07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label * அறிமுகம். Show all posts
Showing posts with label * அறிமுகம். Show all posts

Sunday, September 6, 2015

சுமிதா ரமேஷிடமிருந்து ஆசிரியர் பொறுப்பை ரிஷபன் ஏற்கிறார்...

வணக்கம் வலை நண்பர்களே...

இன்றுடன் முடிகிற வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்று இருந்த "சுமியின் கிறுக்கல்கள்"எனும் வலைப்பூ பதிவர் சுமிதா ரமேஷ் அவர்கள் தனது பணியை ஆர்வமுடனும், மிகுந்த பொறுப்புடனும் புதுப்புது பதிவர்களை அறிமுகம் செய்தும், வாசகர்கள் கவரும் விதமாக எழுதி முடித்துள்ளார். 

மொத்தம் ஒன்பது பதிவுகள் எழுதி 225-க்கும் அதிகமாக மறுமொழிகள் பெற்றும், சுமார் 1800 பக்கப்பார்வைகளுக்கும் அதிகமாக பெற்றும் உள்ளார். அவரை "சென்று வருக..." என வாழ்த்தி வழியனுப்புவதில் வலைச்சரக்குழு பெருமகிழ்ச்சியடைகிறது.

நாளை முதல் துவங்கும் வலைச்சர வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்க "ரிஷபன்" வலைப்பூ பதிவர் ஸ்ரீநிவாசன் என்ற ரிஷபன் அவர்கள் ஆர்வமுடன் இசைந்துள்ளார். 

திருச்சி மாநகரத்தில் வசிக்கும் ரிஷபன் சுமார் 1000 க்கும் மேற்பட்ட சிறுகதைகளை புத்தகங்களாக எழுதியுள்ளார்.. அவரின் 11 தொகுப்புகள் இதுவரை வெளியாகியுள்ளன.
மேலும் 3 மின்னூல்கள் பிரசுரம் செய்துள்ளார்..

அவரது சிறுகதை தொகுப்புகள் பல பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. அதன் விவரங்கள்
திருச்சி மாவட்ட நலப்பணி நிதிக்குழு நடத்திய போட்டியில்(2003) துளிர் முதல் சிறுகதைத் தொகுப்பே முதல் பரிசு பெற்றது..
அதே அமைப்பு நடத்திய போட்டியில் (2008) பனி விலகிய நேரம் சிறுகதைத் தொகுப்பிற்கு மீண்டும் முதல் பரிசு கிடைத்தது.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நடத்திய மாநில அளவிலான போட்டியில் சூர்யா சிறுகதைத் தொகுப்பு 3ம் பரிசு பெற்றது.

இலக்கிய சிந்தனைப் போட்டியில் இரண்டு முறை மாதப் பரிசு.

"ஏன் " சிறுகதை (இலக்கிய சிந்தனைப் பரிசு) பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு இந்திய-ப்ரெஞ்ச் கூட்டமைப்பின் காலாண்டு இதழில் பிரசுரம்.

சாவி, ராஜம் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசுகள்.. 

கல்கி வைர விழாப் போட்டியில் மூன்றாம் பரிசு.இன்னும் பல பரிசுகள்.

கவிதைகளுக்கு தொடர்ந்து 3 முறை திருச்சி இலக்கிய வட்டத்தில் முதல் பரிசு.

இவ்வளவும் சாத்தியமானது நட்பும் உறவும் அளிக்கும் இடைவிடாத உற்சாகத்தால் மட்டுமே என சிலாகிக்கிறார். 

ரிஷபன் அவர்களை ஆசிரியர் பொறுப்பில் அமர்த்தி வருக.. வருக... என வரவேற்பதில் வலைச்சரக்குழு பெருமகிழ்ச்சியடைகிறது.

நல்வாழ்த்துக்கள் சுமிதா ரமேஷ்,
நல்வாழ்த்துக்கள் ரிஷபன்.

நட்புடன்,
தமிழ்வாசி பிரகாஷ்...

மேலும் வாசிக்க...

Sunday, August 30, 2015

நேசன் சென்று வருக... குஷி பண்பலை ஆர்.ஜே. சுமிதா ரமேஷ் வருக.. வருக..


வணக்கம் வலை நண்பர்களே...

இன்றுடன் முடிகிற வலைச்சர வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்று இருந்த "தனிமரம் நேசன்" அவர்கள் மிகுந்த ஆர்வமுடனும், பொறுப்புடனும் தமது பொறுப்பை நிறைவேற்றியுள்ளார்.

மொத்தம் ஏழு பதிவுகள் எழுதிய அவர் 230-க்கும் மேலே மறுமொழிகள் பெற்றும், சுமார் 1200 பக்கப்பார்வைகளுக்கும் மேலே பெற்றும் உள்ளார். அவரை "சென்று வருக..." என வாழ்த்தி வழியனுப்புவதில் வலைச்சரக்குழு பெருமகிழ்ச்சியடைகிறது.

நாளை முதல் துவங்கும் வலைச்சர வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்க "சுமியின் கிறுக்கல்கள்" எனும் வலைப்பூ பதிவர் சுமிதா ரமேஷ் அவர்கள் ஆர்வமுடன் இசைந்துள்ளார். 

இவரப் பற்றி சொல்வதென்றால் சுமார் பதினைந்து வருடங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் கணவருடனும், இரு குழந்தைகளுடனும் வசித்து வருகிறார். கணினி பட்டதாரியான சுமிதா ஆரம்ப காலங்களில் ஆசிரியராக பணியாற்றியவர். தனது பேச்சுத் திறமையால் துபாயில் நடைபெற்ற விசுவின் அரட்டை அரங்கம் நிகழ்ச்சியில் விசு ஐயாவிடமிருந்து "பப்ளிக் ஸ்பீக்கிங்ல் சிறந்தவர்" என்ற பாராட்டைப் பெற்றுள்ளார். இவ்வாறு பேச்சாற்றலில் சிறந்து விளங்கிய இவர் பின்னர் குஷி பண்பலை 24 x 7 இணைய வானொலியில் ஆர்.ஜே வாக சேர்ந்து தனது கணவருடன் இணைந்து வீட்டுக்கு வீடு வாசப்படி என்ற நிகழ்ச்சியை வழங்கியுள்ளார். பின்னர் பலப் பல நிகழ்ச்சிகள் வழங்கியும், அதன் பலனாக நிகழ்ச்சி மேலாளராகவும் பணியாற்றி உள்ளார். தற்போது தொடர் பணிக்கு ஓய்வளித்து விட்டு ஆர்.ஜே வாக மட்டும் பணியாற்றி வருகிறார். 

வலைப்பதிவராக, வலைச்சாகரத்தில் சமீபத்தில் இணைத்துக்கொண்ட சுமிதா ரமேஷ் முக நூல் பதிவராகவும் பல கட்டுரைகளை எழுதிவருகிறார். மேலும் கவிதை , கட்டுரைகள் , கதைகள் , விமர்சனங்கள் என்ற விசாலப்பார்வையை விரிவுப்படுத்தியப்படியே எழுத்தார்வத்துடன் வலம் வருகிறார்.

சுமிதா ரமேஷ் அவர்களை ஆசிரியர் பொறுப்பில் அமர்த்தி வருக.. வருக... என வரவேற்பதில் வலைச்சரக்குழு பெருமகிழ்ச்சியடைகிறது.

நல்வாழ்த்துக்கள் நேசன்,
நல்வாழ்த்துக்கள் சுமிதா ரமேஷ்.

நட்புடன்,
தமிழ்வாசி பிரகாஷ்...
மேலும் வாசிக்க...

Sunday, August 16, 2015

S.P. செந்தில்குமார் விடைபெற்று, சுந்தரி கதிர் பொறுப்பில் இந்த வார வலைச்சரம்...!

வணக்கம் வலைச்சர நண்பர்களே...
இன்றுடன் முடிகிற வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்றிருந்த தினத்தந்தி பத்திரிக்கை கட்டுரையாளர் கூட்டாஞ்சோறு வலைப்பதிவர்  S.P. செந்தில் குமார், தமது வலைச்சர வாரத்தை மிகுந்த பொறுப்புடனும், ஆர்வத்துடனும், அனைவரையும் தன் பதிவுகள் பால் ஈர்க்கும் வண்ணம் எழுதி முடித்துள்ளார்.

மொத்தம் ஆறு பதிவுகள் எழுதிய அவர் 300-க்கும் மேலே மறுமொழிகள் பெற்றும், சுமார் 1500 பக்கப்பார்வைகளுக்கும் மேலே பெற்றும் உள்ளார். அவரை "சென்று வருக..." என வாழ்த்தி வழியனுப்புவதில் வலைச்சரக்குழு பெருமகிழ்ச்சியடைகிறது.

நாளை முதல் துவங்கும் வலைச்சர வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்க "சுந்தர நேசங்கள்" எனும் வலைப்பூ பதிவர் சுந்தரி கதிர் அவர்கள் ஆர்வமுடன் இசைந்துள்ளார். 

அவரைப் பற்றி சொல்வதென்றால் மதுரையில் பிறந்து கோவையில் வசித்து வருகிறார். கவிதை எழுதுவதும், புத்தகங்கள் வாசிப்பதும் அவரது பொழுது போக்காக இருந்தாலும், பல் மருத்துவம் படித்து முடித்து மருத்துவ மேலாண்மையராக உள்ளார். சென்ற வருடம் நவம்பர் மாதத்தில் தனது வலைப்பூவை ஆரம்பித்து எழுதும் அவர் இதுவரை 1392 பதிவுகள் எழுதியுள்ளது மிகவும் மலைப்பாகத் தான் உள்ளது. வலைச்சர ஆசிரியராய் பொறுப்பு, புது வித தாய்மொழி தேடல் அனுபவமாய் அமையும் என மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்.

சுந்தரி கதிர் அவர்களை ஆசிரியர் பொறுப்பில் அமர்த்தி வருக.. வருக... என வரவேற்பதில் வலைச்சரக்குழு பெருமகிழ்ச்சியடைகிறது.

நல்வாழ்த்துக்கள் S.P. செந்தில் குமார்,
நல்வாழ்த்துக்கள் சுந்தரி கதிர்.

நட்புடன்,
தமிழ்வாசி பிரகாஷ்...
மேலும் வாசிக்க...

Sunday, August 2, 2015

வலைச்சரத்தில் தமிழ் விருந்து தந்து விடைபெறுகிறார் சாமானியன் சாம், தமிழ் அமுது மரபுக் கவி மழையாய்! பொழிய வருகிறார்! கவிஞர் கி.பாரதிதாசன்



நண்பர்களே! நல்வணக்கம்!

இந்த வார வலைச்சரம் ஆசிரியப் பணியை அழகுற நிறைவு செய்யும் ‘சாமானியனின் கிறுக்கல்கள் வலைஞர், சாமானியன் சாம் அவர்கள் மிகவும் திறம்பட,  பயனுள்ள பல பதிவுகளை பகிர்ந்தளித்து, பலதரப்பட்ட  சிறந்த பதிவர்களை நமக்கெல்லாம் அறிமுகம் செய்து வைத்து, வலைச்சரத்திற்கு மேலும்  சிறப்பினை சேர்த்தமைக்காக ! அவருக்கு, வலைச்சரம் குழு நன்றி கலந்த பாராட்டுக்களை வழங்குகிறது.

அவரது சிறப்பினை சீர்த்தூக்கிப் பார்க்கும் நன்மதிப்பு பட்டியல் இதோ!





சாமானியன் சாம் உங்களிடமிருந்து,

276 க்கும் மேற்பட்ட மறுமொழிகளும்,

 61 - தமிழ் மணம் வாக்குகளையும்,

1435 - க்கும்மேற்பட்ட பக்கப்பார்வைகளும் இதுவரையில் பெற்றுள்ளார்.



தமது, வலைச்சர வாரத்தை, வலைஞர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில், அவரது அருந்தமிழ் பணியை நமக்கெல்லாம்  பகிர்ந்தளித்து நமது நம்பிக்கையை பெற்று விடை பெறுகிறார். 
நண்பர் சாமானியன் சாம்  அவர்களை,

நன்றி பாராட்டி, வாழ்த்தி வழியனுப்புவதில் 'வலைச்சரக் குழு' பெரு மகிழ்ச்சியடைகிறது.




நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்க....  கவிஞா் கி. பாரதிதாசன்     விருப்பம் தெரிவித்து முன்வந்துள்ளார்.



மூப்பைத் தீண்டா யாப்பை யளிக்கும்
யாப் பெருங்கலக் காரிகை -நூற்பா
கோர்க்கும் கோப் பெருங் கவியேநீ!
வார்க்கும் கவி மரபு!



புதுவையில் பிறந்தவர்!

பிரான்சு நாட்டில் வாழ்பவர்!


தனித்தமிழ்

தமிழ்மொழி காப்பதுவும் பரப்புவதும்

தமிழின முன்னேற்றம்
முக்கொள்கையைக் கொண்டு இயங்குபவர்!

பிரான்சு கம்பன் கழகத்தின் தலைவர்

மரபுக் கவிஞர்

இலக்கண ஆசிரியர்

சொற்பொழிவாளர்


எனப் பன்முகம் படைத்த

இவ்வாரம் 'வலைச்சரத்தை'க் கவிச்சரமாய் மின்ன  ஆசிரியராக

பொறுப்பேற்கிறார்.

தமிழ்ப் பணி செய்வதில் தனி ஆர்வமிக்க நன்னூல்  வழி காட்டும் நன்னெறியாளர்

 "கவிஞர் கி.பாரதிதாசன்" அவர்களை,
இந்த வாரம் வலைச்சரம் ஆசிரியராக  "வருக... வருக..." என அழைத்து ஆசிரியர் பொறுப்பில் அமர்த்துவதில், வலைச்சரக்குழு பெருமகிழ்ச்சி அடைகிறது

நல்வாழ்த்துகள் சாமானியன் சாம்

நல்வாழ்த்துகள் கவிஞர் கி.பாரதிதாசன்

நட்புடன்,
புதுவை வேலு

மேலும் வாசிக்க...

Sunday, July 26, 2015

சாமானியனிடம் ஆசிரியர் பொறுப்பை தந்து மகிழ்வோடு விடை பெறுகிறார் மெக்னேஷ் திருமுருகன்.


வலைச்சரம் நண்பர்களே! நல்வணக்கம்!

இன்றுடன் இரண்டு வாரம் ஆசிரியப் பணியை அழகுற நிறைவு செய்யும்  "விமர்சன உலகம்" வலைப் பூ பதிவர் மெக்னேஷ் திருமுருகன் அவர்கள் மிகவும் திறம்பட, பயனுள்ள பல பதிவுகளை பகிர்ந்தளித்து, பலதரப்பட்ட  சிறந்த பதிவர்களை நமக்கெல்லாம் அறிமுகம் செய்து வைத்து, வலைச்சரத்திற்கு மேலும்  சிறப்பினை சேர்த்தமைக்காக ! அவருக்கு, வலைச்சரம் குழு நன்றி கலந்த பாராட்டுக்களை வழங்குகிறது.
அவரது சிறப்பினை சீர்த்தூக்கிப் பார்க்கும் நன்மதிப்பு பட்டியல் இதோ!
மெக்னேஷ் திருமுருகன் உங்களிடமிருந்து,

145- க்கும் மேற்பட்ட மறுமொழிகளும்,
 64 - தமிழ் மணம் வாக்குகளையும்,
1870- க்கும்மேற்பட்ட பக்கப்பார்வைகளும் பெற்றுள்ளார்.

தமது, வலைச்சர வாரத்தை  மிகவும் சிறப்பாக வழங்கிய  நண்பர் மெக்னேஷ் திருமுருகன் அவர்களை நன்றி பாராட்டி,  வாழ்த்தி வழியனுப்புவதில் 'வலைச்சரக் குழு' பெரு மகிழ்ச்சியடைகிறது.

நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்க....   "சாமானியனின் கிறுக்கல்கள்! " வலைப்பூவில் சாமானியன் சாம் என்ற புனைப் பெயரில் எழுதிவரும்  நமது நண்பர் விருப்பம் தெரிவித்து முன்வந்துள்ளார்.


இவர்,  பூம்பொழில் நகராம் 'புதுவை' பிரதேசத்தைச் சார்ந்த, காரைக்கால் நகரில் பிறந்து வளர்ந்து,  தற்பொழுது பிரான்ஸ் தேசத்தில் வாழ்ந்து வருகிறார்
கண்ணின் கண்மணிகளாக இரு பிள்ளைகள் இவருக்குண்டு!

2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து வலைப்பூவில் எழுதி வருகிறார்.

வசிகர எழுத்தினால், வலைப்பூவில் இவரால் வரையப் பெறும் கோலங்கள் யாவும், வாசகர் மனதை விட்டு அகலாத 'அழியாதக் கோலம்' என்றே சொல்லலாம்.

கிறுக்கல்கள் என்று இவரால் சொல்லப்படும் எழுத்துக்கள் எல்லாம் வாசகர்களின் அன்பின் பெருக்கல்களாக அழகு சேர்க்கின்றன!

மிக இளவயதில், முத்தாரம், கல்கண்டு, சூப்பர் நியூஸ் போன்ற இதழ்களுக்கு துணுக்குகள், சிறு கட்டுரைகள்  எல்லாம் எழுதிய எழுத்தாளராகவும் திகழ்ந்துளார்.

வாழ்க்கையின் எந்த சூழலிலும் மனிதநேயத்தை மறக்காமல் வாழ முயற்சித்துக்கொண்டிருக்கும்  நன்னெறி மிக்கவர்.

பிரான்ஸ் தேசத்தில் "ACLI" (Association culturelle pour le continuum de langues Indiennes) சங்கத்தின் இளநிலை செயலாளராக இருந்து மக்கள் நலப் பணியை செய்து வருகிறார்

மேலும், கண்ணில் கண்ட எந்த  நல்ல நூலையும் வாசித்துவிடும் புத்தகப் பிரியர். மதம், இனம், மொழி இவற்றுக்கு அப்பாற்பட்ட மிக நல்ல மனிதர்.

இவரது ஒவ்வொரு பதிவை படிக்கும்போதும், நமது நினைவுகளை மீட்டெடுக்கும் மீள் சக்தி அல்லது மின்காந்த சக்தி இவரது எழுத்தில் உண்டு என்பதை பதிவை  படித்தவர்கள் நன்கறிவர்.

எனது குழலின்னிசை  வலைப் பூ இவரது மூச்சுக் காற்று பட்டுத்தான் முதன்முதலில் இதழ் விரித்து மலர்ந்து  இன்னமும் மணம் வீசி வருகிறது.

தமிழ்ப் பணி செய்வதில் தனி ஆர்வமிக்கவர்.

இப்படி எண்ணற்ற தகுதிகளை உடைய  இந்த பதிவரை
 "சாமானியன்" அவர்களை,
இந்த வாரம் வலைச்சரம் ஆசிரியராக  "வருக... வருக..." என அழைத்து ஆசிரியர் பொறுப்பில் அமர்த்துவதில், வலைச்சரக்குழு பெருமகிழ்ச்சி அடைகிறது.

நல்வாழ்த்துக்கள் மெக்னேஷ் திருமுருகன்...

நல்வாழ்த்துக்கள் சாமானியன்...


நட்புடன்,
புதுவை வேலு
மேலும் வாசிக்க...

Sunday, July 5, 2015

"தளிர் சுரேஷ் வசம் பொறுப்பை தந்து விடைபெறுகிறார்! கார்த்திக் புகழேந்தி"

அன்பின் சக பதிவர்களே!  இன்றுடன் இனிதே முடிவுறும்  வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்று
சில பதிவர்களையும், அவர்களது சிறப்பான பதிவுகளையும் அறிமுகப்படுத்திய  வலையுலக நண்பர் கார்த்திக் புகழேந்தி
அவர்களை பாராட்டி வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

அவர் தனது வலைச்சர வாரத்தில் மனதைத் தொட்ட பதிவர்களின் இடுகைகள்  பலவற்றை  நமக்கெல்லாம் பகிர்ந்தளித்து,
சுமார்
125 - மேற்பட்ட மறுமொழிகளும்
45  - தமிழ் மணம் வாக்குகளையும்,
1690  - மேற்பட்ட பக்கப்பார்வைகளும் பெற்றுள்ளார்.
"ஒரு பதிவை வாசித்து முடித்தபின் அது ஏற்படுத்தும் உணர்வுகள் !
ஒரு படைப்பாளிக்கு மிகவும் இன்றி அமையாதது ஆகும்.
அவ்வுணர்வுகள் ஆக்க வழி நிற்கையில்,
படைப்பாளியும்,  படிப்போர் மனதில் நிற்கிறார்."
வலையுலகின் மூத்த பதிவரும், இசையோடு இசைந்தே வாழ்பவருமான திரு சுப்பு தாத்தா (சூரி சிவா) அவர்களின் கருத்திற்கேற்ப,
நண்பர் கார்த்திக் புகழேந்தி அவர்களும்அவரது படைப்புகளும் வற்றாத ஜீவ நதியாய் வாசகர் மனம் என்னும் தேசத்தில் வளங்கொழிக்கும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை!
தனது வலைச்சர வாரத்தை அழகாக தொடுத்த  கார்த்திக் புகழேந்தி அவர்களை! வாழ்த்தி! வழியனுப்புவதில் வலைச்சரக் குழு பெருமகிழ்ச்சியடைகிறது.
நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்க வலைப் பதிவாளர் திரு தளிர் சுரேஷ் அவர்கள் அன்புடன் இசைந்துள்ளார்.
இவரது வலைப்பூ  'தளிர்’என்பதாகும்.
இவரது இயற்பெயர் சா. சுரேஷ்பாபு,  வலைப்பூவிற்கென தளிர் சுரேஷ் என்று வைத்துள்ளார்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் காரனோடை அருகே உள்ள நத்தம் கிராமத்தில் வசிக்கும் இவர் படித்தது இளங்கலை வணிகவியல்.
தனியார் பள்ளிகளில் கணித ஆசிரியராக சில காலம் வேலை செய்துள்ளார்.
1999 முதல் 2010 வரை தளிர் கல்வி நிலையம் என்ற டியுசன் செண்டரை இவரது நத்தம் கிராமத்தில் சேவை அடிப்படையில் குறைந்த கட்டணத்தில் நடத்தி வருகிறார். அதில் பயின்ற மாணவர்கள் பள்ளி அளவில் முதல் மதிப்பெண்கள் பெற்று இன்று  நல்ல நிலையில் உள்ளனர் என்பதை பார்க்கும்போது அவரோடு சேர்ந்து வலைச்சரம் குழுவும் மகிழ்ச்சி அடைகிறது.
சிறு வயது முதலே எழுத்தார்வம் அதிகம் உள்ள இவர் பன்னிரண்டு வயதில் எழுதப் பழகினார். ஏழாம் வகுப்பு படிக்கையிலேயே கையெழுத்து பத்திரிக்கைகள் நடத்தி நண்பர்களிடையே சுற்றுக்கு விட்டு வாசகர்களின் பெரும் பாராட்டினைப் பெற்றவர்.
வலையில் 2011 ம் ஆண்டு முதல் "தளிர்! எண்ணங்களை இங்கு எழுத்தோவியமாக" அழகுற வரைந்து பெரும் சிறப்பினை பெற்று வருகிறார்.
தற்சமயம் நத்தம் கிராமத்தில் உள்ளஸ்ரீ காரிய சித்தி கணபதி,
 ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பிகை உடனுறை ஸ்ரீ வாலீஸ்வரர் ஆலயத்தில் கோயில் குருக்களாக பணி புரிகின்றார்.
எழுத்தார்வம் தணியாததால் வலைப்பூவில் எழுதி வருகின்றார்.
 இவரது சில கதைகள், ஜோக்குகள் பாக்யா வார இதழ்கோகுலம் சிறுவர் இதழில் வெளிவந்துள்ளது.  தமிழ்த் தோட்டம் என்ற ஃபொரமில்  தொடர்ந்து நானுற்றுக்கும் மேற்பட்ட ஹைக்கூக்கள் எழுதி பாராட்டினைப் பெற்றுள்ளார். பல்சுவை செய்திகள் எழுதி மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும் என்ற இவரது தணியாத ஆர்வத்திற்கு இரண்டாவது முறையாக வலைசரம் தனது வாசலைத் திறந்து இவரை வரவேற்கின்றது.


தளிர் சுரேஷ் எண்ணத்தின் வண்ணத்தோடுஇவரது மனங்கவரந்த வலைப் பதிவர்கள் பலரும் இனி, இங்கு, இவர்மூலம், அறிமுகமாக உள்ளனர். அவர்களையும் வாழ்த்துக் கூறி வலைசரம் குழு வரவேற்கின்றது.
நட்புடன்,
புதுவை வேலு
மேலும் வாசிக்க...

Saturday, May 30, 2015

மீண்டும் வலைச்சரம் - வை. கோபாலகிருஷ்ணன் (VGK) ஆசிரியர் பொறுப்பேற்கிறார்


வணக்கம் வலைச்சர நண்பர்களே...
நலமா? என கேட்க வேண்டிய சூழ்நிலை...

என்ன செய்ய? சில தவிர்க்க இயலாத காரணத்தால் வலைச்சரம் கடந்த இரு மாதங்களாக நின்று போனது. அப்போது கடைசியாக வலைச்சரத்தை தொடுத்தவர் பதிவர் யாதவன் நம்பி. அவரோடு உங்களுக்கும் வலைச்சரத்துக்கும் உள்ள உறவு நின்று போனது. 

நமது உறவை புதுப்பிக்க, ஆசிரியர் பொறுப்பேற்க மூத்த பதிவர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் மிக மிக ஆர்வமுடன் தாமாக முன் வந்துள்ளார். அவரது பெயரிலேயே "வை. கோபாலகிருஷ்ணன்" என்ற வலைப்பூவை 02-01-2011 முதல் ஆரம்பித்து எழுதி வருகிறார். இவரது வலைப்பூவில் சுமாராக 750 பதிவுகள் எழுதியுள்ளார்.

மனைவியும், மூன்று புதல்வர்களையும் பெற்ற இவர் திருச்சி மாநகரத்தில் வசித்து வருகிறார். BHEL தொழிற்சாலையில் அக்கௌன்ட் ஆபீசராக (cash dept) பணிபுரிந்து ஒய்வு பெற்ற இவர் தன்னைப்பற்றி  ”சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும், என்று மனதில் எப்போதும் நினைப்பவன்” என சொல்கிறார். மேலும் அசாதாரண திறமைகள் பலவும் தன்னுள் கொண்டவராவார். 

வரும் ஜூன் முதல் தேதியிலிருந்து ஆசிரியர் பொறுப்பேற்க இருக்கும் இவர் தொடர்ந்து ஐந்து வாரங்கள் வலைச்சர ஆசிரியராக இருப்பதாக கேட்டுக் கொண்டதால் வலைச்சர விதிமுறையான "வாரம் ஒரு ஆசிரியர்" என்பதை வலைச்சரத்தின் மறுமலர்ச்சிக்காகவும், வாசகர்களுக்காகவும் தளர்த்தி அவருக்கு அனுமதி வழங்கியுள்ளோம்.

வை.கோ அவர்களை ஆசிரியர் பொறுப்பேற்க "வருக.. வருக..." வரவேற்பதில் வலைச்சரக்குழு பெருமகிழ்ச்சி அடைகிறது.

நல்வாழ்த்துக்கள் வைகோ..

பின் குறிப்பு:
வலைச்சரம் நின்று போனதால் பதிவர் தி. தமிழ் இளங்கோ அவர்கள் வலைச்சரம் மீது அக்கறை கொண்டு வலைச்சரம் – ஒரு வேண்டுகோள் என்ற தலைப்பில் அவரது வலைப்பூவில் பதிவு எழுதியுள்ளார். அதில் பலரும் வலைச்சரம் தடைபடாமல் இருப்பதற்காக பல யோசனைகளை பின்னூட்டங்களாக பகிர்ந்துள்ளார்கள். அவர்களுக்கும், பதிவர் தமிழ் இளங்கோ அவர்களுக்கும் வலைச்சரக் குழு மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது. அப்பதிவில் நானும் வலைச்சரம் சம்பந்தமான சில விளக்கங்களை பின்னூட்டத்தில் பதிந்துள்ளேன்.

நட்புடன்,
தமிழ்வாசி பிரகாஷ்...
மேலும் வாசிக்க...

Sunday, March 8, 2015

காயத்ரி தேவி பொறுப்பில் இந்த வார வலைச்சரம்...!

வணக்கம் வலை நண்பர்களே....

இன்று முடிகிற வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்று இருந்த கிரேஸ் பிரதிபா அவர்கள் தமது ஆசிரியர் பொறுப்பை மிகுந்த ஆர்வமுடனும், பொறுப்புடனும், அனைவரும் பாராட்டும் படியாக செய்து முடித்துள்ளார். 

மகளிர் தினத்தை முன்னிட்டு அது பற்றிய வரலாறு செய்திகளை ஒவ்வொரு இடுகையிலும் பகிர்ந்து, அதோடு பதிவர்களையும் சிறப்பாக அறிமுகம் செய்து இந்த வார வலைச்சரத்தை சிறப்பாக முடித்துள்ளார்.  

அவர் தனது வலைச்சர வாரத்தில் ஏழு இடுகைகள் வரை எழுதி 220-க்கும் மேற்பட்ட மறுமொழிகளும்,  1120 பக்கப்பார்வைகளும் பெற்றுள்ளார்.

தனது வலைச்சர வாரத்தை அழகாக தொடுத்த கிரேஸ் பிரதிபா அவர்களை வாழ்த்தி வழியனுப்புவதில் வலைச்சரக் குழு பெருமகிழ்ச்சியடைகிறது.

நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்க "என்னில் உணர்ந்தவை" என்னும் வலைப்பூவை எழுதி வரும் சகோதரி காயத்ரி தேவி அவர்களை அழைக்கின்றேன். அவரைப் பற்றிய அறிமுகம் கேட்கையில் கீழ்க்கண்டவாறு சொல்கிறார்.
""நான் இப்போதைக்கு பி.ஹச்.டி ஸ்காலர், ஒரு வருசத்துல டாக்டர் ஆகிடுவேன்னு நம்புறேன். வீட்ல எனக்குன்னு ரூம்மேட்ஸ் இருக்காங்க, அவங்கள குருவிங்க, மீனுங்கன்னு சொன்னா கோபம் வரும், ஆல் மை செல்லம்ஸ்... ரொம்ப ஊர்சுத்துவேன், அதுக்கு பரிகாரமா இப்ப ரூமுக்குள்ள முடங்கிட்டேன். அப்பா, அம்மா ரெண்டுமே எனக்கு இப்போதைக்கு ஒரே ஆள் தான், கூட ஒரு போட்டியாளர் தம்பி... அன்பையும் அமைதியையும் விரும்புறவ, ஆனா ரொம்ப கோபக்காரி. எழுதுறது பிடிக்கும். அதுவும் நடைமுறை இயல்போட எழுத ரொம்ப பிடிக்கும்... சவாலான விஷயங்கள ஈசியா ஹாண்டில் பண்ணவும் பிடிக்கும். இப்போதைக்கு இவ்வளவு தான்...""

காயத்ரி தேவி அவர்களை வலைச்சர ஆசிரியர் பொறுப்பில் அமர்த்தி "வருக.... வருக.." என வாழ்த்தி வரவேற்பதில் வலைச்சரக்குழு பெருமகிழ்ச்சியடைகிறது.

நல்வாழ்த்துக்கள் கிரேஸ் பிரதிபா...
நல்வாழ்த்துக்கள் காயத்ரி தேவி...

நட்புடன்,
தமிழ்வாசி பிரகாஷ்....

மேலும் வாசிக்க...

Sunday, December 21, 2014

கில்லர்ஜி தமது ஆசிரியர் பொறுப்பை "பெருநாழி" குருனாதனிடம் ஒப்படைக்கிறார்..

வணக்கம் வலைச்சர நண்பர்களே....

இன்று முடிகிற வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்று இருந்த நண்பர் கில்லர்ஜி அவர்கள் தமது வலைச்சரப் பணியை மிகுந்த சிரத்தையுடனும், தீவிர ஆர்வமுடனும் செய்து முடித்துள்ளார். அவரது ஒவ்வொரு இடுகைகளும் அவரது கடும் உழைப்பினை காட்டுகிறது. வாசகர்களுக்கு நிறைய பதிவர்களையும், பதிவுகளையும் அறிமுகம் செய்துள்ளார்.

கில்லர்ஜி மொத்தம் ஒன்பது இடுகைகள் எழுதியுள்ளார். அவரது இடுகைகள் சுமார் 2900 பக்கப்பார்வைகள் பெற்று, சுமார் 740 மறுமொழிகள் வரை பெற்றுள்ளார். அவரை வாழ்த்தி வழியனுப்புவதில் வலைச்சரக்குழு பெருமகிழ்ச்சி அடைகிறது.
கில்லர்ஜியின் இடுகைகள் விவரம் கீழே...

நாளை (22-12-2014) முதல் துவங்கும் வாரத்திற்கு "பெருநாழி" எனும் வலைப்பூவை எழுதி வரும் திரு. குருநாதன் அவர்களை ஆசிரியர் பொறுப்பேற்க அழைக்கின்றேன். ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி எனும் கிராமத்தில் பிறந்த இவர் பணியின் காரணமாக புதுக்கோட்டையில் வசித்து வருகிறார். 
அரசு மேனிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வரும் இவர் தன்னைப் பற்றி கீழ்க்கண்டவாறு சொல்கிறார்.

என்னைப் பற்றி….
            நான் சி.குருநாதசுந்தரம். பட்டதாரித் தமிழாசிரியராக, அரசு மேனிலைப்பள்ளி, ஏ.மாத்தூரில் பணிபுரிந்து வருகிறேன். முதுகலைத் தமிழும், இளங்கல்வியியலும் என்னை ஆசிரியராக்கின.
            நான் பிறந்து தவழ்ந்த இடம் இராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி எனும் குக்கிராமமாகும். பணிநிமித்தம் புதுக்கோட்டை என் வாழ்விடமாயிற்று. என் ஆசிரியப் பணிக்கு மெருகேற்றிய இடமென்று புதுக்கோட்டையைக் கூறலாம். என்னறிவையும் அனுபவத்தையும் வகுப்பறைக்குள் மட்டுமே தேக்கி வைத்திருந்தேன். என் கற்பித்தல் ஆய்வுகளை என் மாணாக்கரிடத்தில் மட்டுமே செயல்படுத்திய குறுகலான சிறிய என் தளத்தில் ஆழ்ந்த அறிவும் அனுபவமும் மிக்க நான்கு மனிதர்கள் என்னை வெளியில் வருமாறு பணித்தார்கள். மதிப்பிற்குரிய அம்மனிதர்க்ள் புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள், கவிஞம் சிறந்த கல்வியாளருமான முத்துநிலவன், சிறந்த நல்லாசிரியர்
          ஐயா திருப்பதி, ஒதுங்கி இருந்த என்னை கைதூக்கி விட்ட நல்லாசிரியர் புலவர் மகாசுந்தர் ஆகியோரே என்னைக் கைபிடித்து வெளித்தளத்திற்கு அழைத்து வந்தவர்கள்.
கல்விப்பணி :
            ஆசிரியப் பணியில் இதுவரை இரண்டு காகிதக்கிழிகளைப் பெற்றுள்ளேன். ஒன்று மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்ற மாநிலக் கருத்தரங்கில் நான் வழங்கிய கற்பித்தல் ஆய்வுக் கட்டுரை சிறந்த கட்டுரையாகக் கல்வியாளர்களால் தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசு வழங்கப்பட்டது. இரண்டாவதாக அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் சார்பில் நடைபெற்ற ஆசிரியர்களுக்கிடையேயான கற்பித்தல் போட்டியில் சிகரம் தொட்ட ஆசிரியர் என்ற காகிதக்கிழி வழங்கப்பட்டது. ஐந்து செயலாய்வுகளும் முப்பத்திரண்டு கல்விக்கட்டுரைகளும் இதுவரை வெளியாகியுள்ளன.
     ஒன்பதாம் வகுப்பிற்குப் புதிய மதிப்பீட்டு முறையான தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு சார்ந்து மாவட்டக் கல்வித்துறையால் ஆசிரியர்கள் பிரிவில் முதன்மைக் கருத்தாளராக ( தமிழ் )  நியமிக்கப்ப்ட்டேன்.இதன் மூலம் புதிய பல உத்திகள் , செயல்பாட்டுமுறைகள் ஆகியவை வடிவமைக்கப்பட்டன.
       இது சார்ந்து நடைபெற்ற பயிற்சிப் பட்டறைகளில் கலந்து கொண்டு புதிய வடிவமைப்புமுறைகள் உருவாகக் கடுகளவுக் காரண்மாக இருந்துள்ளேன்.
          ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிக்க மாவட்டக் கல்வித்துறையால் கருத்தாளராக நியமிக்கப்ப்ட்டு பணியாற்றிவருகிறேன். அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டம் சார்பாக நடைபெறும் பயிற்சிகளிலும் கருத்தாளராக பணிபுரிந்து வருகிறேன்.
       பத்தாம் வகுப்பில் இருமுறை நூறு விழுக்காடு தேர்ச்சியும் நான்கு முறை தொண்ணூற்று எட்டு விழுக்காடுத் தேர்ச்சியும் பெற்றுத்தரக் காரணமாய் இருந்துள்ளேன். புதுக்கோட்டை மாவட்டக் கல்வித்துறையின் சார்பாக பத்தாம் வகுப்புப் பயிலும் மாணவர்களுக்கெனத் தயாரிக்கப்படும் சிறப்புக் கட்டகக்; குழுவில்; ஓர் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறேன். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கென பட்டதாரி ஆசிரியர் கழகத்தால் நடைபெறும் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்வில் தமிழ்ப்பாடக் கருத்தாளராக இருந்து மாணவர்களுக்குப் பயனுள்ள பல கருத்துகளை வழங்கி வருகிறேன். மேலும் தலைமையாசிரியர் கழகத்தின் சார்பாக நடைபெறும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான வெற்றி நமதே நிகழ்விலும் தமிழ்ப்பாடக் கருத்தாளராகப் பணிபுரிந்து வருகிறேன்.
இலக்கியப்பணி :
           அரசு மேனிலைப்பள்ளி, ஏ.மாத்தூரில் செயல்பட்டுவரும் பாரதி கலை இலக்கிய மாணவர் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளராகப் பணிபுரிந்து எட்டேணி, மருதமாத்தூர் போன்ற மாணவர் கையெழுத்து இதழ் நடத்தும் மாணவர்குழுவின் ஒருங்கிணைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறேன். வருடந்தோறும் கல்வி வளார்ச்சி நாளன்று பள்ளியில் கவியரங்கம் நடத்தி வருகிறேன்.
           வீதி இலக்கியக் களத்தில் உறுப்பினராக இருந்து பல் இலக்கிய விவாதங்களில் மாதந்தோறும் பங்குபெற்று வருகிறேன். புதுக்கோட்டை உலகத் திருக்குறள் பேரவை, இளங்கோவடிகள் இலக்கிய மன்றங்களில் உறுப்பினராக இருந்து அவ்வமைப்புகள் நடத்தும் இலக்கிய விழாக்களுக்கு உற்றதுணையாகச் செயல்பட்டுவருகிறேன். 
           இதுவரை பத்து சிறுகதைகள் எழுதியதுடன் ஆறு சிறுகதைகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. அவற்றுள் மொய், மழைச்சோறு, உயிர்த்த சிறகுகள், கிழிந்த மனசு, பேத்தை ஆகியவை பேசப்பட்ட கதைகள்.பல்வேறு கவியரங்குகளில் பங்கேற்று கவிதைகள் வாசித்த அனுபவமும் உண்டு.
           gurunathans blogspot.com என்ற வலைப்பூவில் என் இலக்கியப்
;பதிவுகளைப் பதிவுசெய்து வருகிறேன். எண்பதுக்கும் மேற்பட்ட கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், விமர்சனங்கள் இதுவரை பதிவு செய்யப்பட்ட இலக்கியப் பதிவுகளின் எண்ணிக்கை ஆகும். சிறுகதைகளைப் புத்தகமாக்கும் எண்ணமும் உண்டு.
சமூகப்பணி :
         தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் புதுக்கோட்டை மாவட்டச் செயலராகப்; பணியாற்றி வருகிறேன். ஆசிரியர்களின் உரிமைகள் மறுக்கப்படும் போது உயரதிகாரிகளிடமும் பிற தளங்களிலும் அதனை மீட்டெடுக்கத் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். இக்கழகத்தின் வாயிலாக முதன்மைக்கல்வி அலுவலர் மூத்த தமிழாசிரியர்கள் ஆகியோர்கள் வழிகாட்டுதலுடன் இரண்டு கணினித் தமிழ்ப் பயிலரங்குகள் நடத்த உற்றதுணையாக இருந்து வந்துள்ளேன். மாணவர்களுக்கு கழகத்தின் சார்பாக பத்தாம் வகுப்பு மாதிரித் தேர்வுகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்குப் பரிசும் பாராட்டும் வழங்கப்பட்டு வருகின்றன். அக்குழுவில் முக்கிய உறுப்பினராகச் செயல்பட்டு இந்நிகழ்வை வெற்றிநிகழ்வாக நடத்தத் திட்டமிடுவதில் பெரும்பங்காற்றி வருகிறேன்.
பள்ளிப்பணி :
       பள்ளியில் பாரதி கலை இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளராகவும், நாட்டு நலப்பணித்திட்டத்தில் வலுவூட்டுப் பயிற்சியாளராகவும் பணியாற்றி வருகிறேன். பள்ளியில் நடைபெறும் விழாக்களின் விழாக்குழு திட்டச் செயலராகவும்
மாணவர் தனித்திறன் போட்டிகளின் ஒருங்கிணைப்பாளராகவும் செயலாற்றி வருகிறேன். ஆண்டு தோறும் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு என்னால் தயாரிக்கப்பட்ட தமிழ்ப்பாடக் கட்டகத்தை இலவசமாக வழங்கி வருகிறேன். இக்கட்டகம் பள்ளிக்கல்வித்துறையால் வழங்கப்படும் சிறப்புக் கட்டகத்தின் முன்னோடி எனலாம்.
     பத்தாம் வகுப்பு தமிழ்ப்பாடம் சார்ந்த என் கட்டகங்கள் கல்விச்சோலை, பாடசாலை, தமிழக ஆசிரியர் போன்ற பல இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.அவை தமிழக மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்ததென இணையதள நிருவாகிகள் கருத்துத் தெரிவித்தது எனக்கு மகிழ்வைத் தந்தது. தீக்கதிர் நாளிதழில் எனது பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி வினாத்தாள் வெளியடபட்டது. அது மிக்க பயனைத் தந்தது.
      என்னையும் ஒரு பொருட்டாக மதித்து வலைப்பதிவு ஆசிரியராக தேர்ந்தெடுத்தமைக்கு மிக்க நன்றியைத்; தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு நான் முழுத் தகுதியானவன் தானா என்று என்னையே திரும்;பிப் பார்த்த நினைவசைவுகளையே நான் தங்களுக்குத் தெரிவித்துள்ளேன்.

       என்னைத்; தேர்வு செய்த தேர்வுக்குழுவிற்கும் தங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

குருநாதன் அவர்களை வலைச்சரப் பொறுப்பேற்க வாழ்த்தி வருக.. வருக.. என வரவேற்பதில் வலைச்சரக்குழு பெருமகிழ்ச்சியடைகிறது

நல்வாழ்த்துக்கள் கில்லர்ஜி...
நல்வாழ்த்துக்கள் குருநாதன்....

நட்புடன்,
தமிழ்வாசி பிரகாஷ்.

மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது