07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, March 15, 2009

ஆசிரியப் பணி மாறுதல் - கோமாவிடமிருந்து கூல்ஸ்கார்த்திக்கு

அன்பு நண்பர்களே !

கடந்த ஒரு வார காலமாக வலைச்சரத்தினைக் கலக்கிக் கொண்டிருந்த சகோதரி கோமா இன்று பணி ஒய்வு பெறுகிறார். ஏறத்தாழ முன்னூறு மறுமொழிகள் பெற்ற 20 பதிவுகள் இட்டு பல புதிய பதிவர்களை அறிமுகம் செய்தார். பிகாசாவில் புகுந்து விளையாடி மலர்கள், மழலைகள் எனப் பலப்பல படங்களைப் பார்த்து மகிழ்ந்து நமக்கும் சுட்டி அளித்தார். நாளொரு வண்ணமும் பொழுதொரு பதிவுமாய் வாரம் முழுவதும் ஓய்வின்றி உழைத்தவர். மறக்காமல் கணவருக்கு நன்றி செலுத்திய நல்லவர். வித்தியாசமான முறையில் வலைச்சரம் தொடுத்து பல மலர்களை அறிமுகம் செய்து மணம் பரப்பிய கோமாவிற்கு நன்றி கலந்த நல்வாழ்த்துகளைக் கூறி விடை அளிக்கிறோம்.

16ம் நாள் துவங்கும் இவ்வாரத்தினிற்கு நண்பர் கூல்ஸ்கார்த்தி ஆசிரியப் பொறுப்பினை ஏற்கிறார். நகைச்சுவையை மையமாக வைத்துப் பதிவுகள் இட்டு வரும் இவர் இவ்வாரத்தினையும் நகைச்சுவை வாரமாக்குவாரா அல்லது வேறு திட்டங்கள் வைத்திருக்கிறாரா தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம். இவரை வருக வருக வலைச்சரம் தொடுக்க வருக என அன்புடன் அழைக்கிறோம். நல்வாழ்த்துகள் கார்த்தி

நட்புடன் ..... சீனா

8 comments:

 1. வாழ்த்துக்கள் கோமா அவர்களே..

  மிக அழகாக தொகுத்து இருந்தீர்கள்.

  வருக, வருக தம்பி கூல்ஸ் கார்த்திக்...

  உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. வருக வருக !

  நல்வாழ்த்துகள் கார்த்தி!

  ReplyDelete
 3. கார்த்தி எல்லோரும் கார்த்தி-ருக்கிறோம்
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. கோமா அவர்களுக்கு நன்றிகள்!
  கார்த்திக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 5. வாழ்த்துகள் சகோதரி கோமா!

  நண்பர் கூல்ஸ் கார்த்திக்கே

  வருக வருக, எங்களுக்கு தொகுப்பு விருந்து தருக.

  ReplyDelete
 6. கோமா அவர்களுக்கு நன்றிகூறி,கூல்ஸ் கார்த்தி அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்!

  ReplyDelete
 7. வரவேற்ற அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகள் பல......

  ReplyDelete
 8. கோமா அவர்களுக்கு நன்றிகள்!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது