசித்த உங்களுக்கும், பின்னூட்டம் இட்ட , வாக்களித்த அனைவருக்கும் நன்றி கூறி விடை பெறுவது.. உங்கள் அன்பு நண்பன் .. மோகன் குமார்.  வணக்கம் !!
மேலும் வாசிக்க...

Saturday, September 18, 2010

வானவில் - இப்படம் நாளை கடைசி !

கட்டுரை 

வித்யா.. சென்னையின் நல்ல ஹோட்டல்கள் போய் சாப்பிட்டு விட்டு படங்களுடன் போட்டு நமக்கு பசி கிளப்புவார். சினிமா விமர்சனம், பழைய நினைவுகள் பகிர்வு என ரசனையாய் இருக்கிறது இவரது ப்ளாக். (மேடம் நமக்கு எப்போதாவது பின்னூட்டம் போட்டால் "நல்ல பதிவு" என மட்டும்
சொல்லிட்டு போய்டுவாங்க..)

நகைச்சுவை 

அம்பி வாசித்துள்ளீர்களா? பெங்களூரில் வசிக்கும் தமிழர்; அவ்வபோது எழுதினாலும் ரசித்து சிரிக்க வைப்பவர். சாப்பாடு, ஹவுஸ் பாஸ், பெண்களூர் பற்றி இவர் எழுதும் பதிவுகள் சுவாரஸ்யமானவை.

மருத்துவம்/ ஹெல்த் பக்கம்

டாக்டர் தேவன் மாயம் பல உபயோகமான கட்டுரைகள் எழுதுகிறார். மருத்துவர்களே வலை உலகில் நேரடியாக தமிழில் எழுதும் போது நமக்கு அது
மிக பயன் உள்ளதாக உள்ளது. டெங்கு பற்றி எழுதியுள்ள பதிவை வாசியுங்கள்.. 

சிறுகதை

பத்திரிக்கைகளில் ஏற்கனவே பழக்மான பெயர் விமாலதித்த மாமல்லன்.. இவரது வலைப்பூவில் சிறுகதை, கட்டுரைகள் எழுதி வருகிறார்..  அப்படி ஒரு சிறுகதை 


டெக்னிகல் பதிவுகள் 

சூர்யா கண்ணன் அவசியம் நாம் அறிய வேண்டிய பதிவுகள் சில எழுதுகிறார். Laptop Recovery: அவசியம் அறிந்துக் கொள்ள வேண்டியது .. வாசித்து பாருங்கள்

புத்தக விமர்சனம்

முழுக்க முழக்க புத்தக விமர்சனங்களுக்கான ப்ளாக் கிருஷ்ண பிரபுவினுடையது. அவ்வப்போது தான் வாசிக்கும் நல்ல புத்தகங்களை நம்முடன் பகிர்கிறார். ப்ளாகின் பெயரே நான் வாசித்த தமிழ் புத்தகங்கள் தான்!!

எழுதாமல் இருப்பவர் 

ஜெட்லியின் நண்பர் சங்கர். முன்பெல்லாம் " பார்த்ததும் படித்ததும்" பதிவில் இவரும் அவ்வபோதாவது எழுதுவார். சமீப காலமாய் ஏதும் எழுதலை. பின்னூட்டங்களில் கூட அதிகம் காண வில்லை. மறுபடி வாங்க சங்கர் உங்க வழக்கமான உற்சாகத்துடன்..

***
இன்னும் ஒரே நாள் தான் நண்பர்களே..  இப்படம் நாளை கடைசி !
மேலும் வாசிக்க...

Friday, September 17, 2010

வானவில் - ஏழு சுவைகள்சிறுகதை

மனித நேயம் கலந்து ரிஷபன் எழுதும் சிறுகதைகள் அற்புதமாய் இருக்கின்றன. கதை சொல்லியே எதிர் மறை காரக்டரிலும் வருவதுண்டு. 


கட்டுரை 

ரகு எழுதிய இந்த கட்டுரையை வாசித்து பாருங்கள். எவ்வளவு உழைத்து எழுதி உள்ளார்!  சட்டத்தின் சில இருண்ட பகுதிகளை சொல்லும் கட்டுரை இது !

எழுதாமல் இருப்பவர் 

வெளி நாட்டில் இருக்கும் டுபுக்கு தற்சமயம் அதிகம் எழுதுவதில்லை. இவரது நகைச்சுவை படித்து,  சிரிக்காமல் இருக்க முடியாது. இவரது ஆரம்ப கால கட்டுரைகள் அவசியம் தேடி படித்து சிரிக்க வேண்டியவை.

கவிதை பக்கம்

நெல்லையில் வானொலியில் பணி புரியும் தமயந்தி கவிதை, சிறுகதை, சினிமா விமர்சனம் என கலவையாய் எழுதுகிறார். கவிதைகள் சில மனதை தைக்கும். உதாரணத்திற்கு மரணம் குறித்த கவிதை 

புகை படங்கள்

முரளி குமார் பத்மநாபன்..எஸ். ரா ரசிகர்; கவிதை கட்டுரை என கலக்கினாலும் புகை படங்களுக்கென தனி ப்ளாக் வைத்துள்ளார். எழுத்தை போல படங்களும் இவர் மென்மையான மனதை காட்டுகின்றன.

ஹெல்த் பக்கம்

சங்கவி பல்வேறு உபயோகமான மருத்துவ விஷயங்களை தொடர்ந்து எழுதி வருகிறார். பழங்கள், காய்கறிகள் இவற்றின் பலன்களை எழுதுகிறார். மிக நல்ல முயற்சி

சினிமா பக்கம் 

சேத்தியா தோப்பு என்ற ப்ளாக் சமீபத்தில் தான் பார்த்தேன்.சினிமா குறித்து எப்போதாவதும் பிற கட்டுரைகள் அதிகமாகவும் எழுதுவது தெரிகிறது. தமிழ் படங்களுக்கு வரி விலக்கு பற்றிய இந்த கட்டுரை சிந்திக்க வேண்டிய விஷயம்
தான் !

***
இப்போதைக்கு விடை கொடுங்கள். மறுபடி நாளை சந்திக்கலாம்.. 
மேலும் வாசிக்க...

Thursday, September 16, 2010

வானவில்:ஏழு ஏழா பதிவுகளை பிரிச்சிக்கோ

சமூக அக்கறை

சமூக அக்கறைக்கு எப்போதும் மேற்கோள் காட்டப்படுவது ஈரோடு கதிர் மற்றும் வானம்பாடிகள் ஐயா. இவர்களை அனைவரும் அறிவர்.

எப்போதாவது எழுதினாலும் பெற்றோரின் பார்வையில் இருந்து நிரம்ப அக்கறையுடன் எழுதுவார் அமைதி அப்பா. இந்த பதிவை வாசித்து பாருங்கள்

சினிமா பக்கம் 

சரவண குமார் விமர்சனங்களும் அலசல்களும் கலந்து செய்கிறார். வாசித்து பாருங்கள்

புகைப்படம்

ஆதிமூல கிருஷ்ணன் ..பிரபல பதிவர்! அறிமுகம் வேண்டுமா என்ன? நகைச்சுவையான எழுத்து, சிறுகதை, கட்டுரைகள் என கலக்குகிறார். முதல்வன் படம்  போல ஒரு பேட்டி எடுத்து புயல் கிளப்பினார். (சரி சரி விடு.. இப்ப சில மாசமா தான் புயல் ஓஞ்சிருக்கு ..)    நான் மிக ரசிப்பது இவரது புகை படங்களை.. இதுவரை பார்க்கா விடில் பார்த்து விடுங்கள்

நகைச்சுவை 

சித்ரா அவர்களை பற்றி சொல்லாமல் விட முடியுமா? பல பதிவுகள் நகைச்சுவை மிளிர எழுதுவார். பின்னூட்டத்தில் பலரையும் ஊக்குவிக்கும் இவர் போன்றோரால் தான் பலரும் எழுதுகின்றனர்.

எழுதாமல் இருப்பவர் 


கனவில் இசைத்தவை என்ற பெயரில் நல்ல நல்ல பாடல்களை வரிகளுடன் அறிமுகம் செய்த ஸ்ரீ மதி சில மாதங்களாக எழுதுவதில்லை. வாங்க ஸ்ரீமதி .. மறுபடி பாடல்களால் கலக்குங்க..

கவிதைக்காரர் 

பா. ராஜாராம்,  நேசமித்திரன், விநாயக மூர்த்தி உள்ளிட்ட பலர் அனைவருக்கும் அறிமுகமான கவிஞர்கள். 
**
மகுடேசுவரன்..சுஜாதா போன்ற மோதிர கையால் பாராட்ட பட்ட அற்புதமான பிரபல கவிஞர். வலையிலும் எழுதுகிறார் என்பது பலருக்கு இன்னும் தெரிய வில்லை. எனக்கு இவர் கவிதைகள் மிக பிடிக்கும் . வாசியுங்கள்.. தவிர கேள்வியும் நானே பதிலும் நானே என்று கேள்விகளும் கேட்டு பதில் சொல்கிறார். 

அரசியல் 

தண்டோரா யப்பா. இந்த மனுஷனுக்கு என்ன தைரியம்!! எல்லா அரசியல் கட்சிகளையும் உண்டு இல்லைன்னு கிழிக்கிறார். பல அரசியல் பதிவிலும் யாராவது " ஆட்டோ வர போவுது" என பின்னூட்டம் போட்டுட்டு போகிறார்கள்,
மனுஷன் அசர மாட்டேன் என்கிறார்.

**
ரைட்டு .. மறுபடி நாளைக்கு பார்க்கலாம்.. இப்ப விடு ஜூட்.. 
மேலும் வாசிக்க...

Wednesday, September 15, 2010

வானவில்.. ஏழு ஸ்வரங்களுக்குள்

மருத்துவம்/ ஹெல்த் பக்கம்

பிரபா என்பவர் எழுதும் ஆழ் கடல் களஞ்சியம் என்ற ப்ளாக் பல ஹெல்த் தகவல்கள் சொல்கிறது. இதோ குழந்தை பிறந்த உடன் செய்ய வேண்டியவை பற்றி சொல்லும் பதிவு.. 

சினிமா பக்கம்

திருவாரூரிலிருந்து சரவணன் " இளைய பாரதம்" என்ற ப்ளாகில் எழுதுகிறார். நம்ம தஞ்சை மண் என்பதாலேயே வாசிக்க ஆரம்பித்தேன். அவாபோது சினிமா பற்றிய விமர்சனம், அலசல் கட்டுரை எனவும் இன்னும் பல விஷயங்களும் எழுதுகிறார். ரஜினி பற்றிய இந்த கட்டுரை பாருங்கள்.

கட்டுரை

ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி அவர்கள் வெண்பா, கட்டுரை என பல விதமாய் எழுதுகிறார். அவர் எழுதிய இந்த கட்டுரை வாசித்து பாருங்கள்

கவிதை

கலகலப்ரியா கவிதைகள் வாசித்துள்ளீர்களா?  மிக தைரியமான எழுத்து.. கவிதைகளிலும் பின்னூட்டதிலும் தெரியும் இவரின் தைரியம் பார்த்து ஆச்சரிய பட்டுள்ளேன் .

வாசித்து பாருங்கள்.

ஆன்மிகம்

ஜாதகம் மேல் நம்பிக்கை உள்ளவர்கள் பார்க்க வேண்டிய பதிவு; நம்பிக்கை இல்லாதவர்கள் பின்னூட்டத்தில் என்னை திட்டாமல் இருந்தால் உங்களுக்கு கோடி புண்ணியம் (என்னது புண்ணியத்திலேயே நம்பிக்கை இல்லையா? ரைட்டு !)

எழுதாமல் இருப்பவர்

நண்பர் அனுஜன்யா எழுத்தில் சுஜாதாவின் நகைச்சுவையை காணலாம். பயண கட்டுரைகளும் அலுவலக நடப்புகளும் மிக அங்கதமாய் எழுதுவார். நண்பர் கடைசியாய் எழுதி சில மாதங்கள் ஆகி விட்டது. விரைவில் மீண்டும் எழுதுவார் என நம்புகிறேன்.

புகைப்படங்கள்

இவர் உங்களுக்கு நன்கு அறிமுகம் ஆனவர் தான். ராம லக்ஷ்மி! கட்டுரைகள், கவிதைகள் என கலக்குகிறார். எனக்கு மிக பிடித்தவை இவரின் புகைப்படங்கள். நீங்களும் (மீண்டும் ஒரு முறை) சென்று பாருங்கள்...

**
மீண்டும் நாளை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து வணக்கம் கூறி விடை பெறுவது உங்கள் மோகன் குமார். .. குமார் .... குமார்
மேலும் வாசிக்க...

Tuesday, September 14, 2010

வானவில்லே..வானவில்லே -ஏழு அறிமுகங்கள்

சினிமா பக்கம்


சினிமா விமர்சனங்களை கேபிள் சங்கர் , ஜெட்லி போன்றோர் தொடர்ந்து செய்கிறார்கள்.

உலக சினிமாவை மிக நேசிக்கும் ஒரு நண்பர் பட்டர்பிளை சூரியா.பழகவும் மிக இனியவரான இவர் தற்சமயம் அதிகம் எழுதா விடினும் இவரது பழைய பதிவுகளை வாசித்து பாருங்கள். உலக சினிமாவின் பல அற்புத படங்கள் உங்களுக்கு தெரிய கிடைக்கும்.

நகைச்சுவை

நகைச்சுவை ஜாம்பவான்கள் குசும்பன், கார்க்கி (இவரது பாத்திரமான ஏழுவை மறக்க முடியமா?)  உள்ளிட்ட பலரை நீங்கள் ஏற்கனவே அறிவீர்கள்!  

***
ஜவஹர் என்ற இவரின் பதிவுகளை பாருங்கள். பயண கட்டுரை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் எழுதுகிறார். நகைச்சுவை மிளிரும் எழுத்து..

கட்டுரை

விக்னேஸ்வரி! திடிரென நான்கைந்து பதிவுகள் வரிசையாய் எழுதுவார். பின் பணியின் காரணமாய் பதிவுகளே வராது. ஆனால் எழுதும் போது என்னமாய் ரொமாண்டிக் ஆக எழுகிறார் பாருங்கள்.

ஆன்மிகம்

இப்போது தான் விநாயகர் சதுர்த்தி முடித்தோம். கூடவே இது குறித்த விதூஷ் எழுதிய இந்த கட்டுரை வாசிப்போமா?

மருத்துவம்/ ஹெல்த் பக்கம்

சில மருத்துவர்கள் தமிழில் பதிவு எழுதுகிறார்கள். எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம் இது! டாக்டர் புருனோ மருத்துவம் மட்டுமல்லாது பல விஷயங்களும் எழுதுகிறார். உடல் உறுப்பு தானம் குறித்த இந்த கட்டுரையை வாசியுங்கள்.

எழுதாமல் இருப்பவர்

கூடுசாலை ஜெய மார்த்தாண்டன். எனக்கு வலை மூலம் அறிமுகமான நல்ல நண்பர். சில அற்புத கட்டுரைகள் எழுதி உள்ளார். தற்சமயம் நண்பர் ஏனோ எழுதுவதில்லை. நண்பா.. வாங்க மறுபடி எழுதுங்க!

தன்னம்பிக்கை

என். கணேசன் பதிவுகள் வாசித்துள்ளீர்களா? யப்பா!! மனுஷன் எவ்வளவு படித்து, சிந்தித்து எழுதுகிறார்! யூத் விகடனில் தொடர்ந்து இவரது படைப்புகள் வெளியாகிறது. வாசித்து பாருங்கள்!!

***
நன்றி நண்பர்களே.. மீண்டும் நாளை சந்திப்போம்...
மேலும் வாசிக்க...

Monday, September 13, 2010

வலைச்சரத்தில் வானவில் - எனது பதிவுகளில் பிடித்தவை

அன்பு நண்பர்களே

வணக்கம். கொஞ்ச நாளாக இணையம்/ ப்ளாக் பக்கம் அதிகம் வர முடியாத படி வேலை/ சூழல். இருந்தும் சீனா சாரின் அன்பிற்காக இந்த வாரம் முழுக்க உங்களை சந்திக்க உள்ளேன்.

இவ்வாரம் பெரும்பாலும் நான் ரசித்த பதிவர்/ பதிவுகளை அறிமுகம் செய்ய உள்ளேன். அவற்றில் உங்களுக்கு தெரிந்தவர்களும் இருக்கலாம்.  புதியவர்கள் சற்று குறைவாக இருந்தால் .. பொருத்தருள்க.

****

நாம் எதிலுமே ஒரு வெரைட்டி எதிர் பார்ப்பவர்கள் (குடும்பம் தவிர)! நம் விருந்தில் தான் எத்தனை வித ஐட்டங்கள்!! போலவே சினிமா என்றாலும் கூட காமெடி, கதை, நல்ல பாடல்கள் என கலந்து கட்டி இருந்தால் தான் ரசிப்போம் நாம்.     என்னை பொறுத்தவரை வாழ்க்கையும் இப்படி தான் உள்ளது. மகிழ்ச்சி, சோகம், வெற்றி, ஏமாற்றம், முன்னேற்றம், நம்பிக்கை துரோகம் என அனைத்தும் கலந்து உள்ளது நாம் வாழும் வாழ்வு.

வானவில் என நான் எழுதும் வாரந்திர பதிவுகளில் இப்படி ஏழு வண்ணங்கள் கலந்து எழுதுவது வழக்கம். வலைச்சரத்தில் இந்த வாரம் ஒவ்வொரு நாளும் இப்படி கவிதை, கதை, காமெடி என கலந்து கட்டி எழுத போகிறேன்.

முதல் நாளான இன்று எனது படைப்புகள் சில அறிமுகம்...

கவிதை

எழுத துவங்கும் பலரும், பள்ளி/ கல்லூரி காலத்தில் காதல் கவிதைகளில் துவங்குவர். நானும் கூட தான். இன்னமும் கல்லூரி காலத்தில் எழுதிய பல கவிதைகளையே பிரசுரம் செய்கிறேன். சில நன்றாக இருப்பதாக தான் தோன்றுகிறது. உதாரணத்திற்கு சிறு கவிதைகள் வாசித்து பாருங்கள் 

சிறு கதை

சிறு கதை ஆசை யாரை விட்டது? வீட்டருகில் நடந்த ஒரு மரணம். அதனை போலிஸ் எப்படி பார்க்கிறார்கள், அக்கம் பக்கத்தினர் எப்படி பார்க்கிறார்கள்.. ஆனால் உண்மை இவை தாண்டி எங்கோ உள்ளது.. நிஜத்திற்கு மிக அருகில், கற்பனை மிக குறைவான கதை இது..ஒரு தற்கொலை மூன்று கோணங்கள்லை
 - 
புத்தக விமர்சனம்

எவ்வளவோ நல்ல புத்தகங்கள் வாசித்துள்ளோம்; வாசிக்கிறோம், நமது பதிவில் படித்து முடித்த பின் அதனை பகிர்ந்தால், பிறருக்கும் பயனாகும்; பின்னர் வாசிக்க நமக்கும் உதவும். புத்தக விமர்சனம் இதோ:

ராஜாராமின் கருவேல நிழல்- புத்தக விமர்சனம்

பயண கட்டுரை

"வருடத்திற்கொரு முறை இது வரை செல்லாத புது இடத்திற்கு சென்று வாருங்கள்" என்பார்கள். இதனை ஓரளவு நானும் பின் பற்றுகிறேன். ப்ளாக் ஆரம்பித்த பிறகு பயணங்களை பதிவும் செய்கிறேன்.

யானைகளுடன் 1 நாள்- கூர்க் அனுபவம்


சினிமா பக்கம்

கேபிள், உண்மை தமிழன் மட்டும் தான் சினிமா விமர்சனம் எழுதணுமா? நாங்களும் எழுதுவோமில்ல? வந்த புதிதில் ஆர்வ கோளாறில் சில படங்களை முதல் சில நாட்களில் பார்த்து விமர்சனம் எழுதினேன்.அப்படி ஒரு விமர்சனம்.. மலரும் நினைவுகள்


நாம் பிறந்து வளர்ந்த ஊரை மறக்க முடியுமா? 


தஞ்சையின் மறக்க முடியாத இடங்கள்

புகைப்படங்கள் எடுப்பது இன்னொரு ஹாபி. பத்தாம் வகுப்பு ஒன்றாய் படித்த நண்பர்கள் 25 வருடங்கள் கழித்து சந்தித்த நெகிழ்வான சந்திப்பின் படங்கள் ....

25 ஆண்டு கழித்து ஒரு நெகிழ்வான சந்திப்பு

பிடித்த கட்டுரைகள்

தற்போது கட்டுரை என்கிற வடிவம் தான் கருத்துகளை சொல்ல மிக பிடித்தமாய் உள்ளது. உங்களிடம் பேசுவது கூட அந்த வடிவில் தானே? நான் எழுதிய கட்டுரைகளில் பிடித்த சில  ..

100-வது பதிவு: குடும்பம் Vs வேலை

வேலைக்கு செல்லும் பெண்கள் 

தொடர்கள் 

வானவில் என கலவையான வார செய்திகளும்    வாங்க ..முன்னேறலாம்  என்ற தன்னம்பிக்கை தொடரும் எழுதினேன். தற்சமயம் சிறு இடைவெளி; நிச்சயம் பின்னர் தொடர்வேன். 
***
வாசித்தமைக்கு நன்றி நண்பர்களே.. மீண்டும் நாளை சந்திப்போம்..  
மேலும் வாசிக்க...

Sunday, September 12, 2010

பொறுப்புகளை ஒப்படைக்கும் விஜி - பொறுப்பேற்க வரும் மோகன் குமார்

அன்பின் சக பதிவர்களே !

இன்றுடன் முடியும் வாரத்திற்கு, ஆசிரியப் பொறுப்பேற்ற மயில் என்ற பெயரில் எழுதும் விஜி, ஏழு இடுகைகள் இட்டு , ஏறத்தாழ 150 மறு மொழிகள் பெற்றிருக்கிறார். துறை வாரியாக பல புதிய பதிவர்களை அறிமுகம் செய்து, ஏற்ற பொறுப்பினை சிறந்த முறையில் நிறைவேற்றி, மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். வலைச்சரம் சார்பினில், நன்றி கலந்த நல்வாழ்த்துகளுடன் விடை அளிப்பதில் பெருமை அடைகிறேன்.

அடுத்து, நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க வருகிறார் சென்னையில் வசிக்கும் அருமை நண்பர் மோகன் குமார். இவர் சட்டப் படிப்பும் கம்பெனி செக்ரட்டிஷிப்பும் படித்திருக்கிறார். சென்னையில் உள்ள ஒரு பிரபல நிறுவனத்தில் சட்ட ஆலோசகராகவும், கம்பெனி செக்ரட்டரியாகவும் பணி புரிகிறார்.
இவர் வீடு திரும்புதல் என்ற தமிழ்ப் பதிவிலும், நீடா மோகன் என்ற ஆங்கிலப் பதிவிலும் எழுதி வருகிறார். ஜூன் 2008ல் எழுதத் துவங்கிய இவர் ஏறத்தாழ, இரு பதிவுகளிளும் சேர்த்து நூற்று நாற்பது பதிவுகள் இட்டிருக்கிறார். இவர் அரட்டை அரங்கம், நீயா நீனா போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் மற்றும் பல்வேறு தொலைக்காட்சிகளிலும் பங்கு பெற்றிருக்கிறார்.

இவர் பதிவர்களை சிறந்த முறையில், பல இடுகைகளில், முழுவதுமாக அறிமுகம் செய்திருக்கிறார். பல தர்ம காரியங்களுக்கு நன்கொடையும் அளிக்கிறார்.

நண்பர் மோகன் குமாரை வருக! வருக ! - நல்ல முறையினில் அறிமுகப் பணியினைத் தொடர்க என வரவேற்று வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் மோகன் குமார்
நட்புடன் சீனா


மேலும் வாசிக்க...

விடுபட்டவை

ஒரு வார காலம் முடியப்போகிறது, இன்றைக்கு சில விடுபட்ட சுவாரஸியமான வலைப்பூக்கள்.

புத்தகவிமர்சனத்திற்கென்று இருக்கும் குறிப்பிட்ட சில வலைப்பதிவுகளில் லேகாவின் யாழிசையும் ஒன்று. புத்தகங்கள் மட்டுமன்றி திரைப்படங்களையும் பரிந்துரைக்கும் வலைப்பூ இது.

கிருஷ்ணபிரபுவின் நான் வாசித்த புத்தகங்கள் வலைப்பூ தமிழ் புத்தகங்கள், சிறுகதை, கட்டுரை என ஒரு தொகுப்பாகவே உள்ளது.

விருபா ஒரு தமிழ் புத்தக தகவல் திரட்டு, புத்தகங்கள், ஆய்வேடுகள், சிற்றிதழ்கள், எழுத்தாளர்கள், பதிப்பகங்கள் என்று வரிசைப்படுத்தி மதிப்புரைகள் , புத்தக பரிந்துரை எனவும் வகைப்படுத்தியிருக்கிறார்கள்.

பிரபஞ்சப்பிரியனின் இந்த வலைப்பூ ஒரு வரலாறு, தலைவர்களின் வாழ்க்கை, விளையாட்டு, அறிவியல், ஆய்வு என்று ஒரு கலந்து கட்டிய சுவாரஸியம்.

காமிக்ஸ் பூக்கள் பூந்தளிர், வாண்டு மாமா முதல் கபிஷ், காக்கைகாளி வரை எல்லா காமிக்ஸ் கதாபாத்திரங்களைப்பற்றிய தகவல் திரட்டு.

சின்னச்சின்ன எலெக்ட்ரிகல் ரிப்பேர் பத்தியும், மின்னனுவியல் பற்றியும் எளிய தமிழில் விள்க்கும் முயற்சி இந்த மின்னியல் தமிழில் , இன்னும் அதிக இடுகைகளை எதிர்ப்பார்க்கிறோம் விஜயகுமார். கேள்வி பதிலாக கூட போடுங்கள்.

அறியாமையே ஆனந்தம் என்ற கொள்கையில் எழுதும் இவரின் பதிவுகள் புகைப்படங்கள் மிக அருமை.

இந்த ஒரு வார காலம் நான் அறிமுகப்படுத்திய பதிவுகள் எதோ ஒரு வகையில் பயனளிக்கும் என்ற நம்பிக்கையுடன், அழைத்த சீனா சார்க்கு மீண்டும் நன்றி சொல்லி விடை பெறுகிறேன். வணக்கம்
மேலும் வாசிக்க...

Saturday, September 11, 2010

உள்ளூர் கடவுளும் உலக கடவுளும்

வணக்கம் ஃப்ரெண்ட்ஸ், நேற்று கொஞ்சம் வேலை அதிகம் (!?) , இன்றைய பதிவு விளையாட்டு விமர்சனம் எழுதும் பதிவர்களின் அறிமுகம். மிகக்குறைந்த பங்களிப்பே இருக்கிறது, எனினும் உற்சாகப்படுத்தினால் இன்னும் நிறைய பேர் எழுத முன்வருவார்கள்.

நடமாடும் கடவுளர்களான கிரிகெட் வீரர்கள், கிரிகெட் பற்றிய முகிலனின் கிரிக்கெட் பிதற்றல்கள் வலைப்பூவில் அப்டேட்டா எழுதுகிறார், வர்ணனைகளுடன், டெக்னிகலாகவும். கிரிகெட் பிரியர்களுக்கு தேவையான வலைப்பூ.

லோஷனின் களம் கிரிக்கெட்டுடன் ஃபுட்பாலும் சேர்ந்து வருகிறது. படித்து பகிரலாம். கிரிக்கெட் என்ற தலைப்பில் மட்டும் நூற்றுக்கும் மேறப்பட்ட இடுகைகள் எழுதியிருக்கிறார். விளையாட்டுக்கு அதிக வலைப்பூ வைத்திருக்கும் பதிவர் இவர் மட்டுமே.

கிரிகெட் கிடுகு ஒரு வலைப்பூக்களின் தொகுப்பு, பல்வேறு தலைப்புகளில் கிரிக்கெட் பற்றிய அலசல்கள் இடம்பெறுகிறது.


கிரிகெட் எப்படி இந்தியாவின் கடவுள் விளையாட்டாக இருக்கிறதோ அதே போல் உலகம் முழுதும் கொண்டாடும் விளையாட்டான கால்பந்துக்கு கோவையிலிருந்து தமிழில் கால்பந்து என்னும் தளம் இயங்குகிறது, விருப்பமுள்ளோர் இதில் கால்பந்து பற்றிய செய்திகளை எழுதலாம்.


விளையாட்டு உலகம் என்னும் வலைப்பூ கிரிகெட், கால்பந்து மட்டுமின்றி, செஸ், இறகுபந்து, டென்னிஸ், ஹாக்கி, கார்பந்தயம் பற்றிய பதிவுகளும் உள்ளது. தெரிந்துகொள்ள வேண்டிய வலைப்பூக்களில் ஒன்று இது.

ஆதரவுக்கு நன்றி, மேலும் அடுத்த இடுகையில்..
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது