07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label தமிழ்வாசி பிரகாஷ். Show all posts
Showing posts with label தமிழ்வாசி பிரகாஷ். Show all posts

Sunday, January 5, 2014

கொஞ்சம் இசை... கொஞ்சம் சினிமா... உன்னாலும் முடியும்!!!

வணக்கம் வலைச்சர நண்பர்களே,

மீண்டும் புதிய, அதிகம் கவனிக்கப்படாமல் இருக்கும் வலைப்பூக்களை இன்றும் அறிமுகம் செய்கிறேன்... வாசித்து உங்கள் கருத்துகளை அவர்கள் தளத்தில் பகிருங்கள்... பதிவுக்குள் போகலாமா?

உன்னால் முடியும் என்னும் வலைப்பூ 2010-இல் ஆரம்பித்து இதுவரை பத்து பதிவுகள் மட்டுமே எழுதப்பட்டு உள்ளது. அதில் நீயா நானா எனும் தலைப்பில் சமீபத்தில் எழுதிய அலுவலகங்களில் அதிகாரிகளுக்கு இடையே ஏற்படும் ஈகோ-வை அவரது அனுபவத்தில் இருந்து ஒரு நிகழ்ச்சியை எடுத்து பதிவாக எழுதியுள்ளார். வாசித்து பாருங்கள். இன்னும் நிறைய பதிவுகள் எழுத பதிவரை கேட்டுக் கொள்கின்றேன்.

இனிய உளவாக என்னும் வலைப்பூ ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் ஆனாலும் இதுவரை மிகக் குறைந்த பதிவுகளே எழுதப்பட்டு உள்ளது. அதிலும் கடந்த ஆண்டு 15 பதிவுகள் மட்டுமே. அவரது பதிவுகள் பெரும்பாலும் சிறு சிறு கதைகளாகவும், அனுபவங்களையுமே கொண்டுள்ளது. அதில் அக்கா எங்களையும் போட்டோ எடுக்கறியா? என்ற பதிவில் அவரது மகள் போட்டோ எடுக்க விருப்பப்பட்டதையும், அவள் எடுத்த போட்டோக்களையும் பதிவிட்டு உள்ளார். நீங்களும் பார்த்து ரசியுங்கள்.

மனதின் ஓசை என்னும் வலைப்பூ கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு மிகக் குறைந்த பதிவுகளே பதிவிடப்பட்டு உள்ளது. பல்சுவை பதிவுகள் பெரும்பாலும் எழுதப்பட்டு உள்ளது. அதில் தமிழ் இலக்கியமும் உலக மார்க்கெட்டிங்கும் என்ற பதிவில் புத்தகங்கள் விற்பதற்காக இணையத்தில் பலரால் விதவிதமாக மார்க்கெட்டிங் செய்து வருவதைப் பற்றி சிறு கட்டுரையாக எழுதியுள்ளார். வாசித்துப் பாருங்களேன்.

அநியாயங்கள் என்னும் வலைப்பூ 2012-இல் ஆரம்பிக்கப்பட்டு இருந்தாலும் இதுவரை பத்து பதிவுகளே எழுதப்பட்டு உள்ளது. அதில் சென்னையில் நடந்த பதிவர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டது பற்றிய பதிவும் ஒன்று. கேமரா கண்காணிப்பில் சார்-பதிவாளர் அலுவலகங்கள் என்ற பதிவில் அங்கு நடக்கும் முறைகேடுகளை மிக விளக்கமாக பதிவிட்டுள்ளார். நீங்களும் வாசித்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள். இன்னும் நிறைய சமூக பதிவுகள் பகிரப்பட வேண்டும் என பதிவரைக் கேட்டுக்கொள்கிறேன்.

கொஞ்சம் இசை... கொஞ்சம் சினிமா... என்னும் வலைப்பூ ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் ஆனாலும், இதுவரை 33 பதிவுகள் எழுதப்பட்டு உள்ளது. சினிமா அலசல்கள், விமர்சனங்கள் பதிவுகள் அதிகம் எழுதப்பட்டு உள்ளது. அதில், சமீபத்தில் ட்ராபிக் - கதையல்ல... கதைகள் என்ற பதிவில் அந்த திரைபடத்தை மிக ஆழமாக அலசியுள்ளார். வாசித்து அந்த பதிவரை ஊக்கப்படுத்துங்கள் நண்பர்களே.

புத்தகம் என்ற வலைப்பூ ஆரம்பித்து எட்டு ஆண்டுகள் ஆனாலும் ஒவ்வொரு வருடமும் மிகக் குறைந்த பதிவுகளே எழுதப்பட்டு உள்ளது. பெரும்பாலும் பதிவர் வாசித்த புத்தகங்களின் விமர்சனங்கள் பதிவாக உள்ளது. The pregnent king என்ற புத்தகத்தை வாசித்து அதன் கதையம்சத்தை விமர்சனமாக பதிவிட்டுள்ளார். நீங்களும் வாசித்துப் பாருங்களேன்.

கனா காண்கிறேன் என்ற வலைப்பூவில் இதுவரை ஐம்பது பதிவுகள் மட்டுமே எழுதப்பட்டுள்ளது. அதில் 22-26 வயது - ஆண்களுக்கு மிகக் கடினமான வயது என்ற பதிவில் ஆண்களின் ஏக்கம், வாழ்க்கை நடைமுறைகள் பற்றி மிக சுவைபட ரசிக்கும்படியாக எழுதியுள்ளார். நீங்களும் வாசித்துப் பாருங்களேன்.

இந்த வாரம் முழுதும் புதிய வலைதளங்களை ஓரளவுக்கு அறிமுகம் செய்துள்ளேன் என நினைக்கின்றேன். பெரும்பாலான வலைச்சர ஆசிரியர்கள் கதை, கவிதை, கட்டுரை, சமையல் என பல்வேறு தலைப்புகளில் பதிவுகளை தேடி தொகுத்து தருவார்கள். ஆனால் அவ்வாறு செய்தால் புதிய வலைத்தளங்களை பெருவாரியாக அறிமுகம் செய்ய இயலாது என எண்ணி, எல்லா பதிவுகளிலும் நானறிந்த புதிய தளங்களை மட்டுமே தொகுத்து பதிவிட்டுள்ளேன். இந்த முறையிலான பதிவுத் தொகுப்பு உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என்றே நினைக்கின்றேன். இன்றுடன் எனது வலைச்சர ஆசிரியர் பொறுப்பு முடிகிறது. மீண்டும் இதுபோன்ற ஒரு சந்தர்ப்பம் அமைந்தால் புதிய தளங்களின் தொகுப்புடன் உங்களை சந்திக்கிறேன்.. 
அடுத்து வரவிருக்கும் ஆசிரியருக்கு வாழ்த்தை தெரிவித்து உங்களிடமிருந்து விடைபெறுகிறேன் நன்றி... வணக்கம்... நண்பர்களே...

நட்புடன்..
தமிழ்வாசி பிரகாஷ்
மேலும் வாசிக்க...

Saturday, January 4, 2014

வீட்டில் தோட்டம், சாலையில் பணம்!!!

வணக்கம் வலைச்சர நண்பர்களே,
இதுவரை குறைந்த பதிவுகள் எழுதிய பதிவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களின் வலைப்பூ பதிவுகள் பற்றி ஒவ்வொரு பதிவிலும் தொகுப்பாக எழுதிவருகிறேன். அதேபோல ஒரு புதிய தொகுப்பை இன்றும் பார்ப்போமா?

சலனம் என்னும் வலைப்பூ ஆரம்பித்து நான்கு ஆண்டுகள் ஆயினும் கடந்த ஆண்டு மிகச் சில பதிவுகளே எழுதப்பட்டு உள்ளது. கீற்று தளத்தில் இவர் பகர்ந்த பதிவுகளை இந்த வலைப்பூவிலும் பதிந்து வருகிறார். ஓலம் எனும் கவிதையில் அவளுடன் செல்ல சிறகுகள் வேண்டுமே என்ற கருத்தை பகிர்ந்துள்ளார்.

சிகரம் என்னும் வலைப்பூ ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் ஆனாலும் கடந்த ஆண்டில் வெறும் 13 பதிவுகள் மட்டுமே எழுதப்பட்டு உள்ளது. அதில் நீ.. நான்... காதல்... என்ற கவிதை பதிவில் காதல் வரிகளை எழுதியுள்ளார். நீங்களும் வாசித்துப் பாருங்களேன்.

தோட்டம் என்னும் வலைப்பூ ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் ஆயினும் இதுவரை 39 பதிவுகளே எழுதப்பட்டு உள்ளது. இந்த வலைப்பூவில் வீட்டு தோட்டக்கலை பற்றிய பதிவுகளே அதிகம் எழுதப்பட்டு வருகிறது. அதில் தோட்ட உலா எனும் தலைப்பில் என்னென்ன செடிகள் வளர்க்கலாம்? அப்போதைய சீசனுக்கு ஏற்ற காய்கறிகள் என்னென்ன? என்பதை விளக்கி நிறைய புகைப்படங்களுடன் பயனுள்ள விசயங்களை பதிவேற்றி வருகிறார். வீட்டில் தோட்டம் அமைக்க விருப்பம் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ள தளமாக இருக்கும்

சில நேரங்களில் சில கருத்துக்கள் என்னும் வலைப்பூ கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இதுவரை 43 பதிவுகள் எழுதப்பட்டுள்ளது. அதில் பொருளாதார மந்தநிலை என்னும் பதிவில் தொழிலகங்கள் மூடப்படுவது பற்றியும், தொழிலாளர் மனநிலை பற்றியும் சுருக்கமாக விளக்கியுள்ளார். நீங்களும் வாசித்துப் பாருங்களேன்.

மதிப்பு என்னும் தளம் கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, ஆன்லைன் வர்த்தக இணையதளங்களில் உள்ள சலுகைகள் பற்றி இந்த வலைப்பூவில் பதிவிடப்பட்டு வருகிறது. மொபைல் ரீசார்ஜ் செய்தால் என்ற பதிவில் ரீசார்ஜ்-க்கு சில சலுகைகள் கிடைப்பது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது (நானும் இந்த ரீசார்ஜ் செய்து சலுகைகள் பெற்று பயனைந்துள்ளேன் நண்பர்களே). ஆன்லைன் வர்த்தக தளங்கள் நிறைய இருந்தாலும், மதிப்பு தளத்தில் முக்கியமான சலுகைகள் பற்றி பதிவிடுவதால் உங்களுக்கும் பயனுள்ளவையாக இருக்கும் என நினைக்கின்றேன்.

பாண்டுவின் பக்கம் என்னும் வலைப்பூ கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு மிகச் சில பதிவுகளே (31 பதிவுகள்) எழுதப்பட்டுள்ளது. இதில் இவரது கவிதைகள், கதைகள் பதிவிடப்பட்டு வருகிறது. அதில் புத்தகப் பாவை என்னும் கவிதையில் புத்தகத்தை பெண்ணாக நினைத்து அழகாக வர்ணித்து வரிகளை அமைத்துள்ளார். நீங்களும் வாசித்துப் பாருங்களேன்.

இரயில் பயணங்களில் என்னும் வலைப்பூ கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இதுவரை 20 பதிவுகள் மட்டுமே எழுதப்பட்டுள்ளது. நடமாடும் ATM வங்கி எனும் அவரது அனுபவ பதிவில் பணம் எடுக்க நடமாடும் ATM அவரது ஊரில் துவங்கியிருப்பதாக பதிவிட்டுள்ளார். உங்கள் ஊரிலும் இந்த வசதி உள்ளதா?

சுவாதியும்கவிதையும் என்னும் வலைப்பூ ஆரம்பித்து மூன்றே மாதங்களில் நூறு பதிவுகள் பதிவிடப்பட்டுள்ளது. அதில், கவிதைகளும், ஹைக்கூ-களும் நிறைய பதிவிடப்பட்டுள்ளது. அதில் கடிதம் என்னும் கவிதைப் பதிவில் நீண்ட நாட்களாக சொல்லப்படாத, எழுதப்படாத விஷயங்கள் கடிதம் வாயிலாக சொல்ல வேண்டும் என்ற கருத்தை தாங்கி எழுதப்பட்டு உள்ளது. நீங்களும் வாசித்துப் பாருங்கள்.

நண்பர்களே, இன்றும் மிகச் சில பதிவுகள் எழுதியவர்களின் தொகுப்பு தான்... நாளை இன்னுமொரு வலைப்பதிவு தொகுப்பில் உங்களைச் சந்திக்கின்றேன்...
மேலும் வாசிக்க...

Friday, January 3, 2014

மதுரைக்காரர்களின் பசுமை நடையும், அரிதாகும் தின்பண்டமும்!!!

ஹாய் நண்பர்களே,

இந்த வார வலைச்சரத்தில் ஒவ்வொரு பதிவிலும் கூடுமானவரை புதிய பதிவர்களையும், குறைந்த பதிவுகள் எழுதிய வலைப்பதிவுகளையுமே அறிமுகம் செய்து வருகிறேன். அவ்வகையில் இன்றும் சில பதிவுகள் அறிமுகங்களைப் பார்ப்போமா?

அரும்புகள் மலரட்டும் என்னும் வலைப்பூ கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு மிகச் சில பதிவுகளே (39 பதிவுகள்) எழுதப்பட்டு வருகிறது. சமூக சிந்தனை பதிவுகளும், கட்டுரை பதிவுகளும் அதிகமாக எழுதப்பட்டு உள்ளது. அதில் படித்தவர்கள் தான் அதிக தவறு செய்கிறார்களா? என்ற பதிவில் படித்தவர்களால் தான் சமுதாயம் சீரழிகிறது என்றும், படிக்கும் காலத்திலே ஆசிரியர்கள் நல்ல மாணவர்களை உருவாக்க, அதற்கேற்ப வழிமுறைகளை சொல்லித் தர வேண்டும் என விளக்குகிறது.

பெருநாழி என்னும் வலைப்பூவில்  கதை, கவிதை, கட்டுரைகள் என எழுதப்பட்டு வருகிறது. இதுவரை 48 பதிவுகள் உள்ளது. மரணத்தின் துளி எனும் பதிவில் தன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பள்ளியில் அனுமதி பெற்று வீட்டிற்கு செல்லும் வழியில் விபத்தில் மாட்டுகிறார். அதில் மருத்துவமனை செல்லும் அளவுக்கு காயங்கள் ஏற்படுகிறது. அத்தருணத்தில், அவரைக் காப்பாற்றியவர்கள், மருத்துவமனையில் உதவி செய்தவர்கள் பற்றி மிகுந்த உணர்ச்சிப் பெருக்கில் இந்தப் பதிவு எழுதியிருக்கிறார். வாசித்துப் பாருங்களேன். 

இலக்கியச் சாரல் என்னும் வலைப்பூவில் கதை, கட்டுரை, கவிதைகள் என எழுதப்பட்டு வந்தாலும், சமீபத்தில் பழைய விளையாட்டுகள் என்ற தலைப்பில் மறந்து போன விளையாட்டுகள் பற்றி சில பதிவுகள் எழுதப்பட்டு வருகிறது. அதில், பேந்தா எனும் விளையாட்டு பற்றி அறிய பதிவை வாசியுங்கள்.

நடை நமது என்னும் வலைப்பூ மிக சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டு இதுவரை பத்து பதிவுகள் மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இலக்கிய சம்பந்தமான பதிவுகள் எழுதப்பட்டு வருகிற இந்த வலைப்பூவில் காற்றுக் குடித்த மூச்சு என்ற பதிவில் ஒவ்வொரு நாளும் பலரை சந்திக்கிறோம், பழகுகிறோம் அவர்களில் நமது நினைவில் நிற்பவர்கள் எத்தனை பேர் என்ற கருத்தை தாங்கி கவிதை எழுதப்பட்டு உள்ளது. வாசித்துப் பாருங்களேன்.

மதுரக்காரன் என்னும் வலைப்பூவில் மிகச் சில பதிவுகளே எழுதப்படிருந்தாலும் வாசிக்க சுவாரஸ்யமாகவே இருக்கும். அதில் பசுமை நடை - கொங்கர் புளியங்குளம் என்ற பதிவில் சமணர் வாழ்விடங்கள், வாழ்வியல் முறை பற்றியும், கல்வெட்டுக்கள், இயற்கை உணவுகள் பற்றி எழுதியுள்ளார். நீங்களும் பதிவை வாசித்து பழங்கால வாழ்வியல் முறையை அறிந்து கொள்ளுங்கள். 
(பசுமை நடை பற்றி நான் ஏற்கனவே அறிந்திருந்தாலும், இதுவரை ஒரு நடையிலும் கலந்து கொண்டது கிடையாது. ஆனால் நண்பர்கள் மூலம் நல்ல அனுபவமாக இருக்கும் என அறிந்துள்ளேன். விரைவில் பசுமை நடை மூலம் ஏதாவது ஒரு இடத்தை சென்று பார்வையிட வேண்டும் என நினைத்துள்ளேன். பார்ப்போம்...)

தீபா என்னும் வலைப்பூ கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு ஐம்பது பதிவுகள் வரை எழுதப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த இந்த பதிவரின் அனுபவங்களும், கடந்த கால நினைவுகளும் வலைப்பூவை நிறைத்துள்ளது. அதில் எங்க ஊரு ஆறு எனும் பதிவில் சோழவந்தான் அருகே திருவேடகம் ஊரில் வைகை ஆற்று நிலையை மிகுந்த எதிர்பார்ப்பு கனவுகள் மூலம் எழுதியுள்ளார். இப்பதிவும் பசுமைநடை சம்பந்தப்பட்டதே. இந்த பதிவரின் பலமே, சொல்ல வேண்டிய கருத்துக்களை நேர்த்தியான, கோர்வையான வார்த்தைகள் மூலம் ஆர்வத்துடன் வாசிக்குமாறு எழுதுவார்.

ராமேஸ்வரம் ரபி என்னும் வலைப்பூ ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் ஆயினும் மிகச் சில பதிவுகள் எழுதப்பட்டுள்ளது. இந்த வலைப்பூவில் பெரும்பாலும் ராமேஸ்வரம் , கடல் பகுதிகள் பற்றிய பதிவுகளே எழுதப்பட்டுள்ளது. மேலும் அறியப்படாத தின்பண்டம் பனாட்டு என்ற தலைப்பில் பனாட்டு எனும் இனிப்பு பண்டம் பற்றிய செய்தியை பகிர்ந்துள்ளார். இந்த பண்டம் கால மாற்றத்தால் அரிதான பண்டமாக மாறிவிட்டது என பதிவர் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார். 

நண்பர்களே, இன்றும் மிக குறைந்த பதிவுகள் எழுதிய பதிவர்களை அறிமுகம் செய்துள்ளேன். உங்களுக்கும் இவர்கள் அறிமுகமாவார்கள் என்ற நம்பிக்கையில், நாளைய பதிவில் இன்னும் பல பதிவர்களை அறிந்து கொள்ள தயாராகுங்கள்.
மேலும் வாசிக்க...

Thursday, January 2, 2014

நீர், நிலம், மனிதன்....!!!

வணக்கம் வலைச்சர நண்பர்களே,

இன்றைய அறிமுக வலைப்பதிவுகள் பற்றிய தொகுப்பைப் பார்ப்போமா?

வலிப்போக்கன் என்னும் வலைப்பூவில் அனுபவ பதிவுகளும், சில சமூக பதிவுகளும் எழுதப்பட்டு வருகிறது. இதில் அருணா ஆசிப் அலி எனும் சுதந்திரப் போராட்ட பெண்ணின் வாழ்வில் நடந்த ஒரு விஷயம் பற்றி பதிவாக எழுதியுள்ளார். என்ன விஷயம் என்பதை அறிந்து கொள்ள பதிவை வாசியுங்கள்.

மலரின் நினைவுகள் எனும் வலைப்பூ கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு மிகச் சில பதிவுகளே எழுதப்பட்டு உள்ளது. அதில் பாம்பின் கால் என்ற பதிவில் அவரது அலுவலகத்தில் நுழைந்த பாம்பை பிடிக்க அவர் எடுத்த முயற்சி பற்றி சுவாரஸ்யமாக எழுதியுள்ளார். என்ன சுவாரஸ்யம் என்பதை பதிவில் வாசியுங்கள்.

பூரியம் என்னும் வலைப்பூ கடந்த ஆண்டு ஆரம்பிக்கபட்டு மிகச் சில பதிவுகள் எழுதப்பட்டு உள்ளது. அந்த வலைப்பூவில் ராமாயணத்தில் உள்ள ராமர் பற்றிய ஓர் அலசல் தொடராக எழுதப்பட்டு வருகிறது. ராமன் இறுதிக் கட்டத்தில் இறப்பதைப் பற்றி ராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற தலைப்பில் எழுதப்பட்டு வரும் இந்த தொடர் நேரமிருப்பின் வாசித்துப் பாருங்கள். இதுவரை ஐந்து பாகங்கள் எழுதப்பட்டு உள்ளது.

அவை நாயகன் என்னும் வலைப்பூ ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் ஆனாலும் மிகச் சில பதிவுகளே எழுதப்பட்டு உள்ளது. இந்த வலைப்பூவில் பெரும்பாலும் சாலை விதிகள் கடைபிடித்தல், சாலை பாதுகாப்பு பற்றியே பதிவுகள் எழுதப்பட்டுள்ளது. சாலை பாதுகாப்பு வாரம் பற்றி இவரது பதிவை வாசியுங்கள். சாலை விதிகளை கடைபிடியுங்கள். உங்கள் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்.

நீர், நிலம், மனிதன் என்னும் வலைப்பூ கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு மிகச் சில பதிவுகளே எழுதப்பட்டு உள்ளது. இந்த வலைப்பூவில் பெரும்பாலும் விவசாயங்கள் பற்றியும், இயற்கை வளங்கள் பற்றியும் எழுதப்பட்டு உள்ளது. பயிர்கள் நோயின்றி வளர உதவி புரியும் அமிர்த கரைசல் எவ்வாறு தயாரிப்பது என பகிர்ந்து உள்ளார்கள். நீங்களும் அமிர்த கரைசலை பயன்படுத்தி உங்கள் வீட்டுச் செடிகளை நோய் தாக்காமல் காப்பாற்றுங்கள்.

வத்திக்குச்சி என்னும் வலைப்பூ கடந்த ஆண்டு ஆரம்பித்து கதைகள், சினிமா பற்றிய பதிவுகள் எழுதப்பட்டு வருகிறது. இதில் சுமதி டீச்சரின் மாணவர்கள் என்ற சிறுகதை பதிவு பள்ளியில் ஆண், பெண் ஆசிரியர்கள் கிசுகிசு தொடர்பும், அதனால் மாணவர்கள் செய்த குறும்பு பற்றியும் எழுதப்பட்டு உள்ளது. 

கனவும் கமலாவும் என்னும் வலைப்பூ ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் ஆனாலும் இதுவரை 25 பதிவுகள் மட்டுமே எழுதப்பட்டு உள்ளது. இதில் சமீபத்தில் முருகனுக்கோர் ஓர் முகில் என்ற தலைப்பில் எழுதப்பட்ட பதிவில் முருகக் கடவுளைப் பற்றி அழகாக கவிதை வடிவில் எழுதியுள்ளார். வரிகள் வாசிக்க மிக அருமையாக உள்ளது. இன்னும் நிறைய பதிவுகள் எழுத வேண்டும் என இந்தப் பதிவரிடம் கேட்டுக் கொள்கிறேன்.

நண்பர்களே, இன்றைய வலைப்பதிவு அறிமுகங்களை விரும்பி வாசித்திருப்பீர்கள் என நம்புகிறேன். நாளை மற்றுமொரு பதிவுகள் அறிமுகத்தில் உங்களை சந்திக்கின்றேன்....
மேலும் வாசிக்க...

Tuesday, December 31, 2013

ஆடம்பரம் தேவையா? இசை கசக்குமா? விடை உங்களிடத்தில்!!!

ஹாய் நண்பர்களே,

அனைத்து நண்பர்களுக்கும் வலைச்சரத்தின் சார்பாக "இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்".

இன்றைய அறிமுகங்களைப் பார்ப்போமா....

கணக்காயன் என்ற வலைப்பூவில் 2013-இல் மிக சில பதிவுகளே எழுதியிருந்தாலும் வாசிக்க சிறப்பான கவிதைகள் உள்ளது. அவற்றில் புலவர் பாடும் பொன்மனச் செம்மல் என்ற கவிதையில் எம்ஜிஆர் நடித்த திரைப்படங்களின் பெயர்களைக் கொண்டு கவிதை புனையப்பட்டுள்ளது. நீங்களும் வாசித்துப் பாருங்களேன். 

நான் வாழும் உலகம் என்னும் வலைப்பூ பல்சுவை பதிவுகளால் நிரம்பியுள்ளது. அவற்றில் மிக சமீபத்தில் நான் வாசித்த பதிவு வீண் செலவுகளும் ஆடம்பரமும் என்ற பதிவு. இதில் அலுவலக வீண் செலவுகள் பற்றியும், வெளிநாட்டில் நம்மவர்கள் செய்யும் ஆடம்பரங்கள் பற்றி சுவையாக பதிவிட்டு உள்ளார். நீங்களும் வாசித்துப் பாருங்களேன்.

அன்புடன் ஆனந்தி எனும் வலைப்பூவில் 2013-இல் மிகச் சில பதிவுகளே எழுதியிருந்தாலும் இத்தளம் நான் எழுத வந்த புதிதில் நான் விரும்பி வாசிக்கும் தளம். இத்தளத்தில் எதுவென்றேன் எனும் கவிதை பதிவில் காதலும், காதல் உணர்வுகள் பற்றியும் அருமையாக எழுதியுள்ளார் இப்பதிவர். இன்னும் பல கவிதை தொகுப்புகளும், சில சமையல் குறிப்புகளும் வலைப்பூவில் உள்ளது.

பிரியசகி என்னும் வலைப்பூவில் 2013-இல் மிகச் சில பதிவுகளே எழுதியிருந்தாலும், குளிர்காலத்து நண்பன் எனும் பதிவில் அவர் வாழ்கின்ற குளிர்கால வசிப்பிடம் பற்றியும், குளிர் காலத்தில் என்னென்ன முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பார்கள் என்பது பற்றியும் இப்பதிவில் அழகாக பதிவிட்டுள்ளார். இன்னும் நிறைய பதிவுகள் எழுத வாழ்த்துக்கள்.

அன்பே ஆண்டவன் எனும் வலைப்பூவில் ஆன்மீக சிந்தனை பதிவுகள் அதிகம் எழுதப்பட்டு உள்ளது. அதில் செவிச் செல்வம் உனது புகழ் எனும் பதிவில் இறைவன் அருளைப் பெற என்னவெல்லாம வேண்டப்படுகின்றன என்பதை அழகாக பதிவிட்டுள்ளார். இன்னும் பல இறைவன் பற்றிய பதிவுகள் நிறைய உள்ளது. நேரம் கிடைக்கையில் வாசியுங்கள்.

என்னில் உணர்ந்தவை என்னும் வலைப்பூ கவிதைகளையும், அனுபவங்களையும், சில மொக்கைகைகளையும் தாங்கி எழுதப்படும் வலைப்பூ. இதில் அவரது அம்மா கொடுத்த மாமரம் முதல் மாம்பழத்தை கொடுத்துள்ளது. அந்த மாமரத்தை அவரது அம்மாவாக நினைத்து இது என் அம்மா எனும் தலைப்பில் பதிவாக எழுதியுள்ளார். உணர்சிக்கரமான பதிவு இது.

பழைய பேப்பர் என்னும் வலைப்பூ 2013-இல் ஆரம்பிக்கப்பட்டு பல்சுவை கட்டுரைகள் எழுதப்பட்டு வருகிறது. இதில் சமீபத்தில் புதிய பாரதத்தின் ஆரம்பம் என்ற பதிவில் சமீப அரசியல் நிலை மாற்றங்கள் பற்றி ஆர்வத்துடன் எழுதியுள்ளார். இது இந்த வலைப்பூவின் 25-வது பதிவாகும். இவரைப் போன்ற புதியவர்களை ஊக்குவிப்போம் நண்பர்களே.

மனதின் ஓசை எனும் வலைப்பூ 2013-இல் ஆரம்பிக்கபட்டு ஒவ்வொரு மாதமும் மிகச் சில பதிவுகளே எழுதப்பட்டு இருந்தாலும், இசையும் கசக்குதே என்ற பதிவில் பெண்ணின் கவலை இசையை ரசிக்க மறுக்கிறது என்பது பற்றி அழகாக எடுத்து எழுதியுள்ளார். இப்பதிவில் சிறு கதை ஒன்றையும் பகிர்ந்துள்ளார். நல்ல பதிவு இது.

நண்பர்களே, இன்றைய அறிமுகங்கள் உங்களுக்கு பிடித்திருக்கும் என்றே நினைக்கின்றேன்.  நாளை மற்றுமொரு பல்சுவை அறிமுகங்கள் வாயிலாக உங்களை சந்திக்கின்றேன்.

மேலும் வாசிக்க...

பாடல்களுக்குள் என்ன ஒற்றுமை?

ஹாய் வணக்கம்...

இன்று அறிமுகமாய் சிலரின் பதிவுகளை பார்ப்போமா...

வெண்புரவி என்ற வலைப்பூவில் இந்த வருடம் மிகச் சில பதிவுகளே எழுதியிருந்தாலும் சிறந்த பதிவுகள் உள்ளது. எங்கள் வீட்டில் ஆனந்த பிரவேசம் என அவர்கள் வீட்டுக்கு அருகில் சிட்டுக்குருவி குஞ்சுகள் பிறந்த கூடு பற்றி எழுதியுள்ளார்.

கலையன்பன் என்ற வலைப்பூவில் பாடல் பற்றிய தொடர்புகள் மற்றும் ஒற்றுமை பற்றி பதிவுகள் உள்ளது. மிகச் சில பதிவுகளே இந்த வலைப்பூவில் எழுதப்பட்டிருந்தாலும் பாடல்கள் ஒற்றுமை பற்றி அறிந்து கொள்ளலாம்.

சிவிகை என்ற வலைப்பூவில் பதிவரின் அனுபவங்களே பதிவாக உள்ளது. மிக சில பதிவுகளே இந்த வலைப்பூவில் எழுதப்பட்டு உள்ளது. முக்கியமாக சாலை விதிகள் பற்றிய பதிவு இயல்பாக எழுதப்பட்டு உள்ளது.

இணையக்குயில் என்னும் வலைப்பூவில் கவிதைகளே பெரும்பாலும் பதியப்பட்டு உள்ளது. அவற்றில் நான் நானாகவே என்ற கவி பதிவில் நமது எண்ணங்களில் பிறர் திணிக்க கூடாது என்பதை அழகாக பதிந்துள்ளார் பதிவர்.

தென்காசித் தமிழ்ப்பைங்கிளி எனும் வலைப்பூவில் இந்த வருடம் மிகச் சில பதிவுகளே எழுதப்பட்டு உள்ளது. அவற்றுள் அப்பா எனும் கவிதையில் மகள் அப்பாவின் செயல்களை வியந்தும், அறியாமல் செய்த குரும்புக்களுமாய் வரிகள் படைக்கப்பட்டுள்ளது

நதியில் விழுந்த இலை என்னும் வலைப்பூவில் கவிதை, கட்டுரை பதிவுகளாக எழுதப்பட்டு உள்ளது. அவற்றில் உருவாகும் அடிமைத் தலைமுறை எனும் கவிதை இக்கால தொழில் முறையை பட்டென தெறிக்கும் வரிகளில் சொல்லப்பட்டு உள்ளது. 

ரவி உதயன் என்னும் வலைப்பூவில் பெரும்பாலும் கவிதைகள் பதிவாக வலம் வருகிறது. இந்த வலைப்பூவிலும் இந்த வருடம் மிகச் சில பதிவுகளே எழுதப்பட்டு உள்ளது. அதில் எனக்கான பேருந்துகள் எனும் கவிதையில் காதல் பார்வையால் தவற விட்ட பேருந்து பற்றி அழகாக எடுத்துச் சொல்லப்பட்டு உள்ளது.

படலை எனும் வலைப்பூவில் சிறுகதைகள், கவிதைகள் மற்றும் பல சுவையான பதிவுகள் எழுதப்பட்டு உள்ளது, அதில் சமீபத்தில் மண்டேலா எனும் நெல்சன் மண்டேலா பற்றிய தொகுப்பு அருமையாக எழுதப்பட்டு உள்ளது.

நாளை இன்னும் சில பதிவுகளை தொகுப்பாக பார்க்கலாம்.
மேலும் வாசிக்க...

Monday, December 30, 2013

என்னை அறிந்தால்... நீங்கள் என்னை அறிந்தால்....!!!

வணக்கம் வலைச்சர நண்பர்களே,

     சென்ற வார வலைச்சர ஆசிரியராக இருந்த கோமதி அரசு அவர்களுக்கு வாழ்த்தை சொல்லி எனது வலைச்சர வாரத்தை ஆரம்பிக்கிறேன். நான் வலைச்சர ஆசிரியராக இரண்டு ஆண்டுகளுக்கு முன் இருந்தேன். அதன்பிறகு சீனா ஐயாவிற்கு உதவியாக துணை பொறுப்பாசிரியராக வலைச்சரத்திற்கு பொறுப்பேற்று உள்ளேன். மற்ற பதிவர்கள் ஆசிரியராக வலைச்சரத்தில் எழுதுவதை வாசிக்கும் போது எனக்கும் சில சமயங்களில் வலைச்சர ஆசிரியராக ஒரு வாரத்திற்கு பொறுப்பேற்க வேண்டும் என்ற ஆசை வரும். ஆனால் பதிவர்கள் ஒவ்வொரு வாரமும் தவறாமல் தங்கள் வலைச்சர பணியை செம்மையாக நிறைவேற்றுவார்கள். இன்று முதல் ஆரம்பிக்கிற வாரத்திற்கு பொறுப்பேற்க இருந்த பதிவர் தவிர்க்க இயலாத காரணத்தால் பொறுப்பேற்க இயலாத காரணத்தால், நானே ஆசிரியர் பொறுப்பேற்றுக் கொண்டேன். நிற்க.....

இயற்பெயர் பிரகாஷ் குமார். வலைப்பூ பெயர் தமிழ்வாசி. எனவே பதிவுலகிற்கு தமிழ்வாசி பிரகாஷ் என்ற பெயரை மாற்றிக் கொண்டேன். வாழ்வாதாரத்திற்காக மதுரை வந்த நான், எனது வலையில் மதுரை பற்றிய பல பதிவுகள் எழுதியுள்ளேன். அவற்றுள் முக்கியமாக மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் , பிளக்ஸ் பேனர் எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்படுகிறது , டூவீலர் ஸ்டாண்டு அவலம் , மதுரையின் பசுமை பூங்கா  போன்ற சில பதிவுகளை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

புதிய பதிவர்களுக்கும், வலைப்பூ ஆரம்பிக்க ஆசை இருப்பவர்களுக்கும் உதவியாக வலைப்பூ வழிகாட்டுதல் தொடர் எழுதியுள்ளேன். இத்தொடர் உங்களுக்கு பயனுள்ளவையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பல்சுவை செய்திகளை இரண்டு பேர் உரையாடும் வகையில் தனபாலு... கோபாலு... என்ற தலைப்பிலும், சின்ன பாப்பா... பெரிய பாப்பா என்ற தலைப்பிலும், லென்ஸ் ரவுண்டு என்ற தலைப்பிலும் பதிவிட்டுள்ளேன்.

சமூக சிந்தனை பதிவுகளாக கஞ்சா, சிகரெட், மது பற்றிய கேடுகளும், முகநூல் மற்றும் வலைப்பூவில் தமிழில் எழுத எளிதான மென்பொருள் பற்றியும், தொழில்நுட்ப பதிவுகளும் எழுதியுள்ளேன். தொழிநுட்ப பதிவுகள் பற்றி அறிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

           சரி நண்பர்களே, என்னைப் பற்றியும் எனது வலைதளம் பற்றியும் சில வரிகள் குறிப்பிட்டுள்ளேன். இனி நாளை முதல் பல தலைப்புகளில் பதிவுகளை பார்ப்போமா!!!!!!!!!
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது