07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, January 3, 2011

தலைப்புச்செய்திகள்..

அன்பார்ந்த வலையுலக நேயர்களே...

இன்னும் சிறிது நேரத்தில், நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த வலையுலகச்செய்திகள் ஆ.... ரம்பமா..க உள்ளன...

ஸ்டார்ட் ம்யூசிக்...வலையுலக நேயர்களுக்கு வணக்கம்,..

இன்றையசெய்திகள்... வாசிப்பது அமைதிச்சாரல்.

தலைப்புசெய்திகள்:

வெங்காயவிலை இறங்காமல் இருப்பதால், கத்தரிக்காய்க்கு பதிலாக அவியல்,எரிசேரி என்று எளிய உணவுகளை சமைத்து சமாளிக்க வேண்டியிருப்பதாக கோலிவாடா கோமளா அங்கலாப்பு.

தான் கவிதை எழுதவந்தது எப்படி: கவிஜருடன் நமது நிருபர் நேர்முகப்பேட்டி.
கற்களின் திடீர் விலையேற்றத்திற்கும், இதற்கும் சம்பந்தமுண்டா என்று அறிய சி.பி.ஐக்கு உத்தரவிடவேண்டும். எதிர்க்கட்சி வேண்டுகோள்.

விரிவான செய்திகள்:

இந்த வருடத்தின் சிறப்பான சிறுகதையாக, 'ஒரு கதை'  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் மஹாராஷ்ட்ராவில் பொங்கல் கொண்டாட சென்றுள்ளபடியால் வந்தவுடன் பாராட்டுவிழா நடத்தப்படும்.

உலகம் உருண்டையானது என்பது மறுபடியும் அரும்பாடுபட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.

சில்லறைத்தட்டுப்பாட்டை கட்டுப்படுத்தாத அரசை கண்டித்து இன்று மாலை கடற்கரையில் டீகுடிக்கும் போராட்டம் நடைபெறவுள்ளது.

 எதிர்காத்து மிக வேகமாக வீசும் அபாயமுள்ளதால், தத்தம் மனைவிகளை பாதுகாத்துக்கொள்ளும்படி, கணவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

சாகசப்பயணம் புரிந்து வெற்றிகரமாக வீடு வந்தடைந்த இளைஞருக்கு திருஷ்டி சுற்றப்பட்ட இரண்டு மெகா பூசணிக்காய்கள், அதே சாலையில் உடைக்கப்பட்டன.

இத்துடன் இன்றைய சிறப்புச்செய்திகள் முடிவடைகின்றன.

வலைச்சரத்தில் புத்தாண்டின் முதல்பூவாய் என்னை தேர்ந்தெடுத்த, நிலைய இயக்குனர் சீனா ஐயா அவர்களுக்கும், சகோதர சகோதரிகளான உங்கள் அனைவருக்கும் வணக்கமும், புதுவருட வாழ்த்துக்களும் கூறி விடைபெறுவது... அமைதிச்சாரல்.

36 comments:

 1. யாருக்கும் இன்னும் க்மஎன்ட் போடல. உங்க பேரை பார்த்ததும் ஓடி வந்துட்டேன்.....

  ஆசிரியர் பணி பொறுப்பேர்றமைக்கு வாழ்த்துக்கள்

  ஒரு வாரத்துக்கு தினதந்தி, தினமணி படிக்கிற ஐடியாவ குப்பைல போட போறேன் ;))

  ReplyDelete
 2. வாங்க ஆமினா,

  உங்க அன்புக்கு ரொம்ப நன்றிப்பா..

  ReplyDelete
 3. இன்றைய பிரபல பத்திரிகைகளின் சிறப்புச் சிறுகதைகளை மிஞ்சும் வகையில் அமைந்த ‘ஒரு கதை’ அட்டகாசம்:))))!

  ம்யூசிக் ஸ்டார்டட். வாழ்த்துக்கள் சாரல்:)!

  அசத்துங்கள் வருடத்தின் முதல் ஆசிரியராக வலைச்சரத்தில்:)!

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள் அமைதிச்சாரல்.
  சாரல்... இங்கே புயலாய் இல்லாமல் தென்றலாய் வீசட்டும்... உங்கள் சுய அறிமுகமே அசத்தலாய் இருக்கு.
  ஜமாய்ங்க.

  ReplyDelete
 5. வலைச்சர டிவியில் செய்திகளே இவ்ளோ அசத்தலாயிருக்குன்னா, மற்ற நிகழ்ச்சிகள் இதை மிஞ்சிடும்போல!!

  ReplyDelete
 6. புதிய ஆசிரியராக பெறுப்பேற்றுக்கொண்டுள்ள அமைதிச்சாரல் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அறிமுகப்படுத்தும் பணியை இனிதே துவக்கி உள்ளீர்கள். அறிமுகம் செய்யப்பட்ட பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. வாங்க ராமலஷ்மி,

  சே.குமார்,

  ஹுஸைனம்மா..

  எல்லோருக்கும் நன்றிப்பா..

  ReplyDelete
 8. valaichara asiryararuku valthukkal

  ReplyDelete
 9. வாங்க பாரத்.. பாரதி,

  ஹைய்யோ.. ஹைய்யோ!! :-)))

  பதிவர்கள் இல்லப்பா.. பதிவி. அதாவது மீ ஒன்லி :-)))))))))

  நன்றி.(டெம்ப்ளேட் பின்னூட்டத்தை தடைசெய்யறமாதிரி ஒரு சாஃப்ட்வேர் கண்டுபிடிக்கக்கூடாதா ஆண்டவா:-))

  ReplyDelete
 10. ஆசிரியர் அமைதிச்சாரல் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. சிறப்பான அறிமுகங்கள் வித்தியாசமான ஸ்டைலில்....

  தொடர்ந்து அமைத்திச்சாரல் தென்றலாய் வீசட்டும்....
  இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
  நன்றி

  ReplyDelete
 12. வாழ்த்துக்கள் சகோ

  விஜய்

  ReplyDelete
 13. வாழ்த்துக்கள் அமைதிச்சாரல். தலைப்புச் செய்திகள் விருவிருப்பாய் அமைந்தது.. தொடர்ந்து அசத்துங்கள்....

  ReplyDelete
 14. வாங்க லஷ்மி,

  மாணவன்,

  விஜய்,

  வெங்கட் நாகராஜ்..

  அனைவருக்கும் நன்றி.

  ReplyDelete
 15. அருமையான ஆரம்பம்.செய்திகளை தினமும் படிக்க ஆவல்,அசத்துங்க அமைதிச்சாரல்.

  ReplyDelete
 16. ஆரம்பமே அட்டகாசமா இருங்கக்கா.. சாந்தியக்கா டிவி ஆரம்பிச்சிருக்காங்கடோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்..... இனிமே எந்த சேனலும் பாப்புலாராக முடியாது.. அதுனால எட்டுப்பட்டி சனங்களுக்கு தெரிவிக்கிறது என்னன்னா.. எல்லோரும் சாந்தியக்கா டிவிய பாருங்கோ சாமியோவ்வ்வ்வ்வ்வ்..
  நா நாலு இடத்துக்கு போகணும்.. வரேன் சாமியவ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 17. ஆரம்பமே, அமர்க்களம்.....தொடருங்கள்.......

  ReplyDelete
 18. வாழ்த்துகள்

  ReplyDelete
 19. வலைச்சர வாழ்த்துகள்...அமைதிச்சாரல்!! :-)

  ReplyDelete
 20. தலைப்புச் செய்திகள் அட்டகாசம்.
  ஒரு கதை அட்ட அட்ட காசம்!!!

  வலச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!!
  அசத்துங்க!!

  ReplyDelete
 21. வாழ்த்துக்கள் அமைதிச்சாரல்...

  ReplyDelete
 22. வாங்க புதுகைத்தென்றல்,

  ஆசியா,
  ஸ்டார்ஜன்,
  நித்திலம் சி.முத்து,
  அரசன்,
  சந்தனமுல்லை,
  நானானிம்மா..

  உங்கள் அனைவருடைய வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 23. அமைதிச்சாரல் வருக! வருக!!!

  ReplyDelete
 24. வாங்க பாலாசி,

  சிரிப்பு போலீஸ்,

  வானதி..

  வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  தினமும் வரணும் சொல்லிட்டேன் :-))

  ReplyDelete
 25. அன்பின் அமைதிச் சாரல் - அழகான சுய அறிமுகம் - பல இடுகைகள் - அத்தனையும் படித்துவிட்டு - அங்கே மறுமொழிகள் இட்டு விட்டு - இங்ஏ வருகிறேன். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 26. புது வருடத்தில் பொறுப்பான பணி.தொடருங்கள் தோழி.வாழ்த்துகள் !

  ReplyDelete
 27. //வருடத்தின் சிறப்பான சிறுகதையாக, 'ஒரு கதை' தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது//

  சொல்லவே இல்ல

  ReplyDelete
 28. ஆரம்பமே அமர்க்களம்..:)))

  ReplyDelete
 29. வாங்க சீனா ஐயா,

  உங்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

  வாங்க ஹேமா,

  இனிமையான பொறுப்புப்பா :-)))

  வாங்க நசரேயன்,

  எனக்குமே இப்பத்தான் தெரிஞ்சுது :-)))

  வாங்க ஆனந்தி,

  ரொம்ப நன்றிப்பா.

  ReplyDelete
 30. அனைத்தும் அங்கே படித்து விட்டேன் - மறுமொழிகளும் இட்டாயிற்று - கவிதைகளை ரசித்தேன் - மறு மொழி .....ம்ம்ம்ம்ம் - நல்ல அறிமுகம் - தேர்ந்தெடுக்கப்பட்ட இடுகைகள் அத்தனையும் அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 31. ஜெய்லானி டீவி ஒரு வாரம் லீவு...சாரல் டீவியில முதல் நியூஸ் ஓக்கே....!! கலக்குங்க :-)))))))

  ReplyDelete
 32. வாங்க சீனா ஐயா,

  உங்க வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் ரொம்ப நன்றி.

  ReplyDelete
 33. வாங்க ஜெய்லானி,

  நன்றி :-))

  ReplyDelete
 34. புதுவருடத்தில் முதல் பூவாய் பூத்த வலைச்சர ஆசிரியர் அமைதிச்சாரலுக்கு வாழ்த்துக்கள்!

  செய்திகள் அருமை.

  ReplyDelete
 35. வாங்க கோமதிஅரசு அம்மா,

  வாழ்த்துக்களுக்கு நன்றி.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது