07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, May 26, 2012

நளபாக கலையரசிகள்




நளபாகம் 
அழகிய ரசனைக்  கலை 
அது சிலருக்குமட்டுமான வரபிரசாதம் 


விலைகொடுத்து 
பொருள் வாங்கி விடலாம் 
தரமாய் ருசியாய் சமைப்பது 
அரிது 


ருசியால் 
வயிறு நிறைந்தால் 
மனம் தானாக நிறையும் 


அழகிய 
பரிமாறுதலில் ருசியற்ற 
உணவும் அமிர்தமாய் தித்திக்கும்

நாம் 
உண்ணும் உணவு
நாளைய ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும் 
மருந்து, விஷம்


நல்லுணவும் 
நல்லாரோக்கியமும் நீண்ட ஆயுளும் 
நம் பாட்டன் முப்பாட்டர்களின் 
அடையாளங்களில்


இன்றைய 
நவவுலகில் ஐம்பதை கடக்கும்முன் 
ஓராயிரம் சீழ் சீக்குகள் காரணமோ 
நவ உணவுக் கலாச்சாரம்


விலையுள்ள உணவை 
வெறும் பகட்டிற்காக தேடி உண்ணுகிறோம் 
 தரமும் ஆரோக்கியமும் மறக்கிறோம் 
அறிவில் மேலோங்கிய மனிதர்களாகிய நாம் 


நல்லுணவு 
நல்லாரோக்கியம் நீண்ட ஆயுள் 
ஆரோக்கிய வாழ்கையின் அழகிய அடையாளம்


இதோ 
ருசியுள்ள 
நளபாகத்தை சொல்லிகொடுக்கிறார்கள் 
சமையல் கலை வல்லவர்கள்


 நளபாகம் 
எத்தனையோ கலையரசிகளின் 
தித்திக்கும் ருசி சங்கமம்


சகோ ஆமினா வின் 
கற்றும் ருசித்தும் கொள்ளலாம் 
நளபாகத்தை 





ரசனையில் விதவிதமாய் கோர்க்கப்பட்ட 
ருசியுள்ள உணவுகள் பாருங்கள் ருசியுங்க 

சகோ 
மலிக்காவின் கலைச்சரலில் 
ருசியோ ருசி பாருங்கள் ருசியுங்க 



சைவ சமமையலை சமைக்க ருசிக்க 
நமக்கு சொல்லி தாரங்க 
சகோ ஆயிசா ஓமர் 

அட்டகாசமான ருசியை சமைக்க 
கத்து தாராங்க சகோ ஜலிலா கமால் 

சாப்பிட வாங்க 
நல்ல சமைத்து அசத்துறாங்க 

தோழி     கோவை டு டெல்லி பாருங்க 



அன்பாக 
உணவை சமைக்க சொல்லித் தாரங்கள் 




நிறைய 
சமையல் வித்தைகளையும் 
அதன் குணா நலன்களையும் சொல்லிகொடுகிறாங்க 
சின்னு ரெஸ்ரி  தோழி  மாதவி 


தோழி 
சுண்டி இழுக்கும் வாசமும் 
சுவையான உணவுகளும் 


விதவிதமான குழம்பு வகைகள் 
பாருங்க சமையுங்க ருசிங்க


சகோ யாஸ்மியின்


ருசியுள்ள நல்ல அசைவ உணவுகள் 


நாளை 
பணியின் இறுதி நாள் 
வாசித்ததில் பிடித்த  ரசித்த 
கதை, கவிதைகளுடன் வருகிறேன் (:

19 comments:

  1. காலையிலேயே அட்டகாசமான ஒரு புகைப்படத்தை போட்டு வயிற்றில் அகோர பசியை உண்டு பண்ணுறீங்களே தலைவா ..! தொடர்ந்து கலக்குங்க ..!

    அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து பதிவர்களுக்கும் என் உளம் கனிந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நளபாக கலையரசிகளின் அறிமுகம் பிரமாதம். ஒவ்வொருவரின் வலைப்பூவும் பல்வேறு சுவை சொல்லி அசத்துகிறது. நிறைய சமையற் குறிப்புகளுடன் கூடிய பயனுள்ள வலைத்தளங்களின் அறிமுகத்துக்கு மிகவும் நன்றி செய்தாலி. அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சமையற்கலையரசிகளுக்குப் பாராட்டுகள்.

    ReplyDelete
  3. ஆஹா சமையல் சமையல் ...அருமையான பகிர்வு வாழ்த்துக்கள் சகோ . அறிமுக நண்பர்களுக்கும் .

    ReplyDelete
  4. என்னை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  5. நளபாகம் வாயில் நீரூறுகிறது. அத்தனை (நளபாகத்திற்குப் பெண்பால் உண்டோ?)நளின பாகங்களிற்கு (தலைவருக்கு) வாழ்த்துகளுடன் அதை ரசித்து எழுதிய தங்களிற்கும் நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  6. அறிமுகங்களில் அனைத்து சமையலும் அருமை.
    என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
  7. நளபாக கலையரசிகள்
    தகுந்த தலைப்பு
    இங்கே பகிர்ந்த பதிவர்களுக்கு
    நிச்சயம் கொடுக்கவேண்டிய பட்டமும் கூட...

    ReplyDelete
  8. வயிறு நிரம்பிவிட்டது. நல்லதொரு தொகுப்பு.

    ReplyDelete
  9. வணக்கம் உறவே
    உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
    http://www.valaiyakam.com/

    முகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

    5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

    ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php?page=votetools
    நன்றி

    வலையகம்

    ReplyDelete
  10. வலைசரத்தில் அறிமுக படுத்தி ஆதரவு கொடுத்த தோழர் செய்தாலிக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  11. காலேல்லயே என்ன சுவையான சமையல் இண்ணைக்குன்னு யோசிக்க வச்சிட்டாங்க எல்லாரும்.சைவச் சமையல் அசத்திடணும் இண்ணைக்கு.நன்றி !

    ReplyDelete
  12. நல்ல தொகுப்பு ! நன்றி சார் !

    ReplyDelete
  13. நல்ல அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. @வரலாற்று சுவடுகள்

    @கீதமஞ்சரி

    @சசிகலா

    @ஆமினா

    @Asiya Omar

    @Seeni

    @மகேந்திரன்

    @விச்சு

    @ராதா ராணி

    @ஹேமா

    @திண்டுக்கல் தனபாலன்

    @Lakshmi

    வருகை தந்து கருத்திட்ட
    அன்பு நெஞ்சங்களுக்கு என் அகம் கனிந்த நன்றிகள்

    ReplyDelete
  15. என்னை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  16. அழகான வரிகளுடன்.. நள பாகத்தை நயமாய் உரைத்திட்டமைக்கு நன்றிகள்.

    என் பதிவையும், அறிமுகம் செய்ததற்கு நன்றி.

    உங்களுக்கும், அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள். :)

    ReplyDelete
  17. செய்தாலி தாமதமாக வந்து நன்றி சொல்லுவதற்கு மன்னிக்கவும். ரொம்ப ரொம்ப நன்றி என்னை அறிமுகபடுத்தியதற்கு.

    ReplyDelete
  18. கணனி பிரச்சனையால் உடனே வரமுடியவில்லை. மன்னிக்கவும்.

    அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.
    சின்னு ரேஸ்ரி அறிமுகத்திற்கு மிக்க நன்றி.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது