07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, December 26, 2014

இயல்பு முகம் ;

குருநாதனின் இயல்பு முகம் :


       ( அனைவரும் நீண்ட பதிவாக எழுதுகிறீர்கள். சுருக்கமாக எழுத வேண்டுமென்று கேட்டார்கள். என்னால் இயல்வில்லையய்யா. பொறுத்தருள்க. இன்னும் ஒருநாள் தான் )

          அனைவருக்கும் வணக்கம். இன்று வலைச்சரப் பொறுப்பேற்று ஆறாம் நாள். காலையில் தோழர் கஸ்தூரி தொலைபேசியில் அழைத்தார். நல்லா எழுதுறீங்க, ஆனால்என இழுத்தார். என்ன நண்பரே ? எனக் கேட்பது போல் அமைதியாக இருந்தேன். தமிழ்மணத்துல ரெண்டு தான் போயிக்கிட்டு இருக்குது? என்ன பண்றீங்க? என்றார். எனக்குப் புரியவில்லை. இடுகைகளில் த.ம. 1 என்பதை தமிழ் மணக்கட்டும் என்ற பின்னூட்டமாகவே நான் கருதினேன். தமிழ்மணம் சார்ந்து இன்னும் எனக்கு அவ்வளவாகப் புரிதல் இல்லை. வலைச்சரத்தின் வாக்குகள் முக்கியம் நண்பரே , என்று கூறிவிட்டுப் பரவாயில்லை. என்று தொலைபேசியை வைத்து விட்டார். இந்த வாரத்தில் வலைச்சரத்தின் வெளி பரவலாக்கப்படவில்லையோ என எனக்குள் மனச்சோர்வு ஏற்பட்டுவிட்டது. நான் ஆசிரியராக இருந்து இத்தளத்தின் வடிவச்சாயல் பாழ்பட்டுவிட்டதோவென என்னுள்ளே எண்ணங்கள் வதைத்துக்கொண்டேயிருந்தன. தோழர் தமிழ்வாசி பிரகாஷ் அவர்களிடம் என் இயலாமைக்காய் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.

        பயன்பாட்டுல இருக்குற தளத்த அறிமுகப்படுத்துங்க சகோ என்ற யோசனையை முன்வைத்துவிட்டுச் சென்ற கஸ்தூரிக்கு என் நன்றிகள். அறிமுகப்படுத்திய தளங்களை அவர்களுக்கு நினைவூட்ட வேண்டுமென்று போகும்போது சொல்லிவிட்டுச் சென்றதும் எனக்கு ஒரு புள்ளிக்கான அறிமுகம் கிடைத்தது. (  வாக்கு ரொம்ப முக்கியம் )        தமிழகத் தமிழாசிரியர் கழகம் புதுக்கோட்டைமாவட்டக்கிளை கடந்த ஆண்டு அக்டோபர்த் திங்களில் முனைவர். அருள்முருகன், கவிஞர். முத்துநிலவன், ஐயா திருப்பதி , புலவர். மகாசுந்தர் , இயல்பெழுத்தாளர் கஸ்தூரி ஆகியோரது முன்னிலையில் கணினித்தமிழ்ப் பயிலரங்கம் ஒன்றை நடத்தியது. அதில் நாற்பதுக்கும் மேற்பட்டபுதியவர்களும், இருபதுக்கும் மேற்பட்ட மூத்த வலைப்பதிவர்களும் கலந்து கொண்டனர். கருத்துகளை வழங்கிச் சென்றனர்.

          அதில் கலந்துகொண்ட வலைப்பதிவர்களை இன்று அறிமுகம் செய்வதில் பேருவகை அடைகிறேன். அதில் எங்களுக்கெல்லாம் மிகுந்த மேலதிகமான தொழிநுட்பங்களை வழங்கிய நண்பர்கள் திரு. திண்டுக்கல் தனபாலன், கரந்தை ஜெயக்குமார், முனைவர்.ஜம்புலிங்கம், மூங்கில்காற்று முரளிதரன், எட்வின், ஊமைக்கனவுகள் விஜீ, தமிழிளங்கோ போன்றோரை மறக்கமுடியவில்லை. அவர்களின் கருத்துகளின் பால் ஈர்க்கப்பட்ட நாங்கள் மலரை மொய்க்கும் வண்டாய் வலைப்பூவிற்குள் சுற்றத்தொடங்கி விட்டோம் என்றால் மிகையாகாது.
அறிமுகத்தைத் தொடங்குவோமா?


             இவருக்கு மட்டும் ஒருநாளைக்கு இருபத்துநான்கு மணி நேரத்தைவிட அதிகம் கிடைத்திருப்பதாக நான் நினைப்பதுண்டு. புருவம் வியந்த்துண்டு.என்னை விட இவர்  அதிகத் தளங்களில் இயங்கினாலும் தன் வலைப்பூவில் எழுதத் தயங்கியதே இல்லை. சமுகச் சிந்தனைகளில் அவரது ஈர்க்கும் கருத்துகள் பல என்னை மிகவும் சிந்திக்க வைத்த்துண்டு. சமீபத்தில் மலேசியா போன்ற வெளிநாடுகளெல்லாம் சென்று வந்த இந்த்த் இளமைத்தமிழின் தெனாலிராமன் கதையின் இறுதிவரிகள் என்னை வெகுவாய்க் கவர்ந்துவிட்ட்து.

நம் பிள்ளைகள் படிப்பாளியாக வரவேண்டுமா? சிந்தனை வாதியாக வரவேண்டுமா?
வகுப்பறை இன்னும் மௌனமாகவே உள்ளது ஐயா. என்ன செய்ய இயலும் ? என்ற வினாவைத் தவிர ….ஐயா முத்துநிலவன் என்னைக் கவர்ந்த வலைப்பூவேர்.


         எங்களின் தமிழாய்வு வழிகாட்டி இவர்தான். ஒரு மனிதன் தன்னை எவ்வாறு பல தளங்களில் ஈடுபடுத்திக்கொள்ளல் வேண்டுமென்ற நல்வழி வழங்கி வருபவர். இலக்கியத் தளங்களிலும் நிருவாகத் தளங்களிலும் இணைகோடுகளாய் இவர் பணியாற்றும்  பாங்கு கண்டு பொறாமையுற்றிருக்கிறேன். இவருடன் பல கல்விசார் செயல்திட்டங்களில் பணியாற்றிய பேறு எனக்குண்டு. இவரின் வருகைப்பதிவுகள் என்ற ஆவணப்பதிவு ஆய்வாளர்கள் மட்டுமல்ல நாமும் வரலாற்றின் தடம் அறியும் பாதையாகவே அமையும்.

            கலைமகள் கல்லூரி உயர்நிலைப் பள்ளியின் பார்வையாளர் பதிவேடு இங்கு வருகை தந்த/ கடிதம் எழுதிய உ.வே.சா. முதலிய ஜாம்பவான்களின் கருத்துகள், பாடசாலையின் அமைப்பு, பாடத்திட்டம், பிற செயல்பாடுகள், கற்பித்த ஆசிரியர்கள், கல்வி பயின்ற பெண்மணிகள் முதலிய தகவல்களை அறிவதற்கான குறிப்பிடத்தக்க ஆவணமாக விளங்குகிறது. - கொஞ்சம் இப்பதிவையும் படித்துப்பாருங்கள் !


        நான் வியந்த வியந்து கொண்டிருக்கிற ஒரு சிறந்த ஆசிரிய ஆளுமை இவர். இவரின் இயலெழுத்துகண்டு நான் என்னையே கோபித்துக்கொள்வதுண்டு. ஒரு தமிழாசிரியனாக நான் என்ன செய்ய வேண்டுமென்று நினைத்துக்கொண்டிருந்தேனோ அதை அவர் திறம்படச் செய்து கொண்டிருக்கிறார். இவரின் சமூகம் சார்ந்த கோபங்கள் ஆழமானவை. ஒரு ஆசிரியரின் சமூகக் கோபம் புதிய தலைமுறையில் எழுச்சியை உருவாக்குமென்ற பொதுப்புத்தியில் இவரின் பணி போற்றுதற்குரியது.
பல தலைமுறைகளாக கல்வி மறுக்கப்பட்ட சமூகங்களுக்கு அதை வாரி வழங்கிய பெரும் சமூகப் போராளி , சமூகச் சிற்பி கிறிஸ்துவம்இவரின் இந்தப் பதிவு என் மனத்தில் கிறிஸ்துவத்தின்பால் எனக்கிருந்த எண்ணஎதிர்வினை அகற்றியிருக்கிறது 
கொஞ்சம் போய்ப்பாருங்கள் .இந்த ஆசிரியரின் சமூகப்பொறுப்பினைப் போற்றுங்கள்.


         இவரை நான் சில தருணங்களில் மட்டுமே சந்தித்ததுண்டு. ஆனால் இவரின் எழுத்துகள் இயல்பானவை மட்டுமல்ல. ஒரு தேர்ந்த எழுத்தாளனின் பக்குவப்பட்ட எழுத்துகளாகவே பரிணமிக்கின்றன. இவரும் ஓர் ஆசிரியர். வகுப்பறைச் சுவர்களில் பாடப்புத்தகத்தின் எழுத்துகளை மட்டும் பதிவு செய்யும் இயல்பான ஆசிரியர்கள் மத்தியில் இவர் வேறுபட்டு நிற்கிறார். இவரின் எழுத்துகள் எங்களைப்போன்ற தமிழாசிரியர்களின் இயலாத்தன்மையை சுட்டிக்காட்டுவதாகவே நான் எண்ணுகிறேன். என்னை மேலும் எழுதத்தூண்டும் முன்னெழுத்துகளில் இவரும் ஒருவர்.
 “பட்டாம்பூச்சிகளின் சிறகுபிய்த்து, காலொடித்து
  பால்யம் கடந்தவர்களுக்குத்தான் வாய்க்குமோ 
   பள்ளிகூடங்களில் குண்டுவைக்கும் மனம் “ -  கவிதையின் வரிகளில் காணப்படும்     சமுக முரண்களின் மூலம் என்னைப் பாதித்த்து. நீங்களும் சென்று பாருங்கள். எழுத்தோவியத்தில் மயங்கலாம்.


          என்னிடம் துணிவும் உண்டு. தென்றலும் உண்டு. என்பதான முன்னுரையோடு வலைப்பூவில் வலம் வரும் இவர் எங்களது பயிலரங்கத்தின் மூலமாக வந்தவர். ஆனால் எங்களை விட்டு எங்கோ சென்று விட்டார் ( பதிவுகளில்) இவரை இங்கொன்றும் அங்கொன்றுமாகச் சந்தித்ததுண்டு. போராளியாகத் தன்னை வடிவமைத்துக்கொள்ளூம் கவிஞர்களுள் இவர் முக்கியமானவர். சமூகத்திற்குச் சாட்டையடி தருவதில் இவர்களைப் போன்றவர்கள் இல்லையெனில் சமூகத்தின் முடைநாற்றம் இன்னும் சகிக்கமுடியாதபடியாகிவிடும். சிறந்த எழுத்தாளுமை கொண்ட இவரின் சமீபத்திய வேலுநாச்சியார் பற்றிய இடுகையில் உயிர்த்துப்போனேன். வகுப்பறைக் கற்றலில் இவரின் பல கவிதைகளை ஆட்கொள்வதுண்டு. இவர் கவனிக்கப்பட வேண்டியவர் மட்டுமல்ல பின்பற்றப்படுபவரும் கூட.


        என் அறிமுகத்தில் குறிப்பிட்டதைப் போல என்னை இலக்கியத் தளங்களில் அறிமுகப்படுத்திய நால்வருள் இவர் முக்கியமானவர். சிறந்த படைப்பாளி மட்டுமல்ல. இவர் கைதேர்ந்த நடிகரும் கூட. கல்வித் தளங்களில் இவருடம் பணியாற்றிய தருணங்கள் மறக்கமுடியாதவை. என்னைப்போல தொழில்நுட்பம் இவருக்குப் பிரச்சனை என்றாலும் இவரின் எழுத்துகளில் ஓர் ஆழம் உண்டு. சிலம்பு பற்றிய இவரின் கட்டுரையும் , பத்தாம்வகுப்புத் தமிழ்ப்பாடம் சார்ந்து இவர் எழுதிய கட்டுரையும் பேசப்படுபவவை. சிறந்த சொல்வித்தகர். வெல்லாற்றல் மிக்கவர். சிறந்த ஆசிரியப் படைப்பாளியான இவரின் பாரதி பற்றிய அறுசீர்விருத்தம் பாரதியின் புகழ் பரப்பும் மணிமகுடங்களில் ஒன்று.
முடங்கியே கிடந்தி ருந்த
       மொழியினைச் சிகரம் ஏற்றி.. என்ற வரிகளில் தெரிகிறது இவரின் ஆளுமை.


       நான் வியந்து நிற்கும் ஆசிரிய ஆளுமை கவிஞர் சுவாதி. தன் பள்ளியை ஒரு முன்மாதிரிப்பள்ளியாக மாற்றுவதில் இவர் கொண்டுள்ள அக்கறை நம்மையெல்லாம் சிலிர்க்க வைக்கிறது.நல்ல ஆசிரியராகவும் சிறந்த படைபாளியாகவும் வலம் வருகிற இவரது தளத்தின் இடுகைகள் சிறப்பானவை. நான் படித்த இராசயனக்கலவையெனும் கட்டுரை சூழல் மாற்றத்தில் அவர் கொண்டுள்ள அக்க்றையைப் பதிவு செய்திருக்கிறது. இவரின் எழுத்துகளில் சமூக அக்கறை தெரிகிறது இவரின் பல புத்தகங்களும் நான் வாசித்த்துண்டு. இவரின் தளம் ஒரு பிரமிப்பை ஏற்படுத்துமென்பதில் ஐயமில்லை.


       பயிலரங்க வலைப்பதிவர்களுள் குறிப்பிடத்தக்கவர். எழுத்தாளுமை நிரம்பியவர். இளைஞ்ர். எங்களின் பாசமிகு இளையர்.என்னைப் போன்ற சோம்பேறிகளுக்கு இவரின் சுறுசுறுப்பு முன்மாதிரியாக்க் கூட இருந்த்து எனலாம். இவரின் வெண்பா என்னை ஈர்த்த்து.
உலகம் விழிப்பதற்கு முன்னே விழித்தெழுந்து
நலமாகும் நற்பணி செய்வீர் -பெண்கள் பற்றிய இவரின் வரிகள் எனைக் கட்டிப்போட்டது. வலைப்பூச் சிகரங்களை அடுத்த பதிவில் தொடர்கிறேன்.


                             ( தொடர்ந்து வருகிறேன் மாலையில் .. )

22 comments:

 1. இன்றைய பதிவர்கள் அனவரும் நான் தொடரும் நண்பர்களே அனவருக்கும் வாழ்த்துகள் நண்பரே...
  தமிழ் மண இணைப்புடன் வாக்கும் ஒன்று.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் முதல் வருகை எனக்குப் பேருவகை. எப்படி ஐயா சென்ற வாரம் எழுதினீர்கள் ?
   இவ்வாரம் எனக்கு மிகவும் கடினமானதாக அமைந்திருகிறது ஐயா. ஏனெனில் தொழில்நுட்பம் தெரியவில்லை.

   Delete
 2. நட்புக்களின் அறிமுகம் அருமை... வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஐயா. வந்தமைக்கும் வாழ்த்தியமைக்கும்

   Delete
 3. சென்ற ஆண்டு தொடக்கத்தில் நீங்கள் வழங்கிய c.r.c வகுப்பையும் அதில் சிரத்தையோடு சமர்பித்த பவர் பாய்ன்ட் பற்றியும் அன்றெல்லாம் கஸ்தூரியிடம் நான் வியந்தபடி இருந்தது நினைவுக்கு வருகிறது சார்....தாங்கள் என்னை அறிமுகம் செய்ததது பெருமையாக இருக்கிறது,,,ஆனால் **என்னை மேலும் எழுதத்தூண்டும் முன்னெழுத்துகளில் இவரும் ஒருவர்.*** இதெல்லாம் அதிகம். எங்கள் முன்னோடி ஆசிரியர்களில் நீங்களும் ஒருவர் அல்லவா:)

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ. கஸ்தூரி இப்பதிவை பதிவர்களிடம் அனுப்பும்படி கூறியிருந்தார். எனக்கு அது சரியாகப் புரிய வில்லை. தயவு கூர்ந்து இதனை உரிய பதிவர்களிடம் கூறிவிடுங்களேன்.

   Delete
 4. வணக்கம் ஐயா
  வலைச்சரத்தில் ஆசிரியர் பணியைத் திறம்படச் செய்து கொண்டிருப்பது கண்டு மிகுந்த மகிழ்ச்சி. வலைச்சரம் எண்ணற்ற வாசகர்களைக் கொண்டது. அனைவரும் தங்கள் எழுத்துகளை நுகர்ந்திருப்பார்கள் என்பது உறுதி. தமிழ்மண வாக்கு அளிக்க தவறியிருப்பது அல்லது மறந்திருப்பது அவர்களின் பிழையாகவே கருதுகிறேன். தாங்கள் வருந்துவதற்கு எதுவும் இல்லை ஐயா. உற்சாகமாக தொடர்ந்து எழுதுங்கள் ஐயா என்பது என் கருத்து. இப்பதிவில் என்னையும் அறிமுகம் செய்து வைத்து என்னைப் பற்றிய தங்கள் மேலான கருத்துக்கும் என் அன்பான நன்றிகள் ஐயா. ஆழமான எழுத்தைத் தொடருங்கள். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஐயா. குருவி தலையில் பனங்காயென்று இதைச் சொல்வார்கள். தங்களின் வரவு எனக்கு ஆறுதல்.

   Delete
 5. அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருமே அறிமுகமானவர்கள்தான்!
  என்னை அறிமுகப்படுத்தியவர்களும் கூட!
  வலைச்சரத்தில் நினைவூட்டியதற்கு நன்றி அய்யா!
  த ம 2

  ReplyDelete
  Replies
  1. தங்களின் சொல்லாடலும் கருத்தாடலும் அருமை. தங்களைக் கட்டாயம் தொடர்கிறேன். மிக்க நன்றி. வாக்களித்தமைக்கு !

   Delete
 6. அறிமுகங்கள் அற்புதமானவர்கள்
  வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஐயா. தாங்கள் தொடர்ந்து எனக்கு நற்பின்னூட்டங்களை அளித்து வருவது எனக்கு மெத்த மகிழ்வாக உள்ளது.

   Delete
 7. தாமத வருகைக்கு மன்னிக்க வேண்டுகிறேன் - த.ம.5
  தங்கள் எழுத்தாற்றல் முழுமையும் இன்னும் வெளிப்படவில்லை என்றே கருதுகிறேன்... இன்னும் இன்னும் தொடர்ந்து இயங்குங்கள்.. நன்றி அய்யா.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஐயா. வந்தமைக்கும் வாழ்த்தியமைக்கும் நல்லாசனைக்கும்.

   Delete
 8. அய்யா வாழ்த்துக்கள் !.
  தங்களின் 'தகத்தகாயத் தமிழ்' மிளிர்கிறது..!...தயக்கமென்ன..?
  தொடருங்கள் பயணத்தை..!

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு நன்றி. நமது கண்னினிப் பயணம் இன்னும் மெதுவாகவே செல்கிறது. இன்னும் வேகப்படுத்த வேண்டும் என் எண்ணுகிறேன்.

   Delete
 9. நமது நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஐயா. வந்தமைக்கும் வாழ்த்தியமைக்கும்.

   Delete
 10. My battery went dry when we spoke..
  forgive me.
  It was a friendly remainder.. New bloggers usual did not follow etiquette. etiquette like thanking you for the intro, and encouragement.
  I too was like that. In those early days ...
  You need to attract people towards your editorship ..
  Seasoned bloggers like Tamil Ilango, Muraleetharan, Jyakkumar are the best examples of netiquette..
  Sorry for the delayed arrival . I am in Manapparai Now.. From a Private Browsing center ..
  tha ma... ++
  kudos..

  ReplyDelete
  Replies
  1. தகவலுக்கு மிக்க நன்றி. இன்னும் நான் நிறையக் கற்றுக்கொள்ள வேண்டுமென்று கூறுகிறீர்கள் என்று மட்டும் தெரிகிறது. மிக்க நன்றி. முயலுகிறேன்.

   Delete

தமிழ் மணத்தில் - தற்பொழுது