07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, May 12, 2012

சமூகம், அறிவியல் மற்றும் சில

இந்த வார வலைச்சரம் முடிய இன்னும் ஒரு தினமே இருக்கும் நிலையில் இன்று நாம் சமூகம், அறிவியல் மற்றும் வேறு சில இடுகைகளை மட்டும் இங்கே பார்ப்போம்.

மக்களின் வாழ்வை சிதைக்கும் லாட்டரியின் அடுத்த பரிமாணமாக தொலைக்காட்சிகளில் நடக்கும் மோசடியை அலசுகிறது கிராமத்து காக்கையின் பதிவு.

சுதந்திரம் என்றால் உங்களுக்கு என்ன நினைவிற்கு வரும்? அதை மனதில் வைத்துக் கொண்டு, சுதந்திரம் பற்றிய சாமானியர்களின் எண்ணங்களை பதிவு செய்யும் கழுகின் பதிவை படியுங்கள்.

அறிவியலின் இன்னொரு முகத்தை பதிவு செய்கிறது சகோதரர் ஆஷிக் அஹ்மத் அவர்களின் மனித Zoo பற்றிய பதிவு.

ஆரோக்கியமான இளநீரை விட  வெளிநாட்டுக்காரன் பாட்டிலில் வைத்து தரும் ஆரோக்கியமற்ற பானங்களைத் தான் அதிகம் விரும்புகிறோம். அதுபோன்ற குளிர்பானங்களை அருந்துவதால் ஆஸ்துமா வரும் என்கிறார் நண்பர் துரை டேனியல் அவர்கள்.

அதிக நேரம் அமர்வதால் வரும் பிரச்சனை பற்றி கூறுகிறார் சகோதரர் முஹம்மது ஆஷிக் அவர்கள்.

நம்மில்  அதிகமானோர் ரெயிலில் பயணம் செய்திருப்போம். ஆனால் ரெயில் என்ஜினில் எழுதியிருக்கும் எழுத்துக்களை கவனித்திருக்கிறோமா? அதன் விளக்கத்தை வண்டி... வண்டி... ரயில் வண்டி என்ற பதிவில் பகிர்கிறார் நண்பர் அருண் பழனியப்பன் அவர்கள்.

குழந்தைகளைக் கவர்ந்த சூப்பர் ஹீரோக்களில் ஒருவர் சூப்பர் மேன். அவர் திரையில் மட்டுமல்ல நிஜத்திலும் சூப்பர் மேன் தான் என்கிறது நண்பர் சிலம்பு அவர்களின் வரலாற்று பதிவு.

நாம் பயன்படுத்தும் தண்ணீர் பாட்டிலில் மர்ம எண்கள் குறித்து  விளக்கம் அளிக்கிறார் நண்பர் கூடல் பாலா அவர்கள்.

வியாதிகளை குணப்படுத்தும் தண்ணீரின் சிறப்புகளைப் பகிர்கிறார் நண்பர் உழவன் ராஜா அவர்கள்.

தேனிக்களைப்  பற்றிய ஆய்வினை பகிர்கிறார் நண்பர் கலாகுமரன் அவர்கள்.

பார்வையற்றோர் உலகுக்கு பார்வை தந்த பார்வையற்றவர் பற்றி பகிர்கிறார் சகோதரர் ஹைதர் அலி அவர்கள்.

நாம் வீசியெறியும் பிளாஸ்டிக் பைகள் நமக்கே ஆபத்தை விளைவிப்பதை அலசுகிறது நண்பர் ஈரோடு கதிர் அவர்களின் திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் என்ற பதிவு.

பிளாஸ்டிக் பற்றிய தகவல்களை பகிர்கிறார் நண்பர் பாண்டியன் அவர்கள்.

பசுமை ஆற்றல் பற்றி விளக்குகிறது பசுமை விடியல் தளம்.

அடுத்த பதிவிற்கான ட்ரைலர்:

"ஓர் சொல்லில் கவிதை"

இறைவன்  நாடினால் அடுத்த பதிவில் சந்திப்போம்!

- ப்ளாக்கர் நண்பன் (எ) அப்துல் பாஸித்

18 comments:

 1. அருமையான அறிமுகங்கள். பசுமை விடியலின் பதிவை அறிமுகம் செய்தமைக்கு நன்றி சகோ.

  ReplyDelete
 2. nalla arimukangal!
  vaazhthukkal!

  ReplyDelete
 3. நல்ல தொகுப்பு.கழுகின் பதிவை குறிப்பிட்டதற்கு நன்றி..!!

  ReplyDelete
 4. அறிமுகங்கள்... நன்றி.

  ReplyDelete
 5. சிறப்பான அறிமுகங்கள் .,

  தலைசிறந்த பதிவர்களுக்கு மத்தியில் இடையே என்னுடைய பதிவையும் குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி நண்பா,

  இனிமையாய் தங்கள் வலைச்சர ஆசிரியர் பணியை நிறைவு செய்ய வாழ்த்துக்கள் ..!

  ReplyDelete
 6. நல்ல அறிமுகங்கள், அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 7. படிக்க வேண்டிய பதிவுகள்

  நன்றி நண்பா

  ReplyDelete
 8. நன்றி நண்பர் பாசித்!

  ReplyDelete
 9. அருமையான அறிமுகங்கள் ...

  ReplyDelete
 10. super collection நண்பரே.

  ReplyDelete
 11. அஸ்ஸலாமு அலைக்கும்...

  சிறப்பாக செயல்படுகிண்றீர்கள். என் பதிவையும் அறிமுகபடுத்தியதற்கு நன்றி பாசித்

  ReplyDelete
 12. சமூக சிந்தனைகள் பதியப்பட வேண்டும் நண்பா..


  அனைவருக்கும் வாழ்த்துக்கள்....

  இந்த வாரம் தங்கள் இடுகைகளை தொடர இயலவில்லை.... கொஞ்சம் பிஸி நண்பா.......

  ReplyDelete
 13. மிகவும் அருமையான அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ஜலீலாகமால்

  ReplyDelete
 14. அருமை. நிறைய நல்ல வலைப்பூக்களை சரமாக தொடுத்திருக்கிறீர்கள். குறிப்பாக 'பசுமை விடியல்..'

  நன்றி நண்பரே..!

  ReplyDelete
 15. எனது ரயிலைப் பற்றிய பதிவை அறிமுகம் செய்தமைக்கு நன்றி நண்பரே..
  அனைத்து பதிவுகளும் அருமை!

  ReplyDelete
 16. சிறப்பான அறிமுகங்கள்..நண்பா..

  தலைசிறந்த பதிவர்களுக்கு மத்தியில் என்னையும் ஒரு பதிவராக மதித்து அறிமுகப்படுத்தியதற்கு நன்றி தோழா...

  ஆசிரியர் பணியை சிறப்பாக செய்து முடித்தமைக்கு வாழ்த்துகள் நண்பா..

  ReplyDelete
 17. ஒரு நல்ல ஆசிரியர் மாணவர்களை சிறப்பாக வழி நடத்துவது அது போல ஒவ்வொருவரின் பதிவுகளை பட்டியலிட்டு நல்ல அறிமுகம் செய்துள்ளீர்கள் அப்துல் பாஸித்,நன்றி!!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது