07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, March 1, 2009

செல்விருந்து ஓம்புதலும் வருவிருந்து காத்திருத்தலும்

அன்பின் பதிவர்களே
கடந்த ஒரு வார காலமாக, சிங்கையைச் சார்ந்த அருமை நண்பர் ஜோதி பாரதி ஆசிரியராகப் பொறுப்பேற்று, ஏற்ற பொறுப்பினை, முழு மன ஈடுபாட்டுடன் வெற்றிகரமாக நிறைவேற்றி மன நிறைவுடன் விடை பெறுகிறார். நாளுக்கு ஒன்றாக ஏழு பதிவுகள் இட்டு ஏறத்தாழ நானூறுக்கும் அதிகமான மறு மொழிகளைப் பெற்றிருக்கிறார்.
முதல் பதிவினை பாவேந்தர் பாரதி தாசனின் பாடலோடு துவங்கி, வலைச்சரத்தினை வாழ்த்தி, சுய அறிமுகம் செய்து கொண்ட பாங்கு பாராட்டுதலுக்குரியது. அடுத்தடுத்த பதிவுகளில், பல புதிய பதிவர்களை அறிமுகப் படுத்திய விதமும் நன்று. பல்வேறு தலைப்புகளில் அறிமுகம் செய்துள்ளார்.
அவரை வலைச்சரத்தின் சார்பினிலும் என் தனிப்பட்ட முறையினிலும் வாழ்த்தி வழியனுப்புவதில் பெருமை கொள்கிறோம்.
நல்வாழ்த்துகள் ஜோதி பாரதி - சந்திப்போம் அத்திவெட்டி அலசலில்.
---------------------------------------------------------------------------------------------
அடுத்து நாளை முதல் - மார்ச்சுத்திங்கள் இரண்டாம் நாள் முதல் வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்க வருகிறார் அருமை நண்பர் ஜெகதீசன். விருதுநகர் மாவட்டத்தினைச் சார்ந்த ஆமத்தூரைச் சேர்ந்த இவர் தற்போது சிங்கையில் வசிக்கிறார். ஜூலை 2007 முதல் எழுதி வரும் இவர் பல்வேறு தலைப்புகளிலும் பதிவுகள் இட்டு வருகிறார்.
ஏற்கனவே இணக்கம் தெரிவித்த நண்பர் எதிர் பாராத காரணங்களினால் கடைசி நிமிடத்தில் இயலாமையைத் தெரிவித்தபோது, குறுகிய கால அவகாசத்தினில், பல்வேறு பணிகளுக்கு இடையிலும், பொறுப்பேற்க, நண்பர் ஜெகதீசன் இணக்கம் தெரிவித்து, நாளை முதல் பணியினைத் துவங்குகிறார்.
அவரை வருக வருக என வரவேற்று வாழ்த்துவதில் வலைச்சரம் பெருமை கொள்கிறது.
சீனா

9 comments:

 1. அண்ணன் ஜோதிபாரதிக்கு மிக்க நன்றிகள்! (கலக்கிட்டீங்க அண்ணே!)
  ஜெகதீசன் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 2. //
  பல்வேறு பணிகளுக்கு இடையிலும், பொறுப்பேற்க, நண்பர் ஜெகதீசன் இணக்கம் தெரிவித்து, நாளை முதல் பணியினைத் துவங்குகிறார்.
  //
  கிகிகி.... ஆமம் எனக்கு "பல்வேறு பணிகள் இருக்கு"... பாரதி அண்ணே பாத்துக்கோங்க.. ஜோசப் அண்ணே பாத்துக்கோங்க... எனக்கு ரெம்ப் வேலை இருக்கு...
  :)

  ReplyDelete
 3. உங்களின் ஆசிரியர் பணி நல்ல முறையில் நிறைவேர்ரியத்திற்கு வாழ்த்துக்கள் சகோதரர் ஜோதிபாரதி!!

  ReplyDelete
 4. புதிய வலைச்சரம் ஆசிரியர்
  ஜெகதீசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!!!

  ReplyDelete
 5. //தமிழ் பிரியன் said...

  அண்ணன் ஜோதிபாரதிக்கு மிக்க நன்றிகள்! (கலக்கிட்டீங்க அண்ணே!)
  ஜெகதீசன் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்!//

  நன்றி தமிழ் பிரியன்!

  ReplyDelete
 6. //ஜெகதீசன் said...

  //
  பல்வேறு பணிகளுக்கு இடையிலும், பொறுப்பேற்க, நண்பர் ஜெகதீசன் இணக்கம் தெரிவித்து, நாளை முதல் பணியினைத் துவங்குகிறார்.
  //
  கிகிகி.... ஆமம் எனக்கு "பல்வேறு பணிகள் இருக்கு"... பாரதி அண்ணே பாத்துக்கோங்க.. ஜோசப் அண்ணே பாத்துக்கோங்க... எனக்கு ரெம்ப் வேலை இருக்கு...
  :)//

  வலைச்சர ஆசிரியர் ஆனதற்கு வாழ்த்துகள் சேகு!

  ReplyDelete
 7. //RAMYA said...

  உங்களின் ஆசிரியர் பணி நல்ல முறையில் நிறைவேர்ரியத்திற்கு வாழ்த்துக்கள் சகோதரர் ஜோதிபாரதி!!//

  நன்றி சகோதரி ரம்யா!

  ReplyDelete
 8. நன்றியும்

  வாழ்த்துகளும்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது