07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, March 11, 2009

கதை கேளுங்க.

http://kathaikathaiyaam.blogspot.com/2007/12/blog-post_19.html#links
நண்பர் திவா [மருத்துவ மயக்குனர்]கதைகள் எழுதி நம்மை அசத்தகிறார்.
ஆரம்பத்தில் , குத்தாட்டம் போடும் இவருடைய யானையைச் சீண்டி விளையாடி ,பின்னூட்டம் இடுவதென்றால் எனக்கு படு குஷி.
ஒரு நாள் திவாவின் வலைப்பூவில், தேன் எப்படி என்று பார்க்கப் போனால் ,தமிழ் ஆராய்ச்சியாளரின், தமிழ் மன்றம் போல்,மதுரைச் சங்கம் போல் எனக்கு எட்டாத உயரத்தில் இலக்கிய பதிவுகள் அடுக்கி இருக்கக் கண்டு மலைத்தேன் .பெரிய பெரிய தலைகள் அங்கே தமிழ் ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பதைக் கண்டு வியந்தேன்.கொல்லன் பட்டரையில் ஈ போல் பறந்து பார்த்ததில்
ஒரு வழியாக திவாவை கதை பதிவில் பிடித்தேன் .
இதுதான் நமக்குத் தோதான இடம் என்று ,நிதானமாக அமர்ந்து ஒவ்வொரு மலரையும் ,இதழ் இதழாக அழகு பார்த்ததில், நான் எடுத்தது..இந்த சிறுகதை.

இந்த தலைமுறை ஆண்களாகட்டும் பெண்களாகட்டும் தத்தம் வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் எது நல்லது எது தீயது என்பதை உணர்ந்துதான் இருக்கிறார்கள்.மேலோட்டமாக பார்த்தால் டீமோடு ஒத்துப்போக ,ஆபத்தில்லா ,ஒரு சில சில்மிஷங்கள் இருக்கலாம்.
ஆனால் மொத்தத்தில் முந்தைய தலைமுறையை விட இன்றைய தலை முறை தலை சிறந்துதான் இருக்கின்றனர்.திவாவின் கதை அழகாக விளக்குகிறது
----------------

http://anbuvanam.blogspot.com/2009/03/blog-post.html#links

அடுத்தகதை அன்புமணிஎழுதியது.
எப்பொழுதோ கேட்ட கதையை அழகாகச் சொல்லியிருக்கிறார்.இதில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் பொதிந்து கிடக்கிறது.
ஒரு கதையை நாமே எழுதுவது சுலபம்
கேட்ட கதையை கருத்து மாறாமல் எழுதுவது சிரமம்.
கதையின் நாயகன்,விஷயத்தை முழுவதும் படிக்காதது ,படித்த பின் முடியுமா முடியாதா என்று யோசிக்காதது ,அடுத்தவரிடம் இந்த ரகசியத்தைச் சொல்ல தயங்குவது போன்ற அவரது , தவறுகளுக்கெல்லாம் இறுதியாக, அவர் கண்ட பலன் நெய்யா பொய்யா நீங்களே வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
ராமலஷ்மி ஈமெயில் மூலமும் செல் மூலமும் இந்த ஹைப்பர்லின்க் இணைப்பைக் கற்றுத் தந்தார் .வகுப்பில் தாமதம் வண்டியும் தாமதமாகி விட்டது .வால்பையன் மகிழ்ச்சிதானே.நன்றியை முத்துச் சரத்தில் கோர்த்து விடுங்கள்

12 comments:

 1. அன்புமணியின் கதை நல்ல நகைச்சுவை!
  இதை மையமாக கொண்டு கூட நிறைய எழுதலாம்

  அங்கே பி(ப)ணம் கிடக்கு!

  அவர்கள் பா(போ)ருக்கு சென்றார்கள்! மாதிரி!

  ReplyDelete
 2. இந்தக்கால பெண்கள் எல்லாவிசயத்திலயேயும் தெளிவாகவே இருக்கிறார்கள் என்பதை உணர்த்தியது திவாவி்ன் கதை.

  ReplyDelete
 3. இன்ப அதிர்ச்சியாக என் வலைத்தளத்திற்கு இணைப்பா! மிக்க நன்றிங்க!

  ReplyDelete
 4. திவாவின் கதைக்கான வலைப்பூ அறிவேன். ’தெளிவு’ வள்ளுவத்தின் செலக்‌ஷன்.

  அன்புமணி வலைப்பூ தற்போதுதான் பார்த்தேன். ஹாஸ்ய ரஸம் படைப்பவரின் இந்தத் தேர்வும் அருமை.

  இருவருக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 5. கோமா, நல்ல தேர்வுக்கு உங்களுக்கும் வாழ்த்துக்கள்:)!

  ReplyDelete
 6. இந்த வலைப் பதிவு ரயிலுக்கு லின்க் மாட்ட நான் எடுத்துக் கொண்ட நேரத்தால் முதல் சரம் வர தாமதமாகி விட்டது.
  அன்புமணியின் கதையில் கருத்தோடு சிந்திக்கவும் விஷயம் இருந்தது இரண்டும் நகைச் சுவையால் பின்னப் பட்டிருந்தது கூடுதல் பாயிண்ட்

  ReplyDelete
 7. திவாவின் கதையின் கதாநாயகி போல் ,எல்லோரும் மாறும் நாள் வெகுதூரத்தில் இல்லை.
  தெளிவு ,தெளிவான கதை

  ReplyDelete
 8. ஒஹோ! நன்னி கோமா அக்கா!

  ReplyDelete
 9. நன்றி ராமலஷ்மி

  ReplyDelete
 10. வாழ்த்துகள் கோமா, இப்போத் தான் தெரியும், நீங்க இந்த வாரம் பூராவும் சிரிப்பாய்ச் சிரிக்க வைக்கிறீங்கனு. இன்னும் எதுவும் படிக்கலை, வந்ததுக்கு ஒரு வருகைப் பின்னூட்டம்!

  ReplyDelete
 11. நல்ல தேர்வுக்கு வாழ்த்துக்கள்:)!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது