07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, May 15, 2012

பூக்களும் பூவையரும் ...!

பூவென்று சொன்னாலே
பூவையர் வந்து நிற்பார்
பூமியில் அவரின்றி
பூரணம் எதுவுமில்லை !

வகை வகையாய்
வண்ணங்கள் ..
வாசனை அணிந்த
பூவினங்கள் ...
தமிழ் மொழியில்
நான் அறிய தொண்ணூறு வகைகளில் ...


ரோஜா
முக அழகும் , அகமணமும் கொண்ட பாவையரின் உயிர் மூச்சாய் வாழ்கின்ற மலரில் இது முன்னிலையில் ....



மல்லி ...
பெண்கள் தலையில் சூடும் மாலைகளாகவும் கோயில்களில் பூசையிலும் பயன்படுகிறது. மூலிகை மருத்துவத்தில் பால் சுரப்பு நிற்க, மார்பக வீக்கம் குறைய இது பயன்படுகிறது. தமிழ்நாட்டில் மல்லிகை பெரும்பாலும் மதுரை மாவட்டத்தில் பயிராகிறது.




தாமரை ...
தாமரையின், பூக்கள், இதழ்கள் என்பவை அக்காலச் சமயத்துறை மற்றும் கட்டிடக்கலை அலங்காரங்களிலும் காணப்படுகின்றது.
தடாகத்தில், குறிப்பாக தாமரைச் செடிகள் வளரும்.
தாமரை காலையில் மலர்ந்து இரவில் குவியும்.



அல்லி...
அல்லி அல்லது ஆம்பல் என்பது நீரில் வளரும் ஒரு கொடி.அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும். திருமால் மார்பில் மறுவாக இருப்பது அல்லி.

காந்தள் ..

இது வேலிகளிலும், பாதையோரங்களிலும், காட்டோரங்களிலும் படர்ந்து நிமிர்ந்து அழகிய விரல்கள் போலவும், சுடர்கள் போலவும் காட்சியளிக்கும்.தளை அவிழ்ந்த மலர் ஏழு நாட்கள் வாடாமல் இருக்கும். இதழ்களில் நிறம் முதலில் பச்சை, பிறகு வெண்மை கலந்த மஞ்சள். பிறகு மஞ்சள், பிறகு செம்மஞ்சள், பிறகு துலக்கமான சிவப்பு (Scarlet) நீலம் கலந்த சிவப்பாக மாறிக்கொண்டு போகும்.

சூரிய காந்தி ....

சூரிய உதயத்தின்போது, பெரும்பாலான சூரியகாந்திகளின் முகங்கள் கிழக்கை நோக்கித் திரும்புகின்றன. அன்றைய நாள் நகரும்போது, அவையும் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிச் சூரியனைப் பின் தொடருகின்றவேளையில் இரவில் அவை மீண்டும் கிழக்குத் திசைக்குத் திரும்புகின்றன. இந்த நகர்வானது மொட்டிற்குச் சிறிது கீழாக உள்ள தண்டின் வளையத்தக்க பகுதியான இலையடிமுண்டிலுள்ள இயக்க கலங்களினால் ஏற்படுத்தப்படும். மொட்டு நிலை முடியும்போது, தண்டானது விறைப்படைந்து, பூக்கும் நிலையை அடையும்.

பூக்கும் நிலையிலுள்ள சூரியகாந்திகள் அவற்றின் ஒழிதூண்டுதிருப்பத் திறனை இழக்கின்றன. தண்டானது பொதுவாக கிழக்குநோக்கிய திசை அமைவில், "உறைந்த" நிலைக்கு வந்துவிடும்.[சான்று தேவை] தண்டும் இலைகளும் தமது பச்சை வண்ணத்தை இழக்கும்.

நாகலிங்கப் பூ ...

சார்த்தப்பட்ட சிவலிங்கத்தைப் போன்றே அமைப்புள்ள ஓர் அழகிய மலர்தான் நாகலிங்கப்பூ ஆகும்.அழகிய வட்ட வடிவமான வெண்மைநிற ஆவுடை, அதன் நடுவில் சிறிய பாணலிங்கம், சிவலிங்கத்தின்மீது கவிழ்ந்து குடை பிடிப்பது போன்ற எண்ணற்ற தலைகளையுடைய நாகம், ஆவுடையாரைத் தாங்குவதுபோல் குங்கும நிறத்தில் ஐந்து இதழ்கள்- இத்தகைய தோற்றம் கொண்ட ஒரு அழகான மலர்தான் நாகலிங்கப் பூ.


சம்பங்கிப் பூ

மலர்களில் சற்றே வித்தியாசமான பூ சம்பங்கி. சீக்கிரத்தில் வாடாத இதன் தடிமனான இதழ்களும், வாசனையும் நம் அழகுக்கு அழகு சேர்க்கும். மல்லிகைப்பூவின் வரிசையில் வரும் இந்த சம்பங்கியின் மலர் மட்டுமல்ல... இதன் விதை, இலை என அனைத்துப் பாகங்களும் அழகைக் கூட்டும் ஓர் அற்புத தொழிற்சாலை!

பூவரசம் பூ

உடல் நலம் பெற .உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது .

அனிச்சை மலர்

மூச்சுக் காற்று பட்டால் கூட வாடி விடும் மென்மையானது .

தாழம் பூ

வாசமென்றால் என்னவென்று சொல்லித்தரும் படைப்பிதுவே .  பெண்ணின் கொண்டையிடும் பூவாலே அரவம் குடியிருக்கும் ஆபத்தும் இதிலுண்டு .

எருக்கம் பூ

வேதாளம் சேருமிடம் , பாதாளமே ஆனாலும் சுடுகாட்டுப் பூவாக வாழ்ந்திருக்கும் பூவிதுவே .

குவளை

பெண்களின் கண்களோடு ஒப்பிடக்கூடியது .

இன்றைய ஒதுக்கீட்டில்
நூறும் அவர்க்கென்றே
இடமளிக்க மனம் சொன்ன
வார்த்தைக்கு அடிபணிந்து
அவர்கள் பதிவுகளில்
முடிந்ததைப் பகிர்கின்றேன் ....

நான் பூக்களைப் வரிசைப் படுத்தும் போதே பூவாய் மலரும் நாள் ...என்று தமிழ் பேசி தமிழை நேசிக்கும் தமிழாள்  என்று தமக்கென அறிமுகத்தை பகிர்ந்ததோடு அல்லாமல் தமிழே உயிர் மூச்சாய் சுவாசிக்கும் சகோ வேதாவின் வலை..

நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சந்நிதி ... அந்த சன்னதிகளின் சிறப்பை சிறப்பாய் சொல்லும் இராஜராஜேஸ்வரி அவர் வலைப்பக்கம் போனாலே ஒரு தெய்வீக மணம் வீசும் .

தொப்பை இருக்கா உங்களுக்கு நான் கேட்கவில்லை சகோதரி ராஜி தொப்பை இருந்தா சந்தோசம் என்று சொல்றாங்க ஏன் என்று கேட்கலாம் வாங்க .

சிறகே இல்லாமலும் பறக்கக் கற்றுக்கொடுக்கிறார் ஆதிரா . வாங்க பழகுவோம் .

வறண்ட நிலத்தைப் பற்றி  வளமான தமிழால் கீதமஞ்சரி கீதமாய் மெருகேற்றிச் சொன்னாலும் வரிகளைப் படித்து முடிக்கும் போதே ஏனோ வாடித்தான் போகிறது மனம்.

அம்மாவின் கைவண்ணத்தை அவ்வப்போது நினைவுபடுத்தும் குறை ஒன்றும் இல்லாமல் சொல்லித்தரும் லக்ஷ்மி அம்மாவின் வலை .

என்ன தான் சமைக்க தெரிந்தாலும் சமையலில் சுவை கூட்ட  சமையல் டிப்ஸ்  சொல்லிக் கொடுக்கிறாங்க ஷார்ஜா அவர்கள் .

ஞாபகக் கள்வனே...
காற்றாய்
வருடுகிறாய்
ஒற்றை மழைத்துளியாய்
உதடு நனைக்கிறாய்
சமையலுக்கான
ஈரம் சேமிக்கிறேன்
உன்னிடமிருந்தே.அப்பப்ப என்ன ஒரு பிரம்மாண்ட மான வரிகள் . இன்னும்  இருக்கே வாங்க ஹேமாவின் வலைப்பக்கம் .

தனிமையிலே இனிமை காண முடியுமா ? முடியும் என்று சொல்றாங்க ரேவா
.
வளர்ந்து வரும் எழுத்தாளர்களில் எனது தங்கை எஸ்தர் சபியும் ஒருவர் அவரது சிறுகதையும் பார்க்கலாமே .

பன்றிகளையும் மற்ற மிருகங்களையும் விடச் சிறப்பாக வாழக்கூடிய தகுதி மனிதனுக்கு மட்டும் ஏன் வழங்கப்பட்டுள்ளது? ஏன் என்று மணிமேகலாவையே கேட்போம் வாங்க என்ன ஒரு அழகா அருமையான விளக்கம் தராங்க .

பூக்களைப் பற்றி பேச ஆரம்பித்ததும் இங்கே காகிதப் பூக்கள் என்ற பெயரில் நிஜப் பூக்களைப் பற்றி சொல்றாங்க  ஏஞ்சலின் .

மனித இனத்தைப் பிடித்தாட்டும் புற்றை முழுமையாக ஒழிக்கும் காலம் வந்துவிடும். என்று நம்பிக்கை தரும் விதம் கட்டுரையில் விளக்குகிறார் ஹுஸைனம்மா.

எல்லா மதங்களுமே
மனசாட்சிக்கு பயப்படவும்-
மனிதநேயம் வளர்க்கவும்-
வலியுறுத்தும் வழிகாட்டிகளாய்த்தான்
விளங்குகின்றன திகழுகின்றன! என்று அற்புதமான வரிகளால் ஒற்றுமையே பலம் என்கிறார் ராமலக்ஷ்மி.

முதுமைக்குறிய இரத்த அழுத்தம்,சர்க்கரை,பார்வைக்குறைபாடு,இதயநோய்,இத்யாதிகள் எதுவுமே இல்லை.ஆனால்...வேறு என்ன வியாதி முதுமையில் வரும் என்று எச்சரிக்கிறார் ஸாதிகா.


ஆரோக்கிய வாழ்வுக்கு  சமைத்த உணவா ..?  சமைக்காத உணவான்னு பட்டி மன்றத்திற்கு அழைக்கிறாங்க ஜெய்லானி.

காதல்  வட்டம், முக்கோணம் , சதுரம் , செவ்வகம் என்று தொடர்கதை எழுதுறாங்க என் தங்கை நிரஞ்சனா தொடர்ந்து அடிக்க ஒரு ஆள் கிடைச்சாச்சி வாங்க வாங்க .

ராதா ராணி  கொளுத்துற வெயிலுக்கு ஜில்லுனு ஜூஸ் தராங்க வாங்க .

மாதேவி உடல் ஆரோக்கியமாக எவ்வளவு உண்ண வேண்டும். என்று விளக்கமா நிறைய செய்திகளைச் வாசிக்கிறாங்க வாங்க கேட்டுப் பயன் பெறுவோம் .

மொண்டாள்; மொண்டு, முகத்தைத் துலக்கி
உண்டநீர் முத்தாய் உதிர்த்துப் பின்னும்
சேந்துநீர் செங்கை ஏந்தித் தெருக்கதவு
சார்ந்ததாழ் திறந்து, தகடுபோற் குறடு
கூட்டி, மெருகு தீட்டிக் கழுவி,
அரிசிமாக் கோலம் அமைத்தனள்! என்று அழகான வரிகளால் கோலமிடுவதைப் பற்றிப் பதிவில் கூறுகிறார் கோமதி அரசு  .

நாம மருத்துவரைப் பார்க்கப் போய்கிறோம் நம்ம நோய் குணமாகும் என்ற நம்பிக்கையில தான அந்த நம்பிக்கையை பற்றிச் சொல்றாங்க வல்லிசிம்ஹன் .

மாங்காய்  சீசன் இல்லையா அதனால மாங்காய் ஊறுகாய் பற்றி சொல்லித்தராங்க மேனகா .

பால்ய காதல் பற்றி அற்புதமா கவிதை சொல்றாங்க கோவை சரளா .

புதையலை ஒதுக்கி விட்டு பொய்களைத் தேடிக் கொண்டிருப்பவர்கள் தமிழர்கள் என்று ஆதங்கப்படுறாங்க மாலதி .

உருவ வழிபாடு ஏன் வந்தது? நிஜமாவே இந்த உருவத்தில் தான் கடவுள் இருப்பாரா? என்று நிறைய கேள்விகளைக் கேட்டு பதிலும் சொல்றாங்க அவங்க யார் என்று கேட்டால் சாதாரணமானவள் என்று சொல்றாங்க .

காணமல் போய்விட்டது
ஊரின் குளம் மட்டுமல்ல
அதில் நிதம் குளித்த நிலவும்கூட...
இப்படி அழகழகா ஹைக்கூவில் கலக்குறாங்க அனுஜன்யா .

இங்கே மவுனம் பேசுகிறது எங்கே என்று கேட்பவர்கள் அன்புடன் ஆனந்தி வலைப்பக்கம் வாங்க .

எல்லோருக்கும் ஏதாவதொரு சந்தோசம் , துக்கம் , ஏமாற்றம் இப்படி ஏதேதோ சொல்றாங்க இந்திரா வாங்க கேட்போம் .

பாரதியின் மேல் எனக்கு கோபம் என்று நான் சொல்லவில்லை அகிலா சொல்றாங்க ஏன் என்று கேட்கலாம் வாங்க .

ஆசைகள் இல்லாத மனிதன் அரை மனிதன் ..என்று சொல்றாங்க யசோதா காந்த் .

வாழ்க்கையே வேடிக்கையானதுதான்.  அதில் டயட் வேற இருந்து காமெடி பண்ணும் எண்ணம் எனக்கு இப்போ இல்லை.  என்று சொல்லும் சித்ராவின் வலைப்பக்கம் பார்ப்போம் வாங்க .


பூவும் புன்னகையுமாய் இந்நாள் இனிய நாளாகட்டும் நலம் விசாரிக்க நாளை வருகிறேன் .

65 comments:

  1. ஆஹா எத்தனை வகையான பூக்கள்
    அருமையான அறிமுகங்களும்
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. பூவும் புன்னகையுமாய் இந்நாள் இனிய நாளாகட்டும் என நலம் விசாரிக்க எமது பதிவையும் மனமுவந்து அறிமுகப்படுத்தியதற்கு
    இனிய நன்றிகள் !!

    ReplyDelete
  3. பூவும் புன்னகையுமாய் இந்நாள் இனிய நாளாகட்டும் என நலம் விசாரிக்க எமது பதிவையும் மனமுவந்து அறிமுகப்படுத்தியதற்கு
    இனிய நன்றிகள் !!

    ReplyDelete
  4. பூவும் புன்னகையுமாய் இந்நாள் இனிய நாளாகட்டும் என நலம் விசாரிக்க எமது பதிவையும் மனமுவந்து அறிமுகப்படுத்தியதற்கு
    இனிய நன்றிகள் !!

    ReplyDelete
  5. அத்தனை பதிவுகளும் மலர்ந்து மணம் பரப்பி மனம் மகிழ்விக்கின்றன்.. பாராட்டுக்கள் 1

    ReplyDelete
  6. சாதாரணமாக நாம் காணாத பூ பற்றி ஒரு பதிவு எழுதுகிறேன். அவற்றின் பெயர் கூட எனக்குத் தெரியாது.ஓரிரு நாட்களில் என் வலையில். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. சசிகலா அறிமுகத்துக்கு நன்றி. மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. நிறங்களில்
    குணங்களில் தென்றல் வருடிய
    வண்ண மலர்கள்
    அழகு

    தன்
    மென்மை மேண்மை அழகில்
    மலர்களையும் வெட்கப்பட செய்யும்
    தரணிப் பேரழகாம் பெண்மை
    பூத்து குலுக்குகிறது
    வலைப்பூ தோட்டத்தில்

    நல்
    பெண் மலர்கள் (தோழமை )
    அறிமுகங்கள் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் தோழி

    ReplyDelete
  9. நன்றி சசிகலா. அழகான தொகுப்பு. அறிமுகமாகியிருக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துகள்!

    ReplyDelete
  10. அழகிய முறையில் பூக்களை தொடுத்து வலைசரத்தில் சூடிய விதம் அழகு :-).


    அறிமுகப்பதிவர்களுக்கு வாழ்த்துக்கள். என்னையும் இதில் சேர்த்ததுக்கு நன்றிகள் பல :-)

    ReplyDelete
  11. அக்கா... இவ்வளவு பூக்களையும் படங்களோட தர எவ்வளவு நேரம் செலவு பண்ணியிருப்பீங்க... பூவையரின் பதிவுகளும் அருமை. அதில எனக்கும் ஒரு இடம் இருக்கறதாப் பாத்ததும் துள்ளிக் குதிச்சிட்டேன். நன்றி... நன்றி... நன்றி...

    ReplyDelete
  12. அழகான பூக்கள்....... அருமையான விதத்தில் அறிமுகங்கள்...... நேரம் எடுத்து சிரத்தையாய் வலைச்சரப் பணி செய்யும் உங்களுக்கு, பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!
    என்னையும் அறிமுகப்படுத்தி இருப்பதற்கு மிக்க நன்றிங்க.

    ReplyDelete
  13. ஏகப்பட்ட பூக்கள் அறிந்து கொண்டேன்

    ReplyDelete
  14. மனம் கொள்ளை கொள்ளும் மலர்கள் .பகிர்வுக்கு நன்றி
    என்னையும் அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி

    ReplyDelete
  15. மாதங்களையும் மலர்களையும் பற்றி எழுதி பதிவர்களை அறிமுகப்படுத்துவது தனி அழகு! வாழ்த்துக்கள் சசிகலா!

    ReplyDelete
  16. எத்தனை வகையான பூக்கள்என்னையும் அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி

    ReplyDelete
  17. அத்தனை பதிவுகளும் மலர்ந்து மணம் பரப்பி மனம் மகிழ்விக்கின்றன்.. அனைவருக்கும் பாராட்டுக்கள்.

    //நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சந்நிதி ... அந்த சன்னதிகளின் சிறப்பை சிறப்பாய் சொல்லும் இராஜராஜேஸ்வரி

    அவர் வலைப்பக்கம் போனாலே ஒரு தெய்வீக மணம் வீசும்//

    மிகவும் அருமையாகவும் அழகாகவும் சொல்லியுள்ளீர்கள்.

    அந்த தெய்வீக மணத்தை மிகவும் விரும்பித்தான் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக தினமும் அவர்கள் பதிவுக்குச் சென்று என் கருத்துக்களை மகிழ்வுடன் பகிர்ந்து வருகிறேன்.

    நல்லதொரு அறிமுகத்திற்கு என் மனமார்ந்த ஸ்பெஷல் நன்றிகள்.

    ReplyDelete
  18. காந்தாள் மலரையும் அனிச்சை மலரையும் சங்க இலக்கியத்தில் தான் படித்திருக்கிறேன். பார்த்ததில்லை.

    முதல்முறையாக காணக் கொடுத்தமைக்கு மிக்க நன்றிங்க சசிகலா.

    ReplyDelete
  19. எத்தணை மலர்கள்..அத்தணை மலர்களின் மணம் குணங்களை அழகாக சரம் தொடுத்து வலைசரத்தில் தென்றல் சூட்டிய மாலை மிக அழகு..என் வலையை வருடி சென்ற தென்றலுக்கு பாராட்டுக்கள்!எமது பதிவை வலைசரத்தில் அறிமுகப்படுத்திய தென்றல் சசிக்கு நன்றிகள் பல..அறிமுகமாகியிருக்கும் அனைத்து தோழிகளுக்கும் பாராட்டுக்கள்!

    ReplyDelete
  20. பூக்களும், புன்னகையுமாய் அருமையான அறிமுகப் படைப்பு. அனைவருக்கும் வாழ்த்துக்கள்... எனது பதிவையும் பகின்றமைக்கு நன்றிகள்.

    உங்கள் பயணம் இனிதே தொடர வாழ்த்துக்கள். :)

    ReplyDelete
  21. மலரொன்று மலரெடுத்து,
    மலராலே மாலைதொடுத்து,
    மலராலே அலங்கரித்து,
    மங்கையர் படைப்புகளை,
    மணமாய்த் தந்தமைக்கு,
    மனம்கனிந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  22. மலர்களின் தொகுப்பை மிகவும் ரசித்தேன்...அறிமுகபடுத்திய அனைவருக்கும் வாழ்த்துக்கள்...என்னையும் அறிமுகபடுத்தியத்திற்க்கு மிக்க நன்றி சகோ!! தங்கள் பணி இனிதே தொடர வாழ்த்துக்கள்.....

    ReplyDelete
  23. சிறப்புற வலைச்சரபணியினை ஆற்றி வருவதற்கு பாராட்டுக்கள்.என் வலைப்பூவையும் பூக்களுடனும் பூவையுருடனும் இணைத்ததில் மகிழ்ச்சி.நன்றி!

    ReplyDelete
  24. பூக்களை பூக்களாய் அறிமுகபடுத்தி
    அதில் என்னையும் ஒன்றாய் தொடுத்த
    தோழி சசிக்கு நன்றி.....

    ReplyDelete
  25. இத்தனை பெண் பதிவர்களா இருக்காங்க ..?

    பதிவில் கடின உழைப்பு தெரிகிறது ..!

    ReplyDelete
  26. வெகு புதுவிதமாய் மலர்களையும் மலர் போன்ற வலைப்பூக்களையும் சொல்லி இருக்கிறீர்கள்.மிகுந்த உழைப்பு இந்தப் பதிவில் தெரிகிறது . என் வலைப்பூவை யும் அறிமுகப் படுத்தியது உங்கள் தன்மையைக் காட்டுகிறது. மிகவும் நன்றிமா. உங்கள் வலைச்சர வாரம் செழிக்க வாழ்த்துகள்.

    ReplyDelete
  27. மலர்களோடு மலர்களாய்ப்
    பின்னிவிட்ட வலைப்பூக்கள்!
    வண்ணப் படங்களாய் மலர்கள்!
    பதிவர்களின் எண்ணக் குவியல்கள்!
    கோர்க்கும் சரமாய் சின்னக் கவிதை!

    ReplyDelete
  28. அக்கா.... அழகிய பூக்களை பகிர்ந்து,
    இன்றைய சரத்தை அழகாக தொடுத்து இருக்கீங்க.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  29. பூக்களுடன் பூவையர் அறிமுகமா? புதியவர்கள் சிலர் இருக்கிறார்கள். அறிமுகப்படுத்தியமைக்கும். என்னை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி தோழி

    ReplyDelete
  30. எத்தனைவிதமான மலர்கள்!! படத்தோடு பார்க்கவே பரவசம்!!

    நானும் இந்தப் பூக்குவியலுக்குள் - பூக்களோடு சேர்ந்து மணக்கிறேன்!!

    மிகவும் நன்றி சசிகலா!!

    ReplyDelete
  31. மனம் வீசும் மலர்களுடன், குணம் பேசும் "வலைப்பூக்களின் மாலை" தொடுத்த விதம் அருமையிலும் அருமை!.

    ReplyDelete
  32. மலரோடு மலராய் என்னையும் மலராக்கி என் பதிவையும் அறிமுகப்படுத்திய சசி அக்காவிற்கு மிக்க நன்றி வாழ்க உங்கள் தமிழ் பணி.....

    ReplyDelete
  33. 31 பதிவர்களின் பதிவுகளோடு, வலைச்சரத்தில் வண்ண வண்ண பூக்களை அருமையாக
    தொ(கொ)டுத்து இருக்கிறீகள். படங்களும் அருமை.
    விளக்கமும் அருமை.

    ReplyDelete
  34. எருக்கம்பூ இவ்வளவு அழகாக இருக்குமா! சூப்பர். எனக்கு பிடித்த அனைத்து பதிவர்களையும் வரிசைப்படுத்தியுள்ளீர்கள். நன்றி.

    ReplyDelete
  35. அப்பப்பா பூக்களும் பூவையரும் என்று ஒரு தலைப்பு என்ன பொருத்தம் சசிகலா..கிட்டத்தட்ட எல்லாப் பூவையரும் கூடியுள்ளனர். இதிலே என்னையும் சேர்ததற்கு மனமார்ந்த நன்றி. மற்றைய பூவையருக்கும் நல்வாழ்த்து. தங்களது சிந்தனைக்கும் வாழ்த்து. எனது முகநூல் பக்கத்தில் வழமையாக வலைச்சரப் பக்கத்தைப் படமெடுத்துப் போடுவேன்.நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  36. அப்பப்பா பூக்களும் பூவையரும் என்று ஒரு தலைப்பு என்ன பொருத்தம் சசிகலா..கிட்டத்தட்ட எல்லாப் பூவையரும் கூடியுள்ளனர். இதிலே என்னையும் சேர்ததற்கு மனமார்ந்த நன்றி. மற்றைய பூவையருக்கும் நல்வாழ்த்து. தங்களது சிந்தனைக்கும் வாழ்த்து. எனது முகநூல் பக்கத்தில் வழமையாக வலைச்சரப் பக்கத்தைப் படமெடுத்துப் போடுவேன்.நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  37. இத்தனை பூக்களின் அணிவகுப்பை பார்த்ததில் பெருமகிழ்ச்சி. பூவையரின் படைப்புகளையும் அழகாகத் தொகுத்து அறிமுகப்படுத்தி அசத்திட்டீங்க தென்றல்! வலைச்சரத்தில் தனியாய் மிளிர்கிறீர்கள்! மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் அறிமுகம் பெற்ற அனைவருக்கும்!

    ReplyDelete
  38. அருமை தென்றல் தொகுப்பில் பூவும் அதன் பின்னே தோழிகளின் பதிவுகளும் நல்ல சிந்தனை!

    ReplyDelete
  39. என் வலைப்பதிவை இன்று அறிமுகம் செய்திருக்கும் தங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி!!

    ReplyDelete
  40. பூக்களை வரிசைப்படுத்தி பூவையரின் அணிவகுப்பு அருமை...
    உங்கள் மெனக்கெடல் பிரமிக்க வைக்கிறது. வாழ்த்துக்கள்...
    அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  41. பூக்களோடு எங்களையும் சேர்த்து பெருமைப்படுத்திவிட்டீர்கள் சசி.வாசனையோடு நானும்.சந்தோஷம்.அத்தனை பதிவாளர்களும் அற்புதப் படைப்பளர்கள்.நீங்கள் தந்த பூக்களில் அனிச்சம் பூவும்,சம்பங்கிப் பூவும் நான் கண்டதில்லை.நன்றி சசி !

    ReplyDelete
  42. அருமையான பதிவுகளை
    மிக அருமையாக அறிமுகப் படுத்தியுள்ளீர்கள்
    ரசித்துப் படித்தேன்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  43. எனது பதிவினை இங்கே பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள்..
    சக பதிவர்களுக்கும்,
    ஆசிரியர் பொறுப்பேற்றிருக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
    :))

    ReplyDelete
  44. பூக்களோடு ஒரு பூவையைர் நந்தவனத்தை அறிமுகம் செய்து இருக்கிறீர்கள் அதில் நானும் ஒன்றாய் மலர்ந்ததில் மகிழ்ச்சி சசி

    ReplyDelete
  45. ஆஹா..... பூக்களின் மணம் தூக்கியடிக்குது!

    வலைச்சர ஆசிரியருக்கு நல்வரவு.

    தாமதமான வருகைக்கு மன்னிப்பு ப்ளீஸ்.....

    ReplyDelete
  46. பூவையரின் அறிமுகம் பூக்களின் அறிமுகத்தோடு அசத்தல் சசிகலா. பலருடைய வலைத்தளம் பழகியதென்றாலும் சமீபகாலமாக நேரமின்மையால் தவிர்த்து வந்துள்ளேன். இனியேனும் தவறாமல் படித்துப் பயன்பெறவேண்டும். கீதமஞ்சரியின் அறிமுகத்துக்கும் மிகவும் நன்றி சசி.

    ReplyDelete
  47. Jaleela Kamal...
    தங்கள் உடன் வருகையும் உற்சாகமளிக்கும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    இராஜராஜேஸ்வரி....
    வருகை தந்து சிறப்பித்தமைக்கு எனது நன்றியை தெரிவிப்பதுடன் . நலம் அறியா ஆவலோடு காத்திருக்கிறேன் .

    G.M Balasubramaniam...
    வருகை தந்து சிறப்பித்தமைக்கு நன்றி . காத்திருக்கிறோம் பதிவிற்காக .

    ReplyDelete
  48. Lakshmi ....
    வருகை தந்து சிறப்பித்தமைக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .

    செய்தாலி ....
    அழகான கவிதை வரிகளால் உற்சாகமளித்த சகோவிர்க்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .

    ReplyDelete
  49. ராமலக்ஷ்மி ...
    வருகை தந்து சிறப்பித்ததோடு அல்லாமல் வாழ்த்தவும் செய்த சகோதரிக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .
    ஜெய்லானி...
    வருகை தந்து சிறப்பித்ததோடு அல்லாமல் வாழ்த்தவும் செய்த சகோதரிக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .
    Chitra...
    வருகை தந்து சிறப்பித்ததோடு அல்லாமல் வாழ்த்தவும் செய்த சகோதரிக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .

    ReplyDelete
  50. நிரஞ்சனா...
    ஆமாம் சகோ வந்து கொஞ்சம் உதவி இருக்கலாம் இல்ல . நன்றி மா .

    மனசாட்சி™ ...
    வருகை தந்து வாழ்த்தியமைக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .
    angelin...
    வருகை தந்து வாழ்த்தியமைக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .

    ReplyDelete
  51. கவிப்ரியன்...
    வருகை தந்து வாழ்த்தியமைக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .
    மாலதி ...
    வருகை தந்து சிறப்பித்தமைக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .

    வை.கோபாலகிருஷ்ணன் ...
    வருகை தந்து வாழ்த்தியமைக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .

    AROUNA SELVAME ...
    வருகை தந்து வாழ்த்தியமைக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .

    ReplyDelete
  52. ராதா ராணி ...
    வருகை தந்து சிறப்பித்து வாழ்த்தியமைக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .

    Ananthi (அன்புடன் ஆனந்தி)...
    வருகை தந்து சிறப்பித்து வாழ்த்தியமைக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .

    d.g.v.p Sekar...
    வருகை தந்து சிறப்பித்து வாழ்த்தியமைக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .

    ReplyDelete
  53. S.Menaga...
    வருகை தந்து வாழ்த்தியமைக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .

    ஸாதிகா ...
    வருகை தந்து வாழ்த்தியமைக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .

    அகிலா...
    வருகை தந்து வாழ்த்தியமைக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .

    வரலாற்று சுவடுகள் ...
    வருகை தந்து வாழ்த்தியமைக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .

    ReplyDelete
  54. வல்லிசிம்ஹன்...
    வருகை தந்து சிறப்பித்து வாழ்த்தியமைக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .

    தி.தமிழ் இளங்கோ ....
    அழகிய கவிதை வரிகளால் வாழ்த்தியது கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .

    தமிழ்வாசி பிரகாஷ்...
    வருகை தந்து வாழ்த்தியமைக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .

    ராஜி...
    வருகை தந்து வாழ்த்தியமைக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .

    ஹுஸைனம்மா...
    வருகை தந்து சிறப்பித்து வாழ்த்தியமைக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .

    Syed Ibramsha ...
    வருகை தந்து வாழ்த்தியமைக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .

    ReplyDelete
  55. எஸ்தர் சபி ...
    வருக சகோதரி தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    வே.நடனசபாபதி...
    வருகை தந்து வாழ்த்தியமைக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .

    விச்சு...
    வருகை தந்து வாழ்த்தியமைக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .

    kovaikkavi...
    வருக சகோதரி தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  56. கணேஷ் ...
    வருகை தந்து வாழ்த்தியமைக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .

    தனிமரம்...
    வருகை தந்து வாழ்த்தியமைக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .

    மனோ சாமிநாதன் ...
    வருகை தந்து வாழ்த்தியமைக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .

    சே. குமார்...
    வருகை தந்து வாழ்த்தியமைக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .

    ReplyDelete
  57. ஹேமா ...
    வருக சகோதரி தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .

    Ramani ...
    ஐயா தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி ஐயா .

    Seeni ...
    வருகை தந்து வாழ்த்தியமைக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .

    இந்திரா...
    வருக சகோதரி தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .

    கோவை மு.சரளா...
    வருக சகோதரி தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .

    துளசி கோபால் ...
    வருகை தந்து வாழ்த்தியமைக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .

    ReplyDelete
  58. "பூக்களும் பூவையரும்" என மனம் கவர்ந்த மலர்களின் தொகுப்பு அருமை.

    சின்னுரேஸ்ரியின் அறிமுகத்துக்கு மகிழ்ச்சி.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  59. அனுஜன்யா பெண் பதிவரா? :))

    ReplyDelete
  60. @துளசி டீச்சர் - உங்களுக்குக்கூடவா அனுஜன்யா அண்ணனைத் தெரியாது!!

    ReplyDelete
  61. @அப்துல்லா,

    அனுஜன்யாவை மட்டுமல்ல, ஜெய்லானியையும் பெண் பதிவர் என்றே நினைத்து குறிப்பிட்டுள்ளார். ஒருவேளை அவர்கள் தங்கள் வலைப்பூவில் தங்களைப் பற்றிய விவரக்குறிப்பு எதுவும் கொடுக்காதிருந்திருக்கலாமாயிருக்கும்.பெயரை வைத்து பெண்கள் என அனுமானித்திருப்பார். இது என்ன அவ்வளவு பெரிய குற்றமா - துளசி டீச்சரையெல்லாம் பஞ்சாயத்து வைக்க கூப்பிடுமளவுக்கு? :-)))))))

    ReplyDelete
  62. புதுகை.அப்துல்லா..
    மன்னிக்கவும் உண்மையில் பெயரை வைத்தே பெண் என்று நினைத்துவிட்டேன் மீண்டும் மன்னிக்கவும் . நேரமின்மை காரணமாக முழுவிவரம் தேட முடியவில்லை .

    ReplyDelete
  63. தாமதமான நன்றி நவிலல். இன்றுதான் என் வலைப்பூவில் நுழைந்தேன். தங்கள் பதிவைப் பார்த்தேன். ஓடோடி வந்தேன். நன்றி கூற.

    பூக்களில் இத்தனை பூக்களா? அவைகளில் இத்தனை குணங்களா என்று வியந்து நிற்கையில் வலைப்பூக்களிலும் இத்தனை வகைகள் என்று அவற்றை பல்லாயிரக்கணக்கான கண்களுக்கு அறிமுகப்படுத்திய அன்புக்கு மனமார்ந்த நன்றி சசிகலா அவர்களே.

    ReplyDelete
  64. Nice.. all are thanks to VALAICHARAM & Mrs.SASI

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது