07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, January 30, 2011

சென்று வருக முகிலன் : பொறுப்பேற்க வருக மலிக்கா

அன்பின் சக பதிவர்களே


இன்றுடம் முடியும் வாரத்திற்கு, ஆசிரியப் பொறுப்பேற்ற அருமை நண்பர் முகிலன், தான் ஏற்ற பொறுப்பினைச் சரிவர செய்து, மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் ஒரு வாரத்தில், ஏழு இடுகைகள் பல்வேறு தலைப்புகளில் இட்டு, 65 இடுகைகளை அறிமுகப்படுத்தி, 75 மறுமொழிகள் பெற்றிருக்கிறார். ஒவ்வொரு நாளும் கிரிக்கெட்டினை அடிப்படையாக வைத்து - அதில் இருந்து சில கருத்துகளைக் கூறி விட்டு, பிறகு தன்னைக் கவர்ந்த இடுகைகளை அறிமுகப் படுத்திய விதம் நன்று.

நண்பர் முகிலனை, நல்வாழ்த்துகள் கலந்த நன்றியுடன் விடை கொடுத்து, வழி அனுப்புவதில் பெருமை அடைகிறோம்.

நாளை துவங்கும் வாரத்திற்கு, பொறுப்பேற்க வருகிறார் அருமைச் சகோதரி மலிக்கா. இவர் தஞ்சையில் பிறந்து, திருவாரூரில் வளர்ந்து, துபையில் வசிக்கிறார். பள்ளிப் படிப்பு பாதியில் நின்ற போதும், தமிழ் மீது கொண்ட தீராக்காதலினால், பதிவுகள் ஆரம்பித்து, பல் வேறு தலைப்புகளில் எழுதி வருகிறார்.

இனிய பாதையில் என்ற பதிவினில், இருளை அகற்றி சிறு ஒளியைத் தேடும் ஆன்மாவின் பயணமாக ஆன்மீகத்தினைப் பற்றி எழுதுகிறார்.

கலைச்சாரல் என்ற பதிவினில், எண்ணங்களில் உதித்த கைவண்ணங்களை, சமையல் குறிப்புக்ளை எழுதுகிறார்.

நீரோடை என்ற பதிவினில், ஆன்மாவைத் தெளிவாக்கும் விதமாக, எண்ணங்களைத் தெளிந்த நீராக ஓட விடுகிறார்.

பதினெட்டு மாதங்களாக, மூன்று பதிவுகளிலும், ஏறத்தாழ 450 இடுகைகள்- பல்வேறு தலைப்புகளில் இட்டிருக்கிறார். பின்தொடரும் பதிவர்களூம் அதிகம்.

இவர் காதல் கவிதைகள் அதிகம் எழுதி இருக்கிறார். துபையில் இருக்கும் பன்னாட்டு இலக்கிய இஸ்லாமிய கழகத்தின் மகளீர் அணிச் செயலராக இருக்கிறார். பல மேடைகளில் இவரது கவிதைகள் வாசிக்கப்படுகின்றன. பல்வேறு இதழ்களில் இவரது கவிதைகள் வெளி வருகின்றன. விரைவில் இவரது படைப்புகள் புத்தகமாக வெளி வர இருக்கின்றன. பல்வேறு விருதுகள் வாங்கி இருக்கிறார்.

அன்புச் சகோதரி மலிக்காவினை வருக ! வருக ! அறிமுகங்களை அள்ளித் தருக என அன்புடன் நல்வாழ்த்துகள் கூறி வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.

நல்வாழ்த்துகள் முகிலன்
நல்வாழ்த்துகள் மலிக்கா

நட்புடன் சீனா

20 comments:

 1. சோதனை மறுமொழி

  ReplyDelete
 2. பாராட்டுக்கள் முகிலன்!
  வாழ்த்துக்கல் கவிஞர் மலிக்கா!

  ReplyDelete
 3. வாங்க, வந்து ஜமாயுங்கள் மலிக்கா!

  ReplyDelete
 4. ஒரு வாரத்தில் நல்ல பல பதிவர்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி முகிலன்.

  இந்த வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பு - வாழ்த்துகள் மலிக்கா! அசத்துங்கள்!

  ReplyDelete
 5. மலிக்கா வாருங்க.... வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. vaangka vaangka malli vanthu asaththungka. vaazththukkaL.

  ReplyDelete
 7. பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் கவிஞர் மலிக்கா அக்கா

  ReplyDelete
 8. வலைச்சரம் தன்னில் வளைக்கரம் தீட்டும்
  கலைகள் வளர கடவுள் துணைநிற்க
  பெண்ணினம் பாரில் பெருமிதம் பெற்றிட
  அண்ணன் மகிழ்ந்திடும் நாள்.

  ReplyDelete
 9. நன்றி முகிலன்... வாங்க மலிக்கா...

  ReplyDelete
 10. வலைச்சரத்தில் ஒரு வாரகாலமாக சிறப்பாக பணியாற்றி விடைபெறும் நண்பர் முகிலனுக்கு பாராட்டுகளும் நன்றிகளும்....

  ReplyDelete
 11. இந்த வாரம் பொறுப்பேற்க வரும் மலிக்கா மேடத்தின் வருகை இனிதாகுக.

  தொடர்ந்து பல புதியவர்கள் மற்றும் சிறப்பான பதிவுகளை அறிமுகங்களை செய்து வலைச்சரத்தில் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.....

  ReplyDelete
 12. பாரட்டுகள் தினேஷ், வாழ்த்துக்கள் மலிக்கா ,

  ReplyDelete
 13. மல்லி வாழ்த்துக்கள் தூள் கிளப்புங்க வாங்க..

  ReplyDelete
 14. அன்பின் சீனா சார் அவர்களுக்கும்.
  என்னை ஊக்கப்படுத்த கருதுக்களென்னும் அன்பை பொழிந்து எனக்கு உற்சாகத்தை தரும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..

  ReplyDelete
 15. அன்பான கவிஞர் மலிக்கா! எனது பாசத்திற்குறிய சகோதரி!, வாழ்த்துக்கள் அக்கா!, தங்களின் பொறுப்பிற்கு..

  ReplyDelete
 16. பாராட்டுக்கள் முகிலன்...!!

  வாழ்த்துக்கள்...வருக...வருக....கவியரசியே.. :-/

  ReplyDelete
 17. நல்வாழ்த்துகள் முகிலன்
  நல்வாழ்த்துகள் மலிக்கா

  ReplyDelete
 18. //isaianban said...
  அன்பான கவிஞர் மலிக்கா! எனது பாசத்திற்குறிய சகோதரி!, வாழ்த்துக்கள் அக்கா!, தங்களின் பொறுப்பிற்கு..//

  மிக்க மகிழ்ச்சி தம்பி. தாங்களின் வருகைகும் அன்பான வாழ்த்துக்கும்..மிக்க நன்றி

  ReplyDelete
 19. ஜெய்லானி said...
  பாராட்டுக்கள் முகிலன்...!!

  வாழ்த்துக்கள்...வருக...வருக....கவியரசியே
  //

  வந்து மூனு நாளாச்சி இப்பபோய் வருக வருகவா. [நல்லாபாருங்கோ நான் எப்ப வரவேற்றதுன்னு ஹி ஹி]

  தாங்களின் வருகைகும் அன்பான வாழ்த்துக்கும்..மிக்க நன்றி அண்ணாத்தே

  ReplyDelete
 20. Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...
  நல்வாழ்த்துகள் முகிலன்
  நல்வாழ்த்துகள் மலிக்கா//

  தாங்களின் வருகைகும் அன்பான வாழ்த்துக்கும்..மிக்க நன்றி வாசன்..

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது