07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, December 31, 2013

ஆடம்பரம் தேவையா? இசை கசக்குமா? விடை உங்களிடத்தில்!!!

ஹாய் நண்பர்களே,

அனைத்து நண்பர்களுக்கும் வலைச்சரத்தின் சார்பாக "இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்".

இன்றைய அறிமுகங்களைப் பார்ப்போமா....

கணக்காயன் என்ற வலைப்பூவில் 2013-இல் மிக சில பதிவுகளே எழுதியிருந்தாலும் வாசிக்க சிறப்பான கவிதைகள் உள்ளது. அவற்றில் புலவர் பாடும் பொன்மனச் செம்மல் என்ற கவிதையில் எம்ஜிஆர் நடித்த திரைப்படங்களின் பெயர்களைக் கொண்டு கவிதை புனையப்பட்டுள்ளது. நீங்களும் வாசித்துப் பாருங்களேன். 

நான் வாழும் உலகம் என்னும் வலைப்பூ பல்சுவை பதிவுகளால் நிரம்பியுள்ளது. அவற்றில் மிக சமீபத்தில் நான் வாசித்த பதிவு வீண் செலவுகளும் ஆடம்பரமும் என்ற பதிவு. இதில் அலுவலக வீண் செலவுகள் பற்றியும், வெளிநாட்டில் நம்மவர்கள் செய்யும் ஆடம்பரங்கள் பற்றி சுவையாக பதிவிட்டு உள்ளார். நீங்களும் வாசித்துப் பாருங்களேன்.

அன்புடன் ஆனந்தி எனும் வலைப்பூவில் 2013-இல் மிகச் சில பதிவுகளே எழுதியிருந்தாலும் இத்தளம் நான் எழுத வந்த புதிதில் நான் விரும்பி வாசிக்கும் தளம். இத்தளத்தில் எதுவென்றேன் எனும் கவிதை பதிவில் காதலும், காதல் உணர்வுகள் பற்றியும் அருமையாக எழுதியுள்ளார் இப்பதிவர். இன்னும் பல கவிதை தொகுப்புகளும், சில சமையல் குறிப்புகளும் வலைப்பூவில் உள்ளது.

பிரியசகி என்னும் வலைப்பூவில் 2013-இல் மிகச் சில பதிவுகளே எழுதியிருந்தாலும், குளிர்காலத்து நண்பன் எனும் பதிவில் அவர் வாழ்கின்ற குளிர்கால வசிப்பிடம் பற்றியும், குளிர் காலத்தில் என்னென்ன முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பார்கள் என்பது பற்றியும் இப்பதிவில் அழகாக பதிவிட்டுள்ளார். இன்னும் நிறைய பதிவுகள் எழுத வாழ்த்துக்கள்.

அன்பே ஆண்டவன் எனும் வலைப்பூவில் ஆன்மீக சிந்தனை பதிவுகள் அதிகம் எழுதப்பட்டு உள்ளது. அதில் செவிச் செல்வம் உனது புகழ் எனும் பதிவில் இறைவன் அருளைப் பெற என்னவெல்லாம வேண்டப்படுகின்றன என்பதை அழகாக பதிவிட்டுள்ளார். இன்னும் பல இறைவன் பற்றிய பதிவுகள் நிறைய உள்ளது. நேரம் கிடைக்கையில் வாசியுங்கள்.

என்னில் உணர்ந்தவை என்னும் வலைப்பூ கவிதைகளையும், அனுபவங்களையும், சில மொக்கைகைகளையும் தாங்கி எழுதப்படும் வலைப்பூ. இதில் அவரது அம்மா கொடுத்த மாமரம் முதல் மாம்பழத்தை கொடுத்துள்ளது. அந்த மாமரத்தை அவரது அம்மாவாக நினைத்து இது என் அம்மா எனும் தலைப்பில் பதிவாக எழுதியுள்ளார். உணர்சிக்கரமான பதிவு இது.

பழைய பேப்பர் என்னும் வலைப்பூ 2013-இல் ஆரம்பிக்கப்பட்டு பல்சுவை கட்டுரைகள் எழுதப்பட்டு வருகிறது. இதில் சமீபத்தில் புதிய பாரதத்தின் ஆரம்பம் என்ற பதிவில் சமீப அரசியல் நிலை மாற்றங்கள் பற்றி ஆர்வத்துடன் எழுதியுள்ளார். இது இந்த வலைப்பூவின் 25-வது பதிவாகும். இவரைப் போன்ற புதியவர்களை ஊக்குவிப்போம் நண்பர்களே.

மனதின் ஓசை எனும் வலைப்பூ 2013-இல் ஆரம்பிக்கபட்டு ஒவ்வொரு மாதமும் மிகச் சில பதிவுகளே எழுதப்பட்டு இருந்தாலும், இசையும் கசக்குதே என்ற பதிவில் பெண்ணின் கவலை இசையை ரசிக்க மறுக்கிறது என்பது பற்றி அழகாக எடுத்து எழுதியுள்ளார். இப்பதிவில் சிறு கதை ஒன்றையும் பகிர்ந்துள்ளார். நல்ல பதிவு இது.

நண்பர்களே, இன்றைய அறிமுகங்கள் உங்களுக்கு பிடித்திருக்கும் என்றே நினைக்கின்றேன்.  நாளை மற்றுமொரு பல்சுவை அறிமுகங்கள் வாயிலாக உங்களை சந்திக்கின்றேன்.

21 comments:

 1. சோதனை மறுமொழி

  ReplyDelete
 2. வாழ்க வளமுடன்!..
  வளர்க நலமுடன்!..
  எல்லாம் வல்ல இறைவனை வேண்டி
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!..

  ReplyDelete
 3. ஹஹா நியூ இயர்ல இன்ட்ரோ பண்ணினதுக்கு தேங்க்ஸ் அண்ணா.... எல்லாருக்கும் வாழ்த்துகள்

  ஹாப்பி நியூ இயர்

  ReplyDelete
 4. அனைத்தும் தொடரும் நல்ல தளங்கள்...

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 5. வலைச்சரத்தை தொடரும் அனைவருக்கும் 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 6. அருமையான அறிமுகங்கள்.

  அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  ReplyDelete
 7. பல்சுவைப் பதிவுகளின் அறிமுகங்கள். நல்ல தொகுப்பு.

  ReplyDelete
 8. நல்ல தளங்கள்.
  அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.!

  ReplyDelete
 9. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் .இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகலருக்கும்.

  ReplyDelete
 10. நல்ல தளங்கள், இன்று இடம் பெற்ற அனைத்து அன்பர்களுக்கும், வாழ்த்துக்கள்.
  உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
  அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete

 11. வணக்கம்!

  புத்தாண்டு வாழ்த்துக்கள்

  பல்லாண்டு வாழ்க! படா்கின்ற புத்தாண்டை
  நல்லாண்டு வாழ்க நலஞ்சூடி! - வல்லதமிழ்ச்
  சொல்லாண்டு வாழ்க! சொந்தமென நம்மினத்தின்
  தொல்லாண்டு வாழ்க சுடா்ந்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  01.01.2014

  ReplyDelete
 12. நன்றி தமிழ்வாசி பிரகாஷ்!!!!
  அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
 13. நல்ல அறிமுகங்கள்....

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 14. என் தளத்தையும் அறிமுகப்படுத்தி ஊக்கப்படுத்தியமைக்கு நன்றிகள் பல கோடி

  ReplyDelete
 15. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
  என் வலைப்பக்கத்தையும் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றிகள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
  இத்தகவலை அறியத்தந்த சகோ.திரு.தனபாலன் அவர்கட்கும்,கோபு அண்ணாவுக்கும் மிக்க நன்றிகள்.

  ReplyDelete
 16. பல்சுவைப் பதிவர்கள் அறிமுகம் . அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 17. வலைச்சரத்தை தொடரும் அனைவருக்கும் 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 18. அருமையான பகிர்வுகள்.ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். சில பதிவர்களை முன்பே அறிந்திருக்கிறேன்.நேரம் கிடைக்கும் பொழுது பதிவுகளை சென்று பார்க்கிறேன்.

  ReplyDelete
 19. எனது பதிவையும் இங்கே பகிர்ந்தமைக்கு நன்றிகள்... அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள். நன்றி.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது