07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, December 10, 2014

கில்லர்ஜி தேவகோட்டை 15.12.2014 திங்கள் முதல் வலைச்சர ஆசிரியப் பொறுப்பேற்கிறார்.

! பதிவர்களே ! அனைவருக்கும் வணக்கம்  
வருகிற 15.12.2014 முதல் வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்கும்  
அருமை நணபர் கில்லர்ஜி -  கிரேட் தேவகோட்டைக்காரன், கடந்த 18 ஆண்டுகளாக (U.A.E) அபுதாபியில் ஒரு அலுவலகத்தில் கோப்புகள் பிரிவில்  ( Filing Clerk  )  பணியாற்றிக்கொண்டு வருகிறார். இவரது துணைவி, இறைவன் விருப்பப்படி இவரை விட்டு விண்ணுலகம் போய் 13 ½ ஆண்டுகளாகிறது . இவரது துணைவி  இவருக்கு ( அன்புமகன் தமிழ்வாணன், இனியமகள் ரூபலா ) கொடுத்துச்சென்ற இரண்டு பொக்கிஷங்களுக்காக வாழும் ஜீவன் இவர்., அந்த ஓட்டத்தில் இவருள் எழுந்தவை இவர் மண்ணுள் புதையும் முன் இந்த விண்ணில் கணினி வழியே விதைத்துக்கொண்டு இருக்கிறார்.
.
‘’மனிதநேயம்’’ இதுவே இவரது சிந்தனை. 
நாடு, மொழி, ஜாதி மத உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவர் - இவருக்கு புனிதனாக வேண்டுமென்ற சிந்தையில்லை சராசரி மனிதனாக வாழ்ந்தாலே போதுமென்ற கொள்கையோடு... வாழ்ந்து இவரைப் படைத்தவனிடம் (அவன் இறைவனா ? அல்லது ஒரு சக்தியா ? இவரறியார்.) சரணடையலாமென திட்டமிட்ட... பழமையை விரும்பும் புதுமைச்சித்தன் இவர்..  இதற்குமேல் இந்த 
                        .வேற்று மனிதனிடம் வேறு ஒன்றும் இல்லை. 
வருகிற 15.12.2014 முதல் துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க இருக்கும் பதிவர் நண்பர் 
கில்லர்ஜியினை வருக ! வருக! என வரவேற்று வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
          1 முதல் ஏழு நாட்களுக்கு சிறப்பான அறிமுகங்களை அள்ளித் தரத்  தயாராக  இருக்கும் கில்லர்ஜியினை ஆவலுடன் எதிர் பார்த்து
                            காத்திருக்கும் சக நண்பர்களை யும் சிறந்த மறுமொழிகளை அளீக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.                                                            sivappukanneer@gmail.com   – மின்னஞ்சல் முகவரி 

78 comments:

 1. சோதனை மறுமொழி

  ReplyDelete
 2. வலைச்சர ஆசிரியர் பொருப்புகளை சிரம் தாழ்த்தி நன்றியுடன் ஏற்றுக்கொஶ்கிறேன் ஐயா.

  அன்புடன்
  கில்லர்ஜி

  ReplyDelete
 3. வணக்கம் ஐயா
  இனிய நண்பர் கில்லர்ஜி அவர்களின் வாழ்க்கையில் இப்படியொரு சோகம் இருப்பதை இப்பொழுது தான் அறிந்தேன். மனம் விம்முகிறது ஐயா ( வெறும் வார்த்தையல்ல). சோகத்தை மறைத்து அனைவரிடம் நொடி பொழுதில் நட்பாகும் நல்ல குணம் படைத்தவர் என்பது அவரின் சிறப்பு. நண்பர் இந்த வாரம் கலக்குவார். காத்திருக்கிறோம் அவரின் எழுத்துகள் வலைச்சரத்தை அலங்கரிக்கும் காட்சியை பார்க்க. நன்றீங்க ஐயா. நண்பருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகளுக்கு நன்றி நண்பரே...

   Delete
 4. வணக்கம்.
  வலைச்சர ஆசிரியர் பணி செய்ய இருக்கும் அன்பு அண்ணன் கில்லர்ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே... மகிழ்வான தருணம் பதிவைப்படித்தேன்.... ரசித்தேன்.... சுவைத்தேன்.

   Delete
 5. வணக்கம் நண்பரே...
  சிறப்பான வலைச்சர வாரத்தை தர கண் முழிக்க ஆரம்பிச்சுட்டிங்கன்னு கேள்விப்பட்டேன்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. ஆம், நண்பரே... முடிந்த அளவு...

   Delete
 6. வாழ்த்துக்கள் சகோ

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்தியமைக்கு, நன்றி

   Delete
 7. இந்த வாரம்னிச்சயம்
  மிகச் சிறப்பான வாரமாக இருக்கும்
  வாழ்த்துக்கள் கில்லர்ஜீ

  ReplyDelete
  Replies
  1. ஐயாவின் வாழ்த்துகளை நன்றியோடு ஏற்று முயற்சிக்கிறேன்.

   Delete
 8. அன்பு ஆசிரியர் திரு கில்லர்ஜி அய்யா அவர்களே!
  தங்களது தமிழ் பணி சிறக்கட்டும்
  முண்டாசுக் கவி பாரதியின் பிறந்த நாளில்
  வாழ்த்தி வணங்கி வரவேற்கிறோம்.
  தங்களது வலைச்சரம் ஆசிரியர் பணி சிறப்பு பெற்று சிறக்கட்டும்.
  நான் பிறந்த புதுவை மண்ணின் சார்பிலும்,
  தற்பொழுது வாழும் பிரான்சு தேசத்தின் சார்பிலும்(இங்குள்ள தமிழ் மக்கள்)வரவேற்று
  வாழ்த்தி அமைகிறோம். நன்றி!
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.fr

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி யாதவன் நம்பி அவர்களே...

   Delete
 9. வாருங்கள் வாருங்கள் ஆசிரியப்பணிக்கு. வந்து அசத்துங்கள்.

  ReplyDelete
  Replies
  1. அசத்துங்கள்னு சொல்லிப்புட்டு கிண்டல் செய்யாமல் வந்து படிக்கணும் சொல்லிப்புட்டேன்.

   Delete
 10. வணக்கம்
  ஜீ

  பார்த்தவுடன் மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.. இந்த வாரம் நல்ல அசத்தலாக அமைய எனது வாழ்த்துக்கள்...
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. மகிழ்ச்சிக்கு நன்றி ரூபன், நம்ம வூட்டாண்டே காணோமே...

   Delete
 11. Replies
  1. கோமதி அரசு அவர்களின் வாழ்த்துக்கு நன்றி.

   Delete
 12. மிகவும் மகிழ்ச்சி. வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்கும் கில்லர்ஜி அவ;களுக்கு வாழ்த்துக்கள். சிறப்பாக அடைய வாழத்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. டொக்டர் அவர்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

   Delete
 13. அன்புமகன் தமிழ்வாணன், இனியமகள் ரூபலா ஆகியோருக்காக தன்னை விரும்பிய மனைவிக்காகப் புனிதராக வாழும்
  கில்லர்ஜி அவர்களைப் பாராட்டி, வாழ்த்துகிறேன்.
  கில்லர்ஜி அவர்களின் அறிமுகங்கள்
  சிறப்பாக இருக்குமென நம்புகிறேன்!

  ReplyDelete
  Replies
  1. வருக நண்பரே தங்களது நம்பிக்கையை நிறைவேற்ற முயற்சிக்கிறேன்.

   Delete
 14. வருக வருக நட்பே தொடர்க இனிய பயணம்!வலைச்சரம் கில்லர்ஜியின் பார்வையில் படித்துப்பார்ப்போம்.

  ReplyDelete
  Replies
  1. தனிமரமாய் நிற்காமல் இந்த எளியவனோடு பயணிக்க வருக நட்பே.

   Delete
 15. ஆஹா!! அண்ணனா வாங்கோ! வாங்கோ!

  ReplyDelete
  Replies
  1. வந்துட்டோம்ல வந்து கிண்டல் பண்ணக்கூடாது அப்புறம் அழுதுடுவேன் (அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்)

   Delete
  2. என்ன அண்ணா இப்படி சொல்லிபுடீக:(( அப்புறம் எப்படி டைம் பாஸ் ஆகும்:((

   Delete
  3. அழுதாலும் வித்தியாசமாக அழுதிடுவோம்ல..... பெக்கே, பெக்கே, பெக்கே, பெக்கேனு....

   Delete
 16. கில்லர்ஜி : எவ்வளவோ பேசியிருக்கோம்... இதைப் பற்றி சொல்லவேயில்லை... ?

  ReplyDelete
  Replies
  1. வருக ஜி ஆமா பேசுனோம், இதைப் பற்றி கேட்கவேயில்லை... ? நன்றி.

   Delete
 17. அன்பின் இனிய ஜி..
  எங்களையெல்லாம் கலகலப்பாக வைத்து புன்னகைத்துக் கொண்டிருக்கும் தங்களுக்குள் இப்படியும் ஒரு சோகமா.. மனம் வலிக்கின்றது - ஜி..

  அன்பின் இனிய தங்களுக்கும் - தங்களுடைய அன்புச் செல்வங்களுக்கும் இறைவன் துணையிருக்க வேண்டுகின்றேன்!..

  ReplyDelete
  Replies
  1. அன்பின் நண்பரே... எனது ‘’மௌனமொழி’’ கவிதையில் படித்திருப்பீர்களே... நடந்ததை மறப்போம், நடப்பதை நினைப்போம் எனது செல்வங்களை வாழ்த்திமைக்கு சிறப்பான நன்றி நண்பரே..

   Delete
 18. வாழ்த்துக்கள்.
  அசத்துங்கள் சகோ.

  ReplyDelete
  Replies
  1. ஏதோ முடிஞ்சதை செய்யிறேன் நன்றி

   Delete
 19. கில்லர்ஜி அவர்களை வலைச்சர ஆசிரியராக வரவேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன். அவருடைய பணி சிறக்க என் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஐயாவின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

   Delete

 20. வலைச்சரம் ஆசிரியராக பொறுப்பேற்க வரும், நண்பர் தேவகோட்டை கில்லர்ஜியை வரவேற்கிறேன். வாழ்த்துக்கள்.
  த.ம.6

  ReplyDelete
  Replies
  1. நண்பரின் வருகையும், வாழ்த்தும், வாக்கும் கண்டு மகிழ்ச்சியே...

   Delete
 21. வலைச்சர ஆசிரியப் பொறுப்பேற்க இருக்கும்
  அருமைச் சகோதரர் கில்லர்ஜிக்கு இனிய வாழ்த்துக்கள்!

  வரும் வாரம் அமர்க்களமாக இருக்கப் போகிறது!
  சிறக்கட்டும் உங்கள் பணி சகோதரரே!

  ReplyDelete
  Replies
  1. வாங்க, வாங்க, வாழ்த்துக்கு நன்றி சகோதரி...

   Delete
 22. வாழ்த்துகள் சார். வரவேற்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க நன்றி. தொடருங்கள்....

   Delete
 23. அருமை நண்பரின் கையால் வலைச்சரம் தொடுக்கப்படுவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்! வாழ்த்துக்கள் ஜி!

  ReplyDelete
  Replies
  1. முடிந்த அளவு மாலையை தொடுக்கிறேன் சுரேஷ் ஜி

   Delete
 24. அருமை நண்பர் தேவக்கோட்டையார் திரு KILLERGEE அவர்கள் வலைச்சர ஆசிரியராக 15-12-2014 முதல் பணியேற்க இருப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி. அவரை வருக வருக என வரவேற்று அவரது பணி சிறக்க வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வருக நண்பரே.. நலம்தானே ? தாங்களும் இடம் பெற்ற (தில்லை அகத்திலிருந்து.... ) எனது புதிய பதிவை காணவில்லையே.....

   Delete
 25. அருமை நண்பருக்கு வாழ்த்துகள்..!

  இனிதே வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்று, அனைவரும் அதிசயக்கத்தக்க வண்ணம் ஏதாவது செய்து, எப்பொழுதும் கில்லர்ஜி வித்தியாசமானவர்தான் என்பதை நிரூபியுங்கள்...

  அன்புடன்,
  தங்கம்பழனி.

  ReplyDelete
  Replies
  1. வருக நண்பரே... இப்படித்தானே உசுப்பேத்தி விட்றீங்க... முயற்சிக்கிறேன் வருக...

   Delete
 26. அடுத்தவாரம் முழுவதும் வலைச்சரத்தில் தான் . வாழ்த்துகள் அண்ணா !!!

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பா வந்துருங்க...

   Delete
 27. அருமை நண்பர் வெற்றி வாகை சூட வாழ்த்துக்கள். ஒரு வாரத்துக்கு நண்பரின் பதிவை படித்து கலாயிக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே... தங்களது ஆசையை நிறைவேற்ற முயற்சிக்கிறேன்.

   Delete
 28. வணக்கம் சகோதரரே!

  அடுத்த வாரம் முதல் வலைச்சர ஆசிரியராய் பொறுப்பேற்பது குறித்து இப்போதுதான் அறிந்தேன். விதவிதமான பதிவுகளை வித்தியாசமான முறையில் தொகுத்து வழங்கும் தங்களுக்கு ஏற்ற அற்புதமான பணி இது! வெற்றியுடன் உலா வர மனமாற வாழ்த்துகிறேன்.

  நட்புடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. வருக சகோதரி தொடர்ந்து தருக கருத்துரையை முடிந்தவரை ‘’முயல்’’கிறேன் தொடர்ந்து ஓடிட....

   Delete
 29. மீசைக்கார நண்பரை
  வாழ்த்தி வரவேற்கின்றேன்
  வாருங்கள் நண்பரே

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகளுக்கும், வாக்குக்கும் நன்றி நண்பரே...

   Delete
 30. அடடே.. டிரயிலரே.. இப்படி பின்னுறீங்களே... மெயின் பிச்சர் கலக்கலா இருக்கும் போல தெரிகிறது. வாழ்த்துக்கள் கில்லர்ஜீ...

  ReplyDelete
  Replies
  1. மாடிப்படியிறங்கி வந்த மாதுவே வணக்கம் டிரைலர் இனிமேல்தான் இது தூது.
   நன்றி

   Delete
 31. வணக்கம் கில்லர்ஜி . வாழ்த்துக்கள்

  ReplyDelete
 32. திங்களன்று ஆசிரியராய் வலைச்சரத்தில் பதவியேற்கும் உங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்தியமைக்கு நன்றி அம்மா.

   Delete
 33. வருகிற 15-ம் நாள் முதல் சுமார் இரண்டு வார காலத்துக்கு நான் வீட்டு வேலைகள் காரணமாக கணினிக்குவர இயலாது, என் துரதிர்ஷ்டமே. ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா இது எனக்கல்லவா,,, துரதிர்ஷ்டம் 14-ம் தேதி கண்டிப்பாக வரவும் ஐயா காரணம் இருக்கிறது நன்றி.

   Delete
 34. அட என்னப்பா இது! 15 நு சொல்லிட்டு சீக்கிரமாவே போட்டுட்டீங்க...சரி சரி...

  வாங்க நண்பா வாங்க வந்து கலக்கிவிட்டு போங்க...ஆஅனா மீண்டும் வாங்க!! கலக்கிட்டுனா எங்களக் கலக்கிட்டு நு அர்த்தம் இல்ல..ஹஹஹ....வலைச்சரத்தை...அலங்கரித்து....

  வாழ்த்துக்கள்! நண்பா!

  ReplyDelete
  Replies
  1. வாங்க, வாங்க, என்னை பயமுறுத்தக்கூடாது..... அப்புறம் பயந்திடுவேன்...

   Delete
 35. ஆஹா.... இன்னும் இரண்டே நாட்களில் நண்பர் ஜீ பொறுப்பேற்கிறாரா.. அப்ப இனி கச்சேரி களைக்கட்டுமே.. வலைச்சரம் இனி ஒரே ஜனரஞ்சகம் தான்.... சிறப்பான வாரமாக இனி வரும் வாரம் அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எல்லோரையும் சிரிக்கவைக்கும் இந்த அன்பு மனிதரின் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகம் இருப்பது இப்போது தான் தெரிய வந்தது.... இறைவன் என்றென்றும் நண்பர் ஜீ அவர்களுக்கும் அவருடைய குழந்தைகளுக்கும் ஆத்ம பலத்தை தர இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

  வலைச்சர ஆசிரியர் பொறுப்பை ஏற்று சிறப்பாக பணியாற்ற வரும் நண்பர் ஜீ அவர்களுக்கு மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்பா...

  ReplyDelete
 36. சீனா ஐயாவிடம் போட்டுக்கொடுத்து விட்டு இப்ப, வாழ்த்துக்களா ? ம்ம்ம்ம்...

  ReplyDelete
 37. வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்க இருக்கும் நண்பர் கில்லர்ஜி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகளுக்கு நன்றி நண்பரே.....

   Delete
 38. எதிர்பார்க்கல ...கில்லர்ஜி வாழ்க்கை..மனவலி...ஆனால் அவரின் பொறுப்பு ஆச்சரியப்படவைக்கின்றது...வாழ்த்துகள் சகோ..

  ReplyDelete
  Replies
  1. வாங்க, வாங்க, இப்படி லேட்டா வந்தால் நல்லாவா இருக்கு.....

   Delete
 39. வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்கும் ’மனிதநேயம்’’ கொண்ட
  அன்பு நணபர் திரு.கில்லர்ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  மதுரை சித்தையன் சிவக்குமார் !

  ReplyDelete
  Replies
  1. வருக நண்பரே.... தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி.

   Delete

தமிழ் மணத்தில் - தற்பொழுது