07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label மோகன் குமார். Show all posts
Showing posts with label மோகன் குமார். Show all posts

Sunday, September 19, 2010

அந்த ஏழு நாட்கள்.. விடை பெறுகிறேன் நண்பர்களே

வி.ஐ.பி சந்திப்புகள் 

விகடனில் பணி புரியும் திரு. ரவி பிரகாஷ் அவர்கள் நிருபராக பல வி.ஐ.பி களுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு பெற்றிருக்கிறார். அவற்றை அவ்வபோது சுவையாக பகிர்கிறார். சுஜாதாவுடனான சந்திப்பும், கலைஞர் உடனான சந்திப்பும் இன்னும் நினைவில் உள்ளவை!

மருத்துவ பக்கம்

என்னது நானு யாரா என்ற வித்யாசமான பெயரில் எழுதும் இந்த நண்பரின் மருத்துவ பதிவை வாசியுங்கள். குடி பழக்கம் பற்றிய நல்ல பதிவு இது

கட்டுரை 

நண்பர் வெங்கட் நாகராஜ் நெய்வேலியில் பிறந்தவர். தற்சமயம் டில்லியில் உள்ளார். டில்லி பற்றி அறிமுக படுத்தி அவர் எழுதும் பதிவுகள் தலை நகரை நேரில் பார்க்கும் ஆவலை தூண்டுபவை..

எழுதாமல் இருப்பவர்

நண்பர் ஆதி மனிதன் அவ்வபோது எழுதி வருபவர். டாக்டர் சொக்கலிங்கம் ஒரு முறை பேசியது பற்றி அவர் எழுதிய பதிவு அருமையானது. நண்பர் ஏனோ தற்போது அதிகம் எழுதுவதில்லை.. ஆதி மனிதன்.. எங்கிருந்தாலும் மீண்டு(ம்) வாங்க ..

ஆன்மீக பக்கம் 

வேதாத்திரி மகரிஷி அவர்களின் கருத்துக்களை சொல்லும் ப்ளாக் இது. வாழ்க்கைக்கு தேவையான கருத்துக்கள் எளிய முறையில் காண கிடைக்கிறது. அவசியம் வாசிக்க வேண்டிய பதிவுகள் சில இங்கு உள்ளன. வாசியுங்கள் ..

புதிர் பக்கம்

அவ்வபோது புதிர் போடுகிறார் மாதவன்.. இந்த புதிரை வாசித்து பாருங்கள்

புத்தக விமர்சனம்

செ. சரவண குமார் நெகிழ்வான எழுத்துக்கு சொந்தக்காரர்.. தான் வாசித்த நல்ல புத்தகங்கள் குறித்து நம்மோடு பகிர்வார்.. அப்படி ஒரு பகிர்வு.. ஜெய மோகன் புத்தகம் குறித்து...

***
இந்த ஏழு நாட்களும் உங்களை சந்திக்க வாய்ப்பு தந்த வலைச்சரம் குழுவிற்கும், குறிப்பாக சீனா ஐயாவிற்கும் நன்றிகள்.. ஒரு வாரம் வாசித்த உங்களுக்கும், பின்னூட்டம் இட்ட , வாக்களித்த அனைவருக்கும் நன்றி கூறி விடை பெறுவது.. உங்கள் அன்பு நண்பன் .. மோகன் குமார்.  வணக்கம் !!
மேலும் வாசிக்க...

Saturday, September 18, 2010

வானவில் - இப்படம் நாளை கடைசி !

கட்டுரை 

வித்யா.. சென்னையின் நல்ல ஹோட்டல்கள் போய் சாப்பிட்டு விட்டு படங்களுடன் போட்டு நமக்கு பசி கிளப்புவார். சினிமா விமர்சனம், பழைய நினைவுகள் பகிர்வு என ரசனையாய் இருக்கிறது இவரது ப்ளாக். (மேடம் நமக்கு எப்போதாவது பின்னூட்டம் போட்டால் "நல்ல பதிவு" என மட்டும்
சொல்லிட்டு போய்டுவாங்க..)

நகைச்சுவை 

அம்பி வாசித்துள்ளீர்களா? பெங்களூரில் வசிக்கும் தமிழர்; அவ்வபோது எழுதினாலும் ரசித்து சிரிக்க வைப்பவர். சாப்பாடு, ஹவுஸ் பாஸ், பெண்களூர் பற்றி இவர் எழுதும் பதிவுகள் சுவாரஸ்யமானவை.

மருத்துவம்/ ஹெல்த் பக்கம்

டாக்டர் தேவன் மாயம் பல உபயோகமான கட்டுரைகள் எழுதுகிறார். மருத்துவர்களே வலை உலகில் நேரடியாக தமிழில் எழுதும் போது நமக்கு அது
மிக பயன் உள்ளதாக உள்ளது. டெங்கு பற்றி எழுதியுள்ள பதிவை வாசியுங்கள்.. 

சிறுகதை

பத்திரிக்கைகளில் ஏற்கனவே பழக்மான பெயர் விமாலதித்த மாமல்லன்.. இவரது வலைப்பூவில் சிறுகதை, கட்டுரைகள் எழுதி வருகிறார்..  அப்படி ஒரு சிறுகதை 


டெக்னிகல் பதிவுகள் 

சூர்யா கண்ணன் அவசியம் நாம் அறிய வேண்டிய பதிவுகள் சில எழுதுகிறார். Laptop Recovery: அவசியம் அறிந்துக் கொள்ள வேண்டியது .. வாசித்து பாருங்கள்

புத்தக விமர்சனம்

முழுக்க முழக்க புத்தக விமர்சனங்களுக்கான ப்ளாக் கிருஷ்ண பிரபுவினுடையது. அவ்வப்போது தான் வாசிக்கும் நல்ல புத்தகங்களை நம்முடன் பகிர்கிறார். ப்ளாகின் பெயரே நான் வாசித்த தமிழ் புத்தகங்கள் தான்!!

எழுதாமல் இருப்பவர் 

ஜெட்லியின் நண்பர் சங்கர். முன்பெல்லாம் " பார்த்ததும் படித்ததும்" பதிவில் இவரும் அவ்வபோதாவது எழுதுவார். சமீப காலமாய் ஏதும் எழுதலை. பின்னூட்டங்களில் கூட அதிகம் காண வில்லை. மறுபடி வாங்க சங்கர் உங்க வழக்கமான உற்சாகத்துடன்..

***
இன்னும் ஒரே நாள் தான் நண்பர்களே..  இப்படம் நாளை கடைசி !
மேலும் வாசிக்க...

Friday, September 17, 2010

வானவில் - ஏழு சுவைகள்



சிறுகதை

மனித நேயம் கலந்து ரிஷபன் எழுதும் சிறுகதைகள் அற்புதமாய் இருக்கின்றன. கதை சொல்லியே எதிர் மறை காரக்டரிலும் வருவதுண்டு. 


கட்டுரை 

ரகு எழுதிய இந்த கட்டுரையை வாசித்து பாருங்கள். எவ்வளவு உழைத்து எழுதி உள்ளார்!  சட்டத்தின் சில இருண்ட பகுதிகளை சொல்லும் கட்டுரை இது !

எழுதாமல் இருப்பவர் 

வெளி நாட்டில் இருக்கும் டுபுக்கு தற்சமயம் அதிகம் எழுதுவதில்லை. இவரது நகைச்சுவை படித்து,  சிரிக்காமல் இருக்க முடியாது. இவரது ஆரம்ப கால கட்டுரைகள் அவசியம் தேடி படித்து சிரிக்க வேண்டியவை.

கவிதை பக்கம்

நெல்லையில் வானொலியில் பணி புரியும் தமயந்தி கவிதை, சிறுகதை, சினிமா விமர்சனம் என கலவையாய் எழுதுகிறார். கவிதைகள் சில மனதை தைக்கும். உதாரணத்திற்கு மரணம் குறித்த கவிதை 

புகை படங்கள்

முரளி குமார் பத்மநாபன்..எஸ். ரா ரசிகர்; கவிதை கட்டுரை என கலக்கினாலும் புகை படங்களுக்கென தனி ப்ளாக் வைத்துள்ளார். எழுத்தை போல படங்களும் இவர் மென்மையான மனதை காட்டுகின்றன.

ஹெல்த் பக்கம்

சங்கவி பல்வேறு உபயோகமான மருத்துவ விஷயங்களை தொடர்ந்து எழுதி வருகிறார். பழங்கள், காய்கறிகள் இவற்றின் பலன்களை எழுதுகிறார். மிக நல்ல முயற்சி

சினிமா பக்கம் 

சேத்தியா தோப்பு என்ற ப்ளாக் சமீபத்தில் தான் பார்த்தேன்.சினிமா குறித்து எப்போதாவதும் பிற கட்டுரைகள் அதிகமாகவும் எழுதுவது தெரிகிறது. தமிழ் படங்களுக்கு வரி விலக்கு பற்றிய இந்த கட்டுரை சிந்திக்க வேண்டிய விஷயம்
தான் !

***
இப்போதைக்கு விடை கொடுங்கள். மறுபடி நாளை சந்திக்கலாம்.. 
மேலும் வாசிக்க...

Thursday, September 16, 2010

வானவில்:ஏழு ஏழா பதிவுகளை பிரிச்சிக்கோ

சமூக அக்கறை

சமூக அக்கறைக்கு எப்போதும் மேற்கோள் காட்டப்படுவது ஈரோடு கதிர் மற்றும் வானம்பாடிகள் ஐயா. இவர்களை அனைவரும் அறிவர்.

எப்போதாவது எழுதினாலும் பெற்றோரின் பார்வையில் இருந்து நிரம்ப அக்கறையுடன் எழுதுவார் அமைதி அப்பா. இந்த பதிவை வாசித்து பாருங்கள்

சினிமா பக்கம் 

சரவண குமார் விமர்சனங்களும் அலசல்களும் கலந்து செய்கிறார். வாசித்து பாருங்கள்

புகைப்படம்

ஆதிமூல கிருஷ்ணன் ..பிரபல பதிவர்! அறிமுகம் வேண்டுமா என்ன? நகைச்சுவையான எழுத்து, சிறுகதை, கட்டுரைகள் என கலக்குகிறார். முதல்வன் படம்  போல ஒரு பேட்டி எடுத்து புயல் கிளப்பினார். (சரி சரி விடு.. இப்ப சில மாசமா தான் புயல் ஓஞ்சிருக்கு ..)    நான் மிக ரசிப்பது இவரது புகை படங்களை.. இதுவரை பார்க்கா விடில் பார்த்து விடுங்கள்

நகைச்சுவை 

சித்ரா அவர்களை பற்றி சொல்லாமல் விட முடியுமா? பல பதிவுகள் நகைச்சுவை மிளிர எழுதுவார். பின்னூட்டத்தில் பலரையும் ஊக்குவிக்கும் இவர் போன்றோரால் தான் பலரும் எழுதுகின்றனர்.

எழுதாமல் இருப்பவர் 


கனவில் இசைத்தவை என்ற பெயரில் நல்ல நல்ல பாடல்களை வரிகளுடன் அறிமுகம் செய்த ஸ்ரீ மதி சில மாதங்களாக எழுதுவதில்லை. வாங்க ஸ்ரீமதி .. மறுபடி பாடல்களால் கலக்குங்க..

கவிதைக்காரர் 

பா. ராஜாராம்,  நேசமித்திரன், விநாயக மூர்த்தி உள்ளிட்ட பலர் அனைவருக்கும் அறிமுகமான கவிஞர்கள். 
**
மகுடேசுவரன்..சுஜாதா போன்ற மோதிர கையால் பாராட்ட பட்ட அற்புதமான பிரபல கவிஞர். வலையிலும் எழுதுகிறார் என்பது பலருக்கு இன்னும் தெரிய வில்லை. எனக்கு இவர் கவிதைகள் மிக பிடிக்கும் . வாசியுங்கள்.. தவிர கேள்வியும் நானே பதிலும் நானே என்று கேள்விகளும் கேட்டு பதில் சொல்கிறார். 

அரசியல் 

தண்டோரா யப்பா. இந்த மனுஷனுக்கு என்ன தைரியம்!! எல்லா அரசியல் கட்சிகளையும் உண்டு இல்லைன்னு கிழிக்கிறார். பல அரசியல் பதிவிலும் யாராவது " ஆட்டோ வர போவுது" என பின்னூட்டம் போட்டுட்டு போகிறார்கள்,
மனுஷன் அசர மாட்டேன் என்கிறார்.

**
ரைட்டு .. மறுபடி நாளைக்கு பார்க்கலாம்.. இப்ப விடு ஜூட்.. 
மேலும் வாசிக்க...

Wednesday, September 15, 2010

வானவில்.. ஏழு ஸ்வரங்களுக்குள்

மருத்துவம்/ ஹெல்த் பக்கம்

பிரபா என்பவர் எழுதும் ஆழ் கடல் களஞ்சியம் என்ற ப்ளாக் பல ஹெல்த் தகவல்கள் சொல்கிறது. இதோ குழந்தை பிறந்த உடன் செய்ய வேண்டியவை பற்றி சொல்லும் பதிவு.. 

சினிமா பக்கம்

திருவாரூரிலிருந்து சரவணன் " இளைய பாரதம்" என்ற ப்ளாகில் எழுதுகிறார். நம்ம தஞ்சை மண் என்பதாலேயே வாசிக்க ஆரம்பித்தேன். அவாபோது சினிமா பற்றிய விமர்சனம், அலசல் கட்டுரை எனவும் இன்னும் பல விஷயங்களும் எழுதுகிறார். ரஜினி பற்றிய இந்த கட்டுரை பாருங்கள்.

கட்டுரை

ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி அவர்கள் வெண்பா, கட்டுரை என பல விதமாய் எழுதுகிறார். அவர் எழுதிய இந்த கட்டுரை வாசித்து பாருங்கள்

கவிதை

கலகலப்ரியா கவிதைகள் வாசித்துள்ளீர்களா?  மிக தைரியமான எழுத்து.. கவிதைகளிலும் பின்னூட்டதிலும் தெரியும் இவரின் தைரியம் பார்த்து ஆச்சரிய பட்டுள்ளேன் .

வாசித்து பாருங்கள்.

ஆன்மிகம்

ஜாதகம் மேல் நம்பிக்கை உள்ளவர்கள் பார்க்க வேண்டிய பதிவு; நம்பிக்கை இல்லாதவர்கள் பின்னூட்டத்தில் என்னை திட்டாமல் இருந்தால் உங்களுக்கு கோடி புண்ணியம் (என்னது புண்ணியத்திலேயே நம்பிக்கை இல்லையா? ரைட்டு !)

எழுதாமல் இருப்பவர்

நண்பர் அனுஜன்யா எழுத்தில் சுஜாதாவின் நகைச்சுவையை காணலாம். பயண கட்டுரைகளும் அலுவலக நடப்புகளும் மிக அங்கதமாய் எழுதுவார். நண்பர் கடைசியாய் எழுதி சில மாதங்கள் ஆகி விட்டது. விரைவில் மீண்டும் எழுதுவார் என நம்புகிறேன்.

புகைப்படங்கள்

இவர் உங்களுக்கு நன்கு அறிமுகம் ஆனவர் தான். ராம லக்ஷ்மி! கட்டுரைகள், கவிதைகள் என கலக்குகிறார். எனக்கு மிக பிடித்தவை இவரின் புகைப்படங்கள். நீங்களும் (மீண்டும் ஒரு முறை) சென்று பாருங்கள்...

**
மீண்டும் நாளை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து வணக்கம் கூறி விடை பெறுவது உங்கள் மோகன் குமார். .. குமார் .... குமார்
மேலும் வாசிக்க...

Tuesday, September 14, 2010

வானவில்லே..வானவில்லே -ஏழு அறிமுகங்கள்

சினிமா பக்கம்


சினிமா விமர்சனங்களை கேபிள் சங்கர் , ஜெட்லி போன்றோர் தொடர்ந்து செய்கிறார்கள்.

உலக சினிமாவை மிக நேசிக்கும் ஒரு நண்பர் பட்டர்பிளை சூரியா.பழகவும் மிக இனியவரான இவர் தற்சமயம் அதிகம் எழுதா விடினும் இவரது பழைய பதிவுகளை வாசித்து பாருங்கள். உலக சினிமாவின் பல அற்புத படங்கள் உங்களுக்கு தெரிய கிடைக்கும்.

நகைச்சுவை

நகைச்சுவை ஜாம்பவான்கள் குசும்பன், கார்க்கி (இவரது பாத்திரமான ஏழுவை மறக்க முடியமா?)  உள்ளிட்ட பலரை நீங்கள் ஏற்கனவே அறிவீர்கள்!  

***
ஜவஹர் என்ற இவரின் பதிவுகளை பாருங்கள். பயண கட்டுரை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் எழுதுகிறார். நகைச்சுவை மிளிரும் எழுத்து..

கட்டுரை

விக்னேஸ்வரி! திடிரென நான்கைந்து பதிவுகள் வரிசையாய் எழுதுவார். பின் பணியின் காரணமாய் பதிவுகளே வராது. ஆனால் எழுதும் போது என்னமாய் ரொமாண்டிக் ஆக எழுகிறார் பாருங்கள்.

ஆன்மிகம்

இப்போது தான் விநாயகர் சதுர்த்தி முடித்தோம். கூடவே இது குறித்த விதூஷ் எழுதிய இந்த கட்டுரை வாசிப்போமா?

மருத்துவம்/ ஹெல்த் பக்கம்

சில மருத்துவர்கள் தமிழில் பதிவு எழுதுகிறார்கள். எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம் இது! டாக்டர் புருனோ மருத்துவம் மட்டுமல்லாது பல விஷயங்களும் எழுதுகிறார். உடல் உறுப்பு தானம் குறித்த இந்த கட்டுரையை வாசியுங்கள்.

எழுதாமல் இருப்பவர்

கூடுசாலை ஜெய மார்த்தாண்டன். எனக்கு வலை மூலம் அறிமுகமான நல்ல நண்பர். சில அற்புத கட்டுரைகள் எழுதி உள்ளார். தற்சமயம் நண்பர் ஏனோ எழுதுவதில்லை. நண்பா.. வாங்க மறுபடி எழுதுங்க!

தன்னம்பிக்கை

என். கணேசன் பதிவுகள் வாசித்துள்ளீர்களா? யப்பா!! மனுஷன் எவ்வளவு படித்து, சிந்தித்து எழுதுகிறார்! யூத் விகடனில் தொடர்ந்து இவரது படைப்புகள் வெளியாகிறது. வாசித்து பாருங்கள்!!

***
நன்றி நண்பர்களே.. மீண்டும் நாளை சந்திப்போம்...
மேலும் வாசிக்க...

Monday, September 13, 2010

வலைச்சரத்தில் வானவில் - எனது பதிவுகளில் பிடித்தவை

அன்பு நண்பர்களே

வணக்கம். கொஞ்ச நாளாக இணையம்/ ப்ளாக் பக்கம் அதிகம் வர முடியாத படி வேலை/ சூழல். இருந்தும் சீனா சாரின் அன்பிற்காக இந்த வாரம் முழுக்க உங்களை சந்திக்க உள்ளேன்.

இவ்வாரம் பெரும்பாலும் நான் ரசித்த பதிவர்/ பதிவுகளை அறிமுகம் செய்ய உள்ளேன். அவற்றில் உங்களுக்கு தெரிந்தவர்களும் இருக்கலாம்.  புதியவர்கள் சற்று குறைவாக இருந்தால் .. பொருத்தருள்க.

****

நாம் எதிலுமே ஒரு வெரைட்டி எதிர் பார்ப்பவர்கள் (குடும்பம் தவிர)! நம் விருந்தில் தான் எத்தனை வித ஐட்டங்கள்!! போலவே சினிமா என்றாலும் கூட காமெடி, கதை, நல்ல பாடல்கள் என கலந்து கட்டி இருந்தால் தான் ரசிப்போம் நாம்.     என்னை பொறுத்தவரை வாழ்க்கையும் இப்படி தான் உள்ளது. மகிழ்ச்சி, சோகம், வெற்றி, ஏமாற்றம், முன்னேற்றம், நம்பிக்கை துரோகம் என அனைத்தும் கலந்து உள்ளது நாம் வாழும் வாழ்வு.

வானவில் என நான் எழுதும் வாரந்திர பதிவுகளில் இப்படி ஏழு வண்ணங்கள் கலந்து எழுதுவது வழக்கம். வலைச்சரத்தில் இந்த வாரம் ஒவ்வொரு நாளும் இப்படி கவிதை, கதை, காமெடி என கலந்து கட்டி எழுத போகிறேன்.

முதல் நாளான இன்று எனது படைப்புகள் சில அறிமுகம்...

கவிதை

எழுத துவங்கும் பலரும், பள்ளி/ கல்லூரி காலத்தில் காதல் கவிதைகளில் துவங்குவர். நானும் கூட தான். இன்னமும் கல்லூரி காலத்தில் எழுதிய பல கவிதைகளையே பிரசுரம் செய்கிறேன். சில நன்றாக இருப்பதாக தான் தோன்றுகிறது. உதாரணத்திற்கு சிறு கவிதைகள் வாசித்து பாருங்கள் 

சிறு கதை

சிறு கதை ஆசை யாரை விட்டது? வீட்டருகில் நடந்த ஒரு மரணம். அதனை போலிஸ் எப்படி பார்க்கிறார்கள், அக்கம் பக்கத்தினர் எப்படி பார்க்கிறார்கள்.. ஆனால் உண்மை இவை தாண்டி எங்கோ உள்ளது.. நிஜத்திற்கு மிக அருகில், கற்பனை மிக குறைவான கதை இது..ஒரு தற்கொலை மூன்று கோணங்கள்லை
 - 
புத்தக விமர்சனம்

எவ்வளவோ நல்ல புத்தகங்கள் வாசித்துள்ளோம்; வாசிக்கிறோம், நமது பதிவில் படித்து முடித்த பின் அதனை பகிர்ந்தால், பிறருக்கும் பயனாகும்; பின்னர் வாசிக்க நமக்கும் உதவும். புத்தக விமர்சனம் இதோ:

ராஜாராமின் கருவேல நிழல்- புத்தக விமர்சனம்

பயண கட்டுரை

"வருடத்திற்கொரு முறை இது வரை செல்லாத புது இடத்திற்கு சென்று வாருங்கள்" என்பார்கள். இதனை ஓரளவு நானும் பின் பற்றுகிறேன். ப்ளாக் ஆரம்பித்த பிறகு பயணங்களை பதிவும் செய்கிறேன்.

யானைகளுடன் 1 நாள்- கூர்க் அனுபவம்


சினிமா பக்கம்

கேபிள், உண்மை தமிழன் மட்டும் தான் சினிமா விமர்சனம் எழுதணுமா? நாங்களும் எழுதுவோமில்ல? வந்த புதிதில் ஆர்வ கோளாறில் சில படங்களை முதல் சில நாட்களில் பார்த்து விமர்சனம் எழுதினேன்.அப்படி ஒரு விமர்சனம்.. 



மலரும் நினைவுகள்


நாம் பிறந்து வளர்ந்த ஊரை மறக்க முடியுமா? 


தஞ்சையின் மறக்க முடியாத இடங்கள்

புகைப்படங்கள் எடுப்பது இன்னொரு ஹாபி. பத்தாம் வகுப்பு ஒன்றாய் படித்த நண்பர்கள் 25 வருடங்கள் கழித்து சந்தித்த நெகிழ்வான சந்திப்பின் படங்கள் ....

25 ஆண்டு கழித்து ஒரு நெகிழ்வான சந்திப்பு

பிடித்த கட்டுரைகள்

தற்போது கட்டுரை என்கிற வடிவம் தான் கருத்துகளை சொல்ல மிக பிடித்தமாய் உள்ளது. உங்களிடம் பேசுவது கூட அந்த வடிவில் தானே? நான் எழுதிய கட்டுரைகளில் பிடித்த சில  ..

100-வது பதிவு: குடும்பம் Vs வேலை

வேலைக்கு செல்லும் பெண்கள் 

தொடர்கள் 

வானவில் என கலவையான வார செய்திகளும்    வாங்க ..முன்னேறலாம்  என்ற தன்னம்பிக்கை தொடரும் எழுதினேன். தற்சமயம் சிறு இடைவெளி; நிச்சயம் பின்னர் தொடர்வேன். 
***
வாசித்தமைக்கு நன்றி நண்பர்களே.. மீண்டும் நாளை சந்திப்போம்..  
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது