பெண்கள் தங்கள் எண்ணங்களை வண்ணங்களாய் மாற்றி எல்லாத் துறைகளிலும் முன்னுக்கு வந்து பேரும் புகழும் வாங்கினாலும் இல்லத்து அரசியாய் தன் குடும்பநலம் பேணுவதில் அவளுக்கு நிகர் அவளே!
வாசலில் அழகான கோலம் போடுவது, குடும்ப உறுப்பினர்களுக்குப் பிடித்த உணவை சமையல் செய்து தேவை அறிந்து கொடுப்பது, அதையும் அழகாய் பரிமாறுவது எல்லாம் ஒரு கலை. அதைச் சிறப்பாய் புதிது புதிதாக செய்கிறார்கள். அது மட்டும் அல்லாமல் வீட்டை அலங்கரிக்க தங்கள் கையால் கலைப்பொருட்களை செய்வதில் வல்லவர்கள்- இன்று பகிரப்பட்டு இருக்கும் வலைத்தளம் வைத்து இருப்பவர்கள் அவர்கள் வலைத்தளத்தில் நிறைய கற்றுக் கொள்ளலாம்.
* ’ராதாஸ் கிச்சன்’ என்று வலைத்தளம் வைத்து இருக்கும் ராதாராணி அவர்கள் , வீட்டு வைத்தியம், கோலங்கள், சமையல் குறிப்புகள் கைவேலைகள் எல்லாம் பகிர்கிறார் . அவர் குறிப்பில் ஒரு அல்வாவும், வீட்டு மருத்துவமும் :-
குக்கர் அல்வா
அல்வா செய்வதற்கு கோதுமையை ஊறவைத்து அரைத்து பால் எடுத்து கஷ்டப்படாமல் எளிதாக செய்யும் முறையை சொல்கிறார். நெய்யும் நிறைய இல்லாமல்ஆரோக்கியமாய் ஆலிவ் எண்ணெயில் செய்ய சொல்லித் தருகிறார்.
வீட்டு மருத்துவம்
வீட்டில் எப்போதும் சுக்கு ,மிளகு,இஞ்சி,தேன்,
ஓமம்,வெந்தயம் ,வாங்கி வைத்து கொண்டால் நாமே கை மருத்துவம்செய்து பார்க்கலாம்.தற்காலிக நிவாரணம் கிடைக்கும்.சில சமயங்களில் மருத்துவ செலவுக்கு அவசியமே இல்லாமல் காப்பாற்றும்.இதில் பின் விளைவுகள் எதுவும் இருக்காது என்கிறார்.
* ’அடுப்பங்கரை’ என்று வலைத்தளம் வைத்து இருக்கும் கமலா அவர்கள் கோலங்கள், உணவே மருந்து எனும் சமையல் குறிப்புகள் ஆகியவற்றை வைத்து இருக்கிறார். அவர் குறிப்பிலிருந்து உடலுக்கு நன்மை பயக்கும் இரண்டு குறிப்புகள்:-
நெல்லிக்காய் அவ்வைக்கு அதியமான் கொடுத்த நெல்லிக்கனி என்று இலக்கியத்திலும், தெய்வீக மரம் என்று புராணங்களிலும் இடம் பெற்ற நெல்லிக்காயும் அதன் மரமும் மிக்க மருத்துவ குணம் நிறைந்தது.
என்று நெல்லிக்காயின் மருத்துவ குறிப்பைச் சொல்லி நெல்லிக்காய் தொக்கு, நெல்லிக்காய் உடனடி ஊறுகாய் , நெல்லிக்காய் இனிப்பு ஊறுகாய்,
நெல்லிக்காய் தயிர்ப் பச்சடி குறிப்புகளைத் தருகிறார்.
இப்போது நெல்லிக்காய் சீஸன் வாங்கி செய்து மகிழுங்கள்.
சிவப்பு அவல் கொழுக்கட்டை எளிதான சத்து மிகுந்த குறிப்பு.
* ’காகிதப்பூக்கள்’ என்ற வலைச்சரம் வைத்து இருக்கும் ஏஞ்சலின் அவர்களும் கைவேலை , சமையல் குறிப்பு என்று பலதுறைகளில் வல்லவராக இருக்கிறார். அவர் சமையல் குறிப்பு இரண்டு:-
சத்தான
பொட்டுக்கடலை உருண்டை.
என்ற பதிவில் ஏஞ்சலின் தன்னை சமையலில் முன்னேற்றிய பிரபல சமையல் ராணிகளின் குறிப்பையும் தருகிறார். ஆசியா, ஜலீலா, அடுப்பங்கரை கமலா, எல்லோரும் அதில் இருக்கிறார்கள். இந்த பதிவில் நிறைய சமையல் குறிப்புகள் இருக்கிறது வித விதமாய். ஏஞ்சலின் அன்பு அம்மாவின் நினைவும் இருக்கிறது.
* கோதுமை ரவை தோசை- -சமையல் குறிப்பு
//வெறும் பாம்பே ரவா தோசை சாப்பிட்டிருப்பீர்கள். நான் சொல்லப் போவது,
கோதுமை ரவா தோசை. ஐம்பது வகை தோசை, நூறு வகை தோசை லிஸ்டில் கூட நான் கண்டதில்லை உண்டதில்லை இது தன் மகளின் கண்டுபிடிப்பு //என்கிறார், ninewest என்ற வலைத்தளம் வைத்து இருக்கும் நானானி அவர்கள். அருமையாக நகைச்சுவையாக சொல்கிறார் சமையல் குறிப்பை.
*
சில்லி இட்லி. எப்போது பார்த்தாலும் இட்லி மட்டுமே செய்து கொடுக்காமல் வித்தியாசமாய் மஞ்சூரியன் டேஸ்டில் செய்து இருப்பதாய் சொல்கிறார்.
’இனிய இல்லம்’ என்ற வலைத்தளம் வைத்து இருக்கும் பாயிஜா காதர் அவர்கள். இவரும் வீட்டுக் குறிப்புகள், கைவேலைப்பாடுகள் எல்லாம் செய்வதில் வல்லவர்.
*
கோவைக்காய்த் துவையல் சமையலும் கைப் பழக்கம் என்று சொல்லும் பாசமலர் தருகிறார். இவரும் பன்முக வித்தகர். நாலு வலைத்தளங்கள் வைத்து இருக்கிறார். இலக்கியம் , கவிதை, மற்றும் ஆங்கிலத்தில் கவிதை, ஆங்கிலத்தில் சமையல் குறிப்புகள் என்று அசத்தும் பெண்மணி.
* எவ்வளவுதான் வித விதமான சமையல் சாப்பிட்டலும் வத்தக்குழம்பும் சுட்ட அப்பளமும், அல்லது பொரித்த அப்பளமும் இருந்தால் போதும் என்று சில சமயம் தோன்றும் . அதற்கு ’மிராவின் கிச்சனில்’சுண்டைக்காய் வத்தல் குழம்பு இருக்கிறது அருமையாக.
சுண்டைக்காய் வத்தல் குழம்பு
* பெண்கள் மட்டும் தானா சமையல் குறிப்புகள் தர முடியும் !
’பூவையின் எண்ணங்கள் ’ வலைத்தளம் வைத்து இருக்கும் பாலசுப்பிரமணியம் ஐயா அவர்களும் தன் வீட்டில் தன் மனைவி செய்யும் .
மொளகூட்டல் இஞ்சிப் புளி சமையல் குறிப்பைத் தருகிறார் அழகாய்.
மொளகூட்டல் இஞ்சிப் புளி காம்பினேஷன் சுவையாய் இருக்கும் என்கிறார்.
இவர் தஞ்சை ஓவியங்கள் செய்வதில் வல்லவர். தன் இன்னொரு வலைத்தளத்தில் கதை, கவிதை , கட்டுரைகள் என்று வழங்குகிறார்.(gmb writes)
என் கணவர் வரைந்த ஓவியம்
*
அடடா என்ன அழகு ! ................ ’அடை’யைத் தின்னு பழகு!!
இப்படிச் சொல்லி அடை செய்யும் முறையை விரிவாக அழகாய்ச் சொல்கிறார் , வை.கோபாலகிருஷ்ணன் சார். இந்த அடைமாவிலேயே இன்னொரு பலகாரம் செய்யவும் அவர் சொல்லித் தருகிறார். அதன் பெயர் ”குணுக்கு”!
.
(BACHELORS களுக்குப் பயன்படும் சமையல் குறிப்பு கேட்ட )’சமையல் அட்டகாசம்’ என்று வலைத்தளம் வைத்து இருக்கும் ஜலீலா அவர்கள் நடத்திய சமையல் போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் பரிசு வாங்கிய குறிப்பு இந்த அடை. கதை, கட்டுரை, ஓவியம் என்று வலைத்தளத்தில் வழங்கி வருபவர்.
* ’வாழி நலம் சூழ’ என்ற வலைத்தளம் வைத்து இருக்கும் அஸ்வின் ஜி அவர்கள் தன் வலைப்பூவை இயற்கை நல வாழ்வியல் நெறிகளைத் திரட்டி தரும் வலைப்பூ என்கிறார். இந்தப் பதிவில் அருமையான வளமான வாழ்விற்கு ’உணவே மருந்து’ எனும் இந்த கட்டுரையைப் பகிர்ந்து இருக்கிறார்:-
வளமான வாழ்விற்கு உணவே மருந்து -
இயற்கை உணவும் ஆரோக்கியமும் என்ற பதிவில் நாம் அன்றாடம் உண்ணும் உணவின்போது கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய வழிமுறைகளை டாக்டர் றொசாரியோ ஜோர்ஜ், Ph.D., அவர்கள் ’வளமான வாழ்விற்கு உணவே மருந்து’ என்ற கட்டுரையில் சொல்கிறார்.
இந்தப் பதிவில் உள்ளது போல் உணவு உண்பதைக் கடைபிடித்தால் வாழ்வில் நலமாக இருக்கலாம்.
உண்ணும் உணவு உனக்கு கிடைத்தவகை எண்ணி உண்ணிடல் உன்கடன்.
வாழ்க வளமுடன்!
------------------------------