07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, August 6, 2011

ஆனந்தமான ஆறாம் நாள்இம்முறை என்னைக் கவர்நத மிகச் சிறிய
கதை மட்டும்

அந்த அடர்ந்த காட்டிலேயே மதிக்கத் தக்க ஜென்
முனிவர் ஒருவர் இருக்கிறார் எனக் கேள்விப்பட்டு
பண்டிதர் ஒருவர் அவரிடம் பாடம் கற்க வருகிறார்
ஜென் முனிவரின் குடிசை வாசல் நிலைப் படி
சராசரி உயரத்திற்கும் குறைவாக இருக்கிறது
அதைக் கவனிக்காது வந்த பண்டிதர் தலை
பலமாக இடித்துவிடுகிறது
எரிச்சலுற்ற பண்டிதர் கோபத்தில் நிலையை
எட்டி உதைத்தபடி உள்ளே நுழைகிறார்.
அதை கவனித்துக் கொண்டிருந்த ஜென் முனிவர்
அவர் அருகில் வந்ததும்
" முதலில் மிதித்ததற்காக நிலையிடம்
மன்னிப்புக் கேட்டுவிட்டு உள்ளே வா "
என உத்தரவிடுகிறார்
பண்டிதருக்கு ஏதும் விளங்கவில்லை
உண்மையில் இவர் ஜென் முனிவர்தானா இல்லை
விலாசம் மாறி வந்து விட்டோமா என குழப்பமடைகிறார்
பின் தணிந்த குரலில் " நான் மன்னிப்பு கேட்டால்
அதற்குப் புரியுமா " என்கிறார்

ஜென் முனிவர் சிரித்தபடி " நீ மிதித்ததை புரிந்து கொண்டது
நிச்சயம் இதையும் புரிந்து கொள்ளும் "என்கிறார்.
பண்டிதருக்கு அவர் சொன்னதன் பொருள் லேசாகப் புரிபட
நிலையிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு அமர்கிறார்

வந்தவரை உபசரிக்கும் விதமாக ஒரு ஜக்கில் டீ
கொணர்ந்து இரண்டு கோப்பைகளில் ஊற்றத் துவங்குகிறார்
கோப்பை நிரம்பி வழிகிறது.நிறுத்தாது தொடர்ந்து ஊற்றுகிறார்
பண்டிதர் குழம்பிப் போகிறார்.பின் பொறுமை இழந்து
"நிரம்பியதில் ஊற்றினால் வழியத் தானே செய்யும் " என்கிறார்

ஜென் முனிவர் சிரித்தபடி சொல்கிறார்
" நான் இதைத்தான் உன்னிடம் சொல்ல விரும்புகிறேன்
நீ நிறைய நிரப்பிக் கொண்டு வந்திருக்கிறாய்
காலி செய்து கொண்டு வா .இல்லையெனில் இங்கு
கற்றுக் கொள்ளும் ஏதும் தங்காது " என்கிறார்
பண்டிதருக்கு அப்போதுதான் தான் பண்டிதனாகத்தான்
வந்திருக்கிறோம்.கற்றுக்கொள்ளும் சீடனாக வரவில்லை
என்கிற பக்குவம் வருகிறது. பின் முனிவரை
 வணங்கி   வெளியே றுகிறர்

வெளியே இருள் சூழத் துவங்க பண்டிதருக்கு அது வனம் என்பதால்
மனத்தில் பயம் கவ்வ ஆரம்பிக்கிறது.அதை கவனித்த முனிவர்
கையில் ஒரு சிறு எரியும் விளக்கு ஒன்று கொண்டு வந்து கொடுக்க
மனதில் கொஞ்சம் தைரியம் பிறக்கிறது.விளக்கை கையில் பிடித்தபடி
சிறிது தூரம் நடந்தவரை முனிவர் திரும்ப அழைக்கிறார்
அவர் அருகில் வந்தவுடன் கையில் இருந்த விளக்கின் ஜோதியை
ஊதி அணைத்து விட்டு "ஜோதியை மனதில் ஏற்றிக்கொண்டு போ"
என அருளிச் செய்து உள்ளே செல்கிறார்.
பண்டிதருக்கு எல்லாம் புரியத் துவங்குகிறது
அடுத்த முறை அனைத்தையும் உதறி எறிந்து விட்டு
கற்றுக் கொள்ளும் சீடனாக அறிந்தவைகளில் இருந்து
முழுமையாக விடுதலை அடைந்து வரவேண்டும் என்கிற
முடிவோடு நடக்கத் துவங்குகிறார்.
கானகத்து இருள் இப்போது அவரை பயமுறுத்தவில்லை

1.வெங்கட் நாகராஜன்http://venkatnagaraj.blogspot.com/
தலை நகரிலிருந்து பயனுள்ள தரமானப் பதிவுகளாகத்
தந்துவரும் இவர் இதுவரை150 க்கும் மேற்பட்ட பதிவுகளைக்
கொடுத்துள்ளார்.அனுபவம்; அரசியல், தில்லி குறித்து என
17 வகையான தலைப்புகளில் உள்ள தகவல்கள் அனைத்தும்
தகவல் களஞ்சியம்.நகைச்சுவைப் பதிவுகளுக்கும் பஞ்சமில்லை
"ஒருமுறை மும்தாஜ் வந்துவிட்டால் "
பதிவைப் படித்துப் பாருங்களேன்.

2.பாரத் பாரதிhttp://bharathbharathi.blogspot.com/
ரோஜாப் பூந்தோட்டம் என்கிற தலைப்புக்கு ஏற்றார்ப்போல
மலர்ந்து மணம் வீசும் தரமான் பதிவுகளை மட்டுமே
தந்துவரும் இவர்செப்டெம்பர் 2010 இல் பதிவைத் துவங்கி
இதுவரை 12 மாதங்களில்204 பதிவுகளுக்கு மேல் தந்து
267 பின் தொடர்பவர்களைப் பெற்றுள்ளதே இவரின் தளத்தின்
தரத்தைச் சொல்லும்."தனியார் தற்கொலை கள்ங்கள் "
என்கிற இவருடைய பதிவைப் படித்தாலே இவரின்ள் "
சமூக அக்கரையில் நீங்களும் என்னைப் போல்
அசந்து போய்விடுவீர்கள்


3.மாதங்கிhttp://maiththuli.blogspot.com/
சராசரித்தனத்தை மீறி கொஞ்சம் கனமான விசயங்களில்
உங்களுக்கு ஆர்வம் இருக்குமானால் நீங்கள் அவசியம்
தொடர வேண்டிய பதிவு இது.உங்கள் பதிவுக்கு எப்போதேனும்
வந்து உங்களைப் பாராட்டியிருக்கிறார் என்றால் நீங்கள்
நிச்சயம் நல்ல பதிவர் தான்.ஒரு பதிவிடுவதற்கு எவ்வள்வு
சிரத்தை எடுத்துக்கொள்கிறார் என்பதனை கீழ்குறித்த
பதிவினைப் படித்தாலே உங்களுக்குப் புரியும்

4.ஸ்ரீராம்http://engalcreations.blogspot.com/
ஒரு வார மாத பத்திரிக்கைகளில் உள்ள அத்தனை சிறப்பு
அம்சங்களும் உள்ளடக்கிய ஒரு பதிவு எனச் சொன்னால்
இவர் பதிவைச் சொல்லலாம்.ஓவியம் இசை கவிதை
பயனுள்ள தகவல்கள் என அனைத்தும் பெற்ற இவரது
பதிவு அவசியம் தொடரத் தக்கது.சமீபத்திய பதிவான
"சென்னை கைட் " பதிவைப் படித்தாலே உங்க்ளுக்கும் புரியும்

5.அவர்கள் உண்மைகள்http://avargal-unmaigal.blogspot.com/
மிகவும் சினேகப் பூர்வமான பதிவு இது எனச் சொல்லலாம்
சொல்ல நினைக்கிற விஷயத்தை.எவ்வித மேற்பூச்சும்
இல்லாமல் சொல்லிச் செல்வது எப்படி என இந்த சகலகலா
வல்லவரிடம் தெரிந்து கொள்ளலாம்.ஒருமுறை
 " இந்தியக் குழந்தைகளை அமெரிக்கர்கள் வெறுப்பது ஏன் "
என்கிற பதிவை ஒருமுறை படித்துப் பாருங்களேன்

6.ஆனந்திhttp://ananthi5.blogspot.com/
பதிவுலகில் எனக்குப் பிடித்த பதிவுகளில் முதன்மையானதாக
இந்தப் பதிவைத்தான்சொல்வேன் விவேகம் இளமைத் துடிப்பு,
நகைச்சுவை அட்டகாசம் என அனைத்து சுவைகளையும்
ஒருங்கே கொண்ட பதிவிது..சமீப காலங்களாக இவர்
பதிவிடாமல் இருப்பது பதிவுலகிற்குஉண்மையில் இழப்புதான்
இவர் கடைசிப் பதிவான " சொர்க்கம் போகனுமா மதுரை வாங்க"
பதிவை படித்துப் பாருங்கள்.நீங்களும் அவரின் ரசிகராகி விடுவீர்கள்

7.அமைதிச் சாரல்http://amaithicchaaral.blogspot.com/
தற்சமயம் தமிழ்மணத்தில் நட்சத்திரப் பதிவராகி அசத்திவரும்
இவரின் பதிவு பல்சுவைப் பரிமானங்களைக் கொண்ட பதிவாகும்
இவரை அறிமுகப் படுத்துவது கூட பிரபலங்களின் பக்கத்தில் நாம்
நிற்பதன் மூலமேபிரபல்மாகிவிட முயலுகிற
அற்ப முயற்சிபோல்தான்
இவரின் சமீபத்திய பதிவான "புதிதாய் " பிறந்தோம் " பதிவைப்
படித்தாலே இவருடைய எழுத்தின் வீச்சு தெளிவாகப் புரியும்


8 கற்றது தமிழ்http://www.blogger.com/profile/01927194716632458150
கடந்த 4 மாதங்களாகத்தான் பதிவிட்டு வருகிறார் என்றாலும்
சுமார் 19 பதிவுகள் மட்டுமே கொடுத்து 12200 பக்கப் பார்வை
பெற்றிருப்பதுவும் 46 பின்தொடர்பவர்களைப் பெற்றிருப்பதுவும்
இவரது எழுத்துத் திறனுக்கு அத்தாட்சி.இவருடைய 19 பதிவுகளும்
ஒவ்வொரு வகையில் சிறந்ததுதான் ஆயினும் " பாசமாவது
பந்தமாவது -இது வெளி நாடு என்கிற பதிவு அனைவரும்
அவசியம் படிக்கவேண்டிய பதிவு


9காட்டான்http://yalini-france.blogspot.com/
முதலில் பெயரைப் பார்த்தும் படத்தைப் பார்த்தும் அவர் குறித்த
விளக்கத்தில் ஆள் பிடிக்கிறவன் எனப் பார்த்து 
பயந்துபோய் அந்தப் பதிவின் பக்கமே போகவில்லை
அப்புறம் ஒருநாள் பிடித்த படம் புலிகேசி எனப் பார்த்ததும்தான்
என்னவோ இருக்கே என உணர்ந்து பதிவுக்குள்ளே போக
இப்போது இவர் பதிவை தவற விடுவதே இல்லை
நிங்களும் போய் பாருங்களேன்


10 நினைவில் நின்றவைhttp://krvijayan.blogspot.com/
பதிவினைத் தொடங்கி பத்து மாதங்களில்
46 பதிவுகள் மட்டுமே கொடுத்திருக்கிறார் என்றாலும்
151  பின் தொட ருபவர்களைப் பெற்றிருக்கிறார்.
அரசியல் /சுற்றுலா /நகைச்சுவைஎன பல்சுவைப் 
பதிவாக இருப்பதாலேதான் இது சாத்தியமாகி
 இருக்க முடியும் .இவருடைய சுற்றுலா பதிவு
 ஒன்றினை இத்துடன் கொடுத்துள்ளேன் 
நீ ங்களும் கண்டு ரசியுங்கள் 


நேற்றைய பழமொழிக்கு  மிகச் சரியாகவே
பதில்அளித்த சென்னை பித்தன் சார் அவர்களுக்கும்
விரிவான விளக்கமளித்த அமைதிச் சாரல் மற்றும்
வை. .கோ சார் அவர்களுக்கும் நன்றி

இன்றைய கொறிப்பு
இந்த வாசகத்தைச் சொன்னவர் யார்?
இந்த வார்த்தையில் உள்ள விசேஷ ம் என்ன ?

 ABLE WAS I ERE I SAW ELBA

60 comments:

 1. சமீப காலங்களாக இவர்
  பதிவிடாமல் இருப்பது பதிவுலகிற்குஉண்மையில் இழப்புதான்


  ..... உண்மை. உண்மை. உண்மை. மதுரை ஆனந்தி, விரைவில் மீண்டும் எழுத , நானும் கேட்டு கொள்கிறேன்.

  ReplyDelete
 2. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 3. சூப்பர் அறிமுகங்கள். சிலரின் வலைப்பூக்கள் பற்றி நீங்கள் சொல்லித் தான் அறிந்து கொண்டேன்.

  ReplyDelete
 4. அந்த வாக்கியத்துல வர்ற விசேஷம்... திருப்பிப்படிச்சாலும், அதாவது ரிவர்ஸ்ல படிச்சாலும் அதே வாக்கியம்தான் வரும்.

  மாவீரன் நெப்போலியன் சம்பந்தப்பட்ட palindrome-ன்னு மட்டும்தான் தெரியும் :-)

  வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி..

  ReplyDelete
 5. அதை சொன்னதும் 'நெப்போலியன் போனபார்ட்' தானே :-))

  ReplyDelete
 6. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.
  இது ஒரு palindrome. அதாவது முன்னிருந்து பின்னும் பின்னிருந்து முன்னும் படிக்கலாம். தமிழ் இலக்கியத்தில் இதை மாலைமாற்று எனச் சொல்வர். சொன்னது நிச்சயம் நெப்போலியன் அல்ல...

  ReplyDelete
 7. Chitra //


  தங்கள் மேலான வரவுக்கும்
  வாழ்த்துக்கும் நன்றி

  ReplyDelete
 8. vanathy //

  தங்கள் மேலான வரவுக்கும்
  வாழ்த்துக்கும் நன்றி

  ReplyDelete
 9. அமைதிச்சாரல்//


  தங்கள் மேலான வரவுக்கும்
  வாழ்த்துக்கும் நன்றி

  ReplyDelete
 10. கலாநேசன்//


  தங்கள் மேலான வரவுக்கும்
  வாழ்த்துக்கும் நன்றி

  ReplyDelete
 11. "நிரம்பியதில் ஊற்றினால் வழியத் தானே செய்யும் "//
  //"ஜோதியை மனதில் ஏற்றிக்கொண்டு போ//

  அற்புதமான வரிகளுக்கு நன்றி.

  அறிமுகங்களுக்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 12. ABLE WAS I ERE I SAW ELBA//

  திருப்பிப்படித்தாலும் அதேதானே வரும் அருமையான வார்த்தை???

  ReplyDelete
 13. இராஜராஜேஸ்வரி //

  தங்கள் மேலான வரவுக்கும்
  வாழ்த்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 14. மிக சிறந்த கதையுடன், மிக சிறந்த அறிமுகங்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 15. தமிழ் உதயம் //

  தங்கள் மேலான வரவுக்கும்
  வாழ்த்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 16. அருமையான அறிமுகங்கள் வாழ்த்துக்கள் எல்லாருக்கும்....!!!

  ReplyDelete
 17. MANO நாஞ்சில் மனோ//..


  தங்கள் மேலான வரவுக்கும்
  வாழ்த்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 18. 'இது நம்ம ஏரியா'- வலைப பதிவை அறிமுகப் படுத்தியதற்கு, எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

  ReplyDelete
 19. O..My dear Ramani Anna..Thanks a lot...

  ReplyDelete
 20. அடியேனையும் வலைச்சரத்தில் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி. உங்கள் பாராட்டுகள் என்னை மேன்மேலும் எழுதத் தூண்டும் என்பதில் சந்தேகமில்லை நண்பரே.

  அறிமுகம் செய்யப்பட்ட மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 21. ecrea79 //


  தங்கள் வரவுக்கும்
  மனமார்ந்த வாழ்த்துக்கும்
  மிக்க நன்றி

  ReplyDelete
 22. வெங்கட் நாகராஜ் //


  தங்கள் வரவுக்கும்
  மனமார்ந்த வாழ்த்துக்கும்
  மிக்க நன்றி

  ReplyDelete
 23. ஆனந்தி..//

  அன்புள்ள ஆனந்திக்கு
  மௌனம் கலைத்து பதிவுக்குள்
  வந்தமைக்கு மனமார்ந்த நன்றி
  அட்டகாசமான பதிவை
  ஆவலுடன் எதிர்பார்கிறோம்

  ReplyDelete
 24. அருமையான அறிமுகங்கள் வாழ்த்துக்கள்

  விடை - அது ஒரு palindrome

  எல்பா என்னும் இடத்தை நெப்போலியன் போனபார்ட் கைப்பற்றிய போது இந்த வாசகம் சொன்னதாக சொல்வார்கள்.ஆனால் அது தவறு நெப்போலியன் பிரெஞ்சு மொழி மட்டும் தெரிந்தவர்.இது யார் சொன்னார் என்பது யாருக்கும் தெரியாது என்று படித்த
  ஞாபகம். சரியா சகோ

  ReplyDelete
 25. மிகவும் அசத்தலான அறிமுகங்கள்.
  அனைவருக்கும் பாராட்டுக்கள்.

  தேரு வருதே
  மோறு போறுமோ
  காக்கா
  தாத்தா
  பாப்பா
  விகடகவி

  இந்த தமிழ் வார்த்தைகளும் திருப்பிப்போட்டால் அதையே சொல்லுகின்றனவே!

  ஜென் கதையும் நல்லா இருக்கு.
  பகிர்வுக்கு நன்றி ரமணி, சார்.

  ReplyDelete
 26. அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 27. ரியாஸ் அஹமது //

  தங்கள் மேலான வரவுக்கும்
  வாழ்த்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 28. வை.கோபாலகிருஷ்ணன்//

  தங்கள் மேலான வரவுக்கும்
  வாழ்த்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 29. எங்கள் ப்ளாக்கின் உங்கள் அங்கமான இது நம்ம ஏரியா அறிமுகத்துக்கு நன்றி.

  எல்லாப் புகழும் கவுதமனுக்கே. ஆக்கமும் ஊக்கமும் அவரே.

  ஒரு விளக்கம்.. எங்கள் ப்ளாக் என்ற பெயரில் இயங்கும் வலைப்பக்கம் எங்கள் படைப்புகளைத் தாங்கி வரும் பிரதான வலைப்பக்கம். இது நம்ம ஏரியா என்பது எங்கள் ப்ளாக் வாசகர்கள் யார் வேண்டுமானாலும் பங்கேற்கக் கூடிய வலைப் பக்கம். அனைத்து வாசகர்களும் தங்கள் படைப்புகள் எது வேண்டுமானாலும் கதை, கவிதை, புகைப் படங்கள் மற்றும் அவரவர்கள் தங்கள் குரலில் பாடியோ, தாங்களோ தங்கள் செல்வங்களோ படைக்கும் ஓவியம் உட்பட அனைத்து வகைப் படைப்புகளையும் இடம் பெறச் செய்யும் ப்ளாக் இது நம்ம ஏரியா.

  ReplyDelete
 30. உங்கள் வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தியது நான் மிகப்பெரிய கெளரவமாகவே கருதுகிறேன்.அதற்க்காக என் மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

  ReplyDelete
 31. இதில் நிறைய பதிவர் நான் அறியாதவரகள்.அறியதந்தமைக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 32. ஒவ்வொரு நாளும் மிக அற்புதமாக விடிகிறது ரமணி சார் இந்த அழகிய பயனுள்ள பகிர்வினால்.....

  என் மகன் நேற்று இந்தியா கிளம்பும் வேலையில் இருந்ததால் என்னால் வர இயலவில்லை...

  மிக அருமையான பகிர்வு ரமணி சார்...

  பண்டிதரின் நிலையில் இதோ நான் என்னை நிலைநிறுத்தி படிக்கும்போது எனக்குள் இருக்கும் கோபம், அகங்காரம், தான் எனும் ஆணவம் எல்லாம் அழியச்செய்கிறது.... நல்லவற்றை கற்க வேண்டும் எனும்போது மாணவனின் நிலையில் நாம்.... அடக்கமும் பண்பும் மனதில் இருத்தி சொல்லித்தருபவற்றில் கவனத்தை இருத்தி கற்றால் அதைப்போலவே நடந்தால் வாழ்வில் வெற்றியின் உச்சத்தை தொடமுடியும் என்று மிக அருமையாக விளக்கிய பகிர்வு ரமணி சார்....

  நீங்கள் அறிமுகப்படுத்தியவர் எல்லோருக்கும் என் அன்பு வாழ்த்துகள் ரமணி சார்...

  ரமணி சார், சித்ரா மேடம் இவர்களுடன் என் வேண்டுதலும் ஆனந்தி அவர்கள் இந்த பகிர்வை பார்க்க நேரிட்டு இனி தன் இனிய பதிவுகளை தொட்ர வேண்டுகிறேன்....

  இதோ மற்றைய நாட்களின் பகிர்வுகளையும் படித்துவிடுகிறேன்...

  அன்பு நன்றிகள் ரமணி சார் பண்படுத்தக்கூடிய மிக அசத்தலான பகிர்வை அமைதியாக பகிர்ந்தமைக்கு....

  ReplyDelete
 33. //இன்றைய கொறிப்பு
  இந்த வாசகத்தைச் சொன்னவர் யார்?
  இந்த வார்த்தையில் உள்ள விசேஷ ம் என்ன ?

  ABLE WAS I ERE I SAW ELBA //

  தெரியலையே ரமணி சார் :(

  ReplyDelete
 34. ஐய்யா இந்த காட்டானையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.. நன்றி

  ReplyDelete
 35. கேஆர்.விஜயன் சார்
  தங்கள் வலைச்சர வரவுக்கும்
  மனமார்ந்த வாழ்த்துக்கும்
  மிக்க நன்றி

  ReplyDelete
 36. ஸாதிகா//


  தங்கள் வலைச்சர வரவுக்கும்
  மனமார்ந்த வாழ்த்துக்கும்
  மிக்க நன்றி

  ReplyDelete
 37. அன்பு மஞ்சுபாஷிணி அவர்களுக்கு
  தங்கள் மேலான வருகைக்கும்
  விரிவான வாழ்த்துக்கும்
  மனமார்ந்த நன்றி

  ReplyDelete
 38. காட்டான் சார்
  தங்கள் வலைச்சர வரவுக்கும்
  மனமார்ந்த வாழ்த்துக்கும்
  மிக்க நன்றி .

  ReplyDelete
 39. இதுவரை யாரும் செய்யாத அளவில் அறிமுகங்களைப் பற்றியக் குறிப்புகள் புதுமை .வாழ்த்துக்கள் ஆசிரியர் பணிக்கும் , இன்றைய அறிமுகங்களுக்கும் .

  ReplyDelete
 40. சூப்பர் அறிமுகங்கள்.

  ReplyDelete
 41. நன்றி ரமணி சார்.
  பரந்த வலையுலகில்
  தவழும் என்னையும்
  உங்கள் வலைசரத்தில்
  மதித்து கவுரவித்ததுக்கு
  நன்றிகள் பல.
  நான் மதிக்கும் உங்களால்
  பாராட்டப்பட்டதுதான் எனக்கு
  சந்தோஷத்தின் பெரிய சந்தோஷம்.
  எனக்கும் என் எழுத்துக்கும் கிடைத்த
  பெரியா முதல் சந்தோஷம் இது,
  நீங்கள் தந்த கவுரவம் எனக்கு
  எழுத்தில் நிறைய பொறுப்புக்களை
  தந்து விட்டு போய் விட்டது,
  உங்கள் பாராட்டுக்களை பெரும் வகையில் தொடர்ந்து தரமாக எழுதுவேன், மீண்டும் என் நன்றிகள் பல........... :)

  ReplyDelete
 42. என் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் பல

  ReplyDelete
 43. ! ❤ பனித்துளி சங்கர் ❤ //!

  வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி என்ற
  பட்டத்தைப் பெற்றதுபோல
  தங்களால் பாராட்டப்பட்டதை
  மிக உயர்ந்த விருதாகக் கருதுகிறேன்
  தங்கள் மேலான வரவுக்கும்
  வாழ்த்துக்கும் மனம் கனிந்த நன்றி

  ReplyDelete
 44. சே.குமார் //


  தங்கள் மேலான வரவுக்கும்
  வாழ்த்துக்கும் மனம் கனிந்த நன்றி

  ReplyDelete
 45. NIZAMUDEEN //.


  தங்கள் மேலான வரவுக்கும்
  வாழ்த்துக்கும் மனம் கனிந்த நன்றி

  ReplyDelete
 46. "கற்றது தமிழ்"//

  தங்களிடம் உள்ள எழுத்தாற்றலும்
  சமூக உணர்வும் நிச்சயம் உங்களை
  உன்னத இடத்தில் வைத்துக்காட்டும்
  தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
  மனமார்ந்த நன்றி

  ReplyDelete
 47. றமணி சார் இந்த வலைப்பூவையும் நீங்கள் பதிவிடுவது எனக்கு தெரியாது.என்னை அறிமுகப்படுத்தியதும் உங்கள் பின்னூட்டத்தின் பின் தான் வந்த்தேன்.அப்போதுதான் தெரிந்தது இப்படியான பதிவுகளையும் செய்யிறீங்க என்று..
  உங்கள் அறிமுகத்தின் பின் எனது பக்கம் பிந்தொடர்பவர்கள் அதிகரித்திருக்கிறார்கள்.காரணம் உங்களின் அறிமுகம் தான்.
  அனைத்திற்கும் நன்றி..

  நல்ல கதையுடன் அறிமுகங்களும் நல்லாயிருக்கு...
  அன்புடன் பகிர்வுக்கு நன்றியும் பாராட்டுக்களும்...

  ReplyDelete
 48. vidivelli //

  தங்கள் வரவுக்கும்
  விரிவான வாழ்த்துக்கும்
  மிக்க நன்றி

  ReplyDelete
 49. ஆரம்பத்தில் சொல்லப்பட்ட கதையும் பதிவர்களின் அறிமுகங்களும் அருமை.
  ஆனந்தமாக மட்டுமல்லாது அமர்க்களமாகவும் செல்கிறது

  ReplyDelete
 50. அருமையான கதை. நன்றி சார். இன்றைய வலைப்பூ அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 51. raji //


  தங்கள் மேலான வரவுக்கும்
  மனமார்ந்த வாழ்த்துக்கும்
  மிக்க நன்றி

  ReplyDelete
 52. சாகம்பரி //


  தங்கள் மேலான வரவுக்கும்
  மனமார்ந்த வாழ்த்துக்கும்
  மிக்க நன்றி

  ReplyDelete
 53. பண்டிதருக்கு மட்டுமல்ல பந்தாவில் இருக்கும் அனைவருக்கும் வேண்டிய கதை ..நீதி கதை அருமை சகோதரரே!

  ReplyDelete
 54. வலைச்சரத்தில் அறிமுகமாகிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 55. அந்த வார்த்தை...ABLE WAS I ERE I SAW ELBA - mirror words இந்த வார்த்தைகளை திருப்பி போட்டாலும் அதே போல் தான் வரும் இது தான் இந்த வார்த்தையின் விசேசம்..சரியா சகோதரரே

  ReplyDelete
 56. மாய உலகம் //

  தங்கள் வரவுக்கும்
  விரிவான வாழ்த்துக்கும்
  மிக்க நன்றி

  ReplyDelete
 57. Completely flattered! ரொம்ப நன்றி, sir! இதில பல blog கள் எனக்கும் புது அறிமுகம்...

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது