07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, August 31, 2011

கவிதை முத்துக்கள்

மகா கவி பாரதியாரிலிருந்து தொடங்கி பாரதி தாசன், கண்ணதாசனிலிருந்து ஆரம்பித்து இன்றைய மீரா, வைரமுத்து, மேத்தாவிலிருந்து தொடர்ந்து இன்றைக்கு தமிழ்த்தாய்க்கு கவிதை மலர்களால் அர்ச்சிப்பவர்கள் ஆயிரம் ஆயிரம்! இந்த அகன்ற ஆழியினின்று ஒரு சில நல்முத்துக்கள் மட்டும் எடுத்து இங்கே சமர்ப்பித்திருக்கிறேன்!

சமர்ப்பிக்கும் முன் எனது வலைப்பூவினின்று ஒரு மீள் கவிதை!

                         அன்பென்பது.. .. ..
அன்பென்பது தண்மை என்று புலவர் சொன்னார்- ஆனால்
                   அதுவும் தணலாய் சுட்டது சில நேரம்!

                   அன்பென்பது அழகென்று அறிஞர் சொன்னார்-ஆனால்
                   அதுவும் சிதைந்து அழிந்தது சில நேரம்!

                    அன்பென்பது மலரென்று கவிஞர் சொன்னார்-ஆனால்
                    அதுவும் சருகாய் உதிர்ந்தது சில நேரம்!

                    அன்பென்பது உண்மையென்று கற்றோர் சொன்னார்-ஆனால்
                     அதுவும் பொய்யாய்க் கரைந்தது சில நேரம்!

                    அன்பென்பது தெய்வமென்று பெரியோர் சொன்னார்-ஆனால்
                    அதுவும் சிலையாய்ப் போனது சில நேரம்!

                    அன்பென்பது அமுதமென்று சிலர் சொன்னார்-ஆனால்
                     அதுவும் விடமாய்ப்போனது சில நேரம்!

                    அன்பென்பது இசையென்று பலர் சொன்னார்-ஆனால்
                    அதுவும் ஸ்ருதி கலைந்து போனது சில நேரம்!

                    அன்பென்பது யாதென்று அலைந்து நின்றேன்!
                    அறிந்தபோது உர்ந்தபோது அசந்து நின்றேன்!

                    அன்பென்ற தண்மைதான் மழலைதன் விரல் தொடுகை!
                    அன்பென்ற உண்மைதான் மழலைதன் புன் சிரிப்பு!

                     அன்பென்ற அழகுதான் மழலைதன் தளிர் நடை!
                     அன்பென்ற கடவுள்தான் மழலைதன் குளிர்ப்பார்வை!
                     அன்பென்ற மலர்தான் மழலைதன் எழில்முகம்!

                     அருஞ்சுவைக் கற்கண்டும் அருமருந்தும் தோற்குமே
                     அன்பென்ற அமுதமாம் அழகு மழலைப் புன்சிரிப்பில்!


இனி கவிதை முத்துக்களின் சமர்ப்பணங்கள்!

1..http://yaathoramani.blogspot.com/  [ தீதும் நன்றும் பிறர் தர வரா]


கவிஞர் ரமணியின் அனைத்துக் கவிதைகளுமே அருமை என்றாலும் இந்த பதிவர் சக்தி அருமையிலும் அருமை! 


குழந்தையின் சிரிப்பும் நட்சத்திரங்களுமாய் அழகிய ஒரு கவிதை!
நட்சத்திரங்கள்! இவற்றை  நீங்களும் பார்த்து ரசியுங்களேன்!

3. http://tamilamudam.blogspot.com/ [முத்துச்சரம்]

வாழ்க்கை முழுக்க வரும் பல வித நிகழ்வுகளை இங்கே 
ஆடுகளம் - நவீன விருட்சத்தில்..  ஒவ்வொரு வித விளையாட்டிலும் அழகுற இணைத்து அருமையாய் கவித பாடியிருக்கிறார் ராமலக்ஷ்மி!

4. http://kadambavanakuyil.blogspot.com/ [கடம்பவன பூங்கா]

தன் தவறுகளையெல்லாம் பொறுத்து, அன்பை மட்டுமே பொழிந்த கணவனுக்காக பிரிவுத்துயரில் ஒரு மனைவி பாடும் கவிதை இது!

யாதுமாகி நன்றாய்- எத்தனை அழகான தலைப்பு!

5. http://kavisolaii.blogspot.com/ [கவிச்சோலை]

சங்ககாலப்பாடல்களை இன்றைய தமிழ்க்கவிதையாய் எழுதி வருவது இவருடைய தனிச்சிறப்பு. இயற்கையின் சீற்றத்திற்கு உண்மையான காரணங்களை இங்கே இந்தப்பாடலில் அழகாய்ச் சித்தரிக்கிறார்.


6. http://mahizhampoosaram.blogspot.com/ [மகிழம்பூச்சரம்]

கவிதைகளும் பயன் மிக்க கட்டுரைகளும் உணர்வுகளுமாய் இங்கே சாகம்பரியின் மகிழம்பூக்கள் எப்போதும் மனம் வீசிக்கொண்டே இருக்கிறது. வளர்ந்த பின், சிறகடித்துப்பறப்பது தான் குழந்தைகளின் இயல்பு. ஆனால் அப்போதும் தாய்மை தன் குழந்தையின்
அரவணைப்புக்காக ஏங்கிக்கொண்டே இருக்கும். அந்த ஏக்கத்தை
தாய்மையின் தேடல் என்ற கவிதையாகக் கொடுத்து மனம் சிலிர்க்க வைக்கிறார்!

7. http://sundargprakash.blogspot.com/ [கைகள் அள்ளிய நீர்]

சுந்தர்ஜீயின் கவிதைகள் அழகு தமிழில் வெளிவரும் உணர்ச்சிப் பிரவாகங்கள். அவரின் இந்த தோல்வித்தேன் ஒரு அருமையான கவிதை. சுவைக்க ஒரு இனிமையான தேன்!


பரிவை குமாரின் எது சுதந்திரம்? எல்லோருடைய மனதிலிருக்கும் இன்றைய பொருமலை நெத்தியடியாய் பறைசாற்றுகிறது இங்கே!

9. http://krishnapriyakavithai.blogspot.com/ [தஞ்சை கவிதை]

 அம்மா என்ற கவிதையில் தன் மன உணர்வுகளை மிக அழகாக பிரதிபலிக்கிறார் கிருஷ்ணப்ரியா

10. http://sanvishblue.blogspot.com/ [வாசல்]

வாழ்க்கையின் உறவுகளைப்பற்றியும் உணர்வுகளைப்பற்றியும் அழகாய் விமர்சனம் செய்யும் கெளசல்யா தன் கவிதைகளிலும் ‘நச்’சென்று தன் அடையாளத்தை ஆழமாய்ப் பதிக்கிறார். அவருடைய பெண்மை கவிதையும் மனதை தாக்குகிறது!

11. http://pulavarkural.blogspot.com/ [கவிதைகள்]

செந்தமிழில் எதுகை மோனையுடன் கவிதை எழுதுபவர் புலவர் திரு.ராமானுஜம். சமுதாய நோக்குடன் அவர் எழுதிய இந்தக் கவிதையான எண்ணிப்பாரும் நல்லோரே ஒரு அருமையான படைப்பு!

12. http://thmalathi.blogspot.com/ [மாலதியின் சிந்தனைகள்]

தனக்குரிய துணை எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு பெண்ணின் இதயக்கனவுகளை தேவை ஒரு காதலன் என்ற கவிதையில் மிக அழகாய்ச் செதுக்கியிருக்கிறார் மலதி இங்கே!

13. http://nisiyas.blogspot.com/ [ஷீ-நிசி கவிதைகள்]

ஒரு சித்தாளின் கனவை பேச்சுத்தமிழில் அருமையாய்ச் சொல்லியிருக்கிரார் ஷீ-நிசி
இங்கே தனது சித்தாள் கவிதையில்!

14. http://ilavenirkaalam.blogspot.com/ [வசந்த மண்டபம்]

காய்கறி விற்று உழைக்கும் ஒரு உழைப்பாளியின் மனதின் நேர்மையையும் நெஞ்சின் உரத்தையும் மகேந்திரன் அருமையாய் விவரிக்கிறார் தன் அழகிய நெஞ்சிலே உரமிருக்கு!! கவிதை மூலம்!

15.  http://rupika-rupika.blogspot.com/ [அம்பாளடியாள்]

வலைத்தளங்கள் எப்படிப்பட்ட வடிகால் தனக்கு என்று இந்த

வலைத்தளங்களும் தமிழும் வாழ்க வாழ்க வாழ்கவே கவிதையில் சொல்லிப் பூரிக்கிறார் அம்பாளடியாள்!

16. http://sivakumarankavithaikal.blogspot.com/ [சிவகுமாரன் கவிதைகள்]

சிவகுமாரனின் போதைப்பொருட்கள் அழகு தமிழில் அமைந்த ஒரு அருமையான கவிதை!

17. http://kavithaiveedhi.blogspot.com/ [கவிதை வீதி]

குழந்தையின் மழலைக்கு முன்னால் உலகின் மற்ற இனிமைகள் யாவுமே ஒன்றுமேயில்லாமல் போகிறது என்பதை செளந்தர் இந்த கவிதையில் சொல்லி மெய்மறந்திருக்கிறார் இங்கே! அருமையான கவிதை இது!

இந்த குழந்தை என்ன செய்திருக்கிறது உங்களை?

மேலும் வாசிக்க...

Tuesday, August 30, 2011

சமையல் முத்துக்கள்

முதலில் அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகட்கு என் இனிய பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


எல்லாவற்றுக்கும் முன்னால் சமையல் முத்துக்கள் மின்ன வருகின்றன. அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. நாம் வாழ்வதும் உழைப்பதும் இந்த ஒரு சாண் வயிற்றின் பசியை நீக்கத்தான். சரியான உணவு இல்லாவிடில் கவிதைகள் எழுதுதலோ, இலக்கியத்தேடலோ, சமுதாயச் சேவை செய்திடலோ எதுவுமே முழுமையாக நடைபெற இயலாது.

நம் பெண்கள் புகுந்த வீட்டில் நுழைந்த வினாடி முதல் தங்களின் வாழ்வின் இறுதி வரை குடும்பத்தினரின் பசி தீர்க்க அந்த சமையல் கட்டிலேயே உழலுகிறார்கள். திரு.விசு கூட, ஒரு படத்தில் ‘ எங்களுக்கெல்லாம் ரிடயர்மெண்ட் என்ற ஒன்று இருக்கிறது, பெண்களாகிய உங்களுக்கு மட்டும் இந்த அடுப்படியிலிருந்து ஓய்வே கிடைப்பதில்லை’ என்று சொல்லுவார். அது நூறு சதவிகிதம் உண்மை என்பது அனைவருக்குமே தெரியும். இப்படி அடுப்படியில் மற்றவர்களுக்காகப் பார்த்துப் பார்த்து சமைக்கிற அவளுக்கு, தனக்குப்பிடித்தது எது என்பதே மறந்து போகிறது. இப்படிப்பட்ட பெண் என்பவளுக்கும் அவளின் ருசியான சமையலுக்கும் முதல் மரியாதை செய்யும் வகையில் சமையல் முத்துக்கள் முதலில் வருகின்றன!

வெறும் சமையல் மட்டும் ருசிகரமாகச் செய்வதில் எந்த அர்த்தமுமில்லை. அதை அன்போடு பரிமாறுவதிலும் தன் அன்பிற்குரியவர்களைப் பார்த்து பார்த்து கவனிப்பதிலும் தான் அந்த சமையல் முழுமை அடைகிறது. அறுசுவை அன்னமும் பாலும் தேனும் பழங்களும் பல வகை விருந்தும் அன்பில்லாதோர் அளித்தால் அதுவே விஷமாகும், பழைய சோறானாலும் அன்போடு இட்டால் அதுவே அமுதமாகும்’ என்று விருந்தோம்பலைப்பற்றி அந்தக்காலத்தில் பழந்தமிழ்க் கவிதைகள் சொல்லியிருக்கின்றன!  

இப்படி சமையலைப்பற்றியும் விருந்து வகைகள் பற்றியும் விருந்தோம்பலைப்பற்றியும் சொல்லிக்கொண்டே போகலாம்! தாமதமாக்கினால் சமையலின் ருசி குறைந்து போகுமென்பதால் சமையல் தளங்கள் பக்கம் வந்து விட்டேன்!

1. http://gopu1949.blogspot.com/ [வை.கோபாலகிருஷ்ணன்]

முதலிடத்தில் வருபவர் சகோதரர் திரு.வை.கோபாலகிருஷ்ணன். அருமையான சிறுகதை எழுத்தாளரை இங்கு இழுத்து வருவதில் அவ்வளவாக எனக்கு உடன்பாடில்லை. ஆனால் இந்தப்பதிவினைப்படித்த பின் அவருக்குத்தான் பெண்களைக்காட்டிலும் முதல் இடம் கொடுப்பது நியாயம் என்று தோன்றி விட்டது. எந்நேரமும் சமையலறையிலேயே புழங்கும் பெண்களே அதிசயப்படும் அளவிற்கு சமையல் பொருள்கள், அவற்றை உபயோகிக்கும் விதம், ருசிகரமான சமையல் வகைகள், அதற்குத் தகுந்த ஜோடியாக கூட்டுப்பொருள்கள் என்று அசத்தியிருக்கும் இந்தப் பதிவைப் படித்துப் பாருங்கள்!திருமதி. மேனகா தன்னுடைய இந்த வலைத்தளத்தில் 2009-ம் ஆண்டிலிருந்து ஆரம்பித்து, கிட்டத் தட்ட 500க்கு மேலான சமையல் குறிப்புகள் கொடுத்து, 500க்கும் மேலான பின் தொடர்வோரையும் பெற்று அசத்தி வருகிறார். அசுர உழைப்பு இது. இவருடைய சில்லி இட்லியை சுவைத்துப் பாருங்கள்.

3. http://samaiyalattakaasam.blogspot.com/ [சமையல் அட்டகாசங்கள்]

இவர் துபாய் நகரில் வாழும்- எனக்கு அறிமுகமான இனிய சகோதரி லீலா.
தலைப்பைப்போலவே அட்டகாசமான சமையல் குறிப்புகள் கொடுத்து வரும் இவர் 500க்கும் மேல் குறிப்புகள் கொடுத்து 11000க்கும் மேற்பட்ட பின்னூட்டங்களைப் பெற்றிருக்கிறார். சமையல் குறிப்புகளுக்கும் அப்பாற்பட்டு சிறு குழந்தைகள், கர்ப்பிணிப்பெண்கள் என அனைவருக்கும் சிறந்த டிப்ஸ்-ம் கொடுத்திருக்கிறார் இவரது வலைப்பூவில். இவருடைய பேரித்தம் பழம் இனிப்பு சட்னி-dates sweet chutney-மிகவும் ருசியாக இருக்கும்!

4. http://geethaachalrecipe.blogspot.com/ [என் சமையல் அறையில்]

 இந்த வலைப்பூவின் சொந்தக்காரர் கீதா! 300க்கு மேல் சமையல் குறிப்புகள் கொடுத்து, 5 லட்சத்திற்கும் மேல் பார்வையாளர்களைப் பெற்றிருக்கும் இவர், பார்லி, கொள்ளு, ராகி, ஓட்ஸ் போன்ற உடலுக்கு நன்மைகள் தரும் தானிய வகைகளில் சமையல் குறிப்புகள் கொடுத்து வருவது இவரது தனிப்பாணி! இவருடைய பார்லி தட்டை மிக வித்தியாசமானது-செய்து பாருங்கள்.

 

ப்ரியா இந்த வலைத்தளத்தில் 1600க்கு மேல சமையல் குறிப்புகள் கொடுத்து 11 லட்சத்துக்கும் மேல் பார்வையாளர்களைப் பெற்றிருக்கிறார். பிரமிக்க வைக்கும் சாதனை இது. புதுப்புது கற்பனைகள் செய்து குறிப்புகள் எழுதுவதில் வல்லவர். இவருடைய Minty Oats Thattai மிகவும் சுவையான ஒன்று!

 

கனடாவில் வசிக்கும் கிருஷ்வேணியின் சமையலறை இது. குறைவான குறிப்புகள் தான் கொடுத்திருக்கிறார் என்றாலும் எல்லாமே நிறைவான, அதி ருசியானவை தான்! இவருடைய Nutty Brinjal Rice பார்க்கும்போதே சாப்பிடத் தோன்றும்!

7. http://annaimira.blogspot.com/ [மிராவின் கிச்சன்]

 காஞ்சனா ராதாகிருஷ்ணன் இந்த சமையல் வலைப்பூவிற்கு உரிமையாளர். 200க்கு மேல் குறிப்புகள் கொடுத்து வரும் இவர் எளிமையான சமையல் குறிப்புகளை தொடர்ந்து கொடுத்து வருகிறார். இவருடைய செள செள அல்வா சுலபமாகச் செய்யக்கூடிய ஒரு இனிப்பு!


காரைக்குடியில் பிந்து பெல்ஜியத்தில் வாழும் சித்ரா ‘ காரைக்குடி சமையல்’ என்ற வலைப்பூவைத் தொடங்கி இருக்கிறார். சுவையான செட்டி நாட்டு குறிப்புகளை தொடர்ந்து கொடுப்பார் என்று எதிர்பார்க்கலாம் இனி! இவருடய ரவா புட்டு மிகவும் ருசியான ஒன்று!


சிங்கப்பூரில் வாழும் இவரின் வலைப்பூ முழுவதும் சுவையான சமையல் குறிப்புகள். மிக அழகிய புகைப்படங்கள் இவரது தனிப்பாணி. பார்க்கும்போதே உடனேயே செய்யச் சொல்லும் இந்த இட்லியைப்பாருங்கள்


சென்னையில் வசிக்கும் தேனம்மை சமையலுக்கு அப்பாற்பட்டு,   கவிதைகள், கதைகள் எழுதுவதிலும்  வல்லவர். இவரின் செட்டி நாட்டு பாரம்பரிய சமையல் குறிப்புகள் எல்லாமே சிறப்பானவை. தமிழில் எழுதி, ஆங்கிலத்திலும் அதை மறுபடியும் எழுதி தமிழ் மொழி அறியாத எத்தனையோ பேருக்கு உதவியாக இருப்பது இவரது தனிச் சிறப்பு. இவரின் சீப்புச்சீடைக்காய் இங்கே!   

பின் குறிப்பு:

நேரமின்மையால் நான் நினைத்தவாறு இன்னும் அதிகமாக இங்கே பதிவர்களை அறிமுகப்படுத்த முடியவில்லை. இயன்றால் மறுபடியும் சமையல் பதிவர்களை அறிமுகப்படுத்துவேன்.

 
 
மேலும் வாசிக்க...

Monday, August 29, 2011

முத்துச்சிதறல்களில் என் முன்னுரை:முதலில் என்னை இந்த வாரம் வலைச்சர ஆசிரியர் பணிக்கு அழைத்து வாய்ப்பளித்த பொறுப்பாசிரியர் திரு.சீனா அய்யா அவர்களுக்கும் அவர்களது குழுவினருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியினை முதலில் தெரிவித்துக் கொள்ள‌ விரும்புகிறேன். சில மாதங்களுக்கு முன்பேயே என்னைப் பரிந்துரைத்த திருமதி.லக்ஷ்மி, திரு.வை.கோபாலகிருஷ்ணன் இருவருக்கும் அன்பு நிறைந்த நன்றி! 

என் மகன் தனது படிப்பு காரணமாக 2004-ல் அமெரிக்கா கிளம்பிய போது, 'மையம்' என்ற வலைத்தளத்தில் எனக்காக ஒரு சமையல் பிரிவை[http://www.mayyam.com/talk/forumdisplay.php?25-Indian-Food] ஆரம்பித்து வைத்து கணினியுடன் எனக்கான உறவைத்தொடர வைத்துச் சென்றார். நானே எதிர்பார்க்காத வகையில் நிறைய பேருக்கு அது பெரும் துணையென மாற, எனக்கு லட்சக்கணக்கில் பார்வையாளர்களையும் அது ஈட்டித் தந்தது. ஆனால் மனதின் அனைத்து தாகங்களுக்கும் ஒரு வடிகாலாக ஒரு வலைப்பூ எனக்கென உருவாக்க விழைந்ததில் உருவானது தான் 'முத்துச் சிதறல்'.

என் 'முத்துச் சிதறலில்' உள்ள‌‌ முத்துக்கள் தரம் வாய்ந்ததாகவும் அழகானதாகவும் சிந்தையைக்கவர்வனவாகவும் இருக்க வேன்டுமென்பதில் நான் மிகவும் அக்கறை எடுத்துக் கொள்கிறேன். முதலில் இல்லத்தரசி என்ற பதவியின் பொறுப்புகள், சுமைகள், அதற்குப்பிறகு தான் பதிவர் என்ற நிலையில் இருப்பதால் கடந்த மார்ச்சிலிருந்து இது வரை 94 பதிவுகள் தான் எழுத முடிந்தது. இருப்பினும் இந்த வலைப்பூ மூலம் கிடைத்த அபிரிதமான உற்சாகம், அருமையான‌ தோழமைகள், அவர்களின் அன்பான பின்னூட்டங்கள், எல்லாமே எனக்குக் கிடைத்திருக்கும் பொக்கிஷங்கள்!! இளமையில் கிடைத்து, அனுபவித்து, நடு வயதின் அழுத்தங்களில், மின்வேக சுழற்சிகளில், மற‌ந்து போன தமிழ்க்கவிதைகளும் நூல்களும் இலக்கிய அலசலும் அவற்றின் இனிமையும் அனுபவங்களும் இப்போது புதிதாய்ப் பிறந்தது போல திரும்பக் கிடைத்திருக்கின்றன!  மனதை நெக்குருக வைக்கும் கவிதைகள் எத்தனை! அசர வைக்கும் ஓவியச் சிதறல்கள் எத்தனை! நெத்தியடியாய் நெஞ்சில் அறைவது போல மனதை ஊடுருவும் எண்ணச் சிதறல்கள் எத்தனை! ஆக்கப்பூர்வமாய் உதவும் கரங்களாய் செயல்படும் வலைத்தளங்கள் எத்தனை! தெளிந்த சிந்தனையுடன், நகைச்சுவை உணர்வுடன், சமுதாய நோக்குடன், செந்தமிழின் தாக்கத்துடன் எத்தனை எத்தனை பதிவர்கள்!! பிரமிக்க வைக்கும் இந்த மகா சமுத்திரத்தில் சிறு துளியாக நான்!

இந்தச் சிறு துளியிடம் சிறிய வேண்டுகோள் ஒன்று இருக்கிறது!

மகாத்மா காந்தியின் முழுமையான தத்துவமே உண்மையும் அன்பும்தான். பார்வையிழந்தவர்களால்கூடப் பார்க்க முடிகின்ற. பேசும் திறனில்லாதவர்களால்கூட பேச முடிகின்ற, செவிப்புலன்களை இழந்தவர்களால்கூட கேட்க முடிகின்ற ஒரே மொழி அன்பு ஒன்று தான். அதே போல, ‘ எங்கே உண்மை இருக்கிறதோ, அங்கு தான் உண்மையான அழகும் தெய்வீகமும் இணைந்திருக்கின்றன, இம்மூன்றையும் தனித்தனியே இனம் பிரித்தல் இயலாததொன்று’ என்கிறார் காந்தி!

இன்றைய இயந்திர உலகில் இவையெல்லாம் மறந்து போன விஷயங்களாகி விட்டன. வளரும் சிறு குழந்தைகளுக்கு அலைபேசி, கணினி தெரிந்த அளவிற்கு,  நல்ல பண்புகள், சினேகிதம், கருணை, அன்பு- இதெல்லாம் தெரிவதில்லை. சொல்லித்தரப்படுவதுமில்லை. வலையுலகமும் சக்தி வாய்ந்த ஒரு ஆயுதம்தான். கிட்டத்தட்ட தேய்ந்தே போய்விட்ட இது போன்ற நல் உணர்வுகளை மையப்படுத்தி அவ்வப்போது தங்கள் வலைப்பூக்களில் எழுத வேண்டுமென்று அனைத்து அன்புத் தோழமைகளிடம் இங்கே நான் வேண்டுகோள் விடுக்கிறேன்!

நாளையிலிருந்து, ஒவ்வொரு முத்துக்குவியலாய் பார்க்க
ஆரம்பிக்கலாம்!!     

 எனக்குப் பிடித்த எனது பதிவுகளில் சில:


மேலும் வாசிக்க...

Sunday, August 28, 2011

வைகையிடம் இருந்து பொறுப்பேற்கிறார் மனோ சாமிநாதன்

அன்பின் சக பதிவர்களே

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற வைகை - தான் ஏற்ற பொறுப்பினை முழு ஈடுபாட்டுடனும், மன நிறைவுடனும், மகிழ்ச்சியாக நிறைவேற்றி நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.

இவர் ஏழு இடுகைகள் இட்டு ஏறத்தாழ நானூறு மறு மொழிகள் பெற்றிருக்கிறார். இவர் தனது சுய அறிமுகமான முதல் பதிவில் ஏறத்தாழ இருபதுக்கும் மேற்பட்ட தன் பதிவுகளை அறிமுகம் செய்து, பிறகு இசை, மருந்துகள், வேலை வாய்ப்புகள், பயணம், தொழில் நுட்பம் மற்றும் டெரர் கும்மி குழும நண்பர்கள் எனப் பல்வேறு தலைப்புகளில் ஏறத்தாழ எண்பது இடுகைகளை அறிமுகம் செய்திருக்கிறார்.

ஏற்ற பொறுப்பினை நிறை வேற்றியதில் அவரது கடும் உழைப்பு தெரிகிறது. அவரை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை கலந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

அடுத்து நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க வருகிறார் மனோ சாமிநாதன். இவர் முத்துச் சிதறல் என்னும் வலைப்பூவினிலும், mano's delicious kitchen என்னும் ஆங்கில வலைப்பூவினிலும் எழுதி வருகிறார். இரண்டு வலைப்பூக்களிலுமே எண்பதுக்கும் மேலான இடுகைகள் இட்டிருக்கிறார். இரண்டிலும் சேர்த்து இறுநூறுக்கும் மேல் பதிவர்கள் பின் தொடர்கின்றனர்.

இவர் தஞ்சையைச் சேர்ந்தவர் - ஐக்கிய அரபுக் குடியரசில் 35 ஆண்டுகட்கும் மேலாக குடும்பத்துடன் வசிப்பவர். எழுபதுகளில் தமிழ் வார இதழ்களில் ஓவியராகவும் சிறுகதை எழுத்தாளராகவும் இருந்திருக்கிறார். கர்நாடக இசையும் பயின்றிருக்கிறார். மையம் என்ற வலைத் தளத்தில் 2004 முதல் சமையல் குறிப்புகள் எழுதி 11 இலட்சம் பார்வையாளர்களைப் பெற்றிருக்கிறார்.

சகோதரி மனோ சாமிநாதனை வருக வருக என வரவேற்று வாழ்த்துவதில் பெருமை அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் வைகை
நல்வாழ்த்துகள் மனோ சாமி நாதன்

நட்புடன் சீனா

மேலும் வாசிக்க...

விடை கொடு எந்தன் நாடே.... :-)

அனைவருக்கும் வணக்கம்,

ஒரு வாரம் போயே போச்சு..இட்ஸ் கான்.... எல்லோருக்கும் நன்றின்னு ஒரு சின்ன வரில முடிக்காம.. வைகைன்னு என்னை அடையாளம் காண உதவிய நண்பர்களையும் உங்களுக்கு அடையாளம் காட்ட ஆசைப்படறேன்! நான் முதன் முதலில் படிச்ச தமிழ் ப்ளாக் ( அப்ப..இங்க்லீஷ் ப்ளாக் வேற படிச்சியான்னு கேட்டு அசிங்கப்படுத்தாதிங்க!) அடராசக்கை சிபியோட தளம்தான்! அவரை பார்த்துதான் எழுதவந்தேன்.!  முதன்முதலில் எழுதிவிட்டு ஒரு நாள் முழுவதும் F5 பட்டனை அழுத்தி பார்த்து ஓய்ந்துவிட்டு போய்விட்டேன்.. மறுநாள் என்ன ஒரு ஆச்சர்யம் மாணவன் வந்து கமென்ட் போட்டு என்னை ஊக்கப்படுத்தினார்! ஒண்ணுமே தெரியாமல் தத்தி தத்தி வந்த போது வந்தே மாதரம் சசியின் பதிவுகளை வைத்துதான் பல விஷயங்கள் கற்றுக்கொண்டேன்!  
என்ன எழுதுவது என்று தெரியாமல் எதையாவது எழுதியபோது இப்படியும் நகைச்சுவையாக எழுதலாம் என்று ஆசைப்படவைத்தவர்கள் சிரிப்பு போலிஸ் ரமேசும் பன்னிக்குட்டி ராமசாமியும்! எனக்கு அரசியல் ஆர்வம் அதிகம் ஆனா அதை இப்படியும் காட்டமாக எழுதலாம் என்று காட்டியவர் பட்டாபட்டி! ஒரு பதிவு எப்படி இருக்ககூடாது என்பதை என் நண்பன் டெரர் பாண்டியனின் பதிவை பார்த்து கற்றுக்கொண்டேன்! அனைவருக்கும் எனது நன்றிகள்!

இப்படி தனித்தனியாக பழகிவந்த நான் டெரர் கும்மியில் ஐக்கியமான போது இன்னும் பல புதிய நண்பர்களை அடையாளம் கண்டுகொண்டேன்! ஒட்டகம் மேய்த்த அனுபவத்தில் நண்பர்களை மேய்க்கும் டெரர் பாண்டியன்.. தகுதியே இல்லாமல் தன்னை தலைவர் என்று சொல்லிக்கொள்ளும் ரமேஷ்... தலைவர் ஆவதற்கு எல்லா தகுதியும் இருந்தும் தன்னடக்கத்தோடு இருக்கும் இம்சை அரசன் பாபு... ரமேஷ் என்ன செய்தாலும் "துப்பரவாளர்கள்"(காரி) 


இப்படி பல துப்புரவாளர்கள் இருக்கிறார்கள்! 

அதுபோக எங்கள் டெரர் கும்மியின் மாயாவிகள்  மங்குனி அமைச்சர், ஜூனியர் அருண்......அடுத்து  தல வெங்கட்.இவரு எப்ப வருவாரு எப்பிடி வருவாருன்னு யாருக்கும் தெரியாது..ஆனா வரவேண்டிய நேரத்துக்கு கரெக்டா வந்துருவாரு! எங்கள் குழுமத்தின் காதல் இளவரசன் நாகராஜசோழன்... தோழிக்கு பஸ் விட்டே பஞ்சரானவர் இவர்! அடுத்து முக்கியமான ஒருத்தர் தம்பி செல்வா.. இதுக்கும் வந்து இப்ப இதனால என்னாகும்னு கேப்பாரு! இன்னொரு சயனைட் பதிவர் இருக்காரு..அவருதான் தினேஷ் குமார்! கவிதைகளால் உடனடி மரணம் என்று நிரூபித்தவர்! எங்கள் டெரர் கும்மியின் என்சைக்ளோ பீடியா எஸ்.கே.. ஹன்ட் ஃபார் ஹின்ட் விளையாட்டின் விதையை எங்களிடம் விதைத்த அருண் பிரசாத்..  இவர்களிடம் எப்படி மாட்டினோம் என்று தெரியாமலே விதியை நொந்தபடி இருக்கும் மாதவன்.. பெ.சோ.வி.. இப்படி..இதுதான் எங்கள் குடும்பம்.. இது ஒரு பல ஊர்களை சேர்ந்த குருவிகளின் கூடு! :-))

இதுவரை என்னோடு தொடர்ந்து வந்து ஆதரவு தந்த உங்களுக்கு எனது நன்றிகள்... இந்த அரிய வாய்ப்பினை அளித்த சீனா ஐயாவுக்கும் என் நன்றிகள்! அட இருங்க...படம் இன்னும் முடியல... எப்பிடி முடித்தாலும் நீங்க வைகை கவிதையாக முடித்தான்னு சொல்லணும்...அதனால கடைசியா சில கவிதைகளை பார்த்திட்டு போங்க.. :-))

காதல்.. ஒரு அற்புதமான உணர்வு.. ஒரு பெண் தன் காதலனை பார்த்து எப்படி வியக்கிறார் என்று மாலதி ரசித்து எழுதுகிறார் பாருங்கள்!

ஒரு காதலன் காதலியை எப்படியெல்லாம் கொண்டாடுகிறார் என்று பாருங்கள்... எங்கேன்னு கேக்குறீங்களா? மஞ்சு பாஷிணி கதம்ப உணர்வுகளில் சொலுகிறார் போய் பாருங்கள்!

இனிய உணர்வுகளோடு உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.

நன்றியுடனும் வாழ்த்துக்களுடனும்,
வைகை 

மேலும் வாசிக்க...

Saturday, August 27, 2011

புதிய மனிதாதாதா...........பூமிக்கு வா... :-))

அனைவருக்கும் வணக்கம்,
கடந்த சில நாட்களா பணம் படிப்பு வேலை மருத்துவம்னு பல துறைகளை பற்றி பார்த்தாச்சு... ஆனால் அனைவருமே கொஞ்சம் தயக்கத்துடனே அணுகுவது இந்த தொழில் நுட்பம்தான்! இது பார்க்கத்தான் யானை மாதிரி இருக்கும்..ஆனால் கொஞ்சம் பழகிவிட்டால் மவுஸ் என்னும் அங்குசத்தால் அதை ஆட்டுவிக்கலாம்! இதைப்பற்றி பல ஜாம்பவான்கள் இங்க எழுதிகிட்டு இருக்காங்க.. கொஞ்சம் பார்வையையும் கொஞ்ச நேரத்தையும் அதற்க்கு ஒதுக்குனாவே போதும் வீட்டுக்கு ஏன் லேட்டுன்னு கேட்க்கிற மனைவியிடமிருந்தும்.. கல்யாணம் ஆகாதவங்க பெற்றவர்களிடமும் எதாவது புரியாத டெக்னிக்கல் வார்த்தையா சொல்லி தப்பிக்கலாம்! சப்போஸ் உங்க மனைவியும் இங்க இருந்து கத்துகிட்டா அதுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல! விதி வலியது :))
இன்றைக்கு உள்ள இளைஞர்கள் மூணு வேளை சாப்பாடு இல்லைனாலும் கவலைப்பட மாட்டாங்க ஆனா... ஒரு வேளை பேஸ் புக் தளத்தை ஒப்பன் பண்ணலைனா அவங்களால தாங்கவே முடியாது.. அப்படி ஒன்றி விட்டார்கள்! அப்படி வாழ்வோடு பிண்ணிபினைந்த உங்கள் பேஸ் புக் பயனர் கணக்கை யாராவது ஹேக் பண்ணினால் எப்பிடி இருக்கும்? தாங்க முடியாதுள்ள?.. அப்ப நீங்க அவசியம் இந்த தளத்தை படிங்க!

மொபைல் போன்ல வாய்ஸ் மெயில் அனுப்புவதைப்பற்றி பெரும்பாலும் அனைவருக்குமே தெரிந்திருக்கும்.. ஆனால் அதே வசதி மின்னஞ்சலில் வந்தால் எப்படி இருக்கும்? என்ன கொடுமையா இருக்குமா? எழுத்துல திட்ற மேனேஜர் இனி வார்த்தையாலும் திட்டுவாரோ?.. அத விடுங்க.. ஆனா உங்க காதலிக்கு உங்கள் குரலிலே ஐ லவ் யூ சொல்லலாம் பாருங்க? சொன்னதுமே ஆசையா இருக்கா? அப்ப... இந்த தளத்தில் சென்று பாருங்கள்!

நீங்க பொண்ணு பார்க்கிறதுக்கு போட்டோ அனுப்பினா..இருப்பதிலே நல்ல போட்டோவ தேடி அனுப்புறதுக்குள்ள போதும்..போதும்னு ஆயிருதா? ( சட்டில இருக்கனும்ங்க) ஆனா.. எவ்வளவு மட்டமா இருந்தாலும் அத போட்டோசாப்ள வச்சு முகத்தில் உள்ள பரு கரும்புள்ளி எல்லாத்தையும் எடுத்துட்டு..சும்மா சிவாஜி வெள்ளைக்கார ரஜினி கணக்கா அனுப்பலாம்! என்ன ஆசையா இருக்கா? அப்ப இந்த தளத்தில் சென்று பார்க்கவும்!

அப்பிடியே உங்க முகத்த அழகுபடுத்தின்னாலும்.. பேக்ரவுண்ட்ல நீங்க நின்னுகிட்டு இருந்த டாஸ்மாக் போர்ட் தெரியுதா? வேற வினையே வேண்டாம்..ஊத்தி மூடிருவாங்க! அப்ப என்ன பண்ணனும்? பேக்ரவுண்ட மறைக்கணும்..வேற கலர்ல கொண்டுவரணும்.. அப்ப நீங்க அவசியம் இந்த பதிவ போய் படிச்சிட்டு வாங்க!

அடிச்சு பிடிச்சு கல்யாணம் பண்ணி வந்த புதுசுல உங்களுக்கு எல்லா வேலையும் இழுத்துபோட்டு செய்வாங்க உங்க மனைவி.. கொஞ்ச நாள் ஆச்சுனா.. உங்களுக்கு என்ன நான் பி.ஏவா அப்பிடின்னு கேப்பாங்க! ( யாருப்பா அது? அனுபவமான்னு கேக்குறது?) இதை தொல்லையே வேண்டாம்னு என்ன பண்ணுங்க.. இந்த பதிவ போய் படிச்சிட்டு அதுல சொல்லியிருக்க மாதிரி செய்ங்க.. இனி உங்க லேப்டாப்பே அந்த வேலைய பார்க்கும்!

ஆரம்பத்துல அழகா தெரியுற உங்க மனைவியோட பேச்சு..கொஞ்ச நாள் ஆனா அதிகமா தோணுதா? வாங்க நீங்க நம்ம கட்சி.. அப்ப என்ன பண்ணுங்க, இணையத்துல ஒரு இணைய வானொலிய ஆரம்பிச்சு கொடுத்துருங்க! நீங்க பெற்ற துன்பம் பெறட்டும் இவ்வையகம்! எப்பிடி இதை ஆரம்பிக்கிறதுன்னு கேக்குறீங்களா? உங்களுக்காகவே இந்த தளத்தில் சொல்லியிருக்கார் போய் படிங்க! ( பாவம்..அவருக்கு என்ன கஷ்டமோ?)

இது எதுமே பத்தாது..இன்னும் நிறைய தளங்களின் முகவரிகள் வேணும்னு சொல்றீங்களா? அப்ப.. நீங்க அவசியம் இந்த தளத்தில் போய் பாருங்க .. தொழில்நுட்ப பதிவர்களின் முகவரிகளை தொகுத்து தந்திருக்கிறார்!

மேல.. மனைவியை பற்றி சொன்னதெல்லாம் நகைசுவைக்காக மட்டுமே.. நீங்கள் எவ்வளவு பெரிய டெக்னிக்கல் புலியாக வேணாலும் இருங்கள்..வீட்டுக்குள் செல்லும்போது செருப்போடு சேர்த்து அதையும் வாசலிலே விட்டு சென்றுவிடுங்கள்! மகிழ்ச்சியான குடும்பத்திற்கு அதுவே முதல்படி :-))

நன்றியும் வாழ்த்துக்களுடனும்,

வைகை
மேலும் வாசிக்க...

Friday, August 26, 2011

எங்கே நிம்மதி?...எங்கே நிம்மதி? :-))

அனைவருக்கும் வணக்கம்,

நேற்று வேலைவாய்ப்பு செய்திகளை பற்றி படித்திருப்பீர்கள்.. வேலை கிடைக்கும்வரைதான் மனது வேலை பணம் பற்றியே சிந்திக்கும்! மனதுக்கு நிறைவான வேலையும் போதும் என்ற பொருளாதார நிலையம் வந்துவிட்டால் நம் மனது அடுத்த கட்ட சந்தோசத்துக்கு ஏங்க ஆரம்பிக்கும்! அது ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.. சிலர் ஆன்மீக தேடலில் இறங்கி கோவில் கோவிலாக சுற்ற நினைப்பார்கள்.. சிலர் எந்த இடமாக இருந்தாலும் பரவாயில்லை..பயணம் செய்ய வேண்டும்..இன்னும் சிலர் மனது விட்டு சிரிக்க நினைப்பார்கள்! சுருக்கமா சொல்லனும்னா ஒவ்வொரு மனுஷனுக்குள்ளயும் ஒவ்வொரு ஃபீலிங்.. தொடந்து படிங்க..உங்க ஃபீலிங் எதோட ஒத்துப்போகுதுன்னு பாருங்க! 


ரத்தம் சூடாக இருக்கும்வரை கடவுளே இல்லை என்பவர்கள் கூட குறிப்பிட்ட வயதிற்கு மேல் சுற்றி இருப்பவர்களின் கண்களை கட்டிவிட்டு கடவுளை தரிசிப்பதை கண்கூடாக பார்க்கிறோம்..இப்ப அது இல்லை விஷயம்.. இலங்கையில் உள்ள இந்த திருக்கேதீச்சரம் கோவிலை பற்றியும் அங்கு சென்று வந்ததைப்பற்றியும் திருமதி பக்கங்கள் என்று வைத்துக்கொண்டு திருமதி கோமதி அரசு விவரிக்கிறார் சென்று பாருங்கள்.. நீங்கள் அங்கு செல்லவே வேண்டாம்..சென்று வந்த உணர்வு வரும்!


அட என்னங்க இலங்கை கோவிலா சொல்றீங்க?  நம்ம நாட்டுக்குள்ளே ஒரு அருமையான கோவில சொல்லுங்கன்னு சொல்றீங்களா? அப்ப உங்களுக்காக மைசூரையும் அங்க உள்ள கோவிலையும் ராம்வி எப்படி ரசிச்சு சொல்றாங்கன்னு மதுரகவில போய் பாருங்க.


சிலருக்கு ஏதாவது வெளிநாடு செல்லவேண்டும் என்று நினைப்பார்கள் உடல்நிலையும் பொருளாதாரமும் ஒத்துழைத்தால் உலகத்தில் எங்கு வேணாலும் செல்லலாம்.. இன்றைக்கு உலகம் அப்படி சுருங்கி விட்டது! அதிலும் பூலோக சொர்க்கம் சுவிஸ் பயணம் என்றால் கேட்க்கவா வேண்டும்? அதற்காக கருப்பு பணத்தை சுவிஸ் வங்கியில் பதுக்க சொல்லவில்லை...நிலா முகிலன் எழுதும் பூலோக சுவர்க்கம் சுவிஸ் பயணம் படியுங்கள்.. ஓசியில் சென்று வந்த உணர்வு வரும்!


உழைத்து களைத்து வீட்டில் இருப்பவர்கள் தனது பேரன் பேத்திகளோடு நேரத்தை கழித்து ஆனந்தமடைவார்கள்! ஆனால் வாண்டுகள் எப்போதுமே கதை கேட்க்கும் ஆர்வமுடையவர்கள்.. அடிக்கடி ஏதாவது கதை சொன்னால்தான் உங்களோடு ஒன்றுவார்கள்! நமக்கு எந்த கதையும் தெரியவில்லையே என்று வருந்தாதீர்கள்..உங்களுக்காகவே ஆனந்த வெளியில் கேணிப்பித்தன் கதைகளை படித்துக்கொண்டிருக்கிறார்..சென்று பார்த்து பிள்ளைகளை மகிழ்ச்சிகடலில் ஆழ்த்துங்கள்!


சிலருக்கு வீட்டில் ஓய்வெடுத்தாலும் அந்த நேரத்திலும் உருப்படியாய் ஏதாவது பணம் செய்ய முடியுமா என்று பார்ப்பார்கள்! அப்படி யோசிப்பவர்களின் முதல் தேர்வு பங்கு வர்த்தகம்! ஆனால் எப்படி எங்கிருந்து ஆரம்பிப்பது என்று தெரியாது.. அவர்களுக்காகவே M.R என்ற நண்பர் பங்கு வர்த்தகம் என்ற தளத்தில் சொல்லுகிறார்! சென்று பாருங்கள். 


சிலருக்கு வேண்டியது தனி உலகம் ஆளே இல்லையென்றாலும் எதையாது படித்து சிரித்துக்கொண்டிருந்தால்  போதும்! அப்படி நீங்கள் நினைத்தால் கண்டிப்பாக இந்த அதிரடிக்காரன் எழுதிய எவண்டி உன்னை பெத்தான் ரீ மிக்ஸ் பாட்ட பாருங்க! கண்டிப்பா முழுவதும் உங்களால் படிக்க முடியாது! இடையிலேயே வயிற்று வலி வரலாம்!


அட எதுவுமே வேண்டாம்.. ஓய்வுக்கு பிறகு அறிவும் ஆற்றலும் வீணா போகுதேன்னு கவலைப்படற ஆளா நீங்க? அப்ப வாங்க உங்களுக்காகத்தான் டெரர் கும்மில ஹன்ட் ஃபார் ஹின்ட்னு போட்டிநடத்துனாங்க.. திறமை இருந்தா விளையாண்டு பாருங்க! ஏன்னா இது அறிவாளிகளுக்கான விளையாட்டு! 


என்னதான் நல்ல வேலையிலிருந்து நன்றாக பொருள் ஈட்டி நிம்மதியாக ஓய்வெடுத்தாலும் இல்லாதவனுக்கு கொஞ்சம் உதவி செய்து அவன் வாயால் கொஞ்சம் வாழ்த்துக்களை வாங்கி பாருங்கள்.. அது ஒரு போதை.. அந்த நல்ல போதையை அனுபவித்து பாருங்கள்.. இந்த இணைய தளங்கள் உங்களுக்கு தேவையில்லை!

நன்றியும் வாழ்த்துக்களுடனும்,
 
வைகை

மேலும் வாசிக்க...

Thursday, August 25, 2011

விஸ்வநாதன்... வேலை வேண்டும் :-))

அனைவருக்கும் வணக்கம்,
நேத்து கொஞ்சம் மருந்து  வாடை அதிகமா தெரிஞ்சதுன்னு நினைக்கிறேன்.. மனசு சந்தோசமா இருந்தா எந்த நோயும் அண்டாது! மனசு சந்தோசமா இருக்க என்ன வேணும்? இந்த காலத்துல வேற என்ன? பணம்தான்! பணம் ஈட்ட நல்ல வேலை கிடைக்கணும்.. நல்ல வேலை கிடைக்க நல்லா படிக்கணும்! என்னடா..இதுதான் எல்லோருக்கும் தெரியுமேன்னு சொல்றீங்களா? பரவாயில்ல.. ஆனா இதெல்லாம் எப்படி சாத்தியம் என்று எல்லோருக்கும் தெரிவதில்லை! முறையான வழிகாட்டல் இல்லாமல் தவறான கல்வியை தவறானா கல்லூரியில் படித்தவர்களும் உண்டு! அப்படியே நல்ல படிப்பு படித்தாலும் எவ்வாறு வேலை தேடிக்கொள்வது என்று பலபேருக்கு தெரிவதில்லை! இந்த கவலைகள் உங்களுக்கு இருந்தால் மேலும் படியுங்கள்.. இல்லையென்றாலும் படியுங்கள்.. நண்பர்களுக்கு சொல்லுங்கள்!
பல கிராமப்புற மாணவர்களுக்கு பள்ளி முடிந்து கல்லூரி செல்லும்போது அங்கு அரசு தனக்கு என்ன சலுகைகளையும் உதவிகளையும் தருகிறது என்பதுகூட முழுமையாக தெரியாது! அவர்களுக்காகவே இவர் முதல் பட்டதாரி மாணவர்களுக்கு அரசு அளிக்கும் சலுகைகளையும் கவுன்சிலிங் பற்றியும் குடிமகன் என்று பேரை வைத்துக்கொண்டு விளக்கமாக கூறுகிறார் சென்று பாருங்கள்!

சரி..கல்லூரியை முடித்துவிட்டீர்கள்? மேற்படிப்பு வெளிநாட்டில் படிக்க ஆசையா? ஆனால் எந்த கல்லூரி எந்த நாட்டில் சிறந்தது என்ற குழப்பம் வரும்! உங்களுக்காகத்தான் இந்த தளம்! MBA என்ற தளத்தை வைத்துக்கொண்டு மஹா கொடுக்கும் பட்டியலையும் தகவல்களையும் சென்று பாருங்கள்! உதவியாக இருக்கும்.

நம்மில் பலருக்கு ஆசிரியர் தொழில்தான் கனவாக இருக்கும்..அதிலும் அந்த வேலை அரசாங்க வேலையாக அமைந்துவிட்டால்? இரட்டை சந்தோசம்தான்! தமிழக அரசின் ஆசிரியர் வேலைவாய்ப்பு செய்திகளை இந்த தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு செய்திகள் தளத்தில் சென்று பாருங்கள்! அரசின் அறிவிப்புகள் தகவல்கள் உடனுக்குடன் இங்கு கிடைக்கின்றது!

தமிழ்நாடு மட்டும் இல்லை இந்தியாவில் எந்த மூலையில் அரசாங்க வேலையிருந்தாலும் பரவாயில்லை என்று நினைப்பவரா நீங்கள்? அப்போ.. நீங்கள் அவசியம் சென்று இந்த கவர்மென்ட் ஜாப்ஸ் இன் இந்தியா என்ற தளத்தை பாருங்கள்! கண்டிப்பாக உங்களுக்கு வேலை கிடைக்கும்!

படித்த படிப்புக்கு வேலையில்லையே என்று கவலைப்படுபவரா நீங்கள்? நீங்கள் அவசியம் இந்த சர்காரி - நவ்க்ரி என்ற தளத்தை பாருங்கள்.. உங்கள் வேலையை நீங்களே தேர்ந்தெடுக்கலாம்! அவ்வளவு வேலைவாய்ப்பு செய்திகள் இங்கு கொட்டி கிடக்கின்றது!

உள்நாட்டில் வேலை வேண்டாம்..வெளிநாட்டில்தான் வேண்டும் என்று அடம்பிடிப்பவரா நீங்கள்? ஒரு நாட்டுக்கு செல்லும் முன் அந்த நாட்டின் குடிநுழைவு விதிகளை பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்! இந்த தகவல்களுடன் அங்கு உள்ள வேலை வாய்ப்புகளையும் பட்டியல் இடுகிறது இந்த தளம். அவசியம் சென்று பாருங்கள்.

வெளிநாட்டில் குறிப்பாக சிங்கபூரில்தான் வேலை வேண்டுமா? நீங்கள் இந்த தோத்தவண்டா தளத்தை தொடர்ந்து வாருங்கள்.. உங்கள் வேலை தேடும் முயற்சி வெற்றி அடையும்! அவ்வப்போது சிங்கப்பூரின் வேலைவாய்ப்பு செய்திகளை பதிந்து வருகிறார் இவர்.


எவ்வளவு படித்து எங்கு வேலை பார்த்தாலும் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் உண்மையாக உழையுங்கள்! உயர்வு உங்களை தேடி வரும்! (யாருப்பா அது? நீ ஏன்டா அலுவலக நேரத்துல வேலை பார்க்காம இந்த பதிவ போட்டன்னு கேக்குறது? அட்வைஸ் வேப்பெண்ணை மாதிரி கொடுக்குறது ஈசி.. குடிக்கிறதுதான் கஷ்டம்..ஹி..ஹி)


 
நன்றியுடனும் வாழ்த்துக்களுடனும்,
வைகை 


மேலும் வாசிக்க...

Wednesday, August 24, 2011

கண்கள் இரண்டால்..உன் கண்கள் இரண்டால்... :-))

அனைவருக்கும் வணக்கம்,
நேற்று இசை மழையில் நனைந்த உங்கள் மனதுக்கு கொஞ்சம் ஜலதோஷம் பிடித்திருக்கும்! அதனால்தான் இன்று கொஞ்சம் மருந்துகளோடு வருகிறேன்! பெரும்பாலும் எல்லோருக்குமே நம் உடல் உறுப்புகள்மீது அதிக அக்கறை இருக்கும்! அற்புத கீர்த்தி வேண்டின்.. ஆனந்த வாழ்வு வேண்டின் என்ற காலம் போய்.. அற்புத கண்கள் வேண்டின்.. அளவான தொப்பை வேண்டின்..இப்படி வேண்டிக்கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டோம்! இதற்க்கு நமது வேலை சூழ்நிலையும் உணவு பழக்க வழக்கங்களும்தான் காரணம்! இந்த சூழ்நிலையிலும் நம் உடம்பை பராமரிப்பது எப்படி என்று பல பெரியவங்க இலவசமாகவே சொல்றாங்க.. என்னான்னுதான் கொஞ்சம் போய் பாருங்களேன்! :)கண்... நம் உடம்பில் அதிமுக்கியமான உறுப்பு! ஒருவனின் வாயில் வரும் வார்த்தைகளை விட கண்களில் வரும் வார்த்தைகள் உண்மையை சொல்லிவிடும்! பல அழகான பெண்களின் கண்களை நேருக்கு நேர் பார்க்கமுடியாமல் தவித்த பல ஆண்களில் நானும் ஒருவன்.. அவ்வளவு கூர்மை.. நம்ம கஜோல் கண்கள் போல! அந்த கண்களை எப்படி பாதுகாப்பது? எப்படி சோர்வடைய விடாமல் செய்வது? அழகாக்குவது? இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை தெரிய வனப்பு தளத்தில் சந்திரகௌரி சொல்லுகிறார் போய் பாருங்கள்!

என்றுமே இளமையாக இருக்க வேண்டும்! இப்படி யாருக்குத்தான் ஆசை இருக்காது? ஆனால் அதற்க்கு என்ன செய்ய வேண்டும் என்று யாருக்குமே தெரியாது! மெடிக்கல் நியூஸ் என்ற இந்த தளத்தை சென்று பாருங்கள்.. அள்ள.. அள்ள குறையாத அமுத சுரபியாக மருத்துவ தகவல்கள் கொட்டி கிடக்கிறது!

முதுகுவலி.. இதுதான் இன்றைய பெரும்பாலோனரின் பிரச்னை! ஏனென்றால் நமது வேலைகளை நாம் அவ்வாறு அமைத்துக்கொண்டோம்! சில தமிழ் படங்களை உட்க்கார்ந்து பார்த்தாலும் முதுகு வலிதான் மிச்சம்! கவலைய விடுங்கள் எதுவுமே தப்பில்லை என்று சொல்லி டாக்டர் சுனில் முதுகு வலிக்கான காரணங்களையும் தீர்வையும் சொல்லுகிறார் போய் பாருங்கள்! அப்பறம் பாருங்க.. நீங்க தைரியமா பவர் ஸ்டார் படமே பார்க்கலாம்!

சில குழந்தைகளும் சரி..  டீன் ஏஜில் இருக்கும் குழந்தைகள் சிலருக்கும் இயல்பான சுறுசுறுப்பான நடவடிக்கை இல்லாமல்... ஒருவித சோகைத்தன்மையுடன் இருப்பார்கள்! இதற்க்கு ரத்த சோகையே காரணம் அதை எப்படி குணமாக்குவது என்று வழிமுறைகளுடன் ஆயுர்வேதமருத்துவத்தில் சொல்லுகிறார் சென்று பாருங்கள்!

மன அழுத்தம்.. இன்று சர்வ சாதாரணமாக இது அனைவருக்கும் உள்ளது! சில பேரோட பதிவ படிச்சா அது இன்னும் கூடும்.. அத விட்ருங்க! ஆனா.. வெளிப்படையான நோயை விட இது கொஞ்சம் ஆபத்தானது! கவனிக்காமல் விட்டால் குடும்பத்தையே சிதைக்கும் தன்மையுள்ளது! இந்த உளவியல் நோய்க்கு சித்த மருத்துவத்தில் தீர்வு உள்ளது என்று அடித்து கூறுகிறார் போளூர் தயாநிதி! இதை பார்க்காமல் விட்டோமே என்று மன அழுத்தத்துக்கு ஆளாகாமல் எதற்கும் சென்று பார்த்துவிடுங்கள்!

குழல் இனிது.. யாழ் இனிது என்பார்..தன் மக்கள் மழலை சொல் கேளாதோர்.. இதைவிட குழந்தைகளின் அருமையை எப்படி சொல்லமுடியும்? இன்று பல தம்பதியர்களின் கவலையே குழந்தை இல்லை என்பதுதான்! இதற்க்கு உளவியல் ரீதியாகவும் மருத்துவ ரீதியாகவும் பல காரணங்கள் உள்ளன! இதைப்பற்றிய பல வாசகர்களின் சந்தேகங்களுக்கு பதிலையும் தீர்வையும் மருத்துவம் பேசுகிறது என்று சொல்லிக்கொண்டிருக்கிறார் பாருங்கள்!

எல்லாத்துக்கும் மருந்து சொல்லியாச்சு.. காதல் நோய்க்கு மருந்து எங்கன்னு கேக்குறவங்களுக்கு.. காதல் நோய்க்கு மருந்தும் காதல்தான்! கொஞ்சம் அதிகமாக உண்மையாக காதலித்துப்பாருங்கள்... அதுவே மருந்து போலதான்!


நன்றியுடனும் வாழ்த்துகளுடனும்..
வைகை.

மேலும் வாசிக்க...

Tuesday, August 23, 2011

முதன் முதல் ராக தீபம் ஏற்றும் வேளை :-))

அனைவருக்கும் வணக்கம்!
உங்களையெல்லாம் நெனச்சா எனக்கு பாவமா இருக்கு.. நேத்து நான் கொடுத்த என்னோட பதிவுகளின் லிங்க்  பார்த்திட்டு இத்தனை நாளா எப்பிடி  இதையெல்லாம்  படிக்காம விட்டோம்னு நீங்க நினைக்கிறது எனக்கு தெரியுது! பரவாயில்லை விடுங்க... திருக்குறளையே மக்கள் ரொம்ப வருடம் கழித்துதான் கொண்டாடினாங்க! என் பதிவுகள படிச்சத உங்க வரலாற்று பக்கங்களில் குறித்து வைத்து கொள்ளுங்கள்.. வருங்கால சந்ததிகளிடம் பெருமையா சொல்லலாம்! ( மனசாட்சி - தம்பி.. போன் வொயர் பிஞ்சு ஒரு நாள் ஆச்சு! )


இசை...
இந்த வார்த்தைய கேட்டாலே மனசு லேசாகும்.. இதையே கொஞ்ச நேரம் கண்மூடி கேட்டால்? நம் மனதே நம்மிடம் இருக்காது! இசை..அது எந்த வடிவத்தில் இருந்தாலும் ரசிக்கமுடியும்! நமது மனநிலைக்கு ஏற்ப! இன்றைக்கும் அப்பிடித்தான்..உங்களை இசை மழையில் நனைய வைக்க முயற்சி செய்கிறேன்! எதற்கும் மனதிற்கு மட்டும் ஒரு குடை பிடித்து படியுங்கள்!


இசை என்று சொல்லும்போது இளையராஜா என்று ஞாபகம் வருவதை யாராலும் தவிர்க்க இயலாது! இசையோடு கலந்து வாழும் ஜீவன் அது!

அவரது காலத்தால் அழியாத எத்தனையோ பாடல்களும் பின்னணி இசை கொண்ட படங்களும் உள்ளது! அதில் குறிப்பிட்டு சொல்லமுடியாது.. ஆனால் சிந்து பைரவி... இந்த படத்தை யாராலும் மறக்க முடியாது! இந்த படத்தில் உள்ள பாடல்களையும் பின்னணி இசையையும் அழகான வர்ணிப்போடு ரேடியோஸ்பதியில் வகைப்படுத்துகிறார் கானா பிரபா போய் கொஞ்சம் நனைந்து வாருங்கள்!

சில பாடல் வரிகள் நம் மனதில் சிம்மாசனம்  போட்டு அமர்ந்திருக்கும்.. அந்த பாடல் வரிகளை கேட்க்கும்போது பல நினைவுகளை நம் மனதினில் கிளறிவிட்டு செல்லும்! அப்படித்தான் இந்த தளமும்... இந்த தமிழ் மூவி சாங்க்ஸ் தளத்தில் உள்ள இந்த பாடலை கேட்டுப்பாருங்கள்.. அதுவும் பாடல் வரிகளுடன் கொடுத்திருகிறார்!

சோகம்... இந்த வார்த்தையை கேட்க சங்கடமாக இருந்தாலும் நமது சோகத்துக்கு இளையராஜா பின்னணி இசைத்தால்? ஆஹா.. அந்த சோகம் கூட கொஞ்சம் சுகமாகத்தான் இருக்கும்! உங்களுக்கு எந்த சோகமாக இருந்தாலும் ரவி ஆதித்யா தரும் இந்த பின்னணி இசை தொகுப்புகளை கேட்டுப்பாருங்கள்! பிறகு நீங்களே சோகத்துக்காக ஏங்க ஆரம்பித்து விடுவீர்கள்!

நீங்கள் ஒரு இசை ரசிகராக இருந்தால் கண்டிப்பாக இந்த ஷெனாய் பற்றி அறிந்திருப்பீர்கள்! நீங்கள் கூட அது வெறும் சோக கீதம் வாசிக்க மட்டுமே என்று நினைத்திருந்தால் அதை மாற்றிக்கொள்ளுங்கள்! இளையராஜா அதை எப்படி உடைத்திருக்கிறார் என்று இந்த வேணுவனம் தளத்தில் சென்று பாருங்கள்! ராஜாவின் இசை நுணுக்கத்தை பற்றி பண்டிட் பாலேஷ் என்ன சொல்கிறார் என்று!

உயர்ந்த உள்ளம் படத்தில் வரும் எங்கே என் ஜீவனே... பாடலை தெரியாதவர்கள் இருக்க முடியாது! அதில் இளையராஜா சோலோவாக ஒரு முறையும்.. ஜேசுதாசும் ஜானகி அம்மாவும் சேர்ந்து ஒருமுறையும் பாடியிருப்பார்கள்! இதே பாடலை இளையராஜாவும் ஜானகி அம்மாவும் சேர்ந்து பாடினால் எப்படி இருக்கும்? சொல்லும்போதே எப்பிடி இருக்கு? அந்த அனுபவத்தை சேக்காளியின் இந்த தளத்தில் சென்று  அனுபவித்து வாருங்கள்!

யுவனின் ரசிகரா நீங்கள்? அப்ப வாங்க.. உங்களுக்காத்தான் இந்த தளம்! யுவனின் ஒவ்வொரு அசைவையும்.. அவரது பாடல்கள், ஆல்பம், இசைத்தொகுப்பு என்று அள்ள அள்ள குறையாமல் தொகுத்திருக்கிறார் இந்த ரசிகர்! சந்தேகம் இருந்தா நீங்களே இந்த தளத்தில் சென்று பார்த்துக்கொள்ளுங்கள்!

சின்மயி... இந்த பேரை கேட்டாலே சும்மா அதிர வில்லை......... கொஞ்சம் மென்மையா தாலாட்டும் உணர்வுதான் வருது! கன்னத்தில் முத்தமிட்டாள் படத்தில் இவர் பாடிய ஒரு தெய்வம் தந்த பூவே பாடலை யாரால் மறக்கமுடியும்? அதுமட்டுமா? இப்போ வந்த கிளிமஞ்சாரோ பாடல் வரை அவர் குரலில் மயங்காதவர்கள் குறைவுதான்! அவரின் முதல் டப்பிங் பேசிய அனுபவத்தை அவரின் இந்த தளத்தில் விவரிக்கிறார்! சென்று பாருங்கள்!

இந்த பதிவுக்கடலில் நான் கண்டெடுத்த முத்துக்களில் சிலவற்றை மட்டும் கொடுத்திருக்கிறேன்! இந்த இசையென்னும் இன்ப வெள்ளத்தில் தொபுக்கடீர்னு குதிச்சு நீந்த வேண்டியது இனி உங்கள் பொறுப்பு!

நன்றியும்.. வாழ்த்துக்களுடன்,
வைகை.

மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது