07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, December 30, 2011

தொழில்நுட்ப பதிவுகள் ஒரு பார்வை

அனைவருக்கும் வணக்கம்

எனக்கு நேற்று எனக்கு உடல்நலம் சரியில்லாததால் பதிவிட முடிவவில்லை.அதனால் சீனா ஐயா என்னை மன்னிக்கவும்

நாம் இன்று சிலபயனுள்ள தொழில்நுட்ப பதிவுகளை பார்ப்போம்

ப்ளாக்கர் நண்பன்
                நமக்கு தேவையான File-களை Online-ல இலவசமாக பதிவேற்றலாமாம்.இதுல நிறைய வசதி இருக்காம்.மேலும் இவர் நமது ப்ளாக்கை பிரபலமாக்குவது எப்படி?-ன்னு ஒரு தொடர் பதிவும் எழுதிருக்காரு.அதுவும் நமக்கு பயன்படும்.

கற்போம்
                இப்போ கணிணியில விண்டோஸ் 7 பயன்படுத்துறாங்க அது இன்ஸ்டால் ஆகுறதுக்கு நிறைய நேரம் எடுக்குதுன்னா20 நிமிடத்தில் Windows 7 இன்ஸ்டால் செய்வது எப்படி-ன்னு நண்பர் பலேபிரபு சொல்லிதாரத கேளுங்க.
இந்த நண்பர் வெப் ஹோஸ்டிங் பற்றி தொடர் பதிவு எழுதுறாரு

வந்தேமாதரம்
               இப்போது Google-தனது தோற்றங்களை மாற்றி வருகிறது.அந்த வகையில் அதனுடைய logo-வையும் நம்முடைய பிறந்தநாள் இல்லன்னா ஏதாவது ஒருநாள் Google-ன் லோகோ-வையும் மாற்றலாமாம். இதை பற்றி வந்தேமாதரம் சசி அண்ணன் சொல்றாரு.இவரும் ஒரு தொடர்பதிவு எழுதுறாரு அது எதுன்னா சில பதிவர்கள் செய்யும் தவறுகள்

தமிழர்கள்
                நம்மை போல கணிணியிலயும் ஆண் பெண்-ன்னு இருக்காம்.ஆணா பெண்ணான்னு எப்படி கண்டுபிடிக்கனும்-ன்னு தமிழர்கள் சொல்லிதாராங்க.இவரும் ஒரு தொடர் பதிவு எழுதிருக்காரு அது என்னது தெரியுமா? உங்களை ஹாக்கர்களிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள

அறிவின் உச்சகட்டம்
              இவர் Adobe Photoshop CS3 மென்பொருளை இலவசமாக தறவிறக்க நமக்கு
சுட்டிய சொல்லிகொடுக்குறாரு.மேலும் இவர் Google இடம் Domain வாங்குவது எப்படின்னு தொடர் பதிவும் எழுதுறாரு


கூகிள் சிறி
உங்கள் கணிணியின் இயங்கு தளம் Windows 7-ஆக இருந்தால் அது குறைவான வேகத்துடன் இயங்கினால் அதனுடைய வேகத்தை அதிகரித்துக்கொள்ளுங்கள்
             
பொன்மலர் பக்கம்
                கணிணியில இருந்தே இலவசமா SMS அனுப்பலாமாம்.அதுக்கு ஒரு மென்பொருளும் இருக்காம் அது பற்றி அக்கா பொன்மலர் சொல்லிதாராங்க

தமிழ் கம்ப்யூட்டர்
                நமக்கு தேவையானது மாதிரி அல்லது பிடித்த மாதிரி மாற்றி வைக்கலாமாம் அது எப்படின்னு பார்க்க சுட்டி

தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள்
               இவுங்க நமது File-களுக்கு பாஸ்வேர்டு கொடுத்து அதை CD,DVD மற்றும் Pen Drive-ல காப்பி பன்னலாம்னு சொல்ராங்க

அதே கண்கள்
                நம்மளுடைய ப்ளாக்கில் கர்சர்-ல உங்க படத்தையே வைக்கலாமாம்.அது பற்றி சொல்கிறார் அதே கண்கள்

தமிழ்நுட்பம்
                இவுங்க என்ன சொல்றாங்கன்னா Microsoft Office-ல உள்ள  Microsoft Office PowerPoint -கோப்புகளை வீடீயோவா மாற்றலாம்னு சொல்றாங்க


தமிழ் கம்ப்யூட்டர் மினி உலகம்
               இவுங்க Nokia,Samsung போன்ற Compay Mobile-க்கு Pc Suite இருக்குற மாதிரி China Mobile-க்கும் Pc Suite இருக்காம்

கொம்பியூட்டர் உலகம்
              இவர் ந்மக்கு 1001 எழுத்துரு இருக்குற ஒரு இனையதளத்தை காட்டி தாராரு

தகவல் தொழில்நுட்பம்
              நாம இப்போது அதிகமாக பயன்படுத்திக்கிட்டிருக்க PenDrive எப்படி தயாரிக்கிறாங்கன்னு சொல்லிதராங்க
மேலும் வாசிக்க...

Wednesday, December 28, 2011

என்னை கவர்ந்த பதிவுகளில் சில


 அனைவருக்கும் வணக்கங்கள்

நாய்-நக்ஸ்
           கண்மணி அன்போட காதலன் பாட்ட டப்பிங் பன்ன Google-க்கு இசையமைப்பாளர் தேவைப்படுதாம்.இந்த டப்பிங் பாட்டை எழுதியது யார் என்று இங்கே சென்று பாருங்கள்.உங்களுக்கே புரியும்

தமிழர்கள்
        விண்டோஸ் 7 -  நமக்கெல்லாம் தெரியாத ஒரு வசதி  தமிழர்களுக்கு தெரியுதாம் அது என்னன்னு பார்ப்போமா

 மதிஓடை
                                  வெடி குண்டொன்றை தயாரிப்பது எப்படி-ன்னு செய்முறையோடு சொல்லிதாரார்  மதிஓடை மதிசுதாஆனால் இது  மொக்கை பதிவா இல்ல அறிவியல் பதிவா-ன்னு நம்ம தான் முடிவு பன்னனுமாம்.நீங்க என்ன முடிவு பன்ன போறீங்க

சில மணித்துளிகள்
                    முட்டாள் பெண்னே-ன்னு இதய துடிப்பை பற்றி ஒரு கவிதையை சொல்கிறார் நம்ம பிரணவன் அண்ணன்.அந்த கவிதை 4 வரியாக இருந்தாலும் அருமையா இருக்கு

 அகாதுகா அப்பாட்டகர்ஸ்
             இவுங்கதாங்க சந்தானத்தோட உண்மையான ரசிகர்களாம்.இவங்களுக்குதான் சந்தானத்தோட முதல் படம் எதுன்னு தெரியுமாம்

அட்சயா

                          கிரிக்கெட்-ல நம்ம சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஒரே பந்துல 60 ரன் அடிக்கிறாராம் அப்படியா

தமிழ் கம்ப்யூட்டர்
                 SonyErricsson-மொபைல்-க்கு நமக்கு தேவையான Theme-ஐ நாமலே உருவாக்கிக்கலாமா.அது எப்படின்னு பார்ப்போம்

ப்ளாக்கர்நண்பன்
                  ப்ளாக்கர் பற்றி சொல்லும் அப்துல்பாஸித் அண்ணன் பேஸ்புக் ரசிகர் பக்கத்தில் எப்படி வரவேற்க்க வைக்கலாம் எப்படின்னு சொல்லிதாராரு


கற்போம்
                நம்ம பலே பிரபு அண்ணன் இப்போ கற்போம்-ல இருக்காரு.அவர் நமது தளத்தோட இல்லத்துக்கு +1 பட்டன் வைக்கலாமாம்.சரி எப்படின்னு பார்த்துட்டு வருவோம்
               
நன்றிகள் பல
மேலும் வாசிக்க...

Tuesday, December 27, 2011

என்னை கவர்ந்த சில பதிவுகள்


அனைவருக்கும் வணக்கம்.


ஆணிவேர்
                        நண்பர் சூர்யாஜீவா நம்ம நாட்டின் பெட்ரோல் விலையை யார் தீர்மானிக்கிறார் என்ற உண்மையை நமக்கு சொல்கிறார்தமிழ்வாசி 
                       நம்ம தமிழ்வாசி பிரகாஷ் அண்ணன் ஒரு பஸ்சில் நடந்த கூத்த பார்த்துட்டு சொல்ராரு

கவிதை வீதி 
                       கவிதை வீதி செளந்தர் சமீபத்தில வெளிய வந்த மம்பட்டியான் விமர்சணத்தை மிக அழகாக சொல்லிருக்காரு.
மேலும் அவர் கவிதையையும் சொல்ராரு.அதில் எனக்கு பிடித்தது இப்படியெல்லாம் SMS வந்தா என்ன பண்றது...?

சின்னவன்:


நீங்கள் கணிணியில் அதிக நேரம் இருந்தால் எப்படி இருக்க வேண்டும் என்று ஆலோசனை தருகிறார் சகோ சின்னவன்

கூடல்பாலா:
                   நீங்கள் மடிக்கணிணி பயன்படுத்துறீங்கண்ணா உங்களுக்கான ஒரு அழகான மென்பொருளை தருகிறார் கூடல்பாலா

மேலும் அவர் அனு உலையின் தீங்குகளை பற்றியும் அது செயல்பட்டால் என்ன நடக்கும் என்பதையும் விவரிக்கிறார்

வேடந்தாங்கல்:
                    நண்பர் கருண் சொல்கிறார்.நம்ம தாய்நாடான இந்தியா வல்லரசாகுதாம்.எதில் வல்லரசாகும் என்று அவரையே கேளுங்கள் .
அவர் பள்ளியில் நடந்த ஒரு சிறுவனின் துயரத்தை சொல்கிறார்.

என் ராஜபாட்டை:
                        நண்பர் அரசியல்வாதி எப்படின்னு அரசியல்வாதி ஆவது அப்படி ? ன்னு சொல்லிருக்காரு.
அவர் என்னை போன்ற மாணவர்களுக்காக ஒரு பதிவு போட்டுருக்காரு
அதையும் பாருங்க

nanbarkal/நண்பர்கள்:
                           நண்பர் நண்பர்கள் தளத்தில் கிரிக்கெட் தகவல்களை அதிகமாக தருகிறார்.அதில் எனக்கு பிடித்தது கங்குலி பாடிய தமிழ் பாடல்கள் என்று கங்குலிய கலாய்ச்சிருக்காரு நம்ம நண்பர்கள்.ஆனா அவர் கலாய்க்கலன்னு சொல்றாரு.


அன்பு உலகம்:
                       நண்பர் MR தனது அன்பு உலகம் தளத்தில் நமது உடல் ஆரோக்கியமாவதற்க்கு டிப்ஸ் தாராரு


வசந்த மண்டபம்:
                       வசந்த மண்டபம் எனும் தளம் வைத்திருக்கும் நண்பர் மகேந்திரன்
வில்லு பாட்டு பற்றி சொல்ற விதம் அருமையாக இருக்கு.

மேலும் வாசிக்க...

Monday, December 26, 2011

நான்தான் இந்த வார வலைச்சர ஆசிரியராம்


நண்பர்களே எனக்கு இந்த வாரம் வலைச்சர ஆசிரியர் பொறுப்பை அன்புக்குரிய வலைச்சர பொறுப்பாசிரியர் சீனா ஐயாகொடுத்திருக்கிறார்.இந்த பதவியை கொடுத்த சீனா ஐயா-வுக்கு நன்றி

சீனா ஐயா கொடுத்த ஆலோசனையின்படி எனது அறிமுகத்தை தொடங்குகிறேன்.

எனது பெயர் சதிஷ்கிருஷ்ணன்.எனது ஊர் வைராவிகிணறு.இந்த இரண்டையும் சுருக்கி வைரைசதிஷ் என்ற பெயரில் ஒரு தளத்தை ஆரம்பித்து ஆங்கில வலைத்தளத்தில் உள்ள ப்ளாக்கர் போன்ற தொழில்நுட்ப தகவல்கலையும் மற்றும் எனக்கு தெரிந்த
தொழில்நுட்ப தகவல்கலையும் பகிர்ந்து வருகிறேன்.


நான் கூடன்குளத்தில் உள்ள St.Anne's HR Sec.School-ல் 12-ம் வகுப்பு படித்துகொண்டிருக்கிறேன்.


Blogger-க்கு வந்த விதம்
          நண்பர் கூடல்பாலா Sangeetha Graphics என்ற பெயரில் கூடன்குளத்தில் கடை வைத்திருக்கிறார்.அவரது கடைக்கு ஒருநாள் Editing Software வாங்குவதற்க்காக சென்றேன்.அப்போது அவரது வலைத்தளத்தின் Address தந்தார்.அவர் தந்த Address-ல் ஏன் blogspot என்று நினைத்து google-ல் தேடினேன்.அப்போது Google Blogger-ஐ காட்டியது.அப்போதிருந்து தான் நான் ப்ளாக்கில் பதிவு எழுதி வருகிறேன்.

நான் இதுவரை எழுதியவைகள்
நான் கணினி-ல் அதிவிரைவாக COPY பண்ண ஒரு எளிய வழி என்ற பதிவை May 29-ம் தேதி எழுத ஆரம்பித்தேன்.அதன் பிறகு சில கிரிக்கெட் சம்பந்தமான பதிவுகளையும் எழுதினேன்.பின்னர் Mobile பற்றிய தகவல்களையும் எழுதினேன்.இவ்வாறு படிப்படியாக வந்து Blogger பற்றி எழுத தொடங்கினேன்.

இதுவரை எழுதியதில் பயனுள்ளவை:


         1.எனக்கு நண்பர் சூர்யாஜீவா சொல்லி தந்த மென்பொருள் இல்லாமல் YouTube வீடீயோக்களை தறவிறக்கம் செய்ய

         2.மொபைலிலிருந்து இணையத்துக்கு நேரடி வீடியோ ஒளிபரப்பு

         3.பதிவுகளின் முடிவில் Animated Email Subscription Box-ஐ வரவைக்க

         4.பதிவை திருடினாலும் இனி கவலை இல்லை?

         5.கணினி SPEED ஆக அழகிய மென்பொருள்

நன்றி


மேலும் வாசிக்க...

Sunday, December 25, 2011

சென்று வருக ஷக்தி பிரபா - வாங்க வாங்க வைரை சதீஷ்

அன்பின் சக பதிவர்களே

இன்றுடன் முடியும் வாரத்திற்குப் பொறுப்பேற்ற சகோதரி ஷக்தி பிரபா தான் ஏற்ற பொறுப்பினை மன நிறைவுடன் நிறைவேற்றி நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் 9 பதிவுகள் இட்டு 80 பதிவர்களை அறிமுகம் செய்து 140 பதிவுகளை அறிமுகம் செய்து ஏறத்தாழ 220 மறு மொழிகள் பெற்றிருக்கிறார்.

இவரது அறிமுகப் படுத்தப்பட்ட பதிவுகள் அத்தனையும் அருமையான பதிவுகள். சகோதரி ஷக்தி பிரபாவினை நன்றி கலந்த நல்வாழ்த்துகளுடன் வழி அனுப்புவதில் பெருமை அடைகிறோம்.

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்பவர் வைரை சதீஷ். இவர் வைரை சதீஷ் என்ற பெயருள்ள தளத்திலேயே எழுதி வருகிறார். இவர் கணினி, கூகுள், மொபைல், பிளாக்கர் டிப்ஸ் எனப் பல டிப்ஸ்களை வழங்கி வருகிறார். கணினி மற்றும் அலைபேசியில் பயன் படுத்தும் பல மென் பொருள்களைப் பற்றி எழுதி வருகிறார். உங்கள் ஆருயிர் நண்பன் எனத் தளத்தில் விளம்பரப்படுத்தும் இவர் தான் இதுவரை வலைச்சரத்தில் ஆசிரியராகப் பணி புரிந்தவர்களில் இளையவர் ஆவார். பன்னிரண்டாம் வகுப்பு மாணவர். இவரை வருக வருக - அதிக - புதிய பதிவர்களை அறிமுகப் படுத்துக என வரவேற்று வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் ஷக்தி பிரபா
நல்வாழ்த்துகள் வைரை சதீஷ்
நட்புடன் சீனா
மேலும் வாசிக்க...

சிவரஞ்சனியும் நன்றியுரையும்

அனைவருக்கும் வணக்கம்.
குட்டிப் பதிவு தான் ஹிஹி :D


நன்றி சொல்லி விடைபெறும் நேரம். என்னை சிபாரிசு செய்து  தொடர் உற்சாகம் அளித்த வை.கோ. சாருக்கும், அழைத்த சீனா அய்யா, மற்றும் வலைக்குழுவுக்கும் மீண்டும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.


நீ............ண்ட பதிவுகளை பொறுமையாக படித்து, பின்னூட்டமிட்ட, இடாத அனைத்து  சகோதர சகோதரிகளுக்கும்,  பணிவான நன்றி. வோட் எல்லாம்  வேற போட்டு மகிழ்விச்சிருக்கீங்க. கோடி கோடி நன்றி, தாங்க்ஸ்,  தன்யவாதகளு... உங்களுக்கெல்லாம் இதோ நீல ஓர்சிட்ஸ் மலர்கள் பிடித்த பல பிரபல பதிவர்களின் இடுகைகளுக்கு நடுவே, அதிகம் அறியப்படாத ஆனால் திறமையான எழுத்தை தம் வசம் வைத்திருக்கும்  சில பதிவர்களையும் முக்கியமாக அறிமுகப்படுத்தவே அதிகம் முயற்சி எடுத்திருந்தேன். திறமை வாய்ந்த பலப்பல பதிவர்கள் நடுவே  சில பதிவுகளை மட்டும் சரத்தில் தொடுப்பது என்பதைத் தான்  உண்மையில் சிரமமாக உணர்ந்தேன்.

வெவ்வேறு தலைப்புகளில் சுட்டிகள் தரவேண்டும் என்ற எண்ணமிருந்தாலும்,  நடுநடுவே மனது எப்படியும் கதை கவிதை, வானவியல் சார்ந்த அறிவியல்  இடுகைகளுக்குச் சென்று விட்டது. தொழில்நுட்பம் குறித்து பல பதிவுகள் முன்னிருந்த ஆசிரியர்கள் அதிக திறம்பட செய்திருந்தார்கள். அதனால் அதையெல்லாம் தொடவே இல்லை.

என் ஆன்மாவில் ஒட்டிக்கொண்ட சிவரஞ்சனி ராகத்துடன் முடிக்காவிட்டால் ராத்திரி சோறு இறங்காது. I would feel incomplete.  எனக்கு உயிர் போன்ற விஷயம் ஆன்கீகம் மற்றும் "இசை".  தமிழ்/ஹிந்தி திரைப்பட பாடல்கள் அதிகம்  பிடிக்கும். (யாருக்குத்தான் பிடிக்காது!)  குறிப்பாக இளையராஜா அவர்களின் இன்னிசை சிறகின்றியே வேறுலகம் இட்டுச்செல்லும்.

சிவரஞ்சனி ராகம்,  "reminiscences" என்று சொல்லப்படும் பழங்கால நினைவுகளை தட்டி  எழுப்ப வல்லது. மஹாராஜபுரம் அவர்களின் 'சிவரஞ்சனி' தில்லானா கேட்டுக்  கொண்டே இருக்கலாம். திரைப்பட பாடல்களில்,

["ஒரு ஜீவன் தான்" - "வாவா அன்பே அன்பே", - "அடி ஆத்தாடி,  -"உன்னைத்தானே"-"தேரே மேரே பீச் மேன்" - "ஓசாதி ரே" -என்று பாடல் வரிசை நீளும், விருப்பமுள்ளோர்  youtube சென்று கேட்டு மகிழுங்கள்  ]


இந்த ராகத்தில் அமைந்த நெஞ்சை அள்ளும் ஒரே ஒரு தமிழ்பாடலின் சுட்டியுடன்  வலைச்சரப் பொறுப்பிலிருந்து என்னை விடுவித்துக்கொள்கிறேன். இதன் original  இசையமைப்பாளர்: p.ramesh naidu. (இந்தப்பதிவும் நீ...ண்டு விட்டது சுருங்கச் சொல்லி  விளங்க வைக்கும் கலை வரவே வராது போல.... :)) )
உங்களனைவருடனும் இணைந்திருந்த இவ்வாரப்பொழுது இனிமையாய் என்றும் என் நினைவிலிருக்கும். எல்லாருக்கும் மெர்ரி க்ருஸ்மஸ் மற்றும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

அடுத்து பொறுப்பேற்கவிருக்கும் பதிவருக்கு பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள். தொடருங்கள்...
மேலும் வாசிக்க...

எந்த நாளும் நமதே...


அமைதிக் கடல்
தனித்து ஜனிக்கும் நீர்த்துளி, பெருகியோடி, ஆறாகவும் நதியாகவும் உருமாறி,  பின் கடலில் கலக்கிறது. அது கடலில் கலந்ததால் இனி அது துளியல்ல. அதற்காக அது முடிந்தோ, இல்லாமலோ ஆகிவிடுவதில்லை. அதன் வடிவம் மட்டுமே மாறி வேரொன்றின் அண்டவடிவில் கலந்துவிட்டது.

வாழ்கையின் மொத்த பாகத்தில் நாம் கண்ட சுக துக்கங்கள் எத்தனை! அதில் நிலைகுலைந்ததும், நிலைத்து நின்றதும் என்ன என்றால், ஒன்றுமில்லை. விளிம்பில் நின்று திரும்பிப் பார்த்தால், அத்தனையும் கனவு போல் தெரியும். காட்சிகள், மனிதர்கள் சூழ்நிலைகள் எதுவுமே நிலைக்காமல் மறைந்து விட்டிருக்கும். 'இதற்காகவா இவ்வளவு கவலை?' என்ற எண்ணம் தலை தூக்கும். "கடமையை செய்து பாதையில் பயணித்துக் கொண்டிரு.."  என்பது மட்டுமே நிஜமெனப் புரியும். பாதைகள் முழுதும் சந்தித்த பாத்திரங்கள், அவர்களுடன்  நாம் கொண்டாடிய சுக துக்கங்கள் எல்லாமே மறைந்து போக பெற்ற "அனுபவம்" மட்டுமே கூட வரும்.

எத்தனை சிறியது நம் பூமி, அதில் நாம், நம் மனிதர்கள், நம் சிந்தனைகள்! கூறுபோட்டால் காணாமலே போய்விடுவோம். சிறு துளி....அந்த துளியின் வழியாக உலகைப் பார்ப்பதால் விளையும் கவலை.

நம் இலக்கையும், பார்வையையும். பிரமாண்டமாக விரிவிபடுத்திக் கொண்டால் சிறு கவலைகள் பாதிக்காது. வாழ்கை என்பது என்ன என்று புரியும் பொழுது, அது ஏறக்குறைய முடிந்து போனதாகிறது. இதையே திறம்பட கூறும் எழுத்தாளர் வித்யா சுப்ரமண்யம் அவர்களின் கதை படிக்கும் பொழுதே நெகிழ்ந்தேன்.

பூவனம் ஜீவியின் "ஆன்ம விசாரம்" பதிவுகள் நிறைய சிந்திக்கத் தூண்டுபவையாய் உள்ளன. ஏறக்குறைய எழுதுவதை சேவை போல் செய்கிறார் என்றெனக்கு தோன்றுவதுண்டு. அவருக்கு மனமார்ந்த வணக்கம். புகழ்பெற்ற எழுத்தாளார்கள் லா.சா.ரா, கிருஷ்ணன் நம்பி, சுஜாதா, ஜெயகாந்தன் போன்ற பலரை குறிப்பிட்டு,  நினைவு கூர்ந்திருக்கும் பதிவுகள் ஏராளம். சிறுகதைகளை கதாபாத்திரத்தின் கோணத்திலிருந்து ஆராய்ந்து எழுதுவது அனைவருக்கும் அமைந்துவிடாது. ஆக்கங்களை படிக்கையிலேயே ஜீவி காணாமல் போய்  கதாபாத்திரங்கள் மட்டுமே  உயிருடன் உலாவந்து மனதை ஆக்ரமிக்கும். கவிதைகள், அலசல், வாழ்கை நலம் பற்றிய கட்டுரைகள் என நீண்டுக்கொண்டே போகிறது இவரது படைப்புகள்.

முதுமையை எப்படி வாழ்வது என்பதற்கு இலக்கணமாய் திகழ்பவர்கள் சிலர். அதில் இந்த எளியவரும் ஒருவர். குறிப்பிட்டு எழுதிய பதிவர் இளங்கோவிற்கு நன்றி. முத்தாய் மூன்று பதிவுகள் கணக்கில் இடுகையிட்டாலும்  அத்தனையும் பயனுள்ளதாக இருக்கிறது இவரது வலைதளத்தில்.  உதராணமாக சில பேர் இருக்க, 'இப்படியும் இருக்காங்களே' என்று அங்கலாய்க்க வைப்பவர்கள் கணக்கில் அடங்கா. போலி கௌரவம், "நான் அன்னிக்கு எப்படியெல்லாம் இருந்தேன் தெரியுமா" என்று கதைப்பவர்களே அதிகம். இவர்களிடம் தான் பட்ட பாட்டை சுவைபட கூறியிருக்கிறார் GMB அவர்கள்.

மௌம் சாதிக்காதது பேச்சு சாதித்து விட முடியாது. அமைதியென்றாலே புத்தர். அவர் கூறிய எண்வழிப்பாதை பலரும் அறிந்ததே. அதிலே right speech வேண்டும் என்கிறார். நல்ல மொழி என்றால் என்ன?

பிறருக்கு பயன்படக்கூடிய பேச்சு. உதிர்க்கவிருக்கும் பேச்சு பயனுடையதா என்பதற்கு சில சோதனைகள் உண்டு. நீங்கள் கூற விழையும் சொற்கள்

1. உண்மையானதா
2. பிறரை துன்புறுத்தாததா?
3. இன்னொருவரை பற்றிப் புறம் பேசாததா?
4. பேசியதால் உங்களுக்கோ மற்றவனுக்கோ பயனுள்ளதா

என்று ஆராய்ந்து பேசுதல் வேண்டுமாம். இப்படி ஆராய்ந்தால் நம்மில் ஏறக்குறைய அனைவரும் அன்றாடம் பேசும் பேச்சையே விட்டுவிட  வேண்டும். இதையே தான் சாக்ரடீஸ் தன் சீடரிடம் சொன்னாராம். குட்டிக்கதையுடன் மிக நன்றாக நூருல் அமீன் விளக்கியிருப்பதைப் படியுங்கள்.

இதுவரை இறைவன் இருக்கிறானா இல்லையா என்று ஆராய்ச்சியிலிருந்தவர்களும்,  இருந்தால், நாளைக்கு பேசிக்கொள்கிறேன் என தட்டிக் கழித்தவர்களும் முதுமையின் விளிம்பில் நிற்கும் பொழுது, "இனிமேல் என்ன?" என்று சிந்திப்பது தவிர்க்க இயலாது. அதுவரை இல்லாதிருந்த இறைவன், சிலர் வாழ்வில் இருப்பவானாகிப் போக, அவனிடம் முறையிடுகிறோம். இறைவனே உனக்கு என் மேல்கருணை பாசமே இல்லையா என்று கதறுகிறோம். ' 'நான் உன்னை நேசிப்பதிருக்கட்டும், நீ என்னை நேசிக்கிறாயா?'  என்று இறைவன் திருப்பிக் கேட்டால்? தேனம்மை லக்ஷ்மணன் மூலமாக இதே கேள்வியைத் தான் இறைவன் கேட்கிறான். நறுக்குத் தெரித்தாற்போல் வந்து விழுந்திருக்கிறது வார்த்தைகள்.  என்ன பதில் சொல்லப்போகிறோம்?

 காலங்கள் மாறிக்கொண்டே இருக்கும். இன்று நமக்கு கிடைத்த மதிப்பும் மரியாதையும் நாளையும் இருக்கலாம், இல்லாமலும் போகலாம். நிலையாமை மட்டுமே உண்மை. தபால் உலகத்தில் வாழ்ந்த மனிதன் தொலைப்பேசியின் வரவால் தனிமைப்பட்டுப் போவதை மிக மிக பிரமாதமான குறும்படமாக்கியிருக்கிறார்கள். தேசிய விருது வாங்கிய படம். அதற்கான அனைத்து தகுதியும் இருக்கிறது. சிறப்பான நடிப்பு, திரைக்கதை, ஒளிப்பதிவு, அனைத்திலும் தேர்வு பெறுகிறது. R.K.Narayan அவர்களின் 'மால்குடி டேஸ்' நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.   நிற்க. தமிழ் குறும்படங்களில் விருப்பமுள்ளோர் இந்த வலைதளத்தில் தங்கள் வேட்கை தீர்த்துக்கொள்ளலாம். நூற்றுக்கணக்கான படங்கள் அடுக்கியிருக்கிறார்கள்.

தனிமையை நோக்கிய பயணமே எஞ்சிய படிகாள்கிப் போகிறது. இறுதி பயணத்தின் எல்லையில்  மீதமிருப்பது இரண்டே இரண்டு பேரப்பிள்ளைகள் மட்டுமே என ஹாஸ்யம் கலந்து  நிதர்சனத்தை கூறுகிறது இக்கதை.

அதனால் மனம் தளர்ந்து விட முடியுமா என்ன? இன்றுடன் எதுவும் முடிந்து விடவில்லை. எத்தனை முறை விழுந்தாலும் மீண்டும் எழுகிறோம். எத்தனை துவண்டாலும், மீண்டும் புத்துணர்ச்சி ஊற்றெடுக்கும்.  எவற்றிற்கும், யாருக்கும் நம்பிக்கையான நாளை உண்டு. என எடுத்துக் காட்டும்  இக்குறும்படத்துடன் ஏழு நிலைகளும் முற்று பெறுகிறது.முடிந்த பின்னர் மீண்டும் தொடரும்....எனக்கூறும் அருமையான வரிகளைக் கொண்ட பாடல். ஆங்கில மொழிபெயர்ப்புடன் கூடிய இந்த பாடலைக் காணத் தவறாதீர்கள்.


~~~~o~~~~

துவங்கித் தூரலாய் வளர்ந்து, மழையாகி, வெள்ளப்போக்கில் பயணித்து கடலில் கலந்து அமைதிபெறுகிறது. அமைதியான துளி தன்னை இழக்கவில்லை. தன்னிலையை  மட்டுமே மாற்றிக்கொண்டது. மீண்டும் நாளை நீராவியாகி மேகமாய் பயணிக்கும்...இந்த முடிவற்ற பயணம் தொடரும்.  துவக்கமும் முடிவும், கோடுகளின் முனைகளல்ல. அது சக்கரத்தின் இருவேறு பகுதி.

நான் முடிக்கிறேன். நாளை முதல் அடுத்த ஆசிரியர் தொடர்வார்......


மேலும் வாசிக்க...

Saturday, December 24, 2011

கிருஸ்மஸ் கொண்டாட்டங்கள் - நேரடி ரிப்போர்ட்

துவளும் நதிகள்மலர்கள் முதியோர் ஆசிரமம் கிருஸ்மஸ் கொண்டாட்டத்திற்காக தன்னையே புதுப்பிச்சுட்டு இருந்தது.

முதியோர் இல்லங்களை விட முதியோருக்கான ஆசிரமங்கள்  பரவாயில்லை. இங்க வரவங்க சொந்த செலவுல ஆயுள் சந்தா கட்டி பாதுகாப்பு, துணைக்காக தேடி வரவங்க. பிள்ளைகளுடன் ஒட்டு உறவு இருக்கும். முதியோர் இல்லத்துல  ஆதரவில்லாம ஏழ்மையால அவதிப்பட்டு வரவங்களுக்கும் இவங்களுக்கும் சம்பந்தம் இல்லை. இந்த மாதிரி ஆசிரமங்களுக்கு  விரும்பியே வரவங்களும் உண்டு. தியானம், ஜபம், பஜனை, அன்றாட பேச்சுனு ஓரளவு கலகலப்பா இருக்கும். அடிக்கடி டாக்டர்கள் முகாம் நடந்து ஆரோக்கியத்துக்கும் கேடு வராம பாதுகாப்பாங்க.

இன்னிக்கு வரப் போகும் சிறப்பு விருந்தினர்களாக முன்னமே பத்திரிகை அனுப்பிய விநாயகமுருகன், அமைதிச்சாரல், (ஊர்சுத்தி)பி.ஜி.சரவணன், எவனோ ஒருவன், பிகிலு, யாத்ரிகன் யாத்ரா, பனித்துளிஷங்கர், டான் அஷோக், வி.ராதாக்ருஷ்ணன், குறிஞ்சி-மலர்கள் சுந்தரா, முனைவர் இரா.குணசீலன் எல்லாரும் ஒவ்வொருத்தரா வந்துட்டு இருந்தாங்க.

முதலில் எழுத்தாளார் அமைதிச்சாரலின் ஓடமும் ஓர் நாள் கதையை சிலாகிச்சு பேசினாங்க மலர்கள் காப்பாளர் தர்ஷினி. சில முதியோர்கள் இக்கதையை தங்கள் வாழ்கையின் பிரதிபலிப்பாக உணர்ந்தாங்க. கோலப்போட்டிகள் பத்தி தகவல் தெரிவிச்சதும் அதில கலந்து கொள்ள பலபேர் ஆர்வமா முன்வந்தாங்க.

வயதான ஒருவர்  குழந்தைகளின் ஹீரோவாக ஆகும் கதையை டான் அஷோக் பகிர்ந்து, எத்தனை வயதிலும் மகிழ்ச்சியாகவும் உபயோகமாகவும் இருக்கும் வழியை அந்தந்த மனிதனே கண்டு புடிக்கணம்னு சொல்லி முடிசார்.  அப்புறம் புத்தக அறிமுகம் நடந்துச்சு. முதலாவதா அறிமுகப்படுத்திய

பதிப்பகம்: யாத்ரா யாத்ரிகன்
தொகுப்பு : நரன் கவிதைகள்
எல்லாருக்கும் ஒவ்வொரு புத்தகம் வழங்கினாங்க. வாழ்கையின் ஒவ்வொரு கணத்துக்கும்  பொருந்தி வரதா இருந்தது அந்த கவிதைத் தொகுப்பு.

அடுத்த அறிமுகம் பிஜி சரவணனுடையது. அவரோட 'முகில் பூக்கள்' புத்தக பிரசுரம் பத்திப் அறிமுகப்படுத்தி, ஆளுக்கு ஒவ்வொரு பிரதி குடுத்தாங்க. மனசுக்கு புத்துணர்ச்சி தர இயற்கை அழகை, அதை விட அழகா கவிதைல வடிக்கற திறமை சரவணனிடம் இருப்பதாக எல்லாரும் புகழ்ந்தாங்க. சிந்தனையில் பூக்கற கவிதைகளை ஓவியமாகவே நம் கண் முன்ன கொண்டு வருவதாக பாராட்டி சிறந்த எதிர்காலம் இருக்கும்னு  வாழ்த்து தெரிவிச்சாங்க. அவங்க பங்கேற்கும் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் பற்றி சொன்ன போது இப்படிபட்ட இளைஞர்களால நல்ல எதிர்காலம் இருக்குன்னு நம்பிக்கை பிறப்பதாக கூறினாங்க.

கைப்பேசியில் பேசும் போது கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதிகளைப் பத்தி சுருக்கமா பேசி முடிச்சு, பிகிலு-நேரம்  பகுதில "மீல்ஸ் ரேடி" குட்டி குறும்படம் காமிச்சாங்க.  சில பேருக்கு தங்கள் வாழ்க்கைத்துணை நியாபகம் வந்துச்சு. மலையாளக் குறும்படம் என்றாலும் "புஷ்பக்" படம் போல மொழியைத் தாண்டிய மௌனத்துல மனசுல இடம் பிடிச்சுடுது. வயசான காலத்துலையும் உழைச்சு சாப்புடற அவரோட தன்மானம் பிடிச்சு போய் நேகிழ்ந்தாங்க. வயசான காலத்து காதலை பார்த்து ரெண்டு மூணு பாட்டி தாத்தாக்களுக்கு வெக்கமா போய்டிச்சு. உடனே பனித்துளி சங்கர் "முதுமையிலும் காதல்" வரும்னு தன் கருத்தை பகிர்ந்துகிட்டார். 'முதுமையா இருந்தா என்ன உடம்பு தானே முதுமை மனசு என்னிக்கும் இளசு'னு தர்ஷினி பேசினதுக்கு ஏக கரகோஷம்.

புதுக்கவிதை உலகத்துல தனக்கென ஒரு பேர் எடுத்து வரும் விநாயகமுருகன் கவிதைகளை சுட்டிக் காட்டி குஞ்சுண்ணி கவிதையை பகிர்ந்திகிட்டாங்க. குஞ்சுண்ணி மாதிரி தான் எல்லோரும் வார்த்தையை தவிர வேற எதையுமே சுவாசிக்கறதில்லை. நம்ம உலகத்த விட்டுப் போன பிறகும் எஞ்சி நிற்பது இந்த வார்த்தை தான்னு குட்டி உரை ஆற்றினார்  முக்கால்வாசி மனிதர்கள் கருத்துக் கந்தசாமிகளாத் தான் இருக்காங்க என்றார் விநாயகமுருகன். எல்லாரும் ரசிச்சு ஆமோதிச்சாங்க.  அமைதி அவங்க மனசுல வந்துதா என்பது கேள்விக்குறி தான்.


இறை தியானம், உண்மையான ஞானத் தேடல் இருக்கறவன் தன்னுள்ளே தன்னை தேட முயற்சிப்பான். உங்க குறைகளை இறைவனிடம் சொல்லுங்க, உங்க ஆழ்மனசின் சக்தியை பெருக்கிக்குங்க.போலி சாமியாரை தேடி ஓடாதீங்கன்னு எவனோ ஒருவன் உரையாற்றியதும், இந்த மாதிரி ஒரு சாமியார் வந்து போன அனுபவம் பத்தியும் பேசியது இந்த காலத்துக்கு பெரிதும் தேவையான விஷயமா இருந்தது. மாயை பத்திய  ஆழமான கருத்துக்கள்  பேசினால் பலருக்கும் புரியுமோனு தயங்கி அதை பேசாமையே  முடிச்சுகிட்டார்.

அடுத்து பேச வந்த வி.ராதாகிருஷ்ணன், தன்னுடைய "ஜீரோ எழுத்து" பற்றி அறிமுகம் செஞ்சு வெச்சார். இது பற்றி தான் தொடர் எழுதப்போவதாக கூறினார். அவரோடைய வித்தியாசமான abstract எழுத்தும் பேச்சும் பலருக்கும் பிடித்தமாய் போனது.

முனைவர் குணசீலன், விழாவிலேயே முதியோர் தினத்தை கொண்டாடி, தன் அன்பைப் பகிர்ந்து குட்டிக்கதைகள் மூலம் சிற்றுரையாற்றியது பலரது மனசை கொள்ளை கொண்டுச்சு. கிருஸ்மஸ் கொண்டாட்டதை முன்னிட்டு சிற்றுண்டி, சிப்ஸ், கேக், என்று பந்தி விரிக்கப்பட்டிருப்பதை தர்ஷினி தெரிவித்தார். வயதான காலத்தில் பாதி பேருக்கு ஷுகர் இருக்க, நம் செலவில் இவர்கள் கேக்  சாப்பிடுகிறார்கள் என ஒரு முதியவர் காது  படவே குறை கூறினார். அவரை சமாதானப்படுத்தி செலவு முழுவதும் ஸ்பான்ஸர் செய்ய பட்டதை கூறினர் காப்பாளர்கள்.

எத்தனை வயதானாலும் முரண்டு பிடித்து இடக்கு பேசும் வயதானவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். காலம் அவங்களை முறுக்கி விட்டிருக்கலாம்.  பார்க்க முரடாக இருக்கும் சிலர் பலாப்பழம் போன்றவர்கள். அவங்களோட உண்மை சுபாவம் பழகியவர்களுக்குத் தான் புரியும். சுந்தராவின் கவிதை அவள் நினைவுக்கு வந்து சிறு புன்னகை உதிர்த்தாள்.

இறுதியாக film festival 2011ல் பேசப்பட்ட  "துருவ நட்சத்திரம்" படம் திரையிடப்பட்டு, அதன் விமர்சனமும் காண்பிக்கப்பட்டது. டெல்லிகணேஷ் மற்றும் குட்டிப் பையனின் நடிப்பை அனைவரும் பாராட்டினாங்க. முடிவுரை முடிந்தபின்  விநாயகமுருகன், அமைதிச்சாரல்,  (ஊர்சுத்தி) பி.ஜி.சரவணன்,  எவனோ ஒருவன், யாத்ரிகன் யாத்ரா, பனித்துளிஷங்கர், பிகிலு,  டான் அஷோக், வி.ராதாக்ருஷ்ணன்,  குறிஞ்சிமலர்கள்-சுந்தரா, முனைவர் இரா.குணசீலன் ஆகியோருக்கு சால்வை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. சிற்றுண்டியுடன் விழா இனிதே முடிந்தது.

வலைச்சரத்திற்காக- ஷக்திப்ரபா

~~~o~~~

முதியோர்கள் என்பதால அவர்கள் எல்லா விஷயத்திலும் சரியென்றும்  சொல்லிட முடியாது.  விட்டுக்கொடுத்து காலமாற்றத்தை ஏற்றுக்கொண்டு வாழ அவர்களும் பழகிக்கொள்ள வேண்டும். காலம் மாறும். மாற்றம் நல்லதல்ல என்றால் அறிவுரை செய்வது அவர்கள் கடமை. வாழ்ந்து அனுபவித்த அவர்கள் சொல்வதை சரியான கோணத்தில் ஏற்று சிறிதேனும் விட்டுக்கொடுப்பதும் மற்ற தலைமுறையின் கடமையாகிறது.

முன் காலத்தில், இல்லறத்துக்கு அடுத்து வானப்ரஸ்தம் என்ற நிலை இருந்தது. அதில் பக்குவப்பட்ட பின்னே சன்யாஸி ஆக முடியும். வானபிரஸ்த நிலை என்பது, ஒட்டுதல் பற்றுதல் நீங்கி, பொறுப்பை இளையவர்களிடம் ஒப்படைத்து தன்னிலை ஆராய்ச்சியில் ஈடுபடுதல் ஆகும். அன்றாட வாழ்வின் போக்கில் அதிகம் தலையிடாமல்,  அன்பும், விட்டுக்கொடுத்தலுடன் வாழ்ந்தால் முதுமை இனிமை.

முதியவர்களை ஏசாமல், நோகடிக்காமல், நம் நலனுக்காகவே வாழ்ந்த அவர்களின் உள்ளுணர்வை  புரிந்து நடந்தால் எல்லா வீடும் கோகுலம். நிறைவான பாராட்டுகள் செய்யாத விந்தையே இல்லை. அன்போடு அரவணைத்து, அவர்கள் செய்த தியாகங்கள், அருமைகளை சொல்லி பாராட்டினால், குழந்தைகளாகி நம்மிடம் குழைந்து வருவார்கள்.

எல்லாம் அனுபவித்த  பக்குவத்தில், கணநேர விரக்தியால் வரும் தேடலை ஞானமென்று   கூறும்  பாடலாக இது அமைகிறது.
துவங்கி வளர்ந்து ஓடிய துளிகள் அடுத்து இறுதியாய் அமைதி பெறும்.

மேலும் வாசிக்க...

Friday, December 23, 2011

டைரி சுமக்கும் ரகசியங்கள்

முதிரும் நீரோடைஅன்புள்ள டைரி,

உன்னோட பேசலைனா எனக்கு பொழுதே போகாது. நீ என் வாழ்கைல  முக்கிய அங்கமில்லையா? அங்கம் மட்டுமா, நமக்குள்ள புதைந்து கிடக்குற ரகசியம் உனக்கும் எனக்கும் மட்டும் தான் தெரியும். சின்ன வயசில் பெட்டி டேவிஸ் உன்னை அறிமுகப்படுத்திய நாள்லிருந்து இன்னி வரை என்னோட ஆருயிர் தோழி நீ தான்.

வரவர இளமைபருவத்தோட எல்லையில முதிர்ச்சியின் முனைல நிக்கறதாலையோ என்னவோ ரொம்ப அதிகமா யோசிக்க ஆரம்பிச்சுட்டேன். படிக்கற சில கவிதைகள் அப்படியே பச்சக்னு மனசுல ஒட்டிக்குறது. அது மாதிரி எழுதற சில பேர்ல "வீணாப்போனவன்" அவர்களொடகவிதை எனக்கு ரொம்ப பிடித்தம்னு முன்ன உனக்கு சொல்லியிருந்தேன். அவர வலைதளத்தில் இப்பொல்லாம் எழுதறதில்லையான்னு தெரியல. :(

அதே மாதிரி  ராஜா சந்திரசேகர் கவிதைகளும், ரவி ஆதித்யா கவிதைகளும் ரொம்பவும் என் மனதுல நிக்ககூடியவை.  பொதுவா எழுத்துல சொல்லாததையும் புரியவைக்கும் கவிதைகள்  சிறப்பு. அப்படி தனிச்சு நிக்கறது இவங்க கவிதைகள். ராஜா சந்திரசேகர் கவிதைல ரயில் ஸ்னேகம் மாதிரி வாழ்கைய படம் பிடிச்சு காட்டுற ஒரு கவிதை கொஞ்சம் வலி உண்டு பண்ணிச்சு.

ரொம்ப நாள் முன்ன வலைதளத்துக்கு புதுசா வந்தப்ப ரவி ஆதித்யா பதிவுகள் நிறைய படிச்சதுண்டு. அவரோட  மிடில் க்ளாஸ் மொட்டமாடி  பத்திய பதிவு என்னோட  ஃபேவெரிட். சின்னவயசை நினைவு படுத்திச்சு. உனக்கு அடுத்து நம்ம வீட்டு  மொட்டை மாடியும் என் நெருங்கிய சினேகிதின்னு உனக்கே தெரியும். மொட்டை மாடில தொலைச்ச கனவை பத்தி சிறப்பான கவிதை கூட எழுதிருக்கார்.

ஃபளாட் பெருகி வர இந்த காலத்துல நாம மொட்டைமாடியை தொலைச்சுட்டோம். செடி, கொடி, தாவரம், பச்சை புல்வெளி எல்லாமே தொலைச்சுட்டு, நெருப்பு டப்பா சைஸ் வீட்டுல வாழ்ந்துட்டு இருக்கோம். இயற்கை சீர்கேடு இப்படியே போச்சுன்னா என்ன ஆகும் ன்னு நெத்தியடி அடிச்சு சொல்லிருக்கார் திரைப்பட பாடலாசிரியர் மதுமதி. நான் தான் என்னோட எழில் கொஞ்சும் இளமையின் எல்லைல நிக்கறேன்னா நம்ம பூமிக்கு என் நிலைமையா வரணும்! :(

இப்புடியே போனா என்னை வெளக்கெண்ண மூஞ்சின்னு வீட்ல திட்டுவாங்கன்னு பயந்து கொஞ்சமானும் சிரிச்சாப்ல முகத்தை வெச்சுகணுமேனு சிரிக்கற சிந்திக்கற விஷயத்தை பத்தி மட்டும் பேசணும் படிக்கணும்னு முடிவுக்கு வந்தேன். அப்போ தான் மின்னல்வரிகள் கணேஷ் சிலேடை பதிவு கண்ணுல பட்டுச்சு. அடடா எப்படியெல்லாம் புலவர்களும் தமிழறிஞர்களும் இலக்கிய ரசத்தை சாமன்ய ஆளும் புரிஞ்சுக்குற மாதிரி பேசியிருக்காங்க என வியந்தேன். அவரோட ப்ளாக்ல சரிதா சரித்திரம் படிக்க படிக்க சிரிப்பு தான். ஷாப்பிங் என்றால் அலர்ஜி கொள்ளும் பெண்களையெல்லாம் ஆண்கள் சந்தித்திருக்கவே மாடாங்களோனு தோணிச்சு.

சிலேடை படிச்ச பாதிப்புல அதே மாதிரி நானும் முயற்சி செய்யணம் நினைச்சு பன்மொழி திறமை வெளிய தெரியற மாதிரி காலைல அத்தை கிட்ட "நேத்து காப்பியே இன்னிக்கு copyஆ" ன்னு கேட்டேன். 'காலைலையே மொக்க போடாத' ன்னு கடுப்பா சொல்லிட்டு போய்ட்டாங்க. என் மனசு மேலும் உடைஞ்சு போச்சு. இலக்கிய ஆர்வத்துக்கு அஸ்திவாரம் கூட போட விடமாட்றாங்க. அப்புறம் தானே கட்டடம் கட்டி வளர்க்கறது. 

திறமை இருந்தாக் கூட அதது இருக்கறவங்க கிட்ட இருந்தா மட்டும் தான் உலகம் திரும்பிப் பாக்குது. அதே திறமை சாமான்ய மனுஷங்க கிட்ட இருந்தா, யாரு அதை கவனிச்சு ரெண்டு நல்ல வார்த்தை சொல்லறாங்க?! எத்தனையோ திறமையுள்ள மனுஷங்க வாய்ப்பும், அதிர்ஷ்டமும் இல்லைன்னா முடங்கித் தான் போறாங்க. ரிஷபன் பகிர்ந்திட்ட  செய்தி ரொம்பவே யோசிக்க வெச்சுடுச்சு. நேரமில்லையா? ரசனை போதலையா? இல்லை brandedனு உறுதியா தெரிஞ்சா மட்டும் தான் மதிப்பா? இத்தனை பிஸி வேளைலையும் நமக்கு குட்டி குட்டி எஸ்-எம்-எஸ் அனுப்பறவங்க 'make our day'.

என்னை மாதிரி புலம்பியே பிராணனை வாங்குறவங்க ஒரு பக்கம்,  தமிழ்பறவை மாதிரி சிலர் தன் உழைப்பை, உற்சாகத்தோட சலிக்காம செஞ்சுட்டு இருக்காங்க. தமிழ்பறவை தன்னோட அபார ஓவியத் திறமையை ஒவ்வொரு பதிவிலும் பகிர்ந்திட்டு வரார். சும்மாவா சொன்னாங்க "Choose a job you love, and you will never have to work a day in your life".  சேகுவாரா முதல், இளையராஜா, பெங்களூர் palace, புத்தம்புது காலை, இன்னும் பல ஓவியங்கள் சொல்லிட்டே போகலாம். சமீபத்தில் அவரது ஓவியம் அச்சு பதிப்பிலும் வந்திருக்குன்னு தன்னோட சந்தோஷத்தை பகிர்ந்திருந்தார். இவருக்கும் இவர் ஓவியங்களுக்கும்  இன்னும் அதிகமான வரவேற்பு  எதிர்காலத்துல இருக்குன்னு நம்பிக்கை பிறக்குது.

 ஹாஸ்ய கலந்த நச் கதை மூலமாத்தான் எனக்கு வை.கோபாலக்ருஷ்ணன் அவங்களோட வலைதளம்  அறிமுகமாச்சு.  எழுத்து மூலமா ஒருத்தரை சிரிக்க வெக்கறது எப்படி சிறந்ததோ, அதே மாதிரி நம்பிக்கை தர எழுத்துக்கள் இருந்தாலும் உற்சாகம் பிறக்கும் இல்லையா?!  உன்கிட்ட முன்னமே அவரோட ஒவ்வொரு கதைகளையும் சொல்லி சிலாகிச்சிருக்கேன். பிடிச்ச பல கதைகள் இருக்கு, ஆனாலும் "பூபாலன்" கதை நமக்கு சொல்ற கருத்து பல கோணங்களில கால நேரம் தாண்டி விரிவடைஞ்சுட்டே இருக்குற மாதிரி தோணுது. இளைய தலைமுறையை கூட சென்றடையற மாதிரி சிறுகதை எழுதும் இலக்கணம் இவர்கிட்டேருந்து கத்துகணும்.

நம்பிக்கை தான் வாழ்கை. பிரச்சனை இல்லாத மனுஷன் யாரு. எல்லாருக்கும் ஒவ்வொரு பிரச்சனை.  எவ்ளோ பெரிய ப்ரபஞ்சத்துல நாம ஒரு கடுகு  விச்சு தன்னோட பதிவுல சொன்னது தான் நினைவு வரது. நாமளே கடுகுன்னா நம்ம பிரச்சனையும் அதை விட சின்னதுன்னு தோணி போய்டுது. பூதாகாரமா பார்க்காம போய்ட்டே இருந்த வண்டி சுலபமா ஓடும்.

இதையேத் தான் எதிர் விட்டு நித்தி கிட்ட சொன்னேன். அவ சின்னதா இருக்கறதால கடுகுன்னு சொன்னதா தப்பா புரிஞ்சுட்டு சண்டைக்கு வந்துட்டா. எனக்கு பேசவே தெரியலை அப்புறம் தானே பேச்சை எப்படி முடிப்பதுனு யோசிக்குறது. நல்லது சொன்னாலும் புடிக்காத பொல்லாத உலகம்டான்னு நினைச்சுகிட்டேன். நம்ப "காது காது" ன்னா அவங்க "லேது லேது"ன்னு புரிஞ்சுக்ககுறாங்க.  Communication gap காது கெக்கலைனா வருது, சரியா புரிஞ்சுக்கலைனாலும் இதே பிரச்சனை.

கம்யூனிகேஷன் பத்தி கூகில் தேடி அதைப் பத்தி படிக்க போன நான், கம்யூனிகேஷன் சரியா இல்லாததால ஒரு மாமா  பட்ட கஷ்டத்தை   ஜவஹர் எழுதியிருந்ததை படிச்சு சிரிச்சுட்டேன். எப்படியெல்லாம்  ஒருத்தனுக்கு  சோதனை வருது பாரு! நாம சொல்ற விஷயம்  எப்படி தவறா போய் சேருதுன்னு சொல்ற சின்ன வயசு "passing the secret" விளையாட்டு   நினைவு வந்தது.  ஜெஃப்ரி ஆர்ச்சருடைய  குட்டிக் கதையின் தாக்கத்தை தமிழில் எழுதி  செம்மை வெற்றி பெற்றிருக்கார் ஜவஹர். எனக்கு இதயமே நின்னுபோச்சு :O

எழுதி எழுதி உன் பேஜும் தீர்ந்து போச்சு. இது வரை என் பொலம்பலை கேட்ட உனக்கு புது வருஷத்துக்கு உனக்கு   2012  மாடல் புது ட்ரெஸ் உண்டு :)
~~~

என்ன பெரிசா குடி முழுகிப் போச்சு! முதிர்ச்சிங்கற பருவத்துல,  வயசுல, அறிவுல, மனசுல, முதிர்ச்சி அடைஞ்சா காய் கனிஞ்சா கிடைக்கற சுவை வாழ்கைல கிடைக்குது. ரொம்ப அட்வைஸ் பண்றதால எனக்கும் பக்குவம் வந்துடுச்சுன்னு தப்பான அபிப்ராயம் அரசல் புரசலா ஊர்ல உலவுது.

சரி, டிவில "செல்லமே" சீரியல் இன்னிகானும் முடியுதான்னு பார்க்க கிளம்பணம்.  எத்தனை பிரச்சனை மனுஷனுக்கு!

இப்படிக்கு,
முதிரும்  நீரோடை

****************

கோபம் வரும், சலிப்பு வரும் ஆனாலும் அதையும் போகிற போக்கில் விட்டு கொல்லுனு சிரிக்க பழகிக்கணும். நண்பர்கள் உறவினர்கள் என இருந்த மனிதன், சலிப்பு, வேலை பளு, உடல் ஆரோகியம் ஆகிய பல காரணங்களால் நிச்சயமாக இந்தக் காலகட்டத்தில் குடும்பத்திற்குள் தன்னை குறுக்கிக்கொள்கிறான்.
நடுத்திர வயதின் குணாதிசயங்களை புட்டுப் புட்டு வைக்கும் இந்தப் பாட்டை  விட நான் என்ன சொல்லிவிடப் போகிறேன்.

இன்றைய அறிமுகங்களில் ஏறக்குறைய அனைவரும் பிரபலமான பதிவர்களாகி விட்டனர். அதனால் எனக்கு பிடித்த பதிவுகள் வரிசையிலே அடுக்கிவிடுங்கள்.

இனி துவளும் .............மேலும் வாசிக்க...

Thursday, December 22, 2011

கண்மணி காலனியின் கிட்டி பார்டி

வாழும் அருவி


இடம்:                      கண்மணி காலனியின் க்ளப் ஹவுஸ்
பாத்திரங்கள்:     ஸ்ரீ என்கிற ஸ்ரீமதி, ஏஞ்செலா, சுஷீ, மதி, ரேஷ்மா
நேரம்:                     டிசம்பர் மாதத்து இதமான வெயிலுடன் கூடிய மதியபொழுது.
************

ஸ்ரீமதி நுழையும் பொழுதே உச்சகட்ட மானாட்டின் முக்கிய பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்தது.

ஏஞ்செலா: இந்த விடியோவை நம்ம லேடீஸ் க்ளப் மீட்லையும் பொட்டு காமிச்சுடுவோம். என்ன சொல்றீங்க.

சுஷீ:   தினம் ந்யூஸ்பேபர்ல எல்லாருமே பார்த்து தெரிஞ்சுட்டு இருப்பாங்க. அதுவும் இப்பெல்லாம் இண்டெர்நெட்ல எதை பத்தி வேணுனாலும் தேடி கண்டுபுடிக்க முடியுது. நம்ம தமிழ் மக்களோட புத்திகூர்மை பத்தி கெக்கவே  வேணாம்.

ஸ்ரீ: எதை பத்தி இவ்ளோ சீரியஸ் டிஸ்கஷன்?

ரேஷ்மா: கெப்ளர் 22 விஞ்ஞானிகள் புதுசா கண்டுபுடிச்சிருக்கற பூமியைப்  போல ஒரு கிரகம். 600 light years தொலைவுல இருக்காமே...

ஸ்ரீ: அட அதை பத்திதான் சார்வாகன்  தன்னோட blog ல  பத்து நாள் முன்னமே பொட்டுடாரே. சின்னதா intro எழுதி அது தொடர்பான விடியோவையும் இணைச்சிருக்காரு. கடவுள் துகள்னு சொல்லபபடற higgs துகள்களை பற்றின ஆராய்ச்சி கூட பார்த்து படிச்சேன். அறிவியல் நாட்டம் இல்லாதவங்க கூட நாலு அஞ்சு தடவை படிச்சா புரியும். அவரோட வலைதளத்துல இந்த மாதிரி எக்கச்சக்க உபயோகமான அறிவியல் சம்மந்தபட்ட பதிவு இருக்கு. 

சுஷீ: இருக்கட்டும், இருந்தலும் நம்ம லேடீஸ் மீட்ல இந்த மாதிரி  டிஸ்கஷன்ஸ் இருந்தா சுவாரஸ்யமா இருக்கும். இது தொடர்பா நிறைய பேரோட எண்ணத்தை தெரிஞ்சுக்கலாம். ஆரோக்யமான விவாதமும் இருக்கும்.


மதி: எதையெல்லாமோ கண்டுபுடிச்ச மனுஷன், சாமான்ய மனுஷங்களும் ஸ்பேஸ் ட்ராவெல் பண்ற மாதிரி விஞ்ஞான வளர்ச்சில காலை வெக்கலையே. அப்படி வழி இருந்தா இங்க இருக்கற தினப்பிரச்சனைக்கும் வெலைவாசிக்கும் நிறையபேர் கெப்லர் 22 க்கு பறந்து போயிருப்போம்.

ரேஷ்மா பலமாக சிரித்தபடி: நீ மாறவே மாட்ட மதி. "தூரத்துப் பச்சை" கதை தான்.  அங்க போயி நம்ம  பூமியே தேவலைன்னு ஒளி வேகத்துல பறந்து வந்துடபோற.

ஸ்ரீ: அப்படி என்ன பண்ணிடுச்சு பூமி உன்னை. நாம தானே அதை சரியா பராமரிக்காம அதோட உசுர வாங்குறோம்.  இந்த மாதிரி விலைவாசி ப்ரச்சனையெல்லாம் சந்திகாத மனுஷங்க யாரு? பெரிய் பெரிய கவிஞர்கள் புகழ் பெற்ற ஓவியர்கள், நம்ம சூப்பர் ஸ்டார் கூட சின்ன வயசுல ஏழ்மைல வாழ்ந்தவர் தான். Interesting தகவல் ஒண்ணு  சமீபத்துல படிச்சேன். பாரதிதாசன் கல்யாண செலவு அதிகமாகிடும் பயந்து என்ன  பண்ணினார்னு சக்திஸ்டடிசென்டர் எழுதிருந்தார். பெண் சிசு கொலை பத்தி ஆர்டிகல் கட்டிங் தேடின போது  தான் இதையும் படிச்சேன்...

சுஷீ:  பணம் படுத்தும் பாடு பாரதி முதல் அவரோட தாசன் வரை யாரையும் விட்டு வெக்கலையாக்கும். எனக்கு ஷைலஜா வெங்காய மாலை பதிவு தான் நியாபகம் வரது.

ரேஷ்மா: ஷைலஜாவோடவோட ஹாஸ்யம் எனக்கு ரொம்ப புடிக்கும்.  அரிய தகவல் தர்ற பதிவுல கூட இயல்பான நகைச்சுவை உணர்வோட உபயோகமான விஷயங்கள் எழுதுவாங்க. மரபுக்கவிதை, கதை, ஒலிப்பதிவுகள் எதையும் அவங்க விட்டுவெக்கறதில்லை.  சமீபத்து கவிதை அவங்க கற்பனை வளத்துக்கு சான்று. வாடும் பயிர் வாடியபோதெல்லாம் வாடும் மென்மை குணத்தோட அவங்க தசரா யானைக்கு வருந்தியது எனக்கே வலிச்சது. இந்த வருஷம் தசரா யானைகளுக்கு கொஞ்சமானும் மாற்றம் கொண்டு வந்தாங்களான்னு அவங்களையே கெட்டு தெரிஞ்சுக்கணும். 

ஸ்ரீ:  I know...புத்தகம் எல்லாம் வெளியிட்டிருக்காங்க. எனக்கு அவங்களோட 'திரும்பத் திரும்ப' கதை திரும்பத் திரும்ப படிச்சாலும் அலுக்காது. ஷைலஜா ஹாஸ்யம் படிச்சும் உன் ப்ரச்சனை தீரலையா வவ்வால் குடுக்கற டிப்ஸ் தான் உனக்கு லாயக்கு. சூப்பர் சல்யூஷன்ஸ். ஐடியாஸ் work out ஆகலைன்ன அவருக்கு மெயில் பொட்டு கெக்கலாம்!

ரேஷ்மா: இவ்வளவு பேசற எத்தனை பேர் நகரத்துலையே குப்பை தொட்டி ரொம்பி வழியற மாதிரி அடைபட்டு கிடக்காம, கிராமங்களை நோக்கி போக ரெடி? பசங்க ஸ்கூல், தேவைக்கு ஹாஸ்பிடல் எதுவும் இல்லைன்னு ஏதோ காரணம் சொல்லி என்ன விலையானாலும் இங்க தானே வாழுறோம். விவசாயம் பண்ண யாரனும் ரெடியா? சினிமால தான் சாத்தியம். எதிர்காலத்துல விவசாயமே கேள்வி குறியா போய்டும் போல இருக்கு.

ஏஞ்செலா: நீங்க எல்லாரும் ப்ளாக் அது இதுன்னு பேசுறதை பார்த்து எனக்கே தமிழ்  எழுத படிக்க ஆசை வந்துடுச்சு. நானும் என்னொட சொந்த website ஒண்ணு வெச்சிருக்கேன். என்னொட mother tongueல எழுதறேன். இவ்ளோ ரெஸ்பான்ஸ் இருக்கறதில்ல.

ஸ்ரீ: ஹையோ நீ ப்ளாகுக்கு சொல்றையே, நம்ம வீட்டுல சமைக்கற சமையலுக்கு பாராட்டு கிடைக்கலைன்னா கூட மனசு வாடி போய்டுது. பாராட்டுக்கு ஏங்கறது மனுஷங்க மனசு. யாருக்கு நேரம் இருக்கு நின்னு நிதானிச்சு ரசிக்க? rat race! இதையேத் தான் என்.உலகநாதன்  தன்னுடைய கதை வெளிவந்த அனுபவத்தை ஹ்யூமர் கலந்து சொல்லியிருக்கார். On a serious note, தொடர்ந்து உழைச்சு தன்னோட பதிப்பகம் ஒண்ணை துவங்கியிருக்கார்.

சுஷீ: தினப்படி கவலையெல்லாம் மறக்க, சிரிக்கணும். நம்ம தமிழர்களுக்கே உரிய குணம் தானே ஹாஸ்யம். பழங்கால எழுத்தாளர்கள் முதல் நம்ம சினிமா நகைச்சுவை நாயகர்கள் வரை தமிழ் காமெடி கலக்கல். வாய் விட்டு சிரிச்சா நோய் கூட போய்டுமாம். நான் ஹுமர் க்ளப்ல  சேர்ந்து காலைல 'ஹஹஹஹ' கும்பலா பார்கல போய் சிரிக்க போறேன்.

ரேஷ்மா: இதுக்கு ஏண்டி அங்கெல்லாம் போற, கடுகு அகஸ்தியன் சாரோட தோச்சு அங்கச்சி கதை படிச்சாலே கவலையெல்லாம் பஞ்சா பறந்து போய்டும்.  சின்ன வயசுலெர்ந்தே இவரோட பெரிய ஃபேன் நான். நான் என்ன தமிழ்நாட்டுல நிறைய பேர் இவருக்கு விசிறி. அவரோட பல கதைகள், ஜோக்ஸ் எல்லாமே பதிவு பண்ணுறார். ப்ளாகே களை கட்டுது.

ஏஞ்செலா: எல்லாத்தையும் விட சிம்பிள் வழி, நம்ம மதிய பேச சொல்லி கெக்கறது தான். (மதி பொய்க்கோபம் கொள்கிறாள்)

மதி: உங்களுக்கெல்லாம் கிண்டலா போச்சு. கொஞ்சம் யோசிச்சு பார்த்த நிதர்சனம் தெரியும். சுதந்திரமே போச்சு. பெண் சிசு கொலையை பத்தி படிச்சப்ப உனக்கு கண்ணு கலங்கிச்சா இல்லையா.... என்ன புண்ணாக்கு சொசைட்டி. பெண்களுக்கு சின்னச் சின்ன சந்தோஷம் கூட அனுபவிக்க பயப்பட வேண்டிருக்கறதை எவ்ளோ துல்லியமான கவிதை வடிச்சிருக்காங்க sounds of silence. இவங்களோட பல கவிதைகள் படிச்சேன். எனக்கு ரொம்ப புடிச்சுது. ப்ரில்லியண்டா எழுதறாங்க.

சுஷீ: ஆமாம் நானும் படிச்சேன். அதுல எழுதியிருக்கறது வலிக்கற உண்மை.  நம்மூரு PTC பஸ்ல போனாலே பெண்களுக்கு எவ்வளவு பாதுகாப்பு வேணும் ன்னு புரியும். 

மதி: எக்சாக்ட்லி! எங்க திரும்பினாலும் சாடிசம், வக்ரம், போட்டி, பொறாமை.  சின்ன வயசு மகிழ்ச்சியெல்லாம் தொலைச்சுட்டமோன்னு தோணுது. முன்ன இருந்த மாதிரி பல பேருக்கு பொறுமை இல்லை. கணவன் மனைவி சண்டை கோர்ட் வரைபோகுது. டைவர்ஸ் கோர்ட் கேஸ்னு போகுறதுக்கு இது தான் காரணம்னு சொல்றார்  ஷண்முகவேல்.  நாடுலெருந்து வீடு வரை எங்கையும் சண்டை பூசல்.  இந்த உலகம் நம்ம நிம்மதியாகவே இருக்க விடறதில்லை. பேசாம சின்ன குழந்தையாவே இருந்திருக்கலாம்.

ரேஷ்மா: மதி  அது escapism. இது தான் நம்ம கண் முன்னாடி இருக்கற வாழ்க்கை. இப்படி தான் வாழணம் ன்னு ஏத்துகற மனப்பக்குவம் வளத்துகறது தான் வழி. எல்லாத்துலையும் பழுதை யோசிச்சு வாடுறதே உன் பிறவி குணம்தமிழுதயம் சொல்லுற மாதிரி ஆனந்தம் அழுகை   எல்லாமும் ஒரு அனுபவம்னு புரிஞ்சிட்டாலே போதும்.

ஸ்ரீ: 'Take it easy policy'  தான்  உதவும்.      மனுஷங்கள அவங்க அவங்க  நிறைகுறையோட   ஏத்துகிட்டு  போகணும். இதையெல்லாம் யோசிச்சு புலம்பாம வாழ்கையில முன்னேறும் ஆசை உள்ளவங்க ஆக்கபூர்வமா சிந்திச்சு செயல்படுத்திட்டு இருப்பாங்க.  நட்பு வட்டமும் மனுஷங்களோட உறவும் தான் எந்தத் துறையிலும் முன்னேற உதவும்.  வாங்க முன்னேறிப் பார்க்கலாம்னு மோகன்குமார் புத்தகம் ஒண்ணு  வெளியிடப்போறாராம். என் வீட்டுக்காரர் ஒரு காபி ஆர்டர் பண்ண நினைச்சுட்டு இருக்காங்க.

மதி: நானும் பாசிடிவ் ஆ யோசிக்காம இல்ல..உலகத்தை நினைச்சு கவல படுறேன். சமூக அக்கறை ன்னு கூட வெச்சுகலாம். அடடா!  குட்டி பையன் ஸ்கூலேருந்து வர டைம். எனக்கு வடகம் காய வெக்கற வேலை பாதில இருக்கு. நாம நாளைக்கு பேசலாம். பால் வேற வாங்கணம். ஸ்கூட்டில பெட்ரொல் இல்ல...ஹ்ம்ம்... டாடா பை...

ஏஞ்செலா: நான் எல்லாம் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தான் பால் குடிக்கறேன்.

மதி: அப்ப பெட்ரோல்? காய்கறி?  பழம்? கரெண்ட் பில்?

ஸ்ரீ(பெரிய்தாக கும்பிடு போடுகிறாள்):   அம்மா தாயே! கிளம்பு! எவன்டி உன்ன பெத்தான்...பெத்தான்...  அப்டீங்கற இலக்கிய ரசனை சொட்டும் பாட்டு இவளுக்கு தான் எழுதிருக்கணும்.  how does Mr.Mathi manage her? ஓக்கே ஓக்கே நாமளும் போய் நம்ம வீட்டு வடகம் வேலைய பார்ப்போம். நான் children of heaven சிடி பாக்கலாம்னு என் பசங்களுக்கு ப்ராமிஸ் பண்ணிருக்கேன்.

(அனைவரும் கலைந்து செல்கின்றனர்)

*****************

வாழும் பருவம் நீர் வீழ்ச்சியின்  வேகம், உணர்ச்சி, திறன் எல்லாம் நிறைஞ்சது. இந்த ஆற்றலை நல்லா பயன்படுத்தி அற்புதமா அணைகட்டி ( ஆஹா! இது வேற அணை :(   ) சீராக ஓடிவிட்டால் வாழும் பருவம் வெற்றிப் பருவம் தான்.

கூட்டுக்குடும்பம் கிட்டத்தட்ட ஒழிந்தேவிட்ட இந்நாட்களில் பண்டிகை விசேஷ நாட்களிலேனும் உறவினர்கள் நண்பர்களுடன் கூடிக் கொண்டாடுவதே வாழ்வின் இனிமைப் பொழுதுகள்.  தனி மரம் தோப்பாகாது.  அபிப்ராய பேதங்களையும் தாண்டி  மனிதர்களாக நட்பு கொள்வோம். சிரித்து வாழ்வோம்.


இன்றைய பாடல் குடும்பத்தின் இன்னிசை மீட்டுகிறது.


****************

நாளை முதிர்ச்சியை ஆராய்வோம்... அதுவரை டாட்டா..மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது