07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, December 31, 2014

ஆமேர் கோட்டையை சுற்றிப் பார்க்கலாமா!சரம் – மூன்று மலர் - மூன்று

எங்களுடன் நண்பரும் அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்களும் வந்திருந்தனர். எல்லோரும் அரட்டை அடித்துக் கொண்டே பாதி வழியை கடந்திருந்தோம். அதிகாலையிலேயே தில்லியிலிருந்து கிளம்பி விட்டதால் எல்லோருக்கும் பசி எடுக்கத் துவங்கியது. என்னதான் பயணித்துக் கொண்டே இருப்பது பிடிக்குமென்றாலும், உணவு உட்கொள்ளவும் மற்ற விஷயங்களுக்கும் நடுவில் சற்றே வண்டியை நிறுத்தத்தானே வேண்டியிருக்கிறது. 

ஜெய்ப்பூர் செல்லும் வழியில் உள்ள ஒரு சாலையோர தங்கும் விடுதியில் காலை உணவை எடுத்துக் கொள்ள நினைத்தோம். இங்கு பஃபே முறையில் வேண்டியதை போட்டுக் கொள்ளலாம். பாலுடன் கார்ன்ஃப்ளேக்ஸ், இயற்கையான பழ ரசங்கள், பிரெட்-ஆம்லெட் என்று பலவிதமான உணவுகள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன. Unlimited - எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் - ஆளொன்றுக்கு 180/- ரூப்யாயோ என்னமோ வாங்கிக் கொண்டார்கள் அப்போது. என்னைப் பொறுத்த வரையில் பயணத்தில் முடிந்த வரை வாய்க்கு பூட்டு போட்டுக் கொள்வேன் என்பதால் நான் பழரசம் மட்டும் அருந்தினேன்….:)

காலை உணவினை முடித்தபிறகு அவ்விடத்தில் மனதைக்கவரும் அழகிய புல்வெளியும், குழந்தைகள் விளையாட ஊஞ்சல் போன்றவையும் இருந்ததால் எல்லோரும் சற்றே இளைப்பாறினோம். குழந்தைகள் ஊஞ்சலில் விளையாட, பெரியவர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.

ஆமேர் கோட்டையின் ஒரு பகுதி

தொடர்ந்த எங்கள் பயணத்தில் ”AMER FORT” “AMBER PALACE” என்று சொல்லப்படுகிற ஆமேர் கோட்டையை சென்றடைந்தோம்.

 ஆமேர் கோட்டை-வேறொரு கோணத்தில்...

ஜெய்ப்பூரை சுற்றி பல கோட்டைகள் இருந்தாலும் இந்த கோட்டை புகழ்பெற்றது. ஜெய்ப்பூர் நகரைச் சுற்றி ஒரு பாதுகாப்பு அரண் போல சுற்றுச் சுவர்களை கொண்டது. ராஜா ஜெய்சிங் அவர்களின் காலத்தில் கட்டபட்ட ஆமேர் கோட்டையில் DIWAN I AM, DIWAN I KHAS, SHEESH MAHAL என்று சொல்லப்படுகிற கண்ணாடி மாளிகையும், பலவிதமான அறைகள், அகழிகள் என்று சுற்றிப் பார்க்க நிறைய இருந்தன. பெரிய பானை ஒன்று கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தன. தங்களது முன்னோர்களை இறப்புக்கு பின் இது போன்ற பானைக்குள் வைத்து புதைத்திருக்கிறார்கள்.

இங்கேயே கோட்டையைச் சுற்றி யானையில் வலம் வரலாம். வெளிநாட்டவர்களும், சுற்றுலா வாசிகளும் என ஏகப்பட்ட கூட்டம். நாங்களும் சுற்றி பார்த்து புகைப்படங்களை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி ஜெய்ப்பூர் நகருக்குள் வரத் துவங்கினோம்.

சரி இன்றைய அறிமுகங்களைக் கவனிப்போம்! சுற்றிக் காட்டும் ஆர்வத்தில் வலைச்சர ஆசிரியர் பொறுப்பை மறந்தால் எப்படி!

திரைப்படங்கள் குறித்த தனது பார்வை, ஆவிப்பா, அனுபவங்கள் என பல விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார் எங்கள் ஊரைச் சேர்ந்த கோவை ஆவி.   சமீபத்தில் கோவாவில் நடந்த திரையுலக கொண்டாட்டம் பற்றிய அவரது பதிவு இன்றைய அறிமுகப் பதிவாக! - International Film Festival of India (IFFI 2014) - A short glance

அள்ள அள்ளக் குறையாத ஆன்மீகத் தகவல்கள் வேண்டுமெனில் நீங்கள் வர வேண்டிய இடம் “ஆலோசனை. கண்ணனை நினை மனமே என்று சொல்லும் திருமதி பார்வதி இராமச்சந்திரன் அவர்களின் பதிவு இன்றைய அறிமுகப் பதிவுகளில் ஒன்றாக இங்கே!

திருமதி ராஜலஷ்மி பரமசிவம் அவர்களின் அரட்டை தளம் உண்மையிலேயே பொழுதுபோக்குக்கான பலதரப்பட்ட விஷயங்கள் கொண்ட ஒன்று.  இவர்களின் சில பதிவுகளில் வரும் கதாபாத்திரங்களான ராசியும் விஷ்ணுவும் அலாதியானவர்கள்.  இன்றைய அறிமுகப் பதிவாக உறவுகளுக்கு formula உண்டா? எனும் பதிவினை படித்துப் பாருங்களேன்!

அரசியல், சமூகம், தொழில்நுட்பம், நகைச்சுவை, என்று பலதரப்பட்ட விஷயங்களை அள்ளி அள்ளித் தரும் வலைத்தளம் மதுரைத் தமிழன் அவர்களின் அவர்கள் உண்மைகள் தளம். இவரின் பூரிக்கட்டை மிகவும் பிரபலம்….:) இன்றைய அறிமுகப் பதிவாக முகப்புத்தக நகைச்சுவை பதிவு ஒன்று இங்கே.

முனைவர் ஜம்புலிங்கம் ஐயாவின் தஞ்சைப் பெரிய கோவில் சோழர் கால ஓவியங்கள் குறித்த பகிர்வு இன்றைய மற்றுமோர் அறிமுகப் பதிவாக இங்கே

என்ன நண்பர்களே, இன்றைய அறிமுகப் பதிவுகளை அவர்களது தளத்தில் படித்து, கருத்துரையும் இடலாமே – நீங்கள் இதுவரை படிக்க வில்லையெனில்!

நாளை மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.

மேலும் வாசிக்க...

Tuesday, December 30, 2014

ஜெய்ப்பூர் போலாமா!!


சரம் – மூன்று! மலர் - இரண்டு!ராஜஸ்தான் என்றதும் பாலைவனம் தான் முதலில் நினைவுக்கு வருகிறது அல்லவா! நாம் இப்போ செல்லப் போவது ராஜஸ்தான் மாநிலத் தலைநகரான ஜெய்ப்பூருக்கு. ”PINK CITY”என்று சொல்லப்படுகிற இங்குஎங்கெங்கு காணினும் சிவப்பு நிற கட்டிடங்கள் தான்.


தில்லியிலிருந்து ஜெய்ப்பூர் நான்கு முதல் ஐந்து மணிநேரத்தில் சென்று விடலாம் என்பதால்நண்பர் குடும்பத்துடன் இணைந்து அவருடைய காரிலேயே நாங்களும் செல்லலாம் என்று முடிவு செய்து ஒரு சனிக்கிழமை அதிகாலையில் தில்லியிலிருந்து கிளம்பினோம்அதிகாலைப் பயணம் சுகமான அனுபவம். 

கண்ணை மூடித் திறந்தால் செல்ல வேண்டிய இடம் வந்திராதா!” என்று நினைப்பவள் நான்….:)) என்னவருக்கோ பல மணி நேரங்கள் தொடர்ந்து பயணம் செய்வது மிகவும் பிடித்தமானது…..:)) யாருங்க அது “ஆஹா என்ன பொருத்தம்!னு பாட்டு பாடறது! சனி ஞாயிறு என விடுமுறை நாட்களான இரண்டு நாளையும் ஜெய்ப்பூரில் கழிக்கலாம் என்று திட்டம்.

பொதுவாக வட மாநிலங்களுக்கு சுற்றுலா செல்ல ஏற்ற மாதங்கள் செப்டம்பர், அக்டோபர் தான்காரணம் நவம்பர் முதல் பனிக்காலம் துவங்கி விடும்ஆகஸ்டுக்கு முன் என்றால் கடும்வெயில்அதனால் இரண்டுக்கும் இடைப்பட்ட இந்த இரண்டு மாதங்களை தேர்ந்தெடுத்தால் நிம்மதியாக சுற்றிப் பார்க்கலாம். ஆனால் நாங்கள் இந்த பயணத்தை மேற்கொண்டது 2009 ஏப்ரல் மாதத்தில் – கோடை அதிகம் ஆரம்பிக்காத ஒரு சமயம். எங்களது இளஞ்சிவப்பு நகரத்தை நோக்கிய பயணம் துவங்கியது.


வலைச்சர வாரத்தில் நாங்கள் பயணித்த ஜெய்ப்பூரின் சில காட்சிகளை உங்களுக்கும் சொல்லியபடியே அறிமுகம் செய்ய இருக்கிறேன் – சரியா? நாளை உங்களை எல்லாம் ஜெய்ப்பூரின் புகழ்பெற்ற கோட்டைக்கு அழைத்து செல்கிறேன். அதுவரைக்கும் இன்றைய அறிமுகங்களின் வலைப்பூக்களுக்குச் சென்று அவர்களின் பதிவுகளையும் படிக்கணும் ஓகே! ஒரு நாளைக்கு ஐந்து தளங்கள் மட்டுமே! அதிகமில்லை!

1) மகிழ்நிறை தளத்தில் எழுதி வரும் மைதிலி கஸ்தூரிரங்கன்  அவர்களின் கலக்கலான பதிவுகளுக்கு நான் ஒரு ரசிகை. இவங்க ஒரு அன்பான ஆசிரியர்மார்கழி மாதம் ஆயிற்றே. அதனால் கோலங்கள் பற்றிய மைதிலி அவர்களின் பதிவொன்று இன்றைய அறிமுகப் பதிவாக இதோ...  கோலங்கள்

2) தாத்தா என்று தைரியமாகச் சொல்லிக் கொள்ளும் சுப்புத் தாத்தாவின் சுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்தளம்பாடல்களின் சங்கமமாக ஒரு பதிவு இதோ இன்றைய அறிமுகமாக -  11 11 64 ???

3) நண்பர்கள் இணைந்து வாசிப்பனுபவத்தை இங்கே பகிர்ந்து கொள்வதற்காக ஆரம்பித்தது தான் வாசகர் கூடம்எனும் தளம். உங்களது வாசிப்பனுபவத்தினை  நீங்களும் இங்கே பங்களிப்பாக அளிக்கலாம். வாத்யார் என்று அழைக்கப்படும் பதிவர் சகோதரர் மின்னல் வரிகள் வலைப்பூவில் எழுதும் திரு. பால கணேஷ் அவர்கள் பகிர்ந்து கொண்ட வாசிப்பனுபவம் இதோ இன்றைய அறிமுகப் பதிவாக - எம்.ஜி.ஆர்.

4) ஆரண்யநிவாஸ் ஆர்ராமமூர்த்தி சார் அவர்களின் தளத்தில்கதைகளும்கவிதைகளும் கொட்டிக் கிடக்கும்சமீபத்தில் இவரின் முதல் சிறுகதைத் தொகுப்பான “ஆரண்யநிவாஸ் வெளியிடப்பட்டது. அவரது பதிவுகளில் ஒரு பதிவான ஒரு நாள் யாரோ என்ன பாடம் சொல்லித் தந்தாரோ..... இன்றைய அறிமுகமாக!

5) அருணா செல்வம் அவர்களின் கதைகளும் கவிதைகளும் ரசிக்கத் தக்கவைஇன்றைய அறிமுகப் பதிவாக இல்லாததும் இன்பம் தான்!! தந்திருக்கிறேன். படித்துப் பாருங்களேன்!

என்ன நண்பர்களே! இன்றைய அறிமுகங்களை ரசித்தீர்களா?  நாளை வேறு சில பதிவர்களைப் பார்க்கலாம்!

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.

இன்று எனது பக்கத்தில்-  மாங்காய் இஞ்சி ஊறுகாய் செய்முறை....
மேலும் வாசிக்க...

Monday, December 29, 2014

முத்தான முதல் வணக்கம்!


சரம் – மூன்று! மலர் - ஒன்று!

பட உதவி - கூகிள்

பதிவுலக நட்புகள் அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்உங்களை எல்லாம் வலைச்சரத்தின் மூலம் மூன்றாம் முறையாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சிகடந்த ஐந்து வருடங்களாக கோவை2தில்லி என்ற பெயரில் மனதில் தோன்றும் எண்ணங்களை அவ்வப்போது பகிர்வுகளாக தந்து கொண்டு வருகிறேன்என் வலைப்பூவில் சூறாவளி போல் வரிசையாக பதிவுகள் வெளிவருவதும்திடீரென்று பதிவுலகை விட்டு மாதக்கணக்கில் விலகி இருப்பதும் தான் தற்போது எனக்கு வழக்கமாயிருக்கிறது!

எனது பக்கத்தில் எனக்கு கிடைத்த அனுபவங்கள், செய்த பயணங்கள், படித்ததில் பிடித்தது போன்ற சில தலைப்புகளில் அவ்வப்போது எழுதி வருவது என்னைத் தொடர்ந்து படிக்கும் நண்பர்களுக்குத் தெரிந்திருக்கும்.  எனது சில பதிவுகள் கீழே:


நாங்கள் ஒரு பதிவர் குடும்பம் என்பதை சொல்லிக் கொள்வதில் எனக்கு மிக்க பெருமை உண்டு. என்னை வலையுலகுக்கு அறிமுகப்படுத்திய என்னவர் திரு. வெங்கட் நாகராஜ்அவர்கள்மகளுக்கும் வெளிச்சக் கீற்றுகள் என்ற பெயரில் ஒரு வலைத்தளம் அமைத்துக் கொடுத்துள்ளார். 2011ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் முதன்முதலாக வலைச்சர ஆசிரியர் வாய்ப்பு கிடைத்ததுஅப்போது நான் எழுதிய பதிவுகள் இதோ….


கடந்த ஆண்டான 2014ல் இதே மார்கழி மாதத்தில் தான் இரண்டாம் முறையாக ஆசிரியராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததுஅப்போது நான் எழுதிய பதிவுகள் இதோ….


இம்முறை சீனா ஐயாவிடமிருந்து மின்னஞ்சல் வந்த போது என்னால் உடனே ஏற்றுக் கொள்ளமுடியாத சூழல்காரணம் மகளின் தேர்வு நேரம்நாமும் அவர்களோடு சேர்ந்து படிக்கத் தான் வேண்டியுள்ளதேஅதனால் விடுமுறையில் பணியாற்றுகிறேன் என்று பதில் அனுப்பியதும்உடனே ஏற்றுக் கொண்டார்….:)

சென்ற இருமுறைகளும் சமுதாய விழிப்புணர்வு சம்பந்தப்பட்ட பகிர்வுகளாகவும்கதைகவிதைகள்பற்றிய அறிமுகங்களாகவும் தொகுத்திருந்தேன்இம்முறை என்ன செய்யலாம் என்று மண்டையை போட்டுக் குழப்பி கொண்டதில்உங்களையெல்லாம் வட மாநிலச் சுற்றுலா அழைத்துச் செல்லலாம் என்று தோன்றியது….:) சுற்றுலா செல்வது மனதுக்கு சந்தோஷத்தை தரவல்லது அல்லவா! அதனால் நாளை முதல் ராஜஸ்தான் மாநிலத்துக்கு பயணம் செய்ய தயாரா இருங்க…. சரியா…:)
இது என்ன இடம்? எந்த ஊர்? கண்டுபிடிங்க நட்புகளே?

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.

இன்று என்னுடைய பக்கத்தில் - டெசிபல் இம்சைகள்!!!

மேலும் வாசிக்க...

Sunday, December 28, 2014

செல்விருந்தோம்பி வரு விருத்து காத்திருத்தல்

அன்பின் சக பதிவர்களே
இன்றுடன் முடியும் வாரத்திற்கு (28.12.2014 )ஆசிரியப் பொறுப்பேற்று பதிவுகள் இட்ட அருமை நண்பர் குருநாதன்   தான் ஏற்ற பொறுப்பினை சரி வர முழு மனதுடன் நிறைவேற்றி - நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.

இவர் இட்ட பதிவுகள் : 012
அறிமுகப் படுத்திய பதிவர்கள் : 076
அறிமுக படுத்திய பதிவுகள் : 076
பெற்ற மறுமொழிகள் : 215
பெற்ற தமிழ் மண வாக்குகள் : 049 

நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு   ஆசிரியப் பொறுப்பினை ஏற்க அன்புடனும் ஆர்வத்துடனும்  சகொதரி ஆதி வெங்கட்  இணக்கம் தெரிவித்துள்ளார்.  

இவர் பிறந்தது சிவகங்கைச் சீமையில். படித்தது வளர்ந்தது எல்லாம் கொங்கு நாடாம் கோவை மாநகரில். திருமணத்திற்கு பின் பத்து வருடங்கள் தலைநகர் தில்லியிலும், தற்சமயம் பூலோக வைகுண்டமாம் திருவரங்கத்திலுமாக வாசம். படித்தது D.M.E AUTOCAD, CNC (TURNING & MILLING). : ஒரு சுட்டிப் பெண்ணுக்கு அம்மாவாக, - சமுதாயத்தில் சிறப்பான பெண்ணாக மகளை - மாற்ற என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது என்பதை……:முழு கவனத்துடன் சிந்தித்துக் கொண்டு இருக்கிறார்.

இன்று வரை தான் ஏற்ற பொறுப்பினைச் சரிவர நிறைவேற்றி - பதிவுகள் இட்டு - சிறந்த முறையில் பணியாற்றிய நண்பர் குருநாதனை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

சகோதரி ஆதி வெங்கட் நாளை ( 29.12.2014 ) காலை ஆறு மணீ முதல் பதிவிடத் துவங்குவார்.

சகோதரியினை வாழ்த்தி நாளை முதல் ஒரு வார காலத்திற்கு ஆசிரியப் பொறுப்பினைத் திறம்பட நடத்த வேண்டும் எனக் கூறி விடை பெறுகிறேன்.

நல்வாழ்த்துகள் குரு நாதன்

நல்வாழ்த்துகள் ஆதி வெங்கட் 

நட்புடன் சீனா
மேலும் வாசிக்க...

அனுபவத்தின் பாடம் :

அனுபவத்தின் பாடம் :சிரந்தாழ்த்திய நன்றியும்

தவற்றுக்குப்

பொறுத்தருளக் கோரும்

விண்ணப்பமும்.


இனித்த சுமை.

இரவில் கண்விழித்தஇமை

சோர்விலாச் சீர்மை...


மறக்கவியலவில்லை,

இவ்வனுபவப் பாடம் !


நெகிழ்ந்தது மனமும்

விழித்தது என்னறிவும், இரவும்..


பயணங்களில் ஏற்பட்ட

சுகங்களின் அலுப்பு.


பின்னூட்டமிட்ட

பெருந்தகைகளுக்கு

பெருநன்றிகள்.


குறிப்பாக

என் முதல் நண்பர்கள்

கில்லர்ஜீ,
தளிர் சுரேஷ்
பெரிவை சே.குமார்
துரை செல்வராஜீ
சொக்கன் சுப்பிரமணியன்
உமையாள் காயத்ரி,
நடன சபாபதி,
ஐயா சீனா
மற்றும் உள
சம்பத்குமாரும்
புதுவை வேலுவும்..


முதல் வரிசையில் நின்ற

மேன்மைக்கு

மனமுவந்த நன்றி.


என் முன்னெழுத்துகள்

ஐயா நிலவனும்

மகாசுந்தரும்.


என் தடங்களில்

பயணித்துச்

சொல்லனுபவம் கூறியமைக்குச்

சிரம் தாழ்ந்த நன்றி.


என்

வழமை இதயங்களின்

அன்புணர்வுகள்

ஊமைக்கனவுகள் ஜோசப் விஜீ
கரந்தை ஜெயக்குமார்
முனைவர் ஜம்புலிங்கம்
மைதிலி கஸ்தூரிரெங்கன்
மாலதியும்என் தடங்களில் 

இளைப்பாறிச் சென்றமைக்கு

அளப்பரிய நன்றிகள்.


இவர்களுடன்

என்னை நேர்படுத்திய

கஸ்தூரிக்கும்
தனபாலனுக்கும்

உயர்ந்த நன்றிகள்.


அனுபவம் புதுமை

ஆனாலும் கற்றபெருமை,

இன்னும் தொடரச் செய்யும் சீர்மை

என்றும்

மனதைவிட்டு அகலாததிண்மை.


மறுபடியும் வாய்ப்புக்காய் ஏங்கும்

முறைமை !


மிக்க நன்றியும் பெருமகிழ்வும்


ஐயா
தமிழ்வாசி பிரகாஷ்

பொறுப்பாளர்
சீனா

நெகிழவைத்த
புதிய பதிவர்களின் பதிவும்
வலைச்சர வாசகர்களுக்கும்…


சிரந்தாழ்த்திய நன்றியும்

தவற்றுக்குப்

பொறுத்தருளக் கோரும்

விண்ணப்பமும்.அன்புடன்,

சி.குருநாதசுந்தரம்

வலைப்பூ : பெருநாழி.மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது