07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, December 2, 2014

சீனியர் பதிவர்கள்

வலைச்சரம் முதல் நாள்  1-12-2014 திங்கட்கிழமை


நேயர்களுக்கு அன்பான வணக்கம். 

இந்தப் பதிவு நேற்றே வெளிவந்திருக்கவேண்டியது. காலத்தின் அருமையைப்  போற்றுபவர்களும் செயல்களை தள்ளிப்போடக்கூடாதென்று சொல்பவர்களும் அடிக்கடி சொல்லும் வசனம் "இன்று செய்ய வேண்டிய வேலையை நாளைக்கென்று தள்ளிப்போடாதே" என்பதாகும். ஆனால் நம் வழிதான் தனி வழியாயிற்றே. அதனால் என் கொள்கை என்னவென்றால் நேற்றைய வேலையை இன்று செய்தால் போதும் என்பதாகும். இதில் என்ன சௌகரியம் என்றால் அநேக சந்தர்ப்பங்களில் அடுத்த நாள் அந்த வேலையைச் செய்ய வேண்டிய அவசியமே இல்லாமல் போகும். எப்படி என் லாஜிக்.

ஆனால் இந்த வலைச்சர ஆசிரியர் வேலை அப்படி மறைந்து போவதாகக் காணோம். அது என் காலைச் சுற்றியே நிற்கிறது. வேறு வழியில்லை. ஆகவே நேற்றைய பதிவை இன்று போடுகிறேன்.

இந்தப் பதிவில் பல சீனியர் பதிவர்களை அறிமுகப்படுத்தப் போகிறேன். இனம் இனத்தோடு கலக்கிறது. அதில் என் இனத்தைச் சேந்தவர்கள் சிலரை முதலில் அறிமுகப் படுத்தலாம் என்று நினைக்கிறேன்.

1.கடுகு அகஸ்தியன் அவர்கள்.

இவருடைய பிளாக்க்கின் முகப்பு


பிளாக்கின் பெயர் “கடுகு தாளிப்பு” லிங்க்: http://kadugu-agasthian.blogspot.in/+
இவருடைய பிளாக்க்கின் முகப்பு
இவர் தனக்காக தேர்ந்தெடுத்திருக்கும் படம்.


இவரைப் பற்றி கூறவேண்டுமானால் ஒரு பதிவு போறாது. இன்றைய பதிவர்களில் இவர்தான் மூத்தவர் என்று நம்புகிறேன். இவரது வயது என்னவென்று சரியாகத் தெரியவில்லை.

இவர் மிக இளம் வயதிலேயே சென்னையில் தபால் இலாக்காவில் சேர்ந்து பிறகு டில்லிக்குப் போய் பணி ஓய்வு பெறும் வரையில் அங்கே இருந்து விட்டுப் பிறகு சென்னையில் இருக்கிறார்.
நான் 8 வயது முதல் வாரப் பத்திரிக்கைகளான ஆனந்தவிகடன் கல்கி ஆகியவைகளைப் படிக்க ஆரம்பித்தேன். அப்போதைய வாரப் பத்திரிக்கைகளில் சிறுகதை, தொடர்கதை, கட்டுரைகள், செய்தித் துணுக்குகள், நகைச்சுவைத் துணுக்குகள் ஆகியவை வெளியாகும். சினிமா செய்திகள் ஒரு பக்கம் அல்லது இரண்டு பக்கம் இருக்கும்.
அப்போது இருந்த கதாசிரியர்களில் கடுகு அவர்கள் நகைச்சவையாக எழுதுவதில் தலை சிறந்தவராக இருந்தார். நான் இவர் கதைகளை மிகவும் விரும்பிப் படித்திருக்கிறேன். புத்தக்ப பிரியர். இவரைப்பற்றிய பல தகவல்களை இவரே தன்னுடைய பதிவில் வெளியிட்டிருக்கிறார். இவரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு இன்னும் கிடைக்கவில்லை.
பழைய நினைவுகளை தற்போது தன்னுடைய பதிவில் பகிர்ந்து கொண்டு வருகிறார். பழமை விரும்பிகளுக்கு மிகவும் பிடிக்கும் தளம்.

2.புலவர் ராமானுஜம் அவர்கள்.


இவருடைய பிளாக்கின் பெயர்:
பிளாக்கின் லிங்க்: http://www.pulavarkural.info/2014/10/blog-post_24.html

இவர் தமிழாசிரியராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர். ஆசிரியராக பணி புரிந்த காலத்தில் தமிழாசிரியர்களுக்காக தனி சங்கம் அமைத்து அவர்களுக்காக பல சலுகைகளைப் பெற்றுத் தந்திருக்கிறார். மற்ற பாட ஆசிரியர்களுக்குச் சமமான நிலையை உண்டாக்கிக் கொடுத்திருக்கிறார்.

முதல் இரண்டு பதிவர் சந்திப்புகளை திட்டமிட்டு சென்னையில் வெற்றிகரமாக நடத்தியவர். மதுரை மூன்றாம் சந்திப்பிற்கு உடல் நிலை காரணமாக கலந்து கொள்ள முடியவில்லை.

இந்த வயதிலும் ஐரோப்பா மற்றும் கிழக்கு நாடுகள் பலவற்றிற்கும் சுற்றுலா போய் வந்திருக்கிறார். பெரும்பாலும் கருத்தாழம் மிக்க கவிதைப் பதிவுகள் போட்டுக்கொண்டு இருக்கிறார். இவர்தான் பதிவுலகில் எனக்குத் தெரிந்து இரண்டாவது சீனியர் பதிவர்

3.திரு. தருமி அவர்கள்.

லிங்க்: http://dharumi.blogspot.in/

தருமி

கேள்விகள் கேட்பதன்றி வேறொன்றும் அறியேன், வலைஞர்களே!


                       
கம்பீரமாகக் காட்சியளிக்கும் இவர் மதுரைக்காரர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். போட்டோ எடுப்பதில் ஆர்வம் மிக்கவர்.

கருத்தாழமும் சிந்தனைத் துணிவும் கொண்டவர். பதிவுலகத் தவறுகளை தைரியமாகச் சாடுபவர். எனக்கு ஒரு இனிய நண்பர்.

இவரின் பதிவுகள் மிகவும் சுவையாக இருக்கும். அதே சமயம் வாழ்க்கைக்கு பயனுள்ளதாகவும் இருக்கும். புதிய பதிவர்கள் இவருடைய பதிவுகளைக் கட்டாயம் படிக்கவேண்டும்.

4.திரு.ஜி.எம்.பாலசுப்பிரமணியன் அவர்கள்.


அவருடைய பிளாக்கின் பெயர் :

gmb writes

பிளாக்கின் லிங்க்: http://gmbat1649.blogspot.in/

இவர் ஒரு கொள்கைப் பிடிப்புள்ள பதிவர் இவரது பதிவுகள் உங்கள் சிந்தனையைத் தூண்டும்.

இவர் மத்திய அரசின் பல நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்று தற்சமயம் பெங்களூருவில் வசிக்கிறார். அவர் வீட்டிற்கு நான் ஒரு முறை சென்றிருக்கிறேன். தம்பதிகள் இருவரும் விருந்தோம்பலில் இணையற்றவர்கள். பாசத்துடன் பழகக் கூடியவர்கள்.
இவருடைய பதிவுகள் அனைத்துத் தரப்பினரும் வாசிக்கவேண்டியவை.

5.திரு.வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள்.


பதிவின் தலைப்பு : VAI. GOPALAKRISHNAN

லிஙுக்: http://gopu1949.blogspot.in/

இவர் பதிவையும் இவர் நடத்திய சிறுகதை விமரிசனப்போட்டியைப் பற்றியும் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இவருடைய சிறுகதைகள் கலை நயம் மிக்கவை. வாழ்க்கையின் பரிமாணங்களைப் படம் பிடித்துக் காட்டுபவை. இவரின் கதை எழுதும் திறன் அபூர்வமானது.

பழகுவதற்கு அன்பான மனிதர். gனக்கு இனிய நண்பர். இவர் பதிவுலகில் ஒரு மைல் கல்லாக விளங்குகிறார் என்று சொன்னால் மிகையாகாது. இவரின் உழைப்பைக் கண்டு நான் வியப்படைகிறேன்.

பதிவுலகில் யாரும் செய்யாத ஒரு போட்டியை உருவாக்கி, தன் சொந்தப் பணத்தை கணிசமாகச் செலவழித்து, பல பரிசுகள் பல பதிவர்களுக்கு கொடுத்திருப்பது ஒரு இமாலய சாதனை என்றுதான் சொல்லவேண்டும். சிறுகதைகளை யாரும் ஆழ்ந்து படிப்பதில்லை என்பது ஒரு உலகியல் உண்மை. ஆனால் சிறுகதைகளை ஆழ்ந்து படிக்கவைக்க வேண்டும் என்ற உயரிய நோக்குடன் இந்த விமரிசனப் போட்டியை உருவாக்கி வெற்றிகரமாக செயல்படுத்தியிருக்கறார்.

இப்படி ஒரு போட்டி நடத்தும் அளவிற்கு இவர் அவ்வளவு சிறுகதைகள் எழுதியிருப்பது ஒரு வியப்பு. அந்தக் கதைகளுக்கு விமர்சனம் எழுத ஒரு போட்டி வைக்கலாம் என்பது இவர் மனதில் உதித்த ஒரு அபூர்வ எண்ணம். இதை ஒரு ஒழுங்கு முறையாக நடத்தி, அதை பரிசீலனை செய்ய ஒருவரைக் கண்டுபிடித்து அந்த விமரிசனங்களில் பல பரிசுக்குரியவைகளைத் தேர்ந்தெடுத்து, பரிசுகளை திட்டமிட்டபடி விநியோகித்த திறமை அவருடைய மேலாண்மைத் திறனுக்கு ஒரு சாட்சி.

இவரை அறிமுகப்படுத்திப் பாராட்டுவதில் பெருமை கொள்கிறேன்.

6.திரு.சுப்புத் தாத்தா அவர்கள்


இவரின் தளம்: இவரின் பெயரேதான்
தன்னை தாத்தா என்று அழைத்துக் கொள்ளும் தைரியமும் மனநிலையும் எல்லோருக்கும் சீக்கிரம் வந்து விடாது. அதற்கு ஒரு மனமுதிர்ச்சி தேவை. இவருக்கு அது இருக்கிறது. போன சென்னை பதிவர் சந்திப்பில் இவரை சந்தித்தேன்.
இவருடைய பதிவுகள் புது மாதிரியானவை. என்னை மாதிரி பெரிசுகளுக்கு மிகவும் பிடித்தமானவை. பழங்காலத்து சினிமா பாடல்கள், அந்தக் காலத்து செய்திகள் ஆகியவை இவருடைய பதிவுகளில் காணலாம்.

7.திரு சீனா ஐயா அவர்கள்


இவரைப்பற்றி முன்பே கூறியிருந்தாலும் இவரும் ஒரு சீனியர் பதிவர் ஆதலால் இங்கும் குறிப்பிடுகிறேன். அமைதியும் ஆழமும் கொண்டவர். இவரைப்பற்றி அறியாத பதிவர் எவருமிலர். ஆகவே அதிகம் சொல்ல வேண்டியதில்லை.

8.அமரரான இரு பதிவர்கள்

பல பிரபல பதிவர்கள் அமரராகி விட்டார்கள். அவர்களை எனக்குப் பரிச்சயமான இருவர் பற்றி இங்கு நினைவு கூர்கிறேன்.

      i) டோண்டு ராகவன்.

நான் பதிவுலகத்திற்குள் பிரவேசித்த காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்தவர் இவர். வேறு யாரோ ஒருவர் இவர் பெயரை உபயோகித்து இவர் பதிவில் சில விஷமங்கள் செய்து வந்தார். அந்த நபர் சிங்கப்பூரில் இருந்து கொண்டு இந்த சில்மிஷம் செய்து வந்தார். டோண்டு ராகவன் பல முயற்சிகள் செய்து அவரை கண்ணி வைத்துப் பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.

இவர் ஒரு மொழி பெயர்ப்பாளர். அதை முழுநேரத் தொழிலாகச் செய்து வந்தார்.

இவருடைய பதிவுகளில் நாட்டு நடப்புகளை கடுமையாக சாடுவார்.இவர் மறைவு பதிவுலகத்திற்கு பேரிழப்பாகும்.

      ii) பட்டாபட்டி வெங்கிடபதி

இவர் கோவைக்காரர். சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தார். பட்டாபட்டி என்ற பெயரில் பதிவு இட்டு வந்தார். பழகுவதற்கு இனிமையானவர். மலேசியா போயிருந்தபோது மாரடைப்பால் மறைந்தார்.

இந்த இரண்டு பேருக்கும் என் அஞ்சலியை காணிக்கையாக்குகிறேன்.

அடுத்த பதிவில் சில பிரபல பதிவர்களை அறிமுகப் படுத்துகிறேன்..44 comments:

 1. முதல் நாள் இரவு வைத்த சில குழம்பு வகைகள் – குறிப்பாக மீன் குழம்பு – அடுத்தநாள் ருசியாக இருக்கும். கிராமத்தில் இது சாதாரணம். உங்கள் முதல்நாள் வலைச்சரம் சிறப்பாகவே உள்ளது. சீனியர்கள் எல்லோரும் சொல்லும் தங்களது அனுபவங்கள் மற்றவர்களுக்கு வாழ்க்கை வழிகாட்டியாகவே உள்ளன.

  மறைந்த பதிவர்களுக்கு மறக்காமல் அஞ்சலி செய்தது பாராட்டிற்கு உரியது. இங்கு நீங்கள் சொன்ன அனைத்து பதிவர்களது கட்டுரைகளையும் தொடர்ந்து படிப்பவர்களில் நானும் ஒருவன்.

  கடுகு அகஸ்தியன் என்றாலே எனக்கு மின்னல் வரிகள் பால கணேஷும் சேர்ந்தே வந்து நிற்பார். அவரைப்பற்றி கணேஷ் நிறைய எழுதி இருக்கிறார்.

  த.ம.1

  ReplyDelete
  Replies
  1. முதல் நாள் வைத்த மீன் குழம்பு சாப்பிட புண்ணியம் பண்ணியிருக்கவேண்டும். அந்தப் புண்ணியம் நான் செய்யவில்லை. அன்று வைத்த குழம்பு மட்டுமே சாப்பிட்டிருக்கிறேன்.

   தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி.

   Delete
 2. ஆஹா !

  மிகப் பிரபலங்களுடன் மிகச் சாதாரணமானவனாகிய என்னையும் ........

  தங்களின் அன்புக்கு மிக்க நன்றிகள் ஐயா. - VGK

  ReplyDelete
  Replies
  1. இந்த தன்னடக்கம்தான் உங்களை உயர்த்துகிறது.

   Delete
 3. அனைத்தும் தொடரும் சிறந்த தளங்கள் ஐயா... மூத்த பதிவர்களுக்கு வணக்கங்கள்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. மூத்த பதிவர்களை ஒரே இடத்தில் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி. இவர்களில் சிலரது பதிவுகளைப் படித்துள்ளேன். மற்றவர்களின் பதிவுகளைப் படிப்பேன். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. அறிமுகப்படுத்தியுள்ள அனைவரது தளங்களும் எல்லோராலும் விரும்பப்படுபவை. பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்குத் நன்றி.

   Delete
 6. அனைவருமே நான்றிந்த பதிவர்கள் என்றாலும், நீங்கள் அறிமுகப்படுத்திய விதம் நன்று. தொடர்ந்து ஆசிரியர் பணி ஆற்றிட வாழ்த்துகள்..!

  ReplyDelete
 7. மூத்த பதிவர்களை அறிமுகம் செய்தமைக்கு நன்றி.. ஐயா..
  தங்கள் பணி சிறக்க வேண்டுகின்றேன்..

  ReplyDelete
  Replies
  1. நன்றி துரை செல்வராஜு

   Delete
 8. மூத்த பதிவர்களை முதலில் அறிமுகப்படுத்தியது சிறப்பான செயல் வாழ்த்துகள் ஐயா.

  ReplyDelete
 9. இங்கு முதல் நாள் பதிக்கவேண்டிய சீனிய சிட்டிசன்ஸை இன்று பதிவு செய்திருந்தாலும் ருசியும் மணமும் மாறவே இல்லை.. இன்னும் சொன்னால் கூட்டியது என்று சொல்லலாம் ஐயா. அசத்தலா ஆரம்பிச்சிட்டீங்க. அறிமுகமே அட்டகாசமா கொடுத்திருந்தீங்க. இப்ப இன்னைக்கு சீனியர் பதிவர்கள்... ஓரிருவரை தவிர மீதி எல்லோருமே நான் விரும்பும் பதிவர்கள் ஐயா... ஒவ்வொருவரை பற்றி நீங்கள் கொடுக்கும் அறிமுகம் அட்டகாசம்... கச்சேரி களை கட்டிருச்சு பார்த்தீங்களா ஐயா? இதை இதை இதை தான் நான் எதிர்ப்பார்த்தது... மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் அசத்தலான தொடக்கத்திற்கும், அறிமுகப்படுத்தப்பட்ட சீனியர் பதிவர்கள் அனைவருக்கும்...

  ReplyDelete
  Replies
  1. உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோதரி. மறக்கமாட்டேன்.

   Delete
 10. மூத்தப் பதிவர்களுக்கு முதல் மரியாதை... அருமை..

  சிறுதிருத்தம். நண்பர் பட்டாபட்டி அவர்கள் தாய்லாந்து சென்றபோது மாரடைப்பால் இறந்தார்.

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொல்வது சரி. நான் தவறாக குறிப்பிட்டு விட்டேன். தவறுக்கு மன்னிக்கவும்.

   Delete
 11. ஐயா ! வணக்கம் ! தாங்கள் என்னை அறிமுகப்படுத்தியுள்ள விதமே நீங்கள் என்பால் கொண்டுள்ள அன்பின் ஆழத்தை உணர்த்துகிறது! மிக்க நன்றி!

  ReplyDelete
  Replies
  1. அன்பார்ந்த நன்றி, புலவரே.

   Delete
 12. மூத்த பதிவர்களை நானும் அறிந்து கொள்வதற்கு அறிமுகப்படுத்திய தங்களுக்கு நன்றி!!

  ReplyDelete
  Replies
  1. நன்றி, வலிப்போக்கன் அவர்களே.

   Delete
 13. அறிமுகங்கள் மிக்க பயனுள்ளதாக இருந்தது.

  நன்றியும் வணக்கமும்.

  ReplyDelete
 14. மூத்த பதிவர்களுக்கு வணக்கங்களும், வந்தனங்களும்...அசத்தலான அறிமுகம் ஐயா நன்றி.

  ReplyDelete
 15. பழனி கந்த வேல் குறித்த கவிநயா அவர்களின் ஒரு பாடலுக்கு மெட்டு அமைத்து விட்டு,
  எனது கந்தனைத் துதி வலையில் இட்டுவிட்டு,
  அப்பாடி, இன்றைய வேலை முடிந்துவிட்டது என்று நினைத்தேன்.
  பழனி கந்தசாமி அவர்கள்
  என்னை அறிமுகம் செய்து நின்றது
  அந்த கந்தவேலனே அருளி ஈந்த
  பஞ்சாமிர்தமோ, பிரசாதமோ !
  வியந்து நிற்கின்றேன்.
  எல்லாமே அந்த முருகன், கந்தன், குமரன், சண்முகன்,
  சுவாமிநாதன், குகன்,
  பழனி வேலன் அருள்.

  சுப்பு தாத்தா.
  www.kandhanaithuthi.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. ஆஹா. ஆஹா, ஆஹா
   நான் செய்த பாக்கியம்தான் என்னே
   என்னையும் போற்றி பாமாலை சூட்டிட
   ஒருவரை கந்தன் நியமித்தானே
   வியப்பில் நான் எனை மறந்தேனே
   அவனைப் போற்றி மகிழ்கிறேனே

   எப்படி என் கவிதை, சுப்புத் தாத்தா? பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்று பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள்?

   Delete
 16. அனைவருமே தெரிந்த பெரியோர்கள் தான். அறிமுகம் செய்த விதம் அருமை. பாராட்டுகள் ஐயா.

  ReplyDelete
 17. முத்தான மூத்த பதிவர்கள்.

  ReplyDelete
 18. பொதுவாக நீங்கள் அறிமுகப் படுத்திய அனைவரும் என்னையும் சேர்த்து வயதில் மூத்தவர்களாக இருக்கலாம் அனுபவத்திலும் மூத்தவர்களாக இருக்கலாம். ஆனால் என்னை நான் இளைஞனாகத்தான் உணருகிறேன். பதிவர்களை வலைச் சரத்தில் அறிமுகப் படுத்தும்போது ஒரு பதிவுக்கு லிங்க் கொடுப்பார்கள். நீங்கள் தளத்துக்கே முன்னுரிமை தந்து இருக்கிறீர்கள். தளத்தில் எதைப் படித்தாலும் சிறப்பாக இருக்கும் என்று சொல்லாமல் சொல்வது போல். அறிமுகத்துக்கு மிக்க நன்றி டாக்டர் அவர்களே.

  ReplyDelete
  Replies
  1. மன்னிக்கவும் ஜிஎம்பி. அடுத்ததாக போடப்போகும் இளம்பதிவர் லிஸ்ட்டில் உங்களையும் சேர்த்து விடுகிறேன்.

   ஒரு சமாச்சாரம் தெரியுமா? நான் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கொள்ளலாம் என்று இருக்கிறேன். நீங்கள் அவசியம் வரவேண்டும்.

   Delete
 19. மூத்த பதிவர்கள் அனைவரும் மிக அருமையாக எழுதகூடியவர்கள்.
  அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  மறைந்த இருவருக்கு அஞ்சலிகள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு மிக்க நன்றி.

   Delete
 20. சீனியர் பதிவர்களின் படைப்புக்களை நானும் வாசித்து இருக்கிறேன்! பெரியவர்களுக்கு எனது வணக்கங்கள்!

  ReplyDelete
 21. இன்றைய சீனியர் பதிவர்களுக்கு எனது வணக்கங்கள்....

  தொடர்ந்து அசத்தறீங்க!

  ReplyDelete
 22. அனைத்து மூத்த பதிவர்களையும் மரியாதை செய்து
  இங்கு அழகுபடுத்தியுள்ளீர்கள், நன்றி!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது