07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, January 23, 2011

சென்று வருக கார்த்திக் - பொறுப்பேற்க வருக முகிலன்

அன்பின் சக பதிவர்களே !


இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற நண்பர் கார்த்திக் - ஏற்ற பொறுப்பினை நிறைவாகச் செய்து, மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் ஏழு இடுகைகள் இட்டு ஏறத்தாழ இருநூற்று ஐம்பதுக்கும் மேலாக மறுமொழிகள் பெற்றிருக்கிறார். இவர் முப்பத்தி ஆறு இடுகைகளை - பல்வேறு துறைகளில் அறிமுகப் படுத்தி இருக்கிறார்.

கார்த்திக்கை நல்வாழ்த்துகள் கலந்த நன்றியுடன் விடை கொடுத்து வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.

அடுத்து நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க வருகிறார் நண்பர் முகிலன். இவரது இயற்பெயர் தினேஷ்குமார். விருதுநகரில் பிறந்து, அருப்புக்கோட்டையில் வளர்ந்து, மதுரையில் கல்வி பயின்றவர். இப்போது வாசம் செய்வது ரோச்சஸ்டர் : நியூ யார்க் : United States. முதுகலைக் கணினிப் பயன்பாட்டியல் பயின்ற இவர் இப்போது திட்ட மேலாளராக மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். முகிலனின் பிதற்றல்கள், கிரிக்கெட் பிதற்றல்கள் என்ற தனி வலைப்பூக்களிலும், வருங்கால முதல்வர் என்ற குழு வலைப்பூவிலும் எழுதி வருகிறார்.

நண்பர் முகிலனை பொறுப்பேற்க வருக வருக ! பதிவர்களை அறிமுகப் படுத்த வருக ! என வரவேற்று நல்வாழ்த்துகளைக் கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் கார்த்திக்
நல்வாழ்த்துகள் முகிலன்
நட்புடன் சீனா

4 comments:

 1. சோதனை மறுமொழி

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் எல்.கே.

  வாருங்கள், முகிலன்.. வருக வருக .. நல்ல விதமாக எழுத வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 3. முகிலன்... இப்போதான் வலைச்சரத்துல எழுதுறீங்களா...? ஆச்சர்யமா இருக்கு... ஒருவேளை ரெண்டாவது ரவுண்டா...?

  ReplyDelete
 4. ம்ம்ம் பட்டைய கிளப்புங்கள் முகிலனே

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது