07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, December 8, 2013

சித்ரா சுந்தர் - மின்னல் வரிகள் பால கணேஷிடம் இருந்து ஆசிரியப் பொறுப்பினை ஏற்கிறார்.

அன்பின் சக பதிவர்களே ! 

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற - மின்னல் வரிகள் பால கணேஷ் - தான் ஏற்ற பொறுப்பினை சரி வர, மிகுந்த  ஆர்வத்துடனும்,  பொறுப்புணர்வுடனும்,  ஈடுபாட்டுடனும் நிறைவேற்றி நம்மிடமிருந்து முழு மன நிறைவுடன் விடை பெறுகிறார். 

இவர் எழுதிய பதிவுகள்                         : 007
அறிமுகப் படுத்திய பதிவர்கள்            : 073
அறிமுகப் படுத்திய பதிவுகள்              : 91
பெற்ற மறுமொழிகள்                            :423
வருகை தந்தவர்கள்                              : 2103
அருமை நண்பர் மின்னல் வரிகள் பால கணேஷ் நல்ல பதிவர்களைத் தேடிப் பிடித்து - அவர்களீன் நல்ல பதிவுகளை அறிமுகப் படுத்தி உள்ளார். 
பதிவுகளை அறிமுகப் படுத்தும் போது அப்பதிவுகள் பற்றிய கருத்துகளையும் கூறி இருக்கலாம். பதிவர் பெயரும் பதிவின் பெயரும் சுட்டிகளும் மட்டும் கொடுத்து அறிமுகப் படுத்தி இருக்கிறார். பல ஆசிரியர்கள் இவ்வாறே செய்கிறார்கள்.
இனி வரும் ஆசிரியர்களை வலைச்சர விதி முறைகளை நன்கு படித்து அதன்படி நடக்கக்   கேட்டுக் கொள்கிறோம். 

இவரது பதிவுகளீல் நான்கு பதிவுகள் தமிழ் மணத்தில் ஏழும் அதற்கு மேலும் வாக்குகள் பெற்றிருக்கின்றன. 
மின்னல் வரிகள் பால கணேஷினை அவரது   கடும் உழைப்பினைப் பாராட்டி, வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். 
நாளை பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார் சித்ரா சுந்தர்.  
இவரது சொந்த ஊர் பண்ருட்டிக்குப் பக்கத்தில் உள்ள அழகான ஒரு கிராமம்.

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் அன்பான கணவருடனும், கல்லூரியில் அடியெடுத்து வைத்திருக்கும் அருமை மகளுடனும் இனிமையான வாழ்வை ரசித்துக்கொண்டிருக்கும் இல்லத்தரசி.

ஆகஸ்ட், 2010 லிருந்து வலைப்ப‌திவராக இருக்கிறார், சமையலுக்காக‌ http://chitrasundar5.wordpress.com/ என்ற‌ வலைப்பதிவிலும், பொழுது போக்காக‌

 http://chitrasundars.blogspot.in என்ற‌ வலைப்பதிவிலும் எழுதுகிறார்,

இவ்வலையுலகத்தின் மூலம் உங்களையெல்லாம் தெரிந்துகொண்டது அவரது  மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது எனப் பெருமையுடன் கூறுகிறார், 
சித்ரா சுந்தரை வருக வருக ! என்று வரவேற்று வாழ்த்தி ஆசிரியப் பொறுப்பில் அமர்த்துவதில் மிகுந்த மகிழ்ச்சியுடன் கூடிய பெருமை அடைகிறோம். 


நல்வாழ்த்துகள் மின்னல் வரிகள் பால கணேஷ்

நல்வாழ்த்துகள் சித்ரா சுந்தர் 

நட்புடன் சீனா 

33 comments:

 1. சோதனை மறுமொழி

  ReplyDelete
 2. வணக்கம்

  சிறப்பாக பணியை முடித்த மின்னல் வரி அவர்களுக்கு நன்றி இந்த வாரம் வலைச்சரப்பொறுப்பாக வந்திருக்கும் ஆசிரியை சித்ரா சுந்தர் அவர்களை அன்புடன் வரவேற்கிறேன்.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வரவேற்புக்கு நன்றிங்க‌ ரூபன் .

   Delete
 3. செம்மையாக பணி முடித்த மின்னல் வரி பாலகணேஷ் அவர்களுக்கு மிக்க நன்றி!.. இந்த வாரம் வலைச்சரப் பொறுப்பினை ஏற்கும் சித்ரா சுந்தர் அவர்களுக்கு நல்வரவு!..

  ReplyDelete
  Replies
  1. நல்வரவை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டேன், நன்றிங்க.

   Delete
 4. மின்னல் வரிகளுக்கு சொந்தக்காரரான பால் கணேஷ் சாருக்கு பாராட்டும், நன்றியும்,
  கூறிக் கொண்டு திருமதி சித்ராசுந்தரை வரவேற்கிறேன்.
  பாராட்டுக்கள் கணேஷ் சார்!
  வாழ்த்துக்கள் சித்ரா!

  ReplyDelete
  Replies
  1. வரவேற்புக்கும், வாழ்த்திற்கும் நன்றிங்க.

   Delete
 5. ஒரு மின்னல் முடிந்து மற்றொரு...

  சிறப்பான மின்னலா... அன்புடன் வரவேற்கிறேன் சித்ரா சுந்தரை அவர்களை... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வரவேற்புக்கும், வாழ்த்துக்கும் நன்றிங்க தனபாலன்.

   Delete
 6. /// நான்கு பதிவுகள் தமிழ் மணத்தில் ஏழும் அதற்கு மேலும் வாக்குகள் பெற்றிருக்கின்றன... ///

  நல்லது... இது தான் பெரிய விசயம்...! இங்கு யாரும் தமிழ்மணத்தில் இணைப்பதில்லை... ஓட்டும் அளிப்பதில்லை... ஏன் சீனா ஐயா அவர்களே...?

  ReplyDelete
 7. அன்பின் தன பாலன் = தமிழ் மணத்தில் இணைக்க வேண்டும் என்று விதி முறைகளில் விளக்கமாகக் கூறி இருந்தாலும் - சில ஆசிரியர்கள் இணப்பதில்லை. என்ன செய்வது ? - வலைச்சரக் குழுவினரும் தவறுகளைக் கண்டு திருத்துவதுமில்லை - இனிமேல் கவனத்துடன் செயல் படுவோம். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 8. சித்ரா அக்கள் வருக வருக சிறப்பாக பணியாற்ற அன்பான வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. அன்பான வாழ்த்துகளுக்கு நன்றிங்க தனிமரம்.

   Delete
 9. பாராட்டுகள் கணேஷ்....

  வாழ்த்துகள் சித்ரா சுந்தர். பன்ரூட்டி பக்கத்திலா? அட எங்கள் ஊரான நெய்வெலிக்கு அருகிலா உங்கள் ஊர்!

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகளுக்கு நன்றிங்க. உங்க ஊர் நெய்வேலியா ? தலைநகரம்னுல்ல நெனச்சிட்டேன். பண்ருட்டி டூ விழுப்புரம் சாலையில் உள்ளது. நாளைய பதிவைப் படிச்சுட்டு எங்கே கண்டுபிடிங்க பார்க்கலாம் !!

   Delete
 10. இந்த முழு ஒரு வாரமும் பல ஸ்டைல்-களில் பதிவர் அறிமுகங்களை சுவையாகவே அளித்து விடைபெறும்
  அன்பு அண்ணன் பாலகணேஷ் சாருக்கு பாராட்டுக்கள்!

  சித்ரா சுந்தர் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம்!!

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துடன் கூடிய வரவேற்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டேன், நன்றிங்க.

   Delete
 11. வாழ்த்துக்கள் அண்ணா...
  இந்த வாரத்தை கலக்கல் வாரமாக ஆக்க இருக்கும் சித்ரா சுந்தர் அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகளுக்கு நன்றிங்க சே.குமார்.

   Delete
 12. விடைப்பெறும் பால கணேஷருக்கு பாராட்டுக்கள் & வரவிருக்கும் புதிய வலைச்சர ஆசிரியர் சித்ரா சுந்தர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகளுக்கு நன்றிங்க வவ்வால் .

   Delete
 13. எக்ஸ் மினிஸ்ட்ரு பால் கனேசு ரெம்ப சோக்கா பண்ணுச்சு...! ரெம்ப டேங்ஸ்பா...!

  அப்பாலிக்கா ஆரு...? அடடே...! லேடி அமிச்சர் வருது...? வாய்த்துக்கள்....!

  ReplyDelete
  Replies
  1. வாய்த்துகளுக்கு டாங்ஸ்ங்கோ ! இத்த எய்த எம்மாம்பாடூ !

   Delete
 14. நல்வாழ்த்துகள் மின்னல் வரிகள் பால கணேஷ்

  நல்வாழ்த்துகள் சித்ரா சுந்தர்

  ReplyDelete
  Replies
  1. ந‌ல்வாழ்த்துகளுக்கு நன்றிங்க ராஜேஸ்வரி.

   Delete
 15. Replies
  1. வாழ்த்துகளுக்கு நன்றிங்க சீனி.

   Delete
 16. வாழ்த்துக்கள் சித்ரா சுந்தர் அவர்களே... கலக்குங்க...

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகளுக்கு நன்றி சத்யா நம்மாழ்வார் . ஆனால் கலக்குவேனா தெரியல.

   Delete
 17. திரு பாலகணேஷ் மூலம் பல புதிய தளங்களையும், நல்ல எழுத்துக்களையும் படிக்க கிடைத்தது மிகவும் சந்தோஷமான விஷயம். நன்றி கணேஷ்!

  அட! நம்ம தோழி! வாங்க சித்ரா! நல்வரவு! அசத்துங்கள்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. ரஞ்ஜனி ,

   வாங்க வாங்க ! வரவேற்புக்கும், வாழ்த்துக்கும் நன்றிங்க.

   Delete
 18. சித்ரா சுந்தர்,வாழ்த்துக்கள்.தொடர்ந்து அசத்துங்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஆஸியா ஓமர்,

   உற்சாகமான வாழ்த்துக்கு நன்றிங்க.

   Delete

தமிழ் மணத்தில் - தற்பொழுது