07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, August 17, 2011

சரம் 3 – கூட்டாஞ்சோறுசின்னப் புள்ளைங்க கூட்டாஞ்சோறு விளையாட்டு விளையாடுவாங்க.. பாத்துருக்கீங்களா?? ஆளுக்கொரு வீட்ல இருந்து பொருட்கள எடுத்துட்டு வந்து கிடைக்கிற ஜாமானை வச்சு சமைச்சு சந்தோசப்பட்டுக்குவாங்க.
அதுமாதிரி இன்னைக்கு தொடுக்கப்போற சரம்“ல, குறிப்பிட்ட தனி வகைப் பதிவுகள்னு இல்லாம, எல்லாம் கலந்த, படிச்சு ரசிச்ச பதிவுகள பத்தி பகிர்ந்துக்கலாம்னு இருக்கேன். (பயப்புடாதீங்க.. நா எழுதின பதிவுகளப் பத்தி சொல்ல மாட்டேன்..).
நா மொத மொதல்ல பதிவுகள்னு படிக்க ஆரம்பிச்சதுனா இவரோட தளத்துல தான். கவிதைய காதலிக்கிறேன்னு இவர் சொல்றது எவ்ளோ உண்மைனு அவரோட எழுத்துக்கள்ல நல்லாவே தெரியும். இவரோட கவிதைய படிக்கிறவங்க> பாராட்டாம இருக்கவே முடியாது. கவிதை மட்டுமில்ல, சினிமா விமர்சனமும் தரமானதா எழுதுவாரு. குறிப்பா, பெண்கள்கிட்ட ஆண்கள் கேட்க நினைக்கிற கேள்விகள ரொம்ம்ம்பவே நொந்துபோய் எழுதியிருப்பாரு. உக்காந்து யோசிப்பாரோஓஓஓ“ங்குற அளவுக்கு ஆச்சர்யப்பட வைக்கும் பதிவுகள்ல, இவர் தொடர்பதிவா எழுதின காதல் கடிதம் பதிவும் ஒண்ணு.
இவர் வசனக்கவிதை எழுதுறதுல வல்லவர். இவர் எழுதின கர்ப்பகாலக் காதல்“ங்குற பதிவுல காதல் ரசம் (குழம்பு, மோர்“னு) பொங்கி வழியும். பதிவுலக காதல் மன்னன்“னு பட்டம் குடுக்குற அளவுக்கு காதல் பத்தின பதிவுகளாவே எழுதிகிட்டு இருக்கார். ஒருமுறை, நிறைய பேர் “ஆணி புடுங்கிட்டு வரேன்னு அடிக்கடி கிண்டலா சொல்றதுனால பயபுள்ள திடீருனு பொங்கி எழுந்துடுச்சு.. உடனே, ஆணி தொழில் பற்றிய பதிவ, அதுல இருக்குற கஷ்டங்களப் பத்தி எழுதி, இனிமே கிண்லா கூட அப்டி சொல்லாதீங்கனு கேட்டுக்கிட்டார்.
அடுத்த நண்பர் இவர். இவரோட ப்ளாக்குக்கு அடிக்கடி யாராவது சூன்யம் வச்சிடுவாங்க. பாவம் மனுஷர் கடுப்பாகி புதுசா ஒரு வலைதளமே ஆரம்பிச்சுட்டார். வாராவாரம், இவரோட அஞ்சறைப்பெட்டி“ல (கடுகு, சீரகம்“னு) நிறைய தகவல்கள வாரி வழங்குவாரு. அடிக்கடி மருத்துவம் பற்றிய பதிவுகள் குடுக்குறது இவரோட தனித்தன்மை. சமூக அக்கறை, அரசியல் ஆர்வம் இவர்கிட்ட நிறைய இருக்கு (தண்ணிய குடிங்க பாஸூ). பொதுவா, வாழ்க்கைல நாம பண்ணுற தப்புக்கள்“னு சுட்டிக்காட்டி நகைச்சுவையா சொல்லிருப்பார்.
அடுத்ததாக, இவர் சீரியஸாகவும் நையாண்டியாகவும் பதிவுகளை எழுதுவதில் திறமையானவர். பாதுகாப்பாக Chat செய்றதுக்கெல்லாம் சொல்லிக்குடுத்துருக்கார்னா பாத்துக்கங்களேன் (படிச்சிட்டு கடுப்பானீங்கனா நா பொறுப்பில்லங்க.. சொல்லிப்புட்டேன்). அதோடு மட்டுமில்லாம, ஒரு அம்மா என்கிற முறையில் நேஹா பற்றிய பதிவுகள் மழலைக் கொஞ்சல்கள்.. குறிப்பாக குழந்தைகள் பற்றிய இவரோட பதிவு ரசிக்கவும் சிந்திக்கவும் வைக்கும்.
கூட்டாஞ்சோறுனு சொல்லிட்டு மொக்கை போடுற பதிவர் பற்றி சொல்லாம இருக்க முடியுமா? இவர் பதிவுகள்ல தான் மொக்கை போட்றாருனா லவ் லெட்டர்ல கூட மொக்கை தான். படிக்கிற நமக்கு, பேசாம கொலைக்கேசுல உள்ள போயிடலாமானு கூட தோணும். அவ்வளவு அருமையா எழுதியிருப்பாரு.
ம்ம்ம்ம்ம்??? எங்கயிருந்தோ குரட்டை சத்தம் கேக்குற மாதிரி இருக்கே.. கூட்டாஞ்சோறு அவ்ளோ ருசியாவா இருந்துச்சு?? நல்லா சாப்டதுனால தூக்கம் வருதோ?? (சரி சரி முறைக்காதீங்க.. என்ன பண்றது? அசிங்கப்பட்டாலும் அலட்டிக்காம இருக்கணும்“குறது நம்ம கொள்கை.)
இன்னைக்கு கூட்டாஞ்சோறு சரம் போதும்னு நெனைக்கிறேன். ஷ்ஷ்ஷ்ப்ப்ப்பா.. இப்பவே கண்ண கட்டுதேனு நீங்க முழிக்கிறது எனக்குப் புரியுது.. அதுக்காக இரக்கப்பட்டு விட்ருவேன்னு நெனச்சுடாதீங்க.
அப்புறம்... கிளம்புறதுக்கு முன்னாடி, பகிர்ந்துக்க நெனச்ச ஒரு சின்ன தத்துவம்ம்ம்ம்ம்...

வெற்றியை விட தோல்விக்கு  பலம் அதிகம்.

வெற்றி சிரித்து மகிழவைக்கும்

தோல்வி சிந்தித்து மகிழவைக்கும்


அடுத்து வரப்போற நாட்கள்ல பழைய, புதிய நண்பர்களோட பதிவுகள் பற்றிய சரங்கள் உங்களுக்காக வந்துகிட்டே இருக்கு. (அவ்வ்வ்வ்“னு எல்லாம் சொல்லக்கூடாது..)
நாளைக்கு சந்திக்கலாமுங்க..
.
.

25 comments:

 1. வெற்றியை விட தோல்விக்கு பலம் அதிகம்.

  வெற்றி சிரித்து மகிழவைக்கும்

  தோல்வி சிந்தித்து மகிழவைக்கும்


  அருமையான தத்துவம்.இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. ரொம்ப நன்றி ...நல்லா இருக்கு உங்களோட எழுத்து நடை ..புதியவர்கள் நிறைய பேர் இருக்காங்க போய் படிக்கிறேன்

  ReplyDelete
 3. நன்றி இந்திரா. நேரில் பேசுவது போன்றதான உங்கள் எழுத்து நடை எனக்குப் பிடித்திருக்கிறது. :)

  ReplyDelete
 4. நல்ல அறிமுகங்கள் ...

  ReplyDelete
 5. நல்ல அறிமுகங்கள், வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 6. கலக்குங்க., கலக்குங்க.,

  ReplyDelete
 7. //Lakshmi said...

  வெற்றியை விட தோல்விக்கு பலம் அதிகம்.

  வெற்றி சிரித்து மகிழவைக்கும்

  தோல்வி சிந்தித்து மகிழவைக்கும்


  அருமையான தத்துவம்.இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.//


  வருகைக்கு நன்றி
  லட்சுமி அவர்களே..

  ReplyDelete
 8. //இம்சைஅரசன் பாபு.. said...

  ரொம்ப நன்றி ...நல்லா இருக்கு உங்களோட எழுத்து நடை ..புதியவர்கள் நிறைய பேர் இருக்காங்க போய் படிக்கிறேன்//


  கட்டாயம் படிங்க பாபு..
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 9. //Deepa said...

  நன்றி இந்திரா. நேரில் பேசுவது போன்றதான உங்கள் எழுத்து நடை எனக்குப் பிடித்திருக்கிறது. :)//


  கருத்துக்கு நன்றி தோழி

  ReplyDelete
 10. //கந்தசாமி. said...

  நல்ல அறிமுகங்கள் ...//


  நன்றிங்க..

  ReplyDelete
 11. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  நல்ல அறிமுகங்கள், வாழ்த்துக்கள்!//


  வருகைக்கு நன்றி பன்னி சார்

  ReplyDelete
 12. //சங்கவி said...

  கலக்குங்க., கலக்குங்க.,//


  வருகைக்கு நன்றி நண்பரே..

  ReplyDelete
 13. அறிமுகப்படுத்தப்பட்ட விதம் பாராட்டத்தக்கது.

  அறிமுகமான பதிவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 14. இன்று எனது வலையில்

  இயன்றவரை தமிழில்(400வது இடுகை)

  நேரம் கிடைக்கும் போதும் வாங்களேன்..

  http://gunathamizh.blogspot.com/2011/08/400.html

  ReplyDelete
 15. கூட்டாஞ்சோறு வயிறு முட்ட திண்ணேன்... அப்பறம் வலைசர அறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 16. என்னைப்பற்றி அறிமுகம் செய்திருக்கிறீர்கள்.. நன்றி இந்திரா.. டீச்சரம்மா ஆயிட்டீங்க.. ட்ரீட் இல்லையா? ஹி...ஹி..

  ReplyDelete
 17. //வெற்றியை விட தோல்விக்கு பலம் அதிகம்.

  வெற்றி சிரித்து மகிழவைக்கும்

  தோல்வி சிந்தித்து மகிழவைக்கும்//


  அருமையான தத்துவம்.இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 18. //தமிழ்வாசி - Prakash said...

  அருமையான பகிர்வுங்க//


  நன்றிங்க..

  ReplyDelete
 19. //முனைவர்.இரா.குணசீலன் said...

  அறிமுகப்படுத்தப்பட்ட விதம் பாராட்டத்தக்கது.

  அறிமுகமான பதிவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.//


  வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே..

  ReplyDelete
 20. //முனைவர்.இரா.குணசீலன் said...

  இன்று எனது வலையில்

  இயன்றவரை தமிழில்(400வது இடுகை)

  நேரம் கிடைக்கும் போதும் வாங்களேன்..

  http://gunathamizh.blogspot.com/2011/08/400.html//


  தகவலுக்கு நன்றி

  ReplyDelete
 21. //மாய உலகம் said...

  கூட்டாஞ்சோறு வயிறு முட்ட திண்ணேன்... அப்பறம் வலைசர அறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்//


  வருகைக்கு நன்றி நண்பரே..

  ReplyDelete
 22. //கவிதை காதலன் said...

  என்னைப்பற்றி அறிமுகம் செய்திருக்கிறீர்கள்.. நன்றி இந்திரா.. //

  நன்றி நண்பரே..


  //டீச்சரம்மா ஆயிட்டீங்க.. ட்ரீட் இல்லையா? ஹி...ஹி..//


  ஹலோ.. ஹலோ... இங்க டவர் சரியா எடுக்க மாட்டீங்குதுங்க..
  (மீ எஸ்கேப்பூ...)

  ReplyDelete
 23. //சே.குமார் said...


  அருமையான தத்துவம்.இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.//


  வருகைக்கு நன்றி நண்பரே..

  ReplyDelete
 24. அறிமுகத்திற்கு மிக்க நன்றி இந்திரா ஆனா அந்த கா.ம. பட்டம்லாம் வேணாம்பா ஆவ்வ்வ்

  :))

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது