07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, May 31, 2012

யாதும் சென்னை யாவரும் தமிழர்
இன்றைய ஸ்பெஷல்
மெட்ராஸ் தமிழன்
கண்ணனுக்காக
வேல் கண்ணன்
சித்தர்கள் இராச்சியம்
டங்கு டிங்கு டு
மனதோடு மட்டும்    மெட்ராசில் இருக்கும் கிக் சென்னையில் இல்லை.

நான் காதலித்த மண்ணை சீநாய், சேநாய், ஷெனாய் என்று என் உள்ளூர் நண்பர்கள் பலவாறாகச் சிதைப்பது பழகிவிட்டது என்றாலும், மொழிவெறியால் மரணித்த மெட்ராஸ் என் நெஞ்சில் என்றும் நிலைக்கும். மொழிவெறியர் இன்னும் 'காபி' 'டீ' குடிப்பதேன்?

அதற்காகவே 'மெட்ராஸ் தமிழன்' பிடித்திருக்கிறது. தவிர, பம்பாய் பற்றி மெட்ராஸ் தமிழன் எழுதியிருக்கும் கட்டுரைகள் மிகச் சுவையானவை.

கல்லூரி முடித்த green bean வாலிபன் ஊர் விட்டு முதன்முறையாக பம்பாய் போகிறான். வேலையில் சேர்வதற்காக. 'பம்பாயில் இங்கே தங்கலாம்' என்று ரயில் பயணிகளிடம் தெரிந்துகொண்ட ஒரு இடத்தை அடைகிறான்.
    "நான் சூட்கேஸுடன் மாடிப்படியில் ஏறி அங்கு கல்லாவில் உட்கார்ந்திருப்பவரிடம் சென்று "நான் சென்னையில் இருந்து வருகிறேன். எனக்கு இங்கு வேலை கிடைத்திருக்கிறது. தங்குவதற்கு இடம் வேண்டும்" என்றேன். அவர் என்னை ஏற இறங்க பார்த்து விட்டு "இடமெல்லாம் இல்லை" என்றாரே பார்க்கலாம். எனக்கு பயங்கர அதிர்ச்சி. அடக்கடவுளே! இடம் இல்லையாமே! இப்போது என்ன செய்வது? எங்கே தங்குவது? இவ்வளவு பெரிய ஊரில் யாரையுமே தெரியாதே! நாளைக்கு வேலையில் வேறு சேர வேண்டுமே! என்ன செய்வது?"
இப்படித் தொடங்கும் இவருடைய சலாம் பம்பாய் தொடர் கட்டுரை is a must read.

சில இடுகைகளில் நகைச்சுவை, சில அதிர்ச்சி, சில நெகிழ்ச்சி என்று இவர் எழுதியிருப்பதில் ஏறக்குறையப் பாதிக்கு மேல் சென்னை நினைவுகள். கருத்தும் நடையும் சுவாரசியத்தை அளவோடு பொட்டலம் கட்டித் தருகின்றன. சென்னையைக் காதலிக்கும் கீயில் தொடங்கி ம்ல் முடியும் பெயர் கொண்டவர், இவருடையக் கட்டுரைகளைப் படித்ததும் சென்னையை வெறுக்கத் தொடங்கிவிடுவார் என்பதே என் கலக்கம்.

என்னைக் கவர்ந்த மெட்ராஸ் தமிழன் இடுகைகளில் சில:
"1971ம் ஆண்டு டிசம்பர் மாதத்தை மறக்கவே முடியாது. இந்தியா பாகிஸ்தான் போர் மூண்டிருந்த நேரம். சென்னை நகரம் முழுவதும் இரவு ஏழு மணி முதல் அரசாங்கத்தின் 'blackout ' உத்தரவு இருந்தது. வீட்டில் உள்ள அனைத்து விளக்குகளையும் அணைத்து விடவேண்டும்." - இது அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே என்ற பத்தியத் தலைப்பில் எழுதப்பட்டிருக்கும் நெஞ்சைக் கிள்ளும் கட்டுரையிலிருந்து.

"ஒரு முறை வீட்டுக்குள் பகலிலேயே திருடன் புகுந்து விட்டான். பீரோவிலிருந்து அவன் திருடிக்கொண்டிருந்த போது சமயோசிதமாக எனது தாயார் கதவின் தாழ்ப்பாளை வெளிப்புறத்திலிருந்து பூட்டிவிட்டார்." வீடு - இந்தக் கட்டுரையை நான் பலமுறை படித்திருக்கிறேன்.

பாகிஸ்தான் போரையொட்டிய இன்னொரு கட்டுரை ஐ.என்.எஸ். விக்ராந்த் பற்றியது. இந்த வருடத்துக் கட்டுரைகளில் தேடிப்பிடித்துப் படியுங்களேன்? விக்ராந்த்தை காப்பாற்றிய இன்னொரு சென்னைத் தமிழரின் சாகசங்களைப் புரிந்து கொண்டு சிலிர்க்கலாம்.    "எங்கள் வேலைகளிலேயே நாங்கள் மிகவும் சோர்ந்து போகிறோம். வாரத்தில் ஒரு முறையாவது உறவு வைத்துக் கொள்ளாவிட்டால் மனைவி, அவள் மீது எங்களுக்கு பாசம் இல்லை என்று நினைத்துவிடுகிறாள். அப்படி ஒரு எண்ணம் மனைவிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் படுக்கையை பகிர்ந்து கொள்கிறோம்".

கணவர்கள் இப்படி எண்ணுகிறார்களா? மனதோடு மட்டும் பதிவில் தாம்பத்தியம் பற்றிய இடுகைகளை விரும்பிப் படித்து வருகிறேன். ஆண்-பெண் உறவின் பல பரிமாணங்களை அனாயாசமாகத் தொடுகிறார் பதிவர் கௌசல்யா ராஜ். அந்தரங்கம், கள்ளக்காதல், மனைவி என்று பகுத்து வழங்கியிருக்கும் அத்தனை பதிவுகளையும் படிக்க வேண்டும். படித்தால் 'கணவன்' என்ற பகுப்பை ஏன் தவறவிட்டார் என்ற கேள்வி உங்களுக்கும் எழலாம் :).

கள்ளக்காதல் என்ற பெயரே சரியில்லை என்று தோன்றுகிறது. கழிசடைத்தனத்துக்குக் 'காதல்' என்ற பெயர் சூட்டுவானேன்? உண்மையிலேயே மனங்கனிந்த காதல் என்றால், அதைக் குற்றமாக்குவானேன்? காதல் ஏற்பட்டால் ஏற்பட்டது தான். கள்ளத்தனம் எங்கே வந்தது? ஒரு இடத்தில் இல்லாத அன்பும் நேசமும் இன்னொரு இடத்தில் ஏற்படுகிறது என்ற யதார்த்த நோக்கு அவசியமென்று நினைக்கிறேன். திருட்டு கொள்ளை எனும் குற்றப்போர்வையில் அதை மூடுவானேன்? பிள்ளைகள், பெற்றோர், சமூகம், குடும்ப மானம், கலாசாரம், பண்பாடு எனும் peripheral and often meaningless காரணங்களைக் காட்டி குற்றமாக்காமல், காதல் உண்டானால் முடிவெடுக்கத் தேவையான முதிர்ந்த அறிவு பற்றி மேலும் எழுதுவார் என்று நினைக்கிறேன். everyone needs a second chance, for we live only once.

குழந்தைகள் வளர்ப்பு பற்றித் தொடர்ந்து எழுதி வருகிறார். பாலியல் ஈர்ப்பு பற்றி இவர் எழுதியிருக்கும் பல கட்டுரைகளை நடுநிலைப் பள்ளியில் பாடமாக வைக்கலாம். இன்றைய பெற்றோர்களும் ஆசிரியர்களும் இந்தக் கட்டுரைகளை (பதிவாசிரியர் அனுமதியுடன்) தளமிறக்கி வீட்டிலோ பள்ளியிலோ சேர்ந்து படித்துக் கலந்துரையாடலாம். பெண்ணின் மார்பை வெறிக்கும் ஆணின் விடலைத்தனம் குறைய வாய்ப்புண்டு. காரணமில்லாமல் ஆணைக் கண்டு அஞ்சும் பெண்ணின் மனப்பாங்கு மறையவும் வாய்ப்புண்டு.

மேற்சொன்னக் கருத்துக்களின் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கும் 'மனதோடு மட்டும்' பதிவின் ஏறத்தாழ ஐம்பது கட்டுரைகளை அவசியம் படிக்கவேண்டும். புத்தகமாக வரவேண்டிய கட்டுரைகள்.

இத்தகையக் கருத்துக்களை "இந்தியப் பண்பாடு மற்றும் கலாசாரத்துக்கு" ஏற்றவாறு இடக்கரடக்கலோ இனிப்புப் பூச்சோ ஏதோ ஒரு மறைக்குள் வைத்து எழுத வேண்டியிருக்கிறது. (ஏன்?). எழுதுவது பெண் என்றால் உடனே stereotype செய்துவிடும் ஆபத்தும் இருக்கிறது. இவை எல்லாவற்றையும் மனதில் வைத்து இத்தகைய topicகளில் எழுதுவது can be stressful. time consuming. exhausting. எனினும், தொடர்ந்து எழுதும் கௌசல்யா ராஜ் பாராட்டுக்குரியவர்.

தன் ஓய்வு நேரத்தில்(?) இன்னொரு பொன்னான செயலைச் செய்கிறார் சமூக உணர்வுள்ள கௌசல்யா ராஜ். பசுமை விடியல் என்று ஒரு இயக்கத்தைத் தொடங்கியிருக்கிறார். உங்கள் குடும்ப அல்லது சமூக விழாவில் இந்த முயற்சி பொருந்துமா பாருங்களேன்?    'நந்தவனத்தாண்டி பாடல்கள்' வழியாக இந்தப் பதிவு அறிமுகமானது என்று நினைக்கிறேன். விசித்திரமான பெயரும் ஒரு காரணம். பதிவும் பெயரும் புரிந்ததும் பழக்கமாகிவிட்டது.

பதிவர் சத்தியமூர்த்தியின் கவிதைகளில் சொல்லப்படும் சிக்கல்கள் நாம் தினம் உணர்பவை. கற்பனைச் சிறகுடன் தொடுவானில் பறக்கும் உணர்வுகளைப் பற்றி இவர் அதிகம் எழுதாதது என்னைக் கவர்கிறது. தினசரிச் சிக்கல்கள் என்றாலும் சிந்திக்க வைக்கும்படி எழுதுகிறார். உதாரணமாக:
    அவனைக் கொண்டு போய் நீ
    அருவிக்கு பக்கத்தில் நிறுத்தினாய்.
    பிறகு அருவிக்குள் கொண்டு நிறுத்தினாய்.
    ...
    அவன் அப்போதே அங்கிருந்து ஓடி விடத் துடித்தான்.
    நீ தான் விடவில்லை.
    இன்று துரத்தியடிக்கப்பட்டிருக்கிறான்.

கவிஞர்களுக்கேயுரிய கோபமும் தாபமும் தணலாய் வெளிப்படுகிறது சமூகச் சாம்பல் மூடிய இவரது கவிதைகளில். கர்த்தர் வருகையின் சமீபம் குறித்து இவர் எழுதியிருக்கும் கவிதையைப் படித்துப் பாருங்களேன்? இந்தக் கவிதையின் தரை தொடும் யதார்த்தம் உங்கள் பொறுமை எல்லைக்குள்ளும் புகுந்து புறப்படுகிறதா? பாலசுப்ரமணியம் கவிதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

    "அதிகாலையில் கர்லாகட்டை சுற்றுபவர்களும் இராவில் கல்லுடைப்பவர்களும்
    பச்சைமுட்டைகளை விரும்பிக் குடிக்கிறார்கள்"
எனத்தொடங்கும் இவரின் 2011 வருடத்து 'இரவில் கல்லுடைப்பவர்கள்' என்ற கவிதையைத் தேடிப் படித்துப் பார்த்து, என்ன புரிந்து கொண்டீர்கள் என்று சொல்லுங்களேன்? ஒவ்வொரு புரிதலும், பிரமிப்பூட்டும் விதத்தில் வேறுபடும் என்பது மட்டும் நிச்சயம்.

இது போன்ற சில கவிதைகளைப் படித்தப் பிறகே இவர் பதிவின் தலைப்பு உறைக்கத் தொடங்கியது. வாழ்வியல் சிக்கல்களை விளங்காத இசையாகப் பார்க்கிறாரா சத்தியமூர்த்தி? அல்லது வாழ்வியல் இசையை விளங்காத சிக்கலாகப் பார்க்கிறாரா?

புத்தகப் பித்து போல. நிறைய நூல் விமரிசனங்களும் எழுதியிருக்கிறார். இதைப் படித்த நாளிலிருந்து புத்தகத்தை வாங்கக் காத்துக் கொண்டிருக்கிறேன். 'சிவாஜிகணேசனின் முத்தங்கள்' என்ற தலைப்பில் இவர் வெளியிட்டிருக்கும் கவிதைப் புத்தகத்தை வாங்கிப் படிக்கத் தோன்றுகிறது - தலைப்புக்காகவேனும்.

டங்கு டிங்கு டுவிலிருந்து வெளியேறுவதற்குள் அரசியல் கவிதை கவிதை அரசியலானது பற்றிய இந்தப் பதிவையும் ஒருமுறை படித்துவிடுங்கள்.    "பல்லாயிரக்கணக்கான கால்கள் முளைத்த பூரான்களைப் போல யாதவர்கள் கூட்டம் கூட்டமாகக் காடுகளையும், பாலைவனங்களையும் நோக்கிச் சென்றனர். முற்றிலும் புதிய நாட்டில், புதியதோர் உலகை நாடிச் சென்றார்கள். சுதந்திரமாகவும், இன்பமாகவும் வாழவேண்டி தொலைதூரத்தில் எங்கோ இருக்கும் செளராஷ்டிரக் கடற்கரையை நோக்கி நடந்தனர். சிலர் மாட்டுவண்டிகளிலும், சிலர் குதிரை வண்டிகளிலும், சிலர் ரதங்களிலும், சிலர் பல்லக்குகளிலும், பெரும்பான்மையான சாமானிய மக்கள் நடந்தும் பயணம் செய்தனர். பலராமனும், உத்தவனும் தலைமை வகித்து நடத்திச் செல்ல, உக்ரசேனர், வசுதேவர், அக்ரூரர் மற்ற யாதவத் தலைவர்கள் அனைவரும் ரதங்களில் தங்கள் குடும்பங்களோடு பயணம் செய்ய, இளைஞர்களில் பலரும் குதிரைச் சவாரி செய்து வந்தனர். ஒவ்வொரு குடும்பத்திற்கும் சொந்தமான கால்நடைகள் ஒட்டகங்கள், மாடுகள், யானைகள், குதிரைகளும் அவைகளால் தூக்க முடிந்த அளவுக்குப் பொதியைத் தூக்கிச் சுமந்து பயணம் செய்தன. வேடுவர்களும், நாகர்களும் மற்றவர்களும் கூடவே பயணம் செய்தனர். அவர்களைப் பின் பக்கமிருந்து சாத்யகி தலைமையில் மற்ற யாதவ இளைஞர்கள் பாதுகாவல் செய்து வந்தனர்."

பழைய DeMille படங்களின் panorama கண்முன் விரியவில்லை?

பன்திறப் பதிவர் கீதா சாம்பசிவம் எழுதி வரும் பல பதிவுகளில் என்னை மிகவும் கவர்ந்தது 'கண்ணனுக்காக'. மகாபாரதப் புராணத்திலிருந்து கண்ணனை ஒட்டியப் பல குணச்சித்திரங்கள், கதைகளை வைத்துத் தொடராக எழுதி வருகிறார். கண்ணன் தன் இனத்தோடு மதுராவை விட்டு துவாரகைக்குப் பெயரும் படலத்திலிருந்து ஒரு சிறு பகுதியை மேலே படித்தீர்கள்.

ருக்மிணியின் திருமணம், யாதவர்களின் புலம்பெயர்தல் இரண்டிலும் கண்ணன் என்னும் தலைவனின் strategy, leadership, carpe diem மற்றும் citizenship பண்புகளை அற்புதமாக எடுத்துக் காட்டியிருக்கிறார். கடவுள் என்ற நினைப்பே வராமல் படிக்க முடிகிறது. ஒரு இனத்தலைவன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று புரிகிறது. மதுராவிலிருந்து கடைசிப் பூச்சியும் கிளம்பிய பின்னரே தான் அங்கிருந்து வெளியேறுவதாகச் சொல்வதுடன், தன் இனத்தை இன்னார் இன்ன விதத்தில் தலைமை தாங்கிப் பாதுகாப்புடன் வழி நடத்தவேண்டும் என்று கண்ணன் விவரிப்பதாக இவர் எழுதியிருப்பதைப் படிக்கையில் புல்லரிக்கும்.

கீதா சாம்பசிவத்தின் magnum opus, கண்ணனுக்காக. புத்தகமாக வெளிவர வேண்டும்.

ஸ்வேதகேதுவின் சரிவு, ருக்மிணியின் திருமணம் பற்றிய இடுகைகள் விறுவிறுப்பானவை. ருக்மிணியின் திருமணப் படலம் - தனியாகத் திரைப்படம் எடுக்கும் அளவுக்கானத் திரைக்கதை என்பேன்.

ரைட். ஸ்வேதகேது யாருன்னு இவங்க பதிவைப் படிச்சுத்தான் தெரிஞ்சுகிட்டேன். அது சரி, ஷாயிபா யாருன்னு உங்களுக்குத் தெரியுமா? ..யாரு? ..தப்பு.. இவங்களுக்கு ஒரு பா. தாடியும் கிடையாது. ஓகே, ஷாயிபா யாருன்னு தெரியணும்னா இதைப் படியுங்க :)

now, ருக்மணியா ருக்மிணியா?    மேல்தட்டு இலக்கியம், பெரும்பாலும் கவிதைகள், எழுதும் வேல்கண்ணனின் பதிவுக்குள் எப்படி நுழைந்தேன் என்று தெரியவில்லை. வெளியேற முடியவில்லை என்பது மட்டும் தெரியும்.

இலக்கிய வாசனையை விரும்பி நுகர்வோருக்கு இவர் இடுகைகள், வாடா இலக்கியப்பூ.

சமீபத்தில் வேல்கண்ணனின் இந்தக் கவிதை வரிகளை அடிக்கடி அசை போட்டிருக்கிறேன்:
    "பிறிதொரு ரகசிய அழைப்பு வரும் வரை
    உன் ஞாபக பிசுபிசுப்பில் கடந்து போகும்
    எனக்கான இரவுகள்."
இன்னொரு முறை படியுங்கள். கடந்து போவது புரியும். கவிதையை இங்கே படிக்கலாம்.

இன்னொரு கவிதை என்னை மிகவும் பாதித்தது என்பேன். இதில் கவிஞர் படம் பிடித்திருக்கும் காவேரி அக்காவைப் போல் நிறைய பேரை நானறிவேன். அவர்கள் காவேரி அக்காக்கள் என்பது அந்தக் கணத்தில் புரியாமல் போனதே என்று அடிக்கடி வியக்கிறேன். காவேரி அக்கா பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

    "மச்சத்தின் இருத்தலில் சொல்லிவிட முடியும் பெண்ணின் குணங்களை
    என்றவனை வாய்பிளந்து பார்த்தாள்
    யோனி தைக்கப்பட்ட ஆப்பிரிக்க பெண்ணொருத்தி".
இந்தக் கவிதையின் தாக்கம் வருடக்கணக்காய் எனக்குள். இவரின் மச்ச பலன் படித்து நீங்களும் அவதிப்பட விரும்புகிறேன்.சில வருடங்களுக்கு முன் போகன் எழுதிய சித்தர்கள் (அகத்தியர்?) பற்றிய ஒரு இடுகையின் பின்னூட்டதிலிருந்து அறிமுகமானவர் பதிவர் தோழி என்று நினைக்கிறேன். மாணவர் என்று தன்னை அறிமுகம் செய்து கொள்ளும் 'தோழி', சகட்டு மேனிக்குப் பதிவுகள் எழுதித் தள்ளுகிறார். யோசிக்க வைக்கிறது. சூட்சுமச் சொல்லா? நாமெல்லாருமே மாணவர்கள் தானா? இவரும் சொற்சித்தர் போலிருக்கிறது என்ற நினைப்புடன் இவரது இடுகைகளைப் படிக்கத் தொடங்கினால், மீண்டு வர வெகு நேரமாகும். சொல்லிவிடுகிறேன்.

காயகல்பம், ரசவாதம், பில்லி சூனியம், வசியம், சாவுத் தவிர்ப்பு (சித்தர்கள் சாவதில்லை என்று சித்தர்களை நம்புவோர் நம்புகிறார்கள்), மாயம், ரசமணி, குண்டலினி என்று பல exotic topicகளில் இலக்கியத் தரத்தோடு நிறைய எழுதுகிறார். என்னுடைய விபரீதச் சிறுகதைகளுக்கான ஆராய்ச்சித் தளங்களில் இவரது பதிவும் ஒன்று. படிக்கத் தொடங்கினால் பிரமிக்கத் தொடங்குவீர்கள். நிச்சயம்.

esoteric சமாசாரம் என்றாலும் இவர் இடுகைகளில் குறிப்பிடும் தமிழ்ப்பாடல்கள் பலவும் மிகவும் ரசிக்கத்தக்கவை. இவருடைய சித்தர் பாடல்கள் பற்றிய அறிவு மிக ஆழமானது என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறேன். பெண் சித்தர்கள், ஈழத்து சித்தர்கள்... எவரையும் விட்டுவைக்கவில்லை. கருவிலிருப்பது ஆணா பெண்ணா என்று அறியும் முறையை அகத்தியர் சொல்லியிருப்பதாகத் தெரிவிக்கிறார். படித்துப் பாருங்கள்.

சித்தர்கள் கைபடாத சிக்கலே இல்லை போலிருக்கிறது. மாதவிடாயிலிருந்து மரணத்தேதி வரை அத்தனையும் தொட்டிருக்கிறார்கள் போல. இவருடைய பதிவுகளைத் தேடித் தேடிப் படித்துக் கொண்டிருக்கலாம்.

ஜீவ சமாதி என்ற மிக நுட்பமான விஷயம் பற்றி இவர் எழுதியிருப்பதை இந்த இடுகையைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம். இதை ஒரு தொடராக விறுவிறுப்பும் சில்லிப்பும் உண்டாகும்படி அருமையாக எழுதியிருக்கிறார்.

ஜீவ சமாதி என்ற concept எனக்குப் புரிகிறது. இதைப் பற்றி நசிகேத வெண்பாவில் எழுதியிருக்கிறேன். சற்றே futuristic போல் தோன்றும் இந்த ஜீவசமாதி தந்திரம், அடிப்படையில் மிகத் தொன்மையானது என்று நம்புகிறேன். தன் உயிரைத் தானே அடக்கும் திறன். தன் உயிரை.. தன் ஆன்மாவை அறிந்தால், தானே அடக்க முடியும். சித்தர்கள் தங்கள் ஆன்மாவை அறிந்தவர்களாவர் என்று பரவலாக நம்பப்படுகிறது. அல்லது தங்கள் ஆன்மாவை அறிந்தவர்கள் சித்தர்களாவர் என்றுப் பரவலாக நம்பப்படுகிறது.

தோழி எழுதியிருக்கும் நூற்றியெட்டு சித்தர்களின் ஜீவ சமாதிகளின் தொகுப்பை படியுங்கள். ஜீவ சமாதி இருக்கும் ஊரருகே வசித்தால் ஒருமுறை ஜீவ சமாதியில் நுழைந்து பார்த்துவிடுங்கள். இரவு பனிரெண்டு மணிக்கு மேல் தனியாகப் போவது உத்தமம்.இன்றைய shout outன் நாயகர்: 'ஆரண்ய நிவாஸ்' ஆர். ராமமூர்த்தி. உங்க அப்பன் வீட்டு ரோடா? போல் நறுக் நறுக் என்று நாலு வருடங்களாக நிறைய எழுதிவருகிறார்.➤➤5. கதம்ப முறுக்கு


மேலும் வாசிக்க...

Wednesday, May 30, 2012

தாயே வேலன்டைனம்மா
இன்றைய ஸ்பெஷல்
எம்.ஏ.சுசீலா
யவ்வனம்
தேவியர் இல்லம்
கைகள் அள்ளிய நீர்
அகரம் அமுதா
மனவிழி    "புதுத்தாலி உடுத்தியிருக்கும் சத்யா
    சவூதியிலிருக்கும் கணவனின் நினைப்பில்
    தலைக்கு ஊற்றும் நடுநிசிகளால்
    நடுக்கமுறுகின்றன இரவுகள்"

படித்ததும் கொஞ்ச நேரம் அப்படியே பின்சாய்ந்து வரிகளை மனதுள் உருட்டத் தோன்றவில்லை? 'சத்யாகாலம்' என்ற இக்கவிதையைப் பதிவர் கதிர்பாரதியின் யவ்வனம் வலைப்பூவில் படிக்கலாம். கவிஞர் சொல்ல வந்திருப்பது எளிதாகப் புரிகிறது. என்றாலும் உங்களை அதிகம் பாதித்தது புதுத்தாலியா, தலைக்கு ஊற்றுவதா, நடுக்கமுறும் இரவா? பாதிப்பில் இருக்கிறது புரிதல். அல்லது புரிதலில் இருக்கிறது பாதிப்பு.

தவளைகள் நீரில் அளைந்து எழுப்பும் ஒலியைப் புணர்ச்சியின் அதிரலுக்கு ஒப்பிடும் இவரது கற்பனையை ரசிக்காமல் இருக்க முடியவில்லை. படித்ததும் வாய்விட்டுச் சிரித்தேன். நகைச்சுவையை மனதில் நிறுத்தி எழுதினாரா தெரியாது. குளம் கவிதையைப் படித்துச் சொல்லுங்கள்.

கௌரவத்தம்மாள் யார் தெரியுமா? பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றிய இந்தக் கட்டுரையைப் படித்து ரசித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    "முக்காலத்திலும் கால் பரப்பியிருக்கும்
    முனிவனிடம் வந்தது புழுவொன்று"
ஆயிற்றா? இடுகையில் மிச்சக் க(வி)தையைப் படியுங்கள். லேசான திடுக்.

யவ்வனம் வலைப்பூ என்னைக் கவர்வதற்கு இன்னொரு மிகச்சிறிய almost subliminal காரணம் ஒன்று உண்டு. எனக்கு மிகவும் பிடித்த வடமொழிச் சொற்களுள் யௌவனம் ஒன்று. இளமை என்று தமிழில் பொருள் கொண்டாலும், வடமொழி யௌவனத்தில் there is more to it than youth. இந்தப் பெயர் என் யௌவன நினைவுகளைக் கிளறும். இதே பெயரில் என் விடலை நண்பர்களுடன் ஒரு கையெழுத்துப் பிரதி நடத்தினேன். ஆகா.. அந்த நாள் ஞாபகம்.    கரம் அமுதனின் "பா"ப்பதிவுகள் பிரபலம். சமீபமாக இவர் எழுதிவரும் "படப்பா"க்களின் குறும்பு, பெரும்பாலும் கரும்பு. அவசியம் படியுங்கள்.

இவர் எழுதிய 'அமுதன் குறள்' புத்தகம் பற்றி முன்பு எழுதியிருக்கிறேன். தொடக்கப் பள்ளிகளில் தமிழ்ப்பாடமாகச் சொல்லிக் கொடுக்க வேண்டிய குறட்பாக்கள். தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தில் யாருக்கு எழுதி எப்படித் தெரியவைப்பது?

தமிழ் மரபுக்கவிதையின் வேர்களை நாம் மறந்துவிடாமலிருக்க அமுதன் புரியும் பணி போற்றத்தக்கது. இவருடையப் 'வெண்பா எழுதலாம் வாங்க' பதிவைப் படித்து வெண்பா இலக்கணம் மற்றும் வடிவம் பற்றி நிறையக் கற்றுக் கொண்டேன். இவர் எனக்கு ஆசான்.

மரபுக்கவிதை மட்டுமே இவருக்கு வரும் என்று நினைத்தால், இதைப் படியுங்கள்:
    "மரபறியாத வானம்
    அம்பெறிந்த பிறகு
    வில்லை வளைக்கிறது"

வானவில் பற்றிய எத்தனை நயமான கவிதை!

அமுதனின் ஏக்கவெடி! கவிதை, குறுக வைக்கும் சுருக்.    மிழ்மணம் நுகர்ந்து கொண்டிருந்த போது ஒரு நாள், 'தேவியர் இல்லம் திருப்பூர்' என்ற வித்தியாசமான பெயர் என்னைக் கவர்ந்தது. அன்றிலிருந்து படித்துவருகிறேன். நிறைய அரசியல் சமூகக் கட்டுரைகள். இலங்கைத் தமிழர் இன்னல்களுக்குத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் காரணம் என்று சிலநேரம் சொல்லும் பொழுது இவரது முகவரியைப் பெற்றுச் சந்திக்கத் தோன்றியது :).

ராஜீவ் காந்திப் படுகொலைத் தொடரில் நிறைய விஷயங்களைத் தொட்டிருக்கிறார். தனிப் புத்தகமாக வெளியிட வேண்டிய படைப்பு.

இவர் எழுதியத் தொடர் நிறைய நினைவுகளைக் கிளறினாலும், அறிந்திராத விவரங்களைத் தெரியப்படுத்தியது. விறுவிறுப்பான இடுகைகள். பிரபாகரனை அசலில் உணர்த்திய சில பதிவர்களில் ஒருவர். அவரின் முனைப்புகளின் பின்புலத்தை விவரமாகப் பல பதிவுகளில் எழுதியிருக்கிறார். (ஹ்ம்ம்ம்.. வீர சூர அடைமொழி எதுவும் தராமல் பிரபாகரன் என்று எழுதியதற்காக ஒரு முறை எனக்குப் பல மிரட்டல் கொச்சைக் கடிதங்கள் வந்தன. நுனிப்புல் மேயும் #%ஃஸ்D^*! என்று தினம் ஒருவர் இமெயில் அனுப்பினார். திட்டுறதுனா என்னைத் திட்டுங்க, திருப்பூரை விடுங்க.)

வேன்கூவரிலும் ஹைடல்பர்கிலும் சிலகாலம் நட்புடன் பழகிய இலங்கைத் தமிழர் ஒருவர் (என் பெயரைக் கண்டு அவருக்கு ஆச்சரியம், அவர் பெயரைக் கண்டு எனக்கு) 'அந்நியத் தமிழனான' என்னால் தமிழீழ விடுதலை இயக்கத்தைப் புரிந்து கொள்ளவே முடியாது என்றார். ஈழத்தமிழர்களின் நிலையைக் கண்டு வழியில் பத்து நொடிகள் நின்று அனுதாபம் தெரிவிக்கும் தமிழ்ச்சட்டை அணிந்தக் கோடிக்கணக்கான பாதசாரிகளில் ஒருவன் நான் என்றார். உண்மையென்றே தோன்றியது. என்னை மட்டுமே அப்படிச் சொல்கிறார் என்று மேலும் அசைபோட்ட போது புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் பலரையும் அதே வகையில் சேர்த்தது திடுக்கிட வைத்தது. "என்ன செய்வது? ரணங்களின் வடுக்கள் ரணத்தைப் போல் வலிப்பதில்லை" என்று அவர் சொன்னது சிந்திக்க வைத்தது. தேவியர் இல்லம் மற்றும் சிலரின் 'இலங்கைத் தமிழர் நிலை' பற்றியப் பதிவுகளைப் படிக்கும் பொழுது, எனக்கு நண்பரின் நினைவு வரும். தன்னலமற்றத் தலைவன் ஒருவன் தமிழினத்துக்கு கிடைக்கவில்லையே என்று வருந்தாமலிருக்க முடியவில்லை.

இலங்கைத் தமிழரோடு நில்லாமல் உள்ளூர் அரசியல் பற்றியும் காட்டமாக எழுதுகிறார். ஊழல், பதுக்கல் விவரங்களை அம்பலப்படுத்தி எழுதுகிறார். துணிச்சல்காரர். அனேகமாக எல்லாமே நீண்டக் கட்டுரைகள். ஆய்வும் விவர உணர்வும் புலப்படுவதால் ஒரே அமரலில் படிக்க முடிகிறது. உதாரணத்துக்கு இவர் எழுதிய அய்யாவுக்கு அடிவாங்கும் தமிழன் எழுதுவது இடுகை.

"கடந்து போன அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுத் தன்னை மாற்றிக் கொள்ளாதவர்கள், சபிக்கப்பட்ட வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து வாழ்கிறார்கள்" என்ற இவரது பதிவறிமுக வரிகள் என்னைக் கவர்ந்தவை.    த்ரியனை வலைப் பின்னூட்டங்களில் அடிக்கடி சந்தித்திருந்தாலும், சமீபத்தில் அதீதம் மின்னிதழில் இவர் எழுதிய ஆலிங்கனா கதை வழியாக இவர் தளத்தைத் தொடர்ந்து படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டேன். இத்தனை நாள் தவற விட்டிருக்கிறேனே என்ற ஆதங்கம் ஏற்பட்டது. கதை, கட்டுரை, (நிறைய) கவிதை என்று எழுதிக் கலக்குகிறார்.

சமீபத்தில் இவர் எழுதிய
    "கண் தானம் சிறந்தது தான் என்றாலும்
    என் கண்களைத் தானம் வழங்கும் அனுமதியை
    நீங்கள் அவளிடம் தான் கேட்க வேண்டும்"
என்ற வரிகளின் குறும்பையும் காதலையும் ரசிக்க முடிகிறது, இல்லையா?

இவரின் 2010 வருடப் படைப்புகளை ஒன்று விடாமல் படியுங்கள். இந்தக் கவிதைக்கு வரும் பொழுது இவருக்கு, மனதார வாயார, ஒரு 'ஜே!' போடுங்கள்.
    "காதல் தீ சுடும் என்றேன்.
    சுட்டாலும்
    'உன்னை தீண்டும் இன்பம்
    தோன்றுதடா' என்றாய்.
    இதோ
    பற்றி எரிகிறது பார் என்கிறேன்
    'பிடில் வாசி போடா' என்கிறாய்".
beautiful!

வித்தியாசமான கற்பனை என்று நான் கருதும் இன்னொரு கவிதை:காதல் குழந்தை.    விதைக்காக ஒன்று, கலந்து எழுத ஒன்று என இரண்டு வலைப்பூக்களைத் தொடர்ந்து எழுதிவருகிறார் சுந்தர்ஜி.

'கைகள் அள்ளிய நீர்' வலைப்பூவைத் தொடர்ந்து படித்து வருகிறேன். இவருடைய எழுத்து இத்தகையது என்று வேலிகட்ட முடியவில்லை. இலக்கிய ஆழம். மழலையின் வெகுளி. இயலாமையின் சோகம். எழுச்சியின் தீவிரம். அறிவின் வீச்சு. அமைதியின் இதம். எது எப்போது தாக்கும் என்று சொல்லமுடியாத எழுத்தரக்கர்.

நான் சொல்வதைச் சரிபார்க்க, இவரது சமீப முயற்சியான தஷிணாயனம் படித்துப் பாருங்கள். தொடர் எதைப் பற்றியது என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை; ஒரு போதையுடன் ரசிக்க முடிகிறது என்பதை மட்டுமே காரணமாகக் கொண்டு படிக்கிறேன். இடையே ஓய்வெடுத்தத் தொடரை மீட்டது நன்று.

பலவகை இசை, புத்தகம், சங்க இலக்கியம், ஆன்மீகம் என்று அவ்வப்போது அறிமுகம் செய்கிறார். வலைப்பூவின் sidebar கவிதைகள் பல அருமை.

இவர் வலைப்பூவில் நிரந்தரமாக இருக்கும் தாடிக்காரர் யாரென்று தெரியாமல்.. சுந்தர்ஜியிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். பிறகு இவருடைய பழைய இடுகைகளைத் தேடிப் படித்துத் தாடிக்காரருக்கும் இவருக்குமுண்டான பந்தம் பற்றி அறிந்து கொண்டேன்.

"வறண்டிருந்த ஏரிக்குள் இறங்குகிறேன். முதல் நாள் மிக நல்ல மழை பெய்திருக்கிறது. ஆங்காங்கே எருமைகள் தேங்கிக்கிடக்கும் நீரில் முதுகு தெரிய மூழ்கியபடி ஏதோ ரசானுபவத்தில் மயங்கிக்கிடக்கின்றன. அவற்றைச் சுற்றி மேலும் சில எருமைகள் புற்களை மேய்ந்து கொண்டிருக்கின்றன. ஒரு பாலே நடனக்காரியின் லாவகத்தோடு தயங்கும் கால்களோடு கண்ணைப் பறிக்கும் வெண் நாரைகள் அந்த எருமைகள் பின்னாலேயே நடக்கின்றன. எருமையின் குளம்பு ஈரமான மண்ணைக் கிளறியபடிச் செல்ல பின்னால் காத்திருக்கும் நாரைகள் அம்மண்ணிலிருந்து புழுக்களை லாவகமாக கொத்தித் தின்ன அப்படிப் போகிறதா கதை? என்று நாரைகளையும் கொக்குகளையும் ஆச்சரியத்துடன் கடந்தேன்."
யாத்ரா இடுகைகள் சுவையானவை. ஒரு wandererன் பார்வையில் profound philosophyஐக் கொண்டு வரும் எழுத்து. visualஆக நிறையக் கொண்டுவர முயல்வது unique.    தை, கவிதை, புத்தகம், பயணம் என்று ஒன்று விடாமல் தமிழிலக்கியச் சுவையை அளவாக ஒவ்வொரு இடுகையிலும் வழங்கும் எம்.ஏ.சுசீலாவின் வலைப்பூ, ஒரு இணைய வரம்.

வரும் இந்தியப் பயணத்தில் இவரின் 'அசடன்' மொழிபெயர்ப்பு நாவலை வாங்கிப் படிக்க வேண்டும். must be monumental. ஒரிஜினல் புத்தகச் சுருக்கத்தை (அதுவே நீளம்) கல்லூரியில் படித்திருக்கிறேன். வாங்கிப் படிக்க எண்ணியிருக்கும் இவரின் இன்னொரு புத்தகம் 'தேவந்தி'. தேவந்தி யாரென்று தெரியாமல் இருந்தேன். :)

"பெற்றுப் பல ஆண்டுக் காலமாகியும் மகனைப் பிரிய நேருகையில் பதட்டமும் பரிதவிப்பும் மேலிடப் பால்சுரக்கும் தாய்" போன்ற கம்பன் கற்பனையைப் படிக்கவும் புரிந்து கொள்ளவும் இவர் பதிவு ஒரு திறந்தப் புத்தகம். சிறந்தப் புத்தகம்.

"சஞ்சலமான சூழ்நிலையில் நாம் எதிர்கொண்ட சில காட்சிகளும், அனுபவங்களும் பின்னாளில் அசை போட்டுப் பார்க்கும்போது ஞாபகங்களின் சுகமான வருடல்களாகிவிடுவதைப் பார்த்தாயா" என்று சீதை ஊர்மிளையிடம் சொல்வதாக இவர் எழுதிய ஒரு சிறுகதையில் வருகிறது. இவருடைய தமிழின் சரளம் வரிக்கு மெருகேற்றுவதைப் பலமுறை கவனித்திருக்கிறேன். complex எண்ணங்களை எளிமையாக, அதே நேரம் கனமாக, எழுதும் திறமை..ஆளுமை... எதனால் இப்படி எழுத முடிகிறது என்று வியந்திருக்கிறேன். இவர் தமிழாசிரியர் என்பதாலா அல்லது தமிழ்க்காதலர் என்பதாலா?

இவர் மொழிபெயர்த்தச் சிறுகதைகளில் சமீபத்தில் என்னை மிகவும் பாதித்தது, குந்தியும் நிஷாதப் பெண்ணும்.

அவசியமெனில் சாடும் சமூகப்பார்வையும் இவருக்கு உண்டு. பிண அரசியலுக்கு நடுவே ஒரு மே தினம் என்ற இந்த இடுகையைப் பலமுறை படித்திருக்கிறேன். இவர் குறிப்பிடாவிடில் இது போன்ற சிவப்புக் கவிதைகளைப் படிக்க எனக்கு வாய்ப்பில்லை.    ன்றைய shout outன் நாயகர் அரசூரான். வெடிச்சிரிப்பு நகைச்சுவையோடு நச்சென்று பதிவிட்ட நண்பர் அரசூரானுக்கு ஜே!➤➤4. யாதும் சென்னை யாவரும் தமிழர்


மேலும் வாசிக்க...

Tuesday, May 29, 2012

சம்பல் வம்பு
இன்றைய ஸ்பெஷல்
அதீத கனவுகள்
ராகவன்
கண்ணன் பாட்டு
Consent to be......nothing!
கனவுகளின் காதலன்
ஈழத்து முற்றம்
hemikrish    தீத கனவுகள் (நடுவில் க் வருமா?) வலைப்பூவில் கதை, கவிதை, கட்டுரை என்று நிறைய எழுதியிருக்கிறார் ராதாகிருஷ்ணன். இவர் எழுதியிருக்கும் கட்டுரைகளில் கணிசமான அறிவியல் காணப்படுவது என்னை மிகவும் கவர்கிறது.

தமிழில் எழுத வருமென்றாலும் எண்ணத்தை சிலநேரம் மொழிபெயர்க்கத் திணறி, நான் சட்டென்று வசதியான ஆங்கிலத்துக்குத் தாவிவிடுவேன். இவர் நல்ல தமிழிலேயே சரளமாக எழுதுகிறார். உதாரண வரி: "ஈர்ப்பு விசையும், எதிர் விசையும் அதனால் உண்டாகும் சம விசையும் எண்ண விசைக்கு உட்பட்டதே".

பயமாக இருந்தால் சமாதானமடையுங்கள். மொத்த விசையும் சேர்த்துப் படிக்கும் பொழுது நன்றாகவே புரியும். எல்லா விசையும் இறைவனைத் தேடியறியும் முயற்சியில் சுபமாக முடிகிறது. பரம்பொருளே மெய்ஞானம் என்று நிச்சயமாக நம்புகிறார். சுவாரசியமாகவும் எழுதுகிறார். ராதாகிருஷ்ணன் என்ற பெயர் ரேட்ஸ் என்று செல்லமாக அழைக்கப்படுவதற்கும் மேற்சொன்ன சவாலங்கிடிக்கும் சம்பந்தம் உண்டு. படித்துப் பாருங்களேன்.

பின்னூட்டங்களைத் தனியாக சேமிக்க வேண்டும் என்று எனக்கும் தோன்றும். "சில நேரங்களில் அதிக சிரத்தை எடுத்து பின்னூட்டங்கள் நாம் எழுதுவோம். மட்டுறுத்தல் வைத்திருக்கும் வலைத்தளங்களில் அது பரிசீலனைக்கு உட்படாமல் போகலாம். நாம் பின்னூட்டம் எழுதிய இடுகை மறைந்து போகலாம். அவ்வாறான நேரங்களில் பின்னூட்டத்தை சேமித்து வைத்திருந்தால் நன்றாக இருக்குமே என தோன்றும்" என்று தொடங்கி ராதாகிருஷ்ணன் எழுதியிருக்கும் இந்தப் பதிவைப் படித்தபோது அசந்து போனேன். அட, நம்ம பிரச்சினை இவருக்கும் இருக்கும் போல என்றுத் தொடர்ந்து படித்தேன். தன்னுடையப் பின்னூட்டங்களைத் தொகுத்துப் பதிவாக எழுதத் தொடங்கியவர், ஏனோ தொடரவில்லை. தொடர விரும்புகிறேன்.

'கம்யூனிசமும் கருவாடும்' என்ற தலைப்பில் இவரது தொடர் கட்டுரையை மிகவும் ரசித்துப் படித்திருக்கிறேன். 'ஆண்டாளுக்குக் கல்யாணம்' கோதைநாச்சியாரைப் பற்றிய சுவாரசியமான கதை. எதிர்பார்க்க மாட்டீர்கள். இரண்டையும் தேடிப் பிடித்துப் படியுங்களேன்?

'நுனிப்புல்' என்ற இவரது தொடர்கதையை இந்த வருடம் படித்து முடிக்க வேண்டும்.    "புன்னை இலைகளால் ஒரு படுக்கை தயார் செய்யும் கண்ணன்...
    அவன் அருகில் வரும் வேளையில், அவனை ஒதுக்கி, கீழே தள்ளிவிடும் ராதை!
    கண்ணன் உடம்பிலும் அடி, உள்ளத்திலும் அடியா??
    ஹைய்யோ! திடீரென்று, என்னவாயிற்று இந்த ராதைக்கு?"
படித்ததும் நானுந்தான் சொக்கிப் போனேன்.

எங்கேயோ எதையோ தேடிப் போகையில், பரவசப்படுத்தும் எழுத்துக்களில் சில சமயம் விழுந்திருக்கிறேன். 'கண்ணன் பாட்டு' வலைப்பூ அந்த வகை. கண்ணபிரான், ரவிசங்கர் (KRS), லலிதா மிட்டல், கவிநயா, குமரன், ஷைலஜா என்று நிறைய பேர் எழுதுகிறார்கள். எல்லோரும் சூரர்கள்.

கண்ணன் பாட்டு வலைப்பூவில் எல்லாமே.. ரைட்.. கண்ணன் பற்றிய பாடல்கள். அஷ்டபதியிலிருந்து சினிமாப் பாட்டு வரை பதிவெல்லாம் கண்ணன் மணம். சோர்ந்த நேரங்களில் தொலைந்து போன வலைப்பூக்களில் ஒன்று. படிக்கவும் இன்பம், கேட்கவும் இன்பம். நிறைய இசைப்பதிவுகள். கவனம்: ஒருமுறை இறங்கினால் அரைமணியாகும் மீள. ஓ! மறந்தே போனது. இந்தப் பதிவில் இருக்கும் படங்கள் - அற்புதம்.

எம்எல்வியின் குரலைக் கேட்க அவ்வப்போது இந்தப் பதிவுக்குப் போவேன். கண்ணன் மன நிலையைத் தங்கமே தங்கம் பாடலை எம்எல்வி பாடியிருப்பதைப் பதிவின் தயவில் தெரிந்து கொண்டேன். கேட்டுப் பாருங்களேன். lilting.

பாடலை (பத்து முறையாவது) கேட்பதுடன் கூடவே உரையையும் படித்து விடுங்கள். 'தங்கமே தங்கம்' என்று முண்டாசு யாரைக் குறிப்பிடுகிறார் என்பது ஒருபுறம் இருக்கட்டும். கண்ணன் மனநிலை அறிவது பற்றி கண்ணபிரான், KRS எழுதியிருப்பதைப் படிக்கும் ஒவ்வொரு முறையும் எங்கள் கிராம வீட்டில், திறந்தக் கதவுகளின் வழியே இளங்கோடையின் வெளிப்புறத்து மணங்கள் வீச, நடுஹால் ஊஞ்சலில் அமர்ந்து ஆடுவது போலிருக்கும். உங்களுக்கு உண்டாகும் அனுபவம் எப்படியிருக்கும்?

இந்த இடுகையில் இணைக்கப்பட்டிருக்கும் வீட்டு மாடி நடனம் விடியோவை ஒரு முறை பார்த்துவிடுங்கள். அதற்குப் பிறகு எத்தனை முறை பார்க்கிறீர்கள் என்பதைத் தனியாகக் கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். ஒலியை அடக்கினால் அதிகமாக ரசிக்க முடிகிறது. (நீங்களும் என்னைப் போல் எம்.எஸ் குரலை ரசிக்கமுடியாத அபூர்வ சீக்காமணியாக இருந்தால்)

புன்னை இலைகளால்... ஜெயதேவர் அஷ்டபதி காதலா காமமா? படித்துப் பார்த்துச் சொல்லுங்கள்.    காரசாரமான அரசியல் விவாதம் எனக்குப் பிடிக்கும். அரசியலை அரசியலாக எழுதுவது கலை. இணையத்தில் நிறைய அரசியல் பதிவுகள் இருந்தாலும், பெரும்பாலானவற்றில் தலையங்கப் பார்வை தென்படுவதில்லை. இலங்கைத் தமிழர், இந்திய அரசியல், அன்னா ஹசாரே, கூடங்குளம், கனிமொழி... அரசியலை மெல்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருந்தாலும், புலம்பல் அல்லது காழ்ப்புணர்ச்சியில் எழுதுவது போலவே தோன்றுகிறது. கிருஷ்ணமூர்த்தி சாடுகிறார். சாடினாலும் தலையங்கப் பார்வை படிக்க வைக்கிறது. நான் விரும்பிப் படிக்கும் அரசியல் பதிவு 'Consent to be......nothing!'.

இவருடைய 'சன்டேன்னா மூணு' இடுகைகள் சுவாரசியமானவை. தேடிப்பிடித்துப் படியுங்களேன்? சமீபமாக சன்டே இடுகைகளைக் காணோம். ஏனென்று தெரியவில்லை.

இது இவரது வலைப்பூவில் நான் படித்த முதல் இடுகை என்று நினைக்கிறேன். அல்லது அடிக்கடி படித்த இடுகையாக இருக்கலாம். பொழுதைப் போக்க.....பொழுதுபோக்கு நாத்திகம்....!.

பொழுதுபோக்கு நாத்திகம் - எத்தனை insightful expression!. இந்தியாவின் பிரபல நாத்திகப் போலிகள் பொழுதுபோக்கு நாத்திகத்தைப் பேணியதால் நாத்திகம் வளரவேயில்லை என்று நினைக்கிறேன்.    சிறுவயதில் 'காமிக்ஸ்' படிப்பது பெரும்பாலும் எல்லோருக்கும் பிடிக்கும். வளர்ந்த பின்னும் 'காமிக்ஸ்' பித்து.. ஆண்களுக்கு மட்டுமே அல்லது ஆண்களுக்கு அதிகம் என்று நினைக்கிறேன். 'இரும்புக்கை மாயாவி'யில் தொடங்கி முத்து காமிக்சின் எத்தனையோ தலைப்புகள் சேர்த்து வைத்திருந்தேன். ஆங்கில 'classics illustrated' காமிக் புத்தகங்கள் ஐம்பதாவது சேர்த்திருப்பேன். கல்கி கோகுலம் புத்தகங்களில் வந்த சித்திரக்கதைகள்.. கல்கியில் வந்த 'அம்புலிக்கு அப்பால்' என்ற சித்திரக்கதையை எத்தனை விரும்பினேன் என்று எழுத்தில் வடிக்க முடியாது. சென்னையை விட்டு விலகிச் சில வருடங்களானதும் வீட்டுக்கு வந்தால் அத்தனையும் காணோம்! வலியை இப்போதும் உணர முடிகிறது.

எதற்குப் புலம்புகிறேன் என்றால்.. இது போன்ற சோகப் புலம்பல்களுக்கிடையே ஒரு நாள் இணையத்தில் திடீரென்று கிடைத்த வலைப்பூ, கனவுகளின் காதலன். காமிக்சுக்காகவே தனியான வலைப்பூ! முதல்முறை படித்ததும் சிலிர்த்துப் போனேன்!

காமிக் புத்தகங்கள், சினிமா, கட்டுரைகள் என்று நிறைய எழுதுகிறார். 2009-10 காலக்கட்டத்தில் இவர் எழுதியிருக்கும் பதிவுகள் மிகவும் சுவாரசியமானவை. காமிக்ஸ் பற்றி சுவையாக, படிப்பவரின் ஆர்வம் குன்றாமல், எழுதுவது சுலபமே அல்ல. இவருடைய திறமை, ஆர்வம் மற்றும் உழைப்பைப் புரிந்து கொள்ள மலைக்காட்டின் மரணக்காற்று படித்துப் பாருங்கள்.

இவரது பலங்களை அறிய, இவரது சமீபப் பதிவான அமெரிக்கக் காட்டேரியைப் படித்துப் பாருங்கள். (காட்டேரிக்கும் எனக்கும் ஒரு இது..)

நான் கனவுகளின் காதலனின் காதலன்.    ம்சிப் போட்டிக்கு முன்பே ராகவன் படைப்புகளைப் படித்திருந்தாலும், அதற்குப் பின் இன்னும் ஆழமாகப் படிக்கத் தொடங்கினேன் எனலாம். இலக்கியம் எனக்கு வராது. ஆனால் பிடிக்கும். இவருக்கு மூச்சு விடுவது போல இலக்கியம் எழுத வருகிறது. மனம் கனக்கும் நேரங்களில் சிலசமயம் மனம் கனக்கும் இவரது சிறுகதைகள் கவிதைகளைப் படிப்பேன். உதாரணத்துக்கு இந்தக் கவிதை:
    "ஊன்றுகோல் ஆணியில் தொங்கியது
    தாத்தா உத்தரத்தில் தொங்கிய பின்".

funny, how they repel! அரை மணி நேரம் இவரது இடுகைகளைப் படித்தால் கனத்த மனம் கனத்த மாதிரியும் இருக்கும், லேசானது போலவும் இருக்கும். இலக்கிய அத்வைதம்.

    "அந்த ஒற்றை வயலின்
    உடுத்தி களைத்த
    மெல்லிய பருத்தி புடவையில்
    சுற்றப்பட்டிருந்தது
    ஒரு குழந்தையை போல"
மிச்சக் கவிதையை அவரது வலைப்பூவில் படியுங்கள். கடைசி வரிகளின் அதிர்ச்சி பிரமிக்க வைக்கும். உத்தரவாதமாகச் சொல்வேன்.

பாத்திரங்களின் குணாதிசயங்களைப் படிப்பவர்கள் அறியச்செய்யும் உத்தி, இவரது சிறுகதை எழுத்திலிருந்து பின்பற்றப்பட வேண்டிய ஒன்றாகும். இந்தக் கதையைப் படித்துப் பாருங்கள். காற்றில் திறக்கும் கதவுகள்....

கொஞ்ச நாளாக ராகவன் எதுவும் எழுதவில்லை. மீண்டும் எழுத வேண்டும்.    மீண்டும் எழுத வேண்டும் என விரும்பும் இன்னொரு பதிவர் hemikrish. அளவை விடத் தரம் அதிகம் காணப்படும் இடுகைகள் என்றாலும், கொஞ்ச நாளாக எதையும் காணோம்.

சோகம் தெரியும். உயிர் தெரியும்.

மனதின் ஆழத்தில் புதைந்திருக்கும் சோகத்தைச் சுரண்டி எடுக்கிறீர்கள்.. எடுக்கும் பொழுது நக இடுக்கில் கொஞ்சம் உயிரும் ஒட்டிக் கொண்டுவிட்டதே என்று கலங்கிச் சோகத்தை அங்கேயே உதறப் பதறுகிறீர்கள்.. இந்த அனுபவத்தை தருமளவுக்கு இவரால் எப்படி எழுத முடிகிறது என்று வியந்து மறுபடி சோகத்தைச் சுரண்டப் போகிறீர்கள். relax, hemikrish படிப்பதால் உண்டாகும் வலிப்போதை. அஷ்டே.

உதாரணத்துக்கு இந்தக் கவிதை:
    "சன்னல் சட்டங்களை பற்றியபடி பதிந்த விரல்கள்..
    சற்று மேல் இரு புள்ளியாய் சிறுத்த கண்கள்
    எப்பொழுதும் தென்படுகிறது அவ்வீட்டினில்...
    அக்கண்களின் ஏக்கங்கள் வாடைக் காற்றை கிழித்து நேர் கோடாய் நிறுத்தப்படுகிறது அவ்வீதியினில்..."
நிதானமான சுவாரசியமான தொடக்கம் என்று நினைத்து while you savor.. தொடரும் வரிகளில் சோக frappe.. பிறகு இப்படி முடித்து அசர வைக்கிறார்:
    "எப்பொழுதாவது அவ்வீதியின் வழியே நீங்கள் போக நேரிடலாம்...
    அவள் விடுத்த கனவுகளும் ஆசைகளும் வீதியில்தான் அலைகிறது..
    அதன் வாசத்தை நீங்கள் நுகர நேரிடலாம்...
    அதன் மீது மோதிட நேரிடலாம்...
    அவ்வாறெனில்...
    ஒரு கணம் அச்சன்னலை பார்த்துவிட்டுச் செல்லுங்கள்..."
'தினமொரு ராஜகுமாரன்' கவிதையை முழுமையாக அவரது வலைப்பூவில் படியுங்கள். முடிந்தால் அத்தனை இடுகைகளையும் படியுங்கள். 2009லிருந்து எழுதி வருகிறார். இதுவரை ஐம்பதுக்கும் குறைவாகவே எழுதியிருக்கிறார். ஒரு மணி நேரத்தில் அத்தனையும் படித்துவிடலாம் என்று நினைத்தால் நீங்கள் தூண்டிலில் சிக்கிய மீன்.

இவருடைய கவிதைகளில் நான் bookmark செய்த வரிகள்:
    "புள்ளியினுள் பயணித்து வரையப்படுகின்ற கோலத்தினில் விழுகிறது மழைத்துளி.. சலனப்பட்ட என் மனம் போல்...".

what an imagination! what a gift!    ”அட ஒம் தம்பி் நான் உன்ணாணை தீர அயத்துப்போனனெடா, என்னடா இங்கை வீட்டுவேலையும் முத்தம் வாசல் கூட்டி ஆட்டுக்கு குழையும் வெட்டிபோட்டு அந்த இந்த வேலையெல்லாம் பாத்துக்கொண்டிருந்ததாலை தீர அயத்துப்போனனெடா தம்பி”

'அயத்துப் போவது' என்றால் என்னவென்று தெரியுமா? தெரியாவிட்டால் ஒன்றும் குறைந்துவிடாது, உண்மைதான். ஆனால் தெரிந்து கொண்டால் கிடைக்கும் மொழிச் சுகத்தை வார்த்தைகளில் வடிக்க இயலாதே? உதாரணத்துக்கு, கரவைக்குரல் எழுதிய இந்தப் பதிவைப் படித்துப் பாருங்கள்: தீர அயத்துப்போனன். ஸ்... அலோ! முத்தம்னதும் உடனே தாவிப் படிச்சீங்கன்னா தடுக்கி விழுவீங்க. கவனம்.

நான் மிகவும் விரும்பி அடிக்கடிப் படிக்கும் வலைப்பூ 'ஈழத்து முற்றம்'. இலங்கைத் தமிழ்ப் பொக்கிஷம். குழுமமாக எழுதுகிறார்கள். கதை கவிதை கட்டுரைகளில் இலங்கைத் தமிழ் கொஞ்சுகிறது. படித்தால் இலங்கையில் பேசப்படும் பல்வகைத் தமிழ் வழக்குகளை அறிந்து என்னைப் போலவே ஆச்சரியப்படுவீர்கள். ஈழத்து முற்றத்தில் நான் கற்றச் சொற்களை வைத்து ஒரு கதை எழுதி வருகிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

பேச்சு வழக்கு என்றில்லை.. நடை, உடை, உணவு, இசை, நூல் என்று பல பரிமாணங்களைத் தொட்டு எழுதியிருக்கிறார்கள் குழுமப் பதிவர்கள். சில நினைவுகள் மனதை மிகவும் நோகடிக்கின்றன.

'மாங்காய் சம்பல்' சாப்பிட்டிருக்கிறீர்களா? படிக்கையில் ஒரு வகைக் கார மாங்காய்ச் சட்டினியெனப் புரிந்தது. நாக்கில் ஈரமாகி ஒரு தீற்று சம்பல் யாராவது வைக்க மாட்டார்களா என்று தோன்றியது. செய்து பார்த்தேன். not bad. spicy, tangy and tasty. மறுமுறை தேங்காய் குறைத்துச் செய்து பார்த்தேன். much better. scotchக்கு உகந்தத் துணை. இட்லி தோசைக்கு உதவாது என்கிறார் பதிவர். தோதாகவே இருந்தது. modicum sour cream கலந்தத் தயிருடன் சம்பல் சாதம் பிசைந்து சாப்பிட்ட ஒரு மழைமதியம், சொர்க்கமானது. ஈழத்து முற்றத்தில் பாரம்பரியச் சம்பல் recipe கொடுத்தப் பதிவர் மணிமேகலாவை இந்த வாரம் தனியாக மீண்டும் சந்திப்போம்.    ரு வாரத்துக்கு வலைச்சரம் பக்கமே வருவதில்லை என்று தீர்மானித்திருப்பீர்கள் என நினைத்தேன். திரும்பி வந்தத் துணிச்சலைப் பாராட்டுகிறேன். போகுமுன் இன்றைய shout outல் என்னுடன் இணைந்து குரல் கொடுத்துவிட்டுப் போங்கள். தையல்காரர் எனும் நுண்மையான சிறுகதையை எழுதி எம்மைச் சிலிர்க்கச் செய்த வித்யா சுப்ரமணியத்துக்கு ஜே!➤➤3. தாயே வேலன்டைனம்மா


மேலும் வாசிக்க...

Monday, May 28, 2012

முதல் கோணல்


    முதல் கோணம் என்று சொல்ல வந்தேன். bleepin subconscious alert.

மூன்றாம் சுழியின் பெரும்பான்மையான படைப்புகள் சற்றே முதிர்ந்த வாசகருக்கானவை - கெட்ட வார்த்தைகள், நடத்தைகள்(?), செக்ஸ், தகாத உறவு, நாத்திகம், வன்முறை.. இவை அடிக்கடி வருவதனால்.

இனி நிறைய பேர் மூன்றாம் சுழி படிப்பார்கள் என்று தோன்றுகிறது.

மற்றபடி முதிர்ந்த அறிவுக்கும் எனக்கும் தொடர்பே இல்லை, அதான் பெயரிலே மூன்று சுழி:
    - பேய்க்கதைகள் விரும்பினால் இவற்றைப் படியுங்கள்: நாகூர் 2012, புகை, கோமதீ, பாலுவின் கோடை
    - விளிம்புக் கதைகளுக்கு: வருகை, பெரியவர் ஆசி, சுசுமோ, சாதல் மீறும், லிக
    - பலானக் கட்டுரைகளுக்கு: அதர்மு மாமா கதை, தமிழ்வேட்டி, முதலில் பெண் அடுத்தது காமம், இறையும் குறையும்
    - சுமாரானக் கவிதைகளுக்கு: புதுமைப்பெண், ட்டிக் ட்டிக் விதை, ஆறுதல், தடங்களுக்கு வருந்தவில்லை
நெஞ்சைத் தொடும் அருமையான இலக்கியம் பிடிக்குமென்றால், அடுத்த பிலாகில் தேடுங்கள்.

நகைச்சுவையாக எழுத வரவில்லை, படிக்கவாவது செய்வோம் என்று பெரும்பாலும் அடங்கிவிடுவேன். இருப்பினும், என்னுடைய நகைச்சுவை உணர்வின் முத்தாய்ப்பான அன்புமல்லி கேரக்டரை வைத்து நிறைய கதைகள் - அஞ்சற்க - என்றைக்காவது எழுத எண்ணியிருக்கிறேன். இதுவரை எழுதிய அன்புமல்லி கதைகள் சிலவற்றை மூன்றாம் சுழியில் படிக்கலாம். கதைகளைப் படித்துவிட்டு, பெரியசிவம் என்பவர் என்னை 'ஆகா ஓகோ' என்று புகழ்ந்துத் தள்ளியிருந்தார். கடைசி வரியில், 'இப்படிக்கு, உன்னுடைய மாமா' என்று எழுதாமல் விட்டிருக்கலாம். பெயரை மாற்றிக் கொண்டுப் பின்னூட்டமிட்டு என்ன பலன்?

நசிகேதன் கதையை வெண்பா வடிவில் எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. நசிகேத வெண்பாவை வெண்பாவுக்காகப் படிக்காவிட்டாலும், பின்னூட்டங்களுக்காக நீங்கள் அவசியம் படிக்க வேண்டும்.

பட்டருக்கு மனமிரங்கி அபிராமி நிலவைக் காட்டியதாகக் கட்டியக் கதை பட்டரின் புகழ் பெருக உதவியது என்றாலும், தமிழ்ப்பாடல் என்ற முறையில் மிகவும் ரசிக்க வேண்டிய இறையிலக்கிய நூல் அபிராமி அந்தாதி. எத்தனையோ உச்ச விளக்கங்களுக்கு இடையில் என்னுடைய துச்ச விளக்கமும் இருந்துவிட்டுப் போகட்டும் என்றுத் தமிழ்ப்பார்வையுடன், கிளைக்கதைகள் சேர்த்து எழுதினேன். என்னுடைய விளக்கம் முக்கியமில்லை. அபிராமி அந்தாதி பாடல்களைப் பாடிய என் அம்மாவின் இனிமையான, கம்பீரமானக் குரலைப் பலரும் கேட்க ஒரு வாய்ப்பாக இருக்கட்டும் என்று ஒலிப்பதிவு செய்து சேர்த்ததே, பதிவுக்குக் கிட்டியப் பரவலான வரவேற்புக்குக் காரணம். நேரம் கிடைக்கும் பொழுது அவசியம் கேளுங்கள், படியுங்கள்.

சூடாமுடி என்று ஒரு சரித்திரத் தொடர் எழுதத் தொடங்கினேன். தமிழக வரலாற்றில் மறந்து போன, அல்லது அதிகம் எழுதப்படாத, காலக்கட்டம் மற்றும் நிகழ்வுகளை ஒட்டியக் கற்பனைக் கதை. இப்போதைக்கு இனர்ஷ்யா.

இதற்குமேல் என்னைப் பற்றி எழுதினால் நானே என்னை அடிக்க வரலாம்.

    திவெழுதுவது சிரமம். தொடர்ந்து எழுதுவது இன்னும் சிரமம். தொடர்ந்து சுவையாக எழுதுவது மிகச் சிரமம். தொடர்ந்து சுவையாகப் பல வருடங்கள் எழுதுவது, சிரமத்தின் உச்சம். வலைச்சரத்தில் நான் கொஞ்ச நினைக்கும் பதிவுகளுக்கு அறிமுகமே தேவையில்லை. சிரமத்தின் உச்சத்திலிருந்து வருடக்கணக்காக எழுதப்படுபவை. நான் (அவ்வப்போது) படித்து ரசித்துப் பொறாமைப்படுபவை. full disclosure.. இப்பதிவுகளைப் பற்றி எழுதும் சாக்கில் என் எழுத்தை இங்கே அறிமுகம் செய்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்பதை உணர்கிறேன். இப்பதிவுகளில் ஒன்றிரண்டை யாராவது இதுவரை அறியாதிருந்து, அறிமுகமாக அமைந்துவிட்டால் அது பெரிய நிறைவாகும் (நப்பாசை எனக்கு வைடமின் போல).

பதிவுகளை இப்பொழுதே குறிப்பிட்டு விடுகிறேன்.

hold on. அதற்கு முன் இவர்களுக்கு ஒரு shout out: சளைக்காமல் எழுதிவரும் வல்லிசிம்ஹன், துளசி கோபால், இராஜராஜேஸ்வரி, கீதா சாம்பசிவம். ஜே! ஜே! ஜே! இவர்களில் ஒருவர் 2004லிருந்து எழுதி வருகிறார் (2004! அப்பல்லாம் பிலாகர் இருந்துச்சா என்ன?). ஒருவர் தினமொரு பதிவு எழுதுகிறார் - seldom fails (எங்கிருந்து தான் விஷயம் கிடைக்குதோ!). ஒருவர் நாலைந்து பதிவுகள் போதாதென்று சமூகத் தளங்களிலும் எழுதுகிறார் (நடுவே ஊரை விட்டு ஓடினாலும்). ஒருவர் புகைப்படங்கள் நினைவுகள் என்று கலந்து எழுதுகிறார் (நெகிழ்ச்சி மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைக்கிறது இவர் பதிவுகளில்). மறுபடி ஜே!

back to blogroll. கீழ்க்கண்டப் பதிவுகளை, புதிதாக ஏதும் தென்படாவிடினும், நேரம் கிடைக்கும் பொழுது ஒரு விசிட் அடித்து விடுங்கள். என்னைக் கவர்ந்தக் காரணங்களை வரும் நாட்களில் விவரிக்கிறேன். ஒத்துப் போகிறதா பாருங்கள், போகவில்லையா, பெயரை மாற்றிக்கொண்டு உங்கள் கன்னாபின்னா, அதாவது, கருத்தை எழுதி அவர்கள் பதிவில் பின்னூட்டமிடுங்கள். கடைசி வரியில் கவனமாக இருங்கள்.

மெட்ராஸ் தமிழன்
எழுத்துப் பிழை
கண்ணன் பாட்டு
DISPASSIONATED DJ
கைகள் அள்ளிய நீர்
            அதீத கனவுகள்
            மரகதம்
            நித்திலம்
            கண்ணனுக்காக
            அன்பே சிவம்
            hemikrish
            உயிரோடை
                    எங்கள் Blog
                    எம்.ஏ.சுசீலா
                    மனவிழி
                    உப்புமடச் சந்தி
                    ஈழத்து முற்றம்
                    மனதோடு மட்டும்
                    கனவுகளின் காதலன்
            kashyapan
            வேல் கண்ணன்
            யவ்வனம்
            ராகவன்
            சிவகுமாரன் கவிதைகள்
            கே.பி.ஜனா...
            அகரம் அமுதா
Consent to be......nothing!
தமிழ் உதயம்
சித்தர்கள் இராச்சியம்
தேவியர் இல்லம்
உள்ளக் கமலம்
டங்கு டிங்கு டு


➤➤2. சம்பல் வம்பு
மேலும் வாசிக்க...

Sunday, May 27, 2012

நன்றி செய்தாலி - வருக ! வருக ! அப்பாதுரை

அன்பின் சக பதிவர்களே !

அனைவருக்கும் வணக்கம்.

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற நண்பர் செய்தாலி - தான் ஏற்ற பொறுப்பினை மிகுந்த ஈடுபாட்டுடனும் ஆர்வத்துடனும் நிறைவேற்றி - இப்பொழுது நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் ஏழு இடுகைகள் இட்டு ஏறத்தாழ 140க்கும் மேலாக மறுமொழிகள் பெற்றிருக்கிறார். அறிமுகப்படுத்தப்பட்ட பதிவுகள் : 90;

நண்பர் செய்தாலியினை நன்றி கலந்த நல்வாழ்த்துகளுடன் வழி அனுப்பி வைப்பதில் பெருமை அடைகிறேன்.

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்தவர் நண்பர் அப்பாதுரை. இவர் சென்னையில் வசித்து பிறகு சிகாகோவில் குடியேறி வாழ்பவர். இவர் மூன்றாம்சுழி என்னும் வலைத்தளத்தில் 08.03.2009ல் இருந்து எழுதி வருகிறார்.

இவர் 2011 ஜனவரி 2ம்நாள் முதல் தமிழ்மண நட்சத்திரப் பதிவராக 14 இடுகைகள் எழுதி இருக்கிறார். முதிர்ந்த வாசகருக்கான கருத்தும் நடையும் ஆங்காங்கே காணலாம். என தன்னுடைய தளத்தின அறிமுகக் குறிப்பில் எழுதி வைத்திருக்கிறார்.

நண்பர் அப்பாதுரையினை வருக ! வருக ! அறிமுகங்களை அள்ளித் தருக ! என வாழ்த்தி வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் செய்தாலி

நல்வாழ்த்துகள் அப்பாதுரை

நட்புடன் சீனாமேலும் வாசிக்க...

அகம் தொட்ட க(வி)தைகள்ஆசிரியர் 
மேடை ஏறியதில் காணமுடிந்தது 
நிறைய வலை உறவுகளின் அடையாளங்களை 
உணர முடிந்தது அவர்களின் அன்பை 

ஆசிரியர் 
மேடையேற்றி பெருமைப் பருத்திய 
வலைச்சர உறவுகளுக்கு அகம் கனிந்த 
 நன்றி... நன்றி.. நன்றி... 

நாளைமுதல் 
வலைச்சர வகுப்பில் 
மீண்டும் மாணவனாக  தொடர்வேன் 


 உறவுகளின்  
வருகைக்கும் கருத்திற்கும் 
மாசற்ற நல் அன்பிற்கும் 
என் பிராத்தனைகள் 


 மனதை 
இளக்கி புருவத்தை உயர்த்திய 
அழகிய ஆழமான கவிதை ,கதைகள் 


தமிழ் 
மரபு வழியே 
ஐயா ராமானுசம் இசைக்கும் பாடல்கள் 
தரமான வாழ்வை சொல்கிறது


ரமணி சாரின் 
அதன் அடினாதத்தின் வெளிப்பாடும் 

நம் 
விலை நிலங்கள் தரிசாக 
மனம் கனக்கும் வேதனையை உடைக்கிறார் 


 நெஞ்சை 
உறுத்தும் நவ பள்ளி வாழ்க்கை 
மழலை கேட்கும் மயிலிறகில் விச்சு சார் 


சத்ரியனின் 
மனவிழியில் மனதை இளக்கிய

ஹாசிமின் 
சிந்தனை சிதறலில் 


சொகுசு கைதிகளான 
அக்கரை வாசிகளின் வாழ்கையை 
சொல்கிறார் சகோ யாசர் அரபாத் 


தான் 
வரிகளில் நமக்கு காட்டுகிறார் 
தோழர் பிரேம் 


விளை நிலத்தின் 
மனமுருகி சொல்கிறார் தோழர் அரசன் சே 


முதியோர்  இல்லத்தில் 
அனாதையாகும் பெற்றோர்கள்
வலிகளை உணர்த்துகிறார் தோழர் சீனி 


தமிழ் மீரானின் 
வாழ உதவாத உறவுகளின் 
மரணச் சடங்கு 


என் 
தங்கை கலை கருவாச்சியின் 
முதல் கவிதை நேசிக்கிறேன் 


தன் 
சொல்லிலும் பொருளிலும் 
நம்மை வியக்கவைக்கும் தோழி ஹேமாவின் 
 தன் 
எழுத்தொளியில் வெளிச்சமிடுகிறார் 
சகோ ரேவா 


 களை 
பிடுங்கப் போனவனின் மனசாட்சியோடு 
களையின் வினவல் தென்றலின் வருடலில் 
தோழி சசிகலா 
கீத மஞ்சரியில் 
ஒரு தாய் பறவையின் கணேஷ் சாரின் 
மின்னல் வரிகளில் 


தோழர் 
சே குமாரின் மனசில் 
எல்லா உறவுகளுக்கும் என் அகம் கனிந்த நன்றிகள்
சுபம் .
மேலும் வாசிக்க...

Saturday, May 26, 2012

நளபாக கலையரசிகள்
நளபாகம் 
அழகிய ரசனைக்  கலை 
அது சிலருக்குமட்டுமான வரபிரசாதம் 


விலைகொடுத்து 
பொருள் வாங்கி விடலாம் 
தரமாய் ருசியாய் சமைப்பது 
அரிது 


ருசியால் 
வயிறு நிறைந்தால் 
மனம் தானாக நிறையும் 


அழகிய 
பரிமாறுதலில் ருசியற்ற 
உணவும் அமிர்தமாய் தித்திக்கும்

நாம் 
உண்ணும் உணவு
நாளைய ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும் 
மருந்து, விஷம்


நல்லுணவும் 
நல்லாரோக்கியமும் நீண்ட ஆயுளும் 
நம் பாட்டன் முப்பாட்டர்களின் 
அடையாளங்களில்


இன்றைய 
நவவுலகில் ஐம்பதை கடக்கும்முன் 
ஓராயிரம் சீழ் சீக்குகள் காரணமோ 
நவ உணவுக் கலாச்சாரம்


விலையுள்ள உணவை 
வெறும் பகட்டிற்காக தேடி உண்ணுகிறோம் 
 தரமும் ஆரோக்கியமும் மறக்கிறோம் 
அறிவில் மேலோங்கிய மனிதர்களாகிய நாம் 


நல்லுணவு 
நல்லாரோக்கியம் நீண்ட ஆயுள் 
ஆரோக்கிய வாழ்கையின் அழகிய அடையாளம்


இதோ 
ருசியுள்ள 
நளபாகத்தை சொல்லிகொடுக்கிறார்கள் 
சமையல் கலை வல்லவர்கள்


 நளபாகம் 
எத்தனையோ கலையரசிகளின் 
தித்திக்கும் ருசி சங்கமம்


சகோ ஆமினா வின் 
கற்றும் ருசித்தும் கொள்ளலாம் 
நளபாகத்தை 

ரசனையில் விதவிதமாய் கோர்க்கப்பட்ட 
ருசியுள்ள உணவுகள் பாருங்கள் ருசியுங்க 

சகோ 
மலிக்காவின் கலைச்சரலில் 
ருசியோ ருசி பாருங்கள் ருசியுங்க சைவ சமமையலை சமைக்க ருசிக்க 
நமக்கு சொல்லி தாரங்க 
சகோ ஆயிசா ஓமர் 

அட்டகாசமான ருசியை சமைக்க 
கத்து தாராங்க சகோ ஜலிலா கமால் 

சாப்பிட வாங்க 
நல்ல சமைத்து அசத்துறாங்க 

தோழி     கோவை டு டெல்லி பாருங்க அன்பாக 
உணவை சமைக்க சொல்லித் தாரங்கள் 
நிறைய 
சமையல் வித்தைகளையும் 
அதன் குணா நலன்களையும் சொல்லிகொடுகிறாங்க 
சின்னு ரெஸ்ரி  தோழி  மாதவி 


தோழி 
சுண்டி இழுக்கும் வாசமும் 
சுவையான உணவுகளும் 


விதவிதமான குழம்பு வகைகள் 
பாருங்க சமையுங்க ருசிங்க


சகோ யாஸ்மியின்


ருசியுள்ள நல்ல அசைவ உணவுகள் 


நாளை 
பணியின் இறுதி நாள் 
வாசித்ததில் பிடித்த  ரசித்த 
கதை, கவிதைகளுடன் வருகிறேன் (:

மேலும் வாசிக்க...

Friday, May 25, 2012

பல்சுவை வேந்தர்கள்

இன்று 
நாம் பார்க்கப்போவது 
பல்சுவை வேந்தவர்கள்

குறிப்பா 
ஒருசிலர் வல்லவராக இருப்பார்கள் 
ஒரு சில விஷயங்களில் மட்டும் 

நான் 
அதிகம் வாசிப்பதும் இரசிப்பதும் 
கவிதை... கவிதை... கவிதை... 
அதுமட்டும்தாங்க 
வேற எல்லாத்திலுமே வட்ட 
பூஜ்யம் 


நாம் 
ஒரு விஷயத்தை சொன்னால் எழுதினால் 
மற்றவர்களை செண்டடையுதல் பயனடையுதல் 
நமக்கான திருப்தி  

நம் 
வலையுலகில் 
பல்சுவைப் பதிவுகளில் 
கொடிகட்டிப் பறக்கிறார்கள் இவர்கள் சில
வலைகளைப் 
பார்க்கையில் வாசிக்கையில்
பொறாமை வரும் 
அவ்வளவு அருமையா அழகா எழுதுறாங்க 
இவங்க ஒரு 
கல்வித் தொடராக 
பயனுள்ள நல்ல விஷயங்களை 
பட்டியலிடுகிறார் நம்ம  மதுமதிசார் அஞ்சறை பெட்டியில் 
கிளைகளாய் குவிந்து கிடக்குகிறது 
நம் நாட்டு நடப்பு 


வலையில் 
எதை எடுப்பது எதை விடுவது 
குழப்பமல்ல அவ்வாளவு நல்ல பதிவுகள் (சிந்தனைகள் )
தருகிறார் திண்டுக்கல் தனபால் சார் 


சினிமா 
நிறைய செய்திகளை தருகிறார் 
ராஜபாட்டை ராஜா பாருங்க 
ஆனால் இவருக்கே போட்டியா 
நாளை இவர் வாருவார் பாருங்க


கிழிகிழி ன்னு 
கிழிக்கிறார் நம்மளை இல்லங்க 
அரசியல் நாற்றங்களை 
விகடனின் அங்கிகாரமும் பாருங்கோ 

நிறைய 
நல்ல கல்வி சம்பந்தப்பட்ட 
அறிவை கற்றுத் தருகிறார் 
நம்ம மதுரை சரவணன் சார் 

உலகம் 
பற்றய வரலாறை 
எளிதான வார்த்தைகளில் விளக்குகிறார் 
நம்ம வரலாற்றுச் சுவடுகள் பாருங்கள் 


சீனாவின்
விலை மலிவும் இந்தியாவின் விலையேற்றமும் 
நமக்கு விளக்குகிறார் நம்ம உழவன் 


தொழில் நுட்பமும் 
சமூக நுட்பங்களையும் நமக்கு 
எளிதாக சொல்லி தருகிறார் தங்கம் பழனி 

நல்ல 
நிறைய கட்டுரைகள் 
அதற்க்கான விகடனின் அங்கிகாரமும் 
வாங்க பலாசார் பக்கம் 


தன் 
கைவண்ணத்தில் 
நிறைய விஷயங்களை கையாளுகிறார்

நிறைய 
தூக்கமும் கொஞ்சமா விழிப்பும் 
சோம்பேறி இல்லங்க நான் 
இன்று வார விடுமுறை (:

நாளை 
உடல் நலத்திற்க்காக 
 சுவையும் மருந்தும் 

ம் (:

மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது