07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, January 27, 2011

லன்ச் ப்ரேக்

ஒன் டே மேட்ச்ல ஃபர்ஸ்ட் ஹாஃப் முடிஞ்சதும் லஞ்ச் ப்ரேக். (டே நைட் மேட்ச்னா டின்னர் ப்ரேக்). இந்த லஞ்ச் ப்ரேக்ல வயிறு முட்ட சாப்பிடாம சத்தா, பசி அடங்குற அளவுக்கு சாப்பிடுவாங்க. அப்போதான் அடுத்ததா ஃபீல்டிங்கோ பேட்டிங்கோ செய்ய முடியும்.

இன்னைக்கி நாம பார்க்க போறது சமையல் பதிவுகளேதான். (உண்மையிலேயே புதிய சமையல் பதிவர்களைக் கண்டு பிடிக்கிறது ரொம்ப கஷ்டம். எழுதுற ஆட்கள் எல்லாம் பழம் தின்னு கொட்டை போட்டவங்களா இருக்காங்க).

இந்த பதிவர் கோவையில வளர்ந்து திருமணத்துக்குப் பிறகு தில்லியில வாசமாம். அதுனால இவங்க வலைப்பதிவுக்குப் பேரே கோவை2தில்லி. முதல்ல சப்பாத்தியைச் சுட்டுப் போட்டுட்டு அப்புறம் அதுக்குத் தொட்டுக்க பாலக் பனீரும், சோலே மசாலாவும் வச்சிருக்காங்க. இவங்க சமையல் பதிவுதான் எழுதுறாங்கன்னு நினைக்காதீங்க. இப்பிடி ஆன்மிகச் சுற்றுப் பயணம் கூட கூட்டிட்டிப் போவாங்க.

அடுத்ததா நாம பாக்கப் போற அனுவுக்கும் எனக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான். நான் புளூரல். இவங்க சிங்குலர். ஆமாங்க, இவங்க வலைப்பதிவுக்குப் பேரு பிதற்றல். சிக்கன் குருமா, சிக்கன் குழம்பு, சிக்கன் வருவல் எல்லாம் கேள்விப்பட்டிருப்போம். சிக்கன் பொரியல் கேள்விப்பட்டிருக்கீங்களா? இவங்க செஞ்சே காட்டியிருக்காங்க. இவங்க ஆங்கிலத்திலயும் சில சமையல் குறிப்புகள் எழுதியிருக்காங்க. சமையல் குறிப்புகள் தவிர சில சிறுகதைகளும் எழுதியிருக்காங்க.

அம்மா கொடநாட்டுல ரெஸ்ட் எடுக்கப் போனா இவங்க கொட நாடு பரோட்ட செய்யறது எப்பிடின்னு சொல்லித்தராங்க. இவங்களும் சமையல் குறிப்பு மட்டும் எழுதறதில்லை.

சப்பாத்தி, சிக்கன், பரோட்டான்னு சாப்டாச்சி. கொஞ்சம் டெஸர்ட் சாப்பிட வேண்டாமா? இங்க மிடில் கிளாஸ் மாதவி பொங்கல் அன்னைக்கி ஆங்கிலக் காய்கறியான கேரட்டைப் போட்டு கீர் செய்யறது எப்படின்னு சொல்லியிருக்காங்க.

கீர் குடிச்சாச்சி. ஒரு ஸ்வீட் சாப்ட்டுட்டா லஞ்ச் திருப்திகரமா முடிஞ்சிரும் இல்லையா? இங்க புவனேஸ்வரி ராமநாதன் அவல் பர்ஃபி செய்யறது எப்படின்னு சொல்லியிருக்காங்க. ஸ்வீட்டோட கொஞ்சம் காரமும் வேணும்னு நினைக்கிறவங்களுக்காக கதம்ப முறுக்கும் இருக்கு.

கொஞ்சம் ஹெவியான சாப்பாடுதான். நமக்கென்ன கவலை நாம என்ன கிரிக்கெட் விளையாடவா போறோம். பாக்கத்தானே போறோம்.

இன்னொரு வித்தியாசமான பதார்த்தத்துக்கான சமையல் குறிப்பு இங்க இருக்கு. இதைச் சாப்டுட்டு உங்க வயிறுக்கு எதாவது ஆச்சின்னா அதுக்கு நான் பொறுப்பில்லை.

நாளை இன்னும் கொஞ்சம் பதிவுகளோட உங்களைச் சந்திக்கிறேன். நன்றி

13 comments:

 1. ரொம்ப பசி நேரத்ல பதிவு போட்டீங்களா? சமையல் குறிப்பா அறிமுகப்படுத்தி இருக்கீங்க.

  ReplyDelete
 2. பதிவு அருமை நண்பரே

  ReplyDelete
 3. சமையல் தளங்களை
  அறிமுகப்படுத்தி இருக்கீங்க.

  ReplyDelete
 4. மொதல்ல சாப்புட்டுட்டு கமெண்டு போடுறேன்..

  ReplyDelete
 5. சிறப்பான அறிமுகங்கள்...

  தொடர்ந்து கலக்குங்க நண்பரே.......

  ReplyDelete
 6. அட!பதிவர்களை அறிமுகப் படுத்தறதோட இல்லாம
  கதம்ப முறுக்கு,அவல் பர்ஃபினு புதுசு புதுசா
  அறிமுகப் படுத்தறீங்களே
  இப்பவே இந்த தளங்களை எல்லாம் போய்
  பாத்தாதான் செஞ்சு சாப்பிட வசதியா இருக்கும்
  நன்றி

  ReplyDelete
 7. இரண்டாம் முறையாக வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய தங்களுக்கு என் நன்றிகள். முதல் முறை அறிமுகம் செய்தது அமைதிச்சாரல் அவர்கள்.

  ReplyDelete
 8. Super recipes..... Thank you.

  ReplyDelete
 9. புது receipeகள் (பதிவுகள்) அருமை

  ReplyDelete
 10. மிடில்கிளாஸ் மாதவி, மரகதம் தவிர மற்றவர்கள் அறிமுகங்கள்... நன்றி...

  ReplyDelete
 11. என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு தங்களுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 12. Lakshmi
  அரசன்
  சே.குமார்
  Madhavan Srinivasagopalan
  மாணவன்
  raji
  கோவை2தில்லி
  Chitra
  ஸ்வர்ணரேக்கா
  Philosophy Prabhakaran
  புவனேஸ்வரி ராமநாதன்

  - அனைவரின் ஆதரவுக்கும் நன்றி.

  ReplyDelete
 13. என் பதிவை அறிமுகப்படுத்தியதற்கு ரொம்ப நன்றி முகிலன். இது போன்ற வலைப்பதிவுகள் இருக்குனு இப்ப தான் எனக்கு தெரியும்.
  நல்ல முயற்சி! வாழ்த்துக்கள்!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது