07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, May 21, 2012

உங்களில் ஒரு(வன்)மலர்

தாய்த் தமிழ் உறவுகளுக்கு 
என் அகம் கனிந்த இனிய தமிழ் வணக்கம் 

தமிழ் 
மாமேதைகள் 
சங்கமிக்கும் தமிழ் சபையில் 
எளியவனுக்கு ஆசிரியர் 
''மகுடம்''

ஆசிரியர் 
மகுடம் சூடி என்னையும் என் தமிழையும் பெருமை படுத்திய 
சீனா ஐயா மற்றும் வலைச்சர குழுமம் மற்று தமிழ் உறவுகளுக்கு 
என் அகம் கனிந்த நன்றிகள் 

வலச் சரத்தில் 
கோர்க்கப்பட்ட தமிழ் மலையாய்
தரணியில் பூத்து சிதறிய புன்னகைக்கும் 
தமிழ்பூக்கள்

நான்
உங்களில் ஒரு(வன்)மலர் 
''செய்தாலி'' 

''தமிழ்''
எனக்கும் 
என் உறவுகளுக்கும் 
என் சார்ந்த சமூகத்திற்கும்மான 
அடையாளம் 

அலைக் குழந்தைகள் 
துள்ளி விளையாடும் கேரளக் கடலோரத்தில் 

வீர
 இதிகாசங்கள் சுமக்கும் ''நெல்லைச்'' சீமையில் 
தமிழ் அருந்தி இளமையை 
வளர்ந்தவன் 

அனல் 
மணல் வீசும் அமீரக வீதிகளில் 
நாளைய வாழ்க்கைக்கான தற்கால 
திரவியம் தேடல் (தொடர்கிறது )

நம்மை 
சுற்றிய வாழ்கையில் 
சில நினைவுகள் மட்டும் தேங்குவதுண்டு
வடுக்களாய்... 
 
அகத்தில் 
உறங்கும் நினைவுகள் உணர்கையில் 
வலியில் விழிகள் உதிற்கும் 
கண்ணீரை 

எழுத்தை 
உணர்ந்த பால்ய பருவமுதல் 
குறிப்பேட்டில் எழுதிக் கிறுக்கினேன் 
நினைவில் இறக்காத உணர்வுகளை 

என் 
என் சார்ந்த சமூகத்தின்  வ(லி)டுக்களை 
இன்றும் எழுதி கிறுக்கிறேன் குறிப்பேட்டில் அல்ல 
வலைத்தளத்தில் 

 பால்யத்தில் 
அறியாது தொலைத்த 
அம்மாவின் கூலிப்பணம் இருபதுருபாய் நோட்டு 

வலிக்கு 
மருந்தாய் சீனா ஐயாவின் முதல் 
கருத்து துளி 

 என்னை 
வலைச்சரத்தில் முதன் முதலாய் 
கோர்த்து பெருமை படுத்திய 

பின் 
எத்தனையோ நன் உறவுகளால் 
அழகாய் அலங்கரிக்கப்ட்டேன் 
வலைச்சரத்தில் 

நெஞ்சில் 
உறங்கும் நினைவுத் துளிகளில் 
சிலவை 

தளிர் செடியை 
பிடுங்கி நட்ட இரவும் 

ஒரு 
இரவு அகதியாய் குடியேறிய 
நினைவுகள் உறங்கும் பழைய வீடும் 
 
இளமையில் 
தளிர்ந்து ஆயுளற்று இறந்த 
  முதல் ''காதல்''  

அறிவையும் 
வாழ்கையின் அழகையும் கற்றுகொடுத்து 
காலச் சுழலில் பிரிந்துபோன 
இனிய ''தோழி'' 

திருமணமும் 
பிரிவின் வலியும்

என் 
எழுத்துக் கிறுக்கலின் நிழல்களில் 
ஒழித்து வைத்து இருக்கிறேன் 
என்னையும் என் சார்ந்த சமூகத்தையும் 

என் 
கிறுக்கலின் விதிப்பில் 
வலையுலகில் சம்பாதித்தேன் 
நல் உறவுகளை 

வலை 
உறவுகளின் அன்பை எழுதமுயன்றால் 
வற்றிப்போகும் வார்த்தைகள் 

உறவுகளின் 
அன்பில் விளைந்த ஆசிரியர் 
தகுதி 

நன்றியை 
வெறும் வார்த்தையில் பதிவது 
அழகற்றது 

நன்றிக்கு 
கடமைப் பட்டவன் 
மரணம் வரை நினைப்பதே 
நன்னழகு 

உங்களுடன் 
உறவாடவரும் இம்மலருக்கு 
நன்னீராய் ஊற்றுங்கள் அன்பின் 
புன்னகையை 

வலையில் 
இசைபாடும் கவிக் குயில்களோடு 
வருகிறேன் ''நாளை'' 

ம்(:

31 comments:

 1. நல்ல துவக்கம் .., தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள் அன்பரே ..!

  ReplyDelete
 2. நல்வரவு தோழரே..இந்த வாரம் சிறக்க வாழ்த்துகள்.

  ReplyDelete
 3. அய் நம்ம செய்தாலி அண்ணா தான் இந்த வார ஆசிரியரா, சுய அறிமுகத்தை நன்றாக தொடுத்துள்ளீர்கள் அண்ணா, உங்கள் தோழி கவிதை அருமை.... நீங்கள் அறிமுகப்படுத்தும் பதிவுகளுக்காய் காத்திருக்கிறோம்... உங்களின் இந்த பணி சிறக்க வாழ்த்துகள் :)

  ReplyDelete
 4. ஆரம்பமே அமர்களமாக இருக்கு

  ReplyDelete
 5. சுய அறிமுகமும் கவிதை மயமா?
  சூப்பர்.... வாழ்த்துக்கள்..... தொடருங்கள் நண்பா

  ReplyDelete
 6. ஏற்ற பணியைச் சிறப்பாகச் செய்ய
  வாழ்த்துக்கள்!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 7. அழகாய் சுய அறிமுகம் செய்துள்ளீர்கள் நண்பரே... அறிமுகங்களை அருமையாய் அள்ளித் தருக. தொடர்கிறேன் உங்களை... என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துகள் தங்களுக்கு..!

  ReplyDelete
 8. நண்பா கலக்கல் சுய அறிமுகம் - ஆங்.. பாராட்டுக்களுடன் வாழ்த்துகிறேன்.

  தொடருங்கள் தொடர்கிறேன்

  ReplyDelete
 9. @வரலாற்று சுவடுகள்

  வாங்க நண்பரே
  உங்க வால்த்ஹ்துக்கு மிக்க நன்றி

  @மதுமதி
  கவிஞரின் வாழ்த்துக்கு மிக்க நன்றி

  @ரேவா

  வாங்க சகோ
  உங்கள் அன்பிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி

  @Jaleela Kamal

  வாங்க சகோ
  உங்கள் அன்புக்கு நன்றி

  @தமிழ்வாசி பிரகாஷ்
  உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தோழரே

  @புலவர் சா இராமாநுசம்

  வாங்க ஐயா
  வாழ்த்துக்கு மிக்க நன்றி ஐயா

  @கணேஷ்

  வாங்க சார்
  உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சார்

  @மனசாட்சி™

  வாங்க நண்பா
  மிக்க நன்றிகள் நண்பா

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள் புதிய அட்மினுக்கு

  ReplyDelete
 11. வாங்க சகோ .. தொடர்ந்து கலக்குங்கள் ..

  ReplyDelete
 12. வாழ்த்த வயதில்லை. இருப்பினும் வாழ்த்துகிறேன். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. வணக்கம் வாத்தியாரே,

  நீங்கள் பிறந்த, வளர்ந்த, வாழும் மண்ணின் வாசத்துடன் இந்த வாரத்து வகுப்பினை சிறப்புறச் செய்யுங்கள்.

  ReplyDelete
 14. ஒரு சிறந்த தொடக்கமே நல்ல பலனைத் தரும் என்பார்கள் வெற்றியடைய இனிய வாழ்த்துகளும் பாராட்டுகளும்

  ReplyDelete
 15. @சிட்டுக்குருவி

  வாழ்த்துக்கு மிக்க நன்றி தோழரே

  @"என் ராஜபாட்டை"- ராஜா

  மிக்க நன்றி தோழரே

  @NIZAMUDEEN

  மிக்க நன்றி தோழரே

  @சத்ரியன்

  மிக்க நன்றி நண்பா

  @போளூர் தயாநிதி

  மிக்க நன்றி நண்பரே

  ReplyDelete
 16. அண்ணா அறிமுகமே கலக்கலாஆஆ இருக்குது ...  சூப்பர் ஆ இருக்கப் போது இந்த வாரம் ...


  மீண்டும் வாழ்த்துக்கள் அண்ணா

  ReplyDelete
 17. கவிதையில் சுய அறிமுகம் ரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துகள்.

  ReplyDelete
 18. கவிதையாய் அறிமுகமா வாழ்த்துக்கள்

  ReplyDelete
 19. வித்தியாசமான அருமையான சுய அறிமுகம்
  இவ்வார ஆசிரியர் பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
 20. வாழ்த்துக்கள் சார் ! அசத்துங்க !

  ReplyDelete
 21. @கலை

  மிக்க நன்றி கலை

  @Lakshmi

  வாழ்த்துக்கு மிக்க நன்றி அம்மா

  @PREM.S

  வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பா

  @Ramani

  உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி சார்

  @திண்டுக்கல் தனபாலன்

  உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி சார்

  ReplyDelete
 22. இந்த வாரமும் கலக்கல்தான்.வாழ்த்துகள் தோழரே !

  ReplyDelete
 23. வாழ்த்துகள்.நல்ல துவக்கம்

  ReplyDelete
 24. நல்ல தொடக்கம். சுய அறிமுகம் அருமை. தொடர வாழ்த்துகள்

  ReplyDelete
 25. அன்பின் சகோதரர் வெள்ளியிலிருந்து வலைக்கு வரவில்லை. தங்களுக்கு நல்வரவு. தங்கள் பணி சிறந்து ஆசிரியர் வாரம் அமோகமாக, - இறையருள் கிட்டட்டும். நல்வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 26. நல்ல அறிமுகத்துடன் தொடங்கியுள்ளீர்கள் இந்த வாரம் கண்டிப்பாக களைகட்டும்.

  ReplyDelete
 27. தங்களைப் பற்றி தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.சூப்பர்.

  ReplyDelete
 28. அழகான அறிமுகத்துடன் வலைச்சரத்தில் பாதம் பதித்திருக்கும் உங்களுக்கு அன்பான வரவேற்புகள் செய்தாலி. இந்த வாரமும் இனிமையாய் அமையும் என்பதில் சந்தேகமில்லை. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 29. @ஹேமா

  மிக்க நன்றி தோழி

  @சென்னை பித்தன்

  மிக்க நன்றி அய்யா

  @ராஜி

  மிக்க நன்றி சகோ

  @kovaikkavi

  மிக்க நன்றி தோழி

  @விச்சு

  மிக்க நன்றி தோழரே

  @Asiya Omar

  மிக்க நன்றி சகோ

  @கீதமஞ்சரி

  மிக்க நன்றி தோழி

  ReplyDelete
 30. அழகிய அறிமுகம்.
  இனிய வாரத்தைப் படித்துப் பார்க்கின்றேன்.

  பிந்திய வாழ்த்தை மிக்க மகிழ்வுடன் தெரிவிக்கின்றேன்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது