07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, May 6, 2012

வாரேன்... நான் வாரேன்... போய் வாரேன்...!

அ‌னைவருக்கும் வணக்கம்!

பா.கணேஷாகிய நான் வலைச்சரப் பொறுப்பை நிறைவு செய்யும் தினம் இன்று. ஆகவே எந்த ‘ஜோடி’யையும் அழைக்காமல் நானே வந்திருக்கிறேன். இன்று நான் விரும்பிப் படிக்கின்ற சில தளங்களை உங்களுககுச் சொல்கிறேன். இவர்களில் சிலர் உங்களுக்குப் புதியவர்களாகவும், சிலர் தெரிந்தவர்களாகவும் இருககலாம். ஆனால் இந்தத் தளங்கள் எல்லாமே ரசனைக்குரியவை என்பதில் எனக்கு ஐயமில்லை.

ஆன்மீகத்தின் அருஞ்சுவையைப் பருக விரும்புகிறீர்கள் என்றாலும் சரி... வாத்தியார் சுஜாதாவைப் பற்றியும் அவரின் படைப்புலகைப் பற்றியும் நிறையப் படித்தறிய விரும்பினாலும் சரி... பாலஹனுமான் என்ற என் நண்பரின் தளம் உங்களுக்கு உதவும்.

அழகாகக் கவிதை எழுதுகிறார் யுவராணி தமிழரசன். படித்தால் பிடித்துப் போகும் இவரது தளம்.

இவரும் கவிதைகளால் தளத்தை நிரப்பியிருப்பவர். பெயரிலேயே சீனியை வைத்திருப்பதாலோ என்னவோ இனிக்கின்றன கவிதைகள்.

என்.சொக்கன் எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். இவரது தளமும் படித்தால் பிடிக்கும் எனகிற ரகம்தான். படித்துப் பாருங்கள்.

இவர் மதுரை சொக்கன். திருமூலரின் திருமந்திரத்திலிருந்து ஆன்மீகக் கருத்துககளை மழையெனப் பொழிந்து தாகம் தீர்த்து வருகிறார்.

இவரது தளத்தில் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் கொட்டிக் கிடககின்றன. அ.குரு என்கிற இவர் பள்ளியில் எத்தனையோ மாணவர்களுக்குக் குரு.

அடுத்தவர் பெயர் சீனுகுரு. சிறுகதைகளும், கட்டுரைகளும் சுவாரஸ்யமாய் எழுதி வருகிறார்.

குருச்சந்திரன் என்கிற இவர் தன் தளத்தில் குறுங்கவிதைகளும் நெடுங்கவிதைகளுமாக ரவுண்டி கட்டி அடித்து வருகிறார்.

சந்தோஷ் என்கிற இவரது தளத்திற்கு ஒருமுறைதான் விஸிட் அடி்த்திருககிறேன். அந்த ஒரு இடுகையே என் கருத்துககளோடு ஒத்துப் போவதால் மிகப் பிடித்திருந்தது. நீஙகளும் படித்துப் பாருங்கள்...

arouna-selvame என்கிற இவரது பெயரை எப்படி உச்சரிப்பது என்று தெரியவில்லை. சுவாரஸ்யமான பதிவுகள் இவருடையவை.

சமுத்ரா வழங்கி வரும் கலைடாஸ்கோப் எப்போதுமே ரசனைக்கு விருந்து எனக்கு. நீங்களும் ருசித்துப் பாருங்கள்.

மிடில்கிளாஸ் மாதவி இப்போது குறைவாகத்தான் எழுதுகிறார். ஆனால் நிறைவாக எழுதுபவர் இவர்.

கீதமஞ்சரியின் எழுத்துக்களில் காணப்படும் முதிர்ச்சியும், தெளிவான சிந்தனையோட்டமும் எனக்கு மிக உவப்பானவை.

ஸ்ரீரங்கத்துககாரரான ரிஷபன் எழுதும் கவிதைகளும் சரி, சிறுகதைகளும் சரி... மனதைப் பறித்துக்‌ கொள்ள வல்லவை.

அப்பாத்துரை ஸார் என்னைப் பொறுத்த வரை வலையுலகில் இன்று உலவும் இன்னொரு சுஜாதா என்பேன்.

எப்போதும் ஏற்றமிகு சிந்தனைகளை வழங்கி என்னையும் என்னைப் போல பலரையும் மேம்படுத்தி வருபவர் ரமணி ஸார்.

பிரதிபலனை எதிர்பார்த்தே உதவும் இவ்வுலகில் எந்தப் பிரதிபலனும் இல்லாமல் பல பயனுள்ள மென்பொருட்களையும், விளையாட்டுகளையும், தகவல்களையும் வழங்கி வருபவர் நண்பர் வேலன்.

மகேந்திரன் கட்டியிருக்கும் வசந்த மண்டபத்திற்குச் சென்றீர்கள் என்றால் அழகிய அன்னைத் தமிழ் உங்களுக்கு ஆறுதலையும், மகிழ்வையும் அளிக்கும்.

ன் வலைச்சரப் பயணத்தில் நான் ரசித்த பதிவுகளை உங்களுக்கு இதுவரை அறிமுகம் செய்தேன். நான் பார்ககத் தவறிய, பார்க்க வேண்டிய நல்ல பதிவுகள் பல இருக்கும். அவர்கள் திறமையில் குறைந்தவர்கள் என்று பொருளல்ல. எனக்கு சமயம் போதவில்லை, கவனம் போதவில்லை என்பது தான் குறையாக இருக்கு்ம். அவர்கள் அனைவருக்கும் என் வந்தனம்.

இந்தச் செயலை நான் சரியாகச்‌ செய்து முடிப்பேன் என்று நம்பிக்கை வைத்து என்னிடம் பொறுப்பைத் தந்த சீனா ஐயா அவர்களுக்கும், நண்பன் தமிழவாசி பிரகாஷுக்கும் என் இதயம நிறைந்த நன்றி!

சங்க இலக்கியத்துல ஒரு பாடலில் தலைவன் தன் ‌தலைவியைப் பற்றிச் சொல்லும் போது ‘வினை முடித்தன்ன இனியள்’ என்று சொல்வதாக வரும். ஒரு பொறுப்பை எடுத்துக் கொண்டு அதை நன்கு முடித்தால் என்ன திருப்தி வருமோ, அத்தனை இனியவள் என் காதலி என்று பொருள். உங்கள் அனைவரின் ஆதரவோடு அப்படி வினை முடித்ததால் வந்த திருப்தி எனக்குள் இப்போது இருக்கிறது.

இறுதியாக, ஆனால் உறுதியாக ஒன்று... இயக்குனர் எவ்வளவு பாடுபட்டு எடுத்தாலும் ரசிகர்கள் பார்த்து ரசிக்காவிட்டால் அந்த சினிமாவால் என்ன பிரயோஜனம்? நான் வலைச்சரத்திலோ என் தளத்திலோ எவ்வளவு எழுதினாலும் நீங்களெல்லாம் படித்து ரசித்தால்தானே அவற்றுக்கு மதிப்பு? அப்படி பூஜ்யமாக இருக்கும் எனக்கு முன்னால் எண்களாக நின்று மதிப்பு சேர்க்கும் உங்கள் அனைவருககும்...


                               இதயத்தின் அடியாழத்திலிருந்து என் நன்றி!

48 comments:

 1. நிறைவைத் தரும் நிறைவுரை. "வாரேன்.....நான் வாரேன்..." ஒரு பழைய பாடல் ஞாபகம் இருக்குமே கணேஷ் உங்களுக்கு.... டி எம் எஸ் ஒரு பெண் குரலுடன் பாடிய எம் ஜி ஆர் படப் பாடல்! "வாரேன்...." அடுத்து பெண் குரல் பாடும் வரியை இப்போது நான் (நாங்கள்) பாடுகிறோம்....."வழி காத்திருப்பேன்....(போம்)!"...

  ReplyDelete
 2. இன்று அறிமுகம் செய்திருக்கும் தளங்கள் எல்லாமே அருமையான தளங்கள். அப்புறம் ஒரு விஷயம்....அப்பாதுரை மீது இருக்கும் அதிக அன்பினால் அவர் பெயரை அவருக்கு வலிக்குமளவுக்கு அழுத்தமாக உச்சரிக்கிறீர்கள் போலும்! :)))))

  ReplyDelete
 3. நிறைவான நிறைவுப்பகுதிக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 4. இந்த வாரம் முழுவதும் ஒவ்வொரு நாளும் வலைச்சரத்தில் சிக்ஸர்கள் அடித்து, பெருவாரியான ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுவிட்டீர்கள். வாழ்த்துகள்.

  ReplyDelete
 5. உங்களை ஒரு வாரமென்ன ஒரு மாதம் கூட வலைச்சர ஆசிரியராக பணியாற்ற சொல்லலாம்! அப்பப்பா! எத்தனை பதிவுகள். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு கதைகள் மூலம் பதிவுகளை அறிமுகப்படுத்திய முறையே புதுமை. பிடியுங்கள் பாராட்டை!!

  ReplyDelete
 6. கணேஷ் அண்ணே,

  இவ்வாரம் உங்களின் தனித்தன்மையுடன் , முழுதும் மிக ரசனையான நடையில் பலதரப்பட்ட பதிவர்களையும், பதிவுகளையும் அறிமுகப்படுத்திய விதம் மிகச்சிறப்பாக இருந்தது.

  பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

  ReplyDelete
 7. வித்தியாசமாக சுவாரஸ்யமாக சிறப்பாக இருந்தது வலைச்சர வாரம். மனமார்ந்த பாராட்டுகள்!

  ReplyDelete
 8. பல நல்ல பதிவாளர்களை அறிமுகப்படுத்தி மிக நல்ல ஆசிரியாராக பணிபுரிந்த் உங்களுக்கு இந்த மாணவனின் நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. சுவாரஸ்யமா அருமையா இருந்தது வலைச்சர வாரம். அடுத்த வாரத்துக்கும் உங்களையே ஆசிரியரா பணியாற்றச் சொன்னா நல்லாத்தான் இருக்கும் :-)

  சிறப்பான அறிமுகங்கள்..

  ReplyDelete
 10. வித்தியாசமான பதிவுகள்... பாராட்டுக்களும் நன்றியும்.

  ReplyDelete
 11. சிறப்பாக பணியை முடித்த தங்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. //இவர்களில் சிலர் உங்களுக்குப் புதியவர்களாகவும், சிலர் தெரிந்தவர்களாகவும் இருககலாம். ஆனால் இந்தத் தளங்கள் எல்லாமே ரசனைக்குரியவை என்பதில் எனக்கு ஐயமில்லை.//

  இந்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரனாக என்னையும் சேர்த்து இருப்பது ஏதோ வானத்தில் பறவையாய் பறப்பது போன்ற உணர்வு தருகிறது. ஒன்றின் மீது வெளிச்சம் படாதவரை அது இன்னதென்று தெரியாது, அது போல் இவ்வளவு பெரிய உலகில் எதோ ஒரு மூலையில் உட்கார்ந்து எழுதி வரும் என்னை அறிமுகம் செய்து வைத்ததற்கு நன்றி என்ற ஒரு சொல் மட்டும் போதாது.

  எழுத்தில், எழுத்து ஓட்டத்தில் பிழை ஏற்படும் பொழுது அதை குறையாக கூறாமால் இப்படி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தட்டிக் கொடுக்கும் உங்களை ஒரு நல்ல ஆசானாக குருவாகவே பார்கிறேன்.

  வணக்கங்கள் சின்ன வாத்தியாரே...

  ReplyDelete
 13. வலைசரத்தை அறிமுகம் செய்து வைத்தது தாங்கள் தான் இனி தவறாது தொடர்கிறேன். இங்கு இதுவரை நீங்கள் செய்து வந்த ஆசிரியர் பணி முடிரிலும் வித்தியாசமான பாணி என்பதை புரிந்து கொண்டேன். அதற்கு முதல் வாழ்த்துக்கள்.

  //பூஜ்யமாக இருக்கும் எனக்கு முன்னால் எண்களாக நின்று மதிப்பு சேர்க்கும் உங்கள் அனைவருககும்...// இந்த அருமையான தன்னடக்கம் தான் உங்களை மென்மேலும் வளரச் செய்கிறது. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
 14. ஏற்றுக்கொண்ட பணியை சீராகவும் சிறப்பாகவும் நிறைவு செய்திருக்கிரீர்கள். பாராட்டுக்கள் வாழ்த்துகள்.

  ReplyDelete
 15. நல்ல அறிமுகங்கள்..இதில் சிலரை நான் அறிந்தது இல்லை சார்..மிக்க நன்றி.

  ReplyDelete
 16. சிறப்பானதொரு பணியை ஆற்றிய உங்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்..
  நன்றி..

  ReplyDelete
 17. உண்மையை சொல்லுவதென்றால் கலக்கீட்டீங்க பாஸ் ..!

  ReplyDelete
 18. என்னைக் குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி - சொன்ன கருத்துக்கும்!! :-))

  ReplyDelete
 19. இங்கே என்னுடைய வலைப்பதிவைச் சிபாரிசு செய்தமைக்கு நன்றி நண்பரே,

  : என். சொக்கன்,
  பெங்களூரு.

  ReplyDelete
 20. வணக்கம் சார், வாரம் முழுதும் இதழ்களின் ஹீரோக்களை வைத்து பதிவுகளை தொடுத்தது வித்தியாசமான முயற்சி.

  வாழ்த்துக்கள் சார்.....

  ReplyDelete
 21. கதைகளினூடே பதிவுகளை அருமையாக தொகுத்தீர்கள்! வாழ்த்துக்கள் நண்பரே!

  ReplyDelete
 22. @ ஸ்ரீராம். said...

  ‘உழைக்கும் கரங்கள்’ படத்துல வர்ற அந்தப் பாட்டு எனக்கும் ரொம்பப் பிடிச்சதாலதானே ஸ்ரீராம் தலைப்புலயே வெச்சேன்... அட, நீங்க சொல்றது நெசம்தான். அழுத்தமாத்தான் உச்சரிச்சுட்டனோ.. ஆனா அன்பு நிறைய இருக்கு மனசுல... நன்றி!

  @ இராஜராஜேஸ்வரி said...

  வாரம் முழுதும் உடனிருந்து என்னை உற்சாகப்படுததிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

  @ kg gouthaman said...

  நிறைவான பணி செய்தேன் என்று மகிழ்வுதரும் கருத்தினைச் சொன்ன தங்களுக்கு மனம் நிறைய நன்றி!

  @ வே.நடனசபாபதி said...

  உங்கள் மனதில் இந்த வாரம் இடம் பெற்றதில் மனமகிழ்வு கொண்டு, தங்களுக்கு என் இதய நன்றி!

  @ சத்ரியன் said...

  என்னைப் பாராட்டி வாழ்த்திய தம்பி சத்ரியனுக்கு என் இதயம் நிறை நன்றி!

  ReplyDelete
 23. நிறைவுப் பதிவும் நிறைவாக உள்ளது!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 24. @ ராமலக்ஷ்மி said...

  வித்தியாசமாக இருந்தது என்று பாராட்டிய தங்களுககு என் உளம் கனிந்த நன்றி!

  @ Avargal Unmaigal said...

  ‘சரியாத்தான் செய்யுறமா’ன்னு பயந்து கொண்டே பணி செய்த எனக்கு நல்லாசிரியர் எனச் சொல்லி ஊக்கம் தந்த நண்பனுக்கு மகிழ்வுடன் என் நன்றி!

  @ அமைதிச்சாரல் said...

  உங்களின் தொடர்ந்த ஆதரவிற்கும், கருத்துக்களுக்கும் என் இதயம் நிறை நன்றி!

  @ அப்பாதுரை said...

  நான் உற்சாகமுடன செயல்பட நீங்களு்ம் ஒரு காரணம். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

  @ விச்சு said...

  சிறப்பாக செய்தேன் என்ற உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி விச்சு!

  ReplyDelete
 25. அனைவரையும் அழகான முறையில் அறிமுகப்படுத்தி இருக்கீஙக்

  வாழ்த்துகக்ள்

  ReplyDelete
 26. @ seenuguru said...

  வலைச்சர அறிமுகத்திற்காய் மகிழ்ந்தைக் கண்டு நானும் மகிழ்கிறேன் சீனு. தலைக்கனம் இருக்கு்ம் இடத்தில் வளர்ச்சி இருக்காது. தன்னடக்கமே உயர்வுதரும். என் உடன் வரும் உங்களுக்கு என் இதய நன்றி!

  @ Lakshmi said...

  சீராக, செம்மையாக செய்தேன் என்று மகிழ்வு தரும் வார்த்தைகளால் பாராட்டிய உங்களுக்கு மனம் நிறைய நன்றி!

  @ Kumaran said...

  அப்படியா? ஒரு முறை சென்று அனைவரையு்ம் படித்து மகிழுங்கள் குமரன். மிக்க நன்றி!

  @ மதுமதி said...

  என் வளர்ச்சியில் மகிழ்பவரும, உடன் வருபவரும் ஆன உங்களுக்கு மனநெகிழ்வோடு கூடிய என் நன்றி!

  @ வரலாற்று சுவடுகள் said...

  வாரம் முழுவதும் உடனிருந்து உற்சாகம் தந்த உங்களுக்கு உளம்நிறை நன்றி நண்பா!

  ReplyDelete
 27. @ middleclassmadhavi said...

  நான் மிக ரசிப்பவர்களில் ஒருவரான நீங்கள் இந்த வலைச்சர வாரத்தில் என்னை ஊககப்படுத்தியது நினைவில் பசுமையாய் இருக்கும். உங்களுக்கு என் இதய நன்றி!

  @ Naga Chokkanathan said...

  பல புத்தகங்களிலும், உங்கள் தளத்திலும் உங்கள் எழுத்தை ரசித்து வருபவன் நான். சமீப காலமாய் கருத்திட மட்டும்தான் இயலவில்லை. மற்றபடி நான் தொடர்ந்து படித்து மகிழும் தளம் உங்களுடையது. உங்கள் தளத்தைப் பற்றிப் பேசியதில் எனக்குத்தான் ‌பெருமை.

  @ தமிழ்வாசி பிரகாஷ் said...

  நான் சோர்வு அடையாதபடி பாராட்டு இன்ஜெக்ஷனைப் போட்டு உற்சாகமாகச் செயல்பட வைத்த உஙகளுக்கு என் மனமார்ந்த நன்றி நண்பா!

  @ Abdul Basith said...

  நண்பன் அப்துல் பாஷித்திற்கு மனமகிழ்வுடன் கூடிய என் நன்றி!

  @ புலவர் சா இராமாநுசம் said...

  உங்களைப் போன்றோரின் அன்பும் ஆசியும் துணையிருக்க என்ன கவலை எனக்கு? தங்களுக்கு என் இதய நன்றி ஐயா!

  @ Jaleela Kamal said...

  ரசித்துப் பாராட்டி உங்களுக்கு என் உளம்கனிநத் நன்றி சிஸ்!

  ReplyDelete
 28. கணேஷ் என்னையும் உங்களுக்கு பிடித்த பதிவர் பட்டியலில் சேர்த்துக்கொண்டதற்கு மிக்க நன்றி

  ReplyDelete
 29. சிறப்பானதொரு பணி ஆற்றிய உங்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்..

  ReplyDelete
 30. ஃப்ரெண்ட்.....இன்னும் ஒரு வாரம் கூடுதலாக வலைச்சரப்பணி தந்திருந்தா சந்தோஷமா இருந்திருக்குமோன்னு இருக்கு.அவ்வளவு கலகலவெண்டு போச்சு.மகிழ்ச்சி கணேஸ்.பிடியுங்க சொக்லேட் !

  அத்தனை அறிமுகங்களும் எனக்கு ஓரளவு அறிமுகமானவர்கள்தான்.சிறப்பான பதிவாளர்கள்.வாழ்த்துகள் !

  ReplyDelete
 31. @ santhosh said...

  உங்களின் வருகை தந்தது மகிழ்வு. உங்களுக்கு என் இதய நன்றி!

  @ சசிகலா said...

  சிறப்பான பணி என்று பாராட்டிய என் தோழி தென்றலுக்கு மகிழ்வுடன் கூடிய என் நன்றி!

  @ ஹேமா said...

  ஆஹா... பாராட்டுக்களுடன் எனக்குப் பிடித்த சொக்லேட்டும்! மிக்க நன்றி ஹேமா!

  ReplyDelete
 32. நீங்கள் ஏற்றுக்கொண்ட ஆசிரியர் பணியினை மிக நிறைவாக முடித்துவிட்டீர்கள்.வாழ்த்துக்கள் கணேஷ்.

  ReplyDelete
 33. @ RAMVI said...

  நிறைவான பணி என்று ஊக்கம் தந்த வார்த்தைகளுக்கும் வாழ்த்துகளுக்கும் என் இதயம் நிறைந்த நன்றி!

  ReplyDelete
 34. அன்புள்ள கணேஷ் (சின்னக் கடுகு ஸார்),

  என் வலைத்தளத்தையும் இங்கே குறிப்பிட்டதற்கும், ஒவ்வொரு நாளும் வித்யாசமான பதிவுகளை மிகுந்த ரசனையுடன் எங்களுக்குக் கொடுத்து எனக்கு இதுவரை தெரியாத பல நல்ல தளங்களை அறிமுகப்படுத்தியதற்கும் என் மனமார்ந்த நன்றி.

  ReplyDelete
 35. @ balhanuman said...

  உங்கள் தளம் எனக்கு உவப்பானதாக உள்ளது. என்னை ஊககப்படுத்தும் உங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி நண்பரே!

  ReplyDelete
 36. This comment has been removed by the author.

  ReplyDelete
 37. This comment has been removed by the author.

  ReplyDelete
 38. நீங்க போகவும் போகாதே போகாதே என்று தீபாவளி பாடல் பாடத்தோன்றுது இந்த வாரம் வேலைக்ளுக்கு இடையிலும் வலைச்சரம் ஓடியந்தது யார் வாராங்களோ என்று வாழ்த்துக்கள் சிறப்பான தொகுப்புக்கு//! உங்கள் தளம் பின்னே வாரன் கையில் இருந்து பேசுகின்ரேன் அவசரத்தில்! ம்ம்ம்ம் கணேஸ் அண்ணா ஒரு ஊஞ்சல் தான்!

  ReplyDelete
 39. செவ்வன,சிறப்புற வலைச்சர ஆசிரியர் பணியை முடித்து இந்த வாரம் முழுதும் கலகலப்பூட்டிய உங்களுக்கு வாழ்த்துக்ளுடன் கூடிய நன்றிகள்!

  ReplyDelete
 40. anne!

  malaikalukku idaiye-
  maduvaa!?
  naanumaa-
  irukken!

  rompa nantri!

  ReplyDelete
 41. மிக மிக ரசனையாய் வித்தியாசமாய் கொடுத்த உங்களுக்கு என் வாழ்த்துகள்

  ReplyDelete
 42. @ தனிமரம் said...

  ஓய்வு கிடைக்காத எத்தனையோ அவசரப் பணிகளுக்கிடையிலும் எனக்காக வந்து கருத்திட்ட உங்கள் அன்பு என் மனதில் நிலைக்கும் நேசன்! நன்றி!

  @ ஸாதிகா said...

  மகிழ்வு தரும் வாழ்த்தினை வழங்கிய தங்கைக்கு மனம் நிறைய நன்றி!

  @ Seeni said...

  மடுவல்ல சீனி, மலைகளுக்கிடையே ஒரு சி்ன்ன மலை என்று எண்ணிக் கொள்ளுங்கள். பெரிய மலையாவீர் விரைவில். என் வாழ்த்துககளும் நன்றிகளும்!

  @ ரிஷபன் said...

  என்னை உற்சாகப்படுத்தும் நற்கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

  ReplyDelete
 43. எனது வலைப்பூவினை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி!

  ReplyDelete
 44. இப்படி ஒரு எதிர்பார்ப்புடன் எந்த வாரமுமே எனக்கு இருந்ததில்லை கணேஷ்!

  நிறைவா உங்கள் பணியைச் செய்து முடிச்சதுக்கு இனிய பாராட்டுகள்.

  திருப்தியா இருக்கு:-)

  ReplyDelete
 45. @ யுவராணி தமிழரசன் said...

  வாங்க யுவராணி... நன்றாக எழுதும் உங்களுக்கு வாழ்த்துக்களுடன் என் மனமார்ந்த நன்றியும்!

  @ துளசி கோபால் said...

  நிறைவாகப் பணி செய்தேன் என்று சொல்லி எனக்கு க்ளுக்கோஸ் குடுத்திருக்கீங்க டீச்சர். உங்களுக்கு என் இதயம்நிறை நன்றி!

  ReplyDelete
 46. அறிமுகத்துக்கு நன்றி

  ReplyDelete
 47. உங்களிடம் தந்த பணியை மிகவும் ரசனையுடன் சிறப்புற நிறைவேற்றியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

  ReplyDelete
 48. ஐயா திரு கணேஷ்,
  தாங்கள் எனது வலைப்பூவைக் குறிப்பிட்டது உண்மையிலேயே என் பொறுப்புணர்ச்சியை அதிகப்படுத்தி உள்ளது போலவே உணர்கிறேன். தங்களது பெருந்தன்மைக்குத் தலை வணங்குகிறேன்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது