07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, December 26, 2014

கூடுதல் முகம் 3 ( நிறைவு முகத்திற்கு முன்னாக)


அன்பானவர்களே வணக்கம். இதுகாறும் சிறப்பான ஆதரவினை எனக்கு நல்கிய அனைவருக்கும் மீண்டும் என் நன்றிகள். பாண்டியன், விஜீ ஐயா ஆகியோரின் வரவு எனக்கு மிக்க மகிழ்வூட்டியது, இருப்பினும் இன்னும் சில தளங்களை பதிவிட்டு விட்டு நிறைவு செய்யலாமென என்ணுகிறேன். இளஞ்சாரல் வாழ்வை எரித்தது நேசம் அந்த நேசத்தை எரித்திடாது சாம்பலை இட்டுக்கொண்டேன் நெற்றியில் என்ற கவிஞர் சுஜந்தியின் கவிதை வரிகளில் அக்னிப்பிழம்பின் ஒலி கண்டேன். தொடரட்டும் அவரின் கவிதைப்பக்கம். வால்பையன் “ முதல் நாளில் இருந்தே நான் தயாராகிக் கொண்டிருந்தேன், சொதப்பிற கூடாது என்பதற்காக பலவாறு என்னை தயார் படுத்தினேன், கண்ணாடி முன் நின்று எனக்கு நானே நடிச்சு பார்த்தேன். கஜினியில் சத்யம் சொதப்பியது போல் சொதப்பிடுற கூடாது என்பதற்காக, ஹாய் ஐயாம் சஞ்சய் ராமசாமி என நூறு முறையாக சொல்லியிருப்பேன்.” இவ்வாறாக தன் அனுபவங்களைச் சுவைபடக் கூறியிருக்கும் வால்பையனின் இடுகைகள் எழுத்தாளர் ஜெயமோகனுக்கு எதிர்வினை செய்து நீள்கிறது. வால்பையன் வால்பையன் தான்! பார்வையில் ஒருவர் இந்துவாக இருந்து கிறுஸ்துவராகவோ அல்லது இஸ்லாமியராகவோ ஆவதற்கு மூளைச் சலவை என்பதற்கும் மேலாக இந்து மதத்தின் குறைபாடுகள் என்பது ஒரு முக்கிய காரணம். இந்துத்துவா மதமாற்றம் என்ற விவாதத்தைத் தொடங்க அழைக்கிறார் இப்பதிவர். அரசியல் சார்ந்த விவாதங்களைத் தாங்கள் இவரிடம் விவாதிக்கலாம். இவரின் கருத்துகளை நியாயப்படுத்த அவர் அழைப்பதாக நாம் எண்ண வேண்டாம். எதிர்வினைக்கும் இடமுண்டு. ஆதலால் தான் வௌவாலைத் தேடுகிறாரோ? பார்வையில் லேகாவின் பார்வையில் ஒரு சமூகமாற்றத்திற்கான விதை தெரிகிறது. சுகிர்தராணியின் கவிதையை பகிர்ந்துகொண்ட அவரின் அக்கறை என்னை வெகுவாய்க் கவர்ந்தது.பாருங்களேன் அவரின் பகிர்தலை // அப்பாவின் தொழிலில் ஆண்டுவருமானம் சொல்ல முடியாமல் வாதியாரிடம் அடி வாங்குவேன் -- சுகிர்தராணியின் வலியின் துணிவில் லேகாவின் விழிதிறத்தல் அபாரம் @ தமிழ் விக்கிப்பீடியா வலைப்பதிவு தமிழில் விக்கிபீடியாவின் பங்கு நாம் அறிந்ததே ! பல பயனுள்ள தகவல்கள் நம் விழிப்புணர்வைத் தூண்டுவதாய் அமைந்துள்ளது. மருந்துகளின் தமிழ்ப்பெயர்கள் சார்ந்த இத்தளத்தின் பதிவு பயனுள்ளது. பாருங்கள். பகிருங்கள். மூலிகை வளம் குடற்புண்ணுக்கு மணற்தக்காளி நல்ல மருந்தென்று தெரியும். ஆனால் அதன் தாவரவியல் வகைப்பாட்டியலை அழகாகச் சொல்லிச் செல்கிறது இத்தளம். இயற்கை மருத்துவம் மீளெள நாம் இது போன்ற தளங்களைப் பார்த்தல் நலம். அன்புடன், சி.குருநாதசுந்தரம் (பெருநாழி )

19 comments:

 1. அண்மையில் தமிழ் விக்கிபீடியாவில் எழுதத் தொடங்கியுள்ளபோதிலும் தங்களது பதிவுமூலமாகத்தான் தமிழ் விக்கிபீடியா வலைப்பதிவு பற்றி அறிந்தேன். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஐயா. தங்களின் நற்பின்னூட்டமும் நல்ல தமிழும் ஈர்க்கிறது. மிக்க நன்றி ஐயா.

   Delete
 2. புதுமையான முறையை ரசித்தேன் நண்பரே....

  ReplyDelete
  Replies
  1. தங்களின் பின்னூடத்திற்கு நன்றி நண்பரே.

   Delete
 3. அன்பு நண்பர்கள்
  பாண்டியன், விஜீ ஐயா,
  (ஜோசெப் விஜூ) ஆகியோரின் இன்றைய வரவு எனக்கு மிக்க மகிழ்வூட்டியது.
  குழலின்னிசை நன்றி நாதம் இசைக்கின்றது.
  நன்றியுடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.fr

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஐயா.

   Delete
 4. புதுமையான முறையில் இனிய தொகுப்பு.. அருமை!..
  வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஐயா.

   Delete
 5. Replies
  1. தங்களின் பின்னூடத்திற்கு நன்றி நண்பரே.

   Delete
 6. வணக்கம் ஐயா
  தங்களது எழுத்துகளின் ஆழத்தை நுகர்ந்த நான் இப்பொழுது தங்களது ஆழ்ந்த வாசிப்பையும் வலைச்சரம் மூலம் அறிந்து கொண்டேன். தொடரட்டும் தங்கள் தமிழ்ப்பணி. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. வணக்கம் அய்யா!
  இன்றைய தாங்கள் அறிமுகப்படுத்திய வலைப்பூக்கள் பலவும் எனக்குப் புதியனவே!
  தங்களுக்கு நன்றியும் தங்களால் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டவர்க்கு வாழ்த்தும்!!!!
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களின் பின்னூடத்திற்கு நன்றி ஐயா.

   Delete
 8. சிறப்பான வலைப்பூக்கள்! பகிர்வுக்கு நன்றி! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. மிக்க ம்கிழ்வாக இருக்கிறது ஐயா. தங்களைப் போன்றோரின் அறிமுகம் கிடைத்தமைக்கு. வலைச்சரத்திற்கு நன்றி.

   Delete
 9. வாழ்த்துகள் சார்..புதிய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 10. கூடுதல் முகத்தில் உலா வந்த அனைத்துப் பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது