07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, August 18, 2011

சரம் 4 – உங்களை வைத்து ஒரு சோதனை முயற்சிநேத்து கூட்டாஞ்சோறு“னு தலைப்ப பாத்துட்டு ஏதோ சமையல் குறிப்பு தான் சொல்லப்போறன்னு நம்ம்ம்ம்ம்ம்ம்ம்பி வந்து ஏமாந்து போனவங்களுக்காக.. இன்னைக்கு சமையல் செய்றது தொடர்பான பதிவுகளப் பத்தி பகிர்ந்துக்கப் போறேன். (நேத்து ஏமாந்துபோய் திட்டினவங்க எல்லாரும், திட்னத வாபஸ் வாங்கணும் சொல்லிப்புட்டேன்..).
நமக்கு எவ்ளோ தான் பிரச்சனைகள் இருந்தாலும் குறிப்பிட்ட நேரத்துக்கு அப்புறம் சாப்பிடாம இருக்கவே முடியாது. கோவிச்சுகிட்டு சாப்பிடமாட்டேன்னு கவுந்தடிச்சு படுத்துக்குறவங்க கூட, பசி தாங்க முடியாம திருட்டுத்தனமா எதையாவது சாப்பிட்டுக்குவாங்க. (ஹிஹி.. எல்லாம் ஒரு அனுபவம் தான்..).
ஆணா இருந்தாலும் சரி, பெண்ணா இருந்தாலும் சரி, “நா கிச்சன் பக்கம் போனதே இல்லை“னு நாகரிகமா சொல்லிக்கிறவங்க கூட, ஏதாவதொரு சந்தர்ப்பத்துல சமைத்தாக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுடும். அந்த மாதிரியான சமயங்கள்ல சமைக்கத் தெரியாம திரு திருனு முழிக்காம இருக்கணும்னு சமையல் குறிப்பு இருக்குற பதிவுகள உங்களுக்காக இங்க பகிர்ந்துக்குறேன்.
முதல்ல, சமைக்கலாம்குற முடிவெடுக்கணும். அப்படி தைரியமா முடிவெடுக்குறதுக்கே உங்கள பாராட்டலாம். அப்புறம் ஒவ்வொன்னா செஞ்சு பாக்கலாம். என்ன சரிதானே???
முதல்ல ஒரு வெஜ் சூப்ப போட்டுத் தாக்குங்க.. அப்புறம் மிச்ச சமையல ஆரம்பிக்கலாம்.
1. சாப்பாட்டுல முக்கியமானதும் முதலானதும்.. அவ்ளோ ஏன்.. சுலபமானதும், வெள்ளை சாதம் வைக்கிறது தான்.
2. சாதம் வச்சாச்சுனா அடுத்தது என்னவா இருக்கும்? சாம்பார் தான்.
3. சாம்பார்க்கு அப்புறம் வத்த குழம்பு ஊத்தி சாப்பிடாதவங்க இருக்க முடியுமா என்ன? அதுனால அதையும் செஞ்சுடலாமே..
4. அடுத்ததா வேறென்ன வைக்கிறது?? ரசம் தான்.
5. பொறியல் வைக்க மறந்துடக் கூடாதுல்ல.. என்ன பொறியல் வைக்கலாம்??? ம்ம்ம்... பீக்கங்காய் பொறியலும் கத்தரிக்காய் பொறியலும் வைக்கலாமா???
6. எல்லாம் வச்சாச்சு.. பாயாசம் வச்சு அப்பளத்தையும் பொறிச்சுட்டா இன்னும் நல்லா இருக்கும்ல..
என்னடா.. ஒரே சைவமா இருக்கேனு யோசிக்கிறீங்களா???
7. தினமும் வெள்ளை சாதத்தை பார்த்து போர் அடிச்சிடுச்சுனா, ஒரு நாள் பிரியாணி செஞ்சு பாக்கலாமே.. என்ன பிரியாணி பண்ணலாம்???? மீன் பிரியாணி கூட முயற்சிக்கலாம்ல..
8. சாதமே வேணாம்னு தோணுதா? பேசாம சிக்கன் நூடுல்ஸ் பண்ணிடுங்க பாஸ்..
9. ஒரு வழியா சமச்சாச்சு.. சாப்பிட்டுட்டு குடிக்கிறதுக்கு ஜூஸ் போடலாமா?
10. அது வேணாம்னு நெனைக்கிறவங்க ஐஸ்கிரீம் செய்யலாமே..
என்ன??? எல்லாரும் சமைச்சுப் பாத்துட்டீங்களா??
சாப்பிட்டு (நல்லாயிருந்தா) ஒரு குட்டி தூக்கம் போடுங்க.. அப்புறம் சாயந்திரத்துக்கு இனிப்பும், கூடவே காரமும் செஞ்சு சாப்பிட்டுட்டு அதோட டீ“யும் குடிச்சா அட.. அட.. என்னா ஒரு ஆனந்தம் தெரியுமா??
இது எதுவுமே வேணாம்.. எதுக்கு வெட்டி வேலை.. எனக்கு உப்புமாவே போதும்னு சொல்றீங்களா??? அது உங்க இஷ்டமுங்க..
அப்புறம் ஒரு விசயம்.. இதையெல்லாம் சமைச்சுப் பாத்துட்டு நல்லாயிருந்தா எனக்கு அனுப்பி வையுங்க.. இல்லாட்டி மனசுக்குள்ள (கெட்ட வார்த்தையெல்லாம் இல்லாம) திட்டிட்டு வேலையப் பாருங்க.. (இப்ப தலைப்போட காரணம் புரியுமே.. ஹிஹி).
கிளம்புறதுக்கு முன்னாடி வழக்கம்போல ஒரு குட்டி தத்துவம்.. (ஓடாதீங்க.. ஓடாதீங்க..)
1. யாருக்காவது குழிதோண்டப் போகிறாயா? இரண்டாகத் தோண்டு. உனக்கும் சேர்த்து.
2. எங்கே விழுந்தாயென பார்க்காதே, எங்கே வழுக்கினாயெனப் பார்.
3. சதா தள்ளாடுவதைவிட ஒருமுறை விழுந்து எழுவது சிலாக்கியம். (சரக்கடிக்கிறத பத்தி சொல்லலங்க..)

நாளைக்கு இன்னொரு வகை சரம் தொடுக்கலாம்.. கிளம்புறேங்க..
.
.

41 comments:

 1. நல்ல சமையல் விளக்கங்கள்...
  அறிமுகத்திற்கு நன்றி சார்..
  இந்திராவுக்கு வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 2. எல்லாத்தையும் ஒரு கை பாத்தாச்சீங்க...


  அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. நல்ல சமையல் குறிப்பு அறி முகங்கள்.
  நல்லா இருக்கு.

  ReplyDelete
 4. பேஸ் பேஸ்......
  பிரமாதம் :))

  ReplyDelete
 5. அறுசுவை., அமர்க்களம்...

  தத்துவம் அருமை...

  ReplyDelete
 6. ஜூப்பரு.. நல்ல அறிமுகங்கள்..

  ReplyDelete
 7. சுவையான பகிர்வுகள் .பாராட்டுக்கள்.

  ReplyDelete
 8. கூட்டாஞ்சோறு அறிமுகங்கள் மிக அருமை இந்திரா

  ReplyDelete
 9. ஒவ்வொரு லிங்குலயும் போய் பார்த்து அத்தனையும் சாப்பிடனும் போல இருந்துச்சு பொருமையா ஒரு நாள் செஞ்சி சாப்பிட்டுக்கலாம்... அப்புறம் தத்துவம் போட்டு கலாய்ப்போடு கலக்குறீங்க எப்படிங்க... அசால்ட்டா பின்றீங்க போங்க... தொடர்ந்து கலக்குங்க....

  ReplyDelete
 10. அருமையான பகிர்வுகள்.

  மிக்க நன்றி

  ReplyDelete
 11. குட்டி தத்துவங்கள் எல்லாம் கெட்டி தத்துவங்கள்.

  ReplyDelete
 12. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்... :))

  ReplyDelete
 13. பயனுள்ள சமயல் குறிப்புகளுக்கு நன்றி.

  ReplyDelete
 14. வயிறு நிரம்பிடுச்சிங்க..

  ReplyDelete
 15. சமையற்கலையை இத்தனை பதிவர்கள் சொல்கிறார்களா..!!!!!!!!!!!

  ReplyDelete
 16. சமையற்கலையை இத்தனை பதிவர்கள் சொல்கிறார்களா..!!!!!!!!!!!

  ReplyDelete
 17. சமையல் பற்றிய அறிமுகத்தில் என் டீக்கடை பதிவா? நன்றி தோழியே..

  ReplyDelete
 18. அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 19. அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 20. அன்பு சகோதரிக்கு, எனது பெட்டகம் வலைப்பூவை கண்ணுற்ற தங்களுக்கு நன்றிகள் பல! பல பயனுள்ள தகவல் இன்னும் நிறைய அதில் உண்டு நாளும் கண்ணுற்று பயன் படுத்துங்கள் வாழ்த்துக்கள். அன்புடன் முஹம்மது அலி

  ReplyDelete
 21. vazhthukkaL.arumaiyaana pakirvukaL.Thanks Indra.

  ReplyDelete
 22. //vidivelli said...

  நல்ல சமையல் விளக்கங்கள்...
  அறிமுகத்திற்கு நன்றி சார்..
  இந்திராவுக்கு வாழ்த்துக்கள்..//


  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க..

  ReplyDelete
 23. //# கவிதை வீதி # சௌந்தர் said...

  எல்லாத்தையும் ஒரு கை பாத்தாச்சீங்க...//


  அப்படியா??? ரொம்ப சந்தோசமுங்க.
  வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 24. //Lakshmi said...

  நல்ல சமையல் குறிப்பு அறி முகங்கள்.
  நல்லா இருக்கு.//


  தொடர்ந்த உங்கள் வருகைக்கு நன்றிங்க.

  ReplyDelete
 25. //ஆமினா said...

  பேஸ் பேஸ்......
  பிரமாதம் :))//


  நன்றிங்க..

  ReplyDelete
 26. //சங்கவி said...

  அறுசுவை., அமர்க்களம்...

  தத்துவம் அருமை...//


  வாங்க நண்பரே..
  வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 27. //அமைதிச்சாரல் said...

  ஜூப்பரு.. நல்ல அறிமுகங்கள்..//


  நன்றிங்க..

  ReplyDelete
 28. //இராஜராஜேஸ்வரி said...

  சுவையான பகிர்வுகள் .பாராட்டுக்கள்.//


  பாராட்டுக்கு நன்றிங்க..

  ReplyDelete
 29. //Jaleela Kamal said...

  கூட்டாஞ்சோறு அறிமுகங்கள் மிக அருமை இந்திரா//


  வருகைக்கு நன்றிங்க..

  ReplyDelete
 30. //மாய உலகம் said...

  ஒவ்வொரு லிங்குலயும் போய் பார்த்து அத்தனையும் சாப்பிடனும் போல இருந்துச்சு பொருமையா ஒரு நாள் செஞ்சி சாப்பிட்டுக்கலாம்... அப்புறம் தத்துவம் போட்டு கலாய்ப்போடு கலக்குறீங்க எப்படிங்க... அசால்ட்டா பின்றீங்க போங்க... தொடர்ந்து கலக்குங்க....//


  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..

  ReplyDelete
 31. //புதுகைத் தென்றல் said...

  அருமையான பகிர்வுகள்.

  மிக்க நன்றி//


  நன்றிங்க..

  ReplyDelete
 32. //சத்ரியன் said...

  குட்டி தத்துவங்கள் எல்லாம் கெட்டி தத்துவங்கள்.//


  வருகைக்கு நன்றிங்க..

  ReplyDelete
 33. //வைகை said...

  அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்... :))//


  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  ReplyDelete
 34. //baleno said...

  பயனுள்ள சமயல் குறிப்புகளுக்கு நன்றி.//


  நன்றி நண்பரே..

  ReplyDelete
 35. //முனைவர்.இரா.குணசீலன் said...

  வயிறு நிரம்பிடுச்சிங்க..//


  சந்தோசமுங்க..

  ReplyDelete
 36. //முனைவர்.இரா.குணசீலன் said...

  சமையற்கலையை இத்தனை பதிவர்கள் சொல்கிறார்களா..!!!!!!!!!!!//


  இன்னும் நிறைய பேர் இருக்குறாங்க.. நேரம் தான் பத்தல..

  ReplyDelete
 37. //தமிழ்வாசி - Prakash said...

  சமையல் பற்றிய அறிமுகத்தில் என் டீக்கடை பதிவா? நன்றி தோழியே..

  அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்//


  வருகைக்கு நன்றி நண்பரே..

  ReplyDelete
 38. //Mohamed Ali Blog said...

  அன்பு சகோதரிக்கு, எனது பெட்டகம் வலைப்பூவை கண்ணுற்ற தங்களுக்கு நன்றிகள் பல! பல பயனுள்ள தகவல் இன்னும் நிறைய அதில் உண்டு நாளும் கண்ணுற்று பயன் படுத்துங்கள் வாழ்த்துக்கள். அன்புடன் முஹம்மது அலி//


  கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பரே..

  ReplyDelete
 39. //asiya omar said...

  vazhthukkaL.arumaiyaana pakirvukaL.Thanks Indra.//


  வருகைக்கு நன்றிங்க..

  ReplyDelete
 40. ஹாய் இந்திரா...நீண்ட நாட்களுக்கு பிறகு எனது பக்கம் வர தங்களின் பதிவை கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.மிகவும் அருமையான தொகுப்புகளாக தந்து பலர் பக்கத்தையும் அறிய ஒரு நல்ல வாய்ப்பினை ஏற்படுத்தி தந்துவிட்டீர்கள்.வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும் பல.
  அதில் என் பக்கத்தையும் சேர்த்தமைக்கு நான் மிகுந்த மகிழ்ச்சியோடு தங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் இந்திரா.

  அன்புடன்,
  அப்சரா.

  ReplyDelete
 41. வலைச்சர அறிமுகத்திற்க்கு மிக்க நன்றிங்க...மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்...அனைவரும் புதிய அறிமுகங்கள்...

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது