07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, December 17, 2014

புதன், புனிதாவுக்கு விரதம் – நாலு பேருக்கு நன்றி (M.R. ராஜாமணி 1983)தமிழ் வாழ ! அந்தத் தமிழோடு நாமும் வாழ !
நேற்று.... சொன்னது... ஆமா.. ஆமா... முருகனை, சித்தப்பா, என்றோ, பெரியப்பா என்றோ சொல்லக்கூடாது...
 முருகா என்றேன், திரும்பி சுற்றும் முற்றும் பார்த்தார் யாருமில்லை முருகாவா ? யாரைடா ? சொன்னே ? உங்களைத்தான் முருகா சொன்னதுதான் தாமதம் ’’சட்டீர்’’ எனஒரு சப்தம் எனது செவிட்டில் ஒரு அறை விழுந்தது... முளைச்சு, மூணு இழைவிடலே என்னயவே முருகான்னு சொல்றியா ? ஒட்றா.. பக்கத்தில் கிடந்த தகட்டு உளியை (அகலமான உளி) எடுக்க, உயிர் பிழைத்தது உலகளந்த நம்பி புண்ணியம் தெறித்து ஓடினேன்....என்னடாது, இவரும் அறையுராரு ? எனக்கு இது மேலும், மேலும் குழப்பமாகியது, குழப்பத்திலேயே நடந்துபோய் கட்டடியான் கோயிலோரம் போய் நின்று வானத்தைப்பார்த்து யோசித்துக்கொண்டு இருந்தேன்... காரணம் வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்தொரு சேதி தரும் (நண்பர்களே... ’’நிழல்கள்’’ திரைப்படத்தின் பாடல் எங்கிருந்து சுடப்பட்டிருக்கிறது தெரிகிறதா ? எங்கள் குடும்பத்திலிருந்துதான் சுட்டவர்கள் வாழ்க வளமுடன் காரணம் எதிரி எட்டப்பனாக இருந்தாலும் எட்டு நாளுக்கு எள்ளுக்கஞ்சியோட விருந்து வைக்கனும் இதுகூட ஞானி ஸ்ரீபூவு சொன்னதே) எனக்கு யோசிக்க, யோசிக்க வாத்தியார் மீது (வலைப்பதிவர் திரு. பாலகணேஷ் அல்ல) கோபம் கோபமாக வந்தது, அவரால்தானே இத்தனை அறை விழுந்தது, தெளிந்த நீரோடைபோல் சென்று கொண்டிருந்த என்வாழ்வில் புயலை வீசிவிட்டாரே  !அந்தவழியாக JOGGING சென்று கொண்டிருந்த எனது அய்யா ஞானி ஸ்ரீபூவு என்னைப்பார்த்து விட்டார் என்னடா கில்லர்ஜி இங்கே என்னடா செய்றே ? என்றார் இவரிடம் சொல்வோமா ? இல்லை, இவரும் ஒருஅறை விடுவாரா ? குழப்பமாய் தயங்கி, தயங்கி வாத்தியார் மீது இருந்த கோபத்தை கொட்டி விட்டேன், அய்யா ஸ்ரீபூவுக்கு வாத்தியார் மீது கோபமாகியதும், எனக்கு சந்தோஷமாகியது, நல்லவேளை அய்யா அறையலே, அவன் யாருடா ? உன்அப்பனை பெரியப்பான்னு சொல்றதுக்கு. காலைல நானும் உன்கூட பள்ளிக்கூடத்துக்கு வர்றேன், வா ! என்று வீட்டிற்கு கூட்டிவந்து விட்டார். மனது நிம்மதி பெருமூச்சுவிட வீட்டை நோக்கி நடந்(தோம்)தேன்...
தொடரும்....
வணக்கத்துடன் உங்கள் கில்லர்ஜி.
விழி இழந்தோர்களின் கேள்வி மட்டுமல்ல
அவர்களின் நிலைப்பாட்டிலிருந்து
இந்த கில்லர்ஜியின் கேள்வியும் கூட
யாரிடம். என்ன ? கேள்வி ? வேறு யார் ?
இந்த பரந்த உலகின் மேலாளரிடம்தான்.
காணொளி.
இரண்டு தினங்கள் முன்பு தேவகோட்டைக்கு பக்கத்து ஊருக்காரர் நிழல்பூச்சி வைத்து ஒரு புகைப்படம் போட்டு இருந்தாரு நாம காணொளி போடுவோம்
டலவாம்புங் வாலோங்
 
தரணியெங்கும் சென்றாலும் தமிழ் மொழியை மறவாதே இது ஞானி ஸ்ரீபூவு வாக்கு. நமது இந்தியாவை விட்டு மாற்று நாட்டுக்கு பொருள்தேடிச் சென்றாலும் தாய்மொழியாம் நம் செந்தமிழை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கும் தமிழ்ப்பற்றாளர் மாசு குறையாத சொக்கத்தங்கம் இந்த குணாதிசயங்கள் இவருக்கு எப்படி ? கிடைத்தது என நான் மொட்டை மாடியில் மல்லாந்து படுத்துக்கொண்டு எனது மொட்டைத் தலையை தடவிக்கொண்டே... ஆலோசித்துப் பார்த்தேன் ஆம், இவர் தேவகோட்டைக்கு பக்கத்து ஊர்க்காரர் என்பதால், அதன் காற்றை சுவாசித்து இழுத்துக்கொண்டார் என்றே கருகின்றேன். பழகுவதற்க்கு நல்ல நண்பர் உண்மையானவ(ன்)ர் என்ன ? ஒண்ணு நான் எங்குபோய் கருத்துரை இட்டாலும் அப்பாவி என்பதால், அங்கும் வந்து கருத்துரையில் எடக்கு மடக்கு ஏகாம்பரம் மாதிரி சீண்டிக்கொண்டே இருக்கிறார்... என்னைப்பற்றி சரியாத்தெரியலை, தம்பி Tony Abbott க்கு (Prime Minister of Australia) நான் ஒருபோண் செய்தால் ? போதும் என்னோட பவர் தெரியும், சரி நம்மூர்க்காரர் அப்படினு போறேன், சரி விசயத்துக்கு வருவோம் இவரின் தமிழ்ப்பற்றைப் பார்க்க வேண்டுமா ? அவர்தான் ஆஸ்திரேலியாவில் குடும்ப சகிதமாய் வாழும் எனது இனிய நண்பர் திரு. சொக்கன் சுப்பிரமணியன் அவர்களின் பதிவைக்காண கீழே சொடுக்குக.
 
டலவாம்புங் சியாம்
 
தன்வாழ்வில் வந்த நல்ல மனிதர்களை நமக்கு உதவிய மனிதர்களை, மறவாது இருப்பது என்பது எல்லா மனிதருக்கும் வராது இந்த பதிவர் வெள்ளந்தி மனிதர்கள் என அவரது மனசில் உள்ள அனுபவங்களை அழகாக பகிர்கிறார் இவர் தொடர்கதையும் எழுதுகிறார், அபுதாபியில் இருக்கும் இவர் தி கிரேட் தேவகோட்டைகாரர் இவரும் நானும் அடிக்கடி சந்தித்து பேசிக்கொள்வோம் இப்பொழுதெல்லாம் இவரை சந்திக்க போனால் ? மிகமிக கவனமாக இருக்கிறேன் காரணம் ’’ஆச்’’ என்று தும்மினால்கூட மறுநாள் தனது தளத்தில் நேற்று கில்லர்ஜியை சந்தித்தேன் ’’இச்’’ என்று தும்மினார் அப்படினு பதிவை போட்டுறாரு... இது தப்புனு நான் சொல்லவில்லை நண்பர் பகவான்ஜி மாதிரியானவர்கள் ’’இச்’’ என்ற ஒரு வார்த்தையை மட்டும் எடுத்துக்கொண்டு ஜோக்காளியில் நேற்று நண்பர் கில்லர்ஜி அபுதாபியில் ’’இச்’’ கொடுத்தார் அப்படினு போட்டுட்டாருனா ? என்னோட IMAGE என்னாகும் ? சரி சப்போஸ் நண்பர் ஒபாமா பாத்துடுறாருனு வச்சுக்கங்க.. வெள்ளை மாளிகைக்குள்ளே மீசையை முறுக்கிக்கொண்டு நான் நடக்க முடியுமா ? வலை நண்பர்களே.. நீங்களே சொல்லுங்கள். இதோ... மனசு வலைபதிவர் இனிய நண்பர் சே.குமார் அவர்களின் பதிவைக்காண கீழே சொடுக்குக.
 
தட்லும்பு
 
தென்றல் வந்து என்னை சுடும் ஆம் நண்பர்களே... தென்றல் சுடும் தன்னை தென்றல் என்றும் கீதம் பாடுவேன் எனச்சொல்லிக்கொண்டு புயலாய் சீறுகிறார் கவிதையின் வழியே... இவரின் கவிதையின் ஆழத்தை கண்டு மதுரை விழாவில் கண்டபோது பேசுவதற்க்கு அஞ்சினேன் பிறகு இவர் பேச்சைத் தொடங்கியபோதுதான் தெரிந்தது தென்றல்தான், கீதம்தான் 80 இப்பொழுதும்கூட எமக்கு ஐயமுண்டு காரணம் ‘’ஒரு கோப்பை மனிதம்‘’ அருந்தியதின் தாக்கம் ஒருவேளை அவர் வேறு, இவர் வேறோ ? இருக்கலாமே... தமிழ் தொ(ல்)லைக்காட்சிகளில் வரும் வாணி ராணி போல இரட்டை வேடமோ ? எனக்கென்னவோ அப்படித்தான் தோன்றுகிறது நான்கு வரிகளில் ஹைக்கூ கவிதையில்கூட வாழ்வியல் உண்மையை சொல்லமுடியுமா ? முடியும் என்பதை இவர் நிரூபித்துள்ளார் இவரின் கோபம் நியாயமானதே ஆம் இறைவன் படைத்த இயற்க்கைக்கு தண்டனை கொடுப்பதற்க்கு நாம் யார் ? அதுவும் மரணதண்டனை ஏன் ? எதற்க்கு ? தென்றல் இனிய நண்பி திருமதி. கவிஞர். மு. கீதா அவர்கள் இவரின் பதிவைக்காண கீழே சொடுக்குக.
 
தட்லும்புங் இஷா
 
கவிதை எழுதலாம் கவித்தீ எழுதமுடியுமா ? முடியும் ஒருவேளை கடலின் தீவில் வாழ்வதால் கவித்தீயை கொளுத்தீ விடுகிறாரோ... ஆம் பாலைவனத்தீவில் வாழ்ந்தாலும் தம்மிடத்தை வசந்த மண்டபம் என்கிறார் இந்தக்கவிஞர். காரணம் எல்லாம் கவிதை எதிலும் கவிதை சிறந்த வர்ணனையாளர், நல்ல பண்பாளர், எமது இனிய நண்பர் அபுதாபி அண்ணல் திரு. மகேந்திரன் அவர்கள் இவரின் பதிவைக்காண கீழே சொடுக்குக.
 
தட்லும்புங் டலவா
 
ஆஷா மீது ஆசைப்படு, அவள் கிடைக்காவிடில் ஆசையைவிடு. இது ஞானி ஸ்ரீபூவு வாக்கு. ஆசைபடலாம் ஆனால் ? பேராசைப்படாமல் ஆசைப்படுவது எப்படி ? இதை அழகாக நமக்கு தனது கேள்வி - பதில் மூலம் வெளிப்படுத்திய காவியகவி வலைப்பூ பதிவரின் இந்த பதிவு என்னைக் கவர்ந்தது இவர் கவிஞரும்கூட ஆனால் ? இவரின் கவிதையை விமர்சிக்கும் பக்குவம் எமக்கு போறா... அவர்தான், கனடாவில் வாழும் இலங்கை சகோதரி எனது இனிய நண்பி திருமதி. இனியா அவர்களின் பதிவைக்காண கீழே சொடுக்குக.
 
தட்லும்புங் தட்லோ
 
திக்கெட்டும் நயா பைசாவுக்கு மக்களுக்கு பிரயோசனம் இல்லாதவனுக்கு சமூகம் பிறந்தநாள் வாழ்த்து கொண்டாடுகிறது தெருவெல்லாம் பாலாறு கட்டையிலே போறவங்கே கட்டவுடிற்க்கு ஊற்றுகிறார்கள் தமிழ் வளர்த்தானே பாரதீ அவனுக்கும்தான் பிறந்தநாள் வந்தது யாருக்கு தெரிந்தது தொலைக்காட்சிகளின் தொல்லைக்கு இல்லாமல் போனதே எல்லை அவனைப்பற்றி எவனுக்கும் கவலை இல்லை நம்மைப்போன்ற வலைப்பூ இதயங்களைத்தவிற புதுவையில் பிறந்து ஃப்ரான்ஸில் வேலை நிமித்தம் குடியேறிய தமிழனுக்கு வந்ததே உணர்வு நண்பா நீர் வாழ்க உமது குலம் வாழ்க ஆம் நண்பர்களே எனது நண்பர் திரு. யாதவன் நம்பி அவர்கள் எட்டையபுரத்தானுக்கு இயற்றிய கவியை காண வாரீர்...
 
தட்லும்புங் அபாட்
 
மதுரை விழாவில் நான் சந்தித்த அற்புதமான மனிதர் எமது நண்பரின் செய்தியை எமக்கு கொண்டு வந்து தந்து என்னை மோசடி பேர்வழிக்காரர்களிடமிருந்து காப்பாற்றியவர்.
இருட்டில் வாழும் பாமர மனிதனை வெளியே வா ! என அறைகூவல் விடுகிறார் இந்த மனிதர் பகுத்தறிவுத்  தீக்குச்சியை உரசும் வரை உனக்குள் வெளிச்சம் இல்லை.. என்றும் சொல்கிறார் ஏன் ? நீங்களும் தெரிந்து கொண்டால் நல்லதுதானே ஆம் நண்பர்களே... நான் அன்புடன் மணவையாரே... என்றழைக்கும் எமது இனிய நண்பர் திரு. மணவை ஜேம்ஸ் அவர்கள் இவரின் பதிவைக்காண கீழே சொடுக்குக
 
தட்லும்புங் லிமா
 
வழுக்கி விழுந்தவன் வழியில் போகாதே ஞானி ஸ்ரீபுவு வாக்கு ஆனால் ? வழியில் நடக்கும், மனதை வலிக்க வைக்கும் சம்பவங்கள், சமூக குழப்பங்களை சிந்திக்க வைத்தும், சந்தி சிரிக்கவும் வைக்ககூடிய கதைகளை மூளையென்ற கிணற்றிலிருந்து வாளி வாளியாக இறைத்து நமக்கு தருபவர், சமயத்தில் கவிஞர் வாலியைப்போல் குட்டிக்கதைகளும் சொல்வார், இவரது செயல் வாழிய வாழியவே... இவரை குட்டிக்கதை குருசாமி என்றுகூட சொல்லலாம் ஆனால் ? சாமியை நம்பாத ஆசாமி எமது இனிய நண்பர் திரு. வலிப்போக்கன் அவர்களின் பதிவில் என்னை மிகவும் கவர்ந்தவை கீழே சொடுக்குக.
 
தட்லும்புங் அனிம்
 
நண்பர்களே, நாம் மது (வலைப்பதிவர் திரு. மது அல்ல) குடித்திருக்கலாம், சுருட்டு குடித்திருக்கலாம், சிகரெட் குடித்திருக்கலாம் பீடி குடித்திருக்கலாம், டீ குடித்திருக்கலாம், காஃபி குடித்திருக்கலாம், கூல்ட்ரிங்க்ஸ் குடித்திருக்கலாம், பால் குடித்திருக்கலாம், ஏன் ? விஷம்கூட குடித்திருக்கலாம், (இப்ப, என்னய்யா ? சொல்ல வர்றே) அட ஏங்க ஒரு ஃப்ளோவா எழுதிக்கிட்டு இருக்கும்போது ஊடாலே, ஊதுனா ? மறந்துட மாட்டேனா ? என்னமோவுல... ஆங் விஷம்கூ (யோவ் இதைப்படிச்சா ? நான்தான் விஷம் குடிக்கணும்போல) சரி விடுயா வந்துட்டேன் அதாவது கன்னாபிஸ் சாடிவா குடிச்சு இருப்போமா ? (யோவ். என்னய்யா ? கன்னைபின்னா உளர்றே... கஞ்சா அடிச்சு இருக்கியா ?) இருய்யா முடிச்சுட்டேன் ஆம் நண்பர்களே கன்னாபிஸ் சாடிவா குடிச்சு இருப்போமா ? சிவபெருமானே குடிச்சு இருக்காரு... என்ன குழப்பமா இருக்கா ? (ஆரம்பத்துலருந்தே அதைத்தானே செய்யிறே...) ஆம் எமது நண்பர் திரு. மெக்னேஷ் திருமுருகன் அவர்களின் பதிவில் கிடைக்கும் விடை இதோ இணைப்பு கிளிக்குங்க..
 
இன்றைய கொசுறு
நண்பர்களே,  இந்தமாதம் 2-ம் தேதி U.A.E யில் தேசியதினம் அன்று எமது நண்பர் கவிஞர் திரு. மகேந்திரன் அவர்கள் அவரது நண்பர் திரு. கண்ணன் அவர்களுடன் தி கிரேட் இந்கியாவுக்கு சென்றார் நானும் நண்பர் மனசு சே.குமார் அவர்களும் வாழ்த்தி விமான நிலையத்திற்க்கு வழியனுப்பி வைத்தபோது.... இடம்: No 63/45788 மெர்க்குரி ஹோட்டல் ஹம்தான் தெரு அபுதாபி U.A.E
தாய்
More
Observation
Taleteller
Hollow
Effulgent
Rail
அதிக அபிப்பிராய கதை சொல்லுகிற பரிசுத்தமான ஒளிவுடன் பிரகாசிக்கும் இருப்புப்பாதை.
நன்றி
அன்புடன்
என்றும் உங்கள்
Devakottai KILLERGEE Abu Dhabi
(கில்லர்ஜி தேவகோட்டையான்)
 
அன்பு இதயங்களுக்கு ஒரு ’’ப்ளாஷ் நியூஸ்’’ எனது வலைப்பு கில்லர்ஜியில் ப்ளாஷ் நியூஸ் தொடங்கப்பட்டு இருக்கிறது ஒருநாள் ஐயன் வள்ளுவனின் திருக்குறளும், மறுநாள் பையன் கில்லர்ஜியின் தெருக்குரலும் ஒலிக்கும் 80தை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறேன்
 
தற்போது எமது வலைப்பூ கில்லர்ஜியில் ஊர்க்கதை ‘’கிளிக்’’கலாமே...
வாழ்க ! தமிழ்.
* * * * * * * * * * * * * * * * * *


79 comments:

 1. ’’நிழல்கள்’’ திரைப்படத்தின் பாடல் எங்கிருந்து சுடப்பட்டிருக்கிறது தெரிகிறதா ? எங்கள் குடும்பத்திலிருந்துதான் சுட்டவர்கள்// அடப்பாவி இது தெரியாமப் போச்சே! ஹஹஹஹ் அதான் ஸ்ரீ பூவு காப்பாத்திட்டாருல்ல அப்புறம் என்ன தொடரும்?!!!

  நிழல் நு படம் பெயர் வந்த உடனே "நிழல்" காணொளி கொடுத்துருக்கீங்க அருமை! பரவாயில்லை நீங்க நடிக்க வராட்டாலும், உங்க நிழலையாவது அனுப்பி வையுங்களேன்! இது எப்புடீ?!!
  அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! நண்பர்களும் கூட! கலக்குங்கள்!

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க, இப்பவாவது உங்களுக்கு புரிஞ்சுச்சே பெரும்பைலும் இதையெல்லாம் நான் வெளியே சொல்றதில்லை காரணம்.
   //வெளியே சொன்னால் வெட்கக்கேடு//
   சரி உள்ளே சொல்லலாமே அப்படினு கேட்கிறீங்களா ?
   //உள்ளே சொன்னால் உறுத்தக்கேடு//
   சரி மறைவா சொல்லலாமே அப்படினு கேட்கிறீங்களா ?
   //மறைவா சொன்னால் அது மானக்கேடு//
   அப்படினு ஞானி ஸ்ரீபூவு சொல்லி இருக்காரு..
   ஆமா பார்த்தீங்கள்ல ஒருத்தரு கருப்பா ஒரு ஃபோட்டோவை போட்டுக்கிட்டு ஆச்சாக்கும், பூச்சாக்கும்னு சொன்னா ? நமக்கு கோபம் வராதா ? அதான் வீடியோவே போட்டேன் இது, எப்பூடி ?
   என்னாது ? நிழலை அனுப்பி வைக்கவா ? முதல்ல ‘’செக்’’ கொடுத்து அனுப்புங்க...

   Delete
 2. அழகான முகப்புரை முருகன் பாவம்!ஹீ

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் நண்பா தனியாக இருப்பது நல்லதல்ல தோப்பாவோம் நன்றி.

   Delete
 3. இன்றைய அறிமுகங்கள் அனைவ்ருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. நா இப்போ தூங்கறனா முழிச்சிட்ருக்கனா ? ஐ மீன் இதெல்லாம் கனவா ? இல்லை நனவா ? நா வலைச்சரத்துலயா ?

  இப்போனு பார்த்து 'நன்றி'ய தவிர வேற வார்த்தைகள் நன்றி சொல்ல தமிழ்ல கிடைக்கமாட்டேங்குதே !! அதனால் ,


  நன்றி அண்ணா !!!

  ReplyDelete
  Replies
  1. வருக, நண்பரே தகுதிக்கு ‘’சான்றிதழ்’’ கொடுப்பது முறைதானே தொடர்க...

   Delete
 5. அம்மாவின் படம்.... அமைதியான அழகு!

  அறிமுகங்களுக்கு வாழ்த்து(க்)கள்.

  நல்லா இருங்க.

  ReplyDelete
  Replies
  1. வாங்க, மேடம் அம்மாவிடம் சொல்லி விடுகிறேன் சுருக்கமாக முடித்து விட்டீர்களே.. நேற்றைய பின்னூட்டம் படித்தீர்களா ? நன்றி

   Delete
 6. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். கலக்கல்
  தம 4

  ReplyDelete
  Replies
  1. வாங்க, சுருக்கமாக முடித்து விட்டீர்கள் ‘’அடி’’ வாங்கியதைப்பற்றி மறந்து விட்டீர்களோ.... நன்றி

   Delete
 7. காணொளி பிரமாதம் சகோ.. உங்க குடும்பத்துலேருந்து எவ்ளோ விசயம் சுட்ருகாங்க சகோ,,இதுக்குத்தான் நோட்புக்கை LIC பில்டிங் மேல இருந்து தவற விடக்கூடாது.. :))
  அறிமுகங்கள் முத்து முத்தாய்..வாழ்த்துக்கள் உங்களுக்கும் அவர்களுக்கும்!

  ReplyDelete
  Replies
  1. சகோ தங்களது கருத்துரை கண்டு வியப்பாக இருக்கிறது உண்மைதான் அய்யா ஞானி ஸ்ரீபூவு மேலிருந்து சுருட்டு குடித்துக்கொண்டு இருக்கும்போது சில நேங்களில் விண்டோரை திறந்து வைத்திருப்பார்.
   //கதவைத்திற காற்று வரட்டும்//
   என்று ஒருவேளை அந்த நேரங்களில் கவிதைகளும் பறந்திருக்கலாம் 80 தங்களது கருத்தின் வழியே அறிந்து கொண்டேன், அதுசரி LIC பில்டிங் தொடக்கத்திலே எங்களுடையதுனு உங்களுக்கு எப்படித்தெரியும் ? விளையாட்டுக்கு சொல்லவில்லை உண்மையிலேயே ஆச்சர்யமாக இருக்கிறது வாழ்த்தியமைக்கு நன்றி.

   Delete
 8. குழலூதும் கண்ணனுக்கு உகந்த மாதம் மார்கழி!
  மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளில்
  வலைச் சரத்தில் "கண்ணன் முகம்" கண்டேன்!
  அலை பாயுதே கண்ணா! - நன்றியினை
  கில்லர்ஜிக்கு (வலைச் சரம்) சொல்ல!
  அலை பாயுதே

  வலைச்சரத்தில் என்னுடன் சேர்ந்து மலராய் மலர்ந்த,
  அனைத்து நண்பர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்!

  அய்யா கில்லர்ஜி அவர்களே!
  யாதவன் நம்பியின் இயற்பெயர் (புதுவை) வேலு என்பதை நினைவூட்ட கடமைப் பட்டுள்ளேன்.

  தொடர்ந்து நான்காவது முறையாக வலைச் சரத்தில் "குழலின்னிசை "இடம் பெற்று இன்னிசை இசைக்க செய்த அந்த நால்வருக்கும் புதுவை வேலுவின்
  சிறப்பு நன்றி!

  (நாளும் நல்ல பல படைப்புகளை தருவதற்கு நண்பர்களின் தொடர் ஆதரவை வேண்டுகிறேன்.)
  நன்றியுடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.fr

  ReplyDelete
  Replies
  1. குழலூதும் கண்ணனாகிய புதுவை வேலு அவர்களின் வரவுக்கு வந்தனம் நன்றி சொல்ல அலைபாயுநி கண்களுக்கு... கணினியில் எத்திசையும் கில்லர்ஜியின் உருவங்கள் உலாவுகின்றதே..
   நண்பரே, இயற்பெயர் வேலுவாயினும் தாங்கள் அனைவரின் கண்களுக்கும் யாதவன் நம்பியாகவே இருக்கிறீர்கள் 80 தாங்கள் அறிய வேண்டியதே சிறந்த படைப்பாளிகளுக்கு அங்கீகாரம் கொடுப்பது என்பது வைரத்தை பட்டை தீட்டுவது போல் ஆகவே தங்களைப்போன்ற வைரத்தை செதுக்கிய ஊழியனாக இருப்பதில் மகிழ்ச்சியே நண்பரே நான் தங்களது தளத்தை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறேன்... யாதவன் ந(ண்)பியே, தங்களை நம்பியே எமது தளம் கில்லர்ஜியும் இருக்கிறது 80தை நினைவில் கொள்க நன்றி தொடர்பில் இருப்போம்.

   Delete
 9. என்னை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி நண்பரே. அதிலும் குறிப்பாக WHY SPEAK TAMIL பதிவை அறிமுகப்படுத்தியதற்கு ஸ்பெஷல் நன்றிகள். இன்றைக்கு புலம்பெயர்ந்த நாட்டில் குழந்தைகள் அதிகமாக கேட்கப்படும்
  கேள்வி தான் அது.
  நீங்க நல்லா டோனி அப்பாட்டுக்கு போன் செய்யுங்கள். அவருக்கு தான் என்னைய தெரியாதே.
  இன்றைக்கு என்னுடன் அறிமுகம் ஆன மற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நான் உண்மையை உண்மையாக எழுத நினைத்து எழுதுபவன் ‘’சிலரைப்போல’’ பெயரில் மட்டும் ‘’உண்மையானவன்’’ என்று வைத்துக்கொள்(ல்)வதில்லை.
   //நீங்க நல்லா டோனி அப்பாட்டுக்கு போன் செய்யுங்கள்//
   என்னை உசுப்பேற்றிவிடாதீர்கள் 80தை அறியத்தருகிறேன் பெரும்பாலும் நான் மொபைல் எடுக்கிறது இல்லை எடுத்தால் ? ? ?

   Delete
 10. அறிமுகப்படுத்தப்பட்ட செய்தியை வந்து சொன்ன சகோதரி உமையாள் அவர்களுக்கு நன்றிகள்

  ReplyDelete
  Replies
  1. நல்லது சொல்லி விடுகிறேன்.

   Delete
 11. இனிய நண்பர்களின் அறிமுகங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி நண்பரே...

   Delete
 12. புதிய நண்பர்களைத் தெரிந்துகொண்டேன். முதல் பத்தியில் தாங்கள் வாங்கிய அடியை நானும் உணர்ந்தேன். ஏனென்றால் இளமைக்காலத்தில் நான் வாங்கிய அடிகள் அதிகம். அடிகள் நம் தவறைத் திருத்திக்கொள்ள உதவும் என்ற நிலையிலேயே நாம் அணுகுவோம்.தவறில்லை. நாளை சந்திப்போம்.

  ReplyDelete
  Replies
  1. முனைவரின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி உண்மைதான் பெரியவர்கள் நம்மை செதுக்குவதற்க்கே சிலநேரங்களில் அப்படி நடந்துகொள்கிறார்கள் என்பது நமக்கு காலம் கடந்த பிறகுதானே உணர்கிறோம் இருப்பினும் இப்படி தினம் சட்டீர் சட்டீர் என அடித்தால் ? வலி தாங்க முடியாமல் வேறு வழி இன்றி எழுதி விட்டேன்.

   Delete
 13. அறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்! ‘நிழல்கள்’ என்ன மற்ற படங்களில் வரும் பாடல்கள் கூட தங்களிடமிருந்து ‘சுடப்பட்டது’ என்றுதான் எங்களுக்குத் தெரியுமே?

  ReplyDelete
  Replies
  1. ஆம் நண்பரே இது இன்றைய சமூகத்திற்க்கு தெரியவில்லையே 80தான் எமது ஆதங்கம் தாங்களாவது தெரிந்து கொண்டீர்களே மனம் நிறைவாக இருக்கிறது நன்றி.

   Delete
 14. ஜி நீங்க அப்படியே அம்மா மாதிரி இருக்கீங்க அம்மா ரொம்ப அமைதியான முகத்தோடு இருக்காங்க. அழகு!

  ReplyDelete
  Replies
  1. இவ்வுலகில் நான் நேசிக்கும் ஜீவன்களில் எனது அம்மாவும் ஒருவர் அதனால்தானே காந்திஜியிடம்கூட மீண்டும் இதே தாயின் வயிற்றில் பிறக்க ஆசை எனச்சொன்னேன்.
   நன்றி அம்மாவிடம் சொல்லி விடுகிறேன்.

   Delete
 15. அன்பின் ஜி!..

  அப்பேர்ப்பட்ட அம்மாவின் புள்ளையா நீங்க!..

  தங்களுக்கும் - தங்களால் அறிமுகம் செய்யப்பட்ட
  நண்பர்களுக்கும் அன்பின் நல்வாழ்த்துக்கள்!..

  ஏதோ - ஞானி ஸ்ரீபூவு - அப்படி.. ந்னுதான் நினைத்திருந்தேன்..

  (க்ஹூம்!.. - ஒன்றுமில்லை.. குரல்வளை கரகரக்கின்றது..)

  ........ மீது ஆசைப்படு., அவள் கிடைக்காவிடில் ஆசையை விடு!.. - என்று சொன்ன மகாஞானியை நினைத்து கண்கள் குளமாகின்றன!?..

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ஜி அதனாலதானே அப்பாவியாக இருக்கேன், வருகைக்கு நன்றி

   //விக்ஸ் மாத்திரை எடுங்க கர, கரப்பை போக்கிடுங்க//

   மேலே உள்ளது நான் எழுதவில்லை ஜி டிவியில் விளம்பரம்.

   Delete
 16. ஆஹா முருகன் படாத பாடு பட்டுக்கொண்டு இருக்கிறார்.... இனி ஆசிரியருக்கு இருக்கா வேட்டு? அருமையான தொகுப்பும் முகவுரையும் ஜீ.

  அட தம்பிகள் மகி, குமார் ரொம்ப சந்தோஷம்... அடடா... மகியை ஏர்ப்போர்ட்டில் செண்ட் ஆஃப் பண்ண சென்றீர்கள் என்றால் மகி இருப்பது உங்க ஊரில் தானா...

  இன்றைய அறிமுகங்களின் தொகுப்பும் ரசிக்கும்படி இருந்தது ஜீ..

  ஞானி ஸ்ரீபூவு நல்லவையே சொல்லி நல்வழி நடத்தி செல்கிறார்....

  முடிவுரையில் அம்மாவின் படம் போட்டு மனம் நெகிழவைத்து விட்டீர்கள் ஜீ.

  அருமையான இன்றைய வலைச்சர அறிமுகத்திற்கு மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் !

  அறிமுகப்படுத்தப்பட்ட அன்புள்ளங்களுக்கும் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் !

  த.ம.6

  ReplyDelete
  Replies
  1. வாங்க, ஆசிரியருக்கு வேட்டு இருக்கோ ? இல்லையோ ? எனக்கு விழுந்துச்சே ‘’பட்டீர்’’ ‘’பட்டீர்’’ ஆம் நண்பர், மகேந்திரன் குமார் நான் மூவரும் அபுதாபியே..
   ஞானி ஸ்ரீபூவு வந்துட்டாருல இனி நமக்கென்ன ? ஜாலிதான்.
   அம்மாவையும், எம்மையும் பாராட்டியமைக்கு நன்றி.

   Delete
  2. மஞ்சுபாஷினி அக்கா..
   தங்கள் தம்பிகளாய் நானும் மகேந்திரன் அண்ணனும் இருப்பது கண்டு மகிழ்ச்சி..

   Delete
  3. தம்பி நான் உங்களை பதிவுகள் மூலம் மட்டுமே அறிந்திருக்கிறேன். ஆனால் மகியுடன் தொலைபேசியுடன் சில வருடங்களுக்கு முன்பே உரையாடிருக்கிறேன். ரொம்ப அன்பு நிறைந்த மனம் மகிக்கு.... ரொம்ப வருடங்கள் கழித்து உங்கள் எல்லோரையும் ஜீ அவர்கள் இட்ட படம் மூலம் காணக்கிடைத்தது மகிழ்ச்சி... என்றென்றும் இதே அன்பு தொடரும்பா... இறையாசி நல்கட்டும்...

   Delete
  4. மகியை ரொம்ப வருடங்கள் கழித்து காண தந்தமைக்கு மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ஜீ.

   Delete
 17. அமைதி தவளும் அருமை அம்மாவின் படமும் அவர் மகனின்
  அசத்தலான அற்புதமான பதிவுடன் இனிய பதிவர்கள் அறிமுகமுமென
  இன்றைய வலைச்சரமும் அருமை!

  அறிமுகமாகிய அனைத்துப் பதிவர்களுக்கும் உங்களுக்கும்
  இனிய நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வருகை தந்து வாழ்த்தியமைக்கு நன்றி அம்மாவிடம் சொல்லி விடுகிறேன்.

   Delete
 18. அறிமுகப்படுத்திய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
  அழகிய அம்மாவின் புகைப்படம்,காணொளி, தொடரும் புதிரான கதை,புரியாத தலைப்பு? என உங்கள் பணி அருமை.வாழ்த்துக்கள் உங்களுக்கும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க, அம்மாவை வாழ்த்தியமைக்கு நன்றிகள் கோடி, புதிரான கதை சரி புரியாத தலைப்பு என்று சொன்னாலும் என்னைப்பொருத்தவரை புதுமையான தலைப்பு என்றே சொல்லவும் புரிதல் காரணம் கடைசியில் வரும்...... ஆனா.... வரும்.

   Delete
 19. இன்றைய புதன்கிழமை வலைச்சரத்தில் நீங்கள் செய்த அறிமுகங்களில் பரிவை சே.குமார், சகோதரி ஆசிரியை மு.கீதா, யாதவன் நம்பி, மணவை ஜேம்ஸ் மற்றும் தோழர் வலிப்போக்கன் – ஆகிய பதிவர்களின் பதிவுகளை தமிழ்மணத்தில் அடிக்கடி படிப்பேன். மற்றவர்களது பதிவுகளை சென்று பார்க்க வேண்டும்.
  த.ம.8

  ReplyDelete
  Replies
  1. சென்று வாருங்கள் நண்பரே... நன்றி

   Delete
 20. //பரந்த உலகின் மேலாளர்...//

  மிகவும் ரசித்தேன் கில்லர்ஜி.

  ReplyDelete
  Replies
  1. ஆஹா நான் மிகவும் நேசித்து அடிக்கடி உச்சரிக்கும் ‘’உயரியசொல்’’ இது என்னைப்பொருத்தவரை //அம்மதமும் உம்மதமே// தாங்கள் அதனைக்குறித்து சொல்வதை கேட்கும்பொழுது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது
   அம் தமிழ் மொழியில் அம்மா
   உம் அரபு மொழியில் அம்மா
   நண்பரே.... தாங்கள் முன்பு எழுதி வந்த காமக்கிழத்தன் என்கிறார்களே... உண்மையா ? அப்படியானால் ? ஏன் ? கில்லர்ஜி வலைத்தளம் வருவதில்லை ? உங்களது தளம் திறக்க முடிவதில்லையே...

   Delete
  2. ‘நான்...நீங்கள்...அவர்கள்’ [முடக்கப்பட்டது] என்னும் தலைப்பில் எழுதிய காமக்கிழத்தனும், ’மூடர் உலகம்’ என்னும் தளத்தில் எழுதிய ‘உலகளந்த நம்பி’யும் நானேதான் கில்லர்ஜி.

   மூடர் உலகம் தளம், என் சாடல் பதிவுகளை வெறுத்தவர்கள் செய்த புகாரின் பேரில் கூகிளால் Remove செய்யப்பட்டது.[http://muudarulakam.blogspot.com என்னும் முகவரியைத் தட்டச்சு செய்து பாருங்கள்]

   தமிழ்மணத்தில் பதிவான என் பழைய தளமான ‘ஒரு பக்கக் கதைகள் ஓராயிரம்’ என்னும் தளத்தைப் புதுப்பித்துக்கொண்டிருந்ததால் தங்கள் தளத்திற்கும் நண்பர்களின் தளங்களுக்கும் [சில தளங்களைத் தவிர] வர இயலவில்லை; இனி வருவேன்.

   தங்களின் அன்பான விசாரிப்புக்கு நன்றி கில்லர்ஜி.

   Delete
  3. என்ன நண்பரே என்னிடம் மறைமுகமாக பழகி வரவேண்டிய அவசியமென்ன ? தங்களது கருத்துரைகள் வித்தியாசமாக இருப்பதை வைத்து சந்தேகப்பட்டேன் சரியாகி விட்டது எனது வேலைகள் சில வீணாகி விட்டதே,,,, சரி பார்ப்போம் நன்றி நண்பரே,,,

   Delete
 21. நாளைக்கி வாத்தியார் என்ன ஆவப்போறாரோன்னு ஆவலோட காக்க வெச்சுட்டீங்க ப்ரோ...

  இன்று ஓரிருவர் தவிர புதியவர்கள் எனக்கு நிறையப் பேரைச் சொல்லியிருக்கீங்க...

  அம்மா மேல பாசம் கொண்ட, அம்மாவை மதிக்கிற புள்ளைங்க வாழ்க்கைல நல்ல நெலைமைலதான் இருக்கும்ங்கறதுக்கு வாத்யாரே (அட, எம்ஜியாரைச் சொல்றேங்க) சாட்சி. நீங்களும் நெகிழ வெச்சுட்டீங்க அம்மா படத்தையும் அழகா மதர்ங்கற வார்த்தைக்கு விளக்கமும் தந்து. வாழி நலம் சூழி.

  ReplyDelete
  Replies
  1. வருக வாத்தியாரே... நாளைக்கும் வாங்க, என்னைப் போன்ற புதியவர்களையும் பார்த்து ‘’ஊக்கு’’விய்யுங்கள் வாத்தியாரே, அப்பத்தான் இன்னும் சிற(ரி)ப்பாக சந்தியில் நின்று சாந்தி சிரிக்கும்படி சிந்தித்து எழுத முடியும் MOTHER பற்றி முதன் முதலில் எழுதிய முதல்வரே நீர் வாழ்க !

   Delete
 22. நேற்றைய பின்னூட்டத்தில் உங்களின் அறிவுரையை ஏற்றேன் நண்பரே ! இனி ஒருபோதும் வலைப்பூ உள்ளங்களுக்கு உதாரணமாய் " பவுடர் டப்பா பாப்பாக்களை " சொல்ல மாட்டேன் !

  அய்யா ஞானி ஸ்ரீபூவும் வந்துட்டாரா...! ம்ம்ம் ! அப்பூறம் ?!!!

  அந்த மேலாளரா... அவரு பாக்கிஸ்த்தானுல காட்டுமிராண்டிகளைவும்விட கேவலமான மனுச மிருகங்க ( வேணாம் மிருகங்களை கேவலப்படுத்தக்கூடாது ! ), மனுசனுங்க பண்ண படுபாதகத்தை பார்த்துட்டு ராஜினாமா பண்ணிடலாமான்னு யோசிக்கிக்கிட்டுருப்பாரே !

  மீன்டும் ஒரு முறை நெஞ்சை தொட்டுவிட்டீர் நண்பரே.

  இன்றைய வலைப்பூ அறிமுகத்தின் பலர் நானறிந்து தொடருபவர்கள். அத்துடன் நண்பர் யாதவன்நம்பியும் ! வாழ்த்துவோம் அனைவரையும் !

  உங்களை போன்ற மனித நேயமும், சமூக அக்கறையும் கொண்ட மகனை ஈன்ற தாயை வணங்குகிறேன். அவருடைய ஆசிர்வாதத்தில் நீங்கள் இன்னும் பல உயரங்களை தொடுவீர்கள்.

  நன்றி
  சாமானியன்

  ReplyDelete
  Replies
  1. வருக தோழமையே.... தங்களின் தாமதமான வருகை என்னை சங்கடத்தில் ஆழ்த்தி விட்டது காரணம் எனது பின்னூட்டம் தங்களை மனதை காயப்படுத்தி விட்டதோ ? என்ற குழப்பம் வருகைக்கு முதற்க்கண் நன்றி.
   பவுடர் பாப்பாக்களை மட்டுமல்ல டோப்பா டூப்பர்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள்
   நண்பரே சிறிய திருத்தம் //உங்களின் அறிவுரையை ஏற்றேன்// இந்த வார்த்தையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை காரணம் அது அறிவுரையே அல்ல எனது கருத்து தங்களைக்காட்டிலும் 68 வயது குறைந்தவனான எமது கருத்தையும் ஏற்றுக்கொண்டது மிக்க மகிழ்ச்சி நண்பரே இதுவே தங்களின் உயர்ந்த மனதை பிரதிபலித்து விட்டது
   01. நாம் அறிவாளி என்று நினைத்தால் அது நம்மீது வைத்துள்ள தன்னம்பிக்கை
   02. நாம்தான் அறிவாளி என்று நினைத்தால் அது அகம்பாவம்

   நாமிருவருமே 01 ம் நம்பர் ஜாதி இனி நமது வாழ்வில் ஏற்றமே இந்த சிறியவனின் நன்றி.
   ஆம் ஞானி ஸ்ரீபூவு வந்துட்டாரு இனிமேல் நமக்கு ஜாலிதான்.
   அந்த மேலாளரா ? அவருதான் பார்த்துக்கிட்டுதானே இருக்காரு...
   உள்ளப்பூர்வமான வாழ்த்து கண்டு மனமகிழ்ச்சி நண்பரே,,
   நண்பா தங்களுக்காகத்தான் மின்னஞ்சல் மேலே படத்தில்.

   Delete
 23. அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 24. அன்புள்ள நண்பர் ஜி அவர்களுக்கு,
  வணக்கம்.

  தாமதமாக வருவதற்கு தங்களின் வருத்தம் இருக்கும் என்பது தெரியும். எனது அத்தை நேற்றைக்கு முன்தினம் தவறிவிட்டார்கள். அதனால் அந்தக் காரியம் செய்ய வேண்டிய பொறுப்பு எனக்கிருந்ததால் வளைத்தளம் வர இயலவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  மிகவும் பிரபலமானவனர்களை அறிமுகப் படுத்துகின்ற பொழுது... சாமான்யனான என்னையும் ஒரு பொருட்டாகக் கருதி வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியதற்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வருக நண்பரே தங்களின் தகவல் அறிந்து மனம் கணக்கிறது எல்லாம் இறைவன் செயல் தங்கள் அத்தையின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் தங்களது குடும்பத்தினருக்கு எனது இரங்களை தெரிவிக்கவும்.

   Delete
 25. அறிமுகங்கள் அருமை நண்பரே
  அறிமுகப்படுத்தப்பட்ட அன்புள்ளங்களுக்கும் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் !

  ReplyDelete
  Replies
  1. வருக நண்பரே தொடர் வருகைக்கு நன்றி

   Delete
 26. ஆமா ஏன் இப்படி சுத்திசுத்தி சுட்டீர்னு..என்னை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி சகோ..அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்..அன்பான தோழமைக்கட்கு நான் எப்பவும் தென்றல் தான் சகோ...

  ReplyDelete
  Replies
  1. என்ன செய்ய / யாருக்கிட்ட எப்ப, சட்டீர் னு வாங்கணும்னு இருக்கோ ? வாங்கித்தானே தீரனும் வருகைக்கு நன்றி

   Delete
 27. வணக்கம் சகோதரரே!

  உலகின் அனைத்து மொழிகளிலும் "மன்னிப்பு" என்ற வார்த்தை எனக்கு பிடிக்காது என்று "மேற்கோளுடன்" விளக்கி எழுத்து சுதந்திரம் தந்த தங்களுக்கு நன்றிகள் .

  நல்லவேளை! அவர் ஞானி என்பதால் உங்களை அடிக்காமல் அரவணைத்தார் என்று எண்ணுகிறேன்.
  எப்படியும் இந்த வார சனி, ஞாயிறுக்குள் ஒவ்வொரு விரதங்களும் முடிவதற்குள்,தங்கள் பிரச்சனையை சுமூகமாக தீர்த்து வைத்து விடுவார் என நினைக்கிறேன்.

  ஞானி ஸ்ரீபூவுவின் பொன்னான வார்த்தைகள் அருமையாக உள்ளது.( வெகு விரைவில் வலைத்தள உறவுகள் அனைவரும் அவரை குருவாக ஏற்றுக்கொள்ளும் வாய்ப்பு நிறைய உள்ளது.)

  அழகாக அறிமுகங்களை தொகுத்த விதம் சிறப்பு. அறிமுகபடுத்தியிருக்கும், பதிவர்கள் அனைவருக்கும்,என் வணக்கங்களும், வாழ்த்துக்களும்.

  சாந்தம் தவழும் அன்னையின் ஆசிகள் எப்போதும் உங்களுக்கு உண்டு.௬டவே எங்கள் வாழ்த்துக்களும்.

  நிறைய பேசக்௬டாது.( விரதபங்கம் ஆகிவிடும்.)

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. வருக, வருக, ஆம் ஞானி ஸ்ரீபூவு வந்துட்டாருல இனிமேல் நமக்கு ஜாலிதான் வாத்தியார் என்னை அடிச்சாருல ஞானி ஸ்ரீபூவு அவரை அடிக்கட்டும் ஹையா நமக்கு ஒரே ஜாலிதான்.
   எனது அன்னையை வாழ்த்தியமைக்கு மனமார்ந்த நன்றிகள்
   ஆமாமா நாளை வியாழக்கிழமை தெட்சிணா மூர்த்திக்கு விரதம் இருக்கோணும் நான் வர்றேன்

   Delete
 28. வீட்டிற்கு வந்தவுடனே வலைச்சரம் பார்க்கவேண்டும் என்கிற ஆசையைத் தூண்டிவிட்டீர்கள் .வாழ்த்துகள் சகோதரர்.அற்புதமான அறிமுகங்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஆஹா இந்த வார்த்தை எனது செவிகளில் மட்டுமல்ல எனது நாவிலும்கூட தேனாய் இனிக்கிறது நன்றி.

   Delete
 29. நண்பரே.... நான் குடியிருக்கும் தெருவின் தாதா வின் பெயரும் குருசாமி தான்...அந்தாளோடு என்னை ஒப்பிடுவது அந்தாளுக்கு தெரிந்தால்.. படைகளை அனுப்பி என்னை ஒரு வழியாக ஆசாமியாக்கி விடுவான்...இப்படி என்னை மாட்டி விட்டிட்டீங்களே..நண்பரே.....

  ReplyDelete
  Replies
  1. அய்யய்யோ இதை முன்னாலேயே சொல்லி இருக்கப்படாதா ? நம்ம வேல்கம்பு வேலாயுதத்தை விட்டு ஒருவழி பண்ணியிருபேனே...

   Delete
 30. காலையில் சகோதரி உமையாள் அவர்களின் பின்னூட்டம் மூலம் அறிந்து வந்து படித்தேன்...
  மாலை வந்து பின்னூட்டம் இடலாம் என சென்றுவிட்டேன்... மாலை அறை நண்பருடன் வெளியே சென்று விட்டு இப்போதுதான் வந்தோம்...

  வலைச்சரத்தில் இம்முறை சகோதரட் கில்லர்ஜியால் அறிமுகம்... வலைச்சரத்தில் தொடரும் அறிமுகங்களால் இன்னும் மனசு சிறப்பான பாதை நோக்கிச் செல்லும் என்பது திண்ணம்...

  அறிமுகம் செய்த அண்ணனுக்கு நன்றி.

  என்னுடம் அறிமுகமான நான் விரும்பும் பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  அம்மாவின் படம் அழகு.

  ஆமா து யாருன்னே நாலு பேரு களவாண்டு மாட்டிக்கிட்ட மாதிரி நிக்கிறாக...

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. சகோதரர் கில்லர்ஜி... சகோதரட் கில்லர்ஜின்னு வந்துருச்சு... மன்னிக்க...

   Delete
  2. வருகைக்கும், வாழ்த்தியமைக்கும், கருத்துரைக்கும் நன்றி நண்பரே ஆனால் எனது அறிமுகத்தால் ''மனசு'' இன்றும் சிறப்பாகும் திண்ணம் உள்ளதாக சங்களது மனசு சொல்வது ஏற்பதற்கில்லை நண்பரே,,
   ஆமா நண்பரே எனக்கும்கூட அப்படித்தான் தோன்றுகிறது ‘’தினத்தந்தியில்’’ இப்படித்தானே போட்டு இருப்பார்கள்

   Delete
 31. வலைச்சர ஆசிரியரே! அருமையாக தங்கள் பணியை ஆற்றுகிறீர்கள் ம...ம்..ம்.மேலும் சிறக்க வாழத்துக்கள் ..!.அழகான அமைதியான அம்மாவின் படம் கண்டு மகிழ்ந்தேன். அம்மாவின் சாயலே தங்களில் உள்ளது.
  அறிமுகத்திற்கு மிக்க நன்றி சகோ அனைத்து அறிமுகங்களும் அறிந்தவர்கள் தான். அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ....!

  ReplyDelete
 32. மேக்னேஷ் திருமுருகன் தளம் சென்றதில்லை! சக நட்புவட்ட பதிவர்களின் அறிமுகம் சிறப்பு! நன்றி!

  ReplyDelete
 33. புனிதாவை தரிசிக்கும் பாக்கியம் தாமதமாய் இப்போது தான் கிடைத்தது ,அடுத்த வாரமும் ஆசிரியராய் தொடரலாமே :)
  த ம 11

  ReplyDelete
  Replies
  1. ஏன் ? அனிதாவை தேடிப்போயிட்டியளா ? பகவான்ஜி

   Delete
 34. அதென்ன ஒவ்வொருத்தரோட அறிமுகத்திலேயே ஏதோ பெயர்கள்.. இந்தப் பதிவில்தான் நான் கவனித்தேன்.... மலேயா பாஷையெல்லாம் எனக்குத் தெரியாதுங்க.... எனக்குப் புதியவர்கள் நிறைய பேர்...அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வாங்க, வாங்க இந்த பாஷை என்னானு இன்னும் ரெண்டுநாள்ல உங்களுக்கு தெரியும் வருகைக்கு நன்றி.

   Delete
 35. வித்தியாசமான முறையில் தினம் தினம் சில அறிமுகங்கள்..... பாராட்டுகள் கில்லர்ஜி!

  ReplyDelete
 36. படத்தில் நீங்க நிற்கும் ஸ்டைல் அடிக்க போற மாதிரியே தோணுதே பாஸ்!! நிஜமான அம்மா படம் போட்டிருக்கீங்க, சூப்பர்!!

  ReplyDelete
  Replies
  1. அப்படீயா ? கீது அம்மாவை வாழ்த்தியமைக்கு நன்றி.

   Delete

தமிழ் மணத்தில் - தற்பொழுது