07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, March 9, 2009

சமையல் வா..ர...ம்

பூக்கடைக்கு விளம்பரம் போல் இருந்தாலும் என் பார்வையில் இவர்களைப் பற்றி எழுதிகிறேன்

http://adupankarai.kamalascorner.com/

இன்று என் பணி நிமித்தம் பல பேருடைய சமையலரைக்குள் நுழைந்தேன்.
அதன் டெம்ப்பிளேட் அழகு,டெம்ப்பிளேட்டே அழகென்றால் அவர் பிளேட்டில் வைக்கும் உணவு எப்படியிருக்கும் .சூப்பர்தானே?இவர் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் எதுவும் தன் டெம்பிளேட்டில் சேர்க்கவில்லை.அதனாலேயே வலைப்பூ அனைவருக்கும் அழைப்பு அனுப்பும் விதமாக அமைந்திருக்கிறது
முழுக்க முழுக்க உணவுக்கென்றே அமைந்த விதம் பாராட்டுக்கு உரியது.
புகைப்படங்கள் அத்தனையும் அருமை.நெல்லிக்காய் பதார்த்தில் இனிப்பு நெல்லிக்காய்

http://adupankarai.kamalascorner.com/2008/11/blog-post_1518.html#link

படத்தைப் பார்த்த உடனே ஒரு தட்டில் தயிர்சாதத்துடன் வந்து அமர்ந்து கொண்டு மானிட்டரைப் பார்த்தபடியே சாப்பிடலாம் போலிருந்தது .அருமையான சமையலறை பதிவு.
இஞ்சி பூண்டு நெல்லிக்காய் இவைகளின் மருத்துவ குணங்களையும் சேர்த்து சொல்வதால் பதிவு மேலும் சிறப்படைகிறது.சென்று பாருங்கள்.வெளியே வர வெகு நேரம் ஆகும்.
கமலாவுக்கு வாழ்த்துக்கள்.
------------------------------------------

அள்ளி இலையிலிட்டா
அடுக்கடுக்கா வெள்ளிவரும்
உண்ணவொரு கையெடுத்தா
உள்நாக்கில் நீர்வடியும்!
கத்தரிக்காய் கூட்டுவச்சா
கடவுளுக்கே பசியெடுக்கும்!
வெண்டைக்காய் பச்சடியும்
வெள்ளரிக்காய் தக்காளி
கிண்டிவிட்ட கீரைக்கும்
கீழிறங்கும் தெய்வமெல்லாம்!

-- கவியரசர் கண்ணதாசன்
இதை எங்கிருந்து சுட்டேன் என்று பார்க்கிறீர்களா?
எல்லாம் நம்ம சதங்கா கிச்சனிலிருந்துதான்.
வாசலிலேயே மாட்டி வைத்திருக்கிறார் கண்ணதாசனின் கவிதையை.

http://chettinad-kitchen.blogspot.com/

பதிவுகள் அதிகம் இல்லையென்றாலும் பதிந்தவரைப் பதிந்தவரை ,பாராட்டலாம்.
நான் செய்து பார்க்க இருப்பது குழிப்பணியாரம்.பாம்பே படம் மூலம் பிரபலமானது எங்கள் ஊர் குழிப் பணியாரம்.[மற்றொரு படத்தில் இட்லி உப்புமா]
ஃபோட்டோக்களும் அருமையான கிளாரிடியுடன் வடையில் மொறு மொறுப்பு கூட கண்ணாலேயே ருசித்து விடலாம் போல் இருந்தன.
http://chettinad-kitchen.blogspot.com/2009/01/blog-post_29.html
ஏன் கொஞ்சமாக எழுதியிருக்கிறார்.இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்.ஆன்மீகம்,ஜோஸ்யம் சமையல் இந்த மூன்றிலும் முதலீடு செய்தால் நல்ல வரவேற்பு கிட்டும்.அத்தனை டாப் டென்னில் முதல் இடம் வகிக்கிறது.

சதங்கா நிறைய எழுதுங்கள் பயனுள்ள பதிவு.கட்லெட் எனக்கு பிடித்த டிஃபன்.குறிப்பு தாருங்களேன்.குறிப்பெடுத்து செய்து பார்க்கக் காத்திருக்கிறோம்
----------------------
அடுத்தது எல்லோரும் வாருங்கள் 9வெஸ்ட் ஸ்ட்ரீட் விலாசத்தில்
http://9-west.blogspot.com/

நானானி ஆர்வத்துடன் விருந்துபசாரத்துடன் நம்மைத் திக்கு முக்காட வைக்கக் காத்திருக்கிறார்.
இவரிடம் எனக்குப் பிடித்த கூடுதல் அம்சம் அவருடைய செய்முறை விளக்கம்.
நேரில் கேட்பது போல் ஒரு நெருக்கத்தை அனைவருக்கும் உண்டு பண்ணியிருக்கிறார்.பாராட்டுகிறேன் இவருடைய புதிய பாணியை.
நெல்லை புகழ் சமையல் தெரிய வேண்டுமா தேடுங்கள் கிடைத்து விடும்
இவருடைய இன்னொரு பிளஸ் பாயிண்ட் ,எதை வைத்து எதை செய்வார் என்று கண்டு பிடிக்கவே முடியாது .ஆராய்ச்சி செய்து வெற்றி அடைவது இவரது மற்றொரு தனி வழி.
ஒரு நபர் ஜூஸ்ஸாக எடுப்பதில் இவர் 10 நபருக்கு புலவ் செய்து பசி ஆற்றுவார்.
சொல்லும் போதே வீட்டு நடப்பு நாட்டு நடப்பு அனுபவம் எல்லாம் கலந்திருக்கும்
http://9-west.blogspot.com/2008/12/blog-post.html

http://9-west.blogspot.com/
ஒரு விசிட் போய் பாருங்கள்.காக்டெயில் புலவ்
எனக்கொரு ஆசை இவரிடம் ஒரு மெகா ரெசிபி கேட்டு அவர் எப்படி விளக்குகிறார் என்பதை நேரில் ரசிக்க வேண்டும்.
----------
[அடுத்து வெளியாகும் மதியம் பதிவில்,
புதுகைத்தென்றல்
தாரணி பிரியா

2 comments:

  1. ஊருக்கு போயிட்டு இப்பத்தாங்க வந்தேன்.

    என்னியப் பத்தி என்ன எழுதியிருக்கீங்கன்னு போய் பாக்கறேன்.

    வலைச்ச்ர ஆசிரியருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. போன வாரம் முழுதும் நான் ஆணி அடிக்கவுமில்லை, ஆணி புடுங்கவும் இல்லை. இன்றுதான் பார்த்தேன் படித்தேன். அட! என்னைப் பற்றியும் எழுதியிருக்கிறார்களே!!!!

    மிக்க மகிழ்ச்சி கோமா!!!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது