07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, December 26, 2014

கூடுதல் முகம் - குருநாதன்.

வணக்கம். இன்று அறிமுகப்படுத்தும் வலைப்பூக்களை நீங்கள் ஏற்கனவே பார்த்திருக்கலாம் . இருப்பினும் அதில் என்னைக் கவர்ந்த சில இடுகைகளின் பால் நான் ஈர்க்கப்பட்டேன். அத்தகு வலைப்பூக்கள் சிலவற்றை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் பேருவகை அடைகிறேன் அன்புடன் விளையாட்டு, அரசியல் என இரு விடயங்களைப்பற்றி எழுதி வருகிறார், இவ்வாண்டு உலகக்கால்பந்துக் கழகத்தின் பலோன் டி.ஓ. விருதுக்கான பரிந்துரைக்கப்பட்ட வீர்ர்கள், வீராங்கனைகள், பயிற்சியாளர்களை தமது இடுகையில் கூறியிருக்கும் இவரது விளையாட்டுச் செய்தி என்னைக் கவர்ந்தது. தமிழா தமிழா தமிழ் இலக்கியத்தின் சிறந்த பாடல்களை வெளியிட்டு அதற்கான பொருளையும் கூறியுள்ள பாங்கு போற்றத்தக்கது. பக்குடுகை நன்கணியாரின் உலக வீடுபேறு அடையும் வழி பற்றி ஏங்கும் பாடலைப் பதிவு செய்த பதிவர் அதைக் கண்ணதாசனோடு ஒப்பிட்டமை சிறப்பு. மணிஜி தான் சந்தித்த பெண் ஓட்டுநரிடமிருந்து சில அனுபவங்களைப் பெறும் மனிஜியின் ஆகாயத்தாமரை மிகச் சிறப்பு, அதிலும் தன் பெயரும் அவளின் கணவனின் பெயரும் ஒன்றாகவே இருந்த இணையின் வியப்பிலிருந்து மீள்வதற்குள் அனுபவம் முடிந்து விடுகிறது. பெண்களின் வலி ? மண் மரம் மழை மனிதன் பாசுமதி அரிசி, மேல்தட்டு மக்களுக்கான உணவின் ருசி. ஆனாலும் அதன் தாவரவியல் அறிவினைத் தந்திருக்கும் இவ்வலைப்பூ என்னைக் கவர்ந்தது, காரணம், இதன் தலைப்பை மீண்டும் ஒருமுறை பாருங்களேன். இன்னும் நிறைய மூலிகைகளை நீங்கள் இங்கு முகரலாம். TamilFuser இருசக்கர வாகனத்தின் எரிபொருள் நிரப்பும் தருணங்களில் அரசியலை நான் நினைப்பதுண்டு, அந்த அரசியல் அன்று மட்டும் பேசப்படுவது வாடிக்கையாகிவிட்டது. அந்த எரிபொருள் அரசியல் பற்றி ஆழமாகப் பதிவிட்டிருக்கும் சதுக்க பூதம் என்னைக் கவர்ந்து விட்டார். பெட்ரோல் அரசியல் உங்களுக்கும் பிடிக்கும்.

17 comments:

 1. Replies
  1. மிக்க நன்றி, தொடரட்டும் தங்களின் பணி.

   Delete
 2. சிறப்பான வலைப்பூக்களின் அறிமுகம்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி திரு. தளிர். சுரேஷ். தங்களின் வருகை எனக்குப் பேருவகையய்யா.

   Delete
 3. தமிழ்மணம் இணைத்துவிட்டேன்! மற்ற திரட்டிகளிலும் இணைக்கிறேன்!

  ReplyDelete
 4. புதிய சில வலைப்பூக்களை அறிந்து கொண்டேன்.
  அறிமுகப்படுத்திய தங்களுககும், அறிமுகங்களுக்கும் வாழ்த்துகள்
  த ம 2

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஐயா.

   Delete
 5. வலைசரத்தில் அறிமுக படுத்தியதற்கு நன்றி திரு.ஆறுமுகம் அய்யாசாமி

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஐயா.

   Delete
 6. இணைப்பை தொடும் போது நில்லும்படி செய்ய வேண்டும்... புதுக் கோட்டையில் சந்திப்போம்...

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தொழில்நுட்பம் சற்று மிகையெனப் படுகிறது ஐயா. இதுவும் முயன்று பார்த்தது தான். முலலுகிறேன். மிக்க நன்றி ஐயா.

   Delete
 7. புதிய வலைப்பூக்கள் அறிந்தேன். தேடி அறிமுகம் செய்தமைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி இளவலே.

   Delete
 8. வலைச்சரத்தில் எனது தளத்தி முதலில் மதிப்புக்குரிய தமிழ் இளங்கோ அறிமுகப்படுத்தினார்.அவரின் பார்வை சினிமாவை முன்னிலைப்படுத்தி இருந்தது. இப்போ குருநாதசுந்தரம் தந்து பார்வையில் அறிமுகப்படுத்தி உள்ளார். இருவருக்கும் நன்றி.

  அன்புடன்
  வர்மா

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஐயா.

   Delete
 9. வலைச்சர வேலை எத்தனை சிரமமான பணி என்பதை உணர்ந்தவள் நான்..வாழ்த்துகள் சார்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது