07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, March 31, 2009

31.03.09 – வைரச்சரம் (Diamond)-பிடித்த எழுத்துக்கள்

பிளாகரக்கு வந்த பிறகு மோசமாக தமிழ் பேசுவதாக அதாவது நல்ல தமிழ் அல்லாது கொச்சை தமிழ், வீட்டில் பேச்சு வழக்கில் இல்லாத தமிழ் பேசுவதாக பழைய நண்பர்களும், என் கணவரும் சொல்ல ஆரம்பித்தார்கள். குறிப்பாக சில வார்த்தைகள் பேசும் போதும் என் கணவரின் கோபத்திற்கு ஆளாவேன். வீட்டில் அப்படிப்பட்ட வார்த்தைகள் பேசி பழக்கமில்லை, ஏன் என் நண்பர்களுடன் கூட பேசி பழக்கமில்லை. அவற்றில் சில

1. டுபுக்கு
2. மொக்கை
3. கடலை
4. உள்குத்து (இதற்கு அர்த்தம் தெரியாமல் பல மாதங்கள் இருந்தேன்)
5. ஆப்பு – இதை ஒரு முறை வீட்டில் சொல்லி, திட்டு வாங்கினேன்.. வாழ்க்கையில் நான் உபயோகபடுத்தவே கூடாது என்று முடிவெடுத்துவிட்ட வார்த்தை என்று சொல்லலாம். (வாங்கிய திட்டு அப்படி)
6. அடங்கு
7. இதோடா

இன்னும் பல வார்த்தைகள் உள்ளன, சட்டென்று நினைவில் வந்தது இவை தான். 2006 ல் பதிவுலகிற்கு வந்த புதிதில் ஒரு சிலரின் எழுத்துக்கள் ரொம்பவும் என்னை கவர்ந்தது. அதில் முதல் இடத்தில் இருப்பவர் டுபுக்கு. என் அலுவலக நண்பர் மூலம் இவருடைய பதிவிற்கு சென்று படிக்க ஆரம்பித்தேன். என்னை அதிகம் எழுத்தின் மூலம் கவர்ந்தவர்கள், இவர்களின் எழுத்துக்கு ஒரு ரசிகை மட்டும் இல்லாது ரொம்பவும் மரியாதையும் கூடவே இருக்கிறது எனலாம். இதோ ஒவ்வொன்றும் ஒவ்வொரு வைரங்கள். உங்கள் பார்வைக்கு :

1. டுபுக்கு இவரின் பதிவுகள் படித்து சிரிப்பதுதான் முதல் வேலையாக வைத்து இருப்பேன். இப்படி எல்லாம் காமெடியாக எழுத முடியும் என்று கற்றுக்கொண்டதே இவரிடம் தான்.

2. சிவகுமார்ஜி :- இவரை பற்றி நான் சொல்ல தேவையே இல்லை. சூப்பர் மேன்!. எதற்காகவும் தன் எழுத்து பாணியை / பணியை விட்டுக்கொடுக்க கூடாது என்பதில் பிடிவாதமாக இருப்பவர். சமூக அக்கறை அதிகம் உள்ளவர். இவருடைய பதிவுகளில் பின்னூட்டம் இடவே தேவை இருக்காது, அவ்வளவு தெளிவாக விஷயங்களை எழுதி இருப்பார். இவருடைய பொருளாதாரம் பற்றிய தொடர் என்னை மிகவும் கவர்ந்தது.

3. கல்வெட்டு :- ரொம்பவும் Informative ஆக பதிவெழுதுபவர்களில் ஒருவர். ஆரம்பித்திலிருந்தே சில பல பின்னூட்டங்களின் மூலம் எனக்கு நல்ல பல தகவல்களை தந்து கொண்டு இருப்பவர்.

4. தெகாஜி :- டாக்டர் இயற்கை நேசி இவர். எல்லா பிரிவுகளிலும் அலசி எழுதுபவர். இவருடைய சில பதிவுகள் எப்படி இப்படியெல்லாம் எழுதுகிறார் என்று என்னை யோசிக்கவைப்பவை.

4. மங்கை : மங்கை பதிவுலகிற்கு ஒரு கங்கை எனலாம். இவரின் சமூகம் சார்ந்த விழுப்புணர்வு பதிவுகள் வியக்கவைக்கும்,. சத்தமே இல்லாமல் யுத்தம் நடத்துபவர். இவரிடம் நான் கற்றுக்கொள்ள நிறையவே இருக்கிறது..

5. ஆசிப் மீரான் : இவருடைய “நல்லா இருங்கடே” க்காகவே படிக்க செல்லுவேன். இவரின் எழுத்து நடை எனக்கு ரொம்பவும் பிடித்தது.

6. முத்து தமிழினி பதிவுக்கு வந்த புதிதில் இவருடைய பதிவுகளும் அடிக்கடி படிக்க நேரிடும், நடுவே தீடிரென்று வேலைநிமித்தம் காணாமல் போனார், திரும்பவும் இப்போது எப்போதாவது வந்து அப்டேட் செய்கிறார். பிடித்த எழுத்துக்களில் இவருடையதும் ஒன்று.

7. சுகுனாதிவாகர் எல்லாம் கலந்த கலவை’ன்னு சொல்லனும்,. சில பதிவுகள் படிக்கும் போது உடம்பு சிலிர்க்கும்.

8. எஸ்.கே’ஜி மருத்துவம் சார்ந்த பதிவுகள், இவருடைய இதயம் “லப் டப்” தொடரை தொடர்ந்து படித்து வந்தேன். பிறகு எய்ட்ஸ், பாலியில் சம்பந்தப்பட்ட தொடர்கள், தொடர்ந்து முடியாவிட்டாலும் முடிந்தவரை படித்து இருக்கிறேன். மெயில் அனுப்பி வேறு தொல்லை தந்து இருக்கிறேன்.

9. புருனோ :- Informative ஆக எழுதும் இன்னொரு பதிவர். எனக்கு அவ்வப்போது பின்னூட்டங்கள் மூலம் நல்ல பல தகவல்களை தருபவர்.

10. வ.வா.ச : இப்போது வரையில் என்னை மிகவும் கவர்ந்த ஒரு குழுமம் என்றால் அது வ.வா. ச தான். ரொம்ப Active ஆக இருந்தார்கள், இப்போது முன்பு போல் இல்லையென்றாலும் விடாமல் குழுமத்தை நடத்திவருவது சந்தோஷமாக இருக்கிறது. அதில் அதிகம் படித்தது, ஜொள்ஸ் பதிவுகள். ஆஹா ஜொள்ளுவிடறதுக்கு எந்த வித வெட்கமும் படாமல், அதுவும் ரொம்ப இனவேடிவ் ஆக யோசித்து விதவிதமாக ஜொள்ளுவிட இவரை விட்டால் யாரும் இல்லை. அடுத்து தேவ், சில பதிவுகளில் முற்றுபுள்ளியே இருக்காது, ஒரே கமா’க்கள் தான், மூச்சு விடாமல் எழுதி இருப்பார்.. அதுவும் இவரின் சொல்லாடல் சான்சே இல்ல.. எப்படிங்க இப்படி எல்லாம் ?? நெக்ஸ்ட் நம்ம கைப்பூ.. எப்பவும் போல எனக்கு புரியாது, ஒரு 2, 3 தரம் திருப்பி திருப்பி படிக்கனும், அதற்கு என்னுடைய மோசமான தமிழ் மொழி அறிவு தான் காரணம் என்று சொல்லலாம். புதிய வார்த்தைகள் நிறைய இவருடைய பதிவுகளில் இருக்கும், சில சமயம் ஒன்றுமே புரியாமல் "சே! இந்த பழம் புளிக்கும்"என்று வந்து விடுவதும் உண்டு.

மற்ற சிங்கங்களின் தனி பதிவுகளை தான் அதிகம் படித்ததுண்டு, சங்கத்து பதிவுகளை படித்தாக நினைவில்லை. இதோ சிங்கங்களின் லிஸ்ட்.

அணில் குட்டி அனிதா :- ம்ம் முடிச்சாச்சா…???? அவ்வளவு தானா லிஸ்ட்..டு? இன்னும் இருக்கா.?. எனக்கு பிடிச்சவங்கள நீங்க சேர்க்கவே இல்லையா கவி?? என்ன அநியாயம் இது.. ?!! என்ன அக்கிரமம்? என்ன ஒரு வில்லத்தனம் இது? கேப்பாரு இல்லையா? அதெல்லாம் முடியாது, என் பங்குக்கு எனக்கு பிடித்தவர்களை இங்கே சொல்லாமல் இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன்.. ..

கவிதா : நகராதே..!! தயவு செய்து இங்கேயே உட்கார்ந்துக்கோ. .நானும் தாத்ஸ்’சும் கிளம்பறோம்………….பை ' ஐஐஐஐ!!

பீட்டர் தாத்ஸ் :- வைரச்சரம் (Diamond) : - Diamond, composed of carbon, is the hardest natural substance in the world. Each carbon atom is surrounded by four neighboring carbon atoms in a tetrahedral coordination that is the result of a covalent bond and a face-centered arrangement in the cubic unit cell. Diamond is in the isometric crystal system, which is reflected in the commonly found octahedral or cubic crystal form. The external crystal class is 4/mBar32/m, while the space group designation is F41dBar32/m. Twins are common on the {111} plane. It has perfect four directional cleavage, adamantine luster, and both a high refractive index, 2.42, and specific gravity, 3.52. Color is usually pale yellow to colorless, but can also be brown, blue, green, orange, red, and black .
Read more about Diamond
http://www.emporia.edu/earthsci/amber/go340/diamond.htm
http://www.galleries.com/minerals/elements/diamond/diamond.htm
http://en.wikipedia.org/wiki/Diamond

மேலும் வாசிக்க...

Monday, March 30, 2009

வலைச்சரம் – தொடுப்பவர்கள் அணில், பீட்டர்தாத்ஸ் & கவிதா

அனைவருக்கும் வணக்கம், திரு.சீனா அவர்கள் எங்களை வலைச்சரத்தை தொடுக்க அழைத்திருக்கிறார். அவருக்கு முதலில் எங்களுது நன்றி. அழைக்கும் போதே வானமே எல்லை’ ன்னு சொல்லிவிட்டார். இதில் அதிக சந்தோஷப்பட்டது அணில். அதனால் பீட்டர்தாத்ஸ்’ க்கும், எனக்கும் அது என்ன ஆட்டம் போட போகுதோன்னு கொஞ்சம் பயமாகத்தான் இருக்கு. கொஞ்சம் அதட்டி உருட்டி அமைதியா இருக்கனும், இது நம்மவீடு இல்லை என்று சொல்லி அழைத்துவந்து இருக்கிறோம்.. வலைச்சரத்தில் எழுதும் நாட்களை ஏழுவித கற்களை கொண்டு சரமாக தொடுத்துவிட எண்ணியிருக்கிறோம் முடிந்தவரை முயற்சிக்கிறோம்.

30.03.2009 முத்துச்சரம் – (pearl ) – பார்வைகள்

பார்வைகள் தொடங்கியது ஏப்ரல் 4, 2006, என் வாழ்க்கையில் நான் எப்போதும் மறக்கமுடியாத நாள் இது. நீங்கள் அனைவருமே பார்வைகள்’ ஐ பார்வையிட்டு இருப்பீர்கள், அதனால் அதிகம் சொல்லத்தேவையில்லை. அவ்வப்போது அதிகமாக (எனக்கு) தேவையில்லாத சர்ச்சைகளுக்கு உள்ளாகும் ஒரு பதிவர் ன்னு சொல்லிக்கலாம். :). இதை தவிர்த்து பார்வைகளில் ஒன்றும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எழுதிவிடவில்லை. :)இது வரையில் பதிவுகள் 192, என்னுடன் சேர்ந்து எழுதும் அணில்குட்டி’க்கு தான் அன்றும் இன்றும் ரசிகர்கள் அதிகம், பீட்டர்தாத்ஸ்’சின் பீட்டரை படிக்க வருபவர்களும் அதிகம். ஆக கவிதா’வை கண்டுகொள்பவர்கள் குறைவு :(. பரவாயில்லை, கவிதாவின் அருமை பலருக்கு இன்னும் தெரியவில்லை என்று நினைத்து மனதை தேற்றிக்கொள்கிறேன். :) . பார்வைகளில் லேபில் வாரியாக சென்றால் எளிதாக பிடித்த பதிவுகளை வரிசை படுத்திவிடலாம்

I. அணில் குட்டி அனிதா:- அணில் என்றாலே நகைசுவை தான். அணில் குட்டியின் அனைத்து பதிவுகளும் இதனுள்ளே அடக்கம்.
1. நான் அடிவாங்கியதை அணிலு அல்வா சாப்பிடற மாதிரி சொல்லுது
2. எடை குறைக்கிறேன் என்று.. நான் பட்ட அவஸ்தையை அணில் ரசித்தது அவஸ்தை பாகம் 1, அவஸ்தை பாகம் 2

II. அப்பாவிற்காக :- என்னுடைய அப்பாவிற்கு பிடித்த விஷயங்களை இதில் சேர்க்க முயற்சிக்கிறேன்.
1. விமானத்தில் டர்புலன்ஸ்
2. 4D திரைப்படங்கள் அரங்க அமைப்பு – (இது யூத் விகடனில் வந்தது)
3. அப்பாவின் கையேடு

III. கதை/கவிதை :- ஏதோ எழுத முயற்சி செய்து இருக்கிறேன்.. :) கவிதைகள், பதிவுகள் எதையுமே மணிக்கணக்காக யோசித்து எழுதியதில்லை, ஆன் தி டேபிள்… வேகவேகமாக எழுதி பதிவிடுவேன். இன்னும் பொறுமையாக எழுதினால் நன்றாக வருமோ என்னவோ.
1. இனிமையான சில தருணங்கள் – ஒரு காதல் கவிதை
2. அடித்துக்கொண்டு சாகுங்கள் ஆணவக்காரர்களே!! - என்னை சுற்றியுள்ள நல்லவர்களை :) எனக்கு புரியவைத்த கவிதை
3. பெண்ணின் நிர்வாணம் அழகு...........!! - இது என்னுள் ஒரு மரணத்தை கண்ட கவிதை
4. ரயில் பயணங்களில்... : கதை என்ற சொல்ல ஒரு ஊறுகாய் !! :)

IV. கேப்பங்கஞ்சி – ஹை லைட்ஸ்’னு சொன்னால், கைப்புள்ள பதிவின் நீளம் அதிகமாக எழுத்துக்களின் அளவை குறைத்து பதிவிட்டது, குறைந்த நேரத்தில் (அரைமணி நேரத்தில்) தேவ் ‘வுடன் சேட்'டி மிக விரைவாக பதிவிட்டது, லிவிங்ஸமைல் வித்யாவின் கேள்விகளுக்காக மண்டையை உடைத்துக்கொண்டது, சந்தோஷ்’ க்காக எல்லோரிடமும் கேள்விகேட்டு சிரமப்பட்டது, எல்லாவற்றையும் விட கருப்பு'வின் பேட்டி இன்னும் என் பதிவில் இருப்பது இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். எனக்கு பிடித்தவை
1.லிவிங்ஸமைல் வித்யா - வித்யா(க்களை) வை பற்றி அறிந்துகொண்டேன்
2. கைப்புள்ள - என்னை நம்பி முதலில் கேப்பங்கஞ்சி குடிக்க வந்தவர்.

V. கார்த்தி ஆபிஸ் – சின்ன அண்ணன் பெயரில், துறை சார்ந்த பதிவுகள், அலுவலக குறிப்புகள் அடங்கியது.
1. மேனேஜர் vs டேமேஜர்
2. முதல் பெயர் கடைசி பெயர்
3. வேலையை விட்டு தூக்க முக்கிய காரணங்கள்

VI. பத்மாஸ் கிட்சன் – என் அப்பாவின் அம்மா (ஆயா) தான் எனக்கு சமையல் கற்று கொடுத்தது. அதனால் அவர்களின் பெயரில் இதில் சமையல் குறிப்புகள்.
1. மரவள்ளி கிழங்கில் பலவித உணவுகள்
2. கேழ்வரகில் செய்யும் உணவுகள்

VII. பழம்-நீ – என் அனுபவங்கள் அத்தனையும் என் கணவருக்கே சொந்தமாக்குகிறேன். என் அனுபவங்கள் அழுவாச்சியாக இருக்கும் அதனால் ரசிக்க முடிந்தவை தருகிறேன்.
1. மனசின் ஆவேசங்கள்…மெளனப்புலம்பல்களாக…
2. மருமகளை பழிவாங்கிய மாமியார்

VIII. சமூகம் – சமூகம் சார்ந்த பதிவுகள் அத்தனையும் இதனுள் அடக்கம். நிறைய பதிவுகள் இதில் தான் எழுதி இருப்பதாக தெரிகிறது
1. ஆண்களில் நிழலில்
2. கோயில்களில் பால் அபிஷேகம் பட்னியில் பல உயிர்கள்
3. ஐந்தறை பெட்டியில் கிடைக்காத அழகா அழகு நிலையங்களில்
4. மார்பகங்கள் இல்லா பெண்ணின் மன உளைச்சல்
5. கண்டிப்பாக ஒவ்வொருவரும் செய்ய வேண்டியது
6. மனிதனின் மறுபக்கம் (யூத் விகடனில் இடம்பெற்றது)
7. வாழ்க்கையை இழந்து வரும் இன்றைய மங்கைகள் (பெண்கள் பலரின் கோபத்தை பெற்றுதந்த பதிவு)
8. ஆண்கள் என்ற மிருகங்கள் (ஆண்கள் சிலரின் கோபத்தை இன்னமும் வாங்கிதந்து கொண்டிருக்கும் பதிவு)
9. வெட்டியான் யூத் விகடனில் இடம்பெற்றது.

IX. கதம்பம் - பொதுவான பதிவுகளை இதில் இடுகிறேன். பதிவர்களின் கருத்துக்களை நட்பு வாரத்திற்காக ஒன்று சேர்த்து பதிந்தது. மறக்கமுடியாத அடிக்கடி படிக்கும் பதிவு இதுதான். இது ஒரு நிலாகாலம். இதோ இதோ என்று எப்பவும் போல சிரமம் கொடுத்தது சிவா, கடைசி வரை கொடுக்காமல் ஏமாற்றியது தேவ். இருப்பினும் அவருடைய பதிவுக்கு சென்று நானே எடுத்து அவர் பெயரில் சேர்த்துவிட்டேன்.. :)
1. நட்பு வாரம் 1
2. நட்பு வாரம் 2

X. ஓவியம் புகைப்படம் : ஏதோ ஒன்றிரண்டு பதிவுகள் உள்ளன. அதிகமாக பதிவுகள் இன்னும் இடவில்லை.

அணில் குட்டி அனிதா: ஓ.. சொந்த வீட்டில் ஆடற ஆட்டம் பத்தாதுன்னு இப்ப அக்கம் பக்கத்து வீட்டுக்கு எல்லாம் கிளம்பிட்டீங்களா..?! . ம்ம்…விதிய யாராச்சும் மாத்த முடியுமா? “பிடிச்சிது பிசாசு ஒன்னு வலைச்சரத்தை… !!” அப்புட்டுத்தான் நான் சொல்லமுடியும்…

சீனா அண்ணாச்சி. .நீங்க ரொம்ப நல்லவரு… கூப்பிட்டீங்க பாருங்க நல்ல ஆளா பாத்து.. !! ம்ம்..உங்கள சொல்லி குத்தம் இல்ல.. உங்களுக்கு கவி ய கூப்பிட சொல்லி ஒருத்தர் சொன்னாரு பாருங்க அவரு மட்டும் என் கையில் கிடைச்சாரூஊஊஊஊ…………..!! ஹி ஹி..ஹி… .ஒன்னுமே செய்ய மாட்டேன்… டேரக்ட்டா.....“சங்கு....தான்.....!!

பீட்டர் தாத்ஸ் :- முத்து (Pearl) :-
Pearls are created from a core. The core of a natural Pearl is simply a fragment of shell or fishbone, or a grain of sand that strays into the unsuspecting Pearl oyster's shell. To protect itself from this irritant the oyster secretes multiple layers of nacre, forming a Pearl.
Read more about Pearl-
http://www.mikimotoamerica.com/about_jewelry/pearls/birth.html
http://en.wikipedia.org/wiki/Pearl
http://www.youtube.com/watch?v=VbF9uGlGoro&feature=related
மேலும் வாசிக்க...

நன்றி கைப்புள்ள - வாங்க வாங்க கவிதா

கடந்த ஒரு வார காலமாக நண்பர் கைப்புள்ள ஆசிரியராகப் பொறுப்பேற்று பதிவர்களை அறிமுகப்படுத்தி - விளக்கமாக பதிவுகள் இட்டு - பொறுப்பினைச் செவ்வனே நிறைவேற்றி விடை பெறுகிறார். அவரை வாழ்த்தி நன்றியுடன் வழி அனுப்புகிறோம்.இன்று தொடங்கும் இவ்வாரத்திற்கு கவிதா பொறுப்பேற்கிறார். அவருக்குத் துணையாக அவரது செல்ல அணில் குட்டியும் பீட்டர் தாத்தாவும் இருக்கிறார்கள். அவர் பார்வைகள் என்னும் வலைப்பூவினில் அவரது எண்ணங்களை வெளிப்படுத்தி வருகிறார். அவரை வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறோம்.

நல்வாழ்த்துகள் கவிதா - நல்ல பதிவர்களை அறிமுகப் படுத்துக

சீனா
மேலும் வாசிக்க...

Sunday, March 29, 2009

இசையமைப்பாளர் வி.குமாருக்கும் இந்த பதிவுக்கும் தொடர்பென்ன?

1960களில் மிகப் பிரபலமான இசையமைப்பாளராக இருந்தவர் வி.குமார். கே.பாலச்சந்தர் அவர்களின் பல படங்களுக்கு அவரது ஆஸ்தான இசையமைப்பாளராக விளங்கியவர் இவர். மேஜர் சந்திரகாந்த், அரங்கேற்றம், எதிர்நீச்சல், நீர்க்குமிழி, இரு கோடுகள் முதலிய பேர் பெற்ற திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் இவர். கேபி- வி.குமார் கூட்டணியில் வெளிவந்த ஒரு திரைப்படம் "வெள்ளி விழா". இத்திரைப்படத்தில் "காதோடு தான் நான் பாடுவேன்" என்று மெல்லிய husky குரலில் திரையில் ஜெயந்திக்காகப் பாடியிருப்பார் எல்.ஆர்.ஈஸ்வரி. ஆனால் எல்.ஆர்.ஈஸ்வரி திரையில் பாடியுள்ள பெரும்பாலான பாடல்கள் அனைத்தும் துள்ளலான பாடல்கள் தான் என அனைவரும் அறிவார்கள். அதே படத்தில் பி.சுசீலா அவர்கள் வாணிஸ்ரீக்காகப் பாடிய ஒரு பாடல் "நான் சத்தம் போட்டுத் தான் பாடுவேன்". எப்போதும் இனிமையான மெலடி பாடல்களே பாடும் பி.சுசீலா அவர்கள் வித்தியாசமாக சத்தம் போட்டு பாடியிருப்பார். மேற்கண்ட தகவல்களைப் பல வருடங்களுக்கு முன் வி.குமார் அவர்களே ஒரு தொலைக்காட்சி நேர்காணலின் போது தெரிவித்திருந்தார். ஒரு குறிப்பிட்ட விதத்தில் ஒரு குறிப்பிட்ட ஸ்டைலில் பாடிக் கொண்டிருக்கும் ஒரு திறம் வாய்ந்த பாடகர், இன்னுமொரு விதத்தில் பாட வேண்டும் என்றால் அவரால் பாட முடியாது என்பதில்லை. அவர்கள் விருப்பப்பட்டு அவர்களுடைய ஸ்டைலத் தேர்வு செய்து கொள்கிறார்கள்.

நம் தமிழ் வலையுலகத்திலும் அத்தகைய ஒரு சூழல் நிலவுகிறது. சிரிப்பு பதிவர்கள், கும்மி பதிவர்கள், ஆன்மீகப் பதிவர்கள், பொதுவான பதிவர்கள் என்று ஏதாவது ஒரு வகைக்குள் ஒரு குறிப்பிட்ட பதிவரை வகைப்படுத்தலாம். ஆனால் அவர் வகைப்படுத்தப்பட்டுள்ள பிரிவைத் தாண்டியும் அவர் சில பதிவுகளை எழுதியிருப்பார். அதை படிக்கும் போது மிகவும் காண்ட்ராஸ்டிங்காக இருக்கும்.

புகைப்படக்கலை, வெண்பா எழுதுவது இவற்றிற்காகப் பேசப் பெறும் நம்ம ஜீவ்ஸ் அண்ணாச்சியின் பின்நவீனத்துவ புனைவு பதிவு காமெடி ஒன்னு.
பாவமன்னிப்பு - கடைசி பாகம்

இலக்கியம், கவிதைகள், துபாய் அனுபவங்கள் பற்றிய பதிவுகளுக்காக அறியப் பெறும் தம்பி கதிரின் ஒரு மெகா காமெடி பதிவு.
தண்டவாளத்தில ஒண்ணுக்கு போனா தப்பா?

கலில் ஜிப்ரன், இளையராஜா பாடல்கள், கவிதைகள் என்று பல பிரிவுகளில் எழுதும் கொங்கு ராசாவுக்கு இயற்கையிலேயே ஒரு subtle ஹியுமர் சென்ஸ் அதிகம். கோயில் உற்சவத்தைப் பற்றிய செய்தி படிச்சதும் இவருக்கு என்ன தோணிருக்குன்னு பாருங்க.
காரமடை ரங்கநாதன்

காமெடின்னா டுபுக்கு, டுபுக்குன்னா காமெடிங்கிற அளவுக்கு காமெடியில பின்னி பெடலெடுக்குற டுபுக்கு அண்ணாத்தையின் படு சீரியஸான முகத்தைப் பாருங்கள் இந்த சிறுகதையில். தேன்கூடு சிறுகதை போட்டியில் 'மரணம்' என்ற தலைப்பில் இவர் எழுதியது.
சாமியாண்டி

பதிவுகளுக்கு நடுவுல காண்ட்ராஸ்ட் காட்டும் பதிவர்களுக்கு இடையில் ஒவ்வொரு பதிவுலயும் காண்ட்ராஸ்ட் காட்டுறவங்க கவிதா. "அவர்கள்" படத்துல கமல் கதாபாத்திரம் ஒரு பொம்மையை வைத்து கொண்டு பேசுவார். அக்கலையின் பெயர் Ventriloquism. வலையுலகில் அத்தகைய வெண்ட்ரிலாகுவிஸம் முயற்சி தான் இவங்களோட வலைப்பதிவு. படிக்கிறவங்களை "அவர்கள்" படத்து ஹீரோயின் சுஜாதா மாதிரி ஆக்கிவச்சிடுவாங்க. இவங்க படு சீரியஸா எழுத, இவங்களோட இன்னொரு பாதியான அணில்குட்டி அனிதா காமெடியா கலாய்ச்சி எழுதும்.
மார்பகங்கள் இல்லா பெண்ணின் மன உளைச்சல்...

வெண்பா எழுதுதல், மாதாந்திர குறுக்கெழுத்து புதிர் என்று பட்டையைக் கிளப்பி வரும் இலவசக் கொத்தனார் சரக்கு மேட்டர் பத்தி ரெசிப்பியோட சொல்லிருக்காரு பாருங்க.
நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி

நாட்குறிப்புகள், பாடல்கள் பற்றிய கருத்துகள், ஆன்மீகக் கருத்துகள் எனப் பல பிரிவுகளில் எழுதும் மகரந்தம் ராகவன் அண்ணாச்சி எழுதுன முழுக்க முழுக்க கிராமிய வழக்கில் எழுதப்பட்ட ஒரு நகைச்சுவை கதை. இப்பதிவில் நாமக்கல் சிபி சொல்லியிருப்பது போல "இத எழுதினது சாப்ட்வேர் இஞ்சினயர்னா யாரும் நம்ப மாட்டாங்க..."
சீனியம்மா - வடக்க சூலம்

இது தான் வலைச்சரம் ஆசிரியராக நான் எழுதும் கடைசிப் பதிவு. நான் வலைச்சர ஆசிரியராக இருந்த இந்த ஒரு வாரத்தில் பின்னூட்டமிட்டு ஊக்கமளித்த நண்பர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய சில பதிவுகளை அவர்கள் வலைச்சர ஆசிரியர்களாக இருந்த போது இணைத்து அறிமுகப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கும் இவ்வேளையில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கொடுத்த வேலையை ஒழுங்காக செய்தேனா இல்லையா என தெரியவில்லை. இவ்வாய்ப்பை எனக்கு வழங்கிய சீனா ஐயாவுக்கு நன்றி கூறி விடை பெறுகிறேன். வணக்கம்.
மேலும் வாசிக்க...

Friday, March 27, 2009

உள்ளமுள்ள ஜனங்க இந்த ப்ளாக்கைப் படிச்சு நெகிழும்

"முந்தி முந்தி விநாயகரே
முப்பத்து முக்கோடி தேவர்களே
வந்து வந்தெம்மை பாருமையா
வந்தனம் வந்தனம் தந்தோமையா
வந்தனம் வந்தனம் தந்தோமையா

வானத்துல சுத்துதடி ஒன்பது நவக்கெரகம்
பூமியில எடுத்துவந்தேன் தலையில நான் கரகம்
ஊருலகம் சுத்தி வரும் உத்தமபாளையம் சரகம்
உள்ளமுள்ள ஜனங்க இந்த பாட்டைக் கேட்டு கலங்கும்"

எதுக்கிப்போ கரகாட்டக்காரன் படப் பாட்டு? விநாயகருக்கு வணக்கம்னு வெச்சிப்போமே. இந்தப் பாட்டுக்கும் தலைப்புக்கும் என்ன தொடர்புன்னு கண்டுபிடிச்சி சொல்றவங்களுக்கு புள்ளையார் சார்புல அருள் பாலிக்கப்படும்.

தமிழ் வலையுலகில் ஏகப்பட்ட பதிவுகள் இருக்குது. ஆனா சில பதிவுகளைப் படிச்சிங்கன்னா உங்க மனசு நெகிழ்ந்து போகும், கண்ணு கலங்குனாலும் கலங்கலாம். மனசு நெகிழலன்னாலும், கண்ணு கலங்கலன்னாலும் குறைந்த பட்சம் நம்மை யோசிக்கவாச்சும் வைக்கும் இப்பதிவுகள். அப்படி பட்ட சில பதிவுகளைப் பாப்போம். இதுல கவிதை, உரைநடை ரெண்டும் அடக்கம்.

கவிதைகள்

துபாயில் தன்னுடைய நண்பரைப் பார்க்க சென்ற இடத்தில் தான் கண்டவற்றை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் தம்பி. வாழ்க்கை ஒவ்வொருக்கும் ஒவ்வொரு விதமாக இருப்பதை புரிந்து கொள்ளலாம்.
என் நண்பனுடன் ஒரு நாள்

கணவனுக்காக மனைவி காத்திருத்தலைப் பற்றிய தீக்ஷண்யாவுடைய ஒரு வித்தியாசமான பார்வை.
மனையாள் அன்பு

ஆண் பெண் நட்பு பற்றிய வேதாவினுடைய அழகான கவிதை ஒன்று.
நீ ஆணென்றும்! நான் பெண்ணென்றும்!

நாம் தெருவில் பார்க்கும் மனிதர்கள் சிலரின் வாழ்வை நாம் ஒரு நாள் வாழ்ந்து பார்த்தால் எப்படியிருக்கும் என ஏங்குகிறார் கீதா.
அவரவர் உலகம்

"No one has ever won a War" அப்படீங்கற ஆங்கில சொல்லாடலை நினைவுபடுத்தற மாதிரி, போரில் யார் வென்றாலும் தோற்றாலும், தோற்பது மனித இனம் தான் என்று அழகாக இக்கவிதையின் மூலம் சொல்கிறார் நாமக்கல் சிபி.
மரித்துக்கொண்டிருப்பது மனித இனம்தானே....!

ஒரு பெண் தாயாகும் தருணங்கள் அவள் கணவனின் பார்வையில். நெகிழவைக்கும் விவசாயியின் கவிதை.
ஜனனம்

கவிதை அல்லாதவை

ஒரு கரகாட்டம் ஆடும் பெண் தன் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்கிறார் ராமின் இந்த பதிவில்.
டங்கா.. துங்கா..மவுசுகாரி!!!!

நெருங்கியவர்களின் மரணம் நம் மனதில் ஏற்படுத்தும் தாக்கங்களை எழுதியிருக்கிறார் யாத்ரீகன்.
நெருங்கியவர்களின் மரணம்

2006இல் தேன்கூடு திரட்டி நடத்திய சிறுகதை போட்டியில் "வளர்சிதை மாற்றம்" என்ற தலைப்பில் முதல் பரிசு வென்ற இளவஞ்சியின் சிறுகதை. வாழ்க்கையை உணர்ந்து கொள்ள முயற்சிக்கும் ஒரு இளைஞனின் கதை.
விட்டில் பூச்சிகள்

நான் படித்த முதல் பத்து பதிவுகளுள் ஒன்று இது. புக் கிரிக்கெட், FLAMES விளையாட்டு என ஒரு நகரத்து சிறுவனின் சின்னஞ்சிறு உலகத்தைப் பிரதிபலிப்பது போல இருந்தாலும் இறுதியில் ஒரு கணமான இதயத்துடன் உங்களை விட்டுச் செல்லும் தேவின் இக்கதை. கதை என்பதை விட இதை அனுபவம் என்றே சொல்லலாம்.
பழைய பனையோலைகள்

நெல்லிக்கா, கொல்ட்டி என நிறைய பிரபலமான கதைகளை இவர் எழுதியிருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்த கதைகளுள் ஒன்று. வயதான பின் பெற்றோர்களுக்குப் பிள்ளைகளின் துணை எவ்வளவு அவசியமானது என்று உணர்த்தும் ஒரு நல்ல கதை.
பயணம்...

அழிக்கப்பட்ட ஒரு பெண் சிசுவிற்கு தன் உணர்வுகளை எடுத்துரைக்கும் ஆற்றல் வந்தால்...படித்து பாருங்கள் ஜீவ்ஸின் இப்புனைவை.
ஒரு மெளனத்தின் அலறல்
மேலும் வாசிக்க...

Thursday, March 26, 2009

பசுமை நிறைந்த நினைவுகளே!

ஒத்துக்கறேங்க...வலைச்சரம் தொடுக்கறது ஒன்னும் சுலபமான காரியம் இல்லைங்க. ஏற்கனவே படிச்ச பதிவுகள் தானே...சுலபமாத் தேடி எடுத்துடலாம்னு நெனச்சேன். ஆனா படிச்சப்போவே பிட் எடுத்து வச்சிருக்கனும் போலிருக்கு. அடிமனசுல தங்கியிருந்த அந்த பதிவுகளைத் தோண்டி எடுக்கறதுக்குள்ள பெரும்பாடா போயிடுச்சு. பழைய நினைவுகளை எல்லாம் அசைபோடுறதுன்னா ஒரு சுகம் தானே. அந்த சுகத்தை நமக்கு அள்ளிக் கொடுத்த சில பதிவுகளை வரிசை படுத்தறேன்.

கடந்த கால நினைவுகள்ல, அதிகப் பட்ச மக்களால ரசிக்கப்பட்டது எதுன்னு இணையத்துல தேடிப் பாத்தீங்கன்னா அது தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பற்றிய நினைவுகள் தாங்க. நம்ம தமிழ் வலையுலகிலும் தூர்தர்ஷனைப் பற்றிய சில அருமையான நினைவுபடுத்தல் (கொசுவத்தி) பதிவுகள் வந்துள்ளன.

முதலில் கொசுவத்தி சுத்துவதில் மாஸ்டரான கப்பிபயலின் தூர்தர்ஷன் பத்திய பதிவைப் படிச்சுப் பாருங்க. டிடி யில் வந்த பழைய சில பாடல்கள், நிகழ்ச்சிகள், அவங்க வீட்டுல டிவி பார்த்த அனுபவங்கள் இப்படின்னு ரொம்ப சுவாரசியமா எழுதிருக்காரு.

"ஆணா பொண்ணா பொறந்தது
அது தான் இங்க முதல் சேதி
ஆணா பொறந்தா சிரிப்பு என்ன - அட
பெண்ணா பொறந்தா வெறுப்பு என்ன"


ஸ்ரீவித்யா அந்த காலத்துல தூர்தர்ஷன்ல பாடுவாங்களே பார்த்திருக்கீங்களா? இந்த பாட்டு மெட்டு நல்லா ஞாபகம் இருக்கு."

டிடி - 1 & டிடி - 2(மெட்ரோ)


தூர்தர்ஷன் நாடகங்கள், நிகழ்ச்சிகள் அப்படின்னு கார்த்திகேயனும்(Sukas) தன் நினைவுகளைக் கலந்து கட்டி வழங்கியிருக்கிறார். இவர் ஒரு தேர்ந்த பென்சில் ஓவியக் கலைஞர் என்பது கூடுதல் தகவல். அவருடைய பென்சில் ஓவியங்களையும் அவருடைய தளத்தில் காணலாம்.

"வயலும் வாழ்வும், மனைமாட்சி, கொஞ்சம் நில்லுங்கள் ..உழைப்பவர் உலகம் ..இதில் முன்னோட்டத்தில் அடுத்தவார திரைப்படப் பேரைச் சொல்லுவார்களெனப் பார்த்தால் ..அதற்கு முந்தைய வாரம் எதோ "ஹாலிவுட் படம்" போட்டது போல "அடுத்த வாரம் ஞாயிறு 5 மணிக்கு தமிழ் திரைப்படம்" என்று முடிப்பர்.. வெட்டியாக போய்விடும்.."
சென்னைத் தொலைக்காட்சி நிலையம்


தசாவதாரம் படத்துல வர்ற கமலின் ஓப்பனிங் உரையின் பாணியில் ஆரம்பிச்சிருக்கும் அம்பியின் பதிவும் டிடி நிகழ்ச்சிகளைப் பற்றிய ஒரு அழகான மலரும் நினைவு.
"சன் டிவியும் விஜய் டிவியும் தமிழனின் வரவேற்பறையில் நுழையாத என்பதுகளில் தூர்தர்ஷன்காரர்கள் டில்லியிலிருந்து, போனா போகட்டும் என அவ்வப்போது தமிழ் நிகழ்ச்சிகளையும் நடத்தி கொள்ள அனுமதித்து இருந்த காலம்."
எதிரொலி

எல்லாரும் தூர்தர்ஷன் நிகழ்ச்சிகளைப் பத்தி எழுதிருக்கும் போது, சந்தன முல்லை கொஞ்சம் வித்தியாசமா கேபிள் டிவியோட ஆரம்ப நாட்களையும் படம்பிடிச்சி காட்டிருக்காங்க. கேபிளுக்கும் டிடிக்கும் ஒரு சின்ன ஒப்புமையும் பண்ணிருக்காங்க.

"கேபிள் கொஞ்சம் கொஞ்சமா பரிணாம வளர்ச்சி அடைஞ்சிக்கிட்டிருந்தப்போதான், திடீர்னு ஒரு சேனல்..சன் ன்னு!!ஆரம்பத்தில இ.மாலா-ன்னு ஒரு ஆண்ட்டி வருவாங்க!! அழகா இருப்பாங்க அந்த ஆண்ட்டி. இப்ப என்ன பண்றாங்கன்னு தெரியல!அப்புறம் வார்த்தை விளையாட்டு..கேம்ஸ் ஷோ, சினிமா குவிஸ், ரபி பெர்னார்டின் நேருக்கு நேர், பிரபலங்களின் பேட்டி என்று புதுப் புது நிகழ்ச்சிகள்!! ஆனா அப்ப பார்த்து நான் பப்ளிக் எக்ஸாம்..நிறைய மிஸ் பண்ணிட்டேன்!

இப்போ எத்தனையோ சேனல்கள்..நிறைய நிகழ்ச்சிகள்..
பார்க்க நேரமுமில்லை...பார்க்கும்படியாய் எந்த நிகழ்ச்சியுமில்லை!
விளம்பரங்கள் மட்டுமே ரசிக்கும்படியாயிருக்கிறது இப்பொழுதும் அப்போழுதும்!!"

தூர்தர்ஷனும் கேபிள் டீவியும்!!


எல்லாரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பத்தி கொசுவத்தி சுத்துனா KRS வித்தியாசமா தொலைக்காட்சி விளம்பரங்களைப் பத்தி எழுதிருக்காரு. சுவாரசியமா இருக்கு பாருங்க.

"பென்சில்களுக்கு இடையே ஒட்டப் பந்தயம்...நட்ராஜ் பென்சில் தவிர எல்லாப் பென்சிலுக்கும் பாதியிலேயே மூக்கு ஒடைஞ்சிரும்! கடைசீல நட்ராஜ் இஸ் த வின்னர்!
(நட்ராஜ் ஜியாமெட்ரி பாக்சும் அப்போ ரொம்ப ஃபேமஸ்! கேமலின் பாக்ஸ் விலை அதிகம்! நட்ராஜ் தான் ஏழைக்கேத்த எள்ளுருண்டை! நீங்க எந்த ஜியாமெட்ரி பாக்ஸ் வச்சிருந்தீங்க மக்கா?)"

***குழந்தைப்பருவ விளம்பரங்கள்! போட்டுடைத்த டாக்டர் கலைஞர்!


டிவி நினைவுகள் போலவே வானொலி கேட்ட மலரும் நினைவுகளையும் எழுதி வச்சிருக்காரு கப்பி பய.

"ஆகாசவாணி செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண்ஸ்வாமி" இது தான் அந்த நாட்களில் படுக்கையிலிருந்து எழ அலாரம். அதிகாலையில் எழுந்ததுமே அப்பா வானொலியை உயிர்ப்பித்துவிடுவார். சுப்ரபாதம், பக்திப் பாடல்கள், "ஏசு அழைக்கிறார்", நாகூர் ஹனிபாவின் கம்பீரக் குரலில் பாடல்கள் என்று ஆரம்பிக்கும். அப்போது விழிப்பு வந்தாலும் போர்வையை இழுத்துப் போர்த்தி அரைத்தூக்கத்தில் படுத்திருப்பது பரமசுகம். பக்திப் பாடல்கள் முடிந்ததும் வேளாண் செய்திகள். "
நினைத்தாலே இனிக்கும்


பள்ளி நினைவுகளினூடே மறந்து போன சில சின்னப்பசங்க பாட்டையும் நினைவு படுத்துகிறார் கப்பி.

"பிஸ்கட் பிஸ்கட்
ஜாம் பிஸ்கட்
என்ன ஜாம்
கோ ஜாம்
என்ன கோ
டீ கோ
என்ன டீ
பன்ருட்டி"

பிஸ்கட் பிஸ்கட் ஜாம் பிஸ்கட்


என்பதுகளின் இறுதியில் சிறுவர்களாக இருந்த போது ரசித்த மிட்டாய்களை நினைவு படுத்துறாங்க சந்தனமுல்லை.

"Naturo இது கெட்டிப்படுத்தப் பட்ட பழச்சாறு. ஆரம்பத்தில் மாம்பழச் சுவையில் மட்டுமே கிடைத்தது. பின் கொய்யா மற்றும் மற்றொரு
சுவையில் அறிமுகப் படுத்தப்பட்டது. இப்போதும் மாம்பழச் சுவையில் கடைகளில் பார்க்கிறேன்!"

சாக்லேட் கதைகள்..


பேருந்தில் பயணம் செய்த நினைவுகளை நீங்களும் அவர் கூட பயணம் செய்யுற மாதிரி அசைபோடுறாரு கப்பி.

"கைக்குழந்தையை வைத்துக்கொண்டு தடுமாறும் இளம்பெண்ணைப் பார்த்து "எவனும் இடம் கொடுக்க மாட்டான். தூங்கற மாதிரி நடிப்பானுங்க" என்று கமெண்ட் அடித்த நாற்பது வயது மனிதர் அவருக்கு இடம் கிடைத்ததும் ஜன்னலை இறக்கி விட்டு கண்கள் மூடிக்கொள்வதையும், அந்தப் பெண் உறங்கும் குழந்தையை தோளில் போட்டு நின்று கொண்டிருப்பதையும் காண முடிவது இத்தகைய பேருந்துப் பயணங்களில் தான்."
பேருந்து பயணங்களில்...குழந்தை பருவத்தில் படித்த சில அருமையான தமிழ் பாடல்களை நினைவு கூறுகிறார் Sukas. கூடவே கவிஞர் அழ.வள்ளியப்பா பற்றிய நினைவுகளையும்.

"வானத்திலே திருவிழா
வழக்கமான ஒருவிழா

இடியிடிக்கும் மேகங்கள்
இறங்கி வரும் தாளங்கள்

மின்னலொரு நாட்டியம்
மேடை வான மண்டபம்

தூறலொரு தோரணம்
தூய மழை காரணம்"

குழந்தைக் கவிஞர்...??
மேலும் வாசிக்க...

Tuesday, March 24, 2009

ராபர்ட் ஸ்காட் கற்றுத் தரும் பாடம்

கேப்டன் ராபர்ட் ஃபால்கன் ஸ்காட்(Capt. Robert Falcon Scott) என்பவர் ஒரு ஆங்கிலேய மாலுமி. உலகிலேயே தென் துருவத்தில்(South Pole) முதன்முதலில் காலடி பதித்தவர்கள் எனும் பெருமையை பெறுவதற்காக இவரும் இவருடன் மேலும் ஐந்து வீரர்களும் கடுமையான குளிர் பிரதேசமான அண்டார்டிக் கண்டத்தில் 1911 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஒரு பயணத்தை மேற்கொள்கிறார்கள். பலவிதமான தடைகளையும், கடினங்களையும் சந்தித்த பின்னர் 1912 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் நாள் தென்துருவத்தைச் சென்றடைகிறார்கள் ஸ்காட்டும் அவர் குழுவினரும். அங்கு சென்று சேர்ந்ததும் அவர்களுக்கு ஒரு பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது. ராபர்ட் ஸ்காட் தென் துருவத்தில் கால்பதிக்க எண்ணி பயணத்தைத் துவங்கிய கிட்டத்தட்ட அதே நேரத்தில் நார்வே நாட்டைச் சேர்ந்த ரோஆல்ட் அமண்ட்சென்(Roald Amundsen) என்ற தேடலாய்வாளரும் அவர் குழுவினரும் தென் துருவத்தை அடையும் தங்களுடைய பயணத்தையும் துவக்கினர். பூகோள தென் துருவத்தை(Geographic South Pole) சென்றடைய இவ்விருவரும் மேற்கொண்ட ஆயத்தங்கள் வெவ்வேறானவை. இவர்கள் பின்பற்றிய பாதைகளும் வெவ்வேறானவை. ஸ்காட்டின் குழுவினர் தென் துருவத்தைச் சென்றடைவதற்கு நான்கு வாரங்களுக்கு முன்னரே அதாவது 1911ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் தேதியே அங்கு வந்தடைந்து திரும்பிச் சென்று விட்டதை ராபர்ட் ஸ்காட்டும் அவர் குழுவினரும் அறிந்து கொள்கின்றனர்.

தென் துருவத்தில் சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டு, இங்கிலாந்து நாட்டின் கொடியான யூனியன் ஜாக்கைப் பறக்க விட்டு விட்டு தாங்கள் அங்கு வந்திருந்தமைக்குச் சில ஆதாரங்களையும் விட்டு விட்டு ராபர்ட் ஸ்காட்டும் அவர் குழுவினரும் தாங்கள் தோற்கடிக்கப் பட்டுவிட்டோம் என்ற சோர்வுடனும் திரும்புகின்றனர். திரும்பும் வேளையில் வானிலை மேலும் சீர்கெடுகின்றது. மைனஸ் 25 டிகிரி ஃபாரண்ஹீட்டுக்கும் குறைவான கடும் குளிரும் பனிக் காற்றும் தென் துருவத்திலிருந்து திரும்பும் ஸ்காட்டின் குழுவினரைத் தாக்குகிறது. 1912 ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி, பயணத்தின் காரணமாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இவான்ஸ்(Evans) என்ற வீரர் தங்கள் கண் முன்னர் உயிர் விடுவதை ஸ்காட்டும் அவர் குழுவினரும் பார்க்கின்றனர். தென் துருவத்திலிருந்து அவர்களுடைய பேஸ் கேம்ப் அமைந்துள்ள இடத்திற்குமிடையேயான ஆயிரத்திற்கும் மேற்பட்ட மைல்களைக் கடக்க முற்படும் போது பல பிரச்சினைகளைச் சந்திக்கின்றனர். கடும் குளிரின் காரணமாக அவர்களால் ஒரு நாளுக்கு 6 அல்லது 7 மைல்களுக்கு மேல் கடக்க முடிவதில்லை. இந்நிலையில் நாட்களின் கணக்கு மறந்த நிலையில் கேப்டன் ஓட்ஸ்(Capt. Oates) என்ற வீரர் நோய்வாய்ப் படுகிறார். இதற்கு மேல் என்னால் வர முடியாது, என்னை விட்டு விட்டு நீங்கள் சென்று விடுங்கள் என்று கூறுகிறார். இதற்கு அவர்கள் உடன்பட மறுக்கின்றனர். அதற்கு மறுநாள் கடும் 1912 ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி, உறைபனியுடன் கூடிய சூறாவளிக் காற்று வீசுகிறது. தன்னுடைய நண்பர்களுக்குத் தான் ஒரு பாரமாக இருக்கக் கூடாது என்று நினைத்த ஓட்ஸ் "நான் சற்று வெளியே செல்கிறேன். முடிந்தால் மற்றொரு முறை சந்திப்போம்"("I am just going outside and may be some time.") என்று சொல்லிவிட்டுச் செல்கிறார். அதன் பின்னர் ஓட்ஸை ஸ்காட்டின் குழுவினர் பார்க்கவில்லை.

இதற்கிடையில் கேப்டன் ராபர்ட் ஸ்காட்டும், அவருடன் எஞ்சியிருக்கும் லெப்டினண்ட் போவர்ஸ்(Lt.Bowers) மற்றும் டாக்டர்.வில்சன்(Dr.Wilson) ஆகிய மூவரும் கடும் குளிரின் காரணத்தினாலும் உணவு பற்றாக்குறையின் காரணமாகத் தங்கள் உடல் பலத்தை எல்லாம் இழந்து கடுமையான சோர்வுக்கும் அசதிக்கும் உள்ளாகின்றனர். 1912 ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி தென் துருவத்திலிருந்து திரும்ப முடியாத நிலையில் தங்கள் இறுதி மூச்சை விடுகின்றனர். "நாங்கள் இறுதி வரை போராடிப் பார்ப்போம், ஆனால் நாங்கள் எங்கள் சக்தி அனைத்தையும் இழந்து கொண்டிருக்கிறோம், எங்கள் முடிவு வெகுதூரத்தில் இல்லை. இதற்கு மேலும் என்னால் எழுத முடியும் என்று தோன்றவில்லை, அந்தோ பரிதாபம் தான். கடவுளின் பேரால் எம் மக்களைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்" இது தான் ராபர்ட் ஸ்காட் சொல்லிய கடைசி வார்த்தைகள்.

"I do not think we can hope for any better things now. We shall stick it out to the end, but we are getting weaker, of course, and the end cannot be far. It seems a pity, but I do not think I can write more.

R. Scott

Last entry

For God's sake look after our people."
அம்மூவரின் சடலங்களும் 1912 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12ஆம் தேதி பனியில் புதைந்த நிலையில் ஒரு மீட்புக் குழுவினரால் கண்டெடுக்கப் படுகின்றன. அதன் பின்னர் பிரிட்டனைச் சேர்ந்த இளைஞர்கள் பலருக்கும் ராபர்ட் ஸ்காட் என்பார் ஒரு மிகப் பெரிய தன்னம்பிக்கைச் சின்னமாகத் திகழ்ந்து வந்திருக்கிறார். இதையெல்லாம் இப்ப எதுக்குச் சொல்றேன்னு புரியுதுங்களா? செல்ஃபோன், சாட்டிலைட் ஃபோன், இண்டர்நெட், இமெயில் ஏதுமில்லா அக்காலத்தில் யாருமில்லாத ஒரு அத்துவானப் பனிக்காட்டில் இயற்கையுடன் போராடி உயிர்விட்ட ஐந்து மனிதர்கள் பற்றிய கதையை நாமறிந்து கொள்ள காரணமாக இருப்பது கேப்டன்.ராபர்ட் ஸ்காட் நாள் தவறாமல் எழுதிய அவருடைய நாட்குறிப்பு...அதாவது ராபர்ட் ஸ்காட்டின் டைரி. இப்பவாச்சும் என்ன சொல்றேன்னு புரியுதுங்களா? என்னது? இன்னும் புரியலியா? அறிவுரை சொல்றேன்யா அறிவுரை. பழங்காலத்தில் நம் அரசர்கள் எவ்வாறு அறநெறி வழுவாமல் ஆட்சி புரிந்தார்கள் என்பதையும், மக்களின் வாழ்க்கை முறைகளையும் கல்வெட்டுகளின் மூலம் அறிகிறோம். அதெல்லாம் பழங்காலம். ஆனா இப்போ இருக்குற டென்சன்ல, ஒவ்வொருத்தருக்கும் தன்னோட வேலையைத் தக்க வச்சிக்கிறதும், தன் புள்ளைங்களைப் படிக்க வைக்கிறதுக்குமே சரியாயிருக்குது. இதுலே எங்கே அடுத்தவனைப் பத்தி கல்வெட்டு எழுதறது?

அதுனால? அதுனால...நான் என்ன சொல்றேன்னா... அடுத்தவன் நம்மைப் பத்தியும் நம்முடைய வாழ்க்கையைப் பத்தியும் கல்வெட்டு எழுதலைன்னா பரவால்லை. நம்மளைப் பத்தி நாமளே கல்வெட்டு எழுதிக்கிறதுக்குத் தொழில்நுட்ப வளர்ச்சி வழிவகை ஏற்படுத்தி கொடுக்குது. அந்த வழி தான் ப்ளாக் அல்லது வலைப்பதிவு. வலைப்பதிவு ஏன் எழுதனும்? ஒன்னுமில்லீங்க...நம்ம வாழ்க்கையைப் பத்தி நாமே எப்பவோ எழுதி வச்சதை ஒரு சில வருஷங்கள் கழிச்சு நாமே எடுத்துப் பாத்தோம்னா கூட "ஆஹா! அந்த காலத்துல நம்மளோட சிந்தனைகளும், கருத்துகளும், ரசனைகளும் இப்படி இருந்துச்சா?" எனத் தோனும். மனிதனுக்குக் கண்டிப்பா வளர்ச்சி தேவை. உடல் வளர்ச்சியைச் சொல்லவில்லை. மனவளர்ச்சியைப் பற்றி சொல்லுகிறேன். நம்முடைய ரசனைகளும், கருத்துகளும், எண்ணங்களும் பரந்து விரிவடைவதைப் படம் பிடித்துக் காட்டுவன வலைப்பதிவுகள். அதற்கு முன்னர் ராபர்ட் ஸ்காட்டின் டைரி குறிப்புகளையே எடுத்துக் கொள்வோமே...தங்கள் வாழ்நாளின் கடைசி சில நாட்களைப் பற்றி அவர் எழுதியிரா விட்டால் அவர்கள் பயணம் தோல்வியடைந்ததற்கான காரணங்களையும், அதை நாமறிந்து கொண்டு பின்னாளில் அத்தவறுகள் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளும் வாய்ப்பினையும் இழந்திருப்போம். மேலும் ராபர்ட் ஸ்காட் தன் மனைவி கேத்லினுக்காகவும் ஒரு குறிப்பினை விட்டுச் சென்றார் "என் விதவை மனைவிக்கு" என்று தொடங்கும் ஒரு கடிதத்தில். உயிரோடு திரும்ப வரவில்லை என்ற காரணத்தினால், நான் ஒவ்வொரு நாளும் நரக வேதனையை அனுபவித்தேன் என்று எண்ணிவிட வேண்டாம். தென் துருவம் சென்றடைந்து அங்கிருந்து திரும்பி வரும் வரை நாங்களனைவரும் நல்ல நிலையில் தான் இருந்தோம்" என்று குறிப்பிடுகிறார். அத்துடன் "மறுமணத்தைப் பற்றி உன் மனதில் தோன்றும் எண்ணங்களை ஒதுக்கி விட வேண்டாம். உனக்கேற்றவன் கிடைத்தால் மறுமணம் செய்து கொள்" என்றும் கூறிச் சென்றிருக்கிறார்.

நான் இப்பதிவின் வாயிலாகச் சொல்ல வந்தது வலைப்பதிவுகளை ஒரு நாட்குறிப்பாக அதாவது டைரியாகப் பயன்படுத்துபவர்களைப் பற்றி. அதாவது தங்கள் வாழ்வில் நடந்த/நடக்கின்ற நிகழ்ச்சிகளை அவை நடந்த வண்ணம் பதிவு செய்து வைத்திருப்பவர்களை. அதில் தலை சிறந்தவர் என நான் கருதுவது...துளசி அம்மா. இதில் மாற்று கருத்து இருக்க முடியாது என்றே எண்ணுகிறேன். உங்க பக்கத்து வீட்டு ஆண்ட்டி உங்க கூட உக்காந்து சிநேகமா கதை சொல்ற மாதிரி இருக்கும் இவங்களோட பதிவுகள். கதை மட்டும் இல்லாம, பலதரப்பட்ட விஷயங்களையும், கருத்துகளையும் பகிர்ந்துப்பாங்க. இவ்ளோ ஏங்க...ராபர்ட் ஸ்காட் பத்தி கூட எழுதி வச்சிருக்காங்க அவங்க பதிவுல. அவங்க எழுதுன எட்டு நூத்தி சொச்சப் பதிவுகள்ல பெரும்பாலானவற்றை நான் படிச்சதில்லை...ஆனா படிச்ச வரைக்குமே அவங்க ஒரு தலைசிறந்த டைரி எழுத்தாளர் என்று எனக்கு கண்டிப்பா தெரியும். ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் என்ற வகையில், தன் வாழ்க்கையில் அவர் சந்தித்த மனிதர்களைப் பற்றிய எவ்ரிடே மனிதர்கள் என்ற பதிவுகளைப் படிச்சிப் பாருங்க.

அடுத்து என் நினைவுக்கு வருபவர் மா.சிவக்குமார். நானெல்லாம் பதிவெழுத வந்ததுக்குக் காரணம் அதன் மூலம் கிடைக்கும் கமெண்டுக்காக. நான் எழுதிய பதிவுக்குப் பின்னூட்டம் வரவில்லை என்றால் துவண்டு விடுவேன். "ஆனால் கமெண்டு வரலைன்னாலும் நான் ஒரு நாட்குறிப்பு போல எழுதிட்டுத் தான் இருப்பேன்னும் அதே காரணத்துக்காகத் தான் என் பதிவுல பின்னூட்ட மட்டுறுத்தலைச் செயல்படுத்தவில்லை" என மூனு வருடத்துக்கு முன் இவரை நான் சந்திச்சப்போ என்கிட்ட சொன்னாரு. அன்றாட நிகழ்வுகளையும், பொருளாதாரம், வணிகம் பற்றிய தன்னுடைய கருத்துகளையும் பதிந்து வைத்திருக்கிறார் இவர்.

அடுத்து துளசியம்மாவைப் போலவே வெகு சுறுசுறுப்பாக எழுதிக் கொண்டே இருக்கும் எங்கள் தலைவி கீதா சாம்பசிவம் மேடம். இண்டர்நெட்டைக் கனெக்ட் செய்வதற்கு டாட்டா இண்டிகாமுடன் மல்லுக்கட்டியதையும், அவர்கள் வீட்டைச் சுற்றித் தண்ணீர் தேங்கியிருப்பதையும், வீட்டிற்குள் வந்து நாய் குட்டி போட்டதையும் அதற்கு இவர் செவிலித் தாயாக இருந்ததையும் நகைச்சுவை பொங்க விவரித்திருப்பார். அத்துடன் முருகர், விநாயகர், கிருஷ்ணர் என அனைத்து கடவுளர்களும் இவர் வலைப்பதிவில் குடிக் கொண்டிருப்பார்கள்.

வலைப்பதிவுகளை ஒரு நாட்குறிப்பு போல எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் இவர்களுடைய பதிவுகளைக் கொஞ்சம் தோண்டிப் பாருங்களேன்.
மேலும் வாசிக்க...

Monday, March 23, 2009

வலைச்சரத்தில் கைப்புள்ள - அறிமுகப் பதிவு

வணக்கம். மார்ச் 23ஆம் தேதி தொடங்கும் வாரத்துக்கு என்னை வலைச்சர ஆசிரியராக இருக்குமாறு சீனா ஐயா அழைப்பு விடுத்திருந்தார். முதலில் அவருக்கு என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

கைப்புள்ள எனும் புனைபெயரில் எழுதிவரும் என்னுடைய பூர்வாசிரமப் பெயர் மோகன்ராஜ் என்பது. Kaipullai Calling...எனும் என்னுடைய சொந்த வலைப்பதிவிலும், வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் என்ற குழு வலைப்பதிவிலும் எழுதி வருகிறேன். 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் கடைசி சில நாட்கள் எஞ்சியிருக்கும் நிலையில் என் தமிழ் வலைப்பூவைத் தொடங்கினேன். அது முதல் இன்று வரை கிட்டத்தட்ட, சற்றேறக் குறைய, அநேகமாக, சுமாராக, தோராயமாக 184 பதிவுகளைப் பதிப்பித்திருக்கிறேன் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன். இது தான் எழுத வேண்டும் என்று எண்ணி கைப்புள்ள காலிங் என்ற என் வலைப்பூவைத் தொடங்கவில்லை. என்ன தான் இருக்குன்னு பாப்போமே அப்படின்னு பாக்க ஆரம்பிச்சப்போ வலைப்பூக்களில் தமிழ் எனக்கு ஒரு புதிய உலகத்தைக் காட்டியது. சிலரைப் போல நெடுங்காலம் அடுத்தவரின் பதிவுகளைப் படித்திருந்து விட்டு என் வலைப்பூவைத் தொடங்கவில்லை...அப்போ தான் பாத்தேன்...அப்போவே ஆரம்பிச்சிட்டேன். தமிழ் வலைப்பூன்னு சொன்னாலும் என்னோட முதல் சில பதிவுகள் தங்கிலிஷ்ல தான் இருக்கும்...அதுக்குக் காரணம் மூனு பதிவு இருந்தா தான் தமிழ்மணத்துல இணைப்பாங்க அப்படீங்கறதுனால தான்.

சரி...ரொம்பவும் ரம்பம் போடாம என் வலைப்பூவில் நான் எழுதியதில் படித்தவர்களுக்குப் பிடித்ததையும் எனக்கு பிடித்ததையும் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

மனதுக்கு நெருக்கமான பதிவு
நியூ படத்து ட்ரெயிலரைப் பாத்துட்டு நான் எழுதுன இந்த பதிவு என் மனதுக்கு நெருக்கமான ஒரு பதிவு. அப்போது பிரபலமாக இருந்த தேன்கூடு திரட்டியில் "அதிகம் பார்வையிடப்பட்ட இடுகைகள்" தொகுப்பில் இப்பதிவு இடம் பிடித்தது. ஆபாசமான படம் என்று முத்திரை குத்தப்பட்ட நியூ படத்தில் அப்படி என்ன தான் பிடித்த விஷயம் இருக்குன்னு படிச்சித் தான் பாருங்களேன்.

நியூ படத்தில் பிடித்தது

காமெடி மாதிரி

"Tinkle"னு சிறுவர்களுக்கான ஆங்கில சஞ்சிகை பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா? அதில் "ஷிகாரி ஷம்பு" என்று ஒரு கார்டூன் தொடர் வரும். இது தமிழில் எதோ ஒரு சஞ்சிகையில் "வேட்டைக்கார வேம்பு" என்ற பெயரில் வெளி வரும். தினமலர் சிறுவர் மலரில் வரும் 'சொரிமுத்துஜி' கூட இந்த மாதிரி ஒரு புல்தடுக்கி பைல்வான் தான். துப்பாக்கியே பிடிக்கத் தெரியாத ஒரு தொடை நடுங்கி வேட்டைக்காரரான ஷம்பு, ஏனோ தானோ என்று செய்யும் செயல்கள் எல்லாம் பெரிதாகப் பேசப் படும். சிங்கத்தை வேட்டையாட அவர் துப்பாக்கியால் சுடும் போது குறி தவறி அது ஒரு புலியை வீழ்த்தும். "ஆஹா! சிங்கத்தோடு ஒரு புலியும் அட்டகாசம் செஞ்சிருக்கு போலிருக்கே. ஷம்பு யூ ஆர் ரியல் கிரேட்" அப்படின்னு அவரை ஊரார் எல்லாம் அசகாய சூரர், வீரர் என்றெல்லாம் தலையில் வைத்து கொண்டாடுவார்கள். உண்மையில் அவர் "வீக்னெஸ்"ஆக இருக்கும் விஷயம் யாருக்கும் வெளியில் தெரியாது. அது போல எங்கள் வீட்டில் நடந்த நானும் என் தம்பியும் சிறுவர்களாக இருந்த போது நடந்த சம்பவங்களைத் தொகுத்து "தடிப்பசங்க" என்ற பெயரில் ஒன்னு, ரெண்டு என்று நம்பர் போட்டு எழுதிய பதிவுகள், பதிவர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று உண்மையில் மகா கடியனான என்னை ஒரு காமெடி பதிவனாக ஏற்றுக் கொள்ளும் நிலைமை உருவாகி விட்டது.

பரிட்சை பேப்பரை வீட்டில் காட்டும் போது என் தம்பியும் நானும் செய்த தில்லாலங்கடி வேலைகளைப் படிச்சிப் பாருங்க.
தடிப்பசங்க # 3

வீட்டுல ஒரு "பெட் அனிமல்ஸ்" வளர்க்கனும்ங்கிற எங்களோட ஆசை நிறைவேறாம போனதுக்கான காரணங்களைப் பாருங்க.

தடிப்பசங்க # 7


இந்த பதிவைப் பத்தி நான் சொல்லக் கூடாதுன்னு தான் நெனச்சேன். ஆனா சொல்லாட்டிப் போனாலும் யாராச்சும் கமெண்ட்ல கொண்டாந்து போட்டுருவாங்க. அதனால நானே போட்டுடறேன். உள்ளே என்ன இருக்குன்னு நீங்களே பாத்துக்கங்க :)

வச்சான்யா ஆப்பு


நெஞ்சை நக்குனது

என் உண்மையான கேரக்டரோடு ஒத்துப் போகற பதிவுகளை வெகுநாள் கழித்து தான் என் வலைப்பதிவில் இட்டேன். "கைப்புள்ள உனக்கு இப்படியொரு முகம் இருக்கா?"அப்படின்னு பல பேரு அந்தப் பதிவுகளைப் படித்துவிட்டு ஆச்சரியப் பட்டுப் போனார்கள்.

எனக்கு வயசாகிடுச்சான்னு நான் கேட்ட கேள்விக்கு எத்தனை பேரு ஆர்வமா வந்து பதில் சொல்லிருக்காங்க பாருங்க. நெஞ்சை நக்கியிருந்தாலும் நூறுக்கு மேல அடிக்க முடிஞ்சுதேன்னு எனக்கும் ஒரு ஆச்சரியம் தந்த பதிவு இது.
வயசாயிடுச்சாங்க?

நிஜ வாழ்க்கையில் நான் கண்ட ஒரு சம்பவமும், தற்கொலை செய்து கொள்ளுதல் குறித்த என் எண்ணங்களும்.
தசரதர்கள் வாழ்வதில்லை

பெற்றவர்களைப் பார்வையில் பிள்ளைகளும், பிள்ளைகளின் பார்வையில் பெற்றவர்களும்.
தசரதர்கள் வாழ்வதில்லை...தொடர்ச்சி

கொசுவத்தி சுத்துனது

படிக்கும் வயதில் மிகவும் ரசித்த பேருந்து பயணங்களைக் குறித்த சில மலரும் நினைவுகள், மூன்று பகுதி கொண்ட இத்தொடரில்.
பஸ் பயணங்களில் #1

பஸ் பயணங்களில் #2

பஸ் பயணங்களில் #3

ஊர்சுத்திட்டு சுத்துனது

ராஜஸ்தான் மாநிலம் சித்தூர்கட் என்னும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஊரில் வேலை நிமித்தமாகத் தங்கியிருந்த போது ஊர்சுத்திப் பார்த்துவிட்டு ஒரு தொடராக எழுதியது கீழே உள்ள இம்மூன்று பதிவுகளும். இதில் மூன்றாவதாக உள்ள பதிவு, அப்போது தமிழ்மணம் நடத்திக் கொண்டிருந்த பூங்கா இணைய இதழில் இடம்பிடித்தது.

எனது சித்தூர்கட் செலவு

தொண்டையில் தண்ணி பார்க்கலாம்

நாகா சாதுக்களும் ஒரு அறிவாளியும்

சில காலத்துக்கு முன்னாடி ஆங்கிலத்தில் எதிர்பாராத சமயத்தில் நடப்பவற்றைப் பற்றி ஒரு 10 ரூல்கள் என்று ஒரு ஃபார்வர்டு மெயில் வந்தது ஞாபகமிருக்கா? அதன் சரியான பெயர் நினைவிலில்லை. அதில் ஒன்று "கையில் க்ரீஸ் ஒட்டி கையெல்லாம் அழுக்காக இருக்கும் போது தான் மூக்கு அரிக்கும்" என்பது. அது போல ஓரளவுக்கு ஆணிகள் அற்று இருந்த வேளையில் வலைச்சர ஆசிரியராக இருக்க ஒப்புக்கொண்டதும் திடீரென சில ஆணிகளும், இரு டிரெயினிங் செஷன்களும் திடீரென எங்கிருந்து தான் முளைத்தனவோ என ஆச்சரியமாக இருக்கிறது. இருந்தாலும், என் பதிவுகளைத் தேர்ந்தெடுத்து பிரிவுகளாய்ப் பிரித்து உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் எந்தளவு ஆர்வத்தைக் காட்டினேனோ, அதே அளவு ஆர்வத்தை நான் ரசித்த மற்ற பதிவுகளைப் பற்றி எழுதும் போது வெளிப்படுத்த முயற்சிக்கிறேன். நாளை சந்திப்போம். நன்றி.
மேலும் வாசிக்க...

Sunday, March 22, 2009

பணிமாற்றம் - கூல்ஸிடமிருந்து கைப்புள்ளைக்கு

அன்பின் பதிவர்களே
அருமை கூல்ஸ் கார்த்தி ஒரு வார காலமாக ஆசிரியப்பணியினை சிறப்பாகச் செய்து இன்று விடைபெறுகிறார். அவர் வித்தியாசமான முறையில் பணியினை நிறைவேற்றி இருக்கிறார். பதின்மூன்று பதிவுகள் இட்டிருக்கிறார். பதினெட்டு பதிவர்களின் பதிவுகளை அறிமுகப்படுத்தி இருக்கிறார். அவரது சிறந்த பதிவுகளையும் அறிமுகப்படுத்தி இருக்கிறார். மொத்தத்தில் மகிழ்வுடன் மனநிறைவுடன் விடைபெறுகிறார். அவரை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை கலந்த மகிழ்ச்சி அடைகிறோம்.

அடுத்த் 23ம்நாள் துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க வருகிறார் கைப்புள்ளை. இவர் கைப்புள்ளை காலிங் என்ற வலைப்பூவின் உரிமையாளர். வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் எழுதி வருகிறார். சுவரொட்டிகளும் ஒட்டி வருகிறார். 2005 முதல் ஏறத்தாழ 200 பதிவுகள் வரை போட்டிருக்கிறார். இவரை வருக வருக என வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

நிற்க, சில பணிச்சுமை காரணமாக அடுத்த வாரத்திற்கு ( 30.03.2009 ) ஆசிரியரை இன்னும் தேர்ந்தெடுக்க இயலவில்லை. இது தேர்தல் நேரமல்லவா - எனவே நாங்கள் தேர்ந்தெடுக்காமல் விண்ணப்பங்கள் பெற்று நியமிக்கலாம் எனத் தீர்மானித்தோம். அடுத்த வாரத்திற்கு ஆசிரியராகப் பொறுப்பேற்க விருப்பமுள்ளவர்கள் தனி மடலில் cheenakay@gmail.com என்ற முகவரிக்கு விண்ணப்பித்தால் - பரிசீலனை செய்து நியமனம் செய்ய இயலும். அடுத்தடுத்த வாரங்களுக்கும் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.

சீனா
மேலும் வாசிக்க...

பயணங்களில்....

வாழ்வின் சுவாரஸ்யமான விசயங்களில் பயணங்களும் உண்டு.....அது ரயில் பயணமோ அல்லது பேருந்து பயணமோ....பல வித்தியாச அனுபவங்கள் வித்தியாச மனிதர்கள் என்று மிக சுவாரஸ்யமாக இருக்கும்.....

அந்த அனுபவங்கள் போல் ஒரு உன்னத அனுபவமாகி விட்டது என் வலைச்சர அனுபவம்.....

பல நல்ல நண்பர்களை அடையாளம் காட்டியது...

ஜமால்

குடந்தை அன்பு அண்ணன்

ரம்யா அக்கா...

நிலா அம்மா

பார்சா குமாரன்

கோமா அக்கா

கணினி தேசம்

மற்றும் பலர்....

அவர்களுக்கு என் நன்றிகள்....

உண்மையை சொல்ல வேண்டியதாயின் ,
எனக்கு உண்மையில் அந்த அளவுக்கு பிற தளங்களுக்கு அல்லது வலைகளுக்கு போகும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை ...
என் அனுபவம் மிக குறைவு.., பெரும்பாலும் நெட் சென்டெர் தான் போக வேண்டி இருப்பதால் , நான் என்னுடைய வலையிலயே பொழுதை கழித்து விட்டேன்....

என் குறைவான அறிமுகங்களுக்கு மன்னித்து கொள்ளுங்கள்....

எழுத வந்தபோது எவ்வாறு நாம் எழுத போகிறோம் என்று விழித்தேன் , சீனா அண்ணன் கொடுத்த தைரியத்திலயே எழுதினேன்...

சீனா அண்ணன் உண்மையில் கிரேட்.....

நல்ல ஒரு அனுபவம் அமைய காரணமாக இருந்தார்....
என்னை பொருத்த வரை....

எனக்கு தெரிந்து சிரிப்பை விட நல்ல வரவேற்பு இருக்க முடியாது..
அந்த சிரிப்பிலேயே நாம் ஒரு சிறந்த விருந்தோம்பலை கொடுத்து விட்டோம் என்று சொல்லலாம்..நினைத்து பாருங்கள் நாம் ஒரு நண்பரின் வீட்டுக்கு போகிறோம் அவர் சிரிக்காமல் வா என்று மட்டும் சொல்லிவிட்டு அறுசுவை உணவை வழங்கினாலும் நம் மனதில் அவர் முகமே உறுத்தும்...
நண்பர்களையோ,தெரிந்தவர்களையோ வழியில் பார்க்கிறீர்களா,பேச விருப்பம் இல்லையா,முகத்தை மறைக்காமல் சின்ன சிரிப்பை உதிர்த்து விட்டு செல்லுங்கள் அது உங்களுக்கு நல்ல மனநிலையை மட்டுமல்ல எந்த ஒரு இறுக்கமும் இல்லாத சூழ்நிலையை தரும் ,அந்த நண்பரின் மனதுக்கும் ஒரு புத்துணர்ச்சியை தரும் அதை விட்டு இவன் எங்கே வந்தான் என்று என்னும் வண்ணம் முகத்தை இறுக்கமாக வைத்து கடக்காதிர்கள்.
இரண்டு நாட்கள் முன்பு ஒரு ரயில் பயணம் செல்ல வேண்டி இருந்தது,வண்டியில் ஏறிய உடன் பக்கத்திலே கதவோரம் இருந்த ஒருவன் அவன் பாட்டுக்கு சிரித்து கொண்டே இருந்தான்..முதலில் பைத்தியம் என்று நாங்கள் இருந்தோம்,சிறிது நேரத்தில் அருகில் இருந்தவர்கள் முகத்திலும் எனது முகத்திலும் கூட அவன் சிரிக்கும் நேரங்களில் சின்ன புன்னகை...மனம் அவ்வளவு நேரம் யோசித்து வந்த அனைத்தையும் மறந்து அமைதியானது போன்ற ஒரு உணர்வு,நான் அருகில் இருந்தவரை பார்த்து சிரிக்க அவரும் என்னை போன்று ஏதோ பல நாள் பழக்கம் போல என்னிடம் சிரித்து பேசினார்,அருகில் அமர்ந்திருந்த ஒரு வட நாட்டு பெண் எங்கள் பேச்சு புரியாவிட்டலும் கண்களால் எங்களை விட அதிகமாக சிரித்தாள்,இள நகை புரிந்த வண்ணம் இருந்தாள்...அந்த பைத்திய (சாரி) கதவருகே இருந்த அந்த சிரிப்பு மனிதர் இறங்கி போக எங்களிடம் அந்த கள்ளம் இல்லாத சிரிப்பு மிச்சம் இருந்தது..எனது ஊரில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன்,அருகே யாரோ நடந்து செல்ல,அவர்கள் முன் என் சிரிப்பை விருந்தோம்பல் ஆக்கினேன்..முதலில் தயங்கிய அவர் மீண்டும் என்னை பார்த்து சிரிக்க ஆரம்பித்தார்...
நிஜமாகவே சிரிப்பு ஒரு மிக பெரிய தொற்று -------?தயவு செய்து முடித்து கொடுங்களேன்....

இன்று விடை பெறும்போது , நல்ல ஒரு பயணத்தை இழக்கிறோமே என்ற வருத்தத்தில் இருப்பது எனக்கே தெரிகிறது....

ஊக்கம் அளித்தமைக்கு நன்றிகள் நண்பர்களே.....

கண்ணீருடன் விடை பெறுகிறேன் நன்றி...உங்கள் கார்த்தி....

நேரம் கிடைக்கும் போது என் வலைக்கும் வாருங்கள்....

கூல் கார்த்தி....

Be Cool...

Stay Cool...

மேலும் வாசிக்க...

லாஜிக்கல் கேள்விகள்.....

இவை கண்டிப்பாக மூளைக்கு வேலை தரும் முயற்சியுங்களேன்....


1. உங்கள் இனிப்பகத்தில் ,பத்து அட்டைபெட்டிகள் உள்ளது ,ஒவ்வொரு அட்டை பெட்டியிலும் பத்து மைசூர் பாகு (mysore
pak)உள்ளது ,ஒவ்வொரு mysore பாகும் பத்து கிராம் எடை கொண்டதாக உள்ளது ,இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு தகவல்
வருகிறது அதன் படி உங்கள் ஊழியன் ஒருவன் ஒரு அட்டை பெட்டியில் மட்டும் ஒவ்வொரு mysore பாகிலும் ஒரு கிராம்
அளவுக்கு திருடிவிட்டான் என்று தெரியவருகிறது...துரதிஷ்ட வசமாக அந்த நேரத்தில் உங்களுடைய எலக்ட்ரானிக்ஸ் balance
இல் நீங்கள் ஒரே ஒரு முறை மட்டுமே எடையை காண முடிகின்ற அளவுக்கு மட்டும் சார்ஜ் உள்ளது என்னும் நிலையில்,அந்த
அட்டை பெட்டி எது என்று நீங்கள் கண்டறிந்து அதை செய்தவனை நீக்க வேண்டும்...(ஒவ்வொரு அட்டை பெட்டியையும்
ஒருவன் pack செய்தான் என கொள்க)
(Hint:நீங்கள் ஒவ்வொரு அட்டை பெட்டியையும் திறந்து பார்க்கவும் ,தேவையென்றால் அதில் உள்ள இனிப்பை வெளியே எடுக்கவும் அனுமதி உண்டு(அதுக்காக நீங்களே சாப்பிட கூடாது))


2. இது situation handling வகையறா.....

நீங்கள் ஒரு டாக்டர் என்று வைத்து கொள்ளுங்கள் உங்களுடைய நோயாளி ஒருவர்க்கு இரண்டு வகையான மாத்திரைகளில்
இருந்து ஒவ்வொன்றிலும் ஒன்றை மட்டும் தர வேண்டும் என்னும் நிலையில் உங்கள் நர்ஸ் இரண்டு வகையான
மாத்திரைகளில் இருந்தும் இரண்டு இரண்டு எடுத்து வந்து விடுகிறார்,அதை பார்க்கும் உங்களுக்கு பயங்கர ஷாக் .ஏனெனில்
நான்கும் பார்க்க ஒரே மாதிரி தோற்றம் கொண்டவையாக உள்ளது,நோயாளிக்கு கண்டிப்பாக ஒரு வகையில் இருந்து ஒன்று
மட்டுமே கொடுக்க வேண்டும் ,ஒரே வகையில் இருந்து இரண்டு கொடுத்தாலோ அல்லது மாத்திரையே கொடுக்காமல்
போனாலோ நோயாளியின் உயிருக்கே ஆபத்து என்னும் நிலையில் எப்படி இந்த நிலையை சமாளிப்பீர்கள்?
(மேலும் மாத்திரைகள் கைவசம் இல்லை )

3. நீங்கள் அவசரமாக வெளியே செல்ல வேண்டிய சூழ்நிலையில் ,ஒரு இருட்டு அறையில் உங்களுடைய சாக்ஸ்,ஐந்து
வெள்ளை சாக்ஸ் உம் ஏழு கருப்பு சாக்ஸ் உம் உள்ளது ,உங்களுக்கு ஏதோ ஒன்றிலாவது ஒரு ஜோடி சரியான ஜோடி யாக
அமைய வேண்டும் எனில் எத்தனை (ஜோடி அல்ல எண்ணிக்கை)சாக்ஸ் எடுப்பிர்கள்(உங்களால் பார்க்க முடியாது)

4. உங்களுடைய சட்டையை விட உங்களின் பாண்ட்(pant) இன் விலை நூறு ரூபாய் அதிகம்.....இரண்டும் சேர்த்தி 110 ரூபாய்
எனில் தனி தனியே இரண்டின் விலையையும் சொல்லுங்களேன்....

5. இது கொஞ்சம் டப்பா,சரி சரியான பதில் சொல்லுகிறீர்களா பார்ப்போம்,
இதற்கான பதிலை நீங்கள் முதலில் நினைத்ததை தான் சொல்ல வேண்டும்....

நான் சொல்லும் எண்களை எல்லாம் அப்படியே கூட்டி கொண்டு வாருங்கள்....

முதலில் பத்துடன் ஆயிரம் கூட்டவும்,

பின்பு அதனுடன் ஒரு அறுபதை கூட்டவும்...

இப்பொழுது வரும் விடையுடன் ஒரு இரண்டாயிரம் கூட்டவும்

அதனுடன் ஒரு இருபது கூட்டவும்....

அதனுடன் ஒரு ஆயிரம் கூட்டுங்கள் ...

இப்பொழுது ஒரு பத்தை மட்டும் கூட்டி விடை சொல்லுங்களேன்....


1.ஒரு ஆட்டத்தில் இரண்டு batsmen, இருவரும் 96 இல் உள்ளார்கள் இன்னும் ஆட்டம் முடிய இரண்டே பந்துகள் உள்ளன என்னும் நிலையிலும்,இன்னும் ஆறு ரன்கள் எடுத்தால் ஆட்டம் வெற்றி என்றும் உள்ளது,இந்நிலையில் இருவரும் சதம் கடக்க வாய்ப்பு உள்ளதா?உள்ளது என்றால் எப்படி.....2. இது வித்தியாசமான ,clue மூலம் வார்த்தையை கண்டு பிடிக்கும் வகை...

இது ஆங்கில வார்த்தை...

a.I'm kept secret by everyone.

b.my 2 3 4 is an animal..

c.my 3 5 6 7 8 is a fighting weapon

d.my 1 2 8 is used for writing...(not in system)

e.my 3 4 are the same.....


find me.....


3. அது ஒரு இரவு,ஒரு பாலம் உள்ளது அந்த பாலத்தை கடக்க நால்வர் உள்ளனர்,அவர்களில் முதலாமவன் ஒரு நிமிடத்திலும்,இரண்டமாவன் இரண்டு நிமிடத்திலும் மூன்றாமவன் ஐந்து நிமிடத்திலும் கடக்க கூடியவர்கள்,நான்காமவர் ஒன்போது நிமிடத்திலும் கடக்க கூடியவர்,இந்த நிலையில் அந்த பாலத்தை லாந்தர் இன்றி கடக்க முடியாது,மற்றும் ஒரே நேரத்தில் இருவர் மட்டுமே அதில் பயணம் செய்ய முடியும் என்ற நிலையும்,கையில் ஒரே ஒரு லாந்தர் மட்டுமே உள்ளது என்னும் நிலையில்,இருவர் அந்தபுரம்(அந்த பக்கம்...ஹி ஹி )சென்றால் மற்றவர் பயன் பாட்டுக்கு லாந்தரை கொடுக்க வேண்டும் என்பதால் ஒருவர் மீண்டும் இந்த புறம் வர வேண்டும்......

என்னும் நிலையில் ஐந்து பேரும் எவ்வளவு குறைந்த நேரத்தில் அந்த பாலத்தை கடப்பார்கள்?
(குறிப்பு:முதலாமவரும் ,நான்காமவரும் செல்கிறார்கள் என்றால் இருவரும் போய் சேர ஆகும் நேரம் 9 நிமிடங்கள்)


4. இது கொஞ்சம் பழசு என்றாலும்,திறமையை சோதிக்க வல்லது, ஓரு ஊரில் இரண்டே இரண்டு முடி திருத்துபவர்கள் தான் உள்ளார்கள் ,அதில் ஒருவனின் தலை முடி கந்தர கோலமாக,சரியான படி வெட்டப்படாமல்,அசிங்கமாக உள்ளது ஆனால் மற்றவனின் தலைமுடியோ அழகாக ,ஒழுங்காக உள்ளது என்னும் நிலையில் நீங்கள் யாரிடம் முடி வெட்டி கொள்ள செல்வீர்கள்....


5. இது situation handling வகையறாவை சார்ந்தது....

நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனம் உங்களை வேலையை விட்டு தூக்க நினைத்து உங்களுக்கு ஓரு வாய்ப்பாக,சீட்டு குலுக்க முடிவு செய்கிறது ...இரண்டு சீட்டுகள் உங்கள் முன் போட படும்,ஒன்றில் தொடரலாம் என்றும் மற்றதில் வெளியே போடா என்றும் எழுதியிருக்கும் ,நீங்கள் எதை எடுக்குரீர்களோ அதன் படி முடிவு எடுக்கப்படும் என்கிறது நிர்வாகம்,

இந்நிலையில் CBI (கொஞ்சம் ஓவர் தான்)மூலம் நீங்கள் அறிந்து கொள்வது என்னவென்றால்,இரண்டிலும் ஒன்றே தான் ,அதாவது வெளியே போ என்று தான் எழுதியுள்ளது என்று அறிகிரிர்கள்...உங்கள் முன் சீட்டுகள் போட பட்டு விட்ட நிலையில்...நீங்கள் எப்படி இந்த சூழ்நிலையை எதிர்கொள்வீர்கள்?


நன்றி கூல்....உங்கள் கார்த்தி...

இது போல் இன்னும் இங்கே.....

Be Cool..

Stay Cool...
மேலும் வாசிக்க...

நான் சொந்தமாக எழுத முயற்சித்தவை....

இது நான் முயற்சித்த சயின்ஸ் fiction வகை கதை....

அவரை காப்பாத்தனும்...இந்த கதை நான் நான்கு வருடங்களுக்கு முன்பு எழுதியது...எப்படி இருக்குன்னு சொல்லுங்களேன்...
அந்த நபர் WHO என்னும் அந்த பிரமாண்ட ஆஸ்பத்திரியில் அனுமதிக்க பட்டதில் இருந்து ,அனைத்து தொலைக்காட்சிகளிலும் அவரை பற்றிய FLASH NEWS ஓடுவதில் இருந்து அந்த நபரின் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்....ஆஸ்பத்திரி முழுவதும் ஏதோ தீ பற்றி கொண்டது போல் ஒரு அவசர கதியில் இயங்கியது,டாக்டர்களின் குரலில் தெரிந்த அந்த பதட்டம் மற்றும் கவலை கண்கூடாக தெரிந்தது,நாம் சாப்பிடுவதை எல்லாம் இவரும் சாப்பிட்டால் எந்த பிரச்சினையும் இல்லை ,இவர் தான் நம் முன் காலத்தின் மிக பெரிய பொக்கிஷம் என்றும் , வருத்தம் கலந்த தொனியில் டாக்டர்கள் பேசி கொண்டே நடந்தார்கள்....ஏற்கனவே செயற்கை இருதயம்,நுரை ஈரல் என்று பொருத்தப்பட்டும் ."gene riot"என்னும் மரபணு புரட்சி அவன் மூளைக்கு பரவஅந்த டாக்டர்களே மனம் தளந்தார்கள்.....அந்த maarble களால் சூழ்ந்த அறையில் ,phenyl வாசம் காட்டமாக அடித்தும் அது அந்த டாக்டர்களை ஏதும் செய்ததாக தெரியவில்லை,அந்த நிசப்தமான அறையில் பல டாக்டர்கள் புடை சூழ,அவ்வளவு நேரம் பிடித்து வைத்த்ருந்த அந்த உயிர் என்னும் பறவைக்கு அந்த நபர் விடுதலை கொடுத்தார்...அடுத்த நாள் செய்திகளில்,"நம் உலகின் கடைசி மனிதனும் GENE RIOT என்னும் புது வியாதிர்க்கு பலியானான்,அவனை நமது ARTIFICIAL intelligence கொண்ட டாக்டர்கள் எவ்வளவோ முயன்றும் காப்பற்ற முடியவில்லை..."(இதோடும் முடிக்கலாம் ஆனால் கீழே உள்ளதை சேர்த்தால் இன்னும் நன்றாக இருக்குமோ?)செய்திகளில் தொடர்ந்து வந்தது,"நம் நாட்டு வீரர்களுக்கும் பக்கத்து பாகிஸ்தான் வீரர்களுக்கும் நடந்த எல்லை சண்டையில் இரு பக்கமும் இருவர் இறந்தனர் சாரி செயலிழந்தனர் ""நம் மெரினாவில் கொட்டி கிடக்கும் தங்கத்தை அல்ல ஆள் இல்லை ஆனால் நமக்கு சக்தி தரும் வைக்கோலின் விலை ஒரு கிலோ 10,000 தாண்டியது,போகும் போக்கை பார்த்தால் solar இல் இயங்கும் நம்மவர்கள் மட்டுமே இனி வாழ இல்லை இயங்க முடியும் என்று எண்ண தோன்றுகிறது... ""நம் நாட்டுக்கும் ஆஸ்திரேலியா அணிக்கும் நடந்த கிரிக்கெட் ஆட்டம் மழையால் தடை பட்டது"என்றுசெய்தி போய் கொண்டு இருந்தது...நன்றி,உங்களுக்கு பிடித்ததா?உங்கள் ->கார்த்தி cool.....நன்றி...

இன்னும் பல ...

ஜீனியும் நானும்...


காக்காயன் மற்றும் காக்காணி....சேலத்து உணவுகள்......


தேவதைகளின் தேவதை.....


சிறுகதை:எச்சரிக்கை இது ஒரு சுழல்...(ஆவிகள்)


சேலத்து உணவுகள் -2


வளர்ப்பு பிராணிகள் ....


நான் ரசித்த சிறு கதைகள்...


நன்றி நண்பர்களே....
மேலும் வாசிக்க...

பல சர்தார் நகைச்சுவைகள்....

சர்தார் ஜிகள் மீது எனக்கு மிக மதிப்பு உள்ளது...

இந்த சம்பவம் அபியும் நானும் படத்தில் சொல்லபட்டாலும் நான் படம் வருவதற்கு முன்பே சர்தார்கள் பற்றி சொல்லிவிட்டேன்.....(இங்கே உள்ளது)
ஏழு வருடங்களுக்கு முன்பு டெல்லியில் நண்பன் மற்றும் அவன் நண்பர்கள் நம் தலைநகரத்தை சுற்றி பார்க்க ஒரு டாக்ஸி அமர்த்தி கொண்டு சுற்றி பார்த்துள்ளனர்...

அப்பொழுது அவர்களின் பேச்சு சர்தார்களை பற்றி திரும்பியது,அவர்களை வைத்து செய்யப்படும் காமெடிகளை சொல்லியவாறு அவர்கள் பயணித்துள்ளனர்...
அந்த டாக்ஸி இன் டிரைவர் ஒரு சர்தார் என்பது தெரிந்தே அவர்கள் சீண்டியுள்ளனர்,அவர் ஏதாவது பேசுவார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமாய் அவர் அமைதியாகவே வந்துள்ளார்...
பயணம் முடிந்து நண்பன் அவரிடம் எல்லா கணக்குகளையும் முடித்து விட்டு திரும்பும் போது அவனை கூப்பிட்ட சர்தார்,அவன் கையில் ஒரு ஒரு ரூபாய் நாணயத்தை கொடுத்து விட்டு சொன்னார்,
"நீ பார்க்கும் முதல் பிச்சைக்கார சர்தாரிடம் இந்த ஒரு ரூபாயை கொடு"
என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் ,

"ஏழு வருடங்கள் கழித்து என் நண்பன் இன்று அந்த ஒரு ரூபாயை என்னிடம் காட்டினான்"

"சர்தாருக்கு ஒரு சலாம்"
என்ன இது உண்மை தானே?

ஆனாலும் சர்தாரை நம் நண்பன் போல் எண்ணிக்கொண்டு எழுதியுள்ளேன்...

-------------------------

இது எனக்கு மிகவும் பிடித்த ஜோக்,உங்களுக்கு?

சர்தார் interview வில்,
interviewer:மிஸ்டர் சர்தார் எலெக்ட்ரிக் மோட்டார் எவ்வாறு இயங்கும்?
சர்தார்: டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
interviewer:நிறுத்து ........................................
சர்தார்:டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தப் தப் தப்.(நிறுத்திட்டார்)
-----------------------------------
இது எனக்கு பிடித்த மற்றொரு ஜோக்...

ஒரு சர்தார்,ஒரு அமெரிக்கர் மற்றும் ஒரு இங்கிலீஷ்காரன் ஆகியோர் ஒரு கருவியின் முன் நிறுத்த படுகிறார்கள்,அது பொய் சொல்பவர்களை சுட்டுவிடும்,

முதலில்,
அமெரிக்கர்:I think,I can smoke 100 cigarettes a day....

டுமில்.......

அடுத்து
இங்கிலிஷ்காரன்,:I think,I can eat 20 chickens a day...

டுமில்......

அடுத்து நமது
சர்தார்:I think,

டுமில்.....
---------------------------------------------------
Driver:சாரி சார் பெட்ரோல் சுத்தமா தீர்ந்துடுச்சு இனி ஒரு அடி கூட முன்னாடி போகாது......

சர்தார்:சரி பின்னாடி ஆவது விடு வீட்டுக்கே போயிடலாம்.....


ஒரு முறை சர்தார் ஒரு எலக்ட்ரானிக்ஸ் கடைக்கு சென்று அங்கிருந்த பிரிட்ஜ்ஐ(fridge)எவ்வளவு என்று கேட்டார்...

அமைதியாக அந்த கடைக்காரர் "சாரி நாங்க சர்தாருக்கு இதை விற்பதில்லை "என்றார்...

இதனால் உசுப்ப பட்ட சர்தார் ,ஒரு சர்தாருக்கு அதை நீ விற்கத்தான் போகிறாய் என்று மனதுக்குள் சொல்லிய வாறு...

தன் தலை பாகையை எடுத்துவிட்டு போய் அந்த fridge என்ன விலை என்று கேட்டார்...அந்த கடைக்காரன் "சாரி நாங்க சர்தாருக்கு இதை விற்பதில்லை "என்றார்...

அதிர்ச்சி அடைந்தாலும் காட்டி கொள்ளாத சர்தார்...

அடுத்த முறை தாடி எல்லாம் எடுத்து விட்டு,வந்து கேட்டார் அப்பொழுதும் அதே பதிலையே கடைக்காரன் சொல்ல...
சற்றும் மனம் தளராத சர்தார் மொட்டை போட்டு விட்டு இரண்டு foreigners உடன் ஒரு வில்லனை போல் வந்து கேட்க மீண்டும் அந்த கடைக்காரன் அதே பதிலையே தந்தான்...

மனம் நொந்த சர்தார் அவனிடமே நேராக சென்று...தன் தோல்வியை ஒப்பு கொண்டு,எப்படி கண்டுபிடித்தாய் என்று கேட்டார்...

அதற்க்கு அந்த கடைக்காரன் ,"ஏன்னா சர்தார் மட்டும் தான் 'வாஷிங் மெஷின்'ஐ பார்த்து fridge அப்படின்னு சொல்வார்"என்றான் கூலாக..
------------------------------------------------
மீண்டும் சர்தார்,ஆனால் இந்த முறை சற்றே அறிவாளியாக...

பாகிஸ்தான் border இல் ஒரு சர்தார்ஜி தினமும் ஒரு பைக் இல் கொஞ்சம் மணலை வைத்து கொண்டு செல்வது வழக்கமாக இருந்தது,தினமும் அவனை சோதனை செய்யும் அதிகாரி நொந்து விடுவார்,அவருக்குள் உள்ளே ஒரு சிறு உறுத்தல் மட்டும் இருந்து வந்தது...

ஒரு நாள் அவர் சர்தாரை தனியே ஒரு பாரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது அவர் அவனை அணுகி,நீ ஏதோ ஒன்றை திருடி செல்கிறாய் என்று மட்டும் எனக்கு தெரிகிறது ஆனால் அது என்ன என்று என் மன திருப்த்க்காக மட்டும் சொல் என்றார்,அதற்க்கு சர்தார்....உண்மைதான் நான் திருடுவது...அது,

பைக் என்றார் அமைதியாக...

----------------------------------------------
அடுத்தது...

ஒரு சர்தாரும் ஒரு அமெரிக்கரும் அருகருகே இருக்கையில் அமர்ந்தவாறு விமான பயணம் செல்ல நேர்ந்தது,உள்ளே சென்றதும் சர்தார் தொங்க சென்று விட்டார்...
அவரை எழுப்பிய அமெரிக்கர்,"நான் கேட்கும் கேள்விக்கு நீ பதில் சொன்னால் உனக்கு நான் 5 $ தருகிறேன்,அதே போல் நீ கேட்கும் கேள்விக்கு நான் பதில் சொன்னால் நீ எனக்கு 5 $ தர வேண்டும்",
என்றார்...
ஆனால் சர்தார் ஏதும் சொல்லாமல் மீண்டும் தூங்க சென்று விட்டார்,
அமெரிக்கர் விடாப்பிடியாக,சரி நீ கேட்கும் கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை என்றால் நான் 500$ தருகிறேன் ,நான் கேட்கும் கேள்விக்கு உனக்கு பதில் தெரியவில்லை என்றால் எனக்கு நீ 5$ மட்டும் தந்தால் போதும் என்றார், இது சர்தாரை உசுப்பி விட்டது,அவரும் ஒத்துக்கொண்டார்,

முதில் அமெரிக்கர்:உலகின் மிக வேகமான பறவை?
ஏதும் பேசாத சர்தார் தன் பையில் இருந்து ஒரு 5$ எடுத்து கொடுத்தார்,
அடுத்து சர்தார்:அது போகும் போது இரண்டு கால்களுடனும்,வரும் போது நான்கு கால்களுடனும் வரும் என்று கேட்டார்,விடை தெரியாத அமெரிக்கர்,ஸ்பெஷல் உதவியுடன் தன் நண்பர்களுக்கு போன் பண்ணியும்,discussion போர்டு எல்லாம் கேட்டார் ,யாருக்கும் விடை தெரியாததால்,அவர் 500$ எடுத்து சர்தாரிடம் நீட்டி விடை கேட்டார்,சர்தார் அமைதியாக அதை வாங்கி வைத்துக்கொண்டு அவரிடம் 5$ கொடுத்து விட்டு மீண்டும் தூங்க சென்றார்....
--------------------------------------------------------
மறுபடியும் முட்டாள் சர்தார்....

சர்தார் இருவர் பாம் வைக்க சென்றனர்,முதலாமவர் நாம் வைக்கும் போது பாம் வெடித்து விட்டால்?
இரண்டாமவர் என்கிட்டதான் இன்னொன்னு இருக்கே....
-------------------------
ஒரு சர்தார் தன் மனைவியுடன் ஒரு ஆட்டோவில் செல்லும் போது ஆட்டோ காரன் கண்ணாடியில் சர்தாரின் மனைவியை பார்ப்பதை கண்ட சர்தார் கோவமாக,

"டேய் கண்ணாடிலையா பாக்கற பின்னாடி வாடா நான் ஓட்டுறேன்"...
------------------------------------
ஒருவனிடம் மற்றொருவன்....ஒரு நீர் மூழ்கி கப்பல் நிறைய இருக்கும் சர்தார்களை நீ எப்படி கொள்வாய்?
மற்றொருவன்,சிம்பிள் கதவை தட்டி விட்டு வந்து விடுவேன்....

--------------------------------
detective போஸ்ட்டிற்கான நேர்முக தேர்வில்,
interviewer...:who killed gandhiji?
sardhar:thank you for the job sir,i will soon find the murderer sir....
-----------------------------------

இது சரியான A ரகம்,
(பிகு:statuory warning:consumption of alcohol is injurious to health)
ஒரு அரசன் தன் மகளுக்கு சுயம்வரம் வைக்க விரும்பி ஒரு போட்டி
வைத்தான்,விதிமுறை இதுதான்,
போட்டியாளர் மூன்று அறைகளுக்கு செல்ல வேண்டும்,முதல் அறையில் இருக்கும் விஸ்கி,பிராண்டி போன்றவற்றை ராவாக அடிக்க வேண்டும்,இரண்டாம் அறையில் இருக்கும் புலியுடன்(சாதா புலி அல்ல அது சைபேரிய புலி)மோதி அதன் பல்லை பிடுங்க வேண்டும்,மூன்றாம் அறையில் இருக்கும் ஒரு மங்கோலியா பெண்ணை
அந்த மாதிரி விசையத்தில் திருப்தி படுத்த வேண்டும்(மங்கோலியா பெண்ணுக்கும் இந்திய ஆணுக்கும் பிறந்தவர் தான் ஐஸ்வர்யா என்று கேள்வி, அவ்வளவு அழகானவர்கள்).

முதலில் சென்றவர் ரம் விஸ்கி அடிப்பதற்குள் சுருண்டு விழுந்து விடுகிறார்,இரண்டாமவர் புலியுடன் வீரமாக போராடி சாவை அணைத்து விடுகிறார்,
அடுத்து நம் சர்தார்,விஸ்கி,ரம்,பிராண்டி என்று சகலத்தையும் அடித்து விட்டு புலி இருக்கும் அறைக்குள் நுழைகிறார் கதவு சாத்தபடுகிறது,ஒரு மணி நேரம் ஆகியும் வெளியே வர வில்லை,அவ்வ போது புலியின் உறுமல் மட்டுமே கேட்கிறது,அடுத்த கால் மணி நேரத்தில் வெளியே வந்த சர்தார் கேட்டார்....

"எங்கே அந்த மங்கோலியா பெண் அவள் பல்லை பிடுங்க வேண்டும்......."


-------------------------------------------------------

மீண்டும் சந்திப்போம்.....

இன்னும் பல சர்தார் ஜோக்குகள் இங்கே உள்ளது......
மேலும் வாசிக்க...

Saturday, March 21, 2009

நான் மண்டை காய்ந்த அனுபவங்கள் இங்கே....

பலமுறை நான் சிலவற்றை படித்து மண்டை காய்ந்தது உண்டு...
நீங்களும் அவற்றை பாருங்கள்....
"யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்"


நான் சமிபத்தில் IQ என்று தலைப்பிட்ட ஒரு பேஜ் உள் சென்று மண்டை காய்ந்த அனுபவம் இங்கே....

அதில் கேட்ட கேள்விகளும் அதற்கான பதில்களும் இங்கே....

எப்படி நீங்கள் ஒரு ஒட்டகச்சிவிங்கியை ஒரு பிரிட்ஜ் க்குள் அடைப்பிர்கள்?
இந்த கேள்விக்கு விடை,பிரிட்ஜ் கதவை திறந்து,உள்ளே ஒட்டகச்சிவிங்கியை அடைக்கவும்....


எப்படி ஒரு யானையை பிரிட்ஜ் உள்ளே அடைப்பிர்கள்?
இதற்கும் விடை முதல் கேள்வி போல் சொன்னால் அது தப்பு,அதற்கான சரியான விடை,
கதவை திறக்கவும்,ஒட்டகச்சிவிங்கியை வெளியே அனுப்பி விட்டு பிறகு யானையை உள்ளே அடைக்க வேண்டும் என்பதே சரியான விடையாம்....அடுத்த கேள்வி,சிங்க ராஜா ஒரு கூட்டம் போட்டார்,அதற்க்கு எல்லா மிருகங்களும் வந்து இருந்தன ஒன்றை தவற,அது?
அது யானை,ஏனா அது தான் பிரிட்ஜ் உள்ள இருக்கே....


நீங்கள் ஒரு ஆற்றை கடக்க வேண்டும்,ஆனால் அதில் முதலை இருக்கும் என்று உங்களுக்கு தெரிந்தவர்கள் சொல்கிறார்கள்,எப்படி கடப்பிர்கள்?
இதற்கான விடை,சிங்க ராஜா கூட்டிய கூட்டத்துக்கு தான் எல்லா மிருகங்களும் பொய் விட்டதே அப்புறம் என்ன...?


என்ன இப்பவே கண்ணு கட்டுதா?
எனக்கும் இப்படி தான் இருந்தது....
இதை விட அவன் கடைசியில் சொல்லி இருந்த விளக்கம் தான்,

இதை தொண்ணூறு சதவிகிதம் பேர் தப்பா சொன்னாங்களாம்,ஆனால் முதல் வகுப்பு இரண்டாம் வகுப்ப மாணவர்கள் சரியாக சொன்னார்களாம் ....இந்த கேள்விகள் அனைத்தும் நம் memory,IQ,critical thinking பற்றி தெரிந்து கொள்ள உதவுமாம் ....
எது எப்படியோ இதில் நான் மூன்றுக்கு சரியாக சொன்னேன்......

இது போன்று மேலும் கண்ணை இருட்டிக்கொண்டு வரும் பதிவுகள் இங்கே....

இது மொக்கை அல்ல சூர மொக்கை பார்ட்-2மொக்கை அல்ல சூர மொக்கை.....


நகைச்சுவை:சில சோக்கு.....+ ஒரு மொக்கை


அலிபாபாவும் முப்பது திருடர்களும்.....தாய் மண்ணே வணக்கம்...(ஹெல்மெட் அணியுங்கள்)


சில சூர மொக்கைகள் ......


இந்தியாவே என் கையில்-கொக்கரிக்கும் பிரபல பதிவர்...


லேப் டாப் (மடி கணினி விற்பனைக்கு)


உண்மையான e-Book (அற்புதமான படைப்பு)


வழக்கம்போல் சில sms இல் வந்தவை....


நகைச்சுவை:புதிய கண்டுபிடிப்பு(மனைவியுடன் கார் ஓட்டும் ஆண்களுக்காக)


இன்னும் கொஞ்சம் சோக்கு..பார்ட்-௩


நன்றி நண்பர்களே....இதற்க்கு மேல் சொன்னால் போர் அடித்து விடும்....என்பதால்...

ஒரு சின்ன காமெடி உடன் முடித்து கொள்கிறேன்.....

அம்மா:டேய் அப்பாவ சாப்பிட கூப்பிடு....

மகன்: அப்பா சாப்பிட வா....

அம்மா:அப்பாவ மரியாதையா கூப்பிடனும் டா...

மகன்:அப்பா மரியாதையா சாப்பிட வா....

நன்றி....

Be Cool...
Stay Cool...
மேலும் வாசிக்க...

திருவல்லிகேணி-பேச்சலரின் சொர்க்க பூமி

இது நான் எழுதியதில் எனக்கு பிடித்த ஒன்று...
"வந்தாரை வாழவைக்கும் சிங்கார பூமி சென்னை" என்றொரு பெயர் உண்டு,அந்த சென்னைக்கு ,அடையாளம் தேடி கொள்ளும் பொருட்டு வரும் எண்ணற்ற இளைஞர்களின் முகவரியாக அன்று முதல் இன்று வரை இருப்பது "triplicane"என்று செல்லம்மாக அழைக்கப்படும் "திருவல்லிகேணி".

வேலை,கல்யாணம் என்று ஆகி சென்னையின் இன்ன பிற இடங்களில் செட்டில் ஆகும் அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் பிடித்த இடம் triplicane.
திருவல்லிகேணி ஒவ்வொரு காலையும் செல்வ விநாயகர் கோயிலின் முன் ஒரு ஹாய் வகை உபத்திரவமில்லாத கும்பிடு மூலம் ஆரம்பிக்கும் ,சில இன்று interview ,இன்று எனக்கு பரீட்சை
போன்ற சில வினோத பேச்சலர்களுக்கே உரிய பிரார்த்தனைகளுடன்..எதை சொன்னாலும்,சின்ன சிரிப்புடன்,மறுத்து பேசாத பிள்ளையாரின் முகத்தை பார்த்தது ஏதோ பாதி வேலை முடிந்து விட்டது போன்றதொரு திருப்தி,பின்பு நேரே மோனிஷா மெஸ், அங்கே சில இட்லி மற்றும் தோசையுடன் காலையின் simple breakfast முடியும்,விடுமுறை நாட்கள் எனில் மதியம் காசி விநாயகா மெச்சின் கலந்து கட்டி அடிக்கும் super meals,கலர் கலரான கார்டுகளுடன் ,ஒவ்வொரு கார்டுக்கும் தகுந்த ,வகை வகையான பொரியல் ,,நல்ல பதமான சாதம் ஆஹா அருமை. அந்த உன்னதமான சுவையை எந்த five ஸ்டார் ஹோட்டலிலும் கூட சுவைக்க முடியாது ,மாலை நேரத்தில் ,அப்படியே மெரினாவின் ஓரம் நடக்கும் பொது ,காதோடு ரகசியம் பேசி ,உறவாடிவிட்டு ,தழுவி போகும் கடல் காற்றும் ,காதலியின் மடியில் உலகம் மறந்து கிடக்கும் காதலனை பார்த்து ,ஒரு சின்ன பெருமூச்சு விட்டுவிட்டு,சூரியனின் குட் நைட் ஐ ஏற்று விட்டு,முருகன் இட்லி கடையில்,இட்லியின் பல்வேறு பரிணாமங்களையும் பார்த்து விட்டு(ஹி ஹி பார்க்க மட்டும்,எல்லாம் சாப்பிட்டால் கட்டு படி ஆகாது)வழக்கமான இரண்டு மல்லி பூ இட்லியுடன் அந்த கொதி சாம்பார்,ஆஹா அது சுகானுபவம், அல்லது வழக்கமான மோனிஷா மெஸ் போய் ,நல்ல full கட்டு கட்டிவிட்டு ,ஒரு புள்ளி வாழை,ஒரு ஆவின் பாலோடு,பிள்ளையாரிடம் இதோ வந்து விட்டேன் என்பதோடு பொழுது முடியும்,நண்பர்களின் உடன் அடிக்கும் லூட்டிகளும்,அருகே இருக்கும் மொக்கை தியேட்டரில் மொக்கை படமும் நண்பர்களுடன் காணும் போது நன்றாகத்தான் இருந்தது,திருவல்லிகேணி தன்னிடம் உள்ள ஒவ்வொரு தெருக்களிலும் ஒரு ஆச்சரியமும்,சுவாரசியமும் கொண்டிருந்தது,

ஒரு புறம் முழவதும் பேச்சளர்களின் கும்மாளம் என்றால் திருவல்லிகேனியின் இன்னொரு முகம் அப்படியே எதிர்மாறானது ,அங்கே "bachelors not allowed"

இரு வேறு துருவங்களாக ,அங்கே ஐயங்கார்களும் பார்த்தசாரதி கோயிலும்,சனிக்கிழமைகளில் அங்கே கூடும் கூட்டமும்,என்னதான் கூட்டம் எனக்கு பிடிக்காது என்றாலும்,அங்கே நிற்பதில் எனக்கு ஒரு இனம் புரியாத சந்தோஷம்,என்றைக்குமே பெருமாள் பிரசாதம் பிரசித்தமானது,

எல்லாம் சொல்லிவிட்டு சீட்டு கட்டு அறைகளை பற்றி சொல்லாவிட்டால்?திருவல்லிகேணி கோபித்துவிடும்,அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற அறைகளுக்கு திருவல்லிகேணியில் பஞ்சம் இல்லை,ஒருவர் படுக்க கூடிய இடத்தில் இருவர் என அமர்க்கள படுத்தும்,சில சமயங்களில் வரும் நண்பனின் தூரத்து உறவினர்,நண்பன் என்று வருவோருக்கு இடம் தரும் மனம் அன்று(?)இருந்தது,சற்றே பணம் இருந்தால் attached bathroom ரூம்கள் ....எல்லோரும் உனக்கு பிடித்த இடம் எது என்று கேட்டால் அமெரிக்காவோ,ஆப்ரிக்காவோ ,ஆட்டுகுட்டியோ என்று சொன்னால் ,எனக்கு பிடித்தது தன்னுள் எண்ணற்றவர்களின் ரகசியங்களையும்,சலிக்காத ஆச்சர்யத்தையும் வைத்திருக்கும் சொர்க்க பூமி,
திருவல்லிகேணி....தான்..கல்யாணமாகி மனைவியுடன் ,திருவல்லிகேணி வரும் ஆண்களின் முகத்தில்,ஏதோ ஒன்றை இழந்து விட்ட சோகம் அப்பட்டமாக தெரியும்,
அது தான் திருவல்லிகேணி...
"The Paradise of Bachelors"

(இன்னும் அம்பாள் மெஸ் , புத்தக கடைகள் )

நன்றி நண்பர்களே....

Be Cool...
Stay Cool...
மேலும் வாசிக்க...

Friday, March 20, 2009

ஜோசியம் பாக்கலியோ ஜோசியம்.........

நேற்று கொஞ்சம் அதிக ஆணி காரணமாக எழுத முடியவில்லை , சீனா அண்ணன் மன்னிக்கவும்.....

என் பொறுப்பை நான் சரிவர செய்யவில்லையோ என்று எனக்கு நேற்று சற்றே கவலையாக இருந்தது ,பல மாதங்களுக்கு முன்பு (மூணு மாசம்......) சின்னபைய்யன் சார் என் பெயரை நம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய போது நான் மிகவும் மகிழ்ந்தேன், இன்று நானே ஆசிரியர் ஆவேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை (பீலிங்க்ஸ்)...

இங்கே ச்சின்னப்பையன் சார் எழுதிய ஒரு தொடர் பதிவு , பல அறிமுகங்கள்உங்களுக்கு கிடைக்கும்.....


என் நான்காம் நாளை சற்றே ஆரோக்கிய விவாதம் நடக்கும் விதமாக அமைக்க ஆசை.....

அதனால் தான் இந்த பதிவு.....

எண்ணற்ற விடை காண முடியாத (அறிவியலால்) கேள்விகளில் ஜோதிடமும் உண்டு...(இதற்கு அறிவியல் ரீதியான விளக்கம் இருக்கிறது என்பர் பலர்)

சுஜாதா அவர்களின் கடவுள் இருக்கிறாரா? என்னும் கட்டுரை எனக்கு மிகவும் பிடித்தது (இயற்பியல் படித்ததால் மற்றும் பிடித்ததால் )


(ஒரு சிறு எச்சரிக்கை நீங்கள் அதை முழுதும் படித்தால் ஒரு இரண்டு நாட்களுக்கு பித்து பிடித்தது போல் இருப்பீர்கள்.....)

அதில் எண்ணற்ற விவாதங்கள் மற்றும் பல குறிப்புகள் என்னை மேலும் மேலும்
குழப்பியது (அக்மார்க் சுஜாதா )....ஆனாலும் ரசித்து படிக்கலாம்...

அது போன்று இல்லா விட்டாலும் கொஞ்சம் ஆரோக்கியமாக , நோ fighting , நோ திட்டிங் (நோ பேட் வோர்ட்ஸ் )....

பல காலங்களுக்கு முன்பே கோள்களை ஆராய்ந்து இவ்வளவு மணி நேரம் தான் ஒரு நாள் என்பது, என்பதில் ஆரம்பித்து இவ்வளவு நாட்கள் தான் ஒரு வருடம் என்பதாகட்டும் , இந்த நேரத்தில் இங்கே சப்த ரிசி மண்டலம் தெரியும் , துருவ நட்சத்திரம் என்றும் நகராது , என்று பல விசயங்களை predict பண்ணிய நம்மவர்களால் ஏன் அதை வைத்து இந்த கால கட்டத்தில் ஒரு மனிதருக்கு அல்லது நம் பூமிக்கு இது போன்ற நேரத்தில் இது போன்ற ஒன்று நடக்கும் என்று அனுமானித்திருக்க முடியாது ?

அறிவியல் prediction ஐ ஏற்று கொள்ளாது என்பதில் எனக்கு உடன் பாடு இல்லை....
குவாண்டம் mechanics மற்றும் சார்பியல் தத்துவம் மற்றும் எண்ணற்றவை theorem மட்டுமே (தேற்றங்கள்) அனுமானங்களே.....அதற்கு ஒரு எக்ஸ்பெரிமேண்டல் தீர்வு காண முடியாது என்னும் போது ஏன் ஜோதிடம் என்பதை ஏற்று கொள்ள மறுக்கிறீர்கள்....

என் நண்பர் ஒருவருடன் நான் வீட்டில் அமர்ந்து பேசி கொண்டு இருந்த போது ஒரு ஜோசியம் அறிந்தவர் (தொழில் முறை அல்ல ) வந்தார், அவர் கொஞ்சம் தெரிந்தவர் நாங்கள் கொஞ்சமே கொஞ்சம் அவரை சீண்டி பார்க்க எண்ணி , அவருடன் பேச்சு கொடுத்தோம் , ஒரு கட்டத்தில் அவர் என் நண்பனை பார்த்து , அவன் பிறந்த நேரமோ அல்லது ராசியோ கேட்டறிந்து விட்டு ,
"உன் திருமணம் திடீர் திருமணம்" உன் உத்தியோகம் இது போன்று அமையும் என்றார் "

உண்மையில் அது போன்றே நடந்தது.....

அதே போன்று இன்னொருவர்(ஜோசியர்) , நண்பர் வேறொருவரின் ஜாதகத்தை பார்த்து விட்டு உனக்கு இத்தனை சகோதரர்கள் என்று சில விசயங்களை சரியாக சொன்னார்...அவை காக்கா உட்கார பணம் பழம் விழுந்த கதை விஷயங்கள் இல்லை....

இரண்டு நாட்களுக்கு முன்பு நீயா நானா பார்க்கும் போது சிறப்பு விருந்தினராக வந்த ஜோதிடர், ஒரு கட்டத்தில் எதிரணி பெண்ணின் ஜாதகத்தை வாங்கி பார்த்து விட்டு ,உங்களுக்கு திருமண வாழ்வில் பெரிய அளவில் கருத்து வேறுபாடுகள் இருக்கும் என்றார்...
"அந்த பெண் ஒரு divorcee" ...

இது போன்று நம்ப தகுந்த , அல்லது நம்ப வைக்க முயற்சிக்கும் அனுபவங்களை அல்லது ஏன் நம்பவேண்டும் என்று ஒரு சாரர் comment இல் சொல்லவும்.....


இனி கொஞ்சம் ஜோதிடம் எதிரானவை .....

நீங்கள் சொல்வது போன்று கோள்கள் மனிதனை பாதிக்கின்றன என்றால் இங்கே இருக்கும் குப்பனுக்கும் அமெரிக்காவோ அல்லது ஆப்பிரிக்கவிலோ இருக்கும் ராபர்ட் அல்லது சுப்பனுக்கோ வேறு பட்டால் தூரம் காரணமாக கோள்களின் ஆதிக்கம் ஒவ்வொருவரின் மீதும் ஒரு விதத்தில் செயல் படுகிறது எனலாம்...ஆனால் இங்கே இருக்கும் குப்பன் மற்றும் அவன் அருகே இருக்கும் சுப்பன் ஆகிய இருவருக்குமே வேறுபாடு இருக்கிறது என்னும் போது அதை நம்ப கடினமாக இருக்கிறது....(ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு frequency யை கிரகிக்கும் தன்மை வேறுபடும் என்பதெல்லாம் கப்சா...)

ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளது என்றால் ஏன் அது இத்தனை வடிவங்களில்...

கைரேகை ,
பிறந்த பலன்..
numerology (எண்கணிதம் ஜோதிடம்)
name(o)logy

கற்கள் வைத்து நடத்தும் ஜோதிடம்....(ஏங்க கற்களின் நிறம் கூட matters எனில்
ஏன் அந்த நிற உடை அல்லது இன்னும் பல அணிய வேண்டியது தானே..சற்று பெரியதாக இருப்பதால் அதிக பலன் கிடைக்குமே....????...

இன்னும் சகுனங்கள்....இவையெல்லாம் அபத்தம் என்று எண்ணுகிறீர்களா?
ஏன் என்று விளக்கவும்....

இன்னும் பல....

கிளி ஜோசியம் என்பதில் எனக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை , அவனின் கையில் இருக்கும் தானியத்துக்கு ஏற்றவாறு அந்த கிளி ஆடும் என்பது நான் கண்கூடாக கண்டு தெளிந்த நிகழ்வு....ஒவ்வொரு அட்டையையும் கிளி ஜோதிடன் நன்கு அறிந்து வைத்திருப்பான்....

குறி சொல்வது ? ஹா ஹா ....

கைரேகை நாம் தாயின் கத கதப்பில் இருக்கும் போது நம் கைகளை சுருக்கி வைத்திருப்பதால் ஏற்படும் சுருக்கங்கள்.....
ஆனால் அது ஒவ்வொருவரும் வேறுபடுகிறது,ஒவ்வொன்றும் ஒரு விதம் என்பது கவனிக்க பட வேண்டியது....

ஆனால் நாடி ஜோதிடம் எவ்வாறு ஒவ்வொரு வருக்கும் ஒரு ஓலை வைத்திருக்கும் என்பது எனக்கு விளங்கவில்லை...
இவை அனைத்தும் நம்பிக்கை சார்ந்த விசயங்களே அன்றி உண்மை இல்லை என்பதை இன்னொரு சாரார் தெளிவு படுத்தினால் நான் மிகவும் மகிழ்வேன்.......

நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புஷ்பம் சாத்தியே
சுற்றி வந்து மொனமொன வென்று சொல்லும் மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ
நாதன் உள்இருக்கையில் சுட்ட சட்டி சத்துவம்
கறிச்சுவை அறியுமோ

- சிவவாக்கிய சித்தர்

நன்றி நண்பர்களே...

நான் நல்ல ஆரோக்கியமான விவாதங்களை எதிர்பார்க்கிறேன்....
பின்னூட்டங்களின் வருகைக்காக.....
இதை நான் வலைச்சர ரசிகர்களின் கைகளுக்கு விடுகிறேன்....


Be cool....
Stay cool....

(தவுறுகள் இருப்பின் மன்னிக்கவும்)
மேலும் வாசிக்க...

Wednesday, March 18, 2009

பல காமெடிகள் மற்றும் பல மொக்கைகள்......

முதலில் இரண்டு " Touching Stories " பார்த்து விட்டு நான் என்னுடைய வலையில் இது வரை போட்ட மொக்கைகள் மற்றும் ஒரு சில நல்ல நகைச்சுவைகள்......

முதலில் Touching Stories.....

1.தச்சு வேலை செய்யும் ஆசாரி ஒருநாள்,ஒரு டேபிள் செய்யும் போது ........

அதிலிருந்த ஒரு கூர்மையான ஆணியை பிடுங்கி அருகிலிருந்த ஸ்டூல் மீது வைத்து விட்டு சென்றார்,துரதிஷ்ட வசமாக அவரின் மகன் அந்த ஸ்டூல் மேல் உட்கார ஆணி பாய்ந்தது...மிக அதிக ரத்தம் வீணாக,தச்சன் மிக பாடு பட்டு பல பெரிய மருத்துவமனைகளுக்கு சென்று அவனை காப்பாற்றினார்,ஆனால் அதனால் பெரிய கடனாளி ஆக ,மனமுடைந்த தச்சன் தற்கொலை முடிவை நாடி கொண்டார்....

இதனால் மனமுடைந்த அவரின் மனைவியும் மக்களும் அவரை பின்பற்ற,ஒரு அழகிய குடும்பம் சின்னாபின்னம் ஆனது....

MORAL: ஆணிய பிடுங்க வேண்டாம்......

ஹி ஹி ஹி ....நானாவது சீரியஸ் ஆ எழுதறதாவது...
-------------------------------------


2.

மற்றுமொரு Touching story.....

A boy and a girl loved each other very much,
one day while talking the boy touched the girl's hand....and the girl touched his....


wow !wow! Wow!......What a Touching Story?

------------------------------


இதை அப்டித்து பாருங்களேன் , வெளி நாடுகளின் இந்தியாவை பற்றிய எண்ணமும் , அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு நம்மாளு சொன்ன பதிலும்...


இவர்களது அகராதியில் இந்தியா......

Q: Will I be able to see elephants in the street? ( USA )

A: Depends how much you've been drinking.Q: Do you have perfume in India ? ( France )

A: No, WE don't stink.

-----------------------------

முழு வாழ்க்கையையும் சொல்லும் படம் இது.....


இது எனக்கு மிகவே பிடித்த ஒரு பதிவு....

---------------------------

கௌரவமாக பெயில் ஆவது எப்படி?
----------------------
ஆண்கள் எவ்வளவு ரிஸ்க்கில் இருக்கிறோம் என்பது இதை பார்த்தால் தெரியும்....

அல்பாயுளில் ஆண்கள் இறப்பதற்கு காரணம்....


--------------------

வழக்கம்போல் சில sms இல் வந்தவை....

-----------------------------------------
"A girl loved a boy sincerely......"

for more jokes contact coolzkarthi-9865849130

இது போன்ற சோக்குகளுக்கு இங்கே....

ஹி ஹி ஹி..........

-----------------------------------
நண்பர்: இனி யாராலையும் இன்ஜினியரிங் காலேஜ் உள்ள நுழையவே முடியாது.....

மற்றொருவர்: ஏன்?

நண்பர்:இன்ஜினியரிங் காலேஜ் எல்லாத்துக்கும் "entrance" எடுத்துட்டாங்கலாமே.....

இது போன்ற மொக்கைகள் இங்கே....

மொக்கை அல்ல சூர மொக்கை.....

---------------------------
ஆமையும் முயலும் நுழைவு தேர்வில் முறையே 80% மற்றும் 81 % பெற்று இருந்தனர்,தேர்வு பெற 84% தேவை,இன்னும் மூன்று இருந்தால் முயல் நுழைந்து விடும்,ஆயினும் ஆமையே தேர்வானது....காரணம்?

ஹி ஹி ஹி நாம் தான் இரண்டாம் வகுப்பில் பார்த்தோமே,ஆமை ஓட்ட பந்தயத்தில் வெற்றி பெற்றதை ...அதான் "ஸ்போர்ட்ஸ் கோட்டா".....

SMS இல் வந்தவை.....(நகைச்சுவை மற்றும் நற்கருத்துக்கள்)


-----------------------
இது கொஞ்சம் A வகை....


சர்தார் சோக்கு ஒன்று....


----------------------
இது எனக்கு மிகவும் பிடித்தது.....

கல்யாணம் ஆகாதவர்களுக்கு மட்டும்...


கல்லறையில் ஒருவன் தன் நண்பரின் கல்லறைக்கு மலர் வளையம் வைத்து விட்டு ,நடக்கும்போது அங்கே ஒருவன் ஒரு கல்லறையின் முன் முழங்காலிட்டு
"ஏன் செத்த,ஏன் செத்த "என்று கதறி கொண்டு இருக்க அங்கே போன இவர் அவனிடம்...
"சார் உங்களோட துக்கத்துல நான் கேக்க கூடாதுதான்,இந்த அளவுக்கு யாரும் அழுது நான் பார்த்ததில்லை,இவர் உங்களோட நெருங்கிய சொந்தமா?"
மற்றொருவர்:"இல்லைங்க என் பொண்டாட்டியோட மொத புருஷன்"
----------------

நன்றி நண்பர்களே.....

இன்று கொஞ்சம் வேலை அதிகம் என்பதால் நிதானமாக எழுத முடியவில்லை...

சுட்டிகள் மட்டுமே கொடுக்க முடிந்தது.....

இன்னும் பல காமெடிகள் உள்ளன , இது போன்று சுட்டிகள் கொடுக்கவா ? அல்லது சென்ற பதிவுகள் போல் தொடரவா?


Be cool...
Stay Cool....
மேலும் வாசிக்க...

சிற்றில் நற்றூண்.....


சென்ற பதிவுக்கு பல பின்னூட்டங்கள் போட்டு , நான் நன்றாக எழுதுவது போன்ற மாயையை அல்லது
பிரம்மையை ஏற்படுத்தி விட்டனர் "ராகவன் அண்ணனும் , ஜமால் நண்பரும்.....அவர்களுக்கு என் நன்றிகள் பல.....

இன்று ப்ராஜெக்ட் ஆணி கொஞ்சம் அதிகம் என்பதால் சற்றே தாமதமாக....தாமதத்திற்கு மன்னிக்கவும்.....


இந்த முறை சென்ற பதிவு பாணியில் சில கவிதைகள்.....(கவித கவித....)

"சிற்றில் நற்றூண் பற்றி, நின்மகன்

யாண்டு உளன் ஆயினும் அறியேன்; ஓரும்

புலி சேர்ந்து போகிய கல்அளை போல,

ஈன்ற வயிறோ இதுவே;

தோன்றுவன் மாதோ, போர்க்களத் தானே!"

என்ன அருமையான புறநானூற்று பாடல், வீட்டில் இருக்கும் சிறிய தூணை பற்றி கொண்டு ஒரு பெண் மற்றொரு பெண்ணிடம், எங்கே உன் மகன் ? என்று கேட்க,

அதற்கு அந்த தாய் சொல்கிறாள்,

"இதோ புலி தங்கி சென்ற கல் குகை போன்று , ஈன்ற வயிறு இங்கே இருக்கிறது அவனை பார்க்க வேண்டும் என்றால் நேரே போர்க்களம் போ, அங்கே தான் அவன் தோன்றுவான் என்கிறாள்....."


என்ன வீரம் வேண்டும் அந்த காவல் பெண்டுக்கு....

இது நான் பன்னிரெண்டாம் வகுப்பில் படித்தது....

இன்று நான் blog எழுத ஆரம்பித்த பின்பு என் அம்மாவிடம் யாராவது நான் எங்கே ? என்று கேட்டால் ...

"சிற்றில் நற்றூண் பற்றி, நின்மகன்

யாண்டு உளன் ஆயினும் அறியேன்; ஓரும்

புலி சேர்ந்து போகிய கல்அளை போல,

ஈன்ற வயிறோ இதுவே;

"தோன்றுவன் நெட் சென்டெரில் தானே "

என்று சொல்வாரோ என்று எண்ணினேன்.....என் அம்மா சுலபமாக ஒன்று சொன்னார்,

என்னவாக இருக்கும் என்று சொல்லுங்களேன்......

என் இளங்கலை வகுப்பில் ஒரு செய்யுள் ( செப்பலோசை , நேர் ஆசிரியப்பா என்று என்னமோ சொல்லி)சொந்தமாக எழுத சொன்னார் தமிழ் ஆசிரியர் , கொஞ்ச நேரத்தில் நாக்கு தொங்கி விட்டது.....

அன்று செய்யுள் வடிவில் இருந்த கடின வார்த்தைகள் மற்றும் சற்றே கடின வடிவத்தை உரைநடை மாட்டிற்று , பிறகு புது கவிதைகள் தோன்றின ,பிறகு ஹைக்கூக்கள் ....("சென்றியு அப்படின்னும் ஒன்னு இருக்கு "என்று இருப்பார் சுஜாதா )

புது கவிதைகள் பற்றி பலர் சுவாரஸ்யமாக சொல்லி உள்ளனர்......


"யாப்புடைத்த கவிதை

அணையுடைந்த காவிரி.

யாப்பற்ற கவிதை

இயற்கையெழில் இருக்க

செயற்கையணி எதற்கென்று

உடையுடன் ஒப்பனையும்

நீக்கிவிட்ட கன்னி ..."

ரஜினியின் படம் ஒன்றில் ,

"நமது கதை , புது கவிதை

இலக்கணங்கள் இதற்கு இல்லை ,

நான் உந்தன் பூமாலை "


என்று வரும்....

புது கவிதைகள் , இலக்கணங்கள் இல்லாமல் , வானமே எல்லை என்னும் கோட்பாடு உள்ளவை....

நம் பாரதி மற்றும் வீரமாமுனிவர் இதை ஒரு விதமாக தொடங்கினர் எனலாம்...

ஆங்கிலத்தில் "waste land " என்று நினைக்கிறேன்.... எழுதியவர் T.S .Eliot ,
இந்த புது கவிதைகளுக்கு வித்திட்டார் ......

இதில் இருந்து நமக்கு விளங்குவது , ஒன்றின் எளிய அல்லது குறைந்த(அதாவது சும்மா நச்சுன்னு இருக்கணும் ,நீட்டி முழக்காமல்) வடிவமே அடுத்தது என்பது.

அந்த வகையில் சில ஹைக்கூகள் மற்றும் அதன் இடையே சில அறிமுகங்கள்......

நான் எங்கோ ,என் மிக சிறிய வயதில் படித்தது...(இப்போ கிழவன் இல்லை)
அப்பொழுது எனக்குள் சின்ன தாக்கம் ஏற்படுத்தியதால் இன்று என் நினைவில்....
ஆனால் அதன் பிரம்மாக்கள் பெயர் தெரியவில்லை .....மன்னிக்கவும்......

இங்கே கொடுக்க பட்டவையை எழுதியவர்களின் பெயர்கள் தெரிந்தால் சொல்லவும்.....

இவை ஹைக்கூக்கள் என்று தெளிவாக சொல்வதற்கு இல்லை....முதலில் அறிமுகம்.....


"ஆண்டின் இறுதியில் என்னை பார்த்து

காலண்டர் கேட்டது

என்னை தவிர வேறு என்ன கிழித்தாய்."


இங்கே வாருங்கள் , கணினி பிரச்சனைகளுக்கு சுலபமாக தீர்வுகள் வழங்கி உள்ளனர்....


"உதிர்ந்த பூக்கள் கீழே

மொட்டுக்கள்

மலராதிர்கள்..."


இலவச கால் களுக்கு (போன்) அதாவது VOIP- Voice Over Internet Protocol மூலம் நீங்கள் இலவசமாக பேசலாம்...

மற்றொன்று.....


பூ வைக்கிறாள் பொட்டும் வைக்கிறாள்

விதவை,

தினமும் தன் கணவன் படத்திற்கு.இது இந்திய வரி பற்றிய பல சந்தேகங்களை தீர்க்க வல்லது....
பல டிப்ஸ் கொடுத்து உள்ளனர்...
பாருங்கள் ....சிறு உரசலுக்கே

தீக்குளிப்பா?

தீக்குச்சி.


youtube இல் உள்ள பட காட்சிகளை டவுன்லோட் செய்ய....அம்மண சிறுவன் கீழே,

வெட்கமின்றி

காற்றில் பறக்கும் கொடி.


டாஸ் விளையாட்டுகளுக்கு,வானை பார்த்து சிறுநீர் விட்ட சிறுவன்

நிலவை அசைத்தான்

குளத்தில்...


சில டெக் விசயங்களுக்கு....
படங்கள் மற்றும் பல மென்பொருள்களுக்கு....

நன்றி நண்பர்களே.....

கும்மி அப்படின்னா என்ன? நான் சின்ன பையன் கொஞ்சம் சொல்லி தாங்களேன்......

(I'm 16 with 7 yrs of experience)

be cool...
stay cool...

மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது