07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, January 31, 2011

வலையில் சிக்கிய நீரோடை.


நாந்தாங்கோ

நம் அனைவருக்கும் இறைவனின் சாந்தியும் அருளும் அளவில்லாமல் கிடைக்கட்டும்

அன்பு நெஞ்சங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களோடும் இந்த மங்களகரமான மஞ்சள் மலர்களோடும் உங்களைக் காணவந்துள்ளேன். வலையில் சிக்கிட்டோம்  இனி எப்படி வலைபின்னுறோமுன்னு பாருங்க அதுக்கு நீங்கதான் நூலெடுத்துக் கொடுக்கோனும் மறந்துறாதீங்கோ.
வலைசரத்தில் என்னையும் ஆசிரியர் பணிக்கு அழைத்த சீனாசார் அவர்களுக்கு நன்றி சொல்லிக்கொள்வதோடு. என் தளங்களுக்கு வந்து கருதுக்களையும் அன்பையும் அள்ளிதந்து என்னை இந்தப்பணிவரை கொண்டுவந்து நிறுத்தியிருக்கும் அனைத்து நல்நெஞ்சங்களுக்கும் நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்.
பலமுறை பலரால் வலைச்சரத்தில் அறிமுகபடுத்தப்பட்ட நான் இன்று பலரை அறிமுகம் செய்வப்போவதில் மனம் மகிழ்கிறேன்.எனக்கு அறிந்தவர்கள் எனக்கும் அறியாத புதுமுகங்கள் என என் புத்திக்கும் அறிவுக்கும் எட்டியவரையில். பிறருக்கும் உபயோகமாக இருக்கும் தளங்களாக அறிமுகப்படுத்தபோகிறேன் என நம்புகிறேன் அதில் குறை நிறையிருப்பின் சுட்டிக்காட்டுங்கள்.

அதற்கு முன் என்னைபற்றியும் சிறுகுறிப்பு சொல்லவேண்டுமாம். அடடா இவுக என்ன சொல்லபோறாகன்னு நீங்க நினைப்பது தெரிகிறது பெரிசா ஒன்னுமில்லைங்கோ தமிழ்மீது காதல் அதை கவிதையாக்க இன்றுவரை விடாது முயற்ச்சி செய்கிறேன் [விடாது கருப்புபோல்] நீரோடை என்ற வலை ஆரம்பிக்க தமிழ்குடும்பம் என்ற தளம்தான் என் அடிதளமாக இருந்தது.தமிழ்குடும்பத்தில் என்னுடைய பல கவிதைகள். கலைகள். அரங்கேற்ற முழு பொறுப்புதந்த சகோதரர் அவர்களுக்கு இத்தருணதில் நன்றிகள் பல சொல்லிக்கொள்கிறேன்.
அப்படியே  இந்த 1.1/2 வருடத்தில் நீரோடை யை கவிக்காக ஓடவிட்டு. அடுத்து நம்ம கலைகளை [ஏதோ பெரிய அளவில் கற்றதுபோல் பீற்றிக்கொள்வது இதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான் என்ன செய்யவேற வழி சொல்லிதானே ஆகனும் இதுவும் ஒரு விளம்பரம்தானுங்கோ ] நாளுபேருக்கு தெரிவிக்கலாமேன்னு கலைச்சாரல் அப்படின்னு ஒரு வலைபின்னி அதில் நமக்கு தெரிந்ததை பின்னிக்கிட்டு இருக்கும்போது. இப்படியே போறோமே நம்ம ஆன்மாவின் தேடலுக்காக ஒருதேடுதல் வேட்டையாக இனிய பாதையில் அப்படின்னு ஒரு வலைபோட்டு தேடுகிறேன்னுங்க.  இந்த மூன்றிலேயும் 450 ,இடுகைக்கும் மேலோ கீழோ போட்டுவிட்டேன்னு நினைக்கிறேன்னுங்க அவ்வளவுதாங்க நம்ம ஹிஸ்ட்ரி.
ஆங் சொல்ல மறந்துட்டேனே.கொஞ்சமிருங்கோ ஓடிடாம இன்னுமும் கொஞ்சம்  சொல்லனுமுல்ல நம்ம கிறிக்கினதுலயும்  கொஞ்சூண்டு சொல்லிகிறேனே.
 நம்ம எழுத்துக்கு கிடைத்த அங்கீகாரமாய் கிடைத்த மறக்க முடியாத முதல் விருது அப்புறம் ஆசை யாரைவிட்டது கவிதை எழுதுவதோடு சும்மாசிக்கும் ஒரு சிறுகதை எழுதுவோமேன்னு சின்ன குட்டிக்கதையும் கிறுக்கியிருக்கோமுல்ல. அப்புறம்  பொறந்த ஊருக்கு பெருமைதேடித் தரவேண்டாமா ஏதோ நம்மாள முடிஞ்சது .வலையுலகில் நமக்கு கிடைத்த சந்தோஷங்கள்  பெரிய கருத்து கருப்பாயி இவருக்கு சந்தேகமெல்லாம் வந்து கேட்ட கேள்வியிருக்கே ஸ்ஸ் அப்பப்பா அப்படியே . 
சில குழப்பங்களை தெளிவுபடுத்தலாமுன்னு. சரி படிச்சி களைச்சிருப்பீங்க. அப்படி இந்த வாடா செய்வது எப்படின்னு பார்க்க   என்ன மரியாதை குறையுதுன்னெல்லாம் நினைக்கக்கூடாது.  அதாவது பஜ்ஜி வடைபோல் இதுவும் ஒன்னு. அப்படியே அரபிசாப்பாட்டும் . சாப்பிட்டாச்சா. அப்படியே என் கைவண்ணம்மும் கொஞ்சம் பாருங்கோ அப்படியே இதுவும் இதுவும்தாங்கோ அப்படி என்னதானிருக்கு .இது என் அன்பு செல்லத்தின் அழகிய கைவண்ணங்கள் சரி சரி அப்படியே
ஊர்சுற்ற வாங்க அச்சோ நாங்க சுற்றிபார்த்தத பார்க்க வாங்கோன்னேன் . பார்த்தாச்சா. அப்புறம் நம்ம ஆன்மாவுக்கான சிலதேடல்கள்.என்னத்த சொன்னாலும் ஒன்னும் ஆவதுன்னு தெரிந்தும். . இதுநமக்கு மிக முக்கியமுன்னு நெனச்சி எழுதியது.
அப்படி இப்படின்னு நம்ம பக்கத்தில் அதாவது மூன்று வலையிலும் பின்னியிருப்பதில் கொஞ்சம் சொல்லிட்டேனுங்க முதல் வருகையே அறுவையான்னு நினைக்ககூடாது ஓகே.இனி எல்லாம் கரகீட்டா செய்வோமுல்ல . அதுக்குமுன்னாலா உங்க ஆதரவென்னும் அன்பை தந்துவிட்டுபோங்க அப்பதானே தெம்பா அடுத்தவாளபத்தி கூட்டிக்கொறச்சி எழுதமுடியும். மத்தவாளபத்தி பத்தி பத்தியா எழுதுறதுன்னா கேக்கவா வேணும்.
சரி எல்லாத்தையும் படிச்சீங்களா இப்ப எல்லாம் சேர்ந்த இந்த தளத்தை  பார்த்துட்டுபோங்க  நன்றி மறப்பது நன்றன்றுஅதான் ..அப்புறம் நாளைக்கு அடுத்தவாளையும் அவாளோட டீட்டியலையும் பாக்கலாம்  கொஞ்ச கொஞ்சமா 1 வாரத்துக்கு அலசனுமில்ல  ஓகே.

நீரில்தான் வலை சிக்கும். இங்கே
நீரே வலையில் சிக்கிகிச்சே..

அப்ப நான் வரட்டா..டாட்டா..
 
butterfly Pictures, Images and Photos
என்றும் உங்கள்
அன்புடன் மலிக்கா
மேலும் வாசிக்க...

Sunday, January 30, 2011

சென்று வருக முகிலன் : பொறுப்பேற்க வருக மலிக்கா

அன்பின் சக பதிவர்களே

இன்றுடம் முடியும் வாரத்திற்கு, ஆசிரியப் பொறுப்பேற்ற அருமை நண்பர் முகிலன், தான் ஏற்ற பொறுப்பினைச் சரிவர செய்து, மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் ஒரு வாரத்தில், ஏழு இடுகைகள் பல்வேறு தலைப்புகளில் இட்டு, 65 இடுகைகளை அறிமுகப்படுத்தி, 75 மறுமொழிகள் பெற்றிருக்கிறார். ஒவ்வொரு நாளும் கிரிக்கெட்டினை அடிப்படையாக வைத்து - அதில் இருந்து சில கருத்துகளைக் கூறி விட்டு, பிறகு தன்னைக் கவர்ந்த இடுகைகளை அறிமுகப் படுத்திய விதம் நன்று.

நண்பர் முகிலனை, நல்வாழ்த்துகள் கலந்த நன்றியுடன் விடை கொடுத்து, வழி அனுப்புவதில் பெருமை அடைகிறோம்.

நாளை துவங்கும் வாரத்திற்கு, பொறுப்பேற்க வருகிறார் அருமைச் சகோதரி மலிக்கா. இவர் தஞ்சையில் பிறந்து, திருவாரூரில் வளர்ந்து, துபையில் வசிக்கிறார். பள்ளிப் படிப்பு பாதியில் நின்ற போதும், தமிழ் மீது கொண்ட தீராக்காதலினால், பதிவுகள் ஆரம்பித்து, பல் வேறு தலைப்புகளில் எழுதி வருகிறார்.

இனிய பாதையில் என்ற பதிவினில், இருளை அகற்றி சிறு ஒளியைத் தேடும் ஆன்மாவின் பயணமாக ஆன்மீகத்தினைப் பற்றி எழுதுகிறார்.

கலைச்சாரல் என்ற பதிவினில், எண்ணங்களில் உதித்த கைவண்ணங்களை, சமையல் குறிப்புக்ளை எழுதுகிறார்.

நீரோடை என்ற பதிவினில், ஆன்மாவைத் தெளிவாக்கும் விதமாக, எண்ணங்களைத் தெளிந்த நீராக ஓட விடுகிறார்.

பதினெட்டு மாதங்களாக, மூன்று பதிவுகளிலும், ஏறத்தாழ 450 இடுகைகள்- பல்வேறு தலைப்புகளில் இட்டிருக்கிறார். பின்தொடரும் பதிவர்களூம் அதிகம்.

இவர் காதல் கவிதைகள் அதிகம் எழுதி இருக்கிறார். துபையில் இருக்கும் பன்னாட்டு இலக்கிய இஸ்லாமிய கழகத்தின் மகளீர் அணிச் செயலராக இருக்கிறார். பல மேடைகளில் இவரது கவிதைகள் வாசிக்கப்படுகின்றன. பல்வேறு இதழ்களில் இவரது கவிதைகள் வெளி வருகின்றன. விரைவில் இவரது படைப்புகள் புத்தகமாக வெளி வர இருக்கின்றன. பல்வேறு விருதுகள் வாங்கி இருக்கிறார்.

அன்புச் சகோதரி மலிக்காவினை வருக ! வருக ! அறிமுகங்களை அள்ளித் தருக என அன்புடன் நல்வாழ்த்துகள் கூறி வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.

நல்வாழ்த்துகள் முகிலன்
நல்வாழ்த்துகள் மலிக்கா

நட்புடன் சீனா
மேலும் வாசிக்க...

டெத் ஓவர்ஸ்

கிரிக்கெட் போட்டிகளில் முக்கியமானது டெத் ஓவர்ஸ். அதாவது கடைசி 5-10 ஓவர்கள். ஃபீல்டிங் செய்யும் அணி களைத்துப் போயிருப்பார்கள் என்பதாலும் பந்து மிகவும் பழையதாகியிருக்கும் என்பதாலும் இந்த ஓவர்களில் சாதாரணமாக ரன் மழை பொழியும். இந்த ஓவர்களை குறைந்த ரன்கள் கொடுத்து வீச திறமையான பவுலர்களால்தான் முடியும்.

நான் ரசித்த திறமைசாலி பதிவர்களின் பதிவுகள் - பெரும்பாலும் பிரபலப் பதிவர்கள் - சிலவற்றைப் பார்ப்போம்.

வானம்பாடிகள் பாலா சார். இவர் எழுதும் கேரக்டர் பதிவுகள் புகழ்பெற்றவை. அதில் ஒன்று.

இரும்புத்திரை அரவிந்த். ஆணித்தரமாக விமர்சிக்கும் பதிவர்களில் ஒருவர். பாலுமகேந்திரா துவக்கியிருக்கும் பள்ளியைப் பற்றி எழுதிய விமர்சனம் ஒன்று.

நண்பர் ராஜநடராஜன். இவர் அரசியல் பார்வைகள் அசத்தலாக இருக்கும். அவற்றில் ஒன்று.

தண்டோரா மணிஜீ. இவர் தான் ஆணாதிக்கவாதியில்லை என்று அறிவித்த இடுகை.

நியுஜெர்சி நசரேயன். பிரிக்க முடியாதது என்று தருமி சிவபெருமானிடம் இப்போது கேட்டாரானால் நசரேயனும் எழுத்துப் பிழையும் என்று சொல்லுவார். எழுத்துப் பிழை இருந்தாலும் கருத்துப் பிழை இல்லாத ஆள் நசரேயன். அவர் எழுதிய பகடி ஒன்று.

டெக்ஸாஸ் கண்ட சோழன் குடுகுடுப்பை. பகடி செய்வது இவருக்குக் கை வந்த கலை. இவர் எழுதிய ஹிஸ்டரி ஃபிக்‌ஷன் ஒன்று.

நர்சிம். யாமார்க்கும் குடியல்லோம் யமனை அஞ்சோம் என்ற வரிகளைத்தன் தளத்தில் பகிர்ந்திருப்பவர். அதற்கேற்றபடி எழுதியும் வருபவர். இவரது நடை பல இடுகைகளில் எனக்கு சுஜாதாவை நினைவுபடுத்தியிருக்கிறது. கிரிக்கெட்டைப் பற்றி இவர் சுழற்றிய ரீவைண்ட் இங்கே.

பலாபட்டறை ஷங்கர். கவிதை, கதை, தொகுப்புகள், புகைப்படங்கள், வரைந்த படங்கள், விமர்சனங்கள் என்று அனைத்து வகைகளையும் தொட்டுப் பார்ப்பவர். கேபிள் சங்கரின் புத்தகத்துக்கு இவர் எழுதிய விமர்சனத்தைப் படித்துவிட்டு கேபிள் மயங்கிவிட்டதாகப் பேச்சு. எனக்கு மிகவும் பிடித்தது இவர் எழுதிய ஏழாம் உலகம் விமர்சனம்.

எனக்கு ஒரு வாரம் வலைச்சரத்தில் இடம் கொடுத்த வலைச்சரம் ஆசிரியர் குழுவுக்கும், நான் எழுதிய பிதற்றல்களை வாசித்துவந்த வலைச்சர வாசகர்களுக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டு விடை பெறுகிறேன். நன்றி வணக்கம்.
மேலும் வாசிக்க...

Saturday, January 29, 2011

ஸ்பின் பவுலிங்

வணக்கம் நண்பர்களே! 


எனக்கும் கிரிக்கெட் தொடருக்கும் ஒரு ராசி. வழக்கமாக எழுத ஆரம்பித்து சூடு பிடித்துப் போகும்போது வேறு எதாவது ஒரு பிரச்சனை வந்து என் எழுத்துகளுக்குத் தடை போடும். அதுபோல இப்போது ட்விட்டர் தளத்தில் தமிழ் ட்விட்டர்கள் முன்னெடுத்து நடத்தும் கீச்சுப் புரட்சி #tnfisherman. தமிழ் பேசும் இந்திய மீனவர்களை நடுக்கடலில் தாக்கி சுட்டும் கழுத்தை இறுக்கியும் கொலை செய்கிறது சிங்களப் பேரினவாத இலங்கை அரசின் சிங்களக் கடற்படை. இந்தச் செயலை கை கட்டி வேடிக்கை பார்க்கின்றன தடுத்து நிறுத்த வேண்டிய மத்திய அரசும் தட்டிக் கேட்க வேண்டிய தமிழக அரசும். பத்திரிக்கைகளும் இதைப் பற்றி எட்டாவது பக்கத்தில் எட்டு வரிகளுக்குள் செய்தி வெளியிட்டு மறந்துவிட்டன. டாஸ்மாக்கில் ஸ்ட்ராங்க் பியருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதெல்லாம் தலைப்புச்செய்தியாக்கும் எச்சைப் பொறுக்கி பத்திரிகைகளுக்கு இதெல்லாம் முக்கியமே இல்லை. இதில் லங்கா ரத்னா ராமின் தி இந்து பத்திரிகையில் சிங்கள ஜால்ரா அமெரிக்கா வரை கேட்கிறது.


இணையத்தில் ட்விட்டும் தமிழர்களில் பெரும்பாலானோருக்கு அறிமுகமான பெயர் டிபிசிடி. இவர் முன்னெடுத்த இயக்கமே #tnfisherman. இவரது வேண்டுகோளைத் தொடர்ந்து மற்ற டிவிட்டர்களும் இந்திய, இலங்கை, தமிழக அரசுகளையும் அரசு அதிகாரிகளின் மெத்தனப் போக்கையும் கண்டித்து டிவிட்டித் தள்ளிவிட்டார்கள். இரண்டு நாட்களாக இந்திய அளவில் ட்ரெண்டாக இருந்த இந்த #tnfisherman ஐ வெள்ளி இரவு 9-10 மணிக்குப் பேசி வைத்து ட்விட்டுகளாகத் தட்டித் தள்ளி உலக அளவில் முதலிடத்துக்குக் கொண்டு வந்து விட்டார்கள். முதலில் சும்மா வெட்டிப் போராட்டம் என்று புறந்தள்ளிய பலரும் பின்னர் இதில் குதித்தது ஆச்சர்யப் படத்தக்கதாய் இருந்தது. 


மீனவர் படுகொலைக்கு மன்னிப்பையும் இனி இது போல் நடக்காது என்ற உத்தரவாதத்தையும், கடந்த இரண்டு படுகொலைகளை நிகழ்த்திய கடற்படையினருக்கு தண்டனையையும் தரும் வரை இந்தப் போராட்டம் தொடரும். உங்களுக்கு டிவிட்டர் கணக்கு இருந்தால் நீங்களும் #tnfisherman என்ற டேகை இணைத்து ட்விட்டுங்கள். கணக்கில்லையென்றால் கணக்கைத் தொடங்கி ட்விட்டுங்கள். 

ஃபாஸ்ட் பவுலிங் பத்தி நேத்து பார்த்தோம். மிடில் ஓவர்ஸ்ல ஃபாஸ்ட் பவுலரை மட்டுமே நம்பிக்கிட்டு இருக்க முடியாது. ஸ்பின் பவுலிங் வேணும். ஒரு வேளை ஃபாஸ்ட் பவுலர்ஸ் ரொம்ப டைட்டா பவுலிங் போட்டுட்டாங்க, ரன் ஏறலை அதே சமயத்துல விக்கெட்டும் விழலைன்னு வச்சிக்கோங்க. டக்குனு ஒரு ஸ்பின்னரை உள்ள விட்டா அந்த பவுலிங்கை அடிக்க நினைப்பாங்க. அவுட்டாகிடுவாங்க. நிறைய பார்ட் டைம் பவுலர்ஸ் பார்ட்னர்ஷிப் ப்ரேக்கர்னு பேர் வாங்க இந்த சைக்காலஜி ஒரு காரணம்.

இந்த ஸ்பின் பவுலிங் இருக்கே, இதை ஆடுறது ரொம்பக் கஷ்டம். சப் காண்டினெண்ட் (இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ்) தவிர மற்ற நாட்டு ப்ளேயர்ஸ் ஸ்பின் ஆடத் திணறுவாங்க. பெரும்பாலும் ஸ்வீப் ஷாட்தான் ஆடுவாங்க. பந்து எந்தப் பக்கம் திரும்பும்னு பவுலர் கைய ரீட் பண்ணி பேட் பண்றதே ஒரு பெரிய கலை.

எழுத்துல என்னைப் பொறுத்த வரைக்கும் கவிதைங்கிறது ஸ்பின் பவுலிங் மாதிரி. குறிப்பா பின் நவீனத்துவக் கவிதைகள். அரைகுறையா இருக்கிற மாதிரி இருக்கும். கவிஞர் ஒரு மனநிலைல எழுதியிருப்பாங்க. நாம வேற மனநிலைல வாசிச்சா அது வேற ஒரு அர்த்தத்தைக் கொடுக்கும். அப்படிப்பட்ட கவிதைப் பதிவுகளைத்தான் இன்னைக்கிப் பார்க்கப் போறோம்.

முதல்ல பார்க்கப் போற வலைப்பதிவு - உதிரும் சருகுகள். ஆதி அப்பிடிங்கிறவர் தலைப்பே இல்லாத கவிதைன்னு அசத்தறாரு.

அடுத்தவரு நம்ம பக்கத்தூர்க்காரரு. சாத்தூர் மாய்க்கானு செல்லமா அழைக்கப்படுற இராமசாமி. அயல்நாட்டுல இருந்துட்டு நாடு திரும்பினதும் பெரும்பாலானவங்களுக்கு வர்ற உணர்வை இங்க அழகா சொல்லியிருக்காரு. ஊர் ஊரா சுத்தற சேல்ஸ் ரெப் மாதிரி வேலையில இருக்கிறவங்களோட நிலமையை இங்கே வலிக்கிற மாதிரி சொல்லியிருக்காரு.

யார் மேலயாவது கோவம் வந்தா சட்டுனு எதையாவது சொல்லிடறோம். ஆனா அது அவங்களை எந்த அளவுக்கு பாதிக்கும்னு நாம யோசிக்கிறதில்லை. வள்ளுவர் தீயினாற் சுட்ட புண்ணுள்ளாறும்னு திருக்குறள் எல்லாம் எழுதியும் நாம யோசிக்கறதில்லை. தமிழ் காதலன் சொல்லியா கேக்கப் போறோம்?

இவருக்கு என் பேருங்கிறதால நான் இங்க இவரை அறிமுகப் படுத்தலை. இவர் எழுதிய இந்தக் கவிதைல இருக்கிற சந்த நயமும் வார்த்தை அலங்காரமும்தான் இவரை இங்க பகிரத் தூண்டியது.

இவர கூகுள் பஸ்ல இருந்து பழக்கம். இந்தக் கவிதையில அவர் போட்டிருக்கிற படம் போல கத்தியால குத்துறது மாதிரி கவிதை எழுதுறதுல மன்னன் இந்த போகன். கவிதை மட்டுமல்ல நறுக்குன்னு நாக்கைப் புடிங்கிக்கிற மாதிரி கட்டுரைகளும் எழுதுவாரு.


இன்றைய அறிமுகங்கள் அவ்வளவுதான். நாளை நான் நமக்கெல்லாம் நல்லா அறிமுகமான சில பதிவர்கள் எழுதினதுல எனக்குப் பிடிச்ச பதிவுகளை பகிர்ந்துக்கலாம்னு இருக்கேன். நன்றி. 
மேலும் வாசிக்க...

Friday, January 28, 2011

பே(p)ஸ் பவுலிங்

லஞ்ச் ப்ரேக் முடிஞ்சது. அடுத்து ஃபீல்டிங் எறங்க வேண்டியதுதானே? 

பேஸ் பவுலிங்க்னா ஃபாஸ்ட் பவுலிங். ஒரு டீமுக்கு ஃபாஸ்ட் பவுலிங் நல்லா இருக்க வேண்டியது ரொம்ப முக்கியம். நம்ம இந்திய கிரிக்கெட் டீம்ல ஒரு காலகட்டத்துல நல்ல ஃபாஸ்ட் பவுலர்ஸே கிடையாது. மீடியம் பேஸ் மட்டும் போட்டுட்டு அதுக்கப்புறம் ஸ்பின் வச்சே ஒப்பேத்துவாங்க. இப்பத்தான் கொஞ்சம் `ஃபாஸ்ட் பவுலர்ஸ் இந்தியா டீம்ல வந்திருக்காங்க.

ஃபாஸ்ட் பவுலிங்க்ல முக்கியமானது aggression. எதிர்ல பேட்டிங் செய்யறது பெரிய பேட்ஸ்மேன். பெஸ்ட் பேட்ஸ்மேன் அப்பிடின்னு எல்லாம் பாக்காம தைரியமா பவுலிங் பொடணும். மூஞ்சிக்கு நேரா பவுன்ஸர் போடவும் தெரியணும், காலைக்குறி வச்சி யார்க்கர் போடவும் தெரியணும். 

பதிவுலகத்துல ஃபாஸ்ட் பவுலிங்க்னா அது அரசியல் விமர்சனப் பதிவுகள் தான். யாரை விமர்சிக்கிறோம், அவங்க பெரிய ஆள்னு எல்லாம் யோசிக்காம எழுதணும். அப்படி எழுதுற பதிவர்களைத்தான் இன்னைக்கி பார்க்கப் போறோம். 

முதல்ல நாம பார்க்கப் போறது ஒரு மயிலாடுதுறைவாசி. இவரோட புனைப்பெயர் கொக்கரக்கோ. அபி அப்பா போல இவரும் ஒரு திமுக விசுவாசி மாதிரி காணப்படுறார். விவசாயம் பத்தி இவர் எழுதின பதிவு எனக்கெல்லம் நிறைய கற்றுக் கொடுக்குது. ஜெயிக்க என்ன செய்யணும்னு ஜெயலலிதாவுக்கு இவர் அட்வைஸும் கொடுக்கிறார். 

அடுத்ததா நாம பார்க்கப் போறது சங்கர் குருசாமி. இவர் தோழர்கள் ஆளும் கொல்கத்தாவுல வேலை பார்த்து வர்றார். பவுன்ஸர் போடுற ஃபாஸ்ட் பவுலர் இவர். இவர் போட்ட பவுன்ஸர்ல ஒண்ணு நமக்கு நாடாளுமன்றம் தேவயான்னு கேக்குது. மத்த சில பதிவர்களை மாதிரி புகார் மட்டும் சொல்லாம கொஞ்சம் யோசனைகளையும் குடுக்குறார். அப்பிடி இவர் சொன்னது அரசு மருத்துவமனைகளைப் பற்றி. 

அடுத்ததா பார்க்கப் போற இந்தப் பதிவர் பேரு இரா.சிவானந்தன். ஒரு படத்துல ராதிகா வெளிய பொழைக்க முடியாம ஜெயிலுக்குப் போனா சாப்பாடு கிடைக்குதுன்னு எல்லா கேஸையும் தன் மேல போட்டுக்கிட்டு ஜெயிலுக்குப் போவாங்க. அது மாதிரி இவர் வெளிய எதோ கஷ்டத்துக்காக ஜெயிலுக்குப் போயிட்டா நிம்மதின்னு நினைச்சி வேணும்னே ஒரு தப்பு செஞ்சிட்டு ஜெயிலுக்குப் போயி மீண்டிருக்காரு. தன்னோட சிறை அனுபவங்களையும், அது சார்ந்த சில செய்திகளையும் தன்னோட பதிவுல எழுதிட்டு வர்றாரு. நம்ம போலீஸும், அரசாங்கமும் பயமுறுத்துற குண்டர் சட்டத்தைப் பத்தி எழுதியிருக்காரு. தன்னோட சிறை அனுபவங்களைத் தொடரா எழுதி வர்றது இங்க

அடுத்ததா நாம பார்க்கப் போறவர் பேரு அன்பு. பெண்களூர்ல வாசம் செய்யறாரு. சமீபத்துல பெங்களூர்ல நடந்த பந்த் தேவயான்னு கேக்கறாரு. நடிகர்கள் அரசியலுக்கு வந்தா எடுபடுமான்னும் அலசறாரு. பெங்களூர்ல ஒரு கோவில்ல மனு தர்மத்தை அமல்படுத்துகிற மாதிரி இருக்கிற ஒரு சடங்கையும் சாடுறாரு. 

அடுத்ததா பார்க்கப் போறது ரதி. இவங்க இலங்கையைச் சேர்ந்த பதிவர். தொலைக்காட்சிகளின் ரியாலிட்டி ஷோக்களையும், ஈழக் குழந்தைகளின் நிலையையும் அருமையா எழுதியிருக்காங்க. ஒரு இனத்தை அழிப்பதற்காக அந்த இனத்தின் இலக்கியத்தை அழித்த ஒரு இனம் ஆளும் மண்ணில் இலக்கியத் திருவிழா நடத்துறது சரியான்னு கேள்வி கேட்டிருக்காங்க. 

அடுத்ததா நாம பார்க்கப் போறதும் ஒரு இலங்கைப் பதிவர்தான். கிருத்திகன் குமாரசுவாமி, இப்ப வசிக்கிறது கனடாவில. இவர் 2009ல இருந்து எழுதிட்டு வந்தாலும் கடந்த வருடத்தில இருந்து ரொம்ப குறைவாத்தான் எழுதறாரு. ஆனா, கடுகு சிறுத்தாலும் காரம் குறையாதுங்கிற மாதிரி இவர் எழுதறதெல்லாம் நறுக்குன்னு தான் இருக்கும். புலம்பெயர்ந்த சில தமிழர்கள் வாழ்வு நிலையையும் அவங்க இன்னைக்கி இருக்கிற இலங்கையை எப்பிடிப் பார்க்கிறாங்கன்னும் அவர் எழுதியிருக்கிற இந்தப் பதிவோட கடைசிப் பாராவை படிச்சி கலங்காத கண்ணுல உயிரில்லைன்னு சொல்லுவேன். மன்மதன் அம்பு படத்துல ஒரு சர்ச்சையா சொல்லப்படுறது புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் பாத்திரத்தைக் கமல் படைச்ச விதமும் அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற வசனமும். அதைப்பத்தி இவர்  சினிமா என்ற தளத்தை பொருளாதாரத்தையும், ஈழத்தமிழர் நுகர்வதற்கு இந்திய சினிமாவுக்குப் போட்டி போடும் அளவுக்கு ஈழத் தமிழ் சினிமா உலகம் என்று ஒன்று இல்லாததையும் வச்சி எழுதின அலசல் கட்டுரை உண்மையிலேயே அசத்தல்.

இன்னைக்கி பேஸ் பவுலர்ஸ் அவ்வளவு தான். நாளைக்கி வேறு ஒரு வித்தியாசமான கலக்‌ஷனோட உங்களை சந்திக்கும் வரை விடை பெறுவது உங்கள் முகிலன். :))
மேலும் வாசிக்க...

Thursday, January 27, 2011

லன்ச் ப்ரேக்

ஒன் டே மேட்ச்ல ஃபர்ஸ்ட் ஹாஃப் முடிஞ்சதும் லஞ்ச் ப்ரேக். (டே நைட் மேட்ச்னா டின்னர் ப்ரேக்). இந்த லஞ்ச் ப்ரேக்ல வயிறு முட்ட சாப்பிடாம சத்தா, பசி அடங்குற அளவுக்கு சாப்பிடுவாங்க. அப்போதான் அடுத்ததா ஃபீல்டிங்கோ பேட்டிங்கோ செய்ய முடியும்.

இன்னைக்கி நாம பார்க்க போறது சமையல் பதிவுகளேதான். (உண்மையிலேயே புதிய சமையல் பதிவர்களைக் கண்டு பிடிக்கிறது ரொம்ப கஷ்டம். எழுதுற ஆட்கள் எல்லாம் பழம் தின்னு கொட்டை போட்டவங்களா இருக்காங்க).

இந்த பதிவர் கோவையில வளர்ந்து திருமணத்துக்குப் பிறகு தில்லியில வாசமாம். அதுனால இவங்க வலைப்பதிவுக்குப் பேரே கோவை2தில்லி. முதல்ல சப்பாத்தியைச் சுட்டுப் போட்டுட்டு அப்புறம் அதுக்குத் தொட்டுக்க பாலக் பனீரும், சோலே மசாலாவும் வச்சிருக்காங்க. இவங்க சமையல் பதிவுதான் எழுதுறாங்கன்னு நினைக்காதீங்க. இப்பிடி ஆன்மிகச் சுற்றுப் பயணம் கூட கூட்டிட்டிப் போவாங்க.

அடுத்ததா நாம பாக்கப் போற அனுவுக்கும் எனக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான். நான் புளூரல். இவங்க சிங்குலர். ஆமாங்க, இவங்க வலைப்பதிவுக்குப் பேரு பிதற்றல். சிக்கன் குருமா, சிக்கன் குழம்பு, சிக்கன் வருவல் எல்லாம் கேள்விப்பட்டிருப்போம். சிக்கன் பொரியல் கேள்விப்பட்டிருக்கீங்களா? இவங்க செஞ்சே காட்டியிருக்காங்க. இவங்க ஆங்கிலத்திலயும் சில சமையல் குறிப்புகள் எழுதியிருக்காங்க. சமையல் குறிப்புகள் தவிர சில சிறுகதைகளும் எழுதியிருக்காங்க.

அம்மா கொடநாட்டுல ரெஸ்ட் எடுக்கப் போனா இவங்க கொட நாடு பரோட்ட செய்யறது எப்பிடின்னு சொல்லித்தராங்க. இவங்களும் சமையல் குறிப்பு மட்டும் எழுதறதில்லை.

சப்பாத்தி, சிக்கன், பரோட்டான்னு சாப்டாச்சி. கொஞ்சம் டெஸர்ட் சாப்பிட வேண்டாமா? இங்க மிடில் கிளாஸ் மாதவி பொங்கல் அன்னைக்கி ஆங்கிலக் காய்கறியான கேரட்டைப் போட்டு கீர் செய்யறது எப்படின்னு சொல்லியிருக்காங்க.

கீர் குடிச்சாச்சி. ஒரு ஸ்வீட் சாப்ட்டுட்டா லஞ்ச் திருப்திகரமா முடிஞ்சிரும் இல்லையா? இங்க புவனேஸ்வரி ராமநாதன் அவல் பர்ஃபி செய்யறது எப்படின்னு சொல்லியிருக்காங்க. ஸ்வீட்டோட கொஞ்சம் காரமும் வேணும்னு நினைக்கிறவங்களுக்காக கதம்ப முறுக்கும் இருக்கு.

கொஞ்சம் ஹெவியான சாப்பாடுதான். நமக்கென்ன கவலை நாம என்ன கிரிக்கெட் விளையாடவா போறோம். பாக்கத்தானே போறோம்.

இன்னொரு வித்தியாசமான பதார்த்தத்துக்கான சமையல் குறிப்பு இங்க இருக்கு. இதைச் சாப்டுட்டு உங்க வயிறுக்கு எதாவது ஆச்சின்னா அதுக்கு நான் பொறுப்பில்லை.

நாளை இன்னும் கொஞ்சம் பதிவுகளோட உங்களைச் சந்திக்கிறேன். நன்றி
மேலும் வாசிக்க...

Wednesday, January 26, 2011

ஸ்லாக்கிங் அல்லது பேட்டிங் பவர்ப்ளே

எப்பிடி மிடில் ஆர்டர் விக்கெட் இழக்காம நிதானமா அதே நேரத்தில ரன் ரேட்டும் குறையாம ரன் எடுக்கிறது எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் பேட்டிங் பவர்ப்ளேயை செலக்ட் பண்றதும், கடைசி பத்து ஓவர்ல அதிரடியா ரன் குவிக்கிறதும்.

ஸ்லாக்கிங் (Slogging) அப்பிடிங்கிற வார்த்தைக்கு கன்னா பின்னான்னு சுத்துறது அப்பிடிங்கிற அர்த்தம் வந்தாலும், உண்மையில டெக்னிக் இல்லைன்னா ரொம்ப நேரம் நிக்க முடியாது. யூசுஃப் பதான், ஷாஹித் அஃப்ரிதி இவங்க எல்லாம் அருமையான ஸ்லாக் ஓவர் பேட்ஸ்மென்.

அதே மாதிரிதான் கிரிக்கெட் போன்ற விளையாட்டு பதிவு எழுதுறதும். குறிப்பா கிரிக்கெட் பத்தி எழுதினா அதிகம் பேர் படிப்பாங்கன்னாலும், டெக்னிக் தெரியாம சும்மா கும்மியடிச்சா ரொம்ப நாளைக்கி நிலைக்க முடியாது. கரெக்டா கண்டு பிடிச்சிட்டீங்க. இன்னைக்கி நாம பாக்கப்போறது கிரிக்கெட் இடுகைகளே..

முதல்ல நாம பார்க்கப் போறது விசு. இவர் ஒரு மாணவராம். இன்னும் இரண்டு வலைப்பதிவுகள் வச்சிருக்காரு. அதிலும் கிரிக்கெட் பத்தியே இருக்கு. இந்த இடுகையில 2011 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில இந்திய அணியோட வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கு, அணியின் ஒவ்வொரு வீரர்களோட பலம் எது பலவீனம் எதுன்னு அலசியிருக்காரு.

மழையால பாதிக்கப் படுற ஒரு நாள்/ 20-20 போட்டிகள்ல நாம கேள்விப்படுற ஒரு சொல் டக்வொர்த்-லூயிஸ் முறை. அப்பிடின்னா என்னான்னு இங்க சொல்றாரு கவிதை வீதி சௌந்தர். இவர் ரொம்ப நாளா எழுதிக்கிட்டு இருக்காரு. இருந்தாலும் இந்த இடுகை எனக்கு ரொம்பப் பிடிச்சதால இங்க பகிர்றேன்.

இலங்கையைச் சேர்ந்த பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்திய அணியைக் கண்டாலே பிடிக்காது. ஆனாலும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பலர் இந்திய அணியின் ரசிகர்களா இருக்காங்க. ஏன் அப்பிடின்னு நான் ரொம்ப நாள் யோசிச்சிருக்கேன். இவர் சொல்றாரு அதுக்கு பதிலை. இவர் பேர் கந்தசாமி. அக்டோபர் 2010ல இருந்து ப்ளாகிக்கிட்டு இருக்காரு.

இவரைப் பத்தி சொல்லியே ஆகணும். இவரோட புனைப்பெயர் புளியங்குடி. மொத்தம் மூணு வலைப்பதிவுகள் வச்சிருந்தாலும் நாம இங்க பாக்கப்போறது இவரோட கிரிக்கெட் சம்மந்தமான ஐபிஎல் நாடகம் மட்டுமே. கிரிக்கெட் போட்டித் தொடர்கள் நடக்கிற போதெல்லாம் தினமும் ஒரு இடுகை அந்தப் போட்டிகளைப் பற்றி எழுதுவாரு. நல்லவிதமா எல்லாம் இல்லை. இந்த மாதிரி.  இவருக்குக் கிரிக்கெட்டே பிடிக்காதா அப்பிடின்னா இல்லை. இவருக்கு சச்சின் மேல ஏதோ காண்டு. அதை இவர் வலைப்பக்கத்துல இருக்கிற வாக்கெடுப்பிலே பார்க்கலாம். ஆனாலும் இவரோட வலைப்பூவோட கேப்ஷன் எனக்கு ரொம்பப் பிடிக்கும் - கூக்ளியில் ரேகைகளை இழந்து ஆஃப் ஸ்பின்னில் கட்டைவிரல் தேய்ந்து ஆங்கிலப் பரீச்சையை மறந்து அஞ்சாம் வகுப்பில் கோட் அடித்த சக நண்பர்களுக்காக

நாம அடுத்ததா பார்க்கப் போறவரும் ஒரு இலங்கைப் பதிவரே. இவரை, இவர் நட்பு வட்டாரத்தில ஸ்டேட்டிஸ்டிக்ஸ் புலின்னு சொல்லுவாங்க. யார், யார் கூட எப்ப ஆடினாங்க. அந்தப் போட்டியில யாரு எவ்வளவு ரன் அடிச்சாங்கன்ற புள்ளி விவரமெல்லாம் நல்லா சொல்லுவாரு. இவர் கூட சில இடுகைகள்ல விவாதம் செஞ்சிருக்கேன். கிரிக்கெட் சம்மந்தமாவும், கிரிக்கெட் இல்லாத விசயத்திலயும். உலகக் கோப்பை போட்டிக்கான இலங்கை அணியோட தேர்வு பற்றி இவர் இங்க அலசியிருக்காரு.

கிரிக்கெட் பதிவுகளை அறிமுகப் படுத்தன்னு வந்துட்டு இவங்க ரெண்டு பேரை சொல்லலைன்னா நல்லாவே இருக்காது.

முதலாமவர் பவன். இவர் நம்ம வலைமனை சுகுமார் சுவாமிநாதனைப் பார்த்துட்டு அவரைப் போலவே ஃபோட்டோ கமெண்ட்ஸ் போடுவார். சுகுமார் மாதிரி இல்லாம இவர் கிரிக்கெட் சம்மந்தமா மட்டுமே போடுவாரு. அதிலயும் இந்திய, ஆஸ்திரேலிய அணிகளைக் கலாய்க்கிறதுன்னா இவருக்கு லட்டு சாப்புடுற மாதிரி. சாம்பிளுக்கு இதைப் பாருங்க.

அடுத்தவரு லோஷன். இவரும் பிரபலப் பதிவரே. இவர் வெற்றி எஃப்.எம்மில் அறிவிப்பாளரா வேலை பாக்குறாரு. பொழுதுபோக்கா எழுதினாலும் நல்லாவே எழுதுவாரு. ஆஸ்திரேலிய அணியின் ரசிகர். கிரிக்கெட் போட்டிகளைக் கணிக்கிறதுல கில்லாடி. இவரோட கணிப்புகள் பெரும்பாலும் சரியாத்தான் இருக்கும். உலகக் கோப்பைத் தொடருக்கான இலங்கை, இந்திய, ஆஸ்திரேலிய அணிகள் தேர்வு பற்றி இவர் அலசியிருக்கிற இடுகை இது.

பவர்ப்ளே வெறும் அஞ்சி ஓவர்தான். அதுனால சட்டுனு முடிஞ்சிருச்சி. இனி நாளைக்கி வேற சில அறிமுகங்களோட பார்க்கலாம்.
மேலும் வாசிக்க...

Tuesday, January 25, 2011

மிடில் ஆர்டர்

ஒரு கிரிக்கெட் டீம்ல ஓப்பனிங் பேட்ஸ்மென் எவ்வளவு முக்கியமோ அதே அளவு மிடில் ஆர்டரும் முக்கியம். ஓப்பனர்ஸ் ஸ்ட்ராங்கா ஆரம்பிச்சிருந்தா, மிடில் ஆர்டரும் அந்த ரன் ரேட்டை குறைக்காம அடிச்சி ஆடணும். அதே நேரம், ஓப்பனர்ஸ் சீப்பா அவுட்டாகிட்டா அதுக்கு மேல விக்கெட் விழாம நிதானமாவும் ஆடணும். ஆக மொத்தம் எல்லா விதமாவும் ஆடத் தெரியணும்.

இன்னைக்கி நாம பாக்கப் போற ஆட்களும் அப்பிடித்தான். எல்லாத்தையும் கலந்து கட்டி அடிச்சி ஆடுறாங்க.

பண்புடன் குழுமத்துல இருக்கிற ஆட்களுக்கு இவர் நல்லாவே பரிச்சயம். பழைய பாட்டு மெட்டுல வரிகளை மாத்தி போட்டு சந்தம் மாறாம காமெடியா எழுதுறதுல இவரு கிங். பழங்கஞ்சின்னு பேர் வச்சிட்டு சுடச்சுட செய்திகளைக் குடுக்குறாரு.

அடுத்ததா தம்பி கூர்மதியான். ஏற்கனவே இவரோட இன்னொரு பதிவை நண்பர் எல்.கே அறிமுகப்படுத்தியிருந்தாரு. இது இவரோட இன்னொரு பதிவு. இதுபோக இன்னும் ரெண்டு பதிவு வச்சிருக்காரு. இதுல மொக்கை போடுறாரு. இங்க கவிதை எழுதுறாரு. இன்னொரு பதிவுல ஆங்கிலத்துல எழுதுறாரு. தமிழ் வலைப்பூக்களை மட்டுமே அறிமுகப்படுத்துறது வலைச்சர மரபுங்கிறதால அந்த ஆங்கிலப் பதிவுக்கு தொடுப்பு கொடுக்கலை.

அடுத்ததா நாம பாக்கப் போறது ஒரு புலம்பெயர் தமிழனோட பதிவு. இவர் சாதாரணன் அப்பிடின்னு சாதாரணமா பெயர் வச்சிக்கிட்டு சின்னச் சின்னச் செய்திகளா தொகுத்துக் குடுக்குறாரு. நிறைய வீடியோக்களும் இணைக்கிறாரு.

உங்களுக்கு ஒரு ஈஸியான கேள்வி கேக்கறேன். பாண்டவர்கள் அஞ்சி பேரோட பேர் சொல்லுங்க பார்ப்போம். சொல்லிட்டீங்க ஓக்கே. இப்ப அடுத்த கேள்வி. கௌரவர்கள் நூறு பேரோட பேரும் சொல்லுங்க பார்ப்போம். முழிக்கிறீங்க தானே? ஆனா ராஜி அசராம நூறு பெயரையும் இங்க எழுதியிருக்காங்க. அறியாத வாசனைன்னு தடாலடியா சிறுகதையும் எழுதறாங்க. புரியிற மாதிரி கவிதையும் எழுதறாங்க.

சொந்த கதை நொந்த கதைன்னு பதிவுக்கும், என்றென்றும் பதினாறு என்று தனக்கும் பெயர் வச்சிக்கிட்டு இருக்காங்க இந்த சகோதரி. பூமியில் கிடைக்கும் அமுது அப்பிடின்னு தாய்ப்பாலின் நன்மைகளையும் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டிய அவசியத்தையும் எழுதியிருக்காங்க.

அடுத்தது யோகனா யாழினி. கிட்டத்தட்ட தினமும் ஒரு இடுகை போட்டுடுவாங்க. கதை, கவிதை, அனுபவம், பஸ்ஸில் பார்த்தது இப்பிடி எல்லாத்தையும் பதிவுல ஏத்துவாங்க.

இவரு கங்குலி மாதிரி எப்பயாவதுதான் எழுதுவாரு. ஆனா எழுதினா அருமையா இருக்கும். ஸ்பெ என்று அன்பாக அழைக்கப்படுகிற ஸ்டாலின் ஃபெலிக்ஸ். 2007ல இருந்து எழுதுறாரு. மொத்தமே 68 இடுகைகள் தான் எழுதியிருக்காரு. இவரு எழுதினதுல எனக்கு ரொம்பவும் பிடிச்சது அம்பேத்கர் பட விமர்சனமும், முத்துக்குமார் பற்றிய புத்தக விமர்சனமும்.

இன்னைக்கி மிடில் ஆர்டர் பேட்ஸ்மென் இவ்வளவு பேருதான். நாளைக்கி இன்னும் சில பேரோட சந்திக்கிறேன். அதுவரைக்கும் உங்களிடமிருந்து விடை பெறுவது, உங்கள் முகிலன். 
மேலும் வாசிக்க...

Monday, January 24, 2011

ஓப்பனிங்

அன்பு நண்பர்களே,

வலைச்சரம் மூலம் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி.

தமிழ் வலையுலகில், தமிழ் மண நட்சத்திரமும், வலைச்சர ஆசிரியர் பணியும் பத்மஸ்ரீ, பத்மபூஷனைப் போன்றவை. பத்மஸ்ரீ கடந்த வருடம் பெற்றாயிற்று. இந்த வருடம் பத்மபூஷன். என்னை இந்தப் பணிக்கு அழைத்த சீனா அய்யா அவர்களுக்கு என் நன்றி.

நான் முகிலன் என்று வலையுலகில் அறியப்படுகிறேன் என்றாலும் என் இயற்பெயர் தினேஷ் குமார். பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் இந்தியாவில் என்றாலும், இப்போது குப்பை கொட்டுவது பெரியண்ணன் ஊரில்.

என் இடுகைகளை வலைச்சரத்தில் பல முறை பல ஆசிரியர்கள் அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள். இருந்தாலும் நானும் என் பங்குக்கு என் வலைப்பூக்களை அறிமுகப்படுத்துவது என்பது வலைச்சர மரபாக இருக்கிறது. அந்த மரபைப் பின்பற்றி நானும்...

நான் பிதற்றல்கள் என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தது ஆதி மூலகிருஷ்ணனின் புலம்பல்கள் என்ற பெயரைப் பார்த்தபின் தான். அப்போது நாமக்கல் சிபி இதே பெயரில் இன்னொரு வலைப்பூ வைத்திருக்கிறார் என்பது எனக்குத் தெரியாது. தெரிந்தபின் வலைப்பூ உரலியை மாற்றாமல் பெயர்ப்பலகையை மட்டும் முகிலனின் பிதற்றல்கள் என்று மாற்றினேன். சிபியும் பெரிய மனது வைத்து அவரது வலைப்பதிவை மூடிவிட்டார்.

நான் இந்த வலைப்பதிவை ஆரம்பித்து எதையெதையோ எழுத ஆரம்பித்துப் பின்னர் சிறுகதைகள் எழுதினேன். நான் எழுதியவற்றில் எனக்கு மிகவும் பிடித்தவை கீழே..

வித்தியாசமாக ரிவர்ஸ் க்ரோனோக்ராஃபிக் ஆர்டரில் நான் எழுதிய கதை

விவரணைகள் இல்லாமல் சம்பவங்களை விவரித்து பலரும் நல்ல நடை என்று பாராட்டிய கதை

ஒரே கதைக்குள் இரண்டு கதை

அதன்பிறகு சில தொடர்களும் எழுதினேன்.

என் மனைவியின் பிரசவத்தின் போது கூடவே இருந்த நினைவுகளை தொடராக எழுதியது

துப்பறியும் தொடர்கள் சில - அருண் என்ற கதாபாத்திரத்தை நாயகனாகக் கொண்டு

இவை மட்டுமல்ல எனக்கிருக்கும் கிரிக்கெட் ஆர்வத்தை வைத்து சில கிரிக்கெட் இடுகைகள் எழுதினேன். என் நண்பர்கள் சிலர் அதைத் தனி வலைப்பூவில் எழுதுமாறு அறிவுறுத்தியதால் கிரிக்கெட் பிதற்றல்கள் என்று ஒரு வலைப்பதிவை ஆரம்பித்தேன். அதிலும் சில இடுகைகள், குறிப்பாக ஏதாவது தொடர்கள் - ஐபிஎல், 2020 உலகக்கோப்பை போன்ற - நடக்கும்போது ஒவ்வொரு போட்டியையும் பற்றி முன்னோட்டம் மற்றும் அலசல் எழுதவேண்டுமென்று ஆரம்பிப்பேன். பெரும்பாலும் முடிக்க முடியாது. ஐபிஎல் நடக்கும்போது அதன் விமர்சனத்தை பாதியிலேயே முடிக்கக் காரணமாயிருந்த நிகழ்வை இந்தப் இடுகையில் எழுதியிருக்கிறேன்.

எனக்கிருக்கும் சிறு கிரிக்கெட் அறிவையும் இணையத்தையும் உதவியாய்க் கொண்டு எழுதிக்கொண்டிருக்கும் ஒரு சிறு தொடர் கிரிக்கெட் கற்றுக் கொள்ளலாம் வாருங்கள். இத்தொடரை கடந்த வருடம் ஃபிப்ரவரி மாதம் துவங்கினேன். ஆனால் பணிப்பளுவினால் அதைப் பாதியில் கைவிட வேண்டியிருந்தது. மீண்டும் இந்த வருடம் தொடர்கிறேன். பணிப்பளு அனுமதித்தால் தொடர்வேன்.

இந்த வலைச்சர வாரத்தில் என்னால் முடிந்த அளவு புதிய இடுகைகளையும், வலைப்பூக்களையும் பகிர்கிறேன்.

மீண்டும் எனக்கு வாய்ப்பளித்த சீனா அய்யாவுக்கும் வலைச்சர ஆசிரியர் குழுவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

மேலும் வாசிக்க...

Sunday, January 23, 2011

சென்று வருக கார்த்திக் - பொறுப்பேற்க வருக முகிலன்

அன்பின் சக பதிவர்களே !

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற நண்பர் கார்த்திக் - ஏற்ற பொறுப்பினை நிறைவாகச் செய்து, மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் ஏழு இடுகைகள் இட்டு ஏறத்தாழ இருநூற்று ஐம்பதுக்கும் மேலாக மறுமொழிகள் பெற்றிருக்கிறார். இவர் முப்பத்தி ஆறு இடுகைகளை - பல்வேறு துறைகளில் அறிமுகப் படுத்தி இருக்கிறார்.

கார்த்திக்கை நல்வாழ்த்துகள் கலந்த நன்றியுடன் விடை கொடுத்து வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.

அடுத்து நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க வருகிறார் நண்பர் முகிலன். இவரது இயற்பெயர் தினேஷ்குமார். விருதுநகரில் பிறந்து, அருப்புக்கோட்டையில் வளர்ந்து, மதுரையில் கல்வி பயின்றவர். இப்போது வாசம் செய்வது ரோச்சஸ்டர் : நியூ யார்க் : United States. முதுகலைக் கணினிப் பயன்பாட்டியல் பயின்ற இவர் இப்போது திட்ட மேலாளராக மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். முகிலனின் பிதற்றல்கள், கிரிக்கெட் பிதற்றல்கள் என்ற தனி வலைப்பூக்களிலும், வருங்கால முதல்வர் என்ற குழு வலைப்பூவிலும் எழுதி வருகிறார்.

நண்பர் முகிலனை பொறுப்பேற்க வருக வருக ! பதிவர்களை அறிமுகப் படுத்த வருக ! என வரவேற்று நல்வாழ்த்துகளைக் கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் கார்த்திக்
நல்வாழ்த்துகள் முகிலன்
நட்புடன் சீனா

மேலும் வாசிக்க...

விடை பெறும் நேரம்


இன்றைக்கு விடைபெறும் முன்பு ஒரு சிலப் பதிவர்களை பார்க்கலாம். "இதயம் பேசுகிறது " என்ற வலைப்பூவில் எழுதும் பாலாஜி எனது நண்பன். "நண்பன்டா " என்று இவரது நண்பருக்கு இவர்  செஞ்ச உதவியை கொஞ்சம் பாருங்க . 

போகாமல் விட்டத் திருமணத்தை விசாரிக்க சென்று அங்கு மாட்டிக்கிட்டு முழிச்சதை பத்தி கோமதி சொல்றதை கொஞ்சம் பாருங்க. அதே மாதிரி ஒருத்தர் புத்தகக் கண்காட்சியில் தனக்கு ஏற்ப்பட்ட   அனுபவங்களைப் பகிர்ந்துக்  கொள்கிறார்.

கணிணி பத்தி எனக்கு எதுவும் தெரியாது, அடிப்படையில் இருந்துக் கற்று கொள்ளவேண்டும்னு நினைப்பவர்கள். இதோ இந்த வலைப்பூவை பாருங்கள் ( இது அடிப்படை மட்டுமே. கணிணி நன்கு தெரிந்தவர்களுக்கு அல்ல ).

இவ்வளவு பேரை அறிமுகப் படுத்தி விட்டு ,ஒருவரை நான் விட்டுவிட்டால் அப்புறம் எனக்கு ரொம்பப் பிரச்சனை. அவர் யாரு என்ன அப்படின்னு இந்த லிங்கில் பார்த்துகோங்க .

கடந்த ஒரு வாரமாக வலைச் சரத்தில் எழுதும் வாய்ப்புக் கொடுத்த சீனா அய்யாவிற்கு எனது நன்றிகள். முடிந்த வரை புதியப் பதிவர்களை அறிமுகப் படுத்த வேண்டும் என்றுதான் எழுத ஆரம்பித்தேன். அவ்வாறே நடந்ததுள்ளது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

அனைத்து இடுகைகளுக்கும் வந்து பின்னூட்டம் இட்டு, அறிமுகப் படுத்திய பதிவர்களின் தளங்களுக்கும் சென்று அவர்களுக்கும் பின்னூட்டம் இட்டு உற்சாகப் படுத்திய அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றிகள். 
மேலும் வாசிக்க...

Saturday, January 22, 2011

இசைச் சரம்

இன்னிக்கு சில இசைத் தளங்களைப் பற்றிப் பார்ப்போம் .  வெங்கட் நாகராஜோட இந்த வலைப்பூவில் சில நல்ல பழையப் பாடல்களையும் கர்நாடக சங்கீதப் பாடல்களையும் பகிர்ந்துக் கொள்கிறார். இந்தக் கல்யாணப் பாட்டு நல்ல சிரிப்பா இருக்கும் . கேட்டுப் பாரு. அதிகப் பேர் கேட்காத பாட்டு அது .

கோவை ரவி வித்யாசமா வானொலியில் வரும் பாடல்களின் தொகுப்பை இங்கப் பதிவிடுகிறார். இது வித்யாசமான முயற்சியா இருக்கு.

பீதோவனோட இசையக் கூட நம்ம ஆளுங்க விடலை போல இருக்கு. அதையும் காப்பி அடிச்சிருக்காங்க. எப்பதான் சொந்தமா யோசிக்கப் போறாங்களோ ? இங்கப் பாரு ஆதிமனிதன் இதே சந்தேகத்தக் கேட்டு இருக்கார்

வர வர சொந்த மொழியைக் கூட பலர் ஒழுங்காகப் படிப்பது இல்லை. அதைப் பற்றியும் தெரிந்து கொள்வதில்லை. இப்படிதான் ஒரு ஆசிரியர் தனது வகுப்பில் நடந்த விஷயத்தை சொல்லி வருத்தப் ப்பட்டு இருக்கார். 
மேலும் வாசிக்க...

Friday, January 21, 2011

முத்துச் சரம்

எத்தனை சிம் கார்டுடா உபயோகிப்ப ? வர வர செல் போன் உபயோகத்தால் எவ்வளவு பிரச்சனைகள் பாரு . சிட்டுக் குருவிகள் காணாம போய்டுச்சி அதை கண்டுபிடிச்சி தர சொல்லி ஒருத்தர் கேட்டு இருக்கார்.

புதுசா ஒரு விஷயம் கேள்விப்பட்டால்  அதை சரியா விசாரிக்காம செய்யறது எவ்வளவுத் தப்புன்னு ஞானப் பிரகாசம் சொல்லி இருக்கார். இவரோட வலைப்பூவில் கால் நடை மருத்துவத்தைப்  பற்றி விரிவா எழுதறார். வீட்டில் பிராணிகளை வளர்ப்பவர்களுக்கு மிக உபயோகமாக இருக்கும்.

நாகசுப்பிரமணியன் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது. குறிப்பா நம்ம மேல வரும் விமர்சனங்களை எப்படி சமாளிப்பது அப்படின்னு அவரது பதிவில் எழுதி இருக்கார்.

அப்பப்ப உலகம் அழியப் போதுன்னு பீதியை கிளப்பறது வர வர ரொம்ப சகஜமாப் போய்டுச்சி. இதே மாதிரி மூர்த்தி அவர் பள்ளிக்கூடத்தில் படிக்கறப்ப பரவின வதந்தியால் அவங்க ஊர்ல நடந்த காமெடியை சொல்லி இருக்கார் .

நம் குழந்தைகளுக்கு நாம் குடுக்கும் செல்லமும் , பாக்கெட் காசும் வாழ்க்கையில் அவர்களை எப்படி சீரழிக்கிறதுன்னு தவறுன்னு ஒரு பதிவர் சொல்லி இருக்கார். பேருதான் தவறு. அவர் சொல்ற விஷயம் எல்லாம் சரியாதான் இருக்கு .

இன்னிக்கு கடைசியா ஒருப் பதிவோட லிங்க் மட்டும் தரேன். அதை இங்கப் போய் படிச்சுப் பாருங்க. அதை எப்படி அறிமுகப் படுத்துவது என்று எனக்குப் புரியவில்லை.

மேலும் வாசிக்க...

Thursday, January 20, 2011

கதம்ப வனம்

ஹ்ம்ம். என்ன இருந்தாலும் ஆஸ்திரேலியா நிலைமை இவ்வளவு மோசமா போகக் கூடாது.

ஏன்டா ? என்ன ஆச்சு ?

வரிசையா தோற்க ஆரம்பித்தவுடன், அவங்க நிலைமை ரொம்பப் பரிதாபமா  போச்சு . இங்க பாரு ஒருத்தர் அவங்களை ரவுண்டு கட்டி அடிக்கறார்.

 நம்ம ஹரணி அய்யாவோட பதிவைப் பாரு. வாழ்வில் வழிகாட்டிகளின் அவசியத்தை ரொம்ப அழகா சொல்லி இருக்கார்.

அதேமாதிரி உதிரிலைன்னு ஒருத்தர் வாழ்வில் தெளிதலைப் பற்றி ரொம்ப தெளிவா சுருக்கமா சொல்லி இருக்கார்.

 தயாநிதி (அமைச்சர் இல்லீங்க ) சிறுநீரகம் செயல் இழப்பதற்கு என்னக் காரணம் அதை எப்படி எல்லாம் தடுக்கலாம்னு சொல்லி இருக்கார். அது மட்டுமில்லாமல் இவரோட சித்த மருத்தவம் வலைப்பூ வேறுசிலக் குறைப்படுகளுக்கும் தீர்வு சொல்லுது.

பாலசுப்ரமணியம் அய்யாவோட இந்த சிறுகதை புனைவை படி . மேலோட்டமாகப் பார்த்தால் சிறிது எள்ளல் இருந்தாலும், ஆழ்ந்த கருத்துடன் எழுதி இருக்கார்

அப்படியே நம்ம கோபாலகிருஷ்ணன் சாரோட இந்தக் கதையும் படி . இதை படிச்சாவது வெறும் பகல் கனவு காணாம உருப்படற வழியைப் பாரு.

நாளை சந்திப்போம் நண்பர்களே....
மேலும் வாசிக்க...

Wednesday, January 19, 2011

கவிதைச் சரம்

நேற்று நிறைய புதியப் பதிவர்களின் பதிவை காட்டின. யாராவது  கதை கவிதைலாம் எழுதறாங்களா ? அப்படி கதை, கவிதை பதிவுகளை சொல்லேன்.

ஹ்ம்ம் சொல்றேன். ராஜி எழுதற இந்தப் பதிவை பாரு. புத்தாண்டுக்கு வித்யாசமா ஒரு கதை எழுதி இருக்காங்க . வழக்கமா செய்யற கொண்டாட்டங்களை தவிர்த்து புத்தாண்டை வித்யாசமா எப்படி கொண்டாடலாம்னு சொல்லி இருக்காங்க.

அதே மாதிரி ஹரிணி கல்யாணத்தில் திடீர்னு நடக்கற கலாட்டாவை மையமா வைத்து ஒரு கதை எழுதி இருக்காங்க. கொஞ்சம் நகைச்சுவை கலந்தக் கதை இது

 அப்புறம் ஜெ ஜெ அப்படின்னு ஒருத்தங்க எழுதின கவிதையை பார்த்து காதலுக்கே வெட்கம் வந்திருச்சாம்.ரொம்ப வித்யாசமா சிந்திச்சு எழுதி இருக்காங்க. இவங்க குட்டிகுட்டி கவிதையா எழுதறாங்க .

ரமணி தன்னோட தளத்தில் எழுதி இருக்கும் இந்தக் கவிதை, நம்ம பதிவுலகத்திற்கு ரொம்ப அவசியம்னு நினைக்கிறேன். பற்பலக் கருத்துக்களை சொல்வதை போல  இருக்கு அது .

கோநானு ஒருத்தங்க எழுதினா இந்தக் கவிதை வீட்டில் இருப்பவர்கள் ஊருக்கு சென்றப் பிறகு என்ன மிஞ்சி இருக்கிறது அப்படிங்கறதை அழகாய் சொல்லுது. இது விகடன்ல வெளி வந்துள்ளக் கவிதை

தவறானக் காதல் எவ்வளவு மோசமானது என்று கவிதையாய் சொல்லி இருக்காங்க வனிதா. இதையும் படிச்சுப் பாரு.

சரி சரி இன்னிக்கு இதோட நிறுத்திப்போம். போறதுக்கு முன்னாடி இந்தக் கடிகளை கொஞ்சம் படிச்சிட்டு போ .

மீண்டும் நாளை சந்திப்போம் நண்பர்களே
மேலும் வாசிக்க...

Tuesday, January 18, 2011

புது மலர்கள்

"என்னடா  பண்ணிட்டு இருக்க ??"

"ஒண்ணுமில்லை சிவா. புதுசா வந்திருக்கற பதிவர்களோட பதிவெல்லாம் படிச்சிட்டு இருக்கேன் "

"அப்படி என்னதான் இருக்கோ அதில் ?"

"ஏன் இல்லாமல். இங்கப் பாரு வராகன்னு  ஒருத்தர் எப்படி ஒரு நடராஜர் சிலை வெளிநாட்டுக்கு கடத்தினாங்க. அப்புறம் எப்படி அது திரும்பி வந்துச்சின்னு  சொல்லி இருக்கார் ."

"அட . இன்டரஸ்டிங்கா இருக்கே .."

"இன்னும் இருக்கு. கருன் அப்படின்னு ஒருத்தர் , நாம் இன்னொருத்தர் பொருளை அபகரிச்சா திருட்டுன்னு சொல்றோம். ஆனால் அதையே அதிகாரிகளோ இல்லை அரசியல்வாதிகளோ பண்ணினா ஏன் ஊழல்னு சொல்றோம்னு கோபப் படறார். "

அவரோட கோபம் சரிதான ??

இதையும் பாரு. தம்பி கூர்மதியன், அரசோட அலட்சியத்தால் முன்மாதிரி கிராமம் எப்படி பாதிக்கப்பட்டு இருக்குனு ரொம்ப ஆதங்கப் பட்டிருக்கார் .

ஆமாம். படிக்கறப்பவே இந்த அரசு அதிகாரிகள் மேல கோபம் ஜாஸ்தியா வருது.

சரி சரி ரொம்பக் கோபப்படாத. அது உடம்புக்கு ஆகாது. இங்க பாரு அஷ்வின்ஜி தன்னோட பதிவில இயற்கை உணவுகளை பத்தி ரொம்ப அழகா சொல்றார். இதை பின்பற்றினால் நமது உடம்புக்கு எந்தக் கெடுதலும் வராது. பக்க விளைவுகளும் இல்லை. அது மட்டுமில்லை, நம் உடம்பின் ரத்தத் தன்மைகளை பற்றியும் விரிவா சொல்லி இருக்காரு.

இதை பாரு குறட்டைப் புலியின் இந்தப் பதிவை படிச்சா சிரித்து சிரித்து உனக்கு வயிற்று வலி வருவது நிச்சயம். இந்த வருடம்  பிரபலங்களுக்கு எப்படி இருக்கும்னு பலன் போட்டு இருக்கார் .

அப்படியே இந்தப் பதிவை பாரு. குட்டி குட்டி கவிதைகளாய் எழுதி இருக்காங்க. அதில் இந்த தற்கொலை கவிதை ரொம்ப அழகாய் இருக்கு.

 இங்க பாரு ஒருத்தர் பள்ளிகூடத்தில் உண்மையை சொன்னதுக்கு அடி வாங்கினேன்னு புலம்பி இருக்கார். அப்படி என்னதான் உண்மைய சொன்னாருன்னு படிச்சுப் பாரு.

என்ன நண்பர்களே !  புதுசா சிலப் பதிவர்களைப் பார்த்தீங்களா ? அப்படியே அவங்க வலைப்பூவுக்கு போய் படிச்சு ஒரு பின்னூட்டம் போட்டீங்கனா அவங்க சந்தோசப்படுவாங்க ..

மீண்டும் நாளை சந்திப்போம்.

அன்புடன் எல்கே
மேலும் வாசிக்க...

Monday, January 17, 2011

சுய புராணம்


நம்ம சேட்டைக்காரனில் இருந்து அருண் பிரசாத் வரை என்னை இங்கு ஏற்கனவே அறிமுகப் படுத்தி இருக்காங்க. மத்தவங்க என்னை அறிமுகம் செய்த காலம் போய்  நான் மத்தவங்களை அறிமுகப் படுத்தும் நேரமிது. இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்த அன்பின் சீனா அய்யாவிற்கு எனது நன்றிகளும் வணக்கங்களும்.

2008 இல் பதிவெழுதத் துவங்கினாலும் தொடர்ச்சியாக எழுதுவது சென்ற வருடம் ஏப்ரலில் இருந்துதான். மொக்கைப் பதிவுகளாய் எழுதிக் கொண்டிருந்த நான் மறந்தகதை சொல்லி சிரிக்க வச்சது இங்கதான். இப்படியே சீரியஸா பதிவு எழுதிக்கிட்டு இருந்தா னவுல கூட பதிவுலகம்தான் வருது .


எவ்ளோ நாள்தான் வெறும் ஜோக் எழுதறது , நம்ம செய்யற வேலையைப் பத்தியும் எழுதலாமே அப்படின்னு எழுத ஆரமிச்சது கால் சென்டர் . பதிவுலகில் நெறையப் பேரு கதை எழுதரதப் பார்த்து நாமளும் எழுதிப் பார்ப்போமேன்னு எழுதினது பாவத்தின் பரிசு. நம்ம சுயப் புராணம் மட்டும் எழுதிக்கிட்டு இருந்தா நல்லா இருக்காது, நம்ம பிறந்த ஊரை பத்தியும் கொஞ்சம் எழுதுவோம்னு எழுதினது சொந்தமண்.


அப்படியே நடுவில் என் மகளைப் பற்றி எழுதியது திவ்யாவின் பக்கங்கள் . நம்ம கல்மாடி காமன்வெல்த் ஊழலுக்கு பதில் சொல்ல முடியாம முழிச்சப்ப  அவருக்கு உதவி பண்றதுக்கு எழுதியப் பதிவு இது


இதோட நிறுத்தாம கவிதையும் எழுதலாமேன்னு ஆரம்பிச்சது கவிச் சோலை.
என் தந்தைக்காக எழுதியது இது . அதே மாதிரி எப்படி நம்மகிட்ட ஒரு மாதிரியும் நம் முதுகுக்குப் பின் ஒரு மாதிரியும் இருக்காங்க அப்படிங்கறதை வைத்து எழுதியது இது.
கிட்டத்தட்ட அதே மாதிரி ஒரு விஷயத்தை வைத்து எழுதியது இரட்டை முகங்கள்

கடற்கரைக்கு  குடும்பத்தோட போக முடியாத அளவுக்கு சிலரோட அட்டூழியம் இருக்கு அங்க. அதை பத்தி காட்சிப் பொருளில்  போய் பாருங்க.

அன்புடன் கார்த்திக் (எல்கே )
மேலும் வாசிக்க...

Sunday, January 16, 2011

சென்று வருக பாலா - பொறுப்பேற்க வருக கார்த்திக் லட்சுமி நரசிம்ஹன்

அன்பின் சக பதிவர்களே !

இன்றுடன் நிறைவடையும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற அருமை நண்பர் பாலா, தான் ஏற்ற பொறுப்பினை சரிவர நிறைவேற்றி, மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.

இவர் ஏழு இடுகைகள் இட்டு, நூற்றுக்கும் மேல் மறுமொழிகள் பெற்று, இடுகைக்கு ஐந்து புதிய பதிவர்களை அறிமுகப் படுத்தி, ஒவ்வொரு அறிமுகத்திற்கும், அப்பதிவருடைய வலைப்பூவின் முகப்புப் பக்கத்தினை அப்படியே படமாக்கி வெளியிட்டிருப்பது வாசகர்களின் வாசிக்கும் ஆர்வத்தினைத் தூண்டி இருக்கும் என்பதில் ஐயமே இல்லை.

பாலாவினை வாழ்த்தி - விடை கொடுத்து வழி அனுப்புவதில் - மன மகிழ்ச்சி அடைகிறேன்.

அடுத்து நாளை துவங்கும் வாரத்திற்குப் பொறுப்பேற்க வருகிறார் நண்பர் கார்த்திக் லட்சுமி நரசிம்ஹன். இவர் சேலத்தில் பிறந்து, தற்பொழுது சென்னையில் பணி புரிகிறார். இவர் இளங்கலை கணிப்பொறி அறிவியலில் பட்டம் பெற்றவர். இவர் அணித் தலைவராக, இந்தியா முழுவதற்குமான கால் செண்டரில் பணி புரிந்து கொண்டே, கவிச்சோலை, பாகீரதி என்னும் வலைப்பூக்களில் எழுதி வருகிறார்.

நண்பர் கார்த்திக்கினை வருக - வருக என வரவேற்று, ஏற்ற பொறுப்பினை முழு ஈடுபாட்டுடன் நிறைவேற்றுக என வாழ்த்துவதில் பெருமை அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் பாலா
நல்வாழ்த்துகள் கார்த்திக் லட்சுமி நரசிம்ஹன்

நட்புடன் சீனா
மேலும் வாசிக்க...

அத்தியாயம் 6 - இன்றே இப்படம் கடைசி

பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள். தப்பா நினைச்சுக்காதீங்க. இன்னிக்கு மாட்டுப்பொங்கல். அதான் வாழ்த்தினேன். 


கடந்த ஒரு வாரம் எப்படி சென்றது என்றே தெரியவில்லை. பதிவர்களை அறிமுகம் செய்யவேண்டும் என்பதற்காகவே நிறைய பதிவுகளை படிக்க நேர்ந்தது. உங்களோடு சேர்ந்து நானும் பல நண்பர்களை பற்றி தெரிந்து கொண்டேன். இதற்கு வாய்ப்பளித்த நண்பர் சீனா அவர்களுக்கு மீண்டும் நன்றி. இன்று நாம் பார்க்க போகும் பதிவர்கள் யாரென்றால் ,


வானம் எனக்கொரு போதிமரம் என்கிறார் நண்பர் இளவரசன். கவிதைக்கு உண்மையும் அழகு என்று வித்தியாசமான பதிவுகளால் நம்மை அசரவைக்கிறார். காதல் என்றால் குழப்பம் என்று மிகத்தெளிவாக சொல்கிறார். காதலியின் பிணம் என்று தடாலடியாக அதிர வைக்கிறார். ஒரு விபசாரியின் குரலில் கவிதையின் வாயிலாக நாம் மனசாட்சியுடன் பேசுகிறார். பால்பூத் பூச்சாண்டி என்று பால்ய கால நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார். நடுநிலைன்னா என்ன என்று கேள்வியும் எழுப்புகிறார்.


நண்பர் ஸ்பீட்மாஸ்டர் தான் கண்ட உலகத்தை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். ஜாலி பேர்வழி என்று இவரின் பதிவுகளே சாட்சி சொல்கின்றன. அலுவலகத்தில் சும்மா இருந்தால் பொழுதுபோக என்னவெல்லாம் செய்யலாம் என்று ஐடியா தருகிறார். மேலும் சங்கர் அடுத்து எடுக்கப்போகும் 500 கோடி பட்ஜெட் படத்தை பற்றி ஸ்கூப் தருகிறார். பட்டுக்கோட்டை அவர்களைப்பற்றி அறிய தகவல்களை தொகுத்து தருகிறார். வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல விரும்புவோருக்கு பயனுள்ள தகவல்களை தருகிறார்.

நண்பர் பொன்ராஜ் பொன்னான வரிகளால் உள்ளத்தை அள்ளுகிறார். சிந்தனைகள் என்ற தலைப்பில் உபயோகமான செய்திகளை தருகிறார். ஒரு ராணுவ வீரர் சொன்ன உண்மைக்கதையையும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். சில இல்லுஷன் படங்களையும், நெஞ்சை உலுக்கும் ஏழ்மை படங்களையும் தந்து இதயங்களை கனக்க வைக்கிறார். ரொம்ப நக்கலாக அரசியல் வேறு பேசுகிறார். அட போடவைக்கும் சமாச்சாரம் ஒன்றையும் சொல்கிறார். மிக அருமையாக இருக்கிறது.

பலே பாண்டியா, பலே ஆசாமியாகத்தான் இருக்கிறார். ஈசியாக கணக்கு பண்ணுவது எப்படி என்று கற்று தருகிறார். மேலும் போட்டோஷாப் சொல்லி கொடுக்கிறார். கணக்கு புதிர் போட்டு எல்லோரையும் யோசிக்க வைக்கிறார். உங்கள் கணினியை பற்றி புதிது புதிதாக பல துணுக்குகள் அளிக்கிறார். மிகவும் பயனுள்ளதாக உள்ளன. ஒவ்வொரு பதிவின் இறுதியிலும் கருத்து வேறு சொல்கிறார்.


நீ நான் அவன் என்று எழுதி வரும் வெற்றி அவ்வப்போது வெற்றி டைம்ஸ் என்று சுவாரசியமாக செய்தி தொகுப்பு அளிக்கிறார், காஃபி குடிக்கிற கேப்பில் காஃபி பற்றி அரிய தகவல்களை அடுக்குகிறார். தண்ணீர் ஒரு மனிதனுக்கு எவ்வளவு முக்கியம் என்று காரணங்களை அடுக்குகிறார். புயல்களுக்கு பெயர் வைப்பதை பற்றியும் தகவல் தருகிறார்.


நண்பர்களே, இதோ முடிந்து விட்டது எனது தொல்லை. எனக்கு தெரிந்த சில நண்பர்களின் வலைதளத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறேன். என்னுடைய எழுத்து நடை போராடித்தாலும் பொறுமையாக படித்த உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். நன்றி வணக்கம்.

மேலும் வாசிக்க...

Saturday, January 15, 2011

அத்தியாயம் 5 - சரத்தில் ஐந்தாவது மலர்

ஆண்டுதோறும் எத்தனையோ பண்டிகைகள் கொண்டாடினாலும், சாதி மத பேதம் இல்லாமல் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை பொங்கல்தான். கடவுளை மையப்படுத்தாமல், உழைப்பை, நன்றியை, இயற்கையை மையப்படுத்துவதாலேயே இந்த சிறப்பு. உலகின் பெரும்பாலான இடங்களில் இந்த பண்டிகை வெவ்வேறு பெயர்களால் கொண்டாடப்பட்டு வருவது ஒரு சிறப்பு. அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். (அட மறந்தே போய்ட்டென். அனைவருக்கும் இனிய (தமிழக அரசு அறிவித்த) தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.)
ஆறு ஆண்டுகளுக்கு முன் கல்லூரியில் பொங்கல் கொண்டாட்டம். அம்புக்குறி காட்டும் நபர்தான் இந்த பதிவை எழுதுபவர் (ரொம்ப அப்பாவியா இருக்கார்ல?)


இது ஒரு பொங்கல் ஸ்பெஷல் பதிவு. அதென்ன ஸ்பெஷல் என்கிறீர்களா? அதெல்லாம் ஒண்ணும் இல்லீங்க. பெரும்பாலும் டிவியில் சாதாரண நாட்களில் ஒளிபரப்பப்படும் மொக்கை நிகழ்ச்சிகள் எல்லாம், பொங்கல் அன்று சிறப்பு நிகழ்ச்சி ஆவதில்லையா? மொக்கை படங்கள் எல்லாம் சூப்பர்ஹிட் படம் ஆவதில்லையா? அது மாதிரிதான். இது மொக்கை அல்ல. சாதாரண பதிவுதான். ஆனாலும் பொங்கல் அன்று வெளியிடுவதால் சிறப்பு பதிவு.


நண்பர் பாலாஜி சரவணன் கவிதைகளில் பட்டய கிளப்புகிறார். அதிலும், பிரிவு, சோகம், அழுகை என்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி போலிருக்கிறது. காதலியை பிரிந்த துயரில் புலம்பி தள்ளுகிறார். புதுமையாக மனதை மின்விசிறியுடன் ஒப்பிட்டு அசத்துகிறார். முகமூடி மனிதர்களின் நிதர்சனத்தை வெளிப்படுத்துகிறார். நட்பை பற்றி தலைப்பிடாமலும் கவிதை சொல்கிறார்.


வாழுமட்டும் நன்மைக்காக வாழ்ந்துபார்ப்போம் என்று சொல்லும் குடந்தையூர் நண்பர் சரவணனை நிறைய பேர் அறிந்திருப்பீர்கள். இங்க்ரீமெண்ட் கேட்டு கெஞ்சும் குறுஞ்சிறுகதை புன்னகைக்க வைக்கிறது. இருமன அழைப்பிதழ் என்ற கதை அவரே சொல்வது போல வித்தியாசமாகத்தான் இருக்கிறது. சில நொடி சினேகம் என்று ரயில், பேருந்து சினேகங்களை ஞாபகப்படுத்துகிறார். அப்பப்ப ஜோக்'கடி'க்க வேறு செய்கிறார்.


தன்னடக்கத்துடன் தன்னை சின்னப்பயல் என்று சொல்லிக்கொள்கிறார் இந்த பரமக்குடிக்காரர். குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கிக்கிறார். கண்ணாடியோடு பேசுகிறார். கண்ணாடியும் நம்மோடு பேசுகிறது. கண்ணாடியால் உறவுகளைப்பற்றியும் விவரிக்கிறார் இந்த சின்னப்பயல். புன்னகைக்க வைக்கும் புள்ளயார் புடிக்க போன கத சொல்கிறார். காதலன் காதலியிடம் என்ன எதிர்பார்ப்பான். ஒன்றும் அதிகமில்லை என்று பட்டியலிடுகிறார். மழை ஏன் யாருக்குமே பிடிக்கிறதில்லைனு கேள்வி கேட்கிறார்.


சகோதரி அபுசனா குழந்தைகள் மேதைகளாக வளர்ப்பதற்கு சில ஐடியாக்கள் தருகிறார். உக்காந்து யோசிச்சதுன்னு சொல்லி மனசாட்சியே இல்லாமல் மொக்கை போடுகிறார். தொலைக்காட்சி பெட்டியின் முன்னேற்றம் பற்றிய செய்திகளையும் பகிர்ந்து கொள்கிறார். அளவில் பெரிய தகவல்களை மெயிலில் அனுப்ப டெக்னிக்கல் ஆலோசனையை எளிய முறையில் தருகிறார்.


நண்பர் மகாதேவன் தான் தளத்துக்கு தகவல்துளிகள் என்று பெயர் வைத்தது சரிதான். நிறைய தகவல்களை அள்ளித்தருகிறார். உங்கள் தலைமுடியின் உண்மையான நிறம் என்ன என்று சொல்கிறார். கடவுச்சொல் (பாஸ்வார்ட்) எப்படி பாதுகாப்பான முறையில் அமைப்பது என்று ஆலோசனை தருகிறார். சிறுநீரகக்கல் உருவாகுவது பற்றி விளக்குகிறார். உலகத்திலேயே மிகப்பெரிய புகைப்படத்தைப்பற்றிய தகவல்களை தருகிறார். பைலட்டின் அறையை 360 டிகிரி கோணத்தில் சுற்றி காட்டுகிறார். பாராசூட்டில் இருந்து குதிக்க கற்று தருகிறார். இவ்வாறு அடுக்கிக்கொண்டே போகலாம்.

இன்னிக்கு அறிமுகங்கள் முடிந்து விட்டது. எல்லோரும் பொங்கல், கரும்பு எல்லாம் சாப்பிட்டு விடுமுறையை எஞ்சாய் பண்ணுங்க. என்ன நண்பர்களே நாளைக்கு சந்திப்போமா?
மேலும் வாசிக்க...

Friday, January 14, 2011

அத்தியாயம் 4 - சரத்தில் நான்காவது மலர்

அனைவருக்கும் வணக்கம். "பழையன கழிதலும் புதியன புகுதலும்", என்ற சொல்லுக்கேற்ப, உங்கள் மனதில் இருந்த பழைய கவலைகள் எல்லாம் மறைந்து, புதிய மகிழ்ச்சி குடியேறட்டும் என்று இந்த போகி திருநாளில் மனமாற வாழ்த்துகிறேன். வழக்கம்போல இன்றும் ஒரு ரெடிமேட் பட்டியல். பாத்துவிடலாமா?


அரசர்குளத்தானாகிய நண்பர் கஸாலி பயனுள்ள பல நல்ல பதிவுகளை எழுதி வருகிறார். அவர் எழுதிய ஆட்டோ சங்கர் பற்றிய பிளாஷ்பேக் குறிப்பிடத்தக்கது. மிசா அல்லது எமர்ஜென்சி பற்றிய வரலாற்றையும், மகாத்மா காந்திஜி அவர்களை கொன்ற தினத்தன்று நடந்தவைகளையும் கண்முன் நிறுத்துகிறார். பூனையை ஹீரோவாக வைத்து சுவாரசியமாக சிறுகதையும் தந்திருக்கிறார். காலப்போக்கில் தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டுவிட்ட பழமொழிகள் பற்றியும், அவற்றின் சரியான அர்த்தம் பற்றியும் கூறுகிறார்.


சேலம் தேவாவோ ஏடாகூடமாக பழமொழிகளுக்கே எதிராக ஆராய்ச்சி நடத்தி புதுமொழிகளை உதிர்க்கிறார். செல்போனால் ஏற்படும் தொல்லைகளுக்கு காரணமான மார்டீன் ஹூப்பரையும் கலாய்க்கிறார். மாதா, பிதா, கூகிள் என்று குருவுக்கு பதிலாக கூகிளை வைக்கிறார். காரணமும் சொல்கிறார். சொந்த கதை என்று நொந்த கதையும் சொல்கிறார்.


நண்பர் முத்தூசிவா சிவசம்போ என்ற தன் வலைப்பக்கத்தில், குண்டு ஒண்ணு வச்சிருக்கேன் என்று தமிழ் சினிமாவில் வெடிகுண்டு வைக்கும் வில்லன்களை கலாய்க்கிறார். எந்திரன் படத்தில் வசீகரனாக கவுண்டரும், சிட்டியாக செந்திலும் நடித்தால் எப்படி இருக்கும் என்று காமெடி கலாட்டா செய்கிறார். சரி மனிதர் ரொம்ப ஜாலியான ஆள் என்று பார்த்தால், அந்த நேரம் அந்தி நேரம் என்று திகில் கதை எழுதி அடிவயிற்றில் பீதியை கிளப்புகிறார்.


நண்பர் வடிவேலன் கணினிமென்பொருள்கூடம் என்ற தன் வலைப்பக்கத்தில் எண்ணற்ற கணினி சார்ந்த தகவல்களை அள்ளித்தந்திருக்கிறார். புதிதாக கணினி வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள், மின் புத்தகங்களை படிப்பதற்கு ஏற்ற மென்பொருட்கள் போன்றவை பற்றி பயனுள்ள செய்திகள் தருகிறார். ஸ்டார்ட் மெனுவில் நம் பெயர் வரும்படி செய்யும் வழியையும் கற்பிக்கிறார்..


நண்பர் செய்யது அலி தன் வலைப்பக்கமான செய்தாலியில் கவிதையாக எழுதி தள்ளிவிட்டார். போலி மனிதர்களின் முகச்சாயம் பற்றி கோடிட்டு காட்டுகிறார். காதல் கவிதையும் அழகாக எழுதுகிறார், சமூக அவலங்களை பற்றிய சோக கவிதையும் ஆழமாக எழுதுகிறார்.

இன்று சில புதிய தளங்களை பற்றி அறிந்து கொண்டீர்களா? என்ன நண்பர்களே நாளைக்கு சந்திப்போமா?

மேலும் வாசிக்க...

Thursday, January 13, 2011

அத்தியாயம் 3 - சரத்தில் மூன்றாவது மலர்

வலைச்சரத்தில் எனது வெற்றிகரமான மூன்றாவது நாள். “ரெண்டு நாள் கூட ஆகல, அதுக்குள்ள என்ன வெற்றிகரமான? என்று கேட்கிறீர்களா? இப்போதெல்லாம் படம் ரிலீஸ் அன்னிக்கே மாபெரும் வெற்றி அப்படின்னு சொல்றதில்லையா? அது போலத்தான்.


எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருபவர்களில் முக்கியமானவர் எப்பூடி..ஜீவதர்ஷன் அவர்கள். ரஜினியின் தீவிர பக்தராக அறியப்பட்டவர். இவருடைய எளிமையான எழுத்து நடை என்னை மிகவும் கவர்ந்தது. ஒவ்வொரு துறையிலும் இருதுருவங்களாக இருக்கும் இரட்டையர்கள் இணைந்திருக்கும் 50 புகைப்படங்களை அழகாக தொகுத்திருக்கிறார். நாம் வாழ்வில் அன்றாடம் காணும் சின்ன சின்ன சுகமான விஷயங்களை சுட்டிகாட்டி இருக்கிறார். சாட்டிலைட் டீவிக்கும், அன்றைய தூர்தர்ஷனுக்கும் உள்ள வித்தியாசங்களை சொல்லி மலரும் நினைவுகளை ஏற்படுத்துகிறார். கிரிக்கெட் பற்றி எழுதுவதிலும் வல்லவராகவே இருக்கிறார்.


நண்பர் இரவுவானம் என்னைப்போல எதை எழுதினாலும் காமெடி தூவியே எழுதுகிறார். நானும் என் காதலும் என்று சொந்த காதல் கதையை சுவாரசியமாக சொல்கிறார். சபரிமலைக்கு போகிறவர்களுக்கு டிப்ஸ் என்று வித்தியாசமான பதிவுகளையும் எழுதி உள்ளார். குழந்தைகளை தட்டி கேட்கும் விதமாக சமூக நோக்கம் உள்ள பதிவையும் எழுதி இருக்கிறார். அவ்வப்போது திரைவிமர்சனம் எழுதி கலாய்க்கவும் செய்கிறார்.


என் இனிய இல்லம் என்று பெண்களுக்கு தேவையான அத்தனை விஷயங்களையும் அள்ளித்தருகிறார் சினேகிதி. கஞ்சி காய்ச்சுவதில் இருந்து, தந்தூரி வகை வரை சமையல் குறிப்புகளும், களிமண்ணில் இருந்து கண்ணாடி வரை கை வேலைபாடுகள் பற்றிய குறிப்புகளும் கண்டிப்பாக அனைவருக்கும் பயனுள்ளதாகவே இருக்கும்.


வம்ப வேலைக்கு வாங்க துடிக்கும் நண்பர் மணிவண்ணன், ஒரு காமெடி காதல் கதையை சீரியஸாக சொல்லி சிரிக்க வைக்கிறார். இரண்டு என்ற நம்பரை வைத்துக்கொண்டு மொக்கை கதையும் சொல்கிறார். அத்தமகளின் அந்தநாள் ஞாபகங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.


குட்டிசுவர்க்கம் ஆமீனா மேடம் மிகவும் பயனுள்ள  தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றி உரிமையோடு விளக்குகிறார். பூல்புலாயா என்று மர்ம கோட்டை பற்றிய கதையை சுவாரசியமாகவும் சொல்கிறார். கிரிக்கெட் கற்று கொடுத்த பாடம் என்று கருத்தும் தெரிவிக்கிறார்.

என்ன நண்பர்களே இன்று நான் அறிமுகப்படுத்தியவர்கள் தளங்களை கண்டு கொண்டீர்களா? நாளை இன்னும் சில பதிவர்களை அறிமுகப்படுத்துகிறேன். அப்போ, நாளை சந்திப்போமா?

மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது