07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, March 26, 2009

பசுமை நிறைந்த நினைவுகளே!

ஒத்துக்கறேங்க...வலைச்சரம் தொடுக்கறது ஒன்னும் சுலபமான காரியம் இல்லைங்க. ஏற்கனவே படிச்ச பதிவுகள் தானே...சுலபமாத் தேடி எடுத்துடலாம்னு நெனச்சேன். ஆனா படிச்சப்போவே பிட் எடுத்து வச்சிருக்கனும் போலிருக்கு. அடிமனசுல தங்கியிருந்த அந்த பதிவுகளைத் தோண்டி எடுக்கறதுக்குள்ள பெரும்பாடா போயிடுச்சு. பழைய நினைவுகளை எல்லாம் அசைபோடுறதுன்னா ஒரு சுகம் தானே. அந்த சுகத்தை நமக்கு அள்ளிக் கொடுத்த சில பதிவுகளை வரிசை படுத்தறேன்.

கடந்த கால நினைவுகள்ல, அதிகப் பட்ச மக்களால ரசிக்கப்பட்டது எதுன்னு இணையத்துல தேடிப் பாத்தீங்கன்னா அது தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பற்றிய நினைவுகள் தாங்க. நம்ம தமிழ் வலையுலகிலும் தூர்தர்ஷனைப் பற்றிய சில அருமையான நினைவுபடுத்தல் (கொசுவத்தி) பதிவுகள் வந்துள்ளன.

முதலில் கொசுவத்தி சுத்துவதில் மாஸ்டரான கப்பிபயலின் தூர்தர்ஷன் பத்திய பதிவைப் படிச்சுப் பாருங்க. டிடி யில் வந்த பழைய சில பாடல்கள், நிகழ்ச்சிகள், அவங்க வீட்டுல டிவி பார்த்த அனுபவங்கள் இப்படின்னு ரொம்ப சுவாரசியமா எழுதிருக்காரு.

"ஆணா பொண்ணா பொறந்தது
அது தான் இங்க முதல் சேதி
ஆணா பொறந்தா சிரிப்பு என்ன - அட
பெண்ணா பொறந்தா வெறுப்பு என்ன"


ஸ்ரீவித்யா அந்த காலத்துல தூர்தர்ஷன்ல பாடுவாங்களே பார்த்திருக்கீங்களா? இந்த பாட்டு மெட்டு நல்லா ஞாபகம் இருக்கு."

டிடி - 1 & டிடி - 2(மெட்ரோ)


தூர்தர்ஷன் நாடகங்கள், நிகழ்ச்சிகள் அப்படின்னு கார்த்திகேயனும்(Sukas) தன் நினைவுகளைக் கலந்து கட்டி வழங்கியிருக்கிறார். இவர் ஒரு தேர்ந்த பென்சில் ஓவியக் கலைஞர் என்பது கூடுதல் தகவல். அவருடைய பென்சில் ஓவியங்களையும் அவருடைய தளத்தில் காணலாம்.

"வயலும் வாழ்வும், மனைமாட்சி, கொஞ்சம் நில்லுங்கள் ..உழைப்பவர் உலகம் ..இதில் முன்னோட்டத்தில் அடுத்தவார திரைப்படப் பேரைச் சொல்லுவார்களெனப் பார்த்தால் ..அதற்கு முந்தைய வாரம் எதோ "ஹாலிவுட் படம்" போட்டது போல "அடுத்த வாரம் ஞாயிறு 5 மணிக்கு தமிழ் திரைப்படம்" என்று முடிப்பர்.. வெட்டியாக போய்விடும்.."
சென்னைத் தொலைக்காட்சி நிலையம்


தசாவதாரம் படத்துல வர்ற கமலின் ஓப்பனிங் உரையின் பாணியில் ஆரம்பிச்சிருக்கும் அம்பியின் பதிவும் டிடி நிகழ்ச்சிகளைப் பற்றிய ஒரு அழகான மலரும் நினைவு.
"சன் டிவியும் விஜய் டிவியும் தமிழனின் வரவேற்பறையில் நுழையாத என்பதுகளில் தூர்தர்ஷன்காரர்கள் டில்லியிலிருந்து, போனா போகட்டும் என அவ்வப்போது தமிழ் நிகழ்ச்சிகளையும் நடத்தி கொள்ள அனுமதித்து இருந்த காலம்."
எதிரொலி

எல்லாரும் தூர்தர்ஷன் நிகழ்ச்சிகளைப் பத்தி எழுதிருக்கும் போது, சந்தன முல்லை கொஞ்சம் வித்தியாசமா கேபிள் டிவியோட ஆரம்ப நாட்களையும் படம்பிடிச்சி காட்டிருக்காங்க. கேபிளுக்கும் டிடிக்கும் ஒரு சின்ன ஒப்புமையும் பண்ணிருக்காங்க.

"கேபிள் கொஞ்சம் கொஞ்சமா பரிணாம வளர்ச்சி அடைஞ்சிக்கிட்டிருந்தப்போதான், திடீர்னு ஒரு சேனல்..சன் ன்னு!!ஆரம்பத்தில இ.மாலா-ன்னு ஒரு ஆண்ட்டி வருவாங்க!! அழகா இருப்பாங்க அந்த ஆண்ட்டி. இப்ப என்ன பண்றாங்கன்னு தெரியல!அப்புறம் வார்த்தை விளையாட்டு..கேம்ஸ் ஷோ, சினிமா குவிஸ், ரபி பெர்னார்டின் நேருக்கு நேர், பிரபலங்களின் பேட்டி என்று புதுப் புது நிகழ்ச்சிகள்!! ஆனா அப்ப பார்த்து நான் பப்ளிக் எக்ஸாம்..நிறைய மிஸ் பண்ணிட்டேன்!

இப்போ எத்தனையோ சேனல்கள்..நிறைய நிகழ்ச்சிகள்..
பார்க்க நேரமுமில்லை...பார்க்கும்படியாய் எந்த நிகழ்ச்சியுமில்லை!
விளம்பரங்கள் மட்டுமே ரசிக்கும்படியாயிருக்கிறது இப்பொழுதும் அப்போழுதும்!!"

தூர்தர்ஷனும் கேபிள் டீவியும்!!


எல்லாரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பத்தி கொசுவத்தி சுத்துனா KRS வித்தியாசமா தொலைக்காட்சி விளம்பரங்களைப் பத்தி எழுதிருக்காரு. சுவாரசியமா இருக்கு பாருங்க.

"பென்சில்களுக்கு இடையே ஒட்டப் பந்தயம்...நட்ராஜ் பென்சில் தவிர எல்லாப் பென்சிலுக்கும் பாதியிலேயே மூக்கு ஒடைஞ்சிரும்! கடைசீல நட்ராஜ் இஸ் த வின்னர்!
(நட்ராஜ் ஜியாமெட்ரி பாக்சும் அப்போ ரொம்ப ஃபேமஸ்! கேமலின் பாக்ஸ் விலை அதிகம்! நட்ராஜ் தான் ஏழைக்கேத்த எள்ளுருண்டை! நீங்க எந்த ஜியாமெட்ரி பாக்ஸ் வச்சிருந்தீங்க மக்கா?)"

***குழந்தைப்பருவ விளம்பரங்கள்! போட்டுடைத்த டாக்டர் கலைஞர்!


டிவி நினைவுகள் போலவே வானொலி கேட்ட மலரும் நினைவுகளையும் எழுதி வச்சிருக்காரு கப்பி பய.

"ஆகாசவாணி செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண்ஸ்வாமி" இது தான் அந்த நாட்களில் படுக்கையிலிருந்து எழ அலாரம். அதிகாலையில் எழுந்ததுமே அப்பா வானொலியை உயிர்ப்பித்துவிடுவார். சுப்ரபாதம், பக்திப் பாடல்கள், "ஏசு அழைக்கிறார்", நாகூர் ஹனிபாவின் கம்பீரக் குரலில் பாடல்கள் என்று ஆரம்பிக்கும். அப்போது விழிப்பு வந்தாலும் போர்வையை இழுத்துப் போர்த்தி அரைத்தூக்கத்தில் படுத்திருப்பது பரமசுகம். பக்திப் பாடல்கள் முடிந்ததும் வேளாண் செய்திகள். "
நினைத்தாலே இனிக்கும்


பள்ளி நினைவுகளினூடே மறந்து போன சில சின்னப்பசங்க பாட்டையும் நினைவு படுத்துகிறார் கப்பி.

"பிஸ்கட் பிஸ்கட்
ஜாம் பிஸ்கட்
என்ன ஜாம்
கோ ஜாம்
என்ன கோ
டீ கோ
என்ன டீ
பன்ருட்டி"

பிஸ்கட் பிஸ்கட் ஜாம் பிஸ்கட்


என்பதுகளின் இறுதியில் சிறுவர்களாக இருந்த போது ரசித்த மிட்டாய்களை நினைவு படுத்துறாங்க சந்தனமுல்லை.

"Naturo இது கெட்டிப்படுத்தப் பட்ட பழச்சாறு. ஆரம்பத்தில் மாம்பழச் சுவையில் மட்டுமே கிடைத்தது. பின் கொய்யா மற்றும் மற்றொரு
சுவையில் அறிமுகப் படுத்தப்பட்டது. இப்போதும் மாம்பழச் சுவையில் கடைகளில் பார்க்கிறேன்!"

சாக்லேட் கதைகள்..


பேருந்தில் பயணம் செய்த நினைவுகளை நீங்களும் அவர் கூட பயணம் செய்யுற மாதிரி அசைபோடுறாரு கப்பி.

"கைக்குழந்தையை வைத்துக்கொண்டு தடுமாறும் இளம்பெண்ணைப் பார்த்து "எவனும் இடம் கொடுக்க மாட்டான். தூங்கற மாதிரி நடிப்பானுங்க" என்று கமெண்ட் அடித்த நாற்பது வயது மனிதர் அவருக்கு இடம் கிடைத்ததும் ஜன்னலை இறக்கி விட்டு கண்கள் மூடிக்கொள்வதையும், அந்தப் பெண் உறங்கும் குழந்தையை தோளில் போட்டு நின்று கொண்டிருப்பதையும் காண முடிவது இத்தகைய பேருந்துப் பயணங்களில் தான்."
பேருந்து பயணங்களில்...குழந்தை பருவத்தில் படித்த சில அருமையான தமிழ் பாடல்களை நினைவு கூறுகிறார் Sukas. கூடவே கவிஞர் அழ.வள்ளியப்பா பற்றிய நினைவுகளையும்.

"வானத்திலே திருவிழா
வழக்கமான ஒருவிழா

இடியிடிக்கும் மேகங்கள்
இறங்கி வரும் தாளங்கள்

மின்னலொரு நாட்டியம்
மேடை வான மண்டபம்

தூறலொரு தோரணம்
தூய மழை காரணம்"

குழந்தைக் கவிஞர்...??

6 comments:

 1. ஒத்துக்கறேங்க...வலைச்சரம் தொடுக்கறது ஒன்னும் சுலபமான காரியம் இல்லைங்க. \\

  அது!

  ReplyDelete
 2. \\தசாவதாரம் படத்துல வர்ற கமலின் ஓப்பனிங் உரையின் பாணியில் ஆரம்பிச்சிருக்கும் அம்பியின் பதிவும் டிடி நிகழ்ச்சிகளைப் பற்றிய ஒரு அழகான மலரும் நினைவு.
  "சன் டிவியும் விஜய் டிவியும் தமிழனின் வரவேற்பறையில் நுழையாத என்பதுகளில் தூர்தர்ஷன்காரர்கள் டில்லியிலிருந்து, போனா போகட்டும் என அவ்வப்போது தமிழ் நிகழ்ச்சிகளையும் நடத்தி கொள்ள அனுமதித்து இருந்த காலம்."\\

  தூள்

  ReplyDelete
 3. கலக்கல்ஸ்!
  ஆகா..இன்னைக்கு கொசுவத்தி ஸ்பெஷலா!! பல நல்ல பதிவுகளின் சுட்டிகளைத் தந்திருக்கீங்க..அதுல என்னுடைய பதிவுகளுக்கான சுட்டியும் பார்க்க மகிச்சியாக இருந்தது! நன்றி கைப்ஸ் அண்ணா!

  //
  "ஆணா பொண்ணா பொறந்தது
  // ஆமா..அதுல அந்தப் பொண்ணை விளையாட விடாம அவங்க ஆயா கதவைச் சாத்திடுவாங்க..:(

  ReplyDelete
 4. நட்ராஜ் ஜியாமெட்ரி பாக்சும் அப்போ ரொம்ப ஃபேமஸ்! கேமலின் பாக்ஸ் விலை அதிகம்! நட்ராஜ் தான் ஏழைக்கேத்த எள்ளுருண்டை! நீங்க எந்த ஜியாமெட்ரி பாக்ஸ் வச்சிருந்தீங்க மக்கா?)"
  ////////////////

  எங்க அக்காக்காரி உபயோகிச்சு போட்டது தான் எனக்கு...அவ எதையுமே பத்திரமா வச்சுருப்பா...அதுனால எனக்கு ஒரு புது நடராஜ் , பழைய கேமல் ...[ புரியுதா ..அக்காக்கு பணக்காரி..நான் எள்ளுருண்டை கேசுன்னு ]

  ReplyDelete
 5. அப்டியே கொசுவர்த்தி சுத்தி சுத்தி ....பின்னாடி போயிட்டேன்....சின்ன சந்தோசம்..அதை எல்லாம் தொலைத்து விட்ட வருத்தம்

  நன்றி ...

  ReplyDelete
 6. ஜமால், முல்லை, நிலா அம்மா - மிக்க நன்றி.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது