07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, March 31, 2010

தமிழுக்கு அமுதென்று பேர் (வலைச்சரம் 3ம் நாள்)

மொ. : என்ன அக்பர் நீங்கள் நேற்று சொன்னதில் பாதி பேரை ஸ்டார்ஜன்னும் அறிமுகப்படுத்தியிருக்கிறாரே.

அக்பர் : ஒரு ஷோரூமில் வேலை பார்க்கும் இருவர் வலைச்சரத்தில் வேறு என்னதான் செய்யமுடியும்.

மொ. : இந்த மொக்கை காரணம் எல்லாம் சொல்லாமல் மேலும் புதியவர்களை அறிமுகப்படுத்துங்கள்.

அக்பர் : உத்தரவு மன்னா. தமிழுக்கு பெருமை ஏற்படுத்திய பலரில் முனைவர் எம். ஏ. சுசீலா அவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இவர் பியோத்தர் தஸ்தயேவ்ஸ்கியின் "குற்றமும் தண்டனையும்" நாவலை மொழிபெயர்த்து பலவிருதுகள் வாங்கியுள்ளார். பிரபல எழுத்தாளர்களின் பாராட்டும் அந்நூலுக்கு கிடைத்துள்ளது.

மொ. : அருமை. அருமை.. நிச்சயம் தமிழுக்கு பெருமைதான்.

அக்பர் : இதே வரிசையில் அடுத்து முனைவர் கல்பனாசேக்கிழார் இவரின் வலைத்தளத்தில் சங்க இலக்கியம், இலக்கணம், தமிழர் திருமண முறை, பழமொழிகள் , சொற்பொழிவுகள் என்று தமிழ் துள்ளி விளையாடுகிறது.

மொ. : அப்படியா. கண்டிப்பாக படித்தாக வேண்டுமே.

அக்பர் : இவர்கள் இருவரையும் அறிமுகப்படுத்திய சரவணனுக்கு நன்றி சொல்லி ஒரு போன் செய்து விடுகிறேன். (சிறிது நேரம் கழித்து) என்ன சரவணன் வீட்டுலையா இருக்கீங்க?

சரவணன் : ஆமாம் அக்பர். வீட்டுல எல்லோரும் ஒரு ஃபங்ஷனுக்கு போயிருக்காங்க.
அக்பர் : அப்படியா. போன் ஃபங்ஷன்ல தானே இருக்கு.
சரவணன் : இல்லைஜி எங்கிட்டதான் இருக்கு.
அக்பர் : அட! அடிச்சா எடுக்கலையே ஆன் பண்ணி இருக்கான்னு கேட்டேன்.அப்புறம் அறிமுகப்படுத்துனதுக்கு ரொம்ப நன்றி சரவணன்.

மங்குனி : மொக்கை போட்டது போதும் அடுத்து யாருன்னு சொல்லுங்க

அக்பர் : அடுத்து கயல்விழி சண்முகம். இவரின் கூர்வாளில் இருந்து புறப்படும் கவிதைகள் ஆழமாக மனதை பதம் பார்க்கிறது உதாரணத்துக்கு இந்த கவிதை.

நாலே வரியில் கவிதையில் கலக்கும் ஜீனும் மனதில் பதிந்த காவியம். ஆனாலும் இவருக்கு பாசம் அதிகம் தான்

அடுத்து பிரேமா மகள்,சுபி வன்யா (சரிதானே) அவர்களின் காதலனைப் பற்றி எழுதியுள்ள கவிதை அருமை. நானும் சாத்தனும் அப்படின்னு வேற பீதி கிளப்புகிறார்.

மொ. : அட எல்லாமே கவிதைகளாக இருக்கிறதே.

அக்பர் : பெண்களே கவிதைகள் தானே மன்னா.

ரெண்டு வரியில் எழுதிய முக்கனிக்குறளை பாரட்டும் நம்ம கோமா, அதே ரெண்டுவரியில் எழுதப்படும் எஸ்.எம்.எஸ் அழிச்சாட்டியங்களையும் அம்பலப்படுத்தியிருக்கிறார்.

மொ. : எனக்கும் விளம்பர எஸ்.எம்.எஸ் தொல்லை தாங்க முடியவில்லை அக்பர்.

மங்குனி : மன்னர் காலத்தில் எஸ்.எம்.ஸா லாஜிக் இடிக்கிறதே.

மொ. :அட மங்குனி அமைச்சரே. நம் மக்கள் காமெடி பதிவில் லாஜிக் பார்க்க மாட்டங்கையா.

அக்பர் : மேனகாசாதியா(Mrs.Menagasathia ) அவர்களின் சமையல் குறிப்புகளை சமைத்துப்பாருங்கள். பின்பு விடவே மாட்டீர்கள் அதன் சுவையை.

புதுப்பதிவர் மின்மினியும் சமையல் குறிப்பு அழகு குறிப்புகள் என்று அசத்துகிறார்.

மேலும் சிறப்பாக கதை, கவிதை, சமையல் குறிப்பு, அனுபவம், சமூகம் என்று எழுதிக்கொண்டிருக்கும் சகோதரிகள் தேனம்மை அக்கா, ஹுசைனம்மா, க.நா.சாந்தி லக்ஷ்மணன், ஜலீலா, ஸாதிகா, சித்ரா, அம்பிகா, சுமஜ்லா, மைதிலி கிருஷ்ணன், ஜெஸ்வந்தி, அனன்யா மகாதேவன், பவி, லக்ஷ்மி SRK, சிநேகிதி, பத்மா, பத்மினி , ஹேமா , மலிக்கா அனைவரும் ஏற்கனவே பிரபல பதிவர்கள் ஆகிவிட்டதால் விரிவாக சொல்லவேண்டாம் என்று நினைக்கிறேன். விரிவாக இங்கே இருக்கிறது.

தேனம்மை அக்கா எல்லோரையும் நீங்களே அறிமுகப்படுத்திட்டா நாங்க யாரை அறிமுகப்படுத்தன்னு கேட்பதால் இத்தோட நிறுத்திக்கிறேன்.

மொ. : எல்லாத்தையும் சொல்லிட்டு இப்படி ஒரு பிட்டா. இனி சொல்றதுக்கு யாரு இருக்கா.

அக்பர் : இன்னும் இருக்காங்க மன்னா, தினம் தினம் வந்து கொண்டு இருக்கிறார்கள் கலக்குவதற்கு.

,
மேலும் வாசிக்க...

Tuesday, March 30, 2010

பதிவர்கள் இமேஜ்! டோட்டல் டேமேஜ் !!( வலைச்சரம் 2ம் நாள் )

மொ.வ : அமைச்சரே இன்றைய நிகழ்ச்சிகள் என்ன?

மங்குனி : அக்பர் இன்று சில பதிவர் நண்பர்களை அறிமுகப்படுத்துகிறார் அரசே.

மொ.வ : ம்... ஆரம்பியுங்கள்.

அக்பர் : மன்னா இதோ இந்த போட்டாவில் இருக்கும் இருவரில் ஒருவர் உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும் மற்றவர் யார் என்று சொல்லுங்க பார்ப்போம்.

மொ.வ : அடடே இது நம்ம பிரதாப் தம்பியாச்சே, ஆமா அவருகிட்ட ஏதோ கேடயம் கொடுக்கிறாரே அவர் யாரு.

அக்பர் : நாசமாப் போச்சு அவர்தாங்க பாரதப்பிரதமர். சிறந்த மொக்கை பதிவர்ங்கிற பட்டத்தை கொடுக்கிறாரு. ஆமா அவரை விட பிரதாப்பை எப்படி தெரியும்?

மொ.வ : இது என்ன கேள்வி அவர் வேர்ல்ட் பேமஸாச்சே, ( நாஞ்சிலார் பந்தாவாக வருகிறார்). தம்பி பிரதாப் சுகமா, பார்த்து எத்தனை நாளாச்சு.
இவர் எழுதும் பட விமர்சனங்களை பார்த்தால் அசந்து விடுவீர்கள். அது போக அவங்க ஊர் ஹீரோவைப்பற்றி எப்படி எழுதியிருக்கிறார் தெரியுமா?

அக்பர் : மன்னா இது டூ மச் நாந்தான் பதிவரை அறிமுகப்படுத்தனும். இவரை ஒரு பெண் தன் குரலால் மயக்கியிருக்காங்க அது தெரியுமா?

மங்குனி : (மன்னரின் காதில்) நாஞ்சில் எக்ஸ்பிரஸை இவர் வைத்துள்ளதாக ஒற்றர்கள் மூலம் தகவல் வந்துள்ளது அரசே. இது தேசத்துரோகம் அல்லவா.

மொ.வ : அட மங்குனி அது ரயில் இல்லையா இவரோட வலைப்பூ. ம் அடுத்து.

அக்பர் : இவர்தான் நாடோடி ஸ்டீபன் குழந்தைகள் மேல இவர் வச்சிருக்கிற அக்கறை ரொம்ப புல்லரிக்குது மன்னா, இவர் புதிர் போடுவதிலும் வல்லவர்.

ஸ்டீபன் : நான் நாடோடி சவுதி கடல் பாலத்தை கண்டுவந்தேன். நம் நாட்டில் அது போல் சிறந்த பாலம் ஏதும் இல்லையே.

மொ.வ : ஹி.ஹி..ஹி.. நம் நாட்டில் கடலே இல்லையே. உங்கள் இருக்கையில் போய் அமருங்கள்.ம் அடுத்து.

அக்பர் : மன்னா அடுத்து கண்ணா. இவர் சிறந்த கட்டிட நிபுணர் குறைந்த செலவில் கட்டிடம் கட்டுவதைப்பற்றி எழுதி வருகிறார். புர்ஜ் கட்டிடத்தையே கட்டியவர் அப்படின்னா பாருங்களேன்.

கண்ணா : வாஸ்து மூலைகளைப்பற்றி பதிவெழுதியும் உங்கள் மூளையேன் இப்படி போகிறது. வாஸ்துவினால் தானே அந்த சுவரை இடித்து வாசல் இடுகிறீர்கள்.

மொ.வ : கிழிஞ்சது போங்க.வயதாகிவிட்டதல்லவா அந்தபுரம் செல்ல சுற்றவேண்டியிருக்கிறது. அதனால் இந்த‌ குறுக்குவழி.

பிரதாப் : அப்போ இந்தபுறம் போக வேண்டியதுதானே. ஹிஹிஹி. யோவ் கண்ணா என் வீடு கட்ட நீதான்வே கொத்தனாரு சொல்லிட்டேன் ஆமா.

கண்ணா : அஞ்சு வருஷமா இதத்தான் சொல்லுதீரு அட்வான்ஸ் கொடுக்க காணோம்.

மொ.வ : சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது நிறுத்த சொல்லுங்கள்.

அக்பர் : மன்னா அதுக்குத்தான் அடுத்து நம்ம டாக்டர் தல சுரேஷ்(பழனியிலிருந்து) வாரார்.

தல சுரேஷ் : காதை பொத்திக்கொள்ளுங்கள் மன்னா.

மொ.வ : என்னது வயிற்று வலின்னா காதை பொத்த சொல்கிறார்?

அக்பர் : என்ன தல பின்னூட்டம் போடுறமாதிரியே புரியாம ஒத்த வரியில சொன்னா எப்படி. மன்னா இவர்கள் பேசுவதை கேட்டதால்தான் உங்களுக்கு சிரிப்பு வந்து வயிற்று வலி ஏற்படுகிறது. காதை பொத்தினால் கேட்டு சிரிக்கமுடியாதல்லவா அதைத்தான் சுருங்கச்சொன்னார்.

இவரை லேசாக நினைக்கவேண்டாம்.தலைவரோட புகழ் கொரியா வரை பரவியிருக்கிறது, அது போக வசிய மருந்து செய்யறதுக்கு விளக்கம் கொடுக்கிற அளவுக்கு மாந்திரீகமும் தெரியும்.

மங்குனி :மன்னா இவர் பதிவருக்கே அதிர்ச்சி கொடுத்த ஆளாச்சே. மக்களுக்கு உபயோகமாக பொது சுகாதாரமும் மருத்துவமும்னு கூட ஒரு பதிவு எழுதுகிறார். சரி அடுத்து சொல்லுங்கள் அக்பர்.

அக்பர் : அடுத்து நம்ம ஸ்டார்ஜன். இவர் செஞ்ச இறால் சாப்ஸை சாப்பிட்டேன் என்ன சுவை தெரியுமா, ரூமில் இருக்கும் போது வட்டார வழக்கில் பேசி அசத்துவார். இரு வார்த்தைகளில் கதையும் சொல்லி விடுவார்.

மொ.வ : அப்போ எனக்கும் இறால் சாப்ஸ் செய்து தாருங்கள் ஸ்டார்ஜன்.

ஸ்டார்ஜன் : செய்யலாம் மன்னா. ஆனா எனக்கு தொடர்ச்சியா பின்னூட்டம் போடனும் சரியா.

மங்குனி : மன்னரிடமே பின்னூட்டமா. அடுத்து யார்.

அக்பர் : அடுத்து சேட்டைக்காரன். இவரை கல்வியமைச்சராக்கினால் பிள்ளைகள் படிப்பில் பிச்சிக்கிட்டு போகும். சிறுவயசுல பட்ட அனுபவத்தை வச்சி பதிவர்களுக்கு ராசிபலன் சொல்றாருன்னா பாருங்களேன்.

மங்குனி : அப்போ இவரை ஆஸ்தான ஜோசியாராக்கவேண்டியதுதானே மன்னா. ம் அடுத்து.

சேட்டை :(மனதுக்குள்) ஆங்குங்க அப்புறம் இருக்குடி..

அக்பர் : இது நம்ம துபாய் ராஜா விமானத்துல இவருக்கு ஏற்பட்ட குளுகுளு அனுபவத்தை அருமையா சொல்லியிருக்கிறார்.பல நாடுகள் சுற்றியவர், குட்டிச்சாத்தனே இவரை கண்டு பயந்து விட்டுடுச்சுன்னா பாருங்களேன்.

மொ.வ : பலே பலே அவ்வளவு பெரிய ஆளா பெயரைக்கேட்டாலே தெரியுதே. ம் அடுத்து.

அக்பர் : இவர்தான் சைவகொத்து புரோட்டா இவரோட பதின்ம நினைவுகளை படிச்சா சிரிச்சி முடியாது. உள்ளங்கையில் உலகத்தை கொண்டுவந்த இவர் யார் ஞானி என்பதையும் அழகாக விளக்கியுள்ளார்.

மொ.வ : ரொம்ப சந்தோசம். ஆனா சீனா ஐயா உங்களுக்கு தந்தது ஒரு வாரம். நீங்க போற வேகத்துக்கு ஒரு மாசம் ஆகும் போல. நாளைக்கு இன்னும் நிறைய புதியவர்களை அறிமுகப்படுத்தனும் சரியா.

அக்பர் : சரி மன்னா.

நண்பர்களே மொக்கை வர்மன் தர்பாரிலே பதிவரை தொடர்ந்து அறிமுகப்படுத்தவா? இல்லை விறுவிறு சுறுசுறுன்னு வேகமாக முடித்து விடலாமா?

மேலும் வாசிக்க...

Monday, March 29, 2010

பின்னூட்டம் தேவையா ? ( வலைச்சரம் முதல் நாள் )

மன்னாதி மன்ன, மன்னர் குலதிலக மொக்கை வர்மன் மன்னன் பராக் பராக் பான்பராக்.

மொக்கை வர்மன் : மங்குனி அமைச்சரே இன்றைய நிகழ்ச்சிகள் என்ன?

மங்குனி : மன்னா தங்களை காண பதிவர் அக்பர் வந்துள்ளார்.

மொ.வ : வரச்சொல்லுங்கள்.

காவலாளி : பிரபல பதிவர் அக்பரை மன்னர் அழைக்கிறார்.

அக்பர் : மன்னா சௌக்கியமா?

மொ.வ : சௌக்கியம். சௌக்கியம்.. ஆமா பிரபல பதிவர் என்பது நீங்க வாங்கிய பட்டமா?

அக்பர் : பதிவர்ன்னாலே பிரபலம்தானுங்களேண்ணா. அதான் அவர் அப்படி சொல்லிட்டார்.

மங்குனி : என்ன நெஞ்சழுத்தம் மன்னனை அண்ணா என்கிறாயே.

அக்பர் : எங்க நாட்டிலே மன்னனை விட அண்ணா தான் பேமஸ்.

மொ.வ : (வந்த உடனேயே அரசியல் பேசுறானே. இவன்கிட்ட ஜாக்கிரதையா இருக்கணும்) டேய் லகுடபாண்டி உண்மையைச்சொல் எதற்காக இவரை பிரபல பதிவர்னு சொன்னாய்?

காவலாளி : அதுவா மன்னர் மன்னா. அவர்தான் 50 காசுகள் கொடுத்து சொல்லச்சொன்னார்.

மொ.வ : அக்பர் இது உமக்கு வெட்கமாக இல்லை.

அக்பர் : இதிலென்ன வெட்கம். சிற்றரசராகிய நீங்க மன்னர் மன்னான்னு சொல்ல மாச சம்பளம் கொடுக்கிறீர்கள். நான் கொடுத்தா கேவலமா.

மொ.வ : ( விட்டா இவன் கண்ணுல விரல உட்டு ஆட்டிடுவான் )உங்களை யார் இங்கே அழைத்தது.

அக்பர் : நம்ம சீனா ஐயாதான் இந்த வாய்ப்பை எனக்கு வழங்கியது. அவர்களுக்கு நன்றிகள்.

மொ.வ : சரிசரி உங்களைப்பற்றி சொல்லுங்கள்.

அக்பர் : 2003 கடைசில கம்ப்யூட்டர் சர்வீஸ் இஞினியர் வேலைக்காக சவுதி வந்தேன் மன்னா. நான் கெட்டது காணாதுன்னு ரெண்டு வருடம் கழித்து நம்ம ஸ்டார்ஜன்னையும் இங்க இழுத்து வந்துட்டேன். ரெண்டு வருடத்துக்கு ஒருக்க ஊருக்கு நாலு மாசம் லீவுல போகலாம். 2007 ல் பதிவுலகம் அறிமுகம் ஆச்சு. வெறும் பின்னூட்ட பதிவரா இருந்த நான் பதிவர்கள் கொடுத்த உற்சாகத்துனால நானும் பதிவராயிட்டேன்.

நகைச்சுவையா எழுதி அடிக்கடி மொக்கை போடறதுதான் எங்க ப்ளான். ஆனா சிக்கல் என்னான்னா வேலையையும் சரியா கவனிக்கனும். பின்ன சாப்பாட்டுக்கு வழியில்லாம போயிடக்கூடாது பாருங்க.

ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது நம்ம ஸ்டார்ஜன் கவிதை, கட்டுரைன்னு அடிச்சு ஆடுனார். நான் ரன்னர் சைடுல நிக்கும் பேட்ஸ்மேன் மாதிரி அவருக்கு கம்பெனி கொடுத்து அவர் ஆடுறத ரசிச்சுக்கிட்டு இருக்கேன். நானும் அப்பப்ப ஒன்னு ரெண்டுன்னு ஆடிக்கிட்டு இருக்கேன்.

மொ.வ : சரி பதிவர்களுக்கு நீங்க சொல்லவருவது என்னா?

அக்பர் : நான் எழுத வந்த புதிதில் அண்ணன் முரளிக்கண்ணன், கோவி கண்ணன்,தல சுரேஷ்(பழனி), நவாஸுதீன், நட்புடன் ஜமால், ஷஃபி, எம்.எம் அப்துல்லா, சீனா ஐயா , ஸ்டார்ஜன் மற்றும் நண்பர்கள் அனைவருமே தொடர்ந்து எனக்கு பின்னூட்டமிட்டு ஆதரவளித்ததுதான் என்னை இந்த அளவுக்கு எழுத வச்சிருக்கு. (பெயர் விடுபட்டவர்கள் மன்னிக்க)

பின்னூட்டத்தோட நன்மைகளை சொல்லிக்கொண்டே போகலாம். காலையில் வேலைக்கும் வரும் போது ரெண்டு பின்னூட்டங்கள் நம்மை பாராட்டி வந்தா அந்த நாளில் நாம் உற்சாகத்துடன் வேலை செய்வது நிச்சயம். அது நல்ல தொடக்கமாகவும் அமையும். கேயாஸ் தியரி மாதிரி ஒரு பின்னூட்டம் என்ன வேலையெல்லாம் செய்யுது பாருங்க.

எல்லோருக்கும் பின்னூட்டம் இடுவது இயலாத காரியம். ஆனால் நாம் வாசித்த பதிவுகளுக்கு அரை நிமிடம் செலவிடுவது கஷ்டமான காரியம் இல்லையே, அது போல நமக்கு பின்னூட்டமிட்டவர்களுக்கு பதில் பின்னூட்டமிடுவதும் நம் கடமைதானே.

எனவே ஓட்டு போடுறீங்களோ இல்லையோ, ஒரு பின்னூட்டம் அது ஒரு ஸ்மைலியாகவோ, அருமைன்னோ எப்படி பட்ட டெம்ளேட் பின்னூட்டமாக இருந்தாலும் போட்டு விடுங்கள் (காசா, பணமா). யார் கண்டா நீங்கள் செலவழிக்கும் அந்த அரை நிமிடம் பலபேர் உற்சாகத்தோடு பல சிகரங்களை தொட வழிவகுக்க கூடும்.

மொ.வ : அப்போ புதியவர்கள் என்ன செய்யனும்?

அக்பர் : புதியவர்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம். இன்றைய பிரபலங்கள் எல்லாருமே நேற்றைய புதிய பதிவர்கள் தான். எனவே உங்களது படைப்புகளை உற்சாகத்தோடு வெளியிடுங்கள்.

அதை விட முக்கியம் பிறரிடம் உங்கள் அறிமுகம். எல்லோரிடமும் பின்னூட்டமிட்டு அறிமுகப்படுத்துங்கள். முடிந்தவரை அதிக பதிவுகளை படித்து பின்னூட்டமிடுங்கள்.

புத்தகம் படிப்பது, டிவி பார்ப்பது, விளையாடுவது, எழுதுவது, சாட்டிங் செய்வது எல்லாமே நல்ல போதைகள். இவை அனைத்துமே நம் வேலைக்கு பிறகுதான் என்பதை மறக்காமல் நினைவில் கொண்டு மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.

மொ.வ : ஸ்ஸ்ஸ்.. யப்பா முடியலை... போதும் நிறுத்துங்கள். மீதியை நாளை பார்க்கலாம்.


அக்பர் : மன்னரே சொல்லிட்டார். நாளை சந்திப்போம்.அதுவரை எனது இந்த இடுகைகளை வாசித்து பாருங்களேன்.

கற்றதும்... பெற்றதும்.

டீக்கடையில் பதிவர்கள்

தருகின்ற பொருளா காதல் ?

தங்களின் கருத்துக்களை தெரிவியுங்கள் நண்பர்களே.

அன்புடன்

அக்பர்.மேலும் வாசிக்க...

ஸ்டார்ஜன்னை வழியனுப்புவதும் - அக்பரை வரவேற்றலும்

அன்பின் சக பதிவர்களே

ஒரு வார காலமாக ஆசிரியப் பொறுப்பேற்ற நண்பர் ஸ்டார்ஜன், ஏற்ற பொறுப்பினை பொறுமையாக நிறைவேற்றி, மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். அவர் ஆறு இடுகைகள் இட்டு - பல புதிய பதிவர்களை அறிமுகப் படுத்தி - ஏறத்தாழ 250 மறுமொழிகள் பெற்று - கடமையைச் சிறப்பாகச் செய்த மகிழ்ச்சியுடன் விடை பெறுகிறார்.

அவரை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறோம்.

நல்வாழ்த்துகள் ஸ்டார்ஜன்

இன்று துவங்கும் இவ்வாரத்திற்குப் பொறுப்பேற்க - குறுகிய கால அவகாசத்தில் - இணக்கம் தெரிவித்து - வருகிறார் அருமை நண்பர் அக்பர். இவர் ஸ்டார்ஜன்னின் இனிய நண்பர். சவுதி அரேபியாவில், ஏழாண்டு காலமாக கணினிப் பொறியியலாளராகப் பணியாற்றுகிறார். சிநேகிதன் என்ற வலைப்பூவில் - குறைந்த காலத்தில் ஏறத்தாழ 75 இடுகைகள் இட்டிருக்கிறார்.

அருமை நண்பர் அக்பரை வருக வருக - புதிய பதிவர்களை அறிமுகப் படுத்துக என வாழ்த்தி வரவேற்பதில் பெருமை அடைகிறேன்,

நல்வாழ்த்துகள் அக்பர்

நட்புடன் சீனா
மேலும் வாசிக்க...

Sunday, March 28, 2010

நன்றிகளுடன் உங்கள் ஸ்டார்ஜன்.

அன்புமிக்க நண்பர்களே!!

இன்று வலைச்சரத்தில் கடைசி நாள், ஞாயிற்றுக்கிழமை. உங்களிடம் இருந்து விடைபெறும் நாள். இந்த ஒரு வாரமும், நான் வெளியிட்ட அனைத்து இடுகைகளும் ரொம்ப விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

எனக்கு வாய்ப்பு அமைத்துக் கொடுத்த சீனா அய்யாவுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு ஊக்கமும் உற்சாகமும் கொடுத்து வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

அக்பர், நட்புடன் ஜமால், ஸாதிகா, பத்மா, பிரபு.எம், கட்டபொம்மன், சித்ரா, ராகவன் நைஜீரியா, நீச்சல்காரன், ஜோதிஜி, பாலாசி, தேனக்கா, ராஜூ, ஆடுமாடு சார், பிரபாகர், சைவகொத்துப்பரோட்டா, முனைவர்.இரா.குணசீலன், துபாய் ராஜா, றமேஸ்-Ramesh , T.V.ராதாகிருஷ்ணன், கடையம் ஆனந்த், ராமலக்ஷ்மி, சேட்டைக்காரன், சிவாஜி சங்கர், SUREஷ் (பழனியிலிருந்து), விஜய், இராமசாமி கண்ணண், கண்ணா., Mrs.Menagasathia , கோவி.கண்ணன், பிரியமுடன்...வசந்த், கார்த்திகைப் பாண்டியன், சே.குமார், வானம்பாடிகள், அனானிமஸ், 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║, சுல்தான், அபுஅஃப்ஸர், நண்டு@நொரண்டு -ஈரோடு, நாஞ்சில் பிரதாப், நேசமித்ரன், கயல், மோகனன், தேவன் மாயம், அன்புடன் மலிக்கா, மதார், அமுதா, முரளிகுமார் பத்மநாபன், வெ.ராதாக்கிருஷ்ணன் சார் , AVMS Bags Private Limiteட் ,ஜலீலா, நாமக்கல் சிபி, ஹுஸைனம்மா, க.நா.சாந்தி லெட்சுமணன்., அநன்யா மஹாதேவன், மைதிலி கிருஷ்ணன், மின்மினி, ஜெஸ்வந்தி, ற்.கோபி, பவி , புதுகைத் தென்றல், என்.ஆர்.சிபி, திவ்யாஹரி, வெங்கட், மதுரை சரவணன், ஜெட்லி, A.சிவசங்கர், ஷங்கி, ஸ்ரீ.கிருஷ்ணா, ஷியாம், நாளும் நலமே விளையட்டும் சரத், மாதேவி, ஜெரி ஈசானந்தன்., நாடோடி ஸ்டீபன், ஜெய்லானி, ட்ரீமர், ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫, .....etc .


இந்த பட்டியலில் விடுபட்ட அனைவருக்கும் மேலும் சிறப்பாக கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் அனைத்து நண்பர்களுக்கும் தோழிகளுக்கும் பெரியோர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நனறிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


வலைச்சரத்தில் குறிப்பிடபட்டுள்ள அனைவருக்கும், அவர்களின் எழுத்துக்கள் மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

வலைச்சரத்தில் வாய்ப்பு வழங்கிய சீனா அய்யா அவர்களுக்கும் வலைச்சர குழுவினருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மீண்டும் ஒருமுறை வாய்ப்பு வழங்கபட்டால் இந்த வாரம் சிறப்பாக அமைந்ததுபோல் வரும் வாரங்களும் சிறப்பாக அமைய பாடுபடுவேன்.


மீண்டும் ஒரு வலைச்சர வாரத்தில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன்.

விடைபெறுகிறேன் நண்பர்களே !!

நன்றிகளுடன் உங்கள் ஸ்டார்ஜன்.

உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.
மேலும் வாசிக்க...

Saturday, March 27, 2010

ஸ்பெஷல் சனி - வலைச்சரத்தில்

அன்புமிக்க நண்பர்களே!!

இன்று வலைச்சரத்தில் ஆறாம் நாள், சனிக்கிழமை. என்னடா வெள்ளிகிழமையைக் காணோமே என்று நீங்கள் கேட்பது தெரிகிறது. நேற்று எனக்கு உடல்நலம் சரியில்லை. அதனால் என்னால் இடுகை எழுதமுடியவில்லை. இப்போது பரவாயில்லை, நலம். சுவாரசியமான, வித்யாசமான பக்கங்களை இந்த வலைச்சரம் கோர்க்கப் போகிறது.

சேட்டைக்காரன்

இந்த வலைப்பக்கத்தின் ஒரே நோக்கம் நகைச்சுவை. சிரிங்க சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க. அருமையான எழுத்து நடையில், வலைப்பூவில் காமெடி ராஜாங்கமே நடத்தியிருக்கிறார். சில‌ பக்கங்களை மட்டுமே குறிப்பிட முடியாத நிலையில் நான் உள்ளேன். இவர் எழுதிய அனைத்து இடுகைகளும் சுவாரசியத்துடன் கூடிய நகைச்சுவை இடுகைகள்.

இவர் கடந்த 3 மாதங்களுக்குப் பின்தான் எழுத வந்தார். வந்த அன்னைக்கே கண்ணுல கத்திய‌ விட்டுட்டுனே என்கிறமாதிரி அனைத்துமே சிரிப்பலைகள். இவர் இப்போது 100 இடுகைகள் வெளியிட்டுள்ளார்.

வாங்க நாம் அனைவரும் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வோம்.


சைவகொத்துப்பரோட்டா

இந்த வலைப்பக்கமும் சுவாரசியமான காமெடி கலந்த இடுகைகளை அடிப்படையாக கொண்டது. நிறைய சுவாரசியமான இடுகைகள் உண்டு. கவிதை, கட்டுரை,திரைப்பார்வைகள் அடங்கியுள்ளன. திரிரோசஸ்,சேட்டைக்காரன், சாமி, மறுஜென்மம்,இதெல்லாம் திரைப்படங்கள் அல்ல. சுவாரசியமான இடுகைகள். நீங்களும் ஒரு தடவை சென்று வாருங்களேன்.

பனித்துளி சங்கர்.

சங்கர், சங்கரின் பனித்துளி நினைவுகள் என்ற பெயரிலும் RDX அந்நியன் என்ற பெயரிலும் உள்ள வலைப்பக்கங்களில் எழுதி வருகிறார். இது ஒரு தகவல் களஞ்சியம். செய்திகள், கட்டுரைகள் நிரம்பி வழிகின்றன. தகவல்கள் அறிந்து கொள்ளலாம்.

சுந்தர வடிவேலு.

இவர் 100 இடுகைளுக்குமேல் எழுதியுள்ளார். மனசு என்பது எதற்கும் தயாராகிவிடும். இசையை பற்றிய விளக்கம்,பாட்டி சுட்ட வடைக்கதையில் வரும் காக்கா என்ன ஆனது? தெரியலியே... குழந்தையின் வருகை ஒரு தென்றல் வருவதை போன்றது. தென்றல் காற்றை அனுபவிங்க. அபத்தங்களையெல்லாம் பட்டியல் போட்டுள்ளார். இப்படி நிறைய சுவாரசியங்கள் உண்டு.

மங்குனி அமைச்சர். ( ஷாஜஹான் )

மீண்டும், காமெடி கல‌ந்த சுவாரசியங்கள் நிறைந்த இடுகைகளை உங்கள் முன் சமர்ப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். சீரியஸ் போலிசை பார்த்திருப்பீங்க. சிரிப்பு போலிஸ் மருதமலைக்கு அப்புறம் மங்குனிஅமைச்சராக உங்கள்முன்.

கட்டபொம்மன்

இதோ உங்கள்முன் மன்னர் கட்டபொம்மன் பராக் பராக். அறிமுகம் கொடுக்கிறார் பாருங்க.

மயில் ராவணன்

கதைகள், கவிதைகள், செய்திகள், நிறைந்த சூப்பர் கதம்பம். சென்று வாருங்களேன்.

ராமசாமி கண்ணன்

இவர் சாத்தூர்மாக்கான் என்ற வலைப்பூவில் எழுதி வருகிறார். வாழ்நாள் கனவு இப்படி அமைந்தால் எனக்கு மிக்க சந்தோசம். வாசிக்கபடாமலே ஒரு கடிதமா.. காதல்கதை இப்படித்தான் இருக்குமோ?...

சே.குமார்

இவர் சிறுகதைகள், நெடுங்கவிதைகள், மனசு, கிறுக்கல்கள் பக்கங்களில் எழுதி வருகிறார். கதைகளில் மழலை இதயம், மனசு, குடும்ப விளக்கு, ஆசிரியர் இப்படி நிறைய அருமையான கதைகள் உண்டு.

சிவாஜி சங்கர்

சுவாரசியமான இறகுகளை பற்றி அறிந்து கொள்ள இங்கே வந்து போகலாமே..

ட்ரீமர் ( ஹரிஷ் நாராயண் )

சிறுகதைகள், கவிதை சுவாரசியமான தகவல்கள் நிறைந்த இந்த டிரீமர் நமக்கு ஒரு புதுவிதமான‌ அனுபவத்தை கொடுக்கிறது.


தொடந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்


மீண்டும் நாளை சந்திக்கிறேன்...

உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.
மேலும் வாசிக்க...

Thursday, March 25, 2010

அதிரடி வியாழன் - வலைச்சரத்தில்

அன்புமிக்க நண்பர்களே!!

இன்று வலைச்சரத்தில் நான்காம் நாள்,வியாழன். இன்று வித்யாசமான எண்ணங்களை கொண்ட வலைப்பக்கங்களை தேடி இந்த வலைச்சரம் செல்கிறது.


கண்ணா

வித்யாசமான பக்கங்களை கொண்டது இவரது வலைப்பூ. சூடான பூமியைகுளிராக்க என்ன செய்யணும்?.. தெரிஞ்சிக்க வாங்க. வீடு கட்டணுமாஉங்களுக்கு .. பிடியுங்க கண்ணாவை!!. வாஸ்து பிராப்ளமா ...


மதுரை சரவணன்

கல்விக்கான ஒரு சிறப்பான வலைப்பூ இது. பிள்ளைகள் படிப்பு, குழந்தைகளின் பிரச்சனைகள் நல்ல மதிப்பெண்கள் பெற செல்லுங்கள் மதுரை சரவணனை தேடி. நமக்கு எட்டாதவிஷயங்களை எட்டாவது அறிவு கதைகளில் தேடலாம்.

வெங்கட்

கோகுலத்தில் சீதைதான் கேள்வி பட்டிருக்கிறேன். இங்கே சூரியன். வெளிச்சம் ரொம்ப பிரகாஷமா இருக்கு. ஆடு சைவமா?..அசைவமா?.. தெரியலியே எனக்கு.. ஹார்லிக்ஸ் * காம்ப்ளான் பட்டிமன்றம். இப்படி நிறைய சுவாரசியங்கள் உண்டு.

மேலும் இவரது பக்கத்தில் சுவாரசியமான இடுகைகள்

ஒரு கலக்கல் கல்யாண பத்திரிக்கை..!
** L O V E...!!
இது எந்த ஊரு Dictionary..??
நாட்டாம.! தீர்ப்ப மாத்தி சொல்லு.!


ஷங்கி

அழகு நல்லாருக்கும் அபத்தமா.. பூலோக சொர்க்கம் அமெரிக்காவாம். தெரியலியே.. கடவுளையே கனவு காணவைத்தவர்.


நாளும் நலம் விளையட்டும் ( சரத் )

கணனிக்கு ஏற்றமொழி என்ன?.. விளக்கு வெளிச்சம் எப்படி இருக்கும்?. பொருளாதாரத்தில் முன்னேற வழிகள் சொல்லும் இடுகை. எலி ஜோசியம் எப்படி இருக்கும் ?.. போன்ற கேள்விக்களுக்கு சென்று வாருங்கள்.

ஷியாம்

அமெரிக்காவில் உள்ள பழக்கவழக்கங்கள், நடைமுறை, சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்களை பற்றி சொல்லும் இவர், வழியும் காட்டுகிறார் இங்கே. சென்று வாருங்களேன் ஒரு தடவை.

நாடோடி ( ஸ்டீபன் )

வாழைப்பழ காமெடி நமக்கு தெரியும். விதவிதமான வாழைப்பழங்களை பற்றி சொல்லுகிறார். ஆபிஸ் எக்ஸல் பற்றி சொல்லித் தருகிறார் இங்கே. ஆள்தேவை? விளம்பரங்களினால் என்ன நடக்கும்?. அருமை

A. சிவசங்கர்

வித்யாசமான சிந்தனைகளை கொண்ட பக்கங்கள். புரூஸ்டட் சாப்பிடும்போது கவனிக்க.. வேலை இல்லாத குறையே இனி இல்லை.

ஸ்ரீ.கிருஷ்ணா

கம்யூட்டரை பாதுகாக்க என்ன் சொல்கிறார்?. நல்ல நல்ல வழிமுறைகள். அருமையான தொழில்நுட்ப பதிவுகள் கொண்ட வலைத்தளம். சென்று வாருங்களேன்.

சசிக்குமார்

இங்கே இருக்கும் கேக்குகளை பார்க்கும்போது சாப்பிடத் தோணுது. எபிசிடி யை இவர் வித்யாசமாக கற்றுத் தருகிறார்.


தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

மீண்டும் நாளை சந்திப்போம்...

உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.
மேலும் வாசிக்க...

Wednesday, March 24, 2010

காவிய புதன் - வலைச்சரத்தில்

>இன்று வலைச்சரத்தில் மூன்றாவது நாள், புதன்கிழமை. பொண்ணு கிடைச்சாலும் புதன் கிடைக்காதுன்னு பெரியவங்க சொல்வாங்க‌. எல்லா நல்ல காரியங்களும் புதன்கிழமையில் வைத்தால் மனதுக்கு சந்தோஷம் என்று சொல்பவர்கள் நிறையபேர் உண்டு. சரி விஷயத்துக்கு வருவோம்.

பெண்கள் இன்று எல்லாத் துறைகளிலும் தங்கள் திறமைகளை நிலைநாட்டி வருகிறார்கள். வலைப்பக்கங்களில் தனது எழுத்துக்கள் மூலம் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார்கள். ஆம், இன்று பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் பெண்களை மையமாக கொண்ட வலைப்பக்கங்கள், நமது வலைச்சரத்தை அலங்கரிக்கப்போகின்றன.

ஸாதிகா மேடம்

பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் பெண்கள் இங்கே பளிச்சிடுகிறார்கள்.

சாப்பிட சாப்பிட திகட்டாத ஒரு களஞ்சியமே இங்கே காணலாம். ஆபிஸில் முன்னேறக்கூடிய வழிகளையும் ஸாதிகா சொல்லிருக்காங்க.

சித்ரா டீச்சர்

தலைப்புதான் வெட்டிபேச்சு. ஆனா விவரம் ரொம்ப ஜாஸ்தி. நிறைய பயனுள்ள கட்டுரைகள் இவரின் பக்கத்தை அலங்கரிக்கின்றன. அமெரிக்கா பொளாதாரம் எப்படி இருக்குன்னு இவரிடம் கேட்டுத் தெரிஞ்சிக்கலாம். அதேமாதிரி அமெரிக்காவில் ஷாப்பிங் போகும்போது சித்ராவிடம் ஆலோசனை கேட்டு செல்லலாம். திருநெல்வேலின்னா அல்வாதான் நமக்கு தெரியும். இவர் புட்டுபுட்டு வைக்கிறார்.

அம்பிகா

சாதனை பெண்கள் இவரது வலைப்பூவை அலங்கரிக்கின்றனர். அன்பையும், ஆதரவையும் வேண்டி நிற்கும் ஒரு சாதனை பெண் இங்கே மிளிர்கிறார்.

கணவனால் கொடுமைக்கு ஆளான‌ பெண்ணை பற்றி இங்கே. உங்க வீட்டுல ரோஜா செடி வளரணுமா?... கேளுங்க அம்பிகாவிடம்.

மைதிலி கிருஷ்ணன்

பேய்களை பற்றிய ஆய்வு நடத்திவருகிறார் மைதிலி கிருஷ்ணன். எதுவும் சந்தேகம் என்றால் கேளுங்க. வெளியூர் சென்று படிக்கும் பெண்களா நீங்க? மைதிலி என்ன சொல்கிறார் என்று கேட்டுவிட்டு செல்லுங்கள்.

ஜெஸ்வந்தி

தண்ணீரின் அவசியம் என்னவென்று தெரிஞ்சிக்கலாம் வாங்க. இரண்டரை அடி உள்ள மனிதர் என்னவானார்?...

அனன்யா மகாதேவன்

யார்யாரெல்லாம் பிரபலமாகணுமோ அவங்களெல்லாம் பாலக்காட்டு பக்கம் வாங்க.. ஹிந்தியில் வெளுத்து வாங்குகிறார். நெட்லெயிருந்து சுடுவாங்கன்னு கேள்விபட்டிருக்கிறேன். சுட்ட பழத்தையும் சுட்டிருக்கிறார். :‍-)))

லக்ஷ்மி SRK

வட இந்திய உணவுகள் இவருக்கு அத்துப்படி. வித்யாசமாக சாப்பிடணுன்னு தோணிச்சின்னா வாங்க இங்கே.

சிநேகிதி

விதவிதமான நாக்குக்கு ருசியா சமைத்து சாப்பிட விரும்புபவர்கள் வரலாம் இங்கே தயக்கமின்றி.. பொதுவா பெண்கள் பதிவுகளில் பெண்களுக்கு டிப்ஸ் நிறைய சொல்வாங்க. இவர் ஆண்களுக்கும் சொல்கிறார். அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள் நிறைந்த இந்த இல்லம் ஒரு இனிய இல்லமே

பத்மா

இருளின் நிறம் என்ன?.. கேட்கலாம் வாங்க.. வித்யாசமான பக்கங்கள் கொண்ட காகித ஓடம்

பத்மினி

வித்யாசமான எண்ணங்களை கொண்ட வலைப்பூவுக்கு சொந்தக்காரர். கம்ப்யூட்டரை கதை எழுத பணிக்கிறார். பேய் பங்களாவில் என்ன நடந்தது?.. தெரியலியே.. தெரிந்து கொள்ள மந்திரவாதியின் மனைவியிடம் கேட்போமா..

க.நா.சாந்தி லக்ஷ்மணன்

அந்தமானின் அழகை இவர் வலைப்பூவில் காணலாம். தமிழோசை ஒலிக்கச் செய்திருக்கிறார். அழைப்பதில் இத்தனை அர்த்தம் உண்டா?..

ஜலீலா

எல்லாவிதமான சமையலாகட்டும், கட்டுரைகள், அழகு குறிப்புகள், ஆல்இன்ஆல் ஜலீலாவிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். தம் பிரியாணி வாசம் இங்கே மூக்கை துளைக்குது..

பவி

வண்ணவண்ணமான எண்ணங்களை கொண்ட வலைப்பூ இது. பயனுள்ள டிப்ஸ், அருமையான கருத்துக்களை கொண்ட பக்கங்களை காணலாம். மயில் ஆடும் அழகே தனிதான்.

ஹூசைனம்மா

இவரின் சொல்வதை பார்த்தா தண்ணீர் பஞ்சமே இருக்காதுபோல.. பரம்பரை படமா இல்லையே!! ஓ ஜீன்ஸ்.. இவருக்கு பிடிக்கும் பெண்களை எல்லோருக்கும் பிடிக்கும். கலக்குறாங்க ஹூசைனம்மா. வித்யாசமான பக்கங்கள் சென்று வாருங்களேன்.

தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

மீண்டும் நாளை சந்திப்போம்....

உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.

,


மேலும் வாசிக்க...

Tuesday, March 23, 2010

காதல் செவ்வாய்- வலைச்சரத்தில் இரண்டாம் நாள்

அன்புமிக்க நண்பர்களே!!

இன்று வலைச்சரத்தில் இரண்டாம் நாள். இன்று செவ்வாய்கிழமை. செவ்வாய் என்று சொல்லிப்பாருங்க, என்ன தோணுது?.. காதல் காதல். காதலுக்கும் செவ்வாய்க்கும் ரொம்ப தொடர்பு உண்டு. காதல் என்றாலே கவிதை தானா வந்துவிடும். காதலைப் பொறுத்தவரை பெண்கள் அவ்வளவு சீக்கிரமா வெளிப்படுத்திவிடமாட்டாங்க. ஆனால் அதன் ஆழம் ரொம்ப மிகுதியாக இருக்கும். காதலை மையமாக கொண்ட வலைப்பூக்கள் இன்று நமது வலைச்சரத்தை அலங்கரிக்கப்போகின்றன.

முதலில் பெண்கள் எழுதிய வலைப்பூக்களிலிருந்து ஆரம்பிக்கலாம்.


தேனக்கா (தேனம்மை லக்ஷ்மணன்).

பொதுவா நாம்தான் பூக்களைத்தேடி போவது வழக்கம், ஆனால் இவரைத் தேடி பூக்களே வருகிறதே!!. செப்டம்பர் மாதம், அக்டோபர் மாதம், நவம்பர் மாதம் பூக்களுக்கு உகந்த மாதமோ!! தெரியலியே.. என்னவள் என்னிடம் எப்போதும் கேட்கும் வார்த்தை எப்போ வருவ? என்றுதான்.


ஹேமா

காதலை வெளிப்படுத்தும் நாள் இதுதானாம்.


அமுதா மேடம்

இவரது எண்ணங்களிலிருந்து நிறைய தேடல்களை காணலாம். ஆனால் இவரது தேடல் வேற ஒன்றாகவல்லவோ இருக்கிறது.


மலிக்கா

எண்ணங்களை வண்ணமயமாக்கும் இவரது வலைப்பூவில் காதலின் தேடல் மழைச்சாரல் வீசும் நேரத்தில் தென்றலாய் மெல்ல பயணித்து கரிசல்காட்டின் வழியே செல்கிறது.


மதார்

காதலில் உணர்வும் புரிந்துகொள்ளலும் காதலின் வெற்றிக்கு காரணமாம்..


கயல்விழி சண்முகம்

கூர்வாள் தலைப்பை பார்த்து பயந்துட்டேன்... எழுத்துக்களில் கூர்மை, கவிதை தொகுப்புகளில் நம்மை தொலைத்துவிடுவோம். அந்தளவுக்கு கவிதை களஞ்சியம் இவரது வலைப்பூ. நீங்களும் ஒருதடவை சென்று வாருங்களேன்.


காயத்ரி சித்தார்த்

நாம் எல்லோரும் இப்போது பயணிப்பது தற்கால காதல் திசையில். ஆனால் இவரது பயணமோ சங்ககால காதலின் திசையை நோக்கி.. நாமும் அந்த திசையில் செல்வது எப்போ?..


பாக்தாத்திலிருந்து பூங்குன்றன்

காதல் மிக வலிமையானதாம்; குழந்தைகள் ரைம்ஸ்தான் சொல்வாங்கன்னு கேள்விபட்டிருக்கிறேன். ஆனால் இவரது கவிதையில் குழந்தைகளும் கவிபாடுகின்றனர்.


க.பாலாசி

இரண்டு மலர்கள் ஒன்றோடொன்று சந்திக்கும்போது பேசும்மொழி நம்ம யாருக்கும் தெரியாது. இவருக்கு எல்லா மொழியும் அத்துப்படி.


மோகனன்

கடிகாரமும் காதலிக்கிறது இவரது கவிதையில். அதிகாலை நேர காற்றும் கவிபாடுமாம் இவர் கவிதையில்..


தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

மீண்டும் நாளை சந்திப்போம்....


உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.

,
மேலும் வாசிக்க...

Monday, March 22, 2010

வலைச்சரத்தில் முதல் நாள் - உங்கள் ஸ்டார்ஜன்.

அன்புமிக்க நண்பர்களே!! எல்லோரும் நலமா..

என் உண்மையான பெயர் சேக் மைதீன். நான் இப்போது சவூதி அரேபியாவில் கணனி பழுதுபார்க்கும் வேலை செய்து வருகிறேன். எனக்கு சொந்த ஊர் திருநெல்வேலி. 2 வருடத்துக்கு ஒருமுறை தாயகம் சென்று திரும்புவேன்.

நான் ஸ்டார்ஜன் என்ற புனைப்பெயரில் நிலா அது வானத்து மேல! என்ற வலைப்பக்கத்திலும் நாளைய ராஜா என்ற வலைப்பக்கத்திலும் எழுதி வருகிறேன். நான் இதுவரை நிலா அது வானத்துமேல யில் 134 இடுகைகள் எழுதியுள்ளேன்.

இன்று முதன்முதலாக வலைச்சரத்தில் ஆசிரியராக வாய்ப்பு அமைந்துள்ளது.இந்த பதிவுலகில் எழுதவந்த பின்னர் எத்தனை எத்தனையோ நண்பர்களாக நீங்கள் அனைவரும் கிடைத்துள்ளீர்கள். எனக்கு எழுதுவதற்கு ஊக்கமும் என்முயற்சிகளுக்கு ஆதரவும் கொடுத்த உங்கள் அனைவருக்கும் என்னவென்று நன்றிகள் சொல்வதென்றே தெரியவில்லை.

நான் நாளையராஜாவில் பதிவு எழுத ஆரமபித்தவுடன் எனக்கு முதன்முதலாக என் பக்கத்துக்கு வந்து வாழ்த்திய பழனி டாக்டர் சுரேஷ் அவர்களை மறக்கவே முடியாது. அதுபோல நிலா அதுவானத்துமேல யிலும் அவர்தான் முதல் பின்னூட்டம் இட்டார். அதுமாதிரி எனக்கு முதன்முதலாக பாலோயர் ஆக ஆனவர் என் இனிய நண்பர் முரளிகண்ணன் அவர்கள்.

தொடர்ந்து புதியவர்களுக்கு தன்னுடைய ஆதரவையும் அவர்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும் அண்ணன் கோவி.கண்ணன் அவர்களும், நான் வலையில் எழுதப் போகிறேன் என்றதும் எனக்கு நம்பிக்கையும் ஆதரவும் கொடுத்த என்னுடன் பணிபுரியும் என்னுடைய அருமை நண்பருமான‌ அக்பரும் மறக்க முடியாதவர்கள்.


நான் உங்களில் ஒருவனாக எழுதுவதற்கு முக்கிய காரணம் சிறுவயதுமுதல் ஆர்வம் மிகுதியாக உண்டு. எங்கள் பகுதியில் உள்ள பள்ளிவாசலின் பேஷ் இமாம் மர்ஹூம் பத்ஹுல்லாஹ் ஹஜரத் அவர்கள் தினமும் பிள்ளைகளுக்கு அரபிமொழியில் குர்ஆன் ஓதுவதற்கு கற்றுக் கொடுப்பார்கள். நான் தினமும் அவரிடம் குர்ஆன் ஓதுவதற்கு அதிகாலையில் செல்வேன். ஹஜரத் அவர்கள் பாடங்கள் மட்டுமல்லாமல் பொதுவான விஷயங்களை பற்றி பிள்ளைகளுடன் விவாதிப்பார்.

அவர் ஒரு எழுத்தாளரும் கூட, அவர் பல சமூகநல கட்டுரைகள் பத்திரிக்கைகளுக்கு எழுதுவார். அப்போது எனக்கு, அவர் எழுத்தின்மேல் ஈர்ப்பு ஏற்பட்டது எனலாம். அவர் எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்தார். அவர் எழுதிக் கொடுத்து நான் பள்ளி ஆண்டுவிழாவில் பேசி முதல்பரிசு பெற்றேன். தொடர்ந்து பள்ளிப் போட்டிகளில் பரிசுபெறும்போதெல்லாம் ஆதரவும் நம்பிக்கையும் கொடுத்தவர்.


உங்களுக்கு என் எழுத்தின்மேல் ஈர்ப்பு ஏற்பட்டதுக்கு இவரும் ஒரு காரணம். மேலும் என்னை பற்றி தெரிந்து கொள்ள நண்பர் ஷங்கி அழைத்த நானும் என் வரலாறும் தொடர்பதிவில் காணலாம்.

என்னுடைய எல்லா இடுகைகளும் உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகின்றேன்.

எனக்கு பிடித்த என் அறிமுக இடுகைக்கு பின்னர் திகில் அனுபவ இடுகையும் எனக்கு பிடிக்கும்.

மறக்க முடியாத நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் பள்ளிகால நினைவுகளும் பதின்ம வயது நினைவுகளும் என்னை வந்துவந்து மறுபடியும் அந்தகால கட்டத்துக்கு செல்ல மாட்டோமா என்று ஏங்க வைக்கும்.

சினிமா விமர்சனங்கள் நான் எழுதியிருந்தாலும் இது சிந்தனை செய்யவைத்திருக்கிறது.

கவிதைகளில் நான் மூழ்கியது இதுவே முதல்முறை...

தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் கேள்வி பதில் இடுகைகளில் இதுவும் ஒன்று.

தொடர்ந்து உங்கள் பூக்களைத் தூவுங்கள், அதை வலைச்சரமாக தொடுக்க ஆவலாக உள்ளேன்.


உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.


,
மேலும் வாசிக்க...

Sunday, March 21, 2010

நன்றி முரளி பத்மநாபன் - வருக வருக ஸ்டார்ஜன்

அன்பின் சக பதிவர்களே !


கடந்த ஒரு வார காலமாக ஆசிரியப் பொறுப்பேற்ற அருமை நண்பர் முரளி பத்மநாபன், ஏற்ற பொறுப்பினை நிறைவாக நிறைவேற்றி நம்மிடமிருந்து விடை பெறுகிறார். அவர் கடும் பணிச்சுமையின் இடையிலும் ஆறு இடுகைகள் இட்டு ஏறத்தாழ நூற்றி இருபது மறு மொழிகள் பெற்று மன நிறைவுடன் விடை பெறுகிறார். தமிழ் மணத்தில் இணைப்பதில் சில பிரச்னைகள் இருந்ததால் அதிக மறுமொழிகள் வரவில்லை என்ற வருத்தமும் அவருக்கு உண்டு.


அறிமுகப் படுத்தப்பட்ட முறை நன்று. பல புதிய பதிவர்கள் - ஊக்குவிக்கும் வண்ணமாக அறிமுகப்படுத்தப் பட்டனர். அவர்களும் மகிழ்ந்தனர். நண்பர் முரளியை வலைச்சரம் குழுவினர் சார்பாக வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமிதம் கொள்கிறேன்.

நல்வாழ்த்துகள் முரளி !


அடுத்து நாளை 22ம் நாள் துவங்கும் வாரத்திற்கு ஸ்டார்ஜன் என்ற புனைப் பெயரில் எழுதி வரும் நண்பர் சேக் மைதீன் ஆசிரியப் பொறுப்பேற்க இசைந்துள்ளார். இவர்
"நிலா அது வானத்து மேல! " என்ற வலைப்பதிலும் "நாளைய ராஜா" என்ற வலைப்பதிலும் எழுதி வருகிறார். வலைப்பதிவு துவங்கி ஓராண்டே முடிவுற்ற நிலையில் நூற்று முப்பத்து மூன்று இடுகைகள் இட்டிருக்கிறார்.

திருநெல் வேலியைச் சார்ந்த இவர் தற்போது சவூதி அரேபியாவில் கணினி பழுது பார்க்கும் பணியினைச் செய்து வருகிறார்.


அருமை நண்பர் ஸ்டார்ஜன் என்ற சேக் மைதீனை வருக! வருக! என வரவேற்று வாழ்த்துவதில் வலைச்சரம் குழுவினர் சார்பாக பெருமை கலந்த மகிழ்ச்சியினை அடைகிறேன்.


அனைவருக்கும் நல்வாழ்த்துகள்


நட்புடன் சீனா

மேலும் வாசிக்க...

Saturday, March 20, 2010

நன்றி மக்களே!

         கொஞ்சம் கைதட்டல் கம்மிதான், இருந்தாலும் பரவாயில்லை தட்டியவரை வளர வேண்டியதுதானே.  இன்னும் உயரம் வளர்ந்தபின்னே தெரியும் தூரம், இன்னும் அதிகம். கொஞ்சம் பணிச்சுமை அதிகம், வலைச்சரத்தில் எழுத வாய்ப்பு கிடைக்காதா என்று எத்தனையோ நாள் நினைத்ததுண்டு. ஆனால் இன்று வாய்ப்பு கிடைத்தும் அதை முழுமையாக பயன்படுத்திக்கொண்டேனா? என்றால் என்னை பொருத்தவரை இல்லைதான். ஆனால் என் நண்பர்களை என்னால் முடிந்தவரை ஒரு அடி முன்னால் கொண்டுவர எடுத்த முயற்சியில் நிச்சயம் வெற்றிதான், எனக்கு.


             அடுத்தவாரம் ஆசிரியராக பணியேற்று எழுத இருக்கும் எவருக்கும் என் வாழ்த்துக்கள், எனக்கு கொடுத்ததைவிட அதிகமாய் இவருக்கு கொடுங்கள், உற்சாகத்தை.             இந்த ஐந்து நாட்களிலும் எனக்கு பின்னூட்டங்களின் மூலமாகவும் போன் செய்தும் ஊக்குவித்த நண்பர்கள் அனைவருக்கும், நன்றி. இனி வழக்கம்போல நம்ம பக்கத்துலயே  மொக்க போட கிளம்புறேன், பை, பை ஆல் ஆஃப் யூ.

மேலும் வாசிக்க...

Friday, March 19, 2010

சினிமா சினிமா சினிமா

               ஆம், பாதி பேர் கரெக்டா சொல்லிட்டிங்க, சினிமாதான். வெள்ளிகிழமைன்னா உடனே பசங்க பாதிப்பேர் எனக்கு போன் பண்ணுவாங்க “மச்சி, எனக்கொரு டிக்கெட்” என்று. எவ்ளோ மொக்கைன்னு ஒரு படத்தை சொன்னாலும் நாம ஒரு தடவை பார்த்துட்டுவந்து ஆமா மொக்கைதான்னு ஜஸ்டிஃபை பண்ணிக்கிற டைப், சினிமா பைத்தியம் நான். ஆக் வெள்ளிகிழமை வேற எதபத்தி எழுதுறது, சொல்லுங்க?
இதோ என் சினிமா நண்பர்கள்.
               இவருடைய எழுத்துக்களில் இருக்கும் வசீகரம். அழகு. ரொம்ப ஜாலியா இருக்கும் இவரோட ஃப்லோ. என்னுடைய உலக திரைப்படங்களின் குரு இவரும் அண்ணன் வண்ணத்துப்பூச்சியும்தான். குடுத்துவச்ச ஆளுங்க, பொறாமையா இருக்கு பாலா, ஆனா சந்தோசமாவும் இருக்கு, பாலாவும் என்னோட நண்பர் என்று சொல்லிக்கொள்வதில். ரொம்ப நாளா கொஞ்சமும் புரியாம பார்த்துகிட்டு இருந்த ப்ரஸ்டீஜ் படம் இவரோட விமர்சனத்துக்குபிறகு கொஞ்சமா புரிஞ்சது, கொஞ்ச நஞ்சம் புரிஞ்ச மொமெண்டோ படம் இவர் விமர்சனத்தை படித்தபிறகு சுத்தமா புரியலை. இவருடைய சமீபத்திய தொடர்பதிவுகளான பிக்ஸார் ஸ்டோரியும், அவதார் தி டெக்னாலஜி-யும் கலக்கல் ஒரு தொகுப்பா புத்தகமே போடலாம் அந்த அளவிற்கு ஸ்டேண்டேர்ட் ரைட்டிங். இவருடைய இன்னுமொரு கலக்கல் தொடர், (A-Z) 18+ .
            இவருடைய எழுத்துக்களில் உள்ள உற்சாகம் படிக்கும்போது நம்மையும் தொற்றிக்கொள்ளும், அதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. பாலா,  ஒரு நல்ல மனிதன். இதன் காரணத்தை நான் ஏற்கனவே சொல்லியுமிருக்கிறேன்.
               தொடர்ந்து பின்னூட்டங்களின் மூலமாகவே பேசிக்கொண்டிருந்தோம். சென்னையில் நடந்த சிறுகதை பட்டறை எங்களுக்கான அறிமுகத்தை கொடுத்தது. சிலரிடம் விசாரித்து அவர்தான் சூர்யா என்று தெரிந்துகொண்டபின் அவரிடம் சென்றேன் “ஹலோ, நான் முரளி, திருப்பூர்லிருந்து வருகி...” அவ்வளவுதான் சொன்னேன். என்னை கட்டிபிடித்துக்கொண்டார். சில வினாடிகளுக்கு பின் என்னை விளக்கி என்னைய்யா நீ இவ்ளோ சின்ன பையனா இருக்க, நீ எழுதுறத வச்சி நீ பெரிய ஆளா இருப்பேன்னு நினைச்சேன்” என்றவாறு மறுபடியும் கட்டிபிடித்துக்கொண்டார். நானும் அவர் அவ்வளவு பெரிய மனிதராக இருப்பார் என்று நினைக்கவில்லை. எனக்கு அண்ணன் இருந்தால் இப்படி இருக்கலாம். 
               இவர் சினிமா பார்ப்பதை பார்க்கவே இவருடன் ஒரு சில நாட்கள் தங்கவேண்டும் போல இருக்கும். ஒரு மனுஷன், ஒரு படத்தை இவ்ளோ ஆழமா கவனிக்கமுடியுமான்னு யோசிக்க வச்சவர். இவர் எழுத்துக்களை படியுங்கள், நான் சொல்வது எவ்வளவு நிஜம் என்று தெரியும். நிச்சயம் நேரம் கிடைக்கும்போது இவரோடு சேர்ந்து பார்க்கவேண்டும் என்று சில படங்களைகூட தெரிவு செய்து வைத்திருக்கிறேன். போப்பின் கழிவறை, வட்டம்,  மரியா உலக திரைப்படம் பார்க்க விரும்புபவர்கள் அவசியம் இவரது பதிவை முழுவதுமாக ஒரு சுற்று வாருங்கள்.


               சூரியனுக்கு டார்ச் அடிச்ச கதையா இவருக்கு அறிமுகம்ன்னு சொல்லு இவருடைய ஆயிரகணக்கான ரசிகர்களிடம் வாங்கிகட்டிகொள்ள விருப்பமில்லை. வயது வித்தியாசம் எதுவும் பார்க்காத, நல்ல நண்பர். எப்போதாவது சினிமா அல்லது சிறுகதை இதில் ஏதாவது ஒன்றை எழுதினால் அதை படித்துவிட்டு உடனே போன் செய்து அவரது கருத்துக்களை பகிர்ந்து கொள்வார். வேற என்ன சொல்றதுன்னு தெரியலை, நல்ல மனுஷன். அவ்ளோதான். சீக்கிரமா இவரு ஒரு படம் பண்ணனும்ன்னு ரொம்பவே சீரியஸா வேண்டிக்கிறேன். வாழ்த்துக்கள், தல.
          உலக சினிமா மட்டுமில்ல உள்ளூர் சினிமாவா, தெலுங்குஹிந்தி,  எந்தபடமா இருந்தாலும் மொதோ நாளா பார்த்துட்டு  பிச்சி பிச்சி வைப்பாரு விமர்சனத்தை. அனேக பதிவர்கள் இவரது விமர்சனத்திற்கு பிறகே படம் பார்க்க விரும்புகின்றனர். இவரது தொடர்பதிவான சினிமா வியாபாரம் விரைவில் புத்தகமாக வர இருக்கிறது. அந்த அளவிற்கு தரமும் இருக்கும் இவரது எழுத்தில். வெறுமனே பதிவு எழுதி என்ன கிழிச்சன்னு கேட்கமுடியாது, அதன்மூலம் சம்பாதிக்கவும் முடியும்ன்னு சொல்லிகொடுத்தவர்.கருந்தேள் கண்ணாயிரம், ராஜேஷ், பக்கத்து ஊர் பங்காளி,

மொதோ விஷயமே பயபுள்ளைக்கு இன்னும் ரெண்டு நாள்ல கல்யாணம், எல்லாருமா போயி, இப்பொதைக்கு அவர் பதிவுல மொய் வச்சிட்டு வாங்க.
பாலா பதிவுகளில் இவருக்கு ஒரு இண்ட்ரோ குடுத்தார், அப்போதிலிருந்து தொடர்ந்து வாசிச்சிட்டேதான் இருக்கேன். ரொம்ப செலக்டிவான படங்களைதான் பார்க்கிறார், நல்ல நல்ல படங்களாய். ஆங்கிலத்தில் எழுதிகொண்டிருந்த இவர், ஏதோ என்னையெல்லாம் மனசில வச்சி இப்போ தமிழ்ல எழுதுறார். நல்லா இருங்கப்பூ...

நண்பா, என்னுடைய வாழ்த்துக்கள், உங்களின் திருமண வாழ்க்கைக்கு. சீகிரன் இங்கயும் திரும்பி வாங்க. இவருடைய பதிவுகளில் எனக்கு பிடித்த சில பதிவுகள் 4 வாரம் 3 மாதம்  2 நாள் , எனக்கு ரொம்ப புடிச்ச சூரிய உதயத்திற்கு முன்  இதுபோக ஏ.ஆர்.ரகுமான் பற்றீய இவரது இந்த பதிவும் மிகவும் அருமையான பதிவு.

இன்னும் நிறைய பேர் இருக்காங்க, இன்னும் விளக்கமா இவர்களின் அறிமுகத்தை என் மற்ற பதிவுகளில் சொல்கிறேன். நல்ல படம் பாருங்க, சந்தோஷமா இருங்க.

என்ஜாய். லைஃப் இஸ் ப்யூட்டிஃபுல்.
மேலும் வாசிக்க...

Thursday, March 18, 2010

வியாழன் - புத்தகம்.

                இன்னைக்கும் நாளைக்கும் எனக்கு மிகவும்பிடித்த விஷயங்களையே எழுத இருக்கிறேன் என்று சொன்னதை யாருமே கண்டுகிட்டதா தெரியலை. இருந்தாலும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தனாய்  இன்றும் எழுதியிருக்கிறேன். கடந்த ஒரு ஆறு ஏழு வருடங்களாகவே வியாழன் என்றவுடன் நினைவிற்குவருவது, ஆனந்தவிகடன். எங்க குடும்பமே ஒருகாலத்தில் விகடனில் தீவிர வாசகர்கள், எனக்கு எஸ்.ராவை அறிமுகம் செய்ததே ஆ.வி தானே. ஆக இன்று வியாழன், ஆனந்தவிகடன் புத்தகம்,  எனக்கு பிடித்த விஷயமும் புத்த்கம்தான், படிப்பது. ஆக இன்று இந்த புத்தக புழுக்கள், என் நண்பர்கள்.நான் வாசித்த தமிழ்புத்தகங்கள்

              கிருஷ்ணபிரபு, நண்பன். எனக்கும் கிருஷ்ணபிரவுவிற்குமான அறிமுகத்தை என் பதிவுகளில் பல இடங்களில் சொல்லியிருக்கிறேன். நான் இதுவரை ஒன்பது சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். ஏதாவது ஒண்ணு ரெண்டு நல்லா இருந்தா, உங்களின் வாழ்த்துக்கள் இவருக்கே உரித்தானது. ஒருவேளை எதுவுமே லாயக்கில்லை என்றால், தயவுசெய்து இவருக்கு ஒரு மெயில் பண்ணி திட்டிடுங்க. இவரது வலைப்பதிவு இதுதான்  இவருடைய வாசிப்பனுபவம் அலாதியானது. என் பொறாமைக்குரிய நபர்களில் முதல் பத்து இடங்களில், நீ இருக்க கிருஷ்ணா....                       சேரல், ஞானசேகர், பீமோர்கன் என சிலரால் தொடர்ந்து எழுதப்பட்டு வரும் புத்தங்களுக்கான வலைப்பதிவு. இவர்கள் அனைவருமே தனித்தனியாக பதிவெழுதி வந்தாலும் இப்படி ஒத்த சிந்தனையுடன் இணைந்து வாசித்தும் எழுதியும் வருவது எவ்வளவு சாத்தியம் என்று தெரியவில்லை. ஆனால் வெகு எளிதாக சாத்தியப்படுதியிருக்கிறார்கள். ஆரம்ப நிலையில் இருக்கும் வாசகர்களுக்கு இவர்களது அறிமுகம், நிறைய உதவியாய் இருக்கும். என்னை கவர்ந்த இவர்களது சில அறிமுகங்கள்,

குருதிபுனல் , பெய்தலும் ஒய்தலும்., பதேர் பாஞ்சாலி, வாய்மொழியில் உலவும் வரலாறுகள்

                   லேகா, வண்ணதாசனின் சிறுகதைகளின் தொகுப்பை தேடிக்கொண்டிருந்தபோது, கூகிளின் தேடலில் இவரது பதிவு அறிமுகமானது. புத்தகத்திலுள்ள, தனக்கு பிடித்தமான வரிகளை மேற்கோள் காட்டி எழுதிவருகிறார். அனேகமாக அந்த ஓரிரு வரிகளே புத்தகங்களை வாசிக்கும் ஆர்வத்தை தூண்டும்விதமாக இருகிறது. இன்னும் இவரது பதிவுகளை முழுவதும் வாசிக்கவில்லை. கொஞ்சம் வாசித்த்தற்கே இன்னும் இத்தனை புத்தகங்களை படிக்கவில்லையா என்று குற்றஉணர்ச்சி வருகிறது. எஸ்.ராவின் நகுலன் வீட்டில் யாருமில்லை என்ற புத்தகத்தின் அறிமுகபதிவு, வண்ணதாசன் சிறுகதைகள் புத்தகத்தின் அறிமுகபதிவு, குற்றாலம் சென்று வந்த இவரது பயணகுறிப்பு, குற்றாலம் பற்றிய எந்த செய்தியும் எனக்கு ஆயாசம் தருவதேயில்லை. குளிக்க குளிக்க அலுக்காத குற்றாலம் படிப்பதிலும் அப்படியே. நன்றி லேகா.

                 இவர்களுடைய பதிவுகளை தயவுசெய்து முழுமையாக படியுங்கள், உங்களுக்கு இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கிறது இவர்களின் பதிவுகளில். இன்னும் நிறையபேர் புத்தகங்களை பற்றி எழுதிக்கொண்டிருக்கிறார்கள், இருப்பினும் என் நண்பர்களையே முன் நிருத்தியிருக்கிறேன். மேலும் புத்தக விமர்சனம், அறிமுகம் எழுதும் பதிவர்களை படிக்கும் உங்களுக்கு தெரிந்திருந்தால், இங்கே பின்னூட்டத்தில் தெரியச்செய்யுங்கள், எனக்கும் உதவியாய் இருக்கும்.

           நாளைக்காவது என்ன ஸ்பெசல் சொல்லுங்க? ஒரு டிப்ஸ் சொல்லட்டுமா? எனக்கு இதுவும் மிகவும் பிடித்தமான விஷயம்தான். இன்னும் ஒன்று நாளைக்கு வெள்ளிகிழமை வேறு.

 :-)
மேலும் வாசிக்க...

Wednesday, March 17, 2010

பெண்கிழமை. மூன்றாவது நாள், புதன்

இன்று பெண்பதிவர்கள், சும்மா பெண்பதிவர்கள் என்றுச் சொல்லிவிட முடியாது. என் எழுத்தில், என் வளர்ச்சியில் எங்காவது ஒரு பங்கை ஒளித்துவைத்திருக்கும் இவர்கள், என் நண்பர்கள். உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள், நன்றி.

 கலகலப்ரியா அறிமுகம் தேவையில்லாத பெண், கலகலப்ரியா. பாரதியின் பரம விசிறி, ரெளத்திரம் மட்டுமே பழகிக்கொண்டிருக்கும்  பயங்கரவாதி, இது இவருடைய ப்ரொபைலில் உள்ள வாசகம். இவரை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு இதன் வீரியம் தெரியும். ஈழத்தமிழரின் நிலையை, அவரது பால்ய அனுபவங்களை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். இங்கே படிக்கவும். கவிதை, கட்டுரை என பல தளங்களில் இயங்கி வந்தாலும் இவரது சிறப்பு, கவிதைகள், அதன் மொழி. பெரும்பாலும் இவருடைய பதிவுகளை காட்டிலும் பின்னூட்டத்தில் நிறைய பேசுவார்.


அனுராதா   எங்க ஊர் பொண்ணு. நல்ல தோழி. தோழி என்கிற பெயரிலேயே எழுதிவருகிறார். இவங்களும் எங்க ஊர்தான் என்று சொல்வதில் ஒரு சந்தோஷம் கிடைக்குமே அந்த மாதிரியான நபர். நிறைய படிக்கிறார், நிறைய பிரயாணிக்கிறார். என் பொறாமைக்குரிய தோழி. இவரது கவிதை பெரும்பாலும்  எவரும்  எளிதில் தொட தயங்கும் விஷயங்களை அழகாக தொட்டுச்சென்றிருக்கும்.  நான் சந்தித்த மிக தைரியமான பெண்களில் இவரும் உண்டு. வாழ்த்துக்கள், அனு. இவருடைய எழுத்துக்களுக்கான உதாரணம், பிய்ந்து தொங்கும் பொம்மை, துளிர்க்கும் இலை மற்றும் தேநீர் அருந்தும் நினைவுகள்


விக்னேஷ்வரி விக்கி என்கிற விக்னேஷ்வரி தன்வி கண்ணா, கணினி துறையில் பணிபுரிகிறார். சமீபத்தில் இவரது சந்திப்புக்கு பிறகே இவரை வாசிக்க தொடங்கியிருக்கிறேன். குறைவாக வாசித்திருந்தாலும் இவரது எழுத்து பிரம்மிக்கும்படியாகவே இருக்கிறது. குறிப்பாக நட்பு பற்றிய இவரது புரிதலும் அது சார்ந்த கவிதைகளும் மிகவும் அருமை. இவர் வெகுசமீபமாய் புதிதாக நிறம் மாறாத மனிதர்கள் மற்றும் ஆண், பெண்களுக்கான ஆடை வடிவமைப்பு குறித்தும்  இரண்டு தொடர்பதிவுகள் எழுதிக்கொண்டிருக்கிறார்,  வெகு ஆர்வமாய் அடுத்தபதிவுக்காக காத்திருக்கிறேன், விக்கி. தொடரும் அன்பின் நிழல் , தொலைந்த நாட்கள்


தமிழ், இவரது இயற்பெயர் தெரியவில்லை. தமிழ்கூடு என்ற தலைப்பில் பதிவெழுதிவருகிறார். வெகுசமீபமாகவே இவரது பக்கங்களை பார்த்தேன். மைக்கேல் ஜாக்சன் பற்றிய இவரது இந்தபதிவுதான் இவரை தொடர்ந்து வாசிக்கச் செய்த்து. இவரது எழுத்து வெகு இயல்பாக இருக்கிறது. மேலும் இவரது பட்டாம்பூச்சி பற்றீய இந்தபதிவும் அன்பின் பிரதிபளிப்பு. நிறைய புத்தகங்கள் படிப்பதும் சினிமா பார்ப்பதும் தனது பொழுதுபோக்கு என்று சொல்லும் இவரின் எழுத்துக்களில் அதன் பாதிப்பு நிறையவே தெரிகிறது. ஆனால் வெகு குறைவாகவே எழுதுகிறார் என நினைக்கிறேன். நிறைய படிங்க, பாருங்க, பகிர்ந்து கொள்ளுங்கள். தோழி. வாழ்த்துக்கள்.


 உதிர்ந்தமலர்கள்  கனிமொழி, என்னுடைய வறுபுறுத்தலுக்கு பின் எழுத வந்தவர்கள். நிறைய படிக்கவும் எழுதவும் விருப்பமுள்ள பெண். எழுத்தின் ஆரம்ப நிலையில் இருக்கும் இவருக்கு நல்ல எழுத்து கைகூடும் நாள் விரைவில். இன்று இங்கு வலைசரத்தில் சில நல்ல பதிவுகளை தேர்வு செய்ய எனக்கு மிகவும் உதவியாய் இருந்தவர்களில் இவரும் ஒருவர். பொதுவாக தன் அனுபவங்களையே சுவாரஸ்யமான பதிவுகளாக எழுது வருகிறார், உதாரணம் மரகதம் தந்த முத்துபொங்கல்


 காகிதஓடம். திருமதி.பத்மா,  இவர்களின் பதிவறிமுகமும் வெகு சமீபத்தில் நடந்த ஒன்றுதான். கவிதைகள் மட்டுமே எழுதுகிறார்கள். அடிக்கடி ‘அட’ போடவைக்கும் எழுத்துக்களுக்கு சொந்தகாரர். கவிதை சுலபமாக வருகிறது மேடம் உங்களுக்கு, தொடருங்கள். வாழ்த்துக்கள். இவரது கவிதைத் தோரணங்களில் சில பூக்கள், எப்படி இயலும், ஒற்றைமீன்.


இன்னும் இவர்கள்போக  நான் ஒரு கொரியபடத்திற்கு விமர்சனம் எழுதும்போது வேறு யாராஅவது எழுதியிருக்கிறாஅர்களா என்று தேடப்போக அறிமுகமான ரசிக்கும்சீமாட்டி, சத்தமே இல்லாம இருந்து திடீர்ன்னு வந்து அழகா எழுதுறிங்க என்று சொல்லிவிட்டுபோகும் ஆழிமழை,  என்னடா இவங்களை நம்ம பக்கம் காணோமே என்று தேடும்போது, நல்ல பதிவுகளுக்கு தவறாமல் வந்து வாழ்த்துக்களுடன் பூங்கொத்தும் கொடுக்கும் அன்புடன் அருணா மேடம் இப்படி சொல்லிகிட்டே போகலாம்.

இருந்தாலும் எதுக்கும் ஒரு அளவிருக்கில்லையா? அதானால இதோட நிறுத்திக்கிறேன். பெயரை மறந்துவிட்ட தோழிகள், மன்னியுங்கள்.  நாளையும், நாளை மறு நாளும் என் விருப்பமான இரண்டு விஷயங்கள். எங்க கண்டுபிடியுங்கள் பார்ப்போம்?
மேலும் வாசிக்க...

Tuesday, March 16, 2010

இங்க வந்து சம்பாதிச்சவங்க

     வேற என்னங்க சொல்றது,  சம்பாதிச்சேங்கிறதவிட எளிதான வார்த்தைகள் இல்லை.  கடைவிரித்தேன் கொள்வாரில்லை என்பது மாதிரியாய், நான் எழுதுவதை நானே படித்துவிட்டு உட்கார்ந்திருப்பேன். இவங்கல்லாம்தான் கொஞ்சம் கொஞ்சமா என்னை படிக்க ஆரம்பிச்சு, சின்ன சின்னதாய் தவறுகளை புரியச்செய்து தட்டிக்கொடுத்து, கைதட்டி வளர்த்துவிட்டவர்கள். வந்த வழியை சரியா திரும்பிப்பார்ப்பதுதானே முறை. இதோ என் குளத்தில் கல்லெறிந்தவர்கள். வெறும் பதிவர்களாக அறிமுகமாகிய இவர்கள் அனைவருமே இன்று என் நண்பர்கள்.


http://balasee.blogspot.com/ நண்பர், இவரும் பக்கத்து ஊரு பங்காளிதான், இவர் அறையிலிருந்து எட்டிபார்த்தால் டாஸ்மாக், இருந்து இவர் தண்ணியடிப்பதில்லை. இதை இங்கே சொல்லியே ஆகனுமான்னா இல்லை, ஆனா அந்தமாதிரி ஒரு கண்ணியம்  இவர் எழுத்துக்களில் இருக்கும். வரம்புமீறாத எழுத்துக்கள், பாலாசியுனுடைய எழுத்துக்கள்.  தீபாவளி குறித்த இவரது ஒரு கவிதை தவிர தன் முதல் காதலையும் கவிதையாய் பவானீ என்று கொசுவத்தி சுத்தியிருக்கிறார்.


நெய்தல் தற்போது ஷீலா தமிழ்செல்வி .  சந்திரசேகர், நண்பன். சில நிமிடங்களில் நடந்தேறிவிட்டது எங்களின் சந்திப்பு. சென்னையில் நடந்த சிறுகதை பட்டறையில் சந்தித்தோம், இவரது  இன்னமும் அழுத்தமான உள்ளங்கை ரேகை போல பதிந்திருக்கிறது, இவருடனான உறவு. தமிழக அரசுத்துறையில் பணிபுரிகிறார். தொல்பொருள்துறை. இவரும் அதிகம் எழுதுவதில்லை. வெகு அரிதாக எழுதினாலும் அதிக கவனத்திற்குரியது இவரது எழுத்துக்கள். சிறிய உதாரணம் இந்த இரு கவிதைகள் சிதைவுகளின் நிழல் , கவிதை செய்தல்


அகல்விளக்கு – ராஜா, கிட்டதட்ட நாங்க ரெண்டு பேரும் ஒரே தொழில், எங்கள் எழுத்துக்களும் நிறைய ஒத்துபோயிருக்கும். ஈரோட்டுக்காரர்.   இவருடைய இந்த ஒரு சோறுபோதும் இவரது எழுத்துக்கு. எனக்கு மிகவும் பிடித்த இவரது ஒரு கவிதை  மழையாய் நீ மெளனமாய் நான்.


சிந்தன், என் தம்பி. முற்போக்கு சிந்தனைவாதி. துணைக்குவர வேண்டாம், என்னை தடுக்காமல் இருங்கள், என்னால் சமுதாயத்திற்கு செய்யப்படவேண்டியது இன்னும் எவ்வளவோ இருக்கிறது என்று சொல்லும் பக்குவபட்ட மனசுக்காரன். காதல்கவிதைகள் வெகு அழகாக இவருக்கு எழுதவரும். இப்பொழுது கார்ல் மார்க்ஸின் மூலதனம் புத்தகத்தை முழுமையாக வாசித்துவிட்டு அதை எளிதாக விவாதங்களுக்கு உடபடுத்தி எழுதிவருகிறார். ஒத்தசிந்தனையுடைவர்கள் அவசியம் பகிர்ந்துகொள்ளுங்கள், உங்கள் கருத்துக்களை அவருடன்.

தமிழ் பிரியன் –  இவரையும் முதலில் சென்னை சிறுகதை பட்டறையில்தான் சந்தித்தேன். தொடர்ந்து வாசித்து வருகிறேன். மன்னிக்கவும் நண்பரே! அதன்பின் உங்களுடன் தொடர்பிலிருக்க முடியவில்லை. ஒரு தொடர்பதிவில் இவரது எழுத்தை வெகுவாக ரசிக்க முடிந்தது.திருச்சொல், திருநாவுக்கரசு, நண்பர். ஒரே ஊராய் இருந்தாலும் வெகு சமீபத்திலேயே எங்கள் அறிமுகம் நடந்தது. இவரது கவிதைகள் வெகு இயல்பாக இருக்கும். என்னைப்போலவே சினிமா பைத்தியம். இவரோடு சேர்ந்து இன்னும் நிறைய படங்கள் பார்க்க வேண்டியிருக்கும்.  நிறைய கவிதைகள எழுதுகிறார், எனக்கு பிடித்த இவரது இரு கவிதைகள், பறவையின் கதறல்,  இன்னொன்று முடிவில்லா ப்ரியங்கள்.
இவர்கள் போக வெயிலான், பரிசல்காரன், செந்தில் பேரரசன், சாமிநாதன்,  செல்வம்,  லோகு  இப்படி இன்னும் நிறைய பேர் இருக்காங்க, அறிமுகம் தேவைபடாதவர்கள், இவர்கள். இன்னும் பெயர் மறந்த, முகமறியாத என் அனைத்து பதிவுலக நணபர்களுக்கு என் நன்றிகளை இந்த பதிவின் மூலமாக  சொல்லிக்கொள்கிறேன்.

ஆக இன்னைக்கு இவ்ளோதான், மீதி நாளைக்கு. பொண்ணுகிடைச்சாலும் புதன் கிடைக்காதுன்னு சொல்லுவாங்க, ஆனா நாளைக்கு பொண்ணோட புதனும் சேர்ந்தே கிடைக்கும். ஆம், நாளை பெண் பதிவர்கள், என் தோழிகள்.
மேலும் வாசிக்க...

Monday, March 15, 2010

முதல் நாள், ஒரு அறிமுக பதிவு.அனைத்து பதிவர்களுக்கு, பதிவுலகின் கடைசி வாசகருக்கும் எனது அன்பு நிறைந்த வணக்கங்கள், வாழ்த்துக்கள். என் பெயர் முரளிகுமார். அன்பேசிவம் என்கிற தலைப்பில் பதிவெழுதி வருகிறேன். புதிதாக படிப்பவர்களுக்கான அறிமுகம் இது. ஏற்கனவே தெரிந்தவர்களுக்கு கொஞ்சம் போரடிக்கலாம் (ஓடிடுங்க). அன்பின் சீனா ஐயாவின் அனுமதியுடன், இந்த வாரம் வலைச்சரத்தில் எழுத இருக்கிறேன்.

பொதுவாகவே எங்கு என்ன பேசினாலும் காதுகொடுத்து கேட்பது என் வழக்கம், நமக்கு தேவையான விஷயம் எதுவும் கிடைத்துவிடாதா என்று காதை கூர்மையாக்கி காத்துக்கொண்டிருப்பவன். அதுபோன்ற ஒரு நாளில்தான் வலைப்பதிவு பற்றிய ஒரு சிறு அறிமுகம் கிடைத்தது. கிட்டதட்ட எட்டு மாதங்கள் நானே எழுதி நானே படித்தும் இருந்திருக்கிறேன். பிறகு மெல்ல ஓட்டு, தமிழிஷ், தமிழ்மணம் பற்றிய அறிமுகங்களின் பிறகு இன்று நானும் சிலரால் படிக்கப்படுகிறேன். மேலும் நான் எழுத வந்த கதையை நண்பர் பரிசல்காரன் கிருஷ்ணகுமார் அவர்கள் அழைத்த தொடர் பதிவில் எழுதியிருக்கிறேன்.


எனக்கு புத்தகம், எழுத்து இவற்றிற்கு இணையாக பிடித்தமான விஷயங்கள் இசையும், திரைப்படங்களும், புகைப்படமும் மற்றும் ஓவியம் வரையவும் பிடிக்கும். பிடித்தமான துறையிலேயே பணிபுரியும் வாய்ப்புபெற்றவர்கள் கொடுத்துவைத்தவர்கள். எனக்கு அப்படி கொடுத்துவைக்கவில்லை என்றாலும் கணிணி சார்ந்த துறையிலே வேலைசெய்வது (கணிணி விற்பனை) என் விருப்பங்கள் அனைத்திற்குமே பின்புலமாக இருபதாலும், என் நண்பனுடன் இணைந்து இந்த தொழில் செய்துவருவதாலும், நான் இன்னமும் ஆசிவதிக்கபட்டவனாகவே இருக்கிறேன். என்னுடைய இன்னொரு வலைப்பூ, புகைப்படங்கள்  . இந்த வலைப்பதிவை, நான் பிடித்த புகைப்படங்களின் மற்றும் எனக்கு பிடித்த புகைப்படங்களின் தொகுப்பாக செய்துவருகிறேன்.

இன்று நிறைய நண்பர்கள் கேட்கிறார்கள், எப்படி உன்னால இவ்ளோவும் முடியுது, எப்ப பாரு படம் பார்க்கிற! எதையாவது எழுதிட்டே இருக்க? எப்டிடா உனக்கு நேரம் கிடைக்குது என்று. உண்மையை சொன்னால் சத்தியமாக எனக்கு தெரியவில்லை. நானும் எந்த ஒரு விஷயத்திற்க்கும் நேரத்தை குறைசொல்லும் சாதாரணமானவந்தான். இருந்தும் இதையெல்லாம் செய்ய எனக்கு நேரம், யோசித்தலில் எனக்கு இது பிடித்திருக்கிறது. சில புத்தகங்களை படிக்க, சில பதிவுகளை எழுத, சில திரைப்படங்களை பார்க்க நிறைய இரவுகளை விட்டுகொடுத்திருக்கிறேன். விரும்பி செய்யும் எதுவும் எனக்கு (நமக்கு) சுமையாக இருப்பதில்லை. ஆக எதையும் விரும்பி செய்யுங்கள். எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. நூறு பதிவுகளுக்குமேல் எழுதியதில்.  ஒருவழியாக நூறு பதிவுகளை எழுதிமுடித்ததை பெருமையோடு சொல்லிக்கொண்ட பதிவு இது.
என் பதிவுகளில் எனக்கு பிடித்த பதிவுகள் என்றால் இந்த இரண்டு சிறுகதைகளையும் சொல்வேன். பட்டாம்பூச்சி பார்த்தல், தோழர் மாதவராஜ் அவர்களின் உதவியோடு பூக்களிலிருந்து புத்தகங்கள் என்கிற தொகுப்பில் சிறுகதைகளின் புத்தகத்திற்கு தேர்வு செய்யப்பட்டது, இந்த கதை. இன்னொன்று இறக்காத இரவுகள், பட்டாம்பூச்சி பார்த்தல் கதையைவிட அதிக வலியோடு எழுதியது எனக்கு மிகவும் பிடித்த என் எழுத்துக்களில் ஒன்று இந்த கதை.

இதுதான் நான், இவ்வளவுதான் நான். இனி என்னால் முடிந்தவரை நல்ல பதிவுகளை, பதிவர்களை அறிமுகம் செய்கிறேன், புதியவர்களை அறிமுகம் செய்கிறேனா, தெரியாது. பெரும்பாலும் என் நண்பர்களை முன் வைப்பதையே செய்ய இருக்கிறேன். ஆக நண்பர்களே, தொடர்ந்து படிங்க. உங்கள் வாழ்த்துக்களையும் வரவேற்பிற்புகளையும் எதிர் நோக்கி, நான்

நான் எப்போதும் சொல்வதுபோல, மனிதன், தானாய் வளரும் சாதாரண் காட்டுச்செடி அல்ல, கை தட்டதட்ட வளரும் ஒரு அதிசயச்செடி. ஆக, கை தட்டுங்கள் சேர்ந்தே வளருவோம்.


மேலும் வாசிக்க...

Sunday, March 14, 2010

நன்றி சுரேஷ் குமார் - வருக வருக முரளி பத்மநாபன்

அன்பின் சக பதிவர்களே

கடந்த ஒரு வாரமாக ஆசிரியப் பொறுப்பேற்ற, பழனியைச் சார்ந்த அருமை நண்பர் மருத்துவர் சுரேஷ்குமார் - ஏற்ற பொறுப்பினை நிறைவேற்றி - மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். அவர் ஐந்து இடுகைகள் இட்டு கிட்டத்தட்ட ஐம்பது புதிய பதிவர்களை அறிமுகப் படுத்தி விடை பெறுகிறார். புதிய பதிவர்களை ஊக்குவிக்கும் வண்ணம் அறிமுகப் படுத்திய செயல் நன்று. அவருக்கு வலைச்சரம் சார்பினில் நன்றி கலந்த நல்வாழ்த்துகளைக் கூறி விடை அளிப்பதில் பெருமை அடைகிறேன்.

15ம் நாள் முதல் ஆசிரியப் பொறுப்பேற்க வருகிறார் - திருப்பூரைச் சார்ந்த நண்பர் முரளி பத்மநாபன். இவரது பெற்றோர் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள். தற்போது இவர் நண்பருடன் இணைந்து கணினி விற்பனை செய்து வருகிறார். எஸ்ராவின் எழுத்துகள் மூலமாக படிப்புலகத்திலும், எழுத்துலகத்திலும், வலையுலகத்திலும் அடி எடுத்து வைத்தவர். எழுத்து தவிர புகைப்படக் கலையிலும், இசையிலும் ஈடுபாடு கொண்டவர்.

இவர் அன்பே சிவம் என்ற வலைப்பூவிலும் புகைப்படம் என்ற வலைப்பூவிலும் எழுதி வருகிறார். இவரை வருக வருக - அறிமுகங்களை அள்ளித் தருக தருக - என வரவேற்று வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் முரளிகுமார் பத்மநாபன்

நட்புடன் சீனா
மேலும் வாசிக்க...

Friday, March 12, 2010

வெள்ளிக் கிழமை வெளியீடு இது

பொதுவாக நடிகைகளைப் பாராட்டி ஒரு இடுகை எழுதுவது என்பது மிகவும் சிரம்ம். எழுதுவதற்கு விஷயம் கிடைத்தல் என்பதைவிட மனம் வருதம் என்பது மிக அபூர்வர்ம். ஆனால் ரகுநாதனுக்கு அந்த மனம் இருக்கிறது. அவரை பாராட்டியே தீர வேண்டும்.படங்கள் வேறு போட்டு இருக்கிறார்.
========================================================
தியரி ஆஃப் ரிலேடிவிட்டி என்ற தத்துவம் யார் சொன்னது தெரியுமா? அதன் அடிப்படையில்தான் இந்த இயங்கிறது என்பதை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா? பிரபுச் சந்திரனின் இந்த இடுகையைப் படித்துவிட்டுப் பின்னர் விவாதிப்போம். வாருங்கள்.

============================================================

சூரியனுக்கே லைட் அடிக்கும் பதிவு இது. லைட் அடிப்பவர் லேகா

=============================================================
சில கதைகளைப் படிக்கும்போது வாய்விட்டுச் சிரிக்கத்தோன்றும். சில கதைகளைப் படிக்கும்போது மனம் விட்டு அளத் தோன்றும். எல்லாக் கதைகளையும் பழைய இலக்கியவாதிகள் ஏதாவது ஒரு கோணத்தில் தொட்டுச் சென்றிருப்பர்.   ஆனால் ஒரு மனிதனின் வெகுசாதாரண உணர்வு புரிந்து கொள்ளப் படாமல் இருந்து அவனின் மிகப் பெரிய இழப்பின்போது கூட அவனின் மிகச் சாதாரண உணர்வு புரிந்து கொள்ளப் படாமல் இருந்து அதுவே அவனுக்கு ஒரு சுமையாய் இருப்பதுவாக  கடுகைத் துளைத்து ஏழ் கடலை நுழைக்கும் வேலையை விட இந்த கதைமாந்தர்கள்களை புரிந்து கொள்வது சிரமமோ? சுந்தராவிடம் கேட்டுப் பாருங்கள்

=======================================================

தகாத உறவு, பொருந்தா உறவுக் காதல், பொருந்தா வயதுக் காதல் சதிவேலைகள் நிறைந்த ஒரு கதை தினமும் படங்களுடன் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்தத் தளத்தில்.  
ஆசிரியர் பெயர் கூட நந்தாவில்தான் முடிகிறது.

===============================================================
மிகப் பிரபலாமன ஒரு தளம் இது. எனக்கென்னவோ நிறையப் பேரை சென்றடையவில்லையோ என்ற எண்ணம் உண்டு அதனால் இதற்கும் சேர்த்து ஒரு அறிமுகம்


============================================================


எதிர்ப்பு மட்டும் முக்கியமா? முன்னேற்றமும் அவசியம்தானே? இது போன்ற இடுகைகள் நிறையப் பேருக்கு புரிவது இல்லை. சிலர் புரிய விரும்புவதும் இல்லை.

===============================================================

உங்கள் பார்வை பறந்து விரிந்து விசாலமாக அமைய லக்கி லிமட்டின் இந்த இடுகையைப் படியுங்கள்.

==============================================

அடுத்து எந்த சாமியார் மாட்டப் போகிறார் என்பதை அறிவியல் ரீதியாக விளக்கும் இடுகை இது. பாஸ்கருடையது.

=======================================================

இவரைப் பற்றித் தெரிந்து கொள்ள இந்த ஒரு இடுகைபோதும். பெயர் சொல்லாவிட்டால் கூட நீங்கள் வலைப்பூவிற்குப்  போனால் அவரைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.  வலைப்பூவின் பெயர் சும்மா
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது