07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்

சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, August 16, 2012

நாடோடியின் பார்வையில்_சினிமா மற்றும் காமிக்ஸ்
வலைச்சர நண்பர்களுக்கு வணக்கம்,

சினிமா வலைத்தளங்கள்

மனித சமுதாயத்தில் படிப்படியான வளர்ச்சிக்கு, கலைகளின் பங்கு அதிகம். அந்த வகையில் நாடகக் கலையில் பரிணாம வளர்ச்சியான சினிமாவின் பங்களிப்பு அதிகம். இன்றைக்கும் சிலரின் வாழ்க்கையை மாற்றியமைக்கக் கூடிய அல்லது ஒரு சமுதாயத்தின் தலையெழுத்தை மாற்ற வல்லைமைக் கொண்டவை இந்தச் சினிமா என்பது அனைவரும் அறிந்ததே. அதுவும் நமது தமிழ் நாட்டுக்கு சொல்லவே வேண்டாம், பல முதலமைச்சர்களைக் கொடுத்திருக்கிறது, இன்னும் கொடுக்கும் என்று நம்புவோம்...

இவ்வாறு மாபெரும் சக்தியாக உருவெடுத்திருக்கும் சினிமாவைப் பற்றிய நமது பார்வைகள்/சிந்தனைகள் எவ்வாறு இருக்கின்றது என்பதை நாம் ஒவ்வொருவரும் நம்மையே கேட்க வேண்டியதாக இருக்கிறது. வெறும் பொழுதுபோக்குக்கு மட்டும் என்றில்லாமல் சமூகச் சிந்தனையுடன் இப்போது பல படங்கள் வெளி வருகின்றன. அவைகளைப் பற்றிய தெளிவு இருந்தால் மட்டுமே, நாமும் அவற்றின் முழுமையைப் புரிந்துக் கொள்ள‌ முடியும்.

ஹாலிவுட் படங்களாக இருந்தாலும் சரி அல்லது கோலிவுட் படங்களாக இருந்தாலும் சரி, வெளிவந்த சில மணி நேரங்களிலே அவற்றை பற்றிய விமர்சனங்கள் வலைத்தளங்களில் எழுதிவிடுகிறார்கள். சில படங்கள் திரையில் வருவதற்கு முன்பே அவைகளை பற்றிய விமர்சனங்களும் வெளிவரத் தொடங்கிவிடுகிறது. இன்றைய என்னுடைய அறிமுக பதிவில் சினிமாவிற்கு விமர்சனம் எழுதும் வலைத்தளங்களை பற்றித்தான் சொல்ல போகிறேன்.

பதிவர் பெயர்: கிராமத்து காக்கை

சினிமாவை பற்றி தனது வலைத்தளத்தில் எதுவுமே எழுத கூடாது என்று முடிவாக இருந்தவரை கூட எழுத தூண்டிய படம், அதை பற்றி அவர் எழுதியிருப்பதை நீங்களும் படியுங்கள்.

வழக்கு எண் 18/9 கடைசி விமர்சனம்

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X

பதிவர் பெயர்: ராஜ்

நமக்கு ஆக்ஷ்ன் படம் மட்டும் தான் தெரியும், ஆக்க்ஷனிலேயே பல வகைகள் இருக்கு என்று தொடக்கத்திலேயே தகவலுடன் விமர்சனம் எழுத துவங்குகிறார் இவர். அதை நீங்களும் சென்று படிங்க.

பில்லா-2 டானின் வரலாறு

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X

பதிவர் பெயர்: r.v.saravanan

தமிழ் சினிமா துறையின் மீது இவருக்கு இணை பிரியா காதல் உண்டு. எல்லா படங்களுக்கும் இவர் விமர்சனம் எழுதுவது இல்லை. அரிதாக தான் எழுதுவார், நீங்களும் போய் பாருங்க..

வெற்றி ரீங்காரமிடும் ஈ

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X

பதிவர் பெயர்: Doha Talkies

சினிமாவிற்கு விமர்சனம் எழுதுவதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாணியை கடைப்பிடிப்பார்கள், இவர் நீண்ட கட்டுரையாக எழுதாமல் எளிதாக படிக்கும் வகையில் எழுதியிருக்கிறார். இங்க போய் பாருங்க.

The Green Mile -திரைவிமர்சனம்

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X

பதிவர் பெயர்: Arunprasath Varikudirai

ஒரு ஹாலிவுட் பட‌த்தின் முழுமையான தகவல்களுடன் இவர் எழுதியிருக்கும் இந்த விமர்சனத்தையும் படிங்க, இவரின் உழைப்பு எழுத்தில் தெரிகிறது.

" தி சைலன்ஸ் ஒப் த லேம்ப்ஸ் " - திரைப்படம் ஒரு கண்ணோட்டம்

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X

பதிவர் பெயர்: JZ

தமிழ், ஆங்கில மொழி திரைப்படங்களையே அதிகமாக‌ பார்த்த நமக்கு ஒரு இத்தாலியன் படத்தை அறிமுகம் செய்து, அதற்கு விமர்சனமும் எழுதியிருக்கிறார். இங்க போய் படிங்க.

Caesar Must Die (2012)

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X

பதிவர் பெயர்: முரட்டு சிங்கம்

1974‍ ல் வெளிவந்த இத்திரைப்படத்தை நமக்கு அறிமுகம் செய்து, விமர்சனம் எழுதியிருக்கிறார். நீங்களும் படிங்க..

தி கான்வர்சேஷன் (1974) விமர்சனம்

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X

பதிவர் பெயர்: Kumaran

படத்தை பற்றிய தகவல்களையே எழுதாமல் சிறிது மாற்றி, இவரது சொந்த நடையில் ரசிக்கும் படி விமர்சனம் எழுதியிருக்கிறார். நீங்களும் படிச்சிட்டு சொல்லுங்க..

Infernal Affairs (2002) - Hong Kong

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X

பதிவர் பெயர்: Castro Karthi

தமிழில் வரும் தழுவல் படங்களை பற்றி இவர் எழுதியிருக்கும் விடயங்ளை படியுங்கள், இயக்குனர் பற்றிய அவருடைய சில கேள்விகள் எனக்கும் தோன்றியவையே.

தழுவலா? தாக்கமா?

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X

பதிவர் பெயர்: Balaji Sundar

காமிக்ஸ் சீரிஸ் சூப்பர் மேன் படங்களை விரும்பி பார்பவரா நீங்கள், கண்டிப்பா இந்த பதிவை படியுங்கள். படங்களுடன் விளக்கமாக எழுதியிருக்கிறார்.

DARK KNIGHT - A BEGINNING

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X

பதிவர் பெயர்: LUCKY LIMAT லக்கி லிமட்

ஸ்பைடர் மேன் பற்றிய தகவல்கள் அனைத்தையும் தந்து, அதன் பின்னனியும் விவரித்து தொடராக எழுதியுள்ளார். ஸ்பைடன் மேன் ரசிகர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு. நீங்களும் இங்க போய் படிங்க.

The Amazing Spider-Man aka Spider-Man Reboot

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X

பதிவர் பெயர்: மணி

ஹாலிவுட் ரசிகர்களாக இருப்பவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் என்று ஆரம்பித்து இந்த படத்தின் பின்னணியை விவரித்து விரிவாக எழுதியிருக்கிறார். நான் ஏற்கனவே இந்த படத்தை பார்த்து விட்டேன். நீங்களும் விமர்சனத்தை படித்துவிட்டு படத்தை தேடுங்க.

THE LAST SAMURAI_அலசல்-1

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X
---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X

காமிக்ஸ் வலைத்தளங்கள்

சிறுவயதில் இருந்தே காமிக்ஸ் படிக்கும் பழக்கம் அனைவருக்கும் இருக்கும், நானும் பள்ளி படிக்கும் போது நண்பர்களிடம் இருந்து வாங்கி வந்து வீட்டில் யாருக்கும் தெரியாமல் படிப்பேன், வீட்டில் தெரிந்தால் "படிக்கிற வயதில் கதை புக்கு படிக்கிறியானு" பாட்டு கேட்கும். ஹாலிவுட்டில் வெளிவரும் பல படங்கள் காமிக்ஸ் தழுவல்களே, நாம் இப்போது பார்க்கும் பேன்டசி மற்றும் சூப்பர் மேன் படங்களின் ஹீரோக்கள் ஏற்கனவே காமிக்ஸ் மூலம் அறிமுகமானவர்கள் தான். வெளி நாடுகளில் இந்த காமிக்ஸ்களுக்கு பெரிய ரசிகர் கூட்டம் உண்டு. சிறு வயதினருக்கு உள்ள காமிக்ஸ், பெரியவர்களுக்கான காமிக்ஸ் என்று தரம் பிரித்து வெளியிடுகிறார்கள்.  தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள் பலர்  வலைத்தளம் வைத்து அவற்றின் தகவல்களை பதிந்து வருகிறார்கள். அவர்களின் தளங்களையும் கீழே தொகுத்திருக்கிறேன்.

பதிவர் பெயர்: Tamil Comics - SoundarSS
வலைத்தள முகவரி: PHANTOM THE LEGEND - SoundarSS

பதிவர் பெயர்: ப்ரூனோ ப்ரேசில்
வலைத்தள முகவரி: முதலை பட்டாளம்

பதிவர் பெயர்: பயங்கரவாதி டாக்டர் செவன்
வலைத்தள முகவரி: அ.கொ.தீ.க.

பதிவர் பெயர்: ஒலக காமிக்ஸ் ரசிகன்
வலைத்தள முகவரி: Greatest Ever Comics-தலை சிறந்த காமிக்ஸ்கள்

பதிவர் பெயர்: புலா சுலாகி
வலைத்தள முகவரி: புலா சுலாகி

பதிவர் பெயர்: Vijayan
வலைத்தள முகவரி: Lion-Muthu Comics

குறிப்பு: இன்று அறிமுக படுத்திய வலைத்தளங்கள் நண்பர்கள் சிலருக்கு அறிமுகமானவையாக இருக்கலாம். புதியவர்களுக்காக நான் தொகுத்துள்ளேன்.

நல்வாழ்த்துக்களுடன்,
நாடோடி.

மீண்டும் நாளை சந்திப்போம்.....

23 comments:

 1. உங்கள் அறிமுகப் பதிவனாகிய என்னை அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி நண்பரே..... என் எழுத்துகளை நான் மேம்படுத்திக் கொண்டேன் என்ற தன்னம்பிக்கையை எனக்குத் தருகிறது....

  மேலும் எனக்கு வாசகர்களைப் பெற்றுத் தரும் என்று நம்புகிறேன்....

  ReplyDelete
 2. வலைச்சரத்தில் என்னை அறிமுக படுத்தியதற்கு மிக்க நன்றி. நீங்கள் அறிமுக படுத்திய நண்பர்களில் நிறைய பேரை எனக்கு தெரியும், தெரியாத சிலரும் இருக்கிறார்கள், அவர்களது அறிமுகத்துக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 3. கூடியமானவரை புதிய பதிவர்களை அறிமுகப்படுதுரீங்க. அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. என்னையும் வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியமைக்கு மிக்க நன்றி.. சில சினிமாப் பதிவர்களை இப்போது உங்கள் தயவால்தான் அறிந்து கொள்ள முடிகிறது..
  உங்களுக்கும், அறிமுகப்படுத்தப் பட்டவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 5. என்னை வலைச்சரத்தில் அறிமுகம் செய்தமைக்கும் என்னை பற்றி எழுதியமைக்கும் மிக்க நன்றி ஸ்டீபன்

  தாங்கள் பணி இனிதே தொடர வாழ்த்துக்கள்

  அறிமுகம் ஆகும் மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. பலப் பல புது அறிமுகங்கள்... மிக்க நன்றி...

  காமிக்ஸ் வலைத்தளங்கள் - அனைத்தும் எனக்கு புதியவை... பகிர்ந்தமைக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... (ஒவ்வொரு தளமும் திறக்க தான் தாமதம் ஆகின்றன...!)

  அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்... (TM 1)

  ReplyDelete
 7. காமிக்ஸ் பதிவர்களை அறிமுகப்படுத்தியதிற்கு வாழ்த்துக்கள்! :) விஜயன் சாரின் ப்ளாக் மிகவும் முக்கியமானது!

  ReplyDelete
 8. நிறைய தளங்கள் தெரியாதவை! அறிமுகத்திற்கு நன்றி!

  ஆசிரியர் தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 9. நாடோடி நண்பருக்கு வணக்கம்,

  உங்களை நான் அறிமுகம் செய்து கொள்வதற்கு முன்பே, என்னை நீங்கள் அறிமுகம் செய்துவைத்து விட்டீர்கள். புதிய இடம், புதிய நண்பர்கள். பல ஜாம்பவான்களுக்கு மத்தியில் சரிசமமாக இணைத்து உங்கள் சங்கத்தில் என்னை சங்கமமாக செய்திருக்கிறீர்கள். உங்கள் அன்பான தேர்வுக்கு மிகவும் நன்றி.

  இதுவரை இல்லாத ஒரு புதிய எண்ணம் என் உள்ளத்தில் நிழலாடுகிறது, அது, இனி நான் என்னுடைய எழுத்துக்களை மிகவும் கவனமாகவும், சிறப்பாகவும், பிழைகள் இல்லாமலும், அனைவரின் மனம் விரும்புக் வகையிலும் உருவாக்க வேண்டும்.

  இந்த சமயத்தில் ஒரு விஷயம் தெரிவிக்க விரும்புகிறேன். நானும் ஒரு வலைத்தளத்தை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உருவாக தூண்டுகோலாக இருந்தவர் திரு கிங் விஸ்வா என்ற நண்பர். அவர் எனது தளத்தையும் இன்னும் பல காமிக்ஸ் நண்பர்களின் தளத்தையும் அவருடைய தளத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

  திரு கிங் விஸ்வாவின் தளம் http://tamilcomicsulagam.blogspot.in
  என்ற முகவரியில் செயல்படுகிறது. அந்த வலைத்தளத்தையும் நீங்கள் பார்த்து அறிமுகப் படுத்தவேண்டும். ஏற்கெனவே அறிமுகப்படுத்தி இருந்தால் அதற்கும் சேர்த்து உங்களுக்கு நன்றி சொல்கிறேன்.

  அன்புடன்,
  பாலாஜி சுந்தர்,
  www.picturesanimated.blogspot.com

  ReplyDelete
 10. @Arunprasath Varikudirai said...
  //உங்கள் அறிமுகப் பதிவனாகிய என்னை அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி நண்பரே..... என் எழுத்துகளை நான் மேம்படுத்திக் கொண்டேன் என்ற தன்னம்பிக்கையை எனக்குத் தருகிறது....

  மேலும் எனக்கு வாசகர்களைப் பெற்றுத் தரும் என்று நம்புகிறேன்....//

  உங்களை அறிமுகப்படுத்தியதில் எனக்கும் மகிழ்ச்சியே...

  தொடர்ந்து எழுதுங்கள்..

  ReplyDelete
 11. @ராஜ் said...
  //வலைச்சரத்தில் என்னை அறிமுக படுத்தியதற்கு மிக்க நன்றி. நீங்கள் அறிமுக படுத்திய நண்பர்களில் நிறைய பேரை எனக்கு தெரியும், தெரியாத சிலரும் இருக்கிறார்கள், அவர்களது அறிமுகத்துக்கும் மிக்க நன்றி.//

  வாங்க ராஜ்,

  உங்களை அறிமுகப்படுத்தியதில் எனக்கும் மகிழ்ச்சியே...

  ReplyDelete
 12. @ Lakshmi said...
  //கூடியமானவரை புதிய பதிவர்களை அறிமுகப்படுதுரீங்க. அனைவருக்கும் வாழ்த்துகள்.//

  நானும் அப்படி நினைத்து தான் அறிமுகப்படுத்துகிறேன் சகோ.. வாழ்த்துக்கு நன்றி

  ReplyDelete
 13. @ JZ said...
  //என்னையும் வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியமைக்கு மிக்க நன்றி.. சில சினிமாப் பதிவர்களை இப்போது உங்கள் தயவால்தான் அறிந்து கொள்ள முடிகிறது..
  உங்களுக்கும், அறிமுகப்படுத்தப் பட்டவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்!!//

  உங்களை அறிமுகப்படுத்தியதில் எனக்கும் மகிழ்ச்சியே...

  எல்லோரையும் படியுங்கள், வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 14. @r.v.saravanan said...
  //என்னை வலைச்சரத்தில் அறிமுகம் செய்தமைக்கும் என்னை பற்றி எழுதியமைக்கும் மிக்க நன்றி ஸ்டீபன்

  தாங்கள் பணி இனிதே தொடர வாழ்த்துக்கள்

  அறிமுகம் ஆகும் மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் //

  வாங்க சரவணன்,

  உங்களை அறிமுகப்படுத்தியதில் எனக்கும் மகிழ்ச்சியே...

  ReplyDelete
 15. @திண்டுக்கல் தனபாலன் said...
  //பலப் பல புது அறிமுகங்கள்... மிக்க நன்றி...

  காமிக்ஸ் வலைத்தளங்கள் - அனைத்தும் எனக்கு புதியவை... பகிர்ந்தமைக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... (ஒவ்வொரு தளமும் திறக்க தான் தாமதம் ஆகின்றன...!)

  அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்... (TM 1)//

  வாங்க தனபாலன்,

  உங்களுக்கு புதியவர்களை அறிமுகப்படுத்தியதில் சந்தோசமே..

  ReplyDelete
 16. @ Karthik Somalinga said...
  //காமிக்ஸ் பதிவர்களை அறிமுகப்படுத்தியதிற்கு வாழ்த்துக்கள்! :) விஜயன் சாரின் ப்ளாக் மிகவும் முக்கியமானது!//

  உங்களின் வாழ்த்துக்கும், கருத்துக்கும் ரெம்ப நன்றி.

  ReplyDelete
 17. @வரலாற்று சுவடுகள் said...
  //நிறைய தளங்கள் தெரியாதவை! அறிமுகத்திற்கு நன்றி!

  ஆசிரியர் தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள்!//

  வாங்க சகோ,

  உங்களுக்கு புதியவர்களை அறிமுகப்படுத்தியதில் சந்தோசமே..

  ReplyDelete
 18. @Balaji Sundar said...
  //நாடோடி நண்பருக்கு வணக்கம்,

  உங்களை நான் அறிமுகம் செய்து கொள்வதற்கு முன்பே, என்னை நீங்கள் அறிமுகம் செய்துவைத்து விட்டீர்கள். புதிய இடம், புதிய நண்பர்கள். பல ஜாம்பவான்களுக்கு மத்தியில் சரிசமமாக இணைத்து உங்கள் சங்கத்தில் என்னை சங்கமமாக செய்திருக்கிறீர்கள். உங்கள் அன்பான தேர்வுக்கு மிகவும் நன்றி.

  இதுவரை இல்லாத ஒரு புதிய எண்ணம் என் உள்ளத்தில் நிழலாடுகிறது, அது, இனி நான் என்னுடைய எழுத்துக்களை மிகவும் கவனமாகவும், சிறப்பாகவும், பிழைகள் இல்லாமலும், அனைவரின் மனம் விரும்புக் வகையிலும் உருவாக்க வேண்டும்.

  இந்த சமயத்தில் ஒரு விஷயம் தெரிவிக்க விரும்புகிறேன். நானும் ஒரு வலைத்தளத்தை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உருவாக தூண்டுகோலாக இருந்தவர் திரு கிங் விஸ்வா என்ற நண்பர். அவர் எனது தளத்தையும் இன்னும் பல காமிக்ஸ் நண்பர்களின் தளத்தையும் அவருடைய தளத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

  திரு கிங் விஸ்வாவின் தளம் http://tamilcomicsulagam.blogspot.in
  என்ற முகவரியில் செயல்படுகிறது. அந்த வலைத்தளத்தையும் நீங்கள் பார்த்து அறிமுகப் படுத்தவேண்டும். ஏற்கெனவே அறிமுகப்படுத்தி இருந்தால் அதற்கும் சேர்த்து உங்களுக்கு நன்றி சொல்கிறேன்.

  அன்புடன்,
  பாலாஜி சுந்தர்,
  www.picturesanimated.blogspot.com//

  உங்களின் நீண்ட கருத்துரைக்கு மிக்க நன்றி பாலாஜி.

  கிங் விஸ்வா அவர்கள் பலருக்கு அறிமுகமானவர். அதனால் தான் அவரை நான் இதில் இணைக்கவில்லை.

  மீண்டும் உங்களுக்கு நன்றி.

  ReplyDelete
 19. எனது ப்ளாக்கை அறிமுகம் செய்தமைக்கு மிகுந்த நன்றி நண்பரே. மிகவும் சந்தோசம்.

  என்னுடைய மற்றுமொரு வலைபூ www.tamilcomics-soundarss.blogspot.com என்பதையும் உங்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி

  ReplyDelete
 20. சிறப்பான அறிமுகங்கள்! நன்றி!

  இன்று என் தளத்தில்
  பிரபு தேவாவின் புதுக்காதலியும் நயனின் சீண்டலும்
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_16.html
  நான் ரசித்த சிரிப்புக்கள்! 17
  http://thalirssb.blogspot.in/2012/08/17.html

  ReplyDelete
 21. @Tamil Comics - SoundarSS said...
  //எனது ப்ளாக்கை அறிமுகம் செய்தமைக்கு மிகுந்த நன்றி நண்பரே. மிகவும் சந்தோசம்.

  என்னுடைய மற்றுமொரு வலைபூ www.tamilcomics-soundarss.blogspot.com என்பதையும் உங்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி//

  வாங்க சவுந்தர்,

  உங்களை அறிமுகப்படுத்தியதில் எனக்கும் மகிழ்ச்சியே..

  ReplyDelete
 22. @ s suresh said...
  //சிறப்பான அறிமுகங்கள்! நன்றி!

  இன்று என் தளத்தில்
  பிரபு தேவாவின் புதுக்காதலியும் நயனின் சீண்டலும்
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_16.html
  நான் ரசித்த சிரிப்புக்கள்! 17
  http://thalirssb.blogspot.in/2012/08/17.html//

  வாங்க சுரேஷ்,

  உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி

  ReplyDelete
 23. மிக்க நன்றி நண்பரே,
  அலுவல் காரணமாக சில நாட்கள் வலை பக்கம் வரவில்லை.
  மன்னிக்கவும்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது