07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, March 16, 2009

அறிமுக படலம்..."காதொளிரும் குண்டலமும்,

கைக்கு வளையாபதியும்,

கருணை மார்பின், மீதொளிர்சிந் தாமணியும்,

மெல்லிடையில் மேகலையும்,

சிலம்பார் இன்ப போதொளிர் பூந்தாளினையும்,

பொன்முடி சூளாமணியும் பொலியசூடி...

நீதியொளிர் செங்கோலாய் திருக்குறளை தாங்கு தமிழ்


நீடு வாழ்க..."என்ற சுத்தானந்த பாரதியாரின் வரிகளில் தொடங்குவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.....

இன்னும் வேறு அணிகலன்கள் பல தமிழன்னைக்கு படைக்க பட வேண்டும் , நம் வலை கூறும் நல்லுலகில் இருந்து ஒரு மோதிரமாவது அன்னை எடுத்து கொள்ள வேண்டும் என்பது என் அவா....


என்னை பற்றி முதல் பதிவில் சொல்லலாம் என்று சீனா அண்ணா சொன்னார்கள்,அவருக்கு என் நன்றிகள்,என்னை ஆசிரியர் ஆக்கியமைக்கும் , நல்ல ஒரு வலையை அழகுற தொடுத்து வைத்தமைக்கும்...... கோமா அவர்கள் சிறப்புற முடித்தார்கள்,அவரின் ஒவ்வொரு வார்த்தையிலும் நேர்த்தி இருந்தது...வலைச்சர ரசிகர்களின் ரசிப்பு தன்மை எனக்கு நன்றாக விளங்கியது.. என் மொக்கையை எப்படி வலைச்சர ரசிகர்கள் ஏற்று கொள்வார்கள் என்று ஒரு கவலையை என்னுள் அவர் ஏற்றி விட்டார்....


வலையுலக ஜாம்பவான்கள் பலர் களம் கண்ட வலைச்சரத்தில் , நானே மிக இளையவனோ என்று தோன்றுகிறது, (I'm 16 with 7 yrs of experience)

என்னுடைய எழுத்தில் கொஞ்சம் அதிகம் ஆங்கிலம் கலந்தும்,சில பல பிழைகளும் இருப்பின் அன்போடு பொருத்து ,திருத்தி தருக....

என்னை பற்றி:

பெயர்:சி.ம.கார்த்திகேயன் (C.M.Karthikeyan)

M.C.A...

ச்சே resume எழுதி எழுதி இப்படியே வருகிறது....

நான் பிறந்தது திருவாவினன்குடி என்னும் பழனி...(அப்பாடா பெயர் காரணம் முடிந்தது)(அம்மா ஊர்)

வளர்ந்தது மாங்கனி நகரம் சேலம்....(நம்ம சொந்த ஊர்)

படிப்பு:
இளங்கலை அறிவியல் -இயற்பியல் (மகேந்திரா கல்லூரி காளிபட்டி)

முதுகலை:M.C.A அண்ணா பல்கலை ,சென்னை....(கடைசி செம் இல் ப்ராஜெக்ட் காரணமாக மண்டையை பிய்த்து கொண்டு )

CTS இல் placed.....(ஒரு வருடத்தில் கூப்பிட்டு விடுவார்கள் என்று கேள்வி...)

மற்ற படி என்னை பற்றி சொல்வதென்றால்....
"Yesterday is a History

Tomorrow is a Mystery

but

Today is a Gift

so only it is called present "


என்ற வார்த்தைகளின் படி இன்றைய தினத்தை இப்பொழுதே வாழ்ந்து விட நினைப்பவன்....

நம்மில் பலருக்கு இருக்கும் ஒரு மாயை என்னவென்றால்,இன்றைய தினத்தை விட நாளைய தினத்தில் அதிக நேரம் இருக்கும் என்று எண்ணுவது தான்,அதை உடைக்க போராடும் சராசரி மாணவன்......

"I'm just 16 with 7 yrs of experience"
(To be continued)

நன்றி கார்த்தி.....

be cool stay cool.........

27 comments:

 1. முதல் நாள் வாழ்த்துகள்

  ReplyDelete
 2. நன்றி ஜமால்.....

  ReplyDelete
 3. முதல்நாள் வாழ்த்துகள்!

  ReplyDelete
 4. \\Today is a Gift

  so only it is called present \\

  அழகாயிருக்குப்பா!

  ReplyDelete
 5. //நம்மில் பலருக்கு இருக்கும் ஒரு மாயை என்னவென்றால்,இன்றைய தினத்தை விட நாளைய தினத்தில் அதிக நேரம் இருக்கும் என்று எண்ணுவது தான்,அதை உடைக்க போராடும் சராசரி மாணவன்....//

  உங்களை மாதிரி மாணவர்களைத்தான் கலாம் எதிர்பார்த்தார். வாழ்த்துகள் மறுபடியும்!

  ReplyDelete
 6. \\Today is a Gift

  so only it is called present \\

  அழகாயிருக்குப்பா!

  //

  மீண்டும் நன்றிகள் ஜமால்....

  ReplyDelete
 7. //குடந்தைஅன்புமணி said...

  //நம்மில் பலருக்கு இருக்கும் ஒரு மாயை என்னவென்றால்,இன்றைய தினத்தை விட நாளைய தினத்தில் அதிக நேரம் இருக்கும் என்று எண்ணுவது தான்,அதை உடைக்க போராடும் சராசரி மாணவன்....//

  உங்களை மாதிரி மாணவர்களைத்தான் கலாம் எதிர்பார்த்தார். வாழ்த்துகள் மறுபடியும்!//

  மிக்க நன்றிகள் அன்புமணி சார்....

  ReplyDelete
 8. கூப்பிய இரு கரங்களுக்குள் என்னென்ன படைப்புகள் பொத்தி வைத்திருக்கிறாரோ என்று அறிய ஆவலாய் இருக்கிறோம் .சீக்கிரம் ஒவ்வொண்ணா பதியுங்க அண்ணா...

  ReplyDelete
 9. கோமா அக்கா உண்மையில் நான் சின்ன பையன்....

  ReplyDelete
 10. முதல் நாள் வாழ்த்துகள்!!!

  ReplyDelete
 11. //
  நம்மில் பலருக்கு இருக்கும் ஒரு மாயை என்னவென்றால்,இன்றைய தினத்தை விட நாளைய தினத்தில் அதிக நேரம் இருக்கும் என்று எண்ணுவது தான்,அதை உடைக்க போராடும் சராசரி மாணவன்......
  //

  அருமையான போராட்டம்
  வெற்றி நிச்சயம்.

  கூப்பிய கரங்களில் நிறைய
  கொண்டு வந்துள்ளீர்கள்
  என் நினக்கிறேன்,

  ஒவ்வொன்றாய்
  எங்களுக்கு விருந்து அளிக்கவும்.

  காத்திருக்கின்றோம் ஆவலுடன்!!

  சந்திக்கின்றோம் எதிர்பார்ப்புடன் !!

  ReplyDelete
 12. "Yesterday is a History
  Tomorrow is a Mystery
  but
  Today is a Gift
  so only it is called present "


  Well Said கூல்ஸ்கார்த்தி!!

  ReplyDelete
 13. வலைச்சர ஆசிரியருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 14. நன்றி ரம்யா அவர்களே....

  ReplyDelete
 15. ////
  நம்மில் பலருக்கு இருக்கும் ஒரு மாயை என்னவென்றால்,இன்றைய தினத்தை விட நாளைய தினத்தில் அதிக நேரம் இருக்கும் என்று எண்ணுவது தான்,அதை உடைக்க போராடும் சராசரி மாணவன்......
  //

  அருமையான போராட்டம்
  வெற்றி நிச்சயம்.

  கூப்பிய கரங்களில் நிறைய
  கொண்டு வந்துள்ளீர்கள்
  என் நினக்கிறேன்,

  ஒவ்வொன்றாய்
  எங்களுக்கு விருந்து அளிக்கவும்.

  காத்திருக்கின்றோம் ஆவலுடன்!!

  சந்திக்கின்றோம் எதிர்பார்ப்புடன் !!

  //

  நிச்சயம் என்னால் இயன்றவரை நல்ல விசயங்களை சொல்லுவேன் ....

  ReplyDelete
 16. இவ்வார வலச்சர ஆசிரியருக்கு முதல்நாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 17. நன்றி முருகானந்தம் சார்.....

  ReplyDelete
 18. கார்த்தி,
  முதல் நாள் வாழ்த்துகள்

  சும்மா ஜமாய்ங்க !!

  ReplyDelete
 19. அன்பின் கார்த்தி

  அருமையான அறிமுகம்

  வருக வருக - தருக தருக பதிவுக்ளை

  தமிழன்னை தேடுகிறாள் மோதிரம். வைர மோதிரமாகத் தருக அன்னைக்கு.

  நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 20. வாழ்த்துகள்

  ReplyDelete
 21. முதல்நாள் வாழ்த்துகள்!

  ReplyDelete
 22. நன்றி கணினி தேசம்.....

  ReplyDelete
 23. சீனா சார் மிக்க நன்றி....

  ReplyDelete
 24. நன்றி குமாரன்....

  ReplyDelete
 25. நன்றி பிரபு....

  ReplyDelete
 26. கவியோகி சுத்தானந்த பாரதியை நினைவிற்கொண்டு, அவரது தமிழ்த்தாய் வாழ்த்துடனேயே ஆசிரியர் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறீர்கள். நெகிழ்ந்தேன். கவியோகியாரை, அவரது உறவினர் ஒருவரைத் தவிர, தமிழ் கூறும் நல்லுலகம் எங்கே மறந்து விட்டதோ என்றிருந்த வேளையில் கவியோகியார் வார்த்தைகளை இங்கே கண்டு மிக்க மகிழ்ச்சி. நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 27. வாங்க வாங்க
  நண்பரே!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது