07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, August 31, 2012

மனிதனும் அடையாளங்களும்

வலைச்சரம்  ஐந்தாம் நாள்

அடையாளங்கள்  பற்றி இன்று பேசபோகிறேன் நிச்சயம் நம்மையும் அடையாளம் காண முடியும் .பொதுவாக நாம் ஒருவரை பார்க்கும் முன்பே அவர்களுக்கு ஒரு அடையாளத்தை உருவாக்கி கொள்கிறது மனம் .

அதன் பின் அந்த அடையாளத்தோடு அவர்களை ஒப்பிட்டு பார்த்து மகிழ்ச்சி கொள்கிறது சில நேரம் அந்த அடையாளத்தோடு  பொருந்தாத போது வருத்தபடுகிறது ..

இந்த ஒப்பீடு என்பது முதலில் தோற்றம் ,ஆடைகள் ,இவைகளோடு தான் தொடங்குகிறது இதனால் அந்த நபர் நம் அருகே இருந்தாலும் நம் கற்பனையில்உருவாக்கிய தோற்றத்தோடு பொருந்தாத போது  அவர்களை நாம் தொலைத்து விடுகிறோம் .

நாளடைவில் அந்த உருவம் தொலைந்து போகிறது அவர்களின் குணநலன்களை பற்றி நினைக்கிறோம். சிரிக்கிற போது நகைச்சுவையாக பேசுபவரை  நினைத்து கொள்கிறோம்.கோபப்படும் போது அதிகமாய் கோபபடுபவர்களை நினைக்கிறோம்.

இவை அனைத்தும் ஒரு ஏமாற்று வித்தை , இதை நம்மால் எளிதில் விட முடிவதில்லை ஒப்பிடுதல் என்பது நம் உடன் பிறந்தது .

பெரிய மனிதர்களுக்கு என்று ஒரு இலக்கணத்தை வைத்திருப்போம் அவர்கள் அந்த இலக்கணத்தை தாண்டி வருகிற போது  அவர்களை நாம் ஏற்றுகொள்வதில்லை .

ஆகையால் அடையாளங்களை தொலைத்து இயல்பாய் இயற்கையாய் அனைத்தையும் ஏற்றுகொள்ள பக்குவ படுங்கள் அப்போது வாழ்க்கை அழகாகும் .

******

ஒவ்வொரு
முறையும்
ஒவ்வொரு
முகமூடியோடு
முகம் காட்டுகிறாய் .......

எதுவும்
என்னை
பாதிக்காத போது
அனைத்தையும்
கழற்றி எறிந்துவிட்டு
சுயத்தை வெளிகாட்டுகிறாய் ....


உன் சுயத்தின்
அப்பட்டமான பிம்பத்தில்
அழுத்தமாய்
பதிந்து இருக்கிறேன் நான் .......
***

புதிய தளங்கள் உங்களுக்காக

ஹிசாலியின்  கவி துளிகள் 

மனோ ஓவியம் 

நட்புடன் சௌம்யா

அன்பு உள்ளம்  

குருசந்திரன் 

நாளை மீண்டும் உங்களை நல்ல சிந்தனைகள் + தளங்களுடன் சந்திக்கிறேன்

மேலும் வாசிக்க...

Thursday, August 30, 2012

உண்மையின் உண்மை


வலைச்சரம்  நான்காம்  நாள்

மகிழ்ச்சியின் எல்லையில் சிறகு விரித்து பறக்கிறேன்

உறவுகள் உடன் இருந்தும்
தனித்து விடப்பட்ட
ஆட்டுக்குட்டியை போல
பல நேரங்களில்
வெற்றிடத்தை
உணர்ந்து இருக்கிறேன் .........

ஆனால் உங்கள்
அன்பின் வலிமையால்
அந்த வெற்றிடம் இப்போது
நிரப்பி இருக்கிறது
மகிழ்ச்சி உறவுகளே .....

ஆசிரியர் பனி என்பது கற்றதை உணர்த்துதல் ஆகவே தான் நான் வாழ்வில் கற்றுக்கொண்ட உணர்ந்துகொன்டத்தை உங்களுக்கு கற்றுக்கொள்ள துணிந்தேன. என் எழுத்தை நிச்சயம் உங்களால் சுவாசிக்க முடியும் என்ற அதீத நம்பிக்கையில் .

பொதுவாகவே நாம் உண்மை பேசுவதற்காக பணிக்கபடுகிறோம் . உண்மையின் உண்மையை பற்றி உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன் .

உண்மையான மனிதனை விட சிலை அதிக நாள் வாழும் அதே போல காகித பூக்கள் நிஜப் பூக்க்களை விட நிலைத்து நிற்கும் . .

ஆனால் உண்மை என்பது நீடித்து நிற்பதில்லை உயிரோடு இருப்பது ,உயிர்த் துடிப்போடு இருப்பது .  உயிரோடு இருப்பது எல்லாமே அதிக நாள் நீடித்து நிற்க இயலாது.அது சாத்தியமும் இல்லை ..

மனிதர்களும் அப்படிதான் சிலர் ஜடமாய் இருக்கிறார்கள் அசைவுகளற்று இருக்கிறார்கள்,  இவர்களிடம் எந்த சலனத்தையும் ,எந்த பாதிப்பையும் நாம் எதிர்பார்க்க இயலாது ..

உண்மையாய் இருப்பவர்கள் தங்களுக்குள் மலர்ச்சியை பெற்றிருப்பார்கள், ஜீவித்து இருப்பார்கள் .காண நேரம் வாழ்ந்தாலும் அந்த அழகில் நம்மை சொக்க வைப்பார்கள்.
 .
ஆகவே சில நேரம் நேசித்தாலும்  உயிர்ப்புடன் நேசியுங்கள் அதே பரிணாமத்துடன்  அது நீடிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அதன் தாக்கம் நீடித்து நிற்கும் .

*****
ஆயிரம் வேலைகள்
இருந்தாலும்
ஒற்றை
புன்னகை
வீசிச் செல்
அதில்
ஓராயிரம்
அர்த்தங்களை
புரிந்து கொள்வேன்

****

புதிய உறவுகளின் தளங்கள்

தூரிகையின் தூறல் 

ராஜாவின் பார்வையில்  

தமிழ்ச் சமணம்

கடல் நிறைகளும் என் கவிதைகளும் 

தி சுபாசினி 

மீண்டும்  நாளை உங்களை சந்திக்கிறேன் புதிய சிந்தனைகளுடன் .மேலும் வாசிக்க...

Wednesday, August 29, 2012

நட்பின் வலிமை

வலைச்சரம் மூன்றாம் நாள் 

நட்பை பற்றி பேச ஆயிரம் வார்த்தைகள் உண்டு  ஆனால் அது ஒரு ஆற்றல் நம் வாழ்வின் நகர்விற்காக நாம் உட்கொள்ளும் ஒரு மகத்தான சக்தி .இதை நமக்கு அந்தந்த காலகட்டத்தில் யாரோ ஒரு மனிதர்மூலம் கிடைக்கபெருகிறது 

நாம் வாழ்வில் பல்வேறு கால கட்டங்களில் பலரை சந்திக்கிறோம் சிலர் நம் எண்ணங்களோடு ஒத்து இருந்தால் சில தூரங்கள் அதிகமாக அவர்களோடு பயணிக்கிறோம் அப்படி இல்லையெனில் அவர்களிடம் ஏதாவது ஒன்றை கற்றுகொள்வோம் .......அந்த ஏதாவது ஓன்று 

1) சகிப்புத்தன்மை 
2) துரோகம் 
3) வன்மம் 
4) அவமானம் 
5) அன்பு 
6) காதல் 
7) நட்பு 

இன்னும் இந்த வரிசையில்  இல்லாத பலவற்றை நாம் கற்றுக்கொள்ள முடிகிறது . ஆகையால் நாம் சந்திக்கும் நபர்கள் நம்மை வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு நகர்துபவர்களாக இருக்கிறார்கள் .அப்படி இல்லையெனில் நமக்கு ஏதாவது பாடத்தை கற்பிக்க கூடியவர்களாக இருக்கிறார்கள் என்ற கோணத்தில் எதிர்நோக்கினால் எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும் இல்லாத சமநிலை வாழ்வை அடைய முடியும் 

********
உன் நட்பை 
வரைய எண்ணி 
வண்ணத்தை தேடுகிறேன் 

வண்ணங்களுக்கு 
அப்பாற்பட்டு 
நிற்கிறது - உன் 
நட்பு 

ரோஜாவை  
வரையலாம் 
அதன் மணத்தை 
நுகர மட்டுமே 
முடியும்  .......

ராம்ப்ர‌சாத் க‌விதைக‌ள்


நாளை வேறு  புதிய தளங்களுடன் உங்களை சந்திக்கிறேன் உறவுகளே 

கருத்துகளால் இதயம் நனைத்த அணைத்து உள்ளத்திற்கும் நிரப்புகிறேன் என் 

அன்பை நன்றிகளுடன் .
மேலும் வாசிக்க...

Tuesday, August 28, 2012

வலைசரம் இரண்டாம் நாள் - நிரம்பி வழியும் அன்பு

வலைசரத்தில் நான் தொடுத்த
மாலைகளை பற்றிய உறவுகளின்
கருத்துகளில் நான் மீண்டும்
துளிர்கிறேன் ஒரு விருட்சமென .

இன்று நான் பேசுவது அன்பை பற்றி

அன்பின் மைய்யபுள்ளியில்தான் இந்த அகிலமே சுழலுகிறது என்பதை நம்மால் மறுக்க இயலாது .அன்பின் அதிர்வுகளை அனைவராலும் உணர முடியும் நம்மிடம் அன்பு இருக்கிறதா என்று விலங்குகள் கூட உணர்ந்துகொள்ளும் ஆற்றல் பெற்றவை .

அதன் ஆற்றல் அதீதம் அதனால் தான் பல காத தூரம் தாண்டியும் அதை உணர முடிகிறது .உலகத்திலே மிகவும் வேகமாக செல்லக்கூடியது ஒளி என்று கூறுகிறார்கள் .ஆனால் அதைவிட வேகமாக செல்லக்கூடியது "கருணை நிறைந்த அன்பு " நினைத்த மாத்திரத்திலேயே கைகளைக் கொண்டு கண்ணீரை அகற்றும் சக்தி அன்பிற்கு உண்டு .

அந்த அன்பை பரிமாறும் போது , பரிசளிக்கும் போது மற்றவர்களின் பாத்திரங்களோடு ஒப்பிடாதீர்கள் உங்களை உங்களின் அன்பை
அலங்காரமாக்குவதில்  முனைப்பாக இருக்காதீர்கள் .

உங்களின் அன்பை உங்களுடையதாக மட்டும் கொடுங்கள் அதன் எதார்த்தத்தில் நீங்கள் உயர்ந்து இருப்பீர்கள் .

*********

உன் அன்பை வெளிபடுத்த
நீ மேற்கொள்ளும்
சிரத்தைகள்
அவசியமற்றது ........

ஒரு கைக்குலுக்கையில்
ஒரு கண் துடைப்பில்

இதயம் நனைக்கும்
ஒரு பார்வையில் ......

நேசம் உதிர்க்கும்
ஒரு புன்னகையில்

நீ வெளிப்படுத்தி
சென்றிருக்க முடியும் .......
*******


புதிய உறவுகளின் முகவரி உங்களுக்காக .....

வாருங்கள் அவர்களோடு நம் நேசத்தை பரிமாற

நாளை நிறைய புதிய தளங்களுடன் உங்களை சந்திக்கிறேன் .............


மேலும் வாசிக்க...

Monday, August 27, 2012

கோவை மு சரளாதேவியின் சுய அறிமுகம் :வலைசரம் முதல் நாள்

வணக்கம் அன்பார்ந்த வாசக வட்டங்களே !
வணக்கத்திற்குரிய கருத்தாளர்களே !
வலையுலகில் உலாவும் தமிழ் தாயின் தவபுதல்வர்களே!
என்னை வலைச்சர ஆசிரியர் பணிக்கு அழைத்த திரு சீனு அவர்களுக்கும்
உங்கள் அனைவருக்கும் என் அன்பில் ஊறிய வார்த்தைகளால் வணக்கம்
சொல்லுவதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்

நான் என்கிற கோவை மு சரளாதேவியின் சுய அறிமுகம் :
நான் ஒரு பெண்

இந்த அறிமுகம் ஓன்று போதும்
வேறு குறிப்புகள் ஒன்றும் என்னை
இதைவிட அடையாளபடுதிவிட முடியாது
என்னை பற்றி

அகிலத்தின் சாட்சியே நான்தான் - ஆனாலும்
அணுவைவிட அலட்சியமாய் பார்கிறார்கள்
எல்லாம் இருக்கிறது என்னிடம் - ஆனாலும்
எதுவும் இல்லாதவளாய் இருக்கிறேன்

புதுமையின் மூலம் நான் - ஆனாலும்
பெண் என்னும் பதுமையாக பார்கிறார்கள்

கவிதையின் கரு நான் - ஆனாலும்
கவிதாயினியாக மட்டும் பதிவு செய்கிறார்கள்

எல்லாமே என்னில் தோன்றியதுதான் - ஆனாலும்
எதுவாகவும் நான் இல்லை

நான் கல்வி துறையில் பணியாற்றி வருகிறேன் தமிழின் முனைவர் பட்டம் வாங்கி விட்டேன் அதற்கான புலமையை இன்னும் தேடிக்கொண்டுதான் இருக்கிறேன் .

எழுத்து என் சுவாசம் அதன் மீது நான் பால்யம் முதல் காதல் கொண்டு இருக்கிறேன் அதை முதல் காதல் முதல் முத்தம் படித்தால் புரிந்துகொள்வீர்கள் .

என் கவிதை பயணம் என்னோடு பால்யம் முதல் இன்று வரை பல பருவம் கடந்து பயணித்து வருகிறது ஆனாலும் அதை வலை உலகிற்கு அறிமுகம் செய்தது வலைசரம் தான் அதனால் என் நன்றியை தெரிவிக்க கடமை பட்டு இருக்கிறேன் .நன்றி வலைசரம்

என்னுடைய முதல் கவிதைகள் எழுச்சிமிக்க கவிதைகள் ஈழத்து சகோதரிக்காக உதித்தது இந்த கவிதை மூலம் நான் எழுச்சி கவிதாயினியாக அழைக்கப்பட்டேன்
தமிழரின் இருண்ட காலம்

சமூகத்தின் அவலங்களை என் எழுத்தில் சாடியிருக்கிறேன் பெண்ணுக்கு இழைக்கப்படும் கொடுமைக்கு எதிராக எழுத்தை வாளாக தூக்கினேன்
சடங்கு
ஆனாலும் அதில் ஒன்றும் மாறவில்லை என் வலை பக்கம் திரும்பி பார்ப்பார் யாரும் இல்லை ஒரு சில உன்னத உள்ளங்கள் உணர்வுகளை மதித்தனர்.

அதன் பின் என் கோபங்களை விழுங்கி அன்பை நேசத்தை காதலை நட்பை கவிதையாக வடிக்க ஆரமித்தேன் ......அமோக வரவேற்ப்பு கருத்து மாலைகளால் என்னை அலங்கரித்தனர். புகழ் ஒரு மனிதனை உச்சியில் நிற்க வைக்கும் என்பதை உணர்ந்தேன்.

காதல் காதல் காதல்
காதல் இல்லையேல் மீண்டும் காதல் என்று காதலால் நிரப்பப்பட்ட என் நாட்குறிப்பை அனைவரும் உணர்ந்தனர்
நாட்குறிப்பின் பக்கங்கள் - 2 ( நாடி துடிப்பு )

கவிதை எழுத ஆரமித்தபின் அகத்திற்குள் ஒரு அகம் இருப்பதை உணர்ந்தேன் அது ஞானம் என்று சொல்லுகிரார்கள அந்த ஞானத்தின் கதவை திறந்தேன் அற்புத உணர்வுகளை உணருகிறேன் நீங்களும் உணர என்னுடன் வாருங்கள் .
உள்ளத்தின் ஓசை - 10 ( மரணம் )

என் சுயத்தை உங்கள் முன் தோலுரித்து காட்டிவிட்டேன் .இனி பிடித்த தளங்களை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன் வாருங்கள் .
கவிதையின் காதலி என்பதால் முதல் அறிமுகம் கவிதையால் நிரப்படுகிறது

என்னை வியப்பில் நிறுத்திய எழுத்துக்கு சொந்தகாரர் அற்புத புதையல் இவர் .
கவிதைக்காரன் டைரி
அகத்திணை இலக்கியத்தின் கூறுகளை அப்பட்டமாய் விளக்குகிறார் தன கவிதை கொண்டு
நிலைக்கண்ணாடி
காதலியை எப்படி கவருவது என்று அற்புத தகவல்களுடன் இருக்கிறது இவரின் கவிதை
ரசித்தவைகளும் ரணமானவைகளும்

நாளை புதிய தளங்களை பரிசளிக்கிறேன் காத்திருங்கள்
மேலும் வாசிக்க...

Sunday, August 26, 2012

சென்று வருக சீனி - வருக வருக கோவை மு சரளா

அன்பின் சக பதிவர்களே

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற நண்பர் சீனி - தான் ஏற்ற பொறுப்பினை சரி வர நிறைவேற்றி - ஏழு பதிவுகள் இட்டு - சுய
அறிமுகம் உள்ளிட்ட - 41 பதிவர்களையும் 53 பதிவுகளையும் அறிமுகப் படுத்தி -230 மறுமொழிகள் பெற்றிருக்கிறார்.

நண்பர் சீனியினை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க இசைந்துள்ளார் கோவை மு சரளா. இவர் “பெண் என்னும் புதுமை” என்னும் பதிவினில் எழுதி வருகிறார். ”அமிழ்ந்து கிடந்தது போதும் - பொங்கி எழு சுனாமியாய் “ என்ற மொழியினை கொள்கையாகக் கடைப் பிடித்து வருகிறார். இவர் கோவையைச் சார்ந்த பெண் பதிவர். ஏழே மாதத்தில் 257 பதிவுகள் இட்டிருக்கிறார்.

கோவை மு சரளாவினை வருக வருக என வரவேற்று - வாழ்த்தி - ஆசிரியப் பொறுப்பினை அளிப்பதில் பெருமை அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் சீனி

நல்வாழ்த்துகள் கோவை மு சரளா

நட்புடன் சீனா
மேலும் வாசிக்க...

வரவேற்கிறேன்.....காற்றினால்-
ஒன்று சேர்கிறது-
மேகங்கள்!

வலையினுள் -
சேர்ந்து-
உணவாகிறது-
மீன்கள்!

தாகம் தீர்ந்திட-
தண்ணீர் சேர்த்து தருகிறது-
ஊற்றுகள்!

ஆவணங்கள் சேர்ந்ததே-
''வரலாறுகள்''!

பல மனங்கள்-
ஒன்றுமையா இருப்பதே-
''கிராமங்கள்''!

''கிறுக்கல்களை''-
சீர்செய்தால்-
நேர் கோடுகள்!

கனிமங்களின்-
கூடாரமே-
''சுரங்கங்கள்!''

அது போலதான்-
இன்று மாநாடு நடத்தும்-
தமிழ் பதிவர்கள்!

வலை பதிவு -
சொந்தங்களே!
ஒரு நாள் நம் -
எழுத்துக்களால்-
ஏற்படும்-
மாற்றங்கள்!

நாம் நன்றாக -
அறிகிறோம்!-
உலகில் சமநீதியற்ற-
நிலைதனை!

அனைத்து தரப்பட்ட-
மக்களுக்கும் -
சம நிலை கிடைத்திட-
பயன்படுத்துவோம்-நம்
எழுத்தினை!

இன்று-
சங்கமிக்கும்-
நாம்!

என்றும்-
மக்களின் ஒற்றுமைதனை -
கருதி எழுதுவோம்!

வாழ்த்து கிறேன்-
இம்மாநாட்டை -
வரவேற்கிறேன்!

இன்றைய -
அறிமுகங்கள்-
கலந்துள்ளார்கள்-
கவிதையினுள்ளே!

ஆம்-!அவர்கள்
சிப்பிக்குள் உள்ள -
முத்துக்களே!

சொந்தங்களே!
போதுமே-
நீண்ட கால -
இடைவேளை!

தொடர்ந்து நீங்கள்-(அறிமுகங்கள்)
எழுதிடணும் -
என்பதே -என்
ஆவலே!

எவ்வளவு பிரகாசம் உள்ள-
தீபம் ஆனாலும்-
தூண்டிட வேண்டும்-
விரல்களே!

வாய்ப்பு தந்த-
சீனா அவர்களே!

பின்னூட்டம் தந்து-
பின் தொடர்ந்த -
உறவுகளே!

உங்கள் அனைவருக்கும்-
மிக மிக நன்றிகளே!

மேலும் வாசிக்க...

Saturday, August 25, 2012

நாலாவது தூண்!


பத்தி பத்தியா-
எழுதுவதா!?


'பத்த ' வைக்க-
எழுதுவதா!?

அநீதியை -
எதிர்க்கவா!?

அரை நிர்வாண -
படங்களை -
வெளியிடவா!?

கருமை படிந்த வாழ்வு கொண்ட-
மக்கள் இங்கே-
எத்தனையோ!?

இதில் -
'மஞ்சள்' நிற-
கதையோ!?

மை கொண்ட-
பேனாவின் எழுத்துக்களா!?

கொஞ்சமாவது-
மனசாட்சியை தொட்டு-
எழுதுகிறோமா!?

சந்தேக நபர்கள்-
'உள்ளேயும்'!

'சம்பந்தப்பட்ட ' நபர்கள்-
'வெளியேயும்!'

ஊடகங்கள் -
ஒண்ணுமே தெரியாதது-
 மாதிரியும்!

புலன்விசாரணை-
என்கிற பெயரிலே!

ஏன் புளுகு மூட்டை-
செய்திகளே!

ஜனாநாயகத்தின்-
நாலாவது தூண்!

ஏன் ஆனது-
வீண்!

''மக்களை பிளவுபடுத்துகிறது''!
''வெறுப்புகளை விதைக்கிறது!''

''குண்டு வெடித்த உடனேயே-
முஸ்லிம்கள் மீது வீண்பழி-
சுமத்துகிறது!''

''குறுஞ்செய்தி வருகிறதாம்!''
''மின்னஞ்சல் வருகிறதாம்!''

இவைகளெல்லாம்-
ஆதாரமாம்!?

''குறி'' இட்ட செய்திகளெல்லாம்-
பிரஸ் கவுன்சில் தலைவர்-
முன்னாள் நீதபதி மார்க்கண்டேய கட்ஜு அவர்கள்-
பேட்டியின்போது கேட்டது-
இவையெல்லாம்!

எப்படியும் -
வெளியேறாமல் -
விடுவதில்லை-
எரிமலை!

எங்காவது -
ஒருவரிடத்திலாவது-
வெளிவரும் -
உண்மைகளே!

''சஞ்சீவ் பட்'-
போல!

இன்னும் எத்தனை பேர்கள்-
உண்மையை சொலாவார்களோ!?

முக்கிய தளங்கள்!
முத்தான தளங்கள்!

சிந்திக்க 1
சிந்திக்க 2
சிந்திக்க 3 சிந்திக்க 4
சிந்திக்க 5
சிந்திக்க 6

நாளைய தலைப்பு;
வரவேற்கிறேன்....
மேலும் வாசிக்க...

Friday, August 24, 2012

மண் வாசம்...விதைத்த கைகளை-
அறியாது-
முளைத்து வரும்-
செடிகள்!

'உண்டாக்கியவர்களை'-
விட-
உறுதுணையாக நிற்பவர்களை-
நேசிப்பது மனிதர்கள்!

இமைகளை அறிவதை-
விட-
கண்கள் விரும்புவது-
காட்சிகளை!

பொத்தி வளர்த்தவளை -
விட-
எட்டி உதைத்தவளை-
நேசிப்பது காதல்!

வாடிய நிலையை-
மறக்க செய்யும்-
வருமான நிலைகள்!

எதுவோ!?
எப்படியோ!?

குச்சியின் முனையில்-
கிளம்பி -
மறுமுனையில் திரும்பும்-
எறும்பை போல!

மேலே பறந்தாலும்-
கீழே 'கண்' வைக்கும்-
பருந்தை போல!

தவழ்ந்து  செல்லும்-
குழந்தை திரும்பி -
தாயை பார்ப்பது போல!

கடல் கடந்து -
பிழைக்க சென்றாலும்-
'உயிர் பிழைக்க 'சென்றாலும்!

பிறந்த மண்ணை -
நேசிக்கிறார்கள்-
மனதாலும்!

நிறம் ,மொழிகளை -
அடையாளம் கண்டுகொள்ளவே-
இறைவன் படைத்தான்!

அதன் பேராலோ-
அடித்து 'கொல்லும்'-
மனுஷ ஜென்மங்கள்!

காற்றில்-
அலை வரிசை-
கலந்து இருப்பது போல!

கம்பிகளில் -
மின்சாரம் ஒளிந்து -
இருப்பது போல!

ஒவ்வொருவரிடமும்-
பிறந்த மண்ணின் வாசம்-
ஒட்டிகொண்டுதானிருக்கும்!

எங்கே வாழ்ந்தாலும்-
எப்படி வாழ்ந்தாலும்-
தன்னுள் இருந்து வெளிப்பட்டு -
கொண்டே தானிருக்கும்!

ஒவ்வொரு ஊருக்கும்-
ஒரு வரலாறு உண்டு!

வட்டார மொழிகள்-
உண்டு!

அம்மொழிகளை பேசுவதை-
கேட்கும்போது-
மிட்டாயாய் இனிக்கும்!

இனிக்கும் பதிவுகள்!
ஜொலிக்கும் -
முத்தான பதிவுகள்!

1 தனி மரம்.
2 வலையுகம்.
3 மயிலன்.
4 சுப்ரமணியம்.
5 சிட்டு குருவி.
6 சாதிகா .
7 அரசன் சே.

நாளைய தலைப்பு-
நாலாவது தூண்.....மேலும் வாசிக்க...

Thursday, August 23, 2012

கவிதை....மலர்கள்!
தேனீக்கள்!

மண்ணும்!
விண்ணும்!

காதல்!
காமம்!

காலசுவடுகளும்!
வரலாற்று நிகழ்வுகளும்!

உடலும்!
உயிரும்!

நேர்மையும்!
எதிரானவையும்!

குழு கொண்ட-
விளையாட்டும்!
அவர்களின்-
எண்ணங்களின் ஓட்டமும்!

புதைந்துள்ள-
தண்ணீரும்!
மறைந்துள்ள-
கண்ணீரும்!

மதுவுக்கும்!
மதிவீனதிற்க்கும்!

பருவத்திற்கும்!
அடங்கிட மறுப்பதிற்கும்!

தாய் அரவணைப்பிற்கும்!
குழந்தை சிரிப்பதற்கும்!

இத்தனைக்கும்-
ஒவ்வொன்றுக்கும்-
தொடர்பிருக்கு!

கண்ணுக்கு புலப்படாத-
உணர்வு பாலமே-
தொடர்பு-
இதற்க்கு!

புலவர்கள்-
அன்றைய-
அரசவைகளை -
அலங்கரித்தார்கள்!

வலைபதிவர்களோ-
தன் ஆதங்கங்களையும்-
'சுமைகளையும்'-
பதிகிறார்கள்!

புலவர்களுக்கு-
பொன்னும் பொருளும்!

வலை சொந்தங்களுக்கு-
உற்சாகமூட்டும்-
உறவுகளும்!

கவிதை எழுதுபவர்கள்!
வாசிப்பவர்கள்!
மென்மையானவர்கள்!

எனக்கு தெரிந்த -
கவிதையாளர்கள்!
கவிதையானவர்கள்!

அதுதான்-
முத்தானவர்கள்!

1 சசிகலா!
2 செய்தாலி!3 ரேவா!
4 கோவை மு. சரளா!
5 ராசன்!
6 மகேந்திரன் !7 கோவி!
8 அருணா !
9 ரிஷ்வன்!
10 ஆதிரா!

நாளைய தலைப்பு;
மண் வாசம்.......
மேலும் வாசிக்க...

Wednesday, August 22, 2012

படித்தவர்கள்!வண்ணம் மட்டும்-
இருந்தால்-
பூக்களா!?

பெயருக்கு பின்னால்-
பட்டங்கள் மட்டும் -
இருந்துவிட்டால்-
படித்தவர்களா!?

அநேகமான -
பட்டங்கள் உலகில்-
உண்டு!

மனிதாபிமானங்கள்-
தேடவேண்டிய நிலை-
உலகில் இன்று!

ஒருவரை-
 கண்டால்-
பாதி தெரிகிறான்!

பேச ஆரம்பித்தவுடன்-
மீதம் தெரிகிறான்!

அரசன் ஒருவன்-
கனவு கண்டான்!

அனைத்து பல்லும்-
விழுந்து விட்டு-
ஒரு பல் இருக்கும்-
காட்சியை கண்டான்!

கனவின் பலன் அறிய-
சபை கூட்டப்பட்டது!

காரணம்-
சொல்லப்பட்டது!

அதிகமானவர்கள்-
சொன்னார்கள்!

உனக்கு முன்னாலேயே-
உன்குடும்பம் -
இறந்து விடும் -
என்றார்கள்!

அனைவரும்-
தண்டனைகள் பெற்றார்கள்!

கடைசியாக ஒருவர்-
வந்தார்!

அவரும்-
அதைதான்-
சொன்னார்!

பொன்னும் பொருளும்-
பெற்றார்!

அவர் சொன்னதோ-
உன் குடும்பத்தை விட -
உங்களுக்கு ஆயுள் கூட-
என்றார்!

சொன்ன விதத்தில்தான்-
மாற்றம்!

கருத்தில்-
ஒரே அர்த்தம்!

இன்றைய உலகில்-
ஆழமான கருத்துக்களுக்கு-
பஞ்சம்!

உணர்ச்சி வசபடுவதே-
மிச்சம்!

அதனால்தான்-
உள்நாட்டிலேயே-
மக்கள் அகதிகளாக-
தஞ்சம்!

படித்தவர்கள்!
சிறந்தவர்கள்!

சொல்வதிலும்-
அற்புதமானவர்கள்!

நல்ல விஷயத்தை-
பகிர்வார்கள்!

கெட்டதை கண்டால்-
வெறுப்பார்கள்!

இவர்களே எனக்கு-
படித்தவர்கள்!

மிக பிடித்தவர்கள்!

 அதுதான்-
இன்றைய முத்துக்கள்!

1 குணசீலன் அவர்கள்!
2 வெங்கட் நாகராஜ் அவர்கள்!
3 சதக் அவர்கள்!
4 ஜோசப்ளின் அவர்கள்!
5 எட்வின் அவர்கள்!
6 உண்மை அவர்கள்!
7 சீனு அவர்கள்!
8 திண்டுக்கல் தனபாலன் அவர்கள்!

நாளைய தலைப்பு;
கவிதை......

மேலும் வாசிக்க...

Tuesday, August 21, 2012

மூத்தவர்கள்!


மூத்தவர்கள்-
கடந்த காலத்தின்-
பெட்டகங்கள்!

இளைய சமூகம்-
மறந்து விட்ட-
அறிய புத்தகங்கள்!

அவசர கதி ஓட்டம்-
சுறு சுறுப்பா!?

அவசியமான ஓட்டமே-
அவசியமப்பா!!

ஓடி உழைத்து-
ஓடானவர்கள் -
பெரியவர்கள்!

அவர்களிடம்-
கொட்டி கிடக்குது-
அனுபவங்கள்!

அன்றொரு நாள்-
கிளம்பியது -
ஒரு கூட்டம்-
 புனித யாத்திரைக்கு !

தடை விதித்தான்-
அரசன்-
பெரியவங்களுக்கு!

நெடுந்தூர பயணத்திற்கு-
அசௌகரியம் ஏற்படக்கூடாது-
என்பதற்கு!

பயணத்தின்-
நடுவில் !

தண்ணீர்-
தீர்ந்தது!

நாக்கு-
வரண்டது!

பாலைவனமோ-
அதை விட வறட்சி-
கொண்டது!

தேடினார்கள்!
தேடினார்கள்!

தெரியவே -
இல்லை!
நீர் நிலை!

ஒரு இளைஞன் -
கூறினான்-
ஆலோசனை!

அங்கு கிடைத்தது-
நீர் சுனை!

அழைத்து வரபட்டான்-
அரசனிடம்!

கேட்க பட்டது-
கேள்விகள்-
அவனிடம்!

முதலில் மன்னிப்பை-
பெற்று கொண்டான்!

சாமான்களின் நடுவில்-
ஒளிந்து வந்தார்-
என் தகப்பன்!

தடையின்-
காரணத்தை-
கேட்டறிந்தார்!

பிறகு வானத்தை-
பார்த்தார்!

'குறிப்பிட்ட ' பறவை கூட்டம்-
கண்டார்!

அதன்படி இவ்வளவு-
தூரத்தில் தண்ணீர் இருக்கும்-
என்றுரைத்தார்!

அதன்படியே-
தண்ணீர் கிடைத்தது!

வாலிபனுக்கு-
மூச்சி வாங்கியது-
சொல்லி முடித்ததும்!

அரசன்-
வருந்தினான்!

தவற்றை-
உணர்ந்தான்!

இளைய சமூகமே-
நாம் திருந்துவது-
எப்போது!?

பெரியவர்களின்-
அனுபவங்களை-
கேட்பதுதான்-
எப்போது!?

பதிவுலகின் -
மூத்தவர்கள்!

அதுதான்-
முத்துக்கள்!1 ரமணி அய்யா!
2 சென்னை பித்தன் அய்யா!
3 கோபால கிருஷ்ணன் அய்யா!
4 பால கணேஷ் அவர்கள்!
5 அம்பாளடியால்!
6 புலவர் இராமானுசம் அவர்கள்!
7 ஹுசைனம்மா அவர்கள்!
8 ஹேமா அவர்கள்!

நாளைய தலைப்பு;
படித்தவர்கள்....


மேலும் வாசிக்க...

Monday, August 20, 2012

நோக்கம்...(அறிமுகம்)கோடிகளில் ஒன்றே-
உயிர் பிழைக்கிறது-
கருவறையில்!

கோடானு கோடி மக்களில்-
ஒரே துளிதான் நாம்-
உலகில்!

வந்தவர்கள்-
கணக்கு என்ன?

"இருப்பவர்கள்"-
கணக்குதான் என்ன!?

"போனவர்கள்"-
நிலைதான் என்ன!?

அனைத்திற்கும் -
"முடிவில்லாமல்"-
இருக்குமா என்ன!?

அறிய விழைகிறேன்-
பிறந்ததின் -
நோக்கத்தை!

அதிலொன்றே-
தொடர்கிறேன்-
"எழுத்தை"!

எழுதி உள்ளேன்-
ஐநூறு கவிதைகளை!

சில மக்களிடம்-
சேர்ந்து இருப்பதோ-
இருக்கலாம் -
இருபதுகளே!!

தேர்ந்தெடுத்து போடுகிறேன்-
சிலவற்றை!

'நுழைந்து '-
படிக்கலாம்-
எல்லாவற்றையும்!

1 .அணை..
2 .சகோதரிகளே....
3 .உம்மாளே...
4 .கண்திருஷ்டியா..?
5 .கண்டதுண்டா?
6 .திருமணம் ஆகி போனவளே...
7 .நட்பு...
8 .இப்படிக்கு...9 . பெண் சிசு!
10 .தலைவாச கதவு!

நாளை தொடர்கிறேன்-
அறிமுகங்களை!

இல்லை-
முத்துகளை!

நாளைய தலைப்பு-;
மூத்தவர்கள்...
மேலும் வாசிக்க...

Sunday, August 19, 2012

சீனி பொறுப்பேற்க - நாடோடி விடை பெறுகிறார்

அன்பின் சக பதிவர்களே

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற நண்பர் ஸ்டீபன் தான் ஏற்ற பொறுப்பினைச் சரி வர நிறைவேற்றி - மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.

இவர் சுய புராணம், பல்சுவைப் பதிவுகள், இயற்கை, விவசாயம், மருத்துவம், சினிமா செய்திகள், இலவச நூல்கள், கவிதைகள் என்ற பல்வேறு தலைப்புகளீல் 53 பதிவர்களையும் அவர்களது 70 பதிவுகளையும் அறிமுகப்படுத்தி 180 மறு மொழிகள் பெற்றிருக்கிறார்.

நண்பர் ஸ்டீபனை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார் அருமை நண்பர் சீனி.

இவர் இராமநாதபுரம் மாவட்டத்தினைச் சார்ந்த ஒப்பிலான் என்ற கிராமத்தினைச் சார்ந்தவர். கவிதைகள் என்ற தளத்தினில் எழுதி வருகிறார். 18 மாதங்களீல் 500 பதிவுகளைத் தாண்டி விட்டார்.

நண்பர் சீனியினை வருக வருக என வரவேற்று, வாழ்த்தி, ஆசிரியப் பொறுப்பில் அமர்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் ஸ்டீபன்

நல்வாழ்த்துகள் சீனி

நட்புடன் சீனா
மேலும் வாசிக்க...

நாடோடியின் பார்வையில்_பல்சுவைப் பதிவுகள்


வலைச்சர நண்பர்களுக்கு வணக்கம்,

எனது நண்பனுக்குச் சமீபத்தில் தான் திருமணம் நடந்தது. திருமணமானப் புதிதில் சின்ன மாமியார் வீட்டில் விருந்துக்கு அழைத்திருந்தார்கள். இவன் தனது மனைவியைக் காலையிலேயே டூவீலரில் சென்று அவர்கள் வீட்டில் விட்டுவிட்டு, இவன் மட்டும் அவசரமாக வெளியில் கொஞ்சம் வேலையிருப்பதால் அங்குத் தங்காமல் மதியம் உணவுக்கு வந்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டு வந்து விட்டான். இவனுக்கு நாய் என்றாலே ஏக பொருத்தம். எந்தச் சாதுவான நாயும் இவனைப் பார்த்தால் வாலை உயர்த்திக் குரைக்கத் தொடங்கிவிடும், எனவே நாயை மட்டும் ஒருவர் வீட்டில் பார்த்து விட்டால் அந்த வீட்டுக்குத் தனியாகப் போக மாட்டன். இவன் விருந்துக்குப் போயிருந்த வீட்டில் ராஜபாளையம் நாய் ஒன்று இருந்திருக்கிறது. காலையில் இவன் சென்ற போது இவன் கண்ணில் அது மாட்டவில்லை அல்லது அது கண்ணில் இவன் மாட்டவில்லை.

வெளியில் உள்ள வேலை எல்லாம் முடிவதற்கு மதியம் ஆகிவிட்டது. மாமியார் வீட்டுக் கறி விருந்துச் சாப்பாடு நினைவுக்கு வரவே நேராக‌ சாப்பாட்டுக்கு, கரெக்டா மாமியார் வீட்டுக்கு வந்து சேர்ந்தான். வண்டியை "கேட்" டுக்கு வெளியில் நிறுத்திவிட்டு, நடந்து "கேட்டை" திறக்க சென்றால் பெரிய அதிர்ச்சி, ஒரு பக்கம் ராஜபாளையம் நாய்க் கம்பீரமாக நிற்கிறது, இன்னொரு பக்கத்தில் தோட்டத்தில் சின்ன மாமியார் வாழையிலை வெட்டிக்கொண்டு இருக்கிறார். இவனுக்கு இருந்த பசியே மறந்துப் போச்சு. இவனை நாய்ப் பார்த்தவுடனே அது நறுக்கிய வலையும் முறுக்கத் தொடங்கிற்று. மறுபக்கத்தில் இருந்த மாமியார் "சும்மா வாங்க, சோபி ஒண்ணும் செய்யாது" என்று இவனைப் பார்த்தார். இவனுக்கோ அடிவயிறுக் கலங்க ஆரம்பிச்சுட்டுது. "ஆமா!! நாய் உங்களை ஒண்ணும் செய்யாது, எல்லாம் எனக்குத் தான்" என்று மனசுக்குள் நினைத்து விட்டு, "மாமி நீங்க கொஞ்சம் அது பக்கத்துல வந்து பிடிச்சுக்குங்க, நான் வந்துடுறேன்" என்று சொன்னான்.

சின்ன மாமியார் வந்து நாயைப் பிடிப்பதற்குள், வீட்டின் உள்ளிருந்து வெளியில் வந்த சின்ன மாமனார் "என்ன மாப்ள இந்த நாய்க்குப் போய் இப்படிப் பயப்படுறீங்கனு" இவனுடைய ஆண்மைக்குச் சவால் விட இவனும் "சடோர்னு" கேட்டைத் திறந்து வீட்டை நோக்கி நடக்க, முறுக்கிய வாலுடன் சோபியும் பாய, "ஆஆஆனுனு" நண்பனின் அலறல்.

நாய்ப் பாய்ந்த வேகத்தில் அதன் பல் எதுவும் படவில்லை, நகம் தான் கீறி விட்டுருந்தது.

அப்புறம் என்ன?. பக்கத்து வீட்டில் உள்ள‌ ஒவ்வொருவரும் விசாரிக்க வந்துட்டாங்க.

"நம்ம சோபி, ஊர்ல‌ இதுவரைக்கும் யாரையும் கடிச்சதே கிடையாதுனு" பெருசு ஒண்ணு ஆரம்பிக்க, ஆமா அக்கா "புதுசா வந்த மாப்பிளையையாக் கடிக்கனுமுனு" இன்னொரு பெருசு ஆரம்பிக்க, நண்பனுக்கு "ஆமா இது ரெம்ப முக்கியம்" என்று தனக்குள்ளேயே கடிந்து கொண்டான்.

நாயின் பல்லுப் படல என்றாலும், "கறி ஏதும் சாப்பிட வேண்டாம், வெறும் ரசம் மட்டும் சாப்பிடுங்கனு" பக்கத்துவீட்டுக் காரர் சொல்ல, "விருந்துக்கு வந்த இடத்துல இப்படி ஆகிப் போச்சேனு" இன்னொருவர் ஆரம்பிக்க, நண்பன் கடுப்பாகிவிட்டான்.

எப்படியோ எல்லோரையும் ஒருவழியா சமாதானப் படுத்திவிட்டு, ரசம் வைத்துச் சாப்பிட்டு விட்டு, மனைவியை வண்டியில் ஏற்றி, வீட்டுக்குக் கிளம்பினால், போகும் வழியில் எல்லோரும் இவனை ஒரு மாதிரியாகப் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள், இது போதாதுனு வழியில் மூணு இடத்தில் வண்டியை நிப்பாட்டி "நாய் கடிச்சாமே, எங்கக் கடிச்சினு" விசாரிப்பு வேற.

"என்ன கொடுமையிதுனு" தலையில அடிச்சுட்டு வந்திருக்கிறான்.

நான் எழுதிய ஆறு பதிவுகளுமே ரெம்பச் சீரியஸா எழுதியது போன்ற ஓர் உணர்வு எனக்கு. என்னைப் புதுசாப் படிக்கும் அனைவரும் ரெம்பச் சீரியஸான பதிவர் என்று நினைத்து விடக் கூடாது என்பதால் தான் இந்தக் காமெடிப் பதிவு. எனக்கும் புதுசாக் கல்யாணம் ஆனதால், எனக்கு நடந்ததைத் தான் எவனுக்கோ நடந்தது போல இங்க வந்து கத விடுறானு நினச்சுடக் கூடாது..... :)

இன்று காமெடி, செய்திகள், அனுபவம், தொழிற்நுட்பம் என்று பல்சுவைப் பதிவுகளை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X

பதிவர் பெயர்: இரவின் புன்னகை

"தன்னம்பிக்கையின் இடம் இது" என்ற இந்த பதிவில் சிறுசிறு துணுக்குகள் கதைகள் மூலம் தன்னம்பிக்கையை பற்றி அருமையாக விளக்கியிருக்கிறார்.

தன்னம்பிக்கையின் இடம் இது

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X

பதிவர் பெயர்: கலாகுமரன்

வாய் வீரர்களாக இல்லாமல், செயல் வீரர்களாகவும் இருக்க வேண்டும் என்று அழுத்தமாகச் சொல்லும் கதை. ஆனால் இப்போது வெறும் வாய் வீரர்களே அதிகம் என்பதுடன் கதை முடிகிறது.

வேதம் நீ ... [ ஒரு பக்க கதை ]

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X

பதிவர் பெயர்: அருண்

நீயுட்டனின் மூன்று விதிகளையும் இதவிட சுவரஸ்யமாகவும், எளிதாக புரியும் படியும் சொல்லிவிட முடியாது, நீங்களும் போய் படிங்க.

நியூட்டனின் இயக்க விதிகள்

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X

பதிவர் பெயர்: விருச்சிகன்

இந்தியாவின் வல்லரசு கனவு பற்றி, இவருடைய பார்வையில் எழுதியிருக்கிறார். நீங்களும் போய் படிங்க.

வல்லரசுனா என்ன? நாம எப்போ வல்லரசு ஆவோம்?

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X

பதிவர் பெயர்: thamilselvi

விண்முகில் என்ற வலைத்தலத்தில் இவர் எழுதியிருக்கும் அனுபவ பதிவில், அனைவருக்கும் எடுத்துக்காட்டாக இருக்கும் ஒரு காதல் தம்பதியினரை பற்றி எழுதியிருக்கிறார். நீங்களும் இங்க போய் படிங்க.

காதலுடன் காதல் மனம் - 1

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X

பதிவர் பெயர்: Uzhavan Raja

"உழவன்" என்ற வ்லைத்தளத்தில் குடும்ப அட்டை வாங்குவது பற்றிய தகவலை அறிய‌ தகவல் அறியும் சட்டத்திற்கு எவ்வாறு விண்ணப்பிக்கலாம் என்று தெளிவாக நமக்கு அறிய தருகிறார்.

குடும்ப அட்டை பெறுவது பற்றிய தகவலை பெற தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு எவ்வாறு விண்ணப்பிக்கலாம்?

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X

நான் எழுதிய ஒரு அனுபவ காமெடி பதிவையும் உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.

ச‌ப்பாத்தி தோசையாக‌ மாறிய‌க் க‌தை..

குறிப்பு: இன்று அறிமுக படுத்திய வலைத்தளங்கள் நண்பர்கள் சிலருக்கு அறிமுகமானவையாக இருக்கலாம். புதியவர்களுக்காக நான் தொகுத்துள்ளேன். எனக்கு ஒரு வாரம் வாய்ப்பு கொடுத்த சீனா அய்யா அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி, மேலும் இந்த ஒரு வாரமும் தொடர்ச்சியாக வந்து கருத்துரை வழ்ங்கிய நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.

நல்வாழ்த்துக்களுடன்,
நாடோடி.
மேலும் வாசிக்க...

Saturday, August 18, 2012

நாடோடியின் பார்வையில்_இயற்கையும், விவசாயமும்


வலைச்சர நண்பர்களுக்கு வணக்கம்,

இயற்கையும, விவசாயமும் ஒன்றையென்று தொடர்புடையது. இன்றைக்கு இந்த இரண்டும் வீழ்ச்சிப் பாதையில் செல்கிறது. காடுகள், ஏரிகள், குள்ங்களை அழித்து வானளாவியக் கட்டிடங்களைக் கட்டதொடங்கி விட்டோம். விவசாயம் செய்யும் நிலங்கள் பல ஆளும் அரசால் தொழிற்சாலைகளுக்குத் தாரை வார்க்கப்படுகிறது. இந்தியா "மிகப் பெரிய விவசாய நாடு" என்று ஏட்டில் உள்ளது கறிக்கு உதவாத சுரைக்காயகவே இருக்கிறது. இயற்கையால் நமக்குக் கிடைக்கும் பல வளங்களை நாம் அழித்து விட்டு, கனவு உலகில் மிதக்க தொடங்கிவிட்டோம். இயற்கையைப் பற்றியும், விவாசாயத்தைப் பற்றியும் சிறிதும் அறியாத ஒரு தலை முறையை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

நமது குழந்தைகளுக்கு இயற்கையின் அவசியத்தையும், , அவற்றைப் பாரமரிப்பது பற்றியும் சொல்லிக் கொடுப்பது நாம் ஒவ்வொருவரின் கடமை. இவற்றை அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க நமக்கு இயற்கையைப் பற்றியும், விவசாயத்தைப் பற்றியும் தகவல்கள் தெரிய வேண்டும்.

இயற்கையின் அழிவு, பல்லுயிர் பெருக்கம், ஓசோன் துளை, மரபணு விதை மாற்றக் காய்கறிகள் என்று எந்தத் தலைப்பில் நீங்கள் இணையத்தில் தேடினாலும் பல தகவல்களைக் கொடுக்கிறது. இன்றைக்கு நானும் இவைகளைப் பற்றி எழுதும் சில வலைத்தளங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X

பதிவர் பெயர்: gandhimathikumar

இயற்கை விவசாயத்தையும், அதன் அவசியத்தையும் அனுபவ பூர்வமாக‌ விரிவாகவும், தெளிவாகவும் எழுதியிருக்கிறார். இவரது வலைத்தளத்தில் உள்ள எல்லா பதிவுகளையும் படிக்குமாறு அனைவரையும் கேட்டுகொள்கிறேன்.

இயற்க்கை விவசாயம்

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X

பதிவர் பெயர்: kothandaraman

"விவாசாயின் குரல்" என்ற வலைத்தளத்தில், நமது நாட்டின் வேளாண்மையை பற்றிய தகவல்களையும், அவலங்ளையும், நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் பற்றி எழுதியிருக்கிறார்.

நமது நாட்டு வேளன்மையின் பரிதாப நிலையும் நாம் செய்ய வேண்டியதும்

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X

பதிவர் பெயர்: Thoppil Shuhaib

"கடலோரம்" என்ற வலைத்தளத்தில் விலகி செல்கிறது விவசாயம் என்ற தலைப்பில் தமிழகத்தில் விவசாய எப்படி இருந்தது, எப்படி இருக்கிறது என்ற புள்ளி விவரங்களுடன், நாம் உணவு பொருளுக்காக அண்டை மாநிலங்களை சாந்திருக்க வேண்டிய அவலத்தையும் நமக்கு அறிய தருகிறார்

விலகிச்செல்கிறது விவசாயத் தலைமுறை!

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X

பதிவர் பெயர்: sindhu 

பிளாஸ்டிக் பை எதனால் தவிர்க்க வேண்டும் என்பதற்கு எழு காரணத்தை விளக்கியிருக்கிறார். இந்தப் பிளாஸ்டிக் பைகளை உபயோகப்படுத்துவதன் தீமையை மக்களும் புரியத் தொடங்கியுள்ளன. அனைவரும் அவசியம் திஎஇந்து கொள்ள வேண்டிய பதிவு.

பூமியை காப்போம் பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்போம்

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X

பதிவர் பெயர்: ஜானகிராமன்.

மனிதம் மட்டும் வாழ்வதற்கு இந்தப் பூமிப் படைக்கப்படவில்லை, எல்லா உயிரினங்களும் வாழ்த்தான். தாவரங்களும், பிற உயிரினங்களும் பூமியில் வாழ்ந்தால் மட்டுமே மனுதனும் வாழ இந்தப் பூமி ஏதுவாக அமையும் என்பதை விரிவாக எழுதியிருக்கிறார்.

மனிதனுக்கு மட்டுமா உலகம்?

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X

அப்படியே நானும் இயற்கையை பற்றி எழுதிய சில பதிவுகளை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.

ப‌ல்லுயிர் பெருக்க‌ம்_ப‌யோடைவ‌ர்சிட்டி

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X

குறிப்பு: இன்று அறிமுக படுத்திய வலைத்தளங்கள் நண்பர்கள் சிலருக்கு அறிமுகமானவையாக இருக்கலாம். புதியவர்களுக்காக நான் தொகுத்துள்ளேன்.

நல்வாழ்த்துக்களுடன்,
நாடோடி.

மீண்டும் நாளை சந்திப்போம்.....
மேலும் வாசிக்க...

Friday, August 17, 2012

நாடோடியின் பார்வையில்_மருத்துவம்
வலைச்சர நண்பர்களுக்கு வணக்கம்,

இன்று மனிதன் ஒவ்வொருவரும் தான் சம்பாதிக்கும் பணத்தில் கணிசமான தொகையை மருத்துவ உதவிக்குச் செலவு செய்கிறோம். நாளுக்கு நாள் புதிய நோய்களும் அறிமுகம் ஆகிக் கொண்டே இருக்கிறது. அதே போல் புதிய புதிய தொழிற்நுட்பத்துடன் மருத்துவ மனைகளும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. சாதரணத் தலைவலைக்கு மருந்து வாங்க ஒரு மருத்துவ மனைக்குச் சென்றால் அவர்களின் மருத்துவ மனைகளில் உள்ள அனைத்து லேப் மெசின்களின் பரிசோதனைக்குப் பிறகு தான் மருத்துவரையே பார்க்க முடிகிறது. எல்லாப் பரிசோதனைகளையும் முடித்து மருத்துவரை பார்க்க சென்றால், அவரும் உங்களுக்கு "எல்லாம் நார்மலா இருக்கு" என்று சொல்லி ஒரு பெரிய மருந்து லிஸ்டை எழுதுவார். அதுவும் அந்த மருத்துவ மனையில் உள்ள மெடிக்கல் ஷாப்பிலேயே வாங்க வலியுறுத்தப்படும். எல்லாம் நார்மலா இருந்தா எதுக்குடா இந்தப் பெரிய லிஸ்டுனு கேட்டா? நம்மளை ஏதோ வேற்றுகிரக வாசி போலப் பார்ப்பார்கள்.

இன்றைய மக்கள் ஆங்கில மருத்துவ முறையால் எல்லா நோய்களையும் எந்த பக்க விளைவும் இல்லாமல் குணப்படுத்த முடியும் என்று எண்ணுகிறார்கள். ஆனால் அது உண்மையல்ல என்பதை மனசாட்சி உள்ள டாக்டர்கள் ஒத்து கொள்வார்கள். உலகத்தில் உள்ள ஒவ்வொரு மருத்துவ முறைக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. சில பெரிய‌ நோய்ளை கூட‌ சில மருத்துவ முறைகளால் எளிதில் குணப்படுத்த முடியும்.

முன்பெல்லாம் சிறுசிறு நோய்களுக்காக மருத்துவமனைகளுக்கு மக்கள் அதிகமாகப் போவது இல்லை. தனக்குத் தெரிந்த "கை வைத்திய" முறைகளை முயற்சி செய்து பார்த்துவிட்டுத் தான் மருத்துவமனைக்குச் செல்வார்கள். அந்தக் காலத்தில் உள்ள பெரியவர்களுக்குத் தனது உடல் நிலையைப் பற்றிய முழுமையான புரிதல் இருந்தது. இப்போது இருக்கும் நாம், நமது உடலைப் பற்றிய மற்றும் ஆரோக்கியம் குறித்த பார்வைகள் மிகக் குறைவு என்று தான் நினைக்கிறேன். உணவுப் பழக்கம் வழ்க்கம் மற்றும் உடற்பயிர்ச்சிக் குறித்த பார்வைகளும் குறைவு. இவைகளைப் பற்றி இணையங்கள் அதிகமான தகவல்கள் கிடைக்கின்றன. அவற்றை நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த அறிமுகப் பதிவில் மருத்துவச் சம்பந்தமான தளங்களைத் தொகுத்துள்ளேன்.

பதிவர் பெயர்: ஷஹி

புற்று நோய் பற்றிய முழுமையான தகவல்களை இந்த பதிவில் அறிய‌ முடியும். நீண்ட விரிவான கட்டுரை. இன்றைய காலகட்டத்தில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் மிக அவசியம். நண்பர்கள் இந்த கட்டுரையை படிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.

புற்றுநோய், அறிகுறி, சிகிச்சை , ஆறுதல் -நேசம் + யுடான்ஸ் இணைந்து வழங்கும் கட்டுரை

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X 

பதிவர் பெயர்: வேல்முருகன்

நோயால் பாதிக்கப்பட்ட உறுப்புகளை அறுவை சிகிச்சை செய்தால் நோய் முற்றிலும் குணமாகி விடும் என்பதை மறுபரிசீலனை செய்ய சொல்கிறது இந்த பதிவு. இவரின் மாற்றுப் பார்வையை நீங்களும் படிங்க.

ஹோமியோபதி பார்வையில் அறுவைச்சிகிச்சை நோய்கள்

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X 

பதிவர் பெயர்: Muruganandan M.K.

இது டாக்டர் முருகானந்தம் அவர்களின் தளம், இவரின் எழுத்து நடை அனைவராலும் புரியும் படி இருக்கும். நிறையக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். உங்களுக்கும் பயன்படும் இங்குச் சென்று பாருங்கள்.

மருந்துகளால் மாறாத இருமல்.

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X 

பதிவர் பெயர்: போளூர் தயாநிதி

"உணவே மருந்தாகும்" என்பது நம்முடைய முன்னோர்களின் கருத்து. இவர் சித்த மருத்துவம் என்ற தளத்தில் திப்பிலியின் மருத்துவ குணங்களை நமக்கு தருகிறார். நீங்களும் படித்து பாருங்க.

திப்பிலியின் மருத்துவக் குணங்கள்

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X 

பதிவர் பெயர்: Dr.S.Natarajan

தமிழ் மருத்துவம் என்ற வலைத்தளத்தில் நீரழிவு நோய்க்கான உணவுமுறையை அட்டவணை போட்டு விரிவாக எழுதியிருக்கிறார். வேறு பல மருத்துவ பதிவுகளையும் எழுதியிருக்கிறார். நீங்களும் போய் படிங்க.

நீரிழிவு – உணவு முறை.

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X 

பதிவர் பெயர்: ஷேர்கான்

இந்திய மருத்துவம் என்ற தலைப்பில், நமது நாட்டில் உள்ள மருத்துவமுறைகளையும், அரசின் பங்களிப்பையும் குறித்து விரிவாக எழுதியிருக்கிறார். கட்டுரையில் அவரின் உழைப்பு தெரிகிறது. கண்டிப்பா படிங்க.

இந்திய மருத்துவம்..

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X 

பதிவர் பெயர்: ஜ.ஹூசைன்

வெளிநாட்டில் வாழும் பலரும் முடி உதிர்வது பற்றி கேட்டதால் அதை பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். தலைமுடியில் உள்ள மொத்த பிரச்சனைக்கும் தீர்வுகளை சொல்லியிருக்கிறார்.

வெளி நாட்டில் வாழும் பல சகோதரர்கள் முடி உதிர்வை தடுக்க

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X 

பதிவர் பெயர்: நா.சுரேஸ் குமார்

கிராமங்களில் "பாட்டி வைத்தியம்" அல்லது "கை வைத்தியம்" என்று சொல்லுவார்கள் அதைப்பற்றி விரிவாக எழுதி மூலிகைகளின் படங்களையும் தொகுத்திருக்கிறார். கண்டிப்பாக அனைவரும் தெரிந்து கொள்ள வேன்டிய பதிவு.

தேவையான எளிய மூலிகை மருத்துவம் (Health Tips)

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X 

பதிவர் பெயர்: DR.SRIJITH

இவர் ஒரு அக்குபஞ்சர் டாக்டர். அக்கு பஞ்சர் மருத்துவ முறையை பற்றி ஐந்து பதிவுகளாக விரிவாக எழுதியுள்ளார். இப்போது தொடர்ந்து இவர் எழுதுவது இல்லை. அந்த பதிவுகளை படிக்க இங்க செல்லுங்க.

PIN விளைவுகள் 5 - அக்குபஞ்சர் மருத்துவம் ஒரு பார்வை

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X 

குறிப்பு: இன்று அறிமுக படுத்திய வலைத்தளங்கள் நண்பர்கள் சிலருக்கு அறிமுகமானவையாக இருக்கலாம். புதியவர்களுக்காக நான் தொகுத்துள்ளேன்.

நல்வாழ்த்துக்களுடன்,
நாடோடி.

மீண்டும் நாளை சந்திப்போம்.....
மேலும் வாசிக்க...

Thursday, August 16, 2012

நாடோடியின் பார்வையில்_சினிமா மற்றும் காமிக்ஸ்
வலைச்சர நண்பர்களுக்கு வணக்கம்,

சினிமா வலைத்தளங்கள்

மனித சமுதாயத்தில் படிப்படியான வளர்ச்சிக்கு, கலைகளின் பங்கு அதிகம். அந்த வகையில் நாடகக் கலையில் பரிணாம வளர்ச்சியான சினிமாவின் பங்களிப்பு அதிகம். இன்றைக்கும் சிலரின் வாழ்க்கையை மாற்றியமைக்கக் கூடிய அல்லது ஒரு சமுதாயத்தின் தலையெழுத்தை மாற்ற வல்லைமைக் கொண்டவை இந்தச் சினிமா என்பது அனைவரும் அறிந்ததே. அதுவும் நமது தமிழ் நாட்டுக்கு சொல்லவே வேண்டாம், பல முதலமைச்சர்களைக் கொடுத்திருக்கிறது, இன்னும் கொடுக்கும் என்று நம்புவோம்...

இவ்வாறு மாபெரும் சக்தியாக உருவெடுத்திருக்கும் சினிமாவைப் பற்றிய நமது பார்வைகள்/சிந்தனைகள் எவ்வாறு இருக்கின்றது என்பதை நாம் ஒவ்வொருவரும் நம்மையே கேட்க வேண்டியதாக இருக்கிறது. வெறும் பொழுதுபோக்குக்கு மட்டும் என்றில்லாமல் சமூகச் சிந்தனையுடன் இப்போது பல படங்கள் வெளி வருகின்றன. அவைகளைப் பற்றிய தெளிவு இருந்தால் மட்டுமே, நாமும் அவற்றின் முழுமையைப் புரிந்துக் கொள்ள‌ முடியும்.

ஹாலிவுட் படங்களாக இருந்தாலும் சரி அல்லது கோலிவுட் படங்களாக இருந்தாலும் சரி, வெளிவந்த சில மணி நேரங்களிலே அவற்றை பற்றிய விமர்சனங்கள் வலைத்தளங்களில் எழுதிவிடுகிறார்கள். சில படங்கள் திரையில் வருவதற்கு முன்பே அவைகளை பற்றிய விமர்சனங்களும் வெளிவரத் தொடங்கிவிடுகிறது. இன்றைய என்னுடைய அறிமுக பதிவில் சினிமாவிற்கு விமர்சனம் எழுதும் வலைத்தளங்களை பற்றித்தான் சொல்ல போகிறேன்.

பதிவர் பெயர்: கிராமத்து காக்கை

சினிமாவை பற்றி தனது வலைத்தளத்தில் எதுவுமே எழுத கூடாது என்று முடிவாக இருந்தவரை கூட எழுத தூண்டிய படம், அதை பற்றி அவர் எழுதியிருப்பதை நீங்களும் படியுங்கள்.

வழக்கு எண் 18/9 கடைசி விமர்சனம்

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X

பதிவர் பெயர்: ராஜ்

நமக்கு ஆக்ஷ்ன் படம் மட்டும் தான் தெரியும், ஆக்க்ஷனிலேயே பல வகைகள் இருக்கு என்று தொடக்கத்திலேயே தகவலுடன் விமர்சனம் எழுத துவங்குகிறார் இவர். அதை நீங்களும் சென்று படிங்க.

பில்லா-2 டானின் வரலாறு

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X

பதிவர் பெயர்: r.v.saravanan

தமிழ் சினிமா துறையின் மீது இவருக்கு இணை பிரியா காதல் உண்டு. எல்லா படங்களுக்கும் இவர் விமர்சனம் எழுதுவது இல்லை. அரிதாக தான் எழுதுவார், நீங்களும் போய் பாருங்க..

வெற்றி ரீங்காரமிடும் ஈ

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X

பதிவர் பெயர்: Doha Talkies

சினிமாவிற்கு விமர்சனம் எழுதுவதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாணியை கடைப்பிடிப்பார்கள், இவர் நீண்ட கட்டுரையாக எழுதாமல் எளிதாக படிக்கும் வகையில் எழுதியிருக்கிறார். இங்க போய் பாருங்க.

The Green Mile -திரைவிமர்சனம்

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X

பதிவர் பெயர்: Arunprasath Varikudirai

ஒரு ஹாலிவுட் பட‌த்தின் முழுமையான தகவல்களுடன் இவர் எழுதியிருக்கும் இந்த விமர்சனத்தையும் படிங்க, இவரின் உழைப்பு எழுத்தில் தெரிகிறது.

" தி சைலன்ஸ் ஒப் த லேம்ப்ஸ் " - திரைப்படம் ஒரு கண்ணோட்டம்

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X

பதிவர் பெயர்: JZ

தமிழ், ஆங்கில மொழி திரைப்படங்களையே அதிகமாக‌ பார்த்த நமக்கு ஒரு இத்தாலியன் படத்தை அறிமுகம் செய்து, அதற்கு விமர்சனமும் எழுதியிருக்கிறார். இங்க போய் படிங்க.

Caesar Must Die (2012)

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X

பதிவர் பெயர்: முரட்டு சிங்கம்

1974‍ ல் வெளிவந்த இத்திரைப்படத்தை நமக்கு அறிமுகம் செய்து, விமர்சனம் எழுதியிருக்கிறார். நீங்களும் படிங்க..

தி கான்வர்சேஷன் (1974) விமர்சனம்

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X

பதிவர் பெயர்: Kumaran

படத்தை பற்றிய தகவல்களையே எழுதாமல் சிறிது மாற்றி, இவரது சொந்த நடையில் ரசிக்கும் படி விமர்சனம் எழுதியிருக்கிறார். நீங்களும் படிச்சிட்டு சொல்லுங்க..

Infernal Affairs (2002) - Hong Kong

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X

பதிவர் பெயர்: Castro Karthi

தமிழில் வரும் தழுவல் படங்களை பற்றி இவர் எழுதியிருக்கும் விடயங்ளை படியுங்கள், இயக்குனர் பற்றிய அவருடைய சில கேள்விகள் எனக்கும் தோன்றியவையே.

தழுவலா? தாக்கமா?

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X

பதிவர் பெயர்: Balaji Sundar

காமிக்ஸ் சீரிஸ் சூப்பர் மேன் படங்களை விரும்பி பார்பவரா நீங்கள், கண்டிப்பா இந்த பதிவை படியுங்கள். படங்களுடன் விளக்கமாக எழுதியிருக்கிறார்.

DARK KNIGHT - A BEGINNING

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X

பதிவர் பெயர்: LUCKY LIMAT லக்கி லிமட்

ஸ்பைடர் மேன் பற்றிய தகவல்கள் அனைத்தையும் தந்து, அதன் பின்னனியும் விவரித்து தொடராக எழுதியுள்ளார். ஸ்பைடன் மேன் ரசிகர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு. நீங்களும் இங்க போய் படிங்க.

The Amazing Spider-Man aka Spider-Man Reboot

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X

பதிவர் பெயர்: மணி

ஹாலிவுட் ரசிகர்களாக இருப்பவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் என்று ஆரம்பித்து இந்த படத்தின் பின்னணியை விவரித்து விரிவாக எழுதியிருக்கிறார். நான் ஏற்கனவே இந்த படத்தை பார்த்து விட்டேன். நீங்களும் விமர்சனத்தை படித்துவிட்டு படத்தை தேடுங்க.

THE LAST SAMURAI_அலசல்-1

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X
---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X

காமிக்ஸ் வலைத்தளங்கள்

சிறுவயதில் இருந்தே காமிக்ஸ் படிக்கும் பழக்கம் அனைவருக்கும் இருக்கும், நானும் பள்ளி படிக்கும் போது நண்பர்களிடம் இருந்து வாங்கி வந்து வீட்டில் யாருக்கும் தெரியாமல் படிப்பேன், வீட்டில் தெரிந்தால் "படிக்கிற வயதில் கதை புக்கு படிக்கிறியானு" பாட்டு கேட்கும். ஹாலிவுட்டில் வெளிவரும் பல படங்கள் காமிக்ஸ் தழுவல்களே, நாம் இப்போது பார்க்கும் பேன்டசி மற்றும் சூப்பர் மேன் படங்களின் ஹீரோக்கள் ஏற்கனவே காமிக்ஸ் மூலம் அறிமுகமானவர்கள் தான். வெளி நாடுகளில் இந்த காமிக்ஸ்களுக்கு பெரிய ரசிகர் கூட்டம் உண்டு. சிறு வயதினருக்கு உள்ள காமிக்ஸ், பெரியவர்களுக்கான காமிக்ஸ் என்று தரம் பிரித்து வெளியிடுகிறார்கள்.  தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள் பலர்  வலைத்தளம் வைத்து அவற்றின் தகவல்களை பதிந்து வருகிறார்கள். அவர்களின் தளங்களையும் கீழே தொகுத்திருக்கிறேன்.


பதிவர் பெயர்: Tamil Comics - SoundarSS
வலைத்தள முகவரி: PHANTOM THE LEGEND - SoundarSS

பதிவர் பெயர்: ப்ரூனோ ப்ரேசில்
வலைத்தள முகவரி: முதலை பட்டாளம்

பதிவர் பெயர்: பயங்கரவாதி டாக்டர் செவன்
வலைத்தள முகவரி: அ.கொ.தீ.க.

பதிவர் பெயர்: ஒலக காமிக்ஸ் ரசிகன்
வலைத்தள முகவரி: Greatest Ever Comics-தலை சிறந்த காமிக்ஸ்கள்

பதிவர் பெயர்: புலா சுலாகி
வலைத்தள முகவரி: புலா சுலாகி

பதிவர் பெயர்: Vijayan
வலைத்தள முகவரி: Lion-Muthu Comics

குறிப்பு: இன்று அறிமுக படுத்திய வலைத்தளங்கள் நண்பர்கள் சிலருக்கு அறிமுகமானவையாக இருக்கலாம். புதியவர்களுக்காக நான் தொகுத்துள்ளேன்.

நல்வாழ்த்துக்களுடன்,
நாடோடி.

மீண்டும் நாளை சந்திப்போம்.....
மேலும் வாசிக்க...

Tuesday, August 14, 2012

நாடோடியின் பார்வையில்_இலவச நூல்கள்


வலைச்சர நண்பர்களுக்கு வணக்கம்,

விருப்பமான நூல்களைப் படிப்பது என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு விதமான நூல்களைத் தேர்ந்தெடுத்துப் படிப்போம், சிறுவர்களாக இருக்கும் போது படங்களுடன் கூடிய காமிக்ஸ்களை விரும்பிப் படிப்போம், அதன் பிறது வரலாறுச் சார்ந்த நூல்களைத் தேடிப் பிடித்துப் படிப்போம். இவ்வாறு ஒவ்வொரு பருவத்திலும் அவரவர் விருப்பமான் நூல்களைத் தேடிப் பிடித்துப் படிப்போம். படிக்கும் சூழ‌லும் ஒவ்வொருவருக்கும் ஒரு விதமாக அமையும், சிலர் தனியாக இயற்கையை ரசித்தப்படிப் படிப்பார்கள், சிலர் பேருந்தில்/ரயிலில் பயணம் செய்யும் போது மட்டும் படிப்பார்கள், இன்னும் சிலர் இரவில் கண் விழித்துப் படிப்பார்கள்.

பழைய நூல்களையும், நல்ல நூல்களையும் தேடிப்பிடித்து வாங்குவது என்பது கொஞ்சம் சிரமமானக் காரியம், அதுவும் என்னைப் போல் ஊர்ச் சுற்றிக் கொண்டிருப்பவர்களும், அயல் நாடுகளில் வாழ்பவர்களுக்கும் இயலாத காரியம். அப்படியே தேடிப்பிடித்து நான்கு நூல்களை வாங்கினாலும் அதைப் பயணத்தின் போது சுமந்துச் செல்வது என்பதும் கொஞ்சம் கஷ்டம், காரணம் பிளைட்டில் லக்கேஜ் பிரச்சனை, அதுவும் சவுதி போன்ற நாடுகளில் கஸ்டம்ஸ் செக்கிங் என்பதும் ஒரு பிரச்சனை, கலர் படங்களைப் பார்த்தாலே சவுதிப் போலீசுக்கு ஆகாது.

இப்படிப் பல பிரச்சனைகள் இருப்பதால் இணையத்தில் படிப்பது தான் என்னைப் போன்றவர்களுக்கு எளிது. இணையம் அறிமுகமான புதிதில் தினசரி நாளிதழ்களையும், தமிழ் வலைத்தளங்களில் எழுதப்படும் பதிவுகளை மட்டுமே படித்து வந்தேன். பின்பு எனக்குச் சில வலைத்தளங்கள் அறிமுகமாயின. அவைகள் முற்றிலும் பழைய மற்றும் புதிய‌த் தமிழ் நூல்களை மின்னூல்களாகக் கொடுக்கும் வலைத்தளங்கள். இவைகளின் மூலம் நான் பல தமிழ் நூல்களை இலவசமாக‌த் தறவிறக்கம் செய்து படித்துள்ளேன். அவைகளை உங்களுக்கும் நான் அறிமுகம் செய்கிறேன்.

இவர் "தமிழ் புத்தக அலமாரி" என்று வலைத்தளப் பெயரிட்டுப் பல நூல்களை மின்னூல்களாகத் தொகுத்து நமக்குத் தருவதோடு மட்டுமல்லாமல் நூல்களைப் பற்றிய ஒரு முன்னுரையும் கொடுக்கிறார். நீங்களும் சென்று தேவையானவற்றைத் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

தமிழ் புத்தக அலமாரி

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X

இவர் "உங்களுக்காக‌" என்று வலைத்தளப் பெயரிட்டு அதில் இணையத்தில் கிடைக்கும் அனைத்து இலவசத் தறவிறக்கத் தமிழ் மின்னூல் முகவரிகள் எல்லாவற்றையும் ஒரே தொகுப்பின் கீழ் கொண்டு வந்து பதிந்துள்ளார். உங்களுக்குத் தேவையான நூல்களைச் சொடுக்கித் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

E-BOOKS

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X

"முயற்சி வெற்றி தரும்" என்று வலைத்தள பெயரிட்டு பல நாவல்களின் தரவிறக்க மின்னூல் முகவரிகளை தொகுத்துள்ளார். நாவல் பிரியர்கள் இங்கு சென்று தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நாவல்கள்

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X

"எண்டர் பிளஸ்" என்ற இந்த வலைத்தளத்தில் வலைத்தளத்திற்கு உபயோகமான தகவல்களும், மற்றும் பல பயனுள்ள தகவல்களுடன் பல மின் நூல்களையும் தர‌விறக்கம் செய்யும் வசதியையும் கொடுக்கிறது.

E-BOOKS

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X

இது முழுமையாக தமிழ் நாவல்களின் தளம். நாவல் விரும்பிகள் கட்டாயம் இணைந்திருக்க வேண்டிய வலைத்தளம். நாவல் ஆசிரியரின் பெயரில் வகைப்படுத்தி தொகுத்துள்ளார்.

தமிழ் நாவல்கள்

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X

அமரர் கல்கி எழுதிய பல நாவல்களை இந்த வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.  படிக்க விரும்புபவர்கள் சென்று படிக்கலாம்.

Classical Tamil Stories

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X

ஆங்கில நூல்கள், சமையல் நூல்கள் மற்றும் தமிழ் இலக்கிய நூல்கள் என்று தொகுத்து வழங்கியிருக்கிறார். நீங்களும் சென்று படித்து பாருங்க.

E-BOOKS

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X

கவிதை பிரியர்களுக்கு இந்த வலைத்தளம். தபுசங்கரின் கவிதைகள் மற்றும் வைரமுத்துவின் கவிதைகளை மென் நூல் ஆக மாற்றித் தரவிறக்கம் செய்யத் தருகிறார்.

தபூ சங்கரின் 4 புத்தகங்கள்

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X

எல்லா தமிழ் செய்தித்தாகளும், வார இதழ்களும் மற்றும் நாவல்களும் மின் நூல்களாக தருகிறார். இங்கும் சென்று படியுங்கள்.

e-News Tamil

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X

அனைவரும் அறிந்த சில பிரபலமான தரவிறக்கம் செய்ய கூடிய‌ மின்னூல் தளங்களின் முகவரிகளையும் கீழே இணைத்துள்ளேன்.

TAMIL E-BOOKS DOWNLOADS

தமிழ்த் தேனி

அழியாச் சுடர்கள்

குறிப்பு: இன்று அறிமுக படுத்திய வலைத்தளங்கள் நண்பர்கள் சிலருக்கு அறிமுகமானவையாக இருக்கலாம். சில புதியவர்களுக்காக நான் தொகுத்துள்ளேன்.

நல்வாழ்த்துக்களுடன்,
நாடோடி.

மீண்டும் நாளை சந்திப்போம்.....
மேலும் வாசிக்க...

Monday, August 13, 2012

நாடோடியின் பார்வையில்_கவிதைகள்


வலைச்சர நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

பக்கம் பக்கமாக கட்டுரை எழுதி விளக்க வேண்டிய விடய‌த்தை, நான்கு வரிகளில் அழகாக கவிதையாக சொல்லி விட முடியும். கவிதையை உரை நடைகளை வாசிப்பது போல விரைவாக வாசித்து செல்ல முடியாது, எனவே தான் பலர் கவிதை வாசிப்பதை சிரமமாக‌ உணர்கிறார்கள், அவசரமாக வாசிப்பதை பழக்கமாக கொண்ட‌ சிலர் "என்ன கவிதை இது" சுத்தமா புரியவில்லை என்று சலித்துக் கொள்கிறார்கள். கவிதைகளிலும் பல வகைகள் உண்டு. முன்பு தமிழில் அதிகமாக மரபுக் கவிதைகளை தான் பார்க்க முடியும். அவைகளை புரிந்து கொள்ள தனியாக விளக்க உரைகளை படித்தால் மட்டுமே எல்லோராலும் புரிந்து கொள்ள முடியும். இப்போது எழுதப்படும் புதுக்கவிதைள் எல்லோராலும் எளிதாக  படிக்கவும், புரிந்து கொள்ளவும் முடியும்.

வலைத்தளங்களில் நண்பர்கள் எழுதும் சில கவிதைகளை படிக்கும் போது மனம் நம்மையறியாமல் அதில் ஊன்றி விடுவதை பார்க்க முடியும், அதன் கவர்ச்சியில் இருந்து மீள்வதற்கு சிறிது நேரம் எடுத்துவிடும்.

"கவிதைகளை படைப்பதால் நானும் பிரம்மா தான்" என்பதை சொல்லாமல் சொல்லும் பல நண்பர்கள் இங்கு வலைத்தளத்தில் எழுதுகிறார்கள் அவற்றில் சில எனது கண்ணில் பட்டவைகளை உங்களுடன் பகிர்கிறேன்.

பல புத்தகங்களாக எழுத வேண்டிய அரசியல் கட்சிகளின் அவலங்களை, ஒரு பக்க கவிதையில் சொல்லியிருக்கிறார். அவர் எழுதியிருக்கும் ஒவ்வொரு வரிக்கும் ஆயிரம் விளக்கங்கள் எழுத முடியும். கடைசியில் எழுதியிருக்கும் நடைமுறை உண்மையும் சூப்பர்.

நீங்க ஆளுங்க....!!

கவிதை எழுதுவதன் சிரமத்தை இதை விட யாரும் அழகாக சொல்லி விட முடியாது. கற்பனை கலந்து, சீரிய நடையுடன் எழுதியிருக்கிறார். வாசிக்கும் போதே நம்மை அதனுள் இழுத்து விடுகிறது. நீங்களும் படிங்க!!!

கவியாகிய எழுதுகோல்கள்...!

விவ‌சாயின் கஷ்டங்களையும், பருவ நிலை மாற்றங்களையும், அழிந்து வரும் இயற்கை விவசாயத்தின் அவசியத்தையும், விஞ்ஞானத்தின் வளர்ச்சி எதை நோக்கி பயணிக்கிறது என்று பல கேள்விகளை கேட்க வைத்து சிந்திக்கவும் வைக்கும் கவிதை இது. கண்டிப்பா நீங்களும் படிங்க..

"உழைக்காம பிழைத்திடவே
உலகம் விரும்புதப்பா!
உழைத்து வாழ்பவரை
பிழைக்கத் தெரியாதவன்னு
பேர்வைச்சு சிரிக்குதப்பா!"

கனவு மெய்ப்படவேண்டும் -காரஞ்சன்(சேஷ்)

"நாரை விடு தூது" அனைவரும் படித்திருப்போம், இங்கு ஒருவர் "வலை விடு தூது" எழுதியிருக்கிறார். கல்லூரி படிக்கும் போது தேர்வு எப்போது நடக்கும் என்பதை தேர்வு துறை சரியாக சொல்லாதால் இருக்கும் மனக்குமுறலை கொட்டி எழுதியிருக்கும் கவிதை இது.

வலை விடு தூது!!!

அப்பாவிற்கும், அண்ணனுக்கும் சற்று வித்தியாசமாக விளக்கம் கொடுத்திருக்கிறார். நீங்களும் படிங்க..

எனக்கு ...

நாம் அலட்சியமாக செய்யும் செயல்கள் எவ்வாறு உழவர்களை பாதிக்கிறது என்பதை கோபமாக எழுதியிருக்கிறார். இங்க போய் படிச்சு பாருங்க..

உழவர்களைக் கொலை செய்தல்

குழந்தையின் சிரிப்பிற்கு எவ்வளவு வலிமை என்பதை இந்த கவிதை படித்தால் புரியும்.

குழந்தையின் சிரிப்பு!! (கவிதை)

எல்லா கவிதையும் அறிமுக படுத்திவிட்டு, நான் எழுதிய கவிதையை சொல்லாமல் போனா எப்படி?.. இதையும் படிங்க..

க‌வ‌லை உன‌க்கு..

குறிப்பு: அறிமுகப் படுத்தியிருக்கும் அனைத்து பதிவுகளை படிக்க வேண்டும் என்பதே என்னுடைய் விருப்பம், அதனால் தான் நான் எனது சொந்த விளக்கங்களை அதிகம் எழுதவில்லை.


நல்வாழ்த்துக்களுடன்,
நாடோடி.

மீண்டும் நாளை சந்திப்போம்........


மேலும் வாசிக்க...

Sunday, August 12, 2012

நாடோடியின் பார்வையில்_சுயப் புராணம்


அனைவருக்கும் வணக்கம். சீனா அய்யா அவர்களின் அழைப்பால் இந்த வாரம் முழுவதும் வலைச்சரத்தில் நான் எழுதுகிறேன். முதல் பதிவு என்னைப்பற்றிய அறிமுகப் பதிவு என்பதால், என்னைப்பற்றியும், எனது தளத்தில் எழுதிய பதிவுகள் பற்றியும் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

நான் ”நாடோடியின் பார்வையில்” என்ற வலைத்தளத்தில் எழுதி வருகிறேன். எனது சொந்தப் பெயர் ”ஸ்டீபன்”. கல்லூரிப் படிப்பை முடித்தது முதல் பணியின் காரணமாகப் பல நகரங்கள் மற்றும் நாடுகள் சுற்றிக்கொண்டிருக்கிறேன். எங்கும் நிலையாக இருந்தது இல்லை அதனால் தான் ”நாடோடி” என்று பெயர் வைத்து வலைத்தளத்தில் எழுதத் தொடங்கினேன். படிக்கும் காலத்தில் தமிழின் மீது அதிக ஆர்வம் உண்டு. அப்போதே பல கட்டுரைப் போட்டிகள் மற்றும் பேச்சுப் போட்டிகளில் கலந்துப் பரிசுகள் வாங்கியது உண்டு. படிப்பு முடித்து வேலைப் பார்க்கத் தொடங்கிய பிறகு எழுதுவது பற்றியும், பேசுவது பற்றியும் மறந்தே போனேன் என்றே சொல்லலாம். கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு நண்பர் ஒருவரின் உதவியால் தமிழ் வலைத்தளங்களைப் பற்றி அறிந்தேன். சில வருடங்கள் வாசிப்பாளனாகவும், பார்வையாளனாகவும் இருந்தேன்.

ஒரு நாள் ”நாமே எழுதினால் என்ன” என்று வலைத்தளம் ஆரம்பித்து எழுதத் தொடங்கினேன். ”அடுத்தவர் முகம் சுழிக்கும் பதிவுகளையும், படங்களையும்” எனது வலைத்தளத்தில் இடக் கூடாது என்பது மட்டுமே எனது குறிக்கோளாக இருந்தது, அதை இன்றுவரைக் கடைப்பிடித்து வருகிறேன். எழுதத் தொடங்கிய வருடத்தில் தொடர்ச்சியாக பதிவுகள் எழுதினேன், பணியில் சூழலும் சாதகமாக அமைந்தது. ஆனால் கடந்த இரண்டு வருடமாக அதிகமாக எழுதவில்லை. சொந்த வாழ்க்கையிலும், பணியிலும் நடந்த மாற்றங்களால் என்னால் எழுதமுடியவில்லை. ஆனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நண்பர்களின் வலைத்தளங்களை படிக்க தவறுவது இல்லை.

நண்பர்களின் அழைப்பால் பல தொடர்பதிவுகளில் என்னைப் பற்றிய அதிகமான தகவல்களை எழுதியிருக்கிறேன். நேரம் இருந்து பொறுமையாகப் படிக்க விரும்புபவர்கள் கீழே உள்ள இணைப்புகளைச் சொடுக்கிப் படிக்கலாம்.

பதிவுலகில் நான் எப்படிப்பட்டவன்..??!!

தொட‌ர்ப‌திவு_ஒரு நிமிட‌ பேச்சு

என்றும் நினைப்போம்_தொட‌ர்ப‌திவு

ஒருவரின் அனுபவங்களும், கற்பனைகளுமே எழுத்துக்களாக உருப்பெறுகிறது. எனது அனுபவங்களுக்கு சில வண்ணங்கள் பூசியே நான் அதிகமான பதிவுகள் எழுதியிருக்கிறேன். அந்த வகையில் இக்கால பள்ளிக் குழந்தைகளின் வாழ்க்கை முறையையும், நான் படிக்கும் காலத்தில் இருந்த முறையையும் விளக்க முயன்ற பதிவு இது.

ப‌ள்ளி வாழ்க்கை_அனுதாப‌மா? ஏக்க‌மா?

வெளிநாடுகளில் பணிச்செய்யும் தந்தைகளின் மனநிலைகளை ஊரில் வசிக்கும் பிள்ளைகள் புரிந்து நட‌க்கிறார்களா என்பதை பற்றி இப்பதிவில் எழுதியிருப்பேன்.

வெளிநாடு வாழ்க்கையில்...

இன்றைய சூழலில் விவசாய நிலங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு வருவது பற்றி கற்பனை கலந்து எழுதிய ஒரு அனுபவ பதிவு.

ஒளிம‌ய‌மான‌ எதிர்கால‌ம்?_க‌ண்முன்னே ந‌ட‌ந்த‌ மாற்ற‌ங்க‌ள்

வாகனங்களின் உதிரி பாகங்களை வாங்குபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய சில விசயங்களை நான் படித்த(மெக்கானிக்கல் இஞ்சினீயர்), வேலைப்பார்த்த(ஆட்டோமொபைல்) அனுபவங்களை வைத்து எழுதிய பதிவு.

வாகனங்களின் உதிரிப்பாகங்கள் வாங்குபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை..

வேலை வாங்கி தருகிறேன் என்று பொய்யை தவிர வேறு எதையும் பேசாத மேன் பவர் கன்சல்டன்சி பற்றி நான் எழுதிய அனுபவ‌ பதிவு.

மேன்ப‌வ‌ர் க‌ன்ச‌ல்ட‌ன்சி_இண்ட‌ர்வியூ

மைக்ரோ சாப்ட் எக்ஸலில் எனக்கு தெரிந்த இரண்டு பார்முலா மற்றும் அப்பிளிக்கேசன் பற்றி எழுதிய தொழிற்நுட்ப பதிவு.

மைக்ரோசாப்ட் எக்ஸ‌ல்(Microsoft Excel) ப‌ய‌ன்பாடு_ அசாப் யுட்டிலிட்டிஸ்(ASAP Utilities)

எக்ஸ‌லில்(MSEXCEL) விலுக்க‌ப்(VLOOKUP) ம‌ற்றும் ஹெச்லுக்க‌ப்(HLOOKUP)

என்னைப் பற்றியும், எனது பதிவுகளின் அறிமுகங்களும் போதும் என்று நினைக்கிறேன். நாளை முதல் சில பதிவுகளை அறிமுகப் படுத்தி எழுதுகிறேன். அறிமுகப் பதிவுகளை கீழ் கண்டத் தலைப்புகளில் வகைப்படுத்தி தொகுக்கலாம் என்று இருக்கிறேன்.

1)கவிதைகள்
2)இலவச நூல்கள்
3)மருத்துவம்
4)சினிமா
5)விவசாயம்
6)பல்சுவைப் பதிவுகள்

மீண்டும் நாளை சந்திப்போம்.

நல்வாழ்த்துக்களுடன்,
நாடோடி.

மேலும் வாசிக்க...

அனந்து பொறுப்பினை ஸ்டீபனிடம் கொடுக்கிறார்

அன்பின் சக பதிவர்களே

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற நண்பர் அனந்து - தான் ஏற்ற பொறுப்பினை பொறுப்பாக நிறைவேற்றி - மனநிறைவுடன் விடை பெறுகிறார். இவர் ஏழு இடுகைகள் இட்டு - இருபத்தோறு பதிவர்களையும் அவர்களது ஐம்பது பதிவுகளையும், தன்னுடைய இருபது பதிவுகளையும் அறிமுகப் படுத்தி இருக்கிறார்.

நண்பர் அனந்துவினை வாழ்த்தி வழி அனுப்புவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார் நண்பர் ஸ்டீபன்.

இவர் நாடோடி என்ற புனைப்பெயரில் நாடோடியின் பார்வையில் என்ற வலைத் தளத்தில் எழுதி வருகிறார். பணியின் பொருட்டு பல நகரங்கள், நாடுகள் சுற்றி வருகிறார். எங்கும் நிலையாக இருப்பதில்லை. தற்போது சவுதியில் அல்கோபரில் வசிக்கிறார். இப்பொழுது நாடோடி என்ற புனைப்பெயரின் காரணம் புரிந்திருக்குமே ! தமிழின் மீது தீராக் காதல் கொண்ட காரணத்தினால் தமிழில் எழுதுவதற்காக வலைத்தளம் துவங்கினார். துவங்கிய ஆண்டில் தொடர்ச்சியாக எழுதிய இவர் கடந்த இரு ஆண்டுகளாக பணிச்சுமை காரணமாகவும் முக்கியமாக வாழ்வில் துணைவியினைக் கைபிடித்ததின் காரணமாகவும் - கடமைகள் அதிகரித்ததின் காரணமாக எழுதுவது குறைந்திருக்கிறது.

வலைச் சரத்தில் எழுதுவதன் மூலம் - இனிமேல் தொடர்ந்து எழுதுவார் என எதிர்பார்க்கிறோம்.

நண்பர் ஸ்டீபனை வாழ்த்தி வரவேற்பதில் பெருமை அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் அனந்து

நல்வாழ்த்துகள் ஸ்டீபன்

நட்புடன் சீனா

மேலும் வாசிக்க...

இன்று இப்படம் கடைசி ...


முன்பெல்லாம் ஒரு படத்தின் கடைசி நாளன்று " இன்று இப்படம் கடைசி " என்று போடுவார்கள் , அதோடு மட்டுமல்லாமல் முடிந்தால் ஒன்றிரண்டு காட்சிகள் கூடுதலாக காண்பிப்பதும் உண்டு ... அதே போல வலைச்சர ஆசிரியர் பொறுப்பின் கடைசி நாளான இன்று மூவருக்கு பதில் ஆறு பேரை அறிமுகம் செய்யலாமென்று முடிவு செய்தேன்... இது வரை பதினைந்து பேரை அறிமுகம் செய்தாகிவிட்டது , இன்று ஆறு பேரை அறிமுகம் செய்வதன் மூலம் மொத்தம் இருபத்தியொன்று...
இதன் கூட்டுத்தொகையும் மூன்று ,  எனவே இன்று எல்லோருக்கும் ரெண்டு லட்டு ..

பெண்ணே ஆணாதிக்கம் பேசுகிறாய் 

என்னை 
அடிமைப்படுத்திக் கொண்டே ...

பெண்ணே நீ சிரிக்கிறாய் 
பைத்தியக்காரனாவது 
நான் மட்டும் தான் ...

மீளா நிலை ...  என் என்ற கவிதையிலிருந்து )

அறிமுகம் 1

இவரின் பெயரையும் , தோற்றத்தையும் பார்த்தால் ஆள் அமைதியாகத் தான் இருக்கிறார் , ஆனால் வலைத்தளத்தின் பெயரோ அலையல்ல சுனாமி என வைத்து நம்மை பயமுறுத்துகிறார் ... சுனாமியில் நான் பிடித்த சில முத்துக்கள் ... 

சாகித்யஅகாதமி 


அறிமுகம் 2

இவர் அதிகம் எழுதுவதில்லை , இருந்தாலும் எழுதியவற்றுள் கவிதை , சினிமா , ஆன்மிகம் , சமூக நலன் என அனைத்தையும் தொட்டிருக்கிறார்...கடம்பவன குயில்  குரலில் நான் ரசித்த சில பாடல்கள்...


அறிமுகம் 3

சினிமாவை பற்றிய பதிவிலேயே இவரை அறிமுகப்படுத்தியிருக்க வேண்டும் , ஆனால் இன்று அறிமுகம் செய்கிறேன் ... இன்று  திரையுலைகையே கலக்கிக் கொண்டிருக்கும் சந்தானத்தின் தீவிர ரசிகர் இந்த அகாதுகா அப்பாட்டக்கர்ஸ் ... அதிலிருந்து எனக்கு பிடித்த சில அஜால் குஜால் பதிவுகள்...


அறிமுகம் 4

பதிவுலகில்   சிறுகதைகள் பிரசித்தம் ... சிறுகதைகளையும் தாண்டி கவிதைகள் , கட்டுரைகள் என இவர் எழதும் எல்லாவற்றிலும் தேர்ந்த எழுத்தாளர்க்குரிய நேர்த்தி இருக்கும் ... ராகவனிடம் நான் ரசித்த சில பதிவுகள் ...

சிவரஞ்சனி என்பது ராகம் மட்டுமல்ல...

அறிமுகம் 5  

சினிமா பகுதியில் நான் ராஜ் அவர்களை அறிமுகம் செய்தவுடன் அவர் எனக்கு பதில் நீங்க இவரை அறிமுகம் செய்திருக்கலாம் என்று பின்னூட்டம் வாயிலாக கேட்டுக்கொண்டிருந்தார் ... அவர் ஏன் அப்படி சொன்னார் என்பது பேபி ஆனந்தன் தளத்திற்குள் சென்ற பிறகு புரிந்தது ... உங்களுக்காக சில பதிவுகள் ...

என் தமிழ் சினிமா!

2012 ஒரு ஆரம்பம்!


அறிமுகம் 6

அன்பே சிவம் என்று தலைப்பில் பக்தி இருந்தாலும் இவர் எழுதும் கிறுக்கல்களில் காதல் ததும்பும்...   கிறுக்கல்களில் எனக்கு பிடித்த சில ..
.
இலைகளற்ற கிளை

ஒரு வாரத்திற்கு வலைச்சரத்தில் ஆசிரியராகும் வாய்ப்பை எனக்களித்த சீனா ஐயா அவர்களுக்கும் , இதற்கு பாலமாய் அமைந்த  மயிலன் அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு என் பதிவுகளை தொடர்ந்து படித்து உற்சாகம் அளித்தவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டு விடை பெறுகிறேன் ...

இப்படிக்கு ,
அன்புடன் அனந்து ...மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது