07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, December 25, 2013

இசை விருந்து

டிசம்பர் என்றாலே இசை விழா நம்  நினைவுக்கு வரும். சங்கீத சபாக்களில் எல்லாம் இசைக் கச்சேரிகள் நடைபெறும். இறைவனுக்கு இசையால் பாமாலைகள் சார்த்தி ஆராதனை செய்வார்கள், பாடகர்கள்.  பாட்டு ஞானம் உள்ளவர்கள் , இல்லாதவர்கள் எல்லோரும் கர்நாடக கச்சேரி கேட்டு மகிழ்வார்கள்.

இசை, மனதுக்கு மகிழ்ச்சி, புத்துணர்வு தரும் ; நோய்களைத் தீர்க்கும் கற்பக விருட்சம். கவலைக்கு மருந்து.  இசையாலே நோய்களைக் கட்டுப்படுத்தலாம் என்கிறார்கள்.  இசைக்கு மயங்காத உயிரினம் இல்லை எனலாம்.

திரை இசைப்பாடல்களில் காலத்தால் அழியாப்பாடல்களைக்கேட்கும் இசைப் பிரியர்கள் இருப்பார்கள். அவர்களுக்காக இந்தப் பதிவுகள். இப்போது எல்லாத் தொலைக்காட்சிகளிலும் திரை இசைகளை குழந்தைகள் பாடுகிறார்கள். கர்நாடக  இசைப் போட்டியும் நடைபெறுகிறது. சங்கரா தொலைக்காட்சியில் பஜனை கச்சேரிகள், போட்டிகள் நடைபெறுகின்றன. சின்னக் குழந்தைகள் எவ்வளவு அழகாய்ப் பாடுகிறார்கள்.!


1.சில சமயங்களில் இறை அன்பை நம்மால் எளிதாக உணர முடிகிறது. இறை அருள் நம்முள் நிறைந்து, நம் உள்ளுணர்வை எழுப்பி, மனதைப் பக்தியால் நிரப்புகிறது. இறைவனை பக்தியுடன் தொழுது, அவன் புகழ் பாடச் செய்கிறது. வேறு சில சமயங்களிலோ, நம் மனம் வரண்டு போய், பல குழப்பங்களில் சிக்கி அலைக்கழிக்கப் படுகிறது. இறைவன் எங்கே இருக்கிறான் என கேள்விகளை எழுப்புகிறது. அதுபோன்ற சமயங்களில் எளிய இனிய கணேச கானங்களை வாய் திறந்து பாடினால், கனமான மனது இளம்பனியாய் கரைந்துவிடும். மேலும் சக அன்பர்களோடு சேர்ந்து பஜனை கானங்கள் பாடும்போது, நம் மனது பல மடங்கு உறுதி பெறுகிறது. 'கணேச சரணம் கணேச சரணம்' என்று தொடர்ந்து பாடினால், வல்வினைகளும் தகர்ந்திடும்.கணேஷ கானங்கள்  என்ற பாடல் தொகுப்பில்
-இப்படி இசையாலே வேள்வி செய்து இருக்கிறார், இசை  இன்பம்   என்ற இந்த வலைத்தளத்தில். வழங்கியவர் ஜீவா வெங்கட்ராமன் அவர்கள். இந்த வலைத்தளத்தில்  எல்லாப்பாடல்களையும் கேட்டு மகிழலாம்.
* இசைக் கருவிகள்
* நடனம்
* நாட்டுப்புறப் பாடல்
* திரைப்படம்
* தொகுப்பிசை-Fusion-Album
* சுவையான தகவல்கள்
இப்படி எல்லவற்றையும் அவர் தருகிறார்.

2.  ’றேடியோஸ்பதி’ என்ற வலைத்தளத்தை வைத்து இருக்கும் கானாபிரபா அவர்கள்,   ”காதலர் தினம் 2010 ”  என்று காதலர் தினச்  சிறப்புப் படையலாக  அவருக்குப் பிடித்த  வைரமுத்து  எழுதிய காதல் கவிதைகளையும்,  காதல் பாடல்களையும் தொகுத்து வழங்கி இருக்கிறார். அதைக் கேட்டு மகிழுங்கள். இன்னும் பலவிதமான பாடல்களையும்  கேட்கலாம்.

3.ரூபன் அவர்கள் பல திறமைகள் உள்ளவர், கவிதை, கதை, கட்டுரை என்று பலவித வலைத்தளங்கள் வைத்து இருக்கிறார். அவர் கதையும் கானமும் வழங்கி இருக்கிறார்.

இசையும் கதையும் விழியோரங்களை நனைத்த கண்ணீர்த்துளிகள்

கதையைப் படித்துப் பாடலைக் கேட்டு மகிழுங்கள். துன்பக் கண்ணீர், ஆனந்த கண்ணீராக மாறியதைப் படித்துப்பாருங்கள். கதை, பாட்டு இரண்டும் மிக நன்றாக இருக்கிறது.

அந்தக் காலத்தில் இலங்கை வானொலியில் ’இசையும் கதையும்’,  ’கதையும் கானமும்’ என்றெல்லாம் நிகழ்ச்சிகள் இருந்தன.  ஒருவர் கதை சொல்வார்- பின் அந்தச் சூழுலுக்கு ஏற்ற  திரைப்படப் பாடல்  ஒலிக்கும்.   அது போல் ரூபன் வழங்கி இருக்கிறார்.


4.’தமிழ் இசை’ என்ற வலைத்தளத்தில்  ’தமிழ் எனும் தேனை இசை மூலம் பருக இச்சை’, என்கிறது இந்த வலை.  நான் ஆணையிட்டால் என்ற எம்.ஜி.ஆர் பாடல், (டி.எம்.எஸ் பாடியது )அருமையான பாடல்.  கிறிஸ்மஸ் முதல் நாள் அவர் இறந்து போனதை  யாரும் மறக்க முடியாது. எம் .ஜி. ஆர்  பாடிய பாடல்கள் எல்லாம் மிக நல்ல பாடல்கள்.  நிறைய தத்துவப் பாடல்கள்  பாடி அவை இன்றும் காலத்தை வென்ற பாடல்களாய் இருக்கின்றன. அவர் பாடுவது போலவே பாடிய   டி.எம். எஸ், அவருக்குப் பெருமை சேர்த்தார்.

5.’எங்கள் ப்ளாக்’ வைத்து இருக்கும் ஸ்ரீராம் அவர்கள் ,  T M S அவர்களுக்கு அஞ்சலியாக பகிர்ந்த பாடல்கள் மிகவும் அருமையாக இருக்கும். அவர் பாடிய முருகன் பாடலும், சினிமாப் பாடலும் இருக்கும் இதில் இருக்கும். கேட்டுப்பாருங்கள்.
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்- T M S - அஞ்சலி.

ஸ்ரீராமுக்கு  பிடித்த பாடல்கள் என்கிறார். ஆனால் நம் அனைவருக்கும் பிடிக்கும், திரு ஸ்ரீனிவாஸ் பாடல்கள். கேட்டு மகிழலாம்.

6(எனக்கும் பிடித்த ) P B ஸ்ரீனிவாச்

7. சங்கீதக்கச்சேரிகள் கேட்கும் இசைப் பிரியர்களுக்கு:-

’ஒவ்வொரு நாளும், கச்சேரி துவங்கும் நேரத்திற்கு, ஐந்து நிமிடங்கள் முன்னதாக  'நம்ம ஏரியா' வலைப்பதிவில்,அன்றைய கச்சேரிக்கு யூ டியூப் சுட்டி / இணைப்பு தருகின்றோம். பார்த்து, கேட்டு மகிழுங்கள்.
Our sincere thanks to Parivadini P!
முதல் கச்சேரி திரு ஓ எஸ் தியாகராஜன் அவர்களின் அற்புதமான கச்சேரி இங்கே உள்ளது. பார்த்து, கேட்டு, மகிழுங்கள்.’-  என்று சொல்கிறார் கே ஜி .கெளதமன் அவர்கள்.

8.
'சரஸ்வதி ஸ்துதி ' லதாமங்கேஷ்கர்   பாடிய பாடல்    குயில்களின் கீதங்கள் என்று தான்  ரசித்த கீதங்களை சேமிக்கும் வலைப்பூ என்கிறார் அமைதிச்சாரல் .  குயில் கீதங்கள்  எல்லாம் அருமையாக இருக்கிறது. நமக்கு வேண்டியதைக் கேட்கலாம், மகிழலாம்.

9.
’மரகதம்’ என்று வலைத்தளம் வைத்து இருக்கும் புவனேஸ்வரி ராமநாதன் அவர்கள்  என்றும் இனியவை - A M ராஜா  என்று அருமையான பழைய பாடல்களை கொடுத்து இருக்கிறார்.  அத்தனையும் இனிமை, பழைய பாடல் அபிமானிகளுக்கு.

  மார்கழி மாதம்  திருவெம்பாவை, திருப்பள்ளிஎழுச்சி கேட்க வேண்டும் என்றால்   புவனேஸ்வரி ராமநாதன்  அவர்களே பாடல் பகிர்வும் வைத்து இருக்கிறார். அதைப் பார்த்துப் படித்துக் கொண்டு, பாடலையும் கேட்டு மகிழலாம்.

10. கிறிஸ்மஸ் பாடல்கள் -1( கிறிஸ்மஸ் பாடல்கள் என்று கூகுளில் தேடினால் இந்த இரண்டு பாடல் கிடைக்கும். )
இன்று ஏசு நாதர் பிறந்த நாள். கடுங்குளிரில் மாட்டுத் தொழுவத்தில் பிறந்த பாலகனை(கோமகனை)ப்போற்றிப்  பாடும் பாடல். என் மகனும், மகளும் கிறித்துவப் பள்ளியில் படித்தார்கள். அவர்கள் பள்ளியில் கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்படும் போது ஆடல் , பாடல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்கள். இங்கு பகிரப்பட்ட இந்தப் பாடலுக்கு என் மகள் நடனம் ஆடி இருக்கிறாள். என் மகன் அடுத்த பாடலைப் பாடுவான்,   அதில் உள்ள .’இன்று நமக்கு ஒரு நற்செய்தி’   என்று தேவகுமரன் பிறந்த செய்தியைச் சொல்லுவான், அனைவருக்கும்.

அன்பின் ஒளியாக , கருணையின் வடிவாகப் பிறந்தார், தேவபிதா.
இந்தப் பாடலை பாடிய பெண்  இனிமையாகப் பாடி இருக்கிறாள் கேட்டு மகிழுங்கள்.
                                                 --------------------------------
                               அனைவருக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்



                              அருள் தேவா, உன் பெருமையையே பேசுவேன். 

40 comments:

  1. வணக்கம்
    அம்மா
    இன்று வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இன்று என்னுடைய புதிய வலைத்தளத்ததை
    வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் அம்மா...மற்ற பதிவுகளுக்கு சென்று வருகிறேன்.
    இனிய நத்தார் பண்டிகை வாழ்த்துக்கள்.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. வாங்க ரூபன், வாழ்க வளமுடன். கடைசி பாடலுக்கு மட்டும் லிங் சரியாக கொடுக்க முடியவில்லை. வலைத்தளத்தில் தேடினால் கிடைக்கிறது. கூகுளில் கிறிஸ்மஸ் பாடல்கள் என்று போட்டால் நான் கொடுத்துள்ள இரண்டு பாடல் வருகிறது.
    கேட்டுப் பார்த்துவிட்டு சொல்லுங்கள்.
    உங்கள் முதல் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
    உங்களுக்கும் நத்தார் பண்டிகை வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்
      அம்மா.

      இரண்டுYOUTUBE பாடல் .இரண்டும் தேவனைப்பற்றியது மிக அருமையாக உள்ளது..
      கிறிஸ்மஸ் பாடல்கள்1 என்ற தலைப்பின் கீழ் உள்ளது...
      http://www.tamilchristians.com/index.php?option=com_content&view=article&id=494:-1&catid=102:2012-12-11-00-09-50&Itemid=319

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      Delete
  3. சிறப்பான அறிமுகங்கள்...கிறிஸ்துமஸ் தாத்தா கோலம் அருமையாக இருக்கிறது...

    5,6,7 ஆகிய மூன்றுமே ஒரே வலைப்பூ தான்....:) அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஆதி, வாழ்க வளமுடன். 5, 6ம் ’எங்கள் ப்ளாக்,’ 7 ’நம்ம ஏரியா’. பாடல் பகிர்வுக்கு என்று பகிர்ந்தேன், உங்கள் ரசித்தபாடல்கள் லிங் கூட கொடுத்து இருக்கலாம்.
      கோலத்தை ரசித்தமைக்கு நன்றி. அவர் பரிசுப் பொருள்கள் கொண்டு வந்து இருக்கிறார் ரோஷ்ணிக்கும் அதில் இருக்கிறது. அனைவருக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்து சொன்னதற்கு நன்றி.

      Delete
  4. வணக்கம்
    அம்மா.

    எல்லாம் நான்செல்லும் தளங்கள் தான். 1மட்டும் புதியவை அறிமுகம் செய்து வைத்தமைக்கு மிக்க நன்றி.
    த.ம 1வது வாக்கு.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாங்க ரூபன், வாழ்க வளமுடன். மீண்டும் உங்கள் வருகைக்கும் ஓட்டுக்கும் நன்றி.

      Delete
  5. இசைப்பாவின் (தமிழ் இசை) அறிமுகத்திற்கு நன்றி. வாழ்த்துகள்

    ஓஜஸ்
    (இசைப்பா பங்களிப்பாளர்)

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஓஜஸ், வாழ்க வளமுடன்.
      இசைப்பாவில் எல்லோரும் பங்களிக்களாம் இல்லையா?
      உங்கள் பங்களிப்பான பாடல்கள் அருமை.
      உங்கள் வரவுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      Delete
  6. சிறப்பான இன்னிசை விருந்து அருமை.வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம், கவியாழி கண்ணதாசன், வாழ்க வளமுடன். உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      Delete
  7. சிறப்பான அறிமுகங்கள்... அருமையான இசை விருந்து
    நல் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன். உங்கள் கருத்துக்கும், நல் வாழ்த்துக்களுக்கு நன்றி.

      Delete
  8. happy christmas to all
    subbu thatha
    www.vazhvuneri.blogspot.com
    www.menakasury.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. வண்க்கம் சூரிசார், வாழ்க வளமுடன்.நீங்களும் பல வலைத்தளம் வைத்து இருக்கிறீர்கள். அதன் சுட்டிகளை கொடுத்தமைக்கு நன்றி.
      கிறிஸ்மஸ் வாழ்த்துக்களுக்கு நன்றி.

      Delete
  9. வித்தியாசமாக இன்று இசை விருந்து படைத்த உங்களுக்கும், அறிமுங்களுக்கும் பாராட்டுக்கள். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. வாங்க ஆசியா, வாழ்க வளமுடன்.
    உங்கள் பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  11. வலைச்சரத்தில் 'எங்களை'க் குறிப்பிட்டதற்கு நன்றி கோமதி அரசு மேடம். இசைகளால் நிறைந்த சரம் இனிக்கிறது. உடன் தொகுக்கப்பட்ட அனைவருக்கும் எங்கள் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம், வாழ்க வளமுடன். இசை விருந்து இனிப்பது அறிந்து மகிழ்ச்சி. உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      Delete
  12. இசை மாலையாக இருக்கிறது பதிவு. இத்தனை வலைகளா ! அவசியம்போய் பார்க்கிறேன் கோமதி.

    ReplyDelete
  13. வாங்க ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன்.பார்த்து கேட்டு மகிழுங்கள் .
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  14. அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.

    ’ஸ்ரீராம்’ என்னும் ’ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்’ தவிர மற்றவர்கள் அனைவரும் நான் அறியாதவர்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வை. கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

      Delete
  15. Replies
    1. //அருள் தேவா, உன் பெருமையையே பேசுவேன். // என்பதற்கு மேலே தாங்கள் வரைந்துள்ள கோலம் வித்யாசமாக நல்லாயிருக்கு. பாராட்டுக்கள்.

      Delete
    2. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார், உங்கள் பாராட்டுக்கு நன்றி சார்.

      Delete
  16. அனைவருக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்..

    அருமையான் கிறிஸ்துமஸ் நாளில் கேட்டு மகிழ்ச்க்கூடிய தளங்களின் தொகுப்புகள்..பாராட்டுகள்..!

    ReplyDelete
  17. வாங்க இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன்.
    உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி.

    ReplyDelete
  18. சிறப்பான அறிமுகங்கள்! அனைவருக்கும் கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வாங்க சேஷாத்திரி , வாழ்க வளமுடன்.
      கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      Delete
  19. இன்றைய வலைச்சரம்...
    இசைச்சரம் ஆக இனித்தது.
    பதிவுகள் அறிமுகங்களுக்கு நன்றி!

    ReplyDelete
  20. வாங்க கலையன்பன், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி.

    ReplyDelete
  21. சிறப்பான அறிமுகங்கள்! அனைவருக்கும் கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வாங்க தனிமரம், வாழ்க வளமுடன். உங்கள் கருத்துக்கும், நல்வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      Delete
  22. அருமையான தொகுப்பில் என் பதிவையும் இணைத்ததற்கு மிக்க நன்றி வலைச்சரப் பதிவுகளுக்காகக் காத்திருக்கிறேன்

    ReplyDelete
  23. வாங்க கானாபிரபா, வாழ்க வளமுடன். உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  24. வலைச்சரத்தில் இசைச்சரம்..... அருமை கோமதிம்மா....

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      Delete
  25. "இசை விருந்து" அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  26. Isai virtu thou super. My favorite is music.

    Www.vijisvegkitchen.blogspot.com.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது