07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, September 4, 2015

ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் ..

ஐந்தாம் நாள் வலைச்சரத்தில் இன்று ..

பயணங்கள் எத்தனை சிறப்பானதோ அத்தனை சிறப்பானது அதனைப்பற்றிய நாம் நம் வீட்டிற்கு திரும்பியதும் அசைப்போட்டுப்பார்த்தல் !

சில செய்யாமல் தவிர்த்திருக்க வேண்டியவை , செய்திருக்க வேண்டியவைன்னு வரிசையாக வந்து நாந்தான் முன்னாடியே சொன்னேன்ல என்று நமுட்டு சிரிப்புடன் சொல்லும்.

நல்ல செயல்கள் , கடந்துப்போன இனிமையான வினாடிகளை ஒரு ரீவைண்ட் பட்டன் தட்டி விட்டு ரசிப்பது ஒரு தன்னம்பிக்கை யையும் நிச்சயம் தருகிறது .
ஒருவரது சுவடுகள் மற்றவருக்கு எத்தனை உபயோகமா உள்ளது ! (அப்பாடா ! டாபிக்கைப்பிடிச்சுட்டேன் :))

தனது பயணக்கட்டுரைகள் , அனுபவங்கள் அனைத்தையும் எளிமையாக தமிழில் கூற முடியும் என்று வலைப்பூவாக்கியிருக்கிறார். திரு . ரமணன் அவர்கள். சிறந்த எழுத்தாளர் , இவரது வலைப்பூ சுவடுகள். படமெடுப்பதும் , குறும்பட தயாரித்தலும் தமக்கு மிகப்பிடித்தமானவை என்கிறார்.சற்று நாட்களுக்கு முன் , மேகி நூடுல்ஸ் பற்றி பெரும் சர்ச்சை கிளம்பி பல பேச்சுலர்ஸ் வயிற்றில் ஈரத்துணிப்போடப்பட்டது ! (நான் அதிகம் செயவதில்லை ! ) 

ஆனாலும் இந்தக்குழந்தைகளுக்கு அதன் மேல் தனி மோகம் தான் ! ஒரு வேளை வாயில் நூல் போல வைத்து , ஜிவ்வென்று உள்ளேயிழுத்து சர் ருன்னு சாப்பிடுவதாக விளம்பரங்களில் காண்பிப்பதால் இருக்குமோ என்றெண்ணியிருக்கிறேன் !

உலகமறிந்த இந்தி சூப்பர் ஸ்டாரையும் தனது சிக்கலில் மாட்டி விட்ட இந்த நூடுல்ஸ் பற்றிய இவரது கட்டுரை , மிகவும் உபயோகமானது .
நொந்து நூலாகிப் போன மேகி நூடுல்ஸ்  அவசியம் படிக்க வேண்டியது. 

இன்றைய ஐடி உலகில் வேலைக்கு செல்லும் நம் இளைஞர் - இளைஞிகளுக்காக, ஒருவர் தொழில் தொழில் தொடங்கியிருக்கிறார்.

காய்கறிகளையும் , பழங்களை ஆன்லைனில் வீடுகளுக்கும் , ஆபீஸுக்கும் நேரடியாக சப்ளை செய்கின்றன. இதென்ன பிஸினஸ் ந்னு நினைக்கறீங்களா..! இப்படி பல ஐடியாக்களுடன் லைப் பூஸ்டர் தொடராக எழுதிருக்கிறார் எழுத்தாளர் !
 மிக சுவாரஸ்யம் .

பயணங்களில் பார்த்தது , சவாலே சமாளி ஆகிய தொடர்களும் அருமை.. இவரது வலைப்பூ வளைத்துக்கொள்கிறது .. உள்ளேயே வசிக்கிறோம்.
இவரது சுவடுகள் விஸிட் செஞ்சுட்டீங்களா..! 

வலைச்சரத்தின் வாயிலாக நமது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டு அடுத்தப்பதிவரைக்காண்போமா !


நாளை கோகுலாஷ்டமி , கண்ணன் அவதரித்த தினம் ! 

ஏகப்பட்ட வேலைகள் காத்திருக்க , ஈசியா என்ன சமைக்கலாம் இன்னிக்கு ..இப்படித்தான் பலப்பெண்கள் மனதில் ஓடும் சிந்தனையின் வெளிப்பாடாக இருக்கும் .
எனக்கு எப்போதுமே வெரைட்டி ரைஸ் கைக்கொடுக்கும் .

சட்டுன்னு சமையலை முடிச்சிட்டு வெரைட்டியாக சமைச்சமாதிரி காமிச்சுக்கலாமே ! என்னடா சுவடுகளிலிருந்து ... டக்குன்னு சமையலுக்கு தாவிட்டேனேன்னு தானே யோசிக்கறீங்க.. சமையல் பதிவுகளைப்பதியும் பதிவரைத்தான் காண இருக்கிறோம்.

பாளையங்கோட்டை யை சேர்ந்த சாரதா என்ற பெண்மணி யின் சமையல் குறிப்புகள் தளத்திற்கு சென்றேன். தான் சமைத்ததை , ருசித்ததை ப்லாக் ஆக்கியிருக்கிறார்.

பல நமக்கு தெரிந்த ரெசிபி என்றாலும் , சமையலுக்கு புதுமுகம் ஆனவர்களுக்கு மிகவும் பயனுள்ள தளம் இது.. அப்படியே விஸிட் செய்துட்டு வருவோமா!

சமையல் குறிப்புகளுடன் தன் நெல்லை சீமையைப்பற்றியும் பலப்பதிவுகளை தந்திருக்கிறார். 

வாழ்க்கையில் சின்னச்சின்ன சந்தோஷங்கள் எத்தனை முக்கியம் என்று மகிழ்ச்ச்சிப்பட்டியலிடுகிறார். அத்தனையும் மகிழ்ச்சியை அள்ளித்தெளிக்கின்றன.

சைவம் / அசைவம் என்று பல ரெசிபிக்களுடன் கலக்கிடும் திருமதி.சாரதா அவர்களுக்கு நம் நல்வாழ்த்துகளை தெரிவித்தப்படியே அடுத்தப்பதிவரைக்காண்கிறோம். 

இதழில் எழுதிய கவிதைகள் என்ற தொகுப்பில் தனது கவிதைகளை வெளியிட்டுள்ளதாக தன்னை எளிமையாக அறிமுகப்படுத்திக்கொள்ளும் திரு. சதீஷ் சங்கவி அவர்களது sankavi.com தான் அடுத்து செல்லவிருக்கிறோம் !
2009 லிருந்து பலவிஷயங்களை பதிவாக்கியிருக்கிறார்.
கல்யாண சோறு ..


என்ற தலைப்பில் இன்றைய நாகரீக பஃபே முறையையும் அதனால் வீணாவதையும் , தலை வாழை இலைப்போட்டு பரிமாறும் விருந்தின் சுவையையும் சுவைப்பட தந்திருக்கிறார். பசிக்குதே படிக்கும் போதே ! :)
பெண்களுக்கு புடவை எத்தனை இஷ்டமோ அத்தனை இஷ்டம் அந்த சந்தோஷத்தை அவர்களுக்கு தந்திட கணவன்களின் அழகான மெனக்கிடல்கள் !
அப்படி ஒரு மெனக்கெடல் , சுவைப்பட பதிவாக்கப்பட்டிருக்கிறது.
பாருங்களேன்.எளிமையாக பதிவாக்கிச்செல்லும் சுவைப்படத்தரும் சதீஷ் அவர்களுக்கு நம் வலைச்சரம் சார்பாக வாழ்த்துகள் !

இனி ...

அடுத்த நாள் அடுத்த பதிவர்கள் தான்..

அதுவரை

அன்புடன்

சுமிதா ரமேஷ் . 

16 comments:

 1. ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி நல்வாழ்த்துகள்!..

  ReplyDelete
 2. சுவைபட அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றிங்க... அழகாக அறிமுகங்கள் தொடர வாழ்த்துக்கள்..

  ReplyDelete
  Replies
  1. வெல்கம் , சதீஷ் , தேங்க்யூ :)

   Delete
 3. அறிமுகப்பதிவர்களுக்கு வாழ்த்துக்கள். நாளை சந்திப்போம்.

  ReplyDelete
 4. என்னுடைய வலைப்பூவையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி. தங்களுக்கு கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள் !

  ReplyDelete
  Replies
  1. நன்றி , மிஸஸ் . சாரதா :)

   Delete
 5. இனிய ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்!!!!

  ReplyDelete
 6. இன்றைய பதிவர்களுக்கு வாழ்த்துகள் சகோ

  ReplyDelete
 7. இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. அறிமுகங்களுக்கு வாழ்த்துகள். புதுக்கோட்டையில் நடைபெற இருக்கிற வலைப்பதிவர் சந்திப்பு குறித்து அடுத்த பதிவில் குறிப்பிட்டால் நண்பர்கள் பலருக்கும் வலைச்சரம் மூலம் சென்றடையும். வலைப்பக்கம். bloggersmeet2015.blogspot.com. தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. குறிப்பிட்டிருக்கிறேன் . நன்றி .

   Delete
 9. அருமையான பதிவுகளின் அறிமுகங்கள்.
  நன்றி சுமி. அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் கண்ணன் பிறந்த நாள் வாழ்த்துகளை.

  ReplyDelete
  Replies
  1. தேங்க்யூ ரேவதிம்மா ..

   Delete
 10. வணக்கம்,
  அறிமுகங்கள் நான் தொடர்பவர்கள் தான், அனைவருக்கும் வாழ்த்துக்கள், தொடருங்கள்.

  ReplyDelete
 11. அறிமுகங்களுக்கு வாழ்த்துகள். ஒவ்வொரு தளமாக சென்று படிக்க வேண்டும். உடல்நிலை காரணமாக அதிகம் கணணி முன் இருக்க முடிவதில்லை.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது