07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, March 31, 2009

31.03.09 – வைரச்சரம் (Diamond)-பிடித்த எழுத்துக்கள்

பிளாகரக்கு வந்த பிறகு மோசமாக தமிழ் பேசுவதாக அதாவது நல்ல தமிழ் அல்லாது கொச்சை தமிழ், வீட்டில் பேச்சு வழக்கில் இல்லாத தமிழ் பேசுவதாக பழைய நண்பர்களும், என் கணவரும் சொல்ல ஆரம்பித்தார்கள். குறிப்பாக சில வார்த்தைகள் பேசும் போதும் என் கணவரின் கோபத்திற்கு ஆளாவேன். வீட்டில் அப்படிப்பட்ட வார்த்தைகள் பேசி பழக்கமில்லை, ஏன் என் நண்பர்களுடன் கூட பேசி பழக்கமில்லை. அவற்றில் சில

1. டுபுக்கு
2. மொக்கை
3. கடலை
4. உள்குத்து (இதற்கு அர்த்தம் தெரியாமல் பல மாதங்கள் இருந்தேன்)
5. ஆப்பு – இதை ஒரு முறை வீட்டில் சொல்லி, திட்டு வாங்கினேன்.. வாழ்க்கையில் நான் உபயோகபடுத்தவே கூடாது என்று முடிவெடுத்துவிட்ட வார்த்தை என்று சொல்லலாம். (வாங்கிய திட்டு அப்படி)
6. அடங்கு
7. இதோடா

இன்னும் பல வார்த்தைகள் உள்ளன, சட்டென்று நினைவில் வந்தது இவை தான். 2006 ல் பதிவுலகிற்கு வந்த புதிதில் ஒரு சிலரின் எழுத்துக்கள் ரொம்பவும் என்னை கவர்ந்தது. அதில் முதல் இடத்தில் இருப்பவர் டுபுக்கு. என் அலுவலக நண்பர் மூலம் இவருடைய பதிவிற்கு சென்று படிக்க ஆரம்பித்தேன். என்னை அதிகம் எழுத்தின் மூலம் கவர்ந்தவர்கள், இவர்களின் எழுத்துக்கு ஒரு ரசிகை மட்டும் இல்லாது ரொம்பவும் மரியாதையும் கூடவே இருக்கிறது எனலாம். இதோ ஒவ்வொன்றும் ஒவ்வொரு வைரங்கள். உங்கள் பார்வைக்கு :

1. டுபுக்கு இவரின் பதிவுகள் படித்து சிரிப்பதுதான் முதல் வேலையாக வைத்து இருப்பேன். இப்படி எல்லாம் காமெடியாக எழுத முடியும் என்று கற்றுக்கொண்டதே இவரிடம் தான்.

2. சிவகுமார்ஜி :- இவரை பற்றி நான் சொல்ல தேவையே இல்லை. சூப்பர் மேன்!. எதற்காகவும் தன் எழுத்து பாணியை / பணியை விட்டுக்கொடுக்க கூடாது என்பதில் பிடிவாதமாக இருப்பவர். சமூக அக்கறை அதிகம் உள்ளவர். இவருடைய பதிவுகளில் பின்னூட்டம் இடவே தேவை இருக்காது, அவ்வளவு தெளிவாக விஷயங்களை எழுதி இருப்பார். இவருடைய பொருளாதாரம் பற்றிய தொடர் என்னை மிகவும் கவர்ந்தது.

3. கல்வெட்டு :- ரொம்பவும் Informative ஆக பதிவெழுதுபவர்களில் ஒருவர். ஆரம்பித்திலிருந்தே சில பல பின்னூட்டங்களின் மூலம் எனக்கு நல்ல பல தகவல்களை தந்து கொண்டு இருப்பவர்.

4. தெகாஜி :- டாக்டர் இயற்கை நேசி இவர். எல்லா பிரிவுகளிலும் அலசி எழுதுபவர். இவருடைய சில பதிவுகள் எப்படி இப்படியெல்லாம் எழுதுகிறார் என்று என்னை யோசிக்கவைப்பவை.

4. மங்கை : மங்கை பதிவுலகிற்கு ஒரு கங்கை எனலாம். இவரின் சமூகம் சார்ந்த விழுப்புணர்வு பதிவுகள் வியக்கவைக்கும்,. சத்தமே இல்லாமல் யுத்தம் நடத்துபவர். இவரிடம் நான் கற்றுக்கொள்ள நிறையவே இருக்கிறது..

5. ஆசிப் மீரான் : இவருடைய “நல்லா இருங்கடே” க்காகவே படிக்க செல்லுவேன். இவரின் எழுத்து நடை எனக்கு ரொம்பவும் பிடித்தது.

6. முத்து தமிழினி பதிவுக்கு வந்த புதிதில் இவருடைய பதிவுகளும் அடிக்கடி படிக்க நேரிடும், நடுவே தீடிரென்று வேலைநிமித்தம் காணாமல் போனார், திரும்பவும் இப்போது எப்போதாவது வந்து அப்டேட் செய்கிறார். பிடித்த எழுத்துக்களில் இவருடையதும் ஒன்று.

7. சுகுனாதிவாகர் எல்லாம் கலந்த கலவை’ன்னு சொல்லனும்,. சில பதிவுகள் படிக்கும் போது உடம்பு சிலிர்க்கும்.

8. எஸ்.கே’ஜி மருத்துவம் சார்ந்த பதிவுகள், இவருடைய இதயம் “லப் டப்” தொடரை தொடர்ந்து படித்து வந்தேன். பிறகு எய்ட்ஸ், பாலியில் சம்பந்தப்பட்ட தொடர்கள், தொடர்ந்து முடியாவிட்டாலும் முடிந்தவரை படித்து இருக்கிறேன். மெயில் அனுப்பி வேறு தொல்லை தந்து இருக்கிறேன்.

9. புருனோ :- Informative ஆக எழுதும் இன்னொரு பதிவர். எனக்கு அவ்வப்போது பின்னூட்டங்கள் மூலம் நல்ல பல தகவல்களை தருபவர்.

10. வ.வா.ச : இப்போது வரையில் என்னை மிகவும் கவர்ந்த ஒரு குழுமம் என்றால் அது வ.வா. ச தான். ரொம்ப Active ஆக இருந்தார்கள், இப்போது முன்பு போல் இல்லையென்றாலும் விடாமல் குழுமத்தை நடத்திவருவது சந்தோஷமாக இருக்கிறது. அதில் அதிகம் படித்தது, ஜொள்ஸ் பதிவுகள். ஆஹா ஜொள்ளுவிடறதுக்கு எந்த வித வெட்கமும் படாமல், அதுவும் ரொம்ப இனவேடிவ் ஆக யோசித்து விதவிதமாக ஜொள்ளுவிட இவரை விட்டால் யாரும் இல்லை. அடுத்து தேவ், சில பதிவுகளில் முற்றுபுள்ளியே இருக்காது, ஒரே கமா’க்கள் தான், மூச்சு விடாமல் எழுதி இருப்பார்.. அதுவும் இவரின் சொல்லாடல் சான்சே இல்ல.. எப்படிங்க இப்படி எல்லாம் ?? நெக்ஸ்ட் நம்ம கைப்பூ.. எப்பவும் போல எனக்கு புரியாது, ஒரு 2, 3 தரம் திருப்பி திருப்பி படிக்கனும், அதற்கு என்னுடைய மோசமான தமிழ் மொழி அறிவு தான் காரணம் என்று சொல்லலாம். புதிய வார்த்தைகள் நிறைய இவருடைய பதிவுகளில் இருக்கும், சில சமயம் ஒன்றுமே புரியாமல் "சே! இந்த பழம் புளிக்கும்"என்று வந்து விடுவதும் உண்டு.

மற்ற சிங்கங்களின் தனி பதிவுகளை தான் அதிகம் படித்ததுண்டு, சங்கத்து பதிவுகளை படித்தாக நினைவில்லை. இதோ சிங்கங்களின் லிஸ்ட்.

அணில் குட்டி அனிதா :- ம்ம் முடிச்சாச்சா…???? அவ்வளவு தானா லிஸ்ட்..டு? இன்னும் இருக்கா.?. எனக்கு பிடிச்சவங்கள நீங்க சேர்க்கவே இல்லையா கவி?? என்ன அநியாயம் இது.. ?!! என்ன அக்கிரமம்? என்ன ஒரு வில்லத்தனம் இது? கேப்பாரு இல்லையா? அதெல்லாம் முடியாது, என் பங்குக்கு எனக்கு பிடித்தவர்களை இங்கே சொல்லாமல் இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன்.. ..

கவிதா : நகராதே..!! தயவு செய்து இங்கேயே உட்கார்ந்துக்கோ. .நானும் தாத்ஸ்’சும் கிளம்பறோம்………….பை ' ஐஐஐஐ!!

பீட்டர் தாத்ஸ் :- வைரச்சரம் (Diamond) : - Diamond, composed of carbon, is the hardest natural substance in the world. Each carbon atom is surrounded by four neighboring carbon atoms in a tetrahedral coordination that is the result of a covalent bond and a face-centered arrangement in the cubic unit cell. Diamond is in the isometric crystal system, which is reflected in the commonly found octahedral or cubic crystal form. The external crystal class is 4/mBar32/m, while the space group designation is F41dBar32/m. Twins are common on the {111} plane. It has perfect four directional cleavage, adamantine luster, and both a high refractive index, 2.42, and specific gravity, 3.52. Color is usually pale yellow to colorless, but can also be brown, blue, green, orange, red, and black .
Read more about Diamond
http://www.emporia.edu/earthsci/amber/go340/diamond.htm
http://www.galleries.com/minerals/elements/diamond/diamond.htm
http://en.wikipedia.org/wiki/Diamond

16 comments:

 1. இரண்டாம் நாள் வாழ்த்துகள்

  ReplyDelete
 2. \1. டுபுக்கு
  2. மொக்கை
  3. கடலை
  4. உள்குத்து (இதற்கு அர்த்தம் தெரியாமல் பல மாதங்கள் இருந்தேன்)
  5. ஆப்பு – இதை ஒரு முறை வீட்டில் சொல்லி, திட்டு வாங்கினேன்.. L வாழ்க்கையில் நான் உபயோகபடுத்தவே கூடாது என்று முடிவெடுத்துவிட்ட வார்த்தை என்று சொல்லலாம். (வாங்கிய திட்டு அப்படி)
  6. அடங்கு
  7. இதோடா\\

  இலக்கியம் ஏதும் எழுதுறீங்களா!

  ReplyDelete
 3. ஐ அம் வெயிட்டிங் அனி! உனக்கு மட்டும் பின்னுட்டம் உண்டு. நம்முடைய தூய நட்பு எப்பொழுதும் கவிக்கு பொறாமைதான். மனிதர் உணர்ந்துக் கொள்ள இது மனித நட்பு இல்லை.அதையும் தாண்டி புனிதமானது....

  ReplyDelete
 4. ஏகப்பட்ட பதிவுலக சிறப்பு வார்த்தைகளை தெரிந்து வச்சு இருக்கீங்களே.. சபாஷ்! பழைய பதிவர்களின் அறிமுகன் இனிது!

  ReplyDelete
 5. ஆக டுபுக்கு, மொக்கை, கடலை, உள்குத்து ஆகிய அருங்கலைச் சொற்களைக் கூறி சொந்தச் செலவில் சூன்யம் (சொ.செ.சூ.) வச்சுக்கிட்டீங்கன்னு சொல்றின்ங்க, அப்படித்தானே?

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  ReplyDelete
 6. wishes for the second day.

  ReplyDelete
 7. ஹேய்..கவிதா..வைரச்சரம் சூப்பர்!
  வவாச பதிவுகள் எனக்கும் ரொம்பப் பிடிக்கும்! அதுவும் தேவ் & கைப்ஸ் பதிவுகள்..சான்ஸே இல்லை! செம க்ரியேட்டிவிட்டி நக்கல் & நையாண்டிலே!

  ReplyDelete
 8. வாழ்த்துகள்!

  ReplyDelete
 9. //ஆப்பு – இதை ஒரு முறை வீட்டில் சொல்லி, திட்டு வாங்கினேன்.. வாழ்க்கையில் நான் உபயோகபடுத்தவே கூடாது என்று முடிவெடுத்துவிட்ட வார்த்தை என்று சொல்லலாம். (வாங்கிய திட்டு அப்படி)//

  ஆப்பு ஒவ்வொருத்தர் லைஃப்ல எப்படியெல்லாம் விளையாடுதப்பா :-).

  முத்து, புருனோ, ஆசிப், டுபுக்கு, சுகுனாதிவாகர் ம்ம்ம் நம்ம ஃபேவரைட் லிஸ்ட்ல பலரும் இங்கே இருக்காங்க.

  ஒவ்வொரு கல்லா எழுதுறிங்க, அப்படியே படிக்கிற எங்களுக்கும் ஒவ்வொரு நாளும் முத்தும் வைரமும் கொடுத்தா நல்லா இருக்கும்ல்ல. கைல கொடுக்கணும்ன்னு கூட அவசியம் இல்ல, எங்கே வாங்கணுமோ அந்தக் கடையோட voucher கொடுத்தா நாங்க கடைல போய் பிடிச்ச டிசைனா வாங்கிப்போம் ;-)

  ReplyDelete
 10. @ ஜமால் நன்றி.. எப்பவும் முதலில் கவனித்து முதலில் பின்னூட்டம் போடும் உங்களின் அன்புக்கு கைமாறாக என்ன செய்வது என்றே எனக்கு தெரியவில்லை :)

  .//இலக்கியம் ஏதும் எழுதுறீங்களா!
  //

  வீட்டில் எழுதிதான் கிடைச்சி இருக்கே பத்தாதா? :)

  **************************

  //மனிதர் உணர்ந்துக் கொள்ள இது மனித நட்பு இல்லை.அதையும் தாண்டி புனிதமானது....
  //

  ஆமாம் புனிதமானது ..அணில் விடுமா..விடாது.. உஷாஜி.. :)

  *****************************

  //ஏகப்பட்ட பதிவுலக சிறப்பு வார்த்தைகளை தெரிந்து வச்சு இருக்கீங்களே.. சபாஷ்! //

  தமிழ் பிரியன் !! அவ்வ்வ்வ் ரொம்ப புகழாதீங்க..! :)

  *************************
  @ ராகவன் சார் ஆனாலும் உங்களுக்கு குறும்பு ரொம்ப ஜாஸ்தி சார்!! :)))
  ம்ம் என்ன ஒரு சந்தோஷம் !! :)

  ****************************

  @ஜோதி பாரதி, அமுதா நன்றி..

  *****************************

  அனானி அடங்க மாட்டீங்களா நீங்க?? பெயருடன் வாழ்த்து சொன்னீங்கன்னா இன்னும் சந்தோஷபடுவேன்.. :)

  *******************************

  @ முல்ஸ்..தாங்ஸ்டா... ஆமா சூப்பர் இல்ல!! :)

  *****************************
  //அப்படியே படிக்கிற எங்களுக்கும் ஒவ்வொரு நாளும் முத்தும் வைரமும் கொடுத்தா நல்லா இருக்கும்ல்ல. கைல கொடுக்கணும்ன்னு கூட அவசியம் இல்ல, எங்கே வாங்கணுமோ அந்தக் கடையோட voucher கொடுத்தா நாங்க கடைல போய் பிடிச்ச டிசைனா வாங்கிப்போம் ;-)
  //

  ராஜ், ஏன்ன்ன்? எழுதறத விட்டுடு அப்படியே ஓடு ன்னு சொல்றதை இப்படி சொல்றீங்களாக்கும்.. :)). ம்ம் இப்படி கேட்பீங்கன்னு தெரிந்து இருந்தால், பூக்களாலே தொடத்து இருப்பேன்.. :)) ஜஸ்ட் மிஸ் ஸூ..!!

  ReplyDelete
 11. ரொம்ப நல்லா இருக்கு கவிதா....நேரம் கிடைக்கும் பொது எல்லார் வ்வசளுக்கும் போறேன்

  அதெல்லாம் சரி உள் குத்துன்னா என்ன?

  ReplyDelete
 12. இது எப்போதிலிருந்து சொல்லவே இல்லை. :-)

  வித்தியாசமான ஆளுதான்னு இன்னும் நிரூபிச்சுகிறீங்க.

  இவ் வார வலைச்சர ஆசிரியைக்கு வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 13. @ நிலா அம்மா..

  நன்றி, உள்குத்து'ன்னா... வெளிப்படையாக அர்த்தம் தெரியாதபடி வார்த்தைகளை பயன்படுத்துவது.. ..உள்ளே ஒரு அர்த்தம் இருக்கும்.. :)

  சரி நான் சரியா சொல்லி இருக்கேன்னான்னு வேற யாராச்சும் சொல்லட்டும்.. :))

  @ தெகாஜி, மன்னிக்கனும் நீங்க பார்த்தீங்களான்னு மெயில் அனுப்பனும்னு நினைச்சேன்.. நீங்களே பார்த்துட்டீங்க..

  வாழ்த்துக்களுக்கு நன்றி :)

  //வித்தியாசமான ஆளுதான்னு இன்னும் நிரூபிச்சுகிறீங்க.
  //

  :) வித்தியாசம் எல்லாம் இல்லை தெகாஜி, கொஞ்சம் நேரம் எடுத்து செய்யறேன் அவ்வளவு தான்..:)

  ReplyDelete
 14. தமிழில் பொதுவில் சொல்லக்கூடாதவை அல்லது கெட்டவார்த்தை என்பதில் கோவைப் பக்கம் எண் 1க்கு முதலிடம்.வடிவேலு சிரிப்பதற்காக எழுத்தை மாற்றிப்போட்டு அதை ஜனரஞ்சகமாக்கி விட்டார்.பரிதாபத்துக்குரிய தமிழர்களும் பொருள் அறியாமல் பேசுகிறார்கள்.அதே போலவே ங்கொய்யால சென்னை கொச்சைக்கு சமம்.

  மற்ற சொற்கள் பதிவுப் பக்கம் வந்த பின்புதான் எனக்கும் தெரிந்தது.

  என்னோட போதாத காலம் பதிவின் காரணம் கொண்டு ஒரு பெண்ணோடு இதையெல்லாம் சொல்ல வேண்டியிருக்குது:(

  (பார்க்கலாம் இந்தப் பின்னூட்டம் மூலமாவது பதிவர்கள் பதங்களை எழுத்தில் கொண்டு வராமல் இருக்கிறார்களா என்று)

  ReplyDelete
 15. வாங்க ராஜ நடராஜன்,

  //ங்கொய்யால//

  அபிஅப்பா இதை பயன்படித்திய போது அவரிடம் அர்த்தம் கேட்டேன் இன்னும் சொல்லல.. ரொம்ப முக்கியமா என்று பலர் நினைக்கலாம்..

  கெட்டவார்த்தை என்னும் பட்சத்தில் ஏன் அனைவருமே அதை எளிதாக பயன்படுத்துகிறார்கள்.

  அபிஅப்பா.. எனக்கு இப்போதாவது அர்த்தம் சொல்லுங்கள்.. இல்லைன்னா..எனக்காக அந்த வார்த்தையை பயன்படுத்தாதீர்கள். :))

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது