07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, December 8, 2013

விடைபெறும் நேரம் இது!

றவினர் வீட்டுத் திருமணத்துககோ அல்லது நண்பர்கள் வீட்டுத் திருமணத்துக்கோ ரெண்டு நாள் முன்னதாகவே போய் நல்லா லூடடி அடிச்சுட்டு கல்யாணம் முடிஞ்சு கிளம்பறப்போ என்ன மனநிலை இருக்குமோ அந்த மனநிலையில இருக்கேன் இப்ப நான். கடந்த ஆறு நாட்களாக உங்க எல்லாரோடயும் சேர்ந்து அரட்டை அடிச்சுட்டு இப்ப விடைபெறும் பகிர்வைத் தர வேண்டியிருக்கேன்னு கொஞ்சம் வருத்தமா இருந்தாலும், நிறைய புது நண்பர்கள் கிடைச்சிருக்காங்கன்றதுலயும் ஓரளவுக்கு நிறைவாவே எனக்குத் தரப்பட்ட பணியைச் செஞ்சிருக்கேன்ற சந்தோஷமும் நிறையவே இருக்கு.

‘நாலு பேர் கிட்ட கேட்டுச் செய்யணும்' ‘நாலு பேர் நாலு விதமா சொல்லுவாங்க' --இப்படியெல்லாம் நான்கு என்ற எண்ணுக்கு முக்கியத்துவம் தந்து பேசுவது சமூகத்தில் வழக்கம். முத்தாய்ப்பான இந்த தினத்தன்று நானும் நாலு பகிர்வுகளை உங்கள் முன்னால சமர்ப்பித்து மகிழ விரும்புகிறேன். முதலாவது பகிர்வு.... அண்ணன் பாலஹனுமான் வழங்கும் பக்கங்கள். இவரது தளத்துக்கு போனா ரசனைக்கு உத்தரவாதமான கட்டுரைகளும், ஆன்மீகமும், சுஜாதாவும் உங்களை மகிழ்விப்பாங்க. ஒரு சாம்பிளாக இசை பற்றிப் பேசும் இந்தப் படைப்பு.

‘திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்'ன்னு ஒரு வாக்கியம் கேள்விப்பட்டிருப்பீங்க. திருமந்திரத்தை மதுரை சொக்கன் சொல்லிப் படிச்சதுண்டா நீங்க? மிகச் சிக்கலான விஷயத்தைக் கூட மிக எளிமையா சொக்கன் நமக்குச் சொல்ற அழகே தனி. இங்க போய்ப் படிச்சுப் பாருங்க...

திருமந்திரம் படிச்சாப் போதுமா? ஆழ்வார் பாசுரங்கள் படித்து ரசிக்க வேண்டாமா? அழகுத் தமிழுக்கு வைணவம் அளித்த பொக்கிஷங்களாயிற்றே அவை. பாசுரங்களைப் பொருள் விளக்கத்துடன் படித்து ரசிக்க ஷைலஜா அக்காவின் இந்தத் தளத்திற்கும் ஒரு விசிட் அடியுங்களேன்...!

நண்பர்கள் சேர்நதா அரட்டை, உறவினர்கள் சேர்ந்தா அரட்டைன்னு நமக்கு சலிக்காம மத்தவங்களோட ஜாலியாப் பேசி அரட்டையடிக்கறதுன்னா ரொம்பப் பிடிக்கும். இவங்க தளத்தோட பேரே அதுதான். கைல ஸ்கேல் வெச்சுக்காத வாத்தியாரம்மா...! சீரியஸா கொஞ்சம் எழுதற இவங்க நிறைய ‘சிரி’யஸ்ஸாவும் எழுதுவாங்க. ஆனா எது எழுதினாலும் சுவாரஸ்யமா எழுதறாங்கங்கறதால இந்த தளத்துக்கு உள்ளயும் ஒரு உலாப் போங்க!

பல்வேறு திரட்டிகள்ல மேயும் போது கண்ணில் படும் பல புதிய தளங்களைப் படிச்சு கருத்திட்டுட்டு வந்துடுவேன். அதுக்கப்புறம் தொடர்ந்து ஃபாலோ பண்றேனான்னு கேட்டா... அதான் இல்லை! திரும்ப என்னிக்காவது நினைவு வரும்போது மறுபடி புதுசா என்ன எழுதியிருக்காங்கன்னு படிச்சுப் பாத்து கருத்திடறது வழக்கம். இந்த வலைச்சர வாரத்துக்காக நான் படிச்ச, ரசிச்சுக் கருத்திட்டவங்களை நினைவுக்குக் கொண்டு வந்து அந்தத் தளங்களோட யூஆர்எல்லை மீட்டெடுக்கறதுக்குள்ள பெரும்பாடாப் போச்சு. திரும்ப ஒரு முறை எல்லாரோட லேட்டஸ்ட் பதிவையும் படிக்கணும். இப்ப என்ன சொல்ல வர்றேன்னு கேக்கறது புரியுது. விஷயம் இதான். நான் ரெகுலரா விசிட் அடிக்கிற...

சென்னைப்பித்தன், அப்பாதுரை, ரமணி,
வேலன், வெங்கட்நாகராஜ், மதுரைத்தமிழன்,
ரிஷபன், ஜி.எம்.பாலசுப்ரமணியன், எங்கள்ப்ளாக்,
கீதமஞ்சரி, ராஜி, கடுகு, கோவை.மு.சரளா,
ஸாதிகா, ஷைலஜா, ரஞ்சனிநாராயணன்,
ராமலக்ஷ்மி, அமைதிச்சாரல், ப்ரியா
ஆதிவெங்கட், உஷா அன்பரசு


&இப்படி நிறையப் பேரைப் பத்தி இந்த வாரத்துல நான் குறிப்பிடாம விட்டிருக்கேன். நான் சொல்லி நீங்க தெரிஞ்சுக்க வேண்டியவங்களா இவங்கல்லாம்? ஏற்கனவே என்னைவிடப் பிரபலமானவங்களாச்சுதே! அதனால இப்பவும் இவங்களைப் பத்தி நான் குறிப்பிடப் போறதில்லப்பா...! 

சரி... இப்ப நன்றி நவிலும் நேரம்...! இந்த ஒரு வாரத்துல நான் பாட்டுக்கு ஏதோ மனசுக்கு வந்தபடி எழுதிட்டு இருந்தாலும் என் நெருங்கிய நட்புகள் அனைவரும் தொலைபேசி மூலம் என்னை வழிப்படுத்தினாங்க. அவங்க எல்லாருக்கும் என் நன்றி! அதிலயும் குறிப்பா... சத்யா நம்மாழ்வார் என்கிற நண்பர் நான் அறிமுகப்படுத்திய லிங்க்குகளை தனி இணைப்பா எனக்கு மெயில் அனுப்பியிருந்தார். அது எனக்கு மிக உபயோகமா இருந்துச்சு. அவருக்கு ஒரு ஸ்பெஷல் தாங்ஸ்1

இந்தியாவுக்கு சீனாவோட ஆதரவு தேவைப்படாம போகலாம்... அது (எனக்குத் தெரியாத) அரசியல்! ஆனா நம்மைப் போன்ற பதிவர்களுக்கு சீனா(ஐயா)வோட ஆதரவு மிக அவசியம் தேவை. என்மீது நம்பிக்கை வைத்து வலைச்சரத்தில் செயல்பட அழைத்த அவருக்கு மனதின் ஆழத்திலிருந்து மகிழ்வான என் நன்றியைச் சொல்லிக்கறேன். அப்புறம்... என் ஆரம்ப காலத்திலிருந்து என்னை ஊக்குவிக்கும், நான் விரும்பும் போதெல்லாம் அழகழகான சட்டைகளை சலிக்காமல் என் தளத்துக்கு மாற்றித்தரும், என் பிரதர் போன்ற தமிழ்வாசி பிரகாஷ் பற்றிக் குறிப்பிடலைன்னா நன்றி மறந்தவனாயிடுவேன்! டாங்ஸ்ப்பா!

அதுக்கப்புறம்... கருத்துக்களை அள்ளி வழங்கி என்னை நெறிப்படுத்திட்டு இருக்கற நீங்க...! (எல்லாரோட பேரையும் குறிப்பிடத்தான் ஆசை. ஆனா வலைச்சரம் பத்தாது அதுக்கு) ஒவ்வொரு முறை கருத்துப்பெட்டியில வர்ற விமர்சனங்களைப் படிச்சு பாராட்டுக்கு நன்றி சொல்லும் போதும், சில கேள்விகள்/விமர்சனங்களுக்கு பதில் சொல்லும் போதும் மனசு உற்சாகமாயிடுது. என்னை ஒரு பூஜ்யமாகக் கருதுபவன் நான். என் மதிப்பைக் கூட்டறது எனக்கு முன்னால எண்களாய் வந்து சேர்ந்துக்கற நீங்கல்லாம்தான். உங்கள் ஒவ்வொருவருக்கும்... மனநெகிழ்வுடன் என் நன்றி!56 comments:

 1. நன்றி! மீண்டும் வருக!

  ReplyDelete
  Replies
  1. உற்சாகம் தந்த உங்களுக்கு உளம் கனிந்த நன்றி!

   Delete
 2. வணக்கம்

  வலைச்சர அறிமுகங்கள் அனைத்தும் அருமை ஒரு வார காலமும் சிறப்பாக பணியை செய்து.. முடித்த உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்..ஐயா தொடருகிறேன் பதிவுகளை

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துச் சொன்ன ரூபனுக்கு மகிழ்வுடன் என் நன்றி!

   Delete
 3. ஒரு வாரம் வலைசரத்தில மின்னலடிச்சது. பளிச் பளிச்

  ReplyDelete
  Replies
  1. முரளி அவர்களை வழி மொழிகிறேன்!!!

   Delete
  2. பாராட்டிய முரளிக்கும், வழிமொழிந்த வவ்வாலுக்கும் மகிழ்வுடன் என் நன்றி!

   Delete
 4. அசத்தலான வாரமாக இருந்தது கணேஷ்.....

  இந்தச் சிறியோனையும் இங்கே குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி. நான் அப்படி ஒன்றும் பிரபல பதிவர் அல்ல கணேஷ்.... ஏதோ கிறுக்கிட்டு இருக்கேன்! அவ்வளவு தான்.

  ReplyDelete
  Replies
  1. இதே வார்த்தைகளைத்தான் நானும் சொல்லிட்டிருக்கேன். ஹி... ஹி...! மிக்க நன்றி!

   Delete
 5. சூப்பரா முடிச்சிட்டீங்க சார்.. பிரமாதம்..

  ReplyDelete
 6. நிறைவாக நிறைவு செய்திருக்கின்றீர்கள்..
  வாழ்க வளமுடன்!..

  ReplyDelete
  Replies
  1. நிறைவு என்று சொல்லி மகிழ்வுதந்த உங்களுக்கு மனம் நிறைய நன்றி!

   Delete
 7. மகிழ்வுடன் நன்றி ...இது உங்க கை இல்லையே

  ReplyDelete
  Replies
  1. என் கையப் போட்டா எல்லாரும் பயந்துடுவாங்க நண்பா... ஹி... ஹி...!

   Delete
 8. நன்றி பாலகனேஷ் சார் என்னை அறிமுகப்படுத்தியதற்கு.

  ReplyDelete
  Replies
  1. மகிழ்வு என்னுடையது! மிக்க நன்றி!

   Delete
 9. நன்றிகள் பால கணேஷ் சார்...

  ReplyDelete
  Replies
  1. மகிழ்வு என்னுடையது! மிக்க நன்றி!

   Delete

 10. வலைச்சர பொறுப்பாசிரியர் பணியை சிறப்பாக முடித்திட்ட பாலகணேஷ் அவர்களுக்கு வாழ்த்துகள். அறிமுகப் பதிவர்களுக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துச் சொன்ன உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி!

   Delete
 11. ஏழு நாட்களும் சுவாரஸ்யமாக அறிமுகம் செய்தமைக்குப் பாராட்டுக்கள் வாத்தியாரே... நன்றி..

  ReplyDelete
  Replies
  1. தொடர் ஆதரவுக்கு மகிழ்வுடன் என நன்றி!

   Delete
 12. சிறப்பாக ஆசிரியர் பணியை முடித்தமைக்கு வாழ்த்துக்கள்...

  இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துச் சொன்ன உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!

   Delete
 13. வெகு சிறப்பாக நடந்து முடிந்த ஆசிரியர் வாரத்துக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும்
  வாழ்த்துக்களும் பால கணேஷ் ஐயா .இனித் தொடரவிருக்கும் புதிய ஆசிரியருக்கும்
  என் இனிய வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .

  ReplyDelete
  Replies
  1. வலைச்சர வாரத்தில் தாங்கள் காட்டிய ஆதரவு மறக்கவியலாதது சகோதரி. உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

   Delete
 14. தம்பி பால கணேஷுக்கு அண்ணன் பால ஹனுமானின் பணிவான வணக்கம். உங்கள் அறிமுகத்திற்கு மனமார்ந்த நன்றி...

  ReplyDelete
  Replies
  1. அறிமுகம் இல்லைண்ணா! உங்கள் தளம் பற்றிப் பேசும் நல்வாய்ப்புக் கிட்டியது. அவ்வளவே... மிக்க நன்றி!

   Delete
 15. அமிச்சர் பால கணேசு ரெம்ப சோக்கா தொயிதிக்கி சேவை செஞ்சிகினார்பா... அல்லார் சார்பா அவுரு காண்டி டேங்க்ஸ் சொல்லிகிரான்பா முட்டா நைனா...

  அப்பாலிக்கா லேட்டஸ்ட்டா இன்றடூசு ஆய்க்கின அல்லாருக்கும் வாய்த்துக்கள்பா...

  ReplyDelete
  Replies
  1. அமிச்சருக்கு கன்டினியூஸா ஆதரவு தந்ததுக்கு டாங்ஸு நைனா!

   Delete
 16. மிக அருமையாக பதிவர்களை அறிமுகப்படுத்தி மின்னல் கணேஷ் வந்தா இப்படித்தான் இருக்கும் என்று ஒரு முத்திரை பதித்த வாரம் இது!
  ஆவலுடன் இன்று என்ன செய்தி, எப்படிச் சொல்கிறார் மின்னல் என்று ஓடோடிவந்து படித்து ரசிக்க வைத்தமை உங்கள் தனித்திறமையே. உங்கள் உள்ளம் போல எழுத்துக்களும் அத்தனை நகைச்சுவை!...

  இனிமையாக இவ்வாரமிதை நகர்த்தி முடித்து விடைபெறும் உங்களுக்கு சிறப்பு நல் வாழ்த்துக்கள் சகோ!

  அறிமுகப் பதிவர்களுக்கும் இனிய நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. இந்த ஒரு வாரமும் நற்கருத்திட்டு எனக்கு உற்சாகம் தந்த உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி சிஸ்!

   Delete
 17. ஒரு வாரம் ஓடிருச்சா?

  சீனா.. ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. இதே ஃபீல்தான் எனக்கும் அப்பா ஸார்! நீங்கள் ரசித்ததற்கு மகிழ்வுடன் என் நன்றி!

   Delete
 18. அற்புதமான வாரமாக
  இந்த வலைச்சர வாரத்தைக் கொடுத்து
  மகிழ்வித்த உங்களுக்கு எங்கள்
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. அற்புதமான வாரம் எனச் சொல்லித் தெம்பூட்டிய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

   Delete
 19. அன்பின் பாலகணேஷர்,

  வலைச்சரத்தொகுப்பினை சிறப்பாக வழிநடத்தி சென்றளித்தீர்கள்!

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தொடர்ந்து எனக்கு ஊக்கம் தந்த உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி நண்பரே!

   Delete
 20. வலைச்சர வாரத்தை தங்களின் எழுத்தால் சிறப்பித்த பாலகணேஷ் சார் அவர்களுக்கு பாராட்டுக்கள்

  ReplyDelete
  Replies
  1. பாராட்டிய உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி!

   Delete
 21. ஒருவாரம் ஓடியதே தெரியவில்லை மின்னல்வரிகள் போல சிறப்பாக பணி ஆற்றிய அண்ணாச்சிக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. என்னை ரசித்து ஆதரவு தந்த நேசனுக்கு என் மகிழ்வான நன்றி!

   Delete
 22. பாலா சாரின் நன்றி நவிலலை மின்னல் தொலைக்காட்சியில் பார்த்து ரசிக்கலாம்னு வந்தேன்...மின் வெட்டோ?...ஆனாலும் ரசனைக்குரிய பதிவர்கள் அதை நிறைவு செஞ்சிட்டாங்க.... வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மின்னல் டிவியை மின்னல் வரிகள் தளத்துக்கு இடம் மாத்திரலாங்க. தொடர்ந்து இந்த வாரம் முழுவதும் என்னை உற்சாகப்படுத்திய உங்களுக்கு என் உளம்கனிந்த ந்னறி!

   Delete
 23. சிறந்த அறிமுகங்களை எங்கள் பார்வைக்கு வைத்து
  சிறப்புற பணியாற்றி வலைச்சர ஆசிரியர் பணியை
  திறம்பட செயலாற்றி முடித்திருக்கிறீர்கள் நண்பரே.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி மகேன்!

   Delete
 24. இந்த முழு ஒரு வாரமும் பல ஸ்டைல்-களில் பதிவர் அறிமுகங்களை சுவையாகவே அளித்து விடைபெறும்
  அன்பு அண்ணன் பாலகணேஷ் சாருக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
  Replies
  1. பல ஸ்டைல்களையும் ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி!

   Delete
 25. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

   Delete
 26. என் பதிவை அறிமுகம் செய்தமைக்கு நன்றி பாலகணேஷ் அவர்களே!

  ReplyDelete
  Replies
  1. எனக்குத்தான் அதில் மகிழ்வும் பெருமையும் நண்பரே!

   Delete
 27. இந்த ஒரு வாரமும் ரொம்ப பொறுப்பா அழகா உங்க தனி பாணியில் நடத்தி முடிச்சிட்டிங்க ...!
  வலைச்சரத்திலிருந்துதான் விடை பெறுகிறீங்க... எங்க மனசுல இருந்து இல்ல... உங்கள் எழுத்துக்கள் எப்பவுமே எல்லோர் மனசுலயும் பளிச்சிட்டுக்கொண்டேதான் இருக்கும்...! நேற்று முழுதும் வெளியில் இருந்ததால் தாமதமாக வந்திருக்கிறேன்.. மிக்க நன்றி!

  ReplyDelete
 28. சிறப்பான வாரமாக இருந்தது...மிக்க மகிழ்ச்சி சார்..

  என்னையும் குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி..

  ReplyDelete
 29. என் பதிவை அறிமுகம் செய்தமைக்கு நன்றி கணேஷ்! ..kalyanam endru uururraaka sutruvathaal thaamathamaa paarththeen DD inform seythirunthaar en blogla.thanks to him!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது