07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, April 30, 2014

சமையலில் நளபாகம் :)


                 அனைவருக்கும் பொன்னான புதன்கிழமை 
வணக்கங்கள் :)தலைப்பை பார்த்தவுடன் அனைவருக்குமே 
விளங்கியிருக்கும் ..:)
பெண்கள் வசமிருந்து ஆண்களுக்கு சென்றுவிட்டதோ 
இத்துறை எனும்  அளவுக்கு நிறைய ஆண்கள் சமையல்  துறையில் கோலோச்சுகிறார்கள் . நம்மூரில் ஆண்கள் சமைக்க   பற்பல காரணங்கள் உண்டு  தனிக்கட்டை வாழ்க்கை , 
ஹோட்டல் உணவை தவிர்க்க ,பணத்தை சேமிக்க ..இப்படி 

                        வெளிநாட்டில் உள்ள சமையல் நிபுணர்களை 
பாருங்கள் ,Heston Blumenthal ,Marco Pierre white,  Gordon Ramsey ,  
James Martin,     Keith Floyd,Anthony worral thompson ...இவர்கள் 
அனைவருமே இங்கிலாந்தின் பிரபல சமையல் நிபுணர்கள்     .

             நம்ம தொலைகாட்சிகளிலும் தாமு ,அறுசுவை அரசர் 
என அதிகம்ஆண்களையே  சமையல் நிகழ்சிகளில்
காட்டுகிறார்கள் இதில்வேறு  தல//தலப்பாக்கட்டு பிரியாணி 
செய்தார் //என்று  அடிக்கடி செய்தி ,படிக்க  பொறாமையாக 
இருக்கும் :)

எனக்கு திருமணம் நிச்சயமானதும்  வருங்கால கணவர் 
வெளிநாட்டில் படித்து வேலை செய்கிறார் .அங்கே அவரது 
சகோதரர்களுடன் இருக்கார் என்று சொன்னார்கள்....
மணமாகி கணவருடன் ஊருக்கு போனதும் முதல் இரண்டு 
மூன்று நாட்களுக்கு அவரின் சகோதர்கள் வீட்டுக்கு விருந்து 
சாப்பிட சென்றோம் .
அங்கே கண்ட காட்சிகள் வேறு எனக்கு  மிகவும் 
ஆனந்தமாக இருந்தது !  ஒவ்வொருவர் வீட்டிலும் 
மைத்துனர்கள் அழகா ஏப்ரன் கட்டிக்கொண்டு கிச்சனுக்கும் 
டைனிங் ஹாலுக்கு நடந்த வண்ணம் இருந்தாங்க ..:)

இப்படியே ஒரு வாரம் போனது எனக்கு ப்ரெட் பட்டர் ஜாம் ..
ரெடிமேட் நூடில்ஸ் மட்டுமே என் கணவர் பரிமாறினார் 
இதுவே இரண்டாம் வாரமும் தொடரவும் அவரே  சொல்லிட்டார்
 தனக்கு சமையல் தெரியாதென்று !....
.....(நான் மிரட்டவில்லை ).
நான் கேட்டேன் //அப்போ ஊரிலிருக்கும்போது எனக்கு போனில் சொன்னீங்களே ?அண்ணன் டின்னருக்கு வர்றார் ,தம்பி டின்னருக்கு
 வரார்னு ?....கணவர் ..//அது ..நான் காய்கறிகளை வாங்கி நறுக்கி 
வைத்துவிடுவேன் அவர்களே வந்து சமைப்பாங்க !!!//அவ்வ்வ்வவ் !
அங்கேயே மயங்கி விழாத குறைதான் எனக்கு .....

                            

சரி இப்போ நம்ம பிரபல பதிவர்கள் யார்யாரெல்லாம் சமையல் 
சிங்கங்கள் என்று பார்ப்போமா :) அம்மா ,பெரியம்மா ,சித்தி ,
அத்தை ,அண்ணி ,அக்கா தங்கச்சிங்க எல்லோரையும் வருக  !
வருக ! என அழைக்கிறேன் :)
அனைவரும் வந்து தட்டில் உள்ள நொறுக்குகளை எடுத்துகிட்டு 
நாற்காலியில் அமர்ந்துக்கோங்க :)
                                                                          


ஆண்கள் அனைவரும் இந்தாங்க சுவையான பன்னீர் சோடா 
கையில் எடுத்துக்கிட்டு சமையலறைக்கு போகலாம் :)

                                                                               
                                                                           
பிரபல எழுத்தாளரும் புத்தக பதிப்பாளருமான பத்ரி சேஷாத்ரி 
அவர்களின் பேட்டியும் ,கலக்கல் சமையல் குறிப்பும் இங்கே  
இது தினகரன் பத்திரிகையில் வெளியானது ..
தான் சமையல் செய்ய ஆரம்பித்த காரணத்தை தொடராக 
சொல்கிறார் ஓய்வுபெற்ற நீதிபதி இங்கே அவரின் ஸ்பெஷல் 
ரெசிப்பியும் அங்கே உள்ளது .

முதலில் இவர் ஆஹா என்ன அழகு என்று அடை சாப்பிட அழைக்கின்றார் 
வெண்ணிலவை தொட்டு முத்தமிட ஆசை மிளகாய் பொடிகொஞ்சம் 
தொட்டுக்கொள்ள ஆசை என்று பாட்டு பாடி அழைக்கின்றார் :)
சும்மா சொல்ல கூடாது .அருமையான சுவை !!

அடுத்த பதிவர் இவர் புது வித பயத்தம்  பருப்பு அல்வா 
செய்ய சொல்லிதறார் ..அதுமட்டுமன்றி ஒரு விழிப்புணர்வு 
தகவலையும் பகிர்ந்துள்ளார் ..கண்டிப்பா படிங்க .

இவரை உங்க எல்லாருக்கும் நல்லா தெரியும் ..தெரியாத விஷயம் 
இவர் இவ்ளோ அருமையா காஜர் பராட்டா செய்வார் என்பது 

இவ்ளோ சுவையா ,ஆரோக்கியமான எலுமிச்சை ரசம் குறிப்பு 
தர இவர் ஒருவரால் மட்டுமே முடியும் ...இவர் தொலைக்காட்சி நிலையம் 
வேறு வைத்திருக்கிறாராம் ..குறிப்பு இங்கே :)

அடுத்து இவர் ஒரு சர்வதேச சமையல் ரெசிப்பி தந்திருக்கார் :)
ஸ்பானிஷ் உணவு  நானும் செய்து பார்த்தேன் ..ருசி அபாரம் !

ம்ம் அடுத்தவர் இவர் :)உருகி உருகி காதலித்தாலும் சமையலும் 
நல்லாவே செய்யறார் PANNA COTTA 
அத்துடன் ஒரு ஆரோக்கியமான ஸ்டார்டர்  இனிமே பால் கோபி குடிக்க மாட்டாரா ? :)

ஆஹா இவர் குறிப்பும் சூப்பர் :) திரட்டிப்பால் குறிப்பு வழங்குவது 
பிரபல DOHA பதிவர் :)

இவர் வாயூறும் சுவையான நெல்லிக்காய் ஊறுகாய் செய்ய 
சொல்லிதருகின்றார் இங்கே ...

இவங்க இ எ மி கா ஊறுகாய் போடசொல்லித்தராங்க இங்கே 

இவரின் ப்ளாகில் நிறைய குறிப்புகள் இருக்கு ஒவ்வொன்றா 
குறித்துகொள்ளவும் :)

சமைக்க தெரியாதவங்களுக்குன்னு அற்புத வழிகள்  :)
 இவரின் குறிப்புக்கள் பலருக்கு உதவலாம் 


இவரது மகனும் வருங்காலத்தில் சமையல் புலியாக 
வருவாரா :) இப்பவே எவ்வளவு விவரமா இருக்கார்னு பாருங்க 

மிக அருமையா இலையில் எப்படி உணவு பரிமாறணும் என்று 
விவரமாக சொல்றார் இங்கே  கொட் ரசம் சூப்பருங்கோ !
வெந்நீர் போடுவதற்கு  கூட இவ்வளவு அழகா குறிப்பு தர 
இவரால் மட்டுமே முடியும் :)

நிறைய குறிப்புகள் கிடைத்திருக்கும் என நினைக்கிறேன் அப்படியே 
இந்த பாடலையும் கேட்டு ரசியுங்கள் :)ஒவ்வொரு உணவையும் 
அருமையா பேர சொல்லி ,சொல்லி பாடுகிறார் இந்த பதிவர் :)
https://www.youtube.com/watch?v=JROigL20fwAஇன்றைய பதிவில் பகிர்ந்தவற்றை அனைவரும் செய்து பார்த்து 
சொல்லுங்க ..மீண்டும் நாளை சந்திப்போம் :)

அன்புடன் ஏஞ்சலின் .
                                                                        
மேலும் வாசிக்க...

Tuesday, April 29, 2014

அனைவரும் பள்ளிக்கூடம் செல்லலாம் வாங்க :)மீண்டும் பள்ளிக்கு போகலாம் :)
                                                                                     

படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு! 
பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு' 
                               கண்ணதாசன்.
ஒரு நான்குவயது சராசரி குழந்தை ஒரு நாளைக்கு நானூறு 
கேள்விகளுக்கு மேல் கேட்கும் .!!
தனது வாழ்நாளில் 1368 கண்டுபிடிப்புகளை உலகிற்கு 
அறிமுகப்படுத்திய தாமஸ் ஆல்வா எடிசன் மூன்று மாதங்கள் 
மட்டுமே பள்ளிக்கூடம் சென்றாராம் .
பல பிள்ளைகளுக்கு பள்ளி என்றாலே ஒரு கசப்பு அனுபவம் ..
அப்படிப்பட்ட கசப்பான சூழ்நிலையில் வளர்ந்தவர் தான்
 ப்ரெடரிக் ப்ரோபெல் .ஆகவே தன்னை போலன்றி பிற்கால 
சந்ததியாவது சுமூகமான சூழலில் கல்வி கற்கணும் 
என்ற ஆவலோடு விளையாட்டு முறை கோட்பாடுகளை
 கொண்ட கிண்டர் கார்டன் பள்ளி முறையை கண்டுபிடித்தார் .
ஒரு குழந்தை தன்னை முழு மனிதனாக உருவாக்கிக்கொள்ளும் 
இடம் தான்ஆரம்ப பள்ளிக்கூடம் .அந்த இடம்  நாம் ஒரு பூங்கா 
அல்லது மலர்வனத்துக்குள்நுழையும்போது ஒரு இனிய 
சூழ்நிலை போல மனதுக்கு ரம்மியமாக இருக்க வேண்டும் .
அப்படிப்பட்ட சூழ்நிலையை ஏற்படுத்தி  திடமான வருங்கால 
சந்ததியை உருவாக்க ஆரம்பிக்கப்பட்டவை கிண்டர்கார்டன் 
பள்ளிகள் .திரும்பி பார்ப்பது எவ்வளவு ஆனந்தமான ஒரு அனுபவம் 
தெரியுமா :) நான் சொல்வது சந்தோஷமான தருணங்களை !
பலருக்கு நிச்சயமாக ஆட்டோகிராப் படத்தின் ஞாபகம் !
வருதே! ஞாபகம்  வருதே பாடல் மிகவும் பிடிக்கும் 
எனக்கும்  மிகவும் விருப்பமான பாடல் . எனக்கும் சேரனுக்கும் 
ஒரு ஒற்றுமை :)பள்ளி நினைவுகளை மீட்டியதில் .
எனக்கு  முதல் வகுப்பு எடுத்த ஆசிரியரின் 
பெயர் ..மல்லிகா ..இன்னொருவர் பெயர் உமா ..அவர்களின் 
இருவரது திருமணத்துக்கும் நாங்க அப்போ சேலம் சென்றோம் .
எப்படி ஒன்றாம் வகுப்பில் நடந்த விஷயம் எனக்கு இன்னும்
 நினைவு இருக்கு என்று இருவருக்கு (அதிரா ,கலை )
மட்டும் சந்தேகம் வரும் :)
எனக்கு அந்த இருவரின் மாப்பிளைகளுக்கும் அத்திருமணத்தில் உறவுக்கார்கள் போட்ட ஒரு ரூபாய் 
நோட்டு மாலை ஆளுயரத்துக்கு இருந்தது கூட இன்னும் 
நினைவில் இருக்கின்றது :)..
சின்னஞ்சிறு வயதில் சில விஷயங்கள் அழுத்தமாக மனதில்
 வேரூன்றிவிடும் ..அதனால்தான் பெரும்பாலானவர்களுக்கு 
அவர்கள் ஆரம்ப பள்ளிஆசிரியர்கள் இன்னமும் மனதில் 
சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார்கள்  ...இப்போ 
அந்த பாடலை பார்த்துக்கொண்டே             
                                                                   அப்படியே அப்படியே வரிசையில் வந்து ஆரஞ்சு மிட்டாய் 
எடுத்துக்கோங்க  :)

                                                                      


இப்ப என் கூட வாங்க உங்கள் அனைவரையும் அவரவர் 
பள்ளிக்கூடத்துக்கு மீண்டும் அழைத்து செல்கிறேன்   ..
                                                                

                                                 

நான் முதன்முதலா கின்டர்கார்டன் சென்ற அனுபவம் எனக்கு 
இப்பவும் நினைவிருக்கு ...ஆனா அந்த காலத்தில் 
படம் எடுப்பது போன்ற விஷயங்கள் இல்லாததால் அச்சம்பவங்களை 
மனதில் மட்டுமே அசை போடமுடிகிறது ..ஆனா ரோஷினி குட்டி 
அவங்க அம்மா இப்பவே பதிவில் 
அழகா அத்தனை நினைவுகளையும் சேமித்து வைத்திருக்கிறார் .

அதைப்போல சந்தனமுல்லை அவங்க பாப்பா பப்புவுக்கு எப்படி
எல்லாம் பள்ளி பற்றிய விவரங்கள் சேகரிச்சு இருக்காங்கன்னு 
இங்கே பாருங்க 

கீதமஞ்சரி 
ஆஸ்திரேலிய பள்ளி கல்விமுறையை விளக்கி இருக்காங்க 
..


தம்பி செங்கோவி ஸ்கூல் போலீசா இருந்த விஷயத்தை இங்கே 
சுவாரஸ்யமா சொல்லியிருக்கார் ..ப்ளே ஸ்கூல் பற்றி அவர் 
சொல்லியிருப்பது அவ்வளவும் உண்மை தெரு வீதிதான் நமக்கு 
play school அக்காலத்தில் .
நம்ம சகோதரி ராஜி பள்ளி வாழ்க்கை முழுவதையும் 
கவிதையாக வடித்திருக்கார் இத்தொடர்பதிவில் 

என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை !இப்போ 
இதெல்லாம் நடைபெற சாத்தியமுமில்லை !பின்னே 
இவர் படிக்கும்போது மூன்றாம் வகுப்புவரை மூன்று ரூபாய் 
தானாம் பள்ளிக்கட்டணம் !!!

என் குட்டி தம்பி இங்கே சின்ன சின்ன ஞாபகங்களை 
அழகா எழுதியிருக்கார் :)

இந்த பதிவர் P .E .வகுப்பில் புல்லு பிடுங்கினதை சொல்கிறார் 
நீ பரவாயில்லை தங்கச்சி :) நாங்க கிரவுண்ட் முழுதும் 
குப்பை பொறுக்குவோம் எங்க பள்ளியில்  .

இவரது பள்ளிக்கால நினைவுகள் வாசிக்கும்போது எனக்கு 
வலித்தது ...இன்பமும் துன்பமும் சேர்ந்ததே வாழ்க்கை .
எதை சொல்ல :(

அடுத்தது இவர் :) என் கண்ணில் இது மட்டும் பளிச்சினு 
தெரிந்தது ..பள்ளியில் பேசற பிள்ளைங்க பேர  எழுத 
சொன்னா எழுதி அப்படியே ஆசிரியர்கிட்ட கொடுக்கணும் :) 
அதை விட்டுட்டு ..மேலும் சென்று படிங்க இங்கே 

இவ்வளவு புத்திக்கூர்மை பதினோரு வயசிலேயேவா !!! 
இந்த பதிவர் பாருங்க ஆறாம் வகுப்பு படிக்கும்போதே தலைமை 
ஆசிரியரிடம் இன்னொரு நண்பியை அழைத்து கொண்டு போய் ஸ்கூல் அட்மிஷன்  வேண்டுமென கேட்டிருக்கின்றார் :) 


இவர் எழுதும் ஒவ்வொரு கதையின் 
கதா பாத்திரமும் அப்படியே தத்ரூபம் போலிருக்கும்  :)
இவர் கற்பனையாக எழுதினாலும் அச்சம்பவம் யாருக்கோ 
எங்கோ நிஜ வாழ்வில் நடந்திருக்கும் :)
மீண்டும் சாம்புவை அனைவருக்குமே பிடிக்கும் :)

அனைவரும் உங்களது பள்ளி நினைவுகளை திரும்பி 
பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கின்றேன் .உங்கள் 
பிள்ளைகளும் திரும்பி  பார்க்க உதவியாக SCRAP 
BOOKS செய்து வையுங்க ..
நன்றி நண்பர்களே நாளை  வேறொரு தலைப்புடன் 
உங்களை மீண்டும் சந்திக்கின்றேன் .

Angelin .

மேலும் வாசிக்க...

Monday, April 28, 2014

வணக்கம் ,அன்பு நண்பர்களே ...நான் ஏஞ்சலின் :)

வணக்கம் ,அன்பு நண்பர்களே ...நான் ஏஞ்சலின் ..அஞ்சு /அஞ்சு அக்கா /
காகிதப்பூக்கள் ஏஞ்சல் :)

                                                                                                   அனைவருக்கும் முதலில் ஒரு பாரம்பரிய பிரித்தானிய கேக் :)
                                                                             

மற்றும் நமக்கே நமக்கு நம்ம நாட்டுக்கு  சொந்தமான தேன் மிட்டாய் :)
எடுத்துக்கோங்க                                                                        என் மீது அபார நம்பிக்கை வைத்து வலைசரத்தில் ஒரு வாரம் ஆசிரியாக 
நியமித்த சீனா ஐயா ,தம்பி பிரகாஷ் ஆகிய இருவருக்கும் எனது பணிவான 
நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் .
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே திரு .வை.கோபாலகிருஷ்ணன் 
( கோபு  அண்ணா) அவர்கள் என்னை அழைத்திருந்த போதிலும் அப்போது 
எழுத இயலாத சூழ்நிலையால் தடை பட்டது .
ஆனால்  இடைப்பட்ட காலத்தில் என்னை நானே சுய பரிசோதனை செய்து 
இயன்ற வரையில் எனது எழுத்துக்களை சிறிதேனும் மேம்படுதியிருக்கின்றேன் 
என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டதால் மிகுந்த சந்தோஷத்தோடு இப் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன் .சரி :) இப்பொழுது என்னைப்பற்றி ...:) தருமபுரியில் பிறந்த தேவதை .
அப்பாவின் பணிமாற்றம் காரணமாக அடிக்கடி பல ஊர்களுக்கு பிரயாணம் 
செய்ததில் படிப்புக்கு இடையூறு வர வேண்டாமென சென்னையில் 
குடியேற்றபட்டோம் !
படித்து முடித்ததும் வானளாவிய கனவுகளுடன் திரிந்தேன் :) ஆனால் :)

இந்தியாவுக்கு ஒரு Jane Goodall,ஒரு தலை சிறந்த .I.A.S அதிகாரி !!
ஒரு வைஜெயந்தி I.P.S ...மன்னிக்கவும் ஒரு :)கிரண் பேடி ..கிடைக்கக்கூடாது 
என்று தலை விதி :) ...படிச்சதெல்லாம் போதும் என்று மணமுடித்து 
வெளிநாட்டுக்கு அனுப்பி வைச்சிட்டாங்க :)...
படிச்ச படிப்பு உயர்நிலை பள்ளி படிக்கும் மகளுக்கு உதவியாக இருக்கு .

நம்ம ப்ளாக் உலக பிரவேசம் ..இதற்கு முழு காரணம் எனது அன்பு கணவர் தான் ..
ஒரு ஆங்கில வலைப்பூவை எனக்கு ஆரம்பித்து கொடுத்தார் .
அதற்கு முன்பு சுமார் ஒரு வருட காலம் எல்லார்  வலைபூக்களிலும்
 பின்னூட்டம் மட்டும் அளித்து வந்தேன் .அவ்வாறு வலையில் 
 நண்பரான //அந்நியன்// புகழ்  அயுப் அவர்கள் தமிழில் வலைப்பூ துவங்கி 
எழுதசொன்னார் ..அப்படி ஆரம்பித்தது தான் காகிதபூக்கள் ..
கடந்த ஒரு வருடமாக ஆலயத்தில் VOLUNTEER வேலை செய்வதால் பதிவெழுதுவது 
கொஞ்சம் குறைந்த போதிலும் பசுமை விடியல் மற்றும் நலம் ஆகியவற்றில்
 அவ்வப்போது என்னால் இயன்ற நேரம் பதிவுகளை எழுதி வருகின்றேன் ..

நான் எழுதிய பதிவுகளில் எனக்கே எனக்கு மிகவும் பிடித்தவை 

எங்க வீட்டுக்கு எங்கிருந்தோ ஓடிவந்தது இந்த பப்லு அதற்கு நான்தான்  உயிர் !!

நம்ம தமிழ் மொழி பாரெங்கும் பரவியிருப்பதை நினைத்து புல்லரித்து போச்சு !

இந்த பதிவு ஒரு தொடர் பதிவு ஒவ்வொருவரும்  எவ்வளவு பொக்கிஷங்களை 
சேர்த்து வச்சிருக்காங்க பாருங்க :)

நான் மிகவும் நேசித்த எனது பதிவு 


நானும் அவ்வப்பொழுது சமையல் பதிவும் எழுதியிருக்கேன் 

@ஜெய் அங்கே என்ன சிரிப்பு ?  :)

 நான் க்வில்லிங் மற்றும் கைவேலை செய்வேன் என்பதுதான் அனைவரும் 
என்னைப்பற்றி அறிந்தது ..இப்படி பற்பல விஷயங்களை நான் பகிர காரணமும் 
என் கணவர்தான் :) நான் கைவேலை செய்ய சேமித்து /ஒளித்து வைத்திருந்த 
பொருட்களை நான் ஊரில் இல்லாத சமயம் குப்பைன்னு நினைத்து வீசிட்டார் !
வேறு வழி இன்றி சமையல் மற்றும் விழிப்புணர்வு பதிவுகளுக்கு மாறிவிட்டேன் .

மீள்சுழற்சி முறையில் தேவையற்ற பொருட்களை பயன்படுத்தி நான் செய்த 
வாழ்த்து அட்டைகள் இங்கே பாருங்க அங்காடிகளில் உள்ள அட்டைபெட்டிகளில் காற்று புக வட்ட வடிவம் 

இந்த அணிலார் பழைய பிரவுன் என்வலப்பை வெட்டி செய்தது 

க்வில்லிங் முறையில் செய்தது 

சரி  :) நட்புபூக்களே இத்துடன் எனது அறிமுகத்தை முடித்துகொள்கிறேன் ..
நாளை முதல் புதிய பல விஷயங்களுடன் உங்களை மறுபடியும் 
சந்திக்கின்றேன் .

இதுவரைக்கும் என்னைப்பற்றி ஓரளவுக்கு அறிந்திருப்பீர்கள் 

யாராங்கே ஒரு கை மட்டும் தெரியுது ....உன் பெயர் என்ன பாப்பா? 

 ..

ரீச்சர் ..ரீச்சர் என் பேர் கலை கலைச்செல்வி கருவாச்சின்னு சுருக்கமா 
கூப்பிடுவாங்க ..எநக்கு ஒரே ஒரு சந்தேகம்........................................

ANGEL .....கேளும்மா 

நீங்க சுய பரிசோதனைன்னு சொன்னீங்களே .!
எந்த ஹோச்ச்பிடல அட்மிட் ஆகி பரிசோதிசிட்டீங்க ரீச்சார் ??

..

                                                                            


ஏஞ்சலின் 
                                      ஆஆஆ 
                                                                                                             
                                                       

மீண்டும் சந்திப்போம்  நட்புபூக்களே :)

மேலும் வாசிக்க...

Sunday, April 27, 2014

செல் விருந்தோம்பி வரு விருந்து காத்திருத்தல்

அன்பின் சக பதிவர்களே ! 

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற  நேசன் தனிமரம்  - இவரது  வலைத்தளம்  " தனிமரம்  "http://www.thanimaram.org” என்ற தளத்தில் எழுதி வருபவர்    - தான் ஏற்ற பொறுப்பினை சரி வர, மிகுந்த  ஆர்வத்துடனும்,  பொறுப்புணர்வுடனும்,  ஈடுபாட்டுடனும்  - நிறைவேற்றி நம்மிடமிருந்து முழு மன நிறைவுடன் விடை பெறுகிறார். 

இவர் எழுதிய பதிவுகள்                         : 010
அறிமுகப் படுத்திய பதிவர்கள்            : 062
அறிமுகப் படுத்திய பதிவுகள்              : 062
பெற்ற மறுமொழிகள்                            :244
வருகை தந்தவர்கள்                              : 1318

நேசன் தனி மரம்   பல் வேறு தலைப்புகளில் பதிவுகள் இட்டிருக்கிறார். பொதுவாக அனைத்துப் பதிவுகளிலும் - பதிவர்களை - ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் அவர்களை அறிமுகப் படுத்துவதை தலையாய கடமையாகச் செய்திருக்கிறார்.   பத்து  பதிவுகளிலும்  லேபிள் இடவும் மறந்து விட்டார்.

நேசன் தனி மரத்தினை -    அவரது   கடும் உழைப்பினைப் பாராட்டி, வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். 

நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு ஏஞ்சலின்  ஆசிரியப் பொறுப்பினை ஏற்கிறார். 
இவரது  வலைத்தளம் 
  : காகிதப்பூக்கள்  http://kaagidhapookal.blogspot.co.uk
பெயர் ஏஞ்சலின் .
பிறப்பிடம் தருமபுரி ,
இருப்பிடம் ..இங்கிலாந்து ..
கணவர் ,மகள் ..ஒரு பூனைக்குட்டி ,ஏழு தங்க மீன்கள் என சிறு குடும்பம் :)
கைவினை ..மீள்சுழற்சி,  சமையல் ...,தோட்டம் , மற்றும் விழிப்புணர்வு போன்றவற்றை பகிர்வதில்  விருப்பம் .
ஏஞ்சலினை   வருக வருக என வரவேற்று வாழ்த்துவதில் பெருமை அடைகிறேன்.
நல்வாழ்த்துகள் நேசன் தனி மரம்
நல்வாழ்த்துகள் ஏஞ்சலின் 
நட்புடன் சீனா

மேலும் வாசிக்க...

வாசிப்பும் சுவாசிப்பது போல!!

கிடைக்கும் ஒரு சில மணித்துளியும், பாடலும், தேடலுடனும் போகும் வழிப்பயணத்தை இந்த பாரிஸ் ரயில் தந்து இருக்கு அதில் அசை போடும் சுகம் தனிச்சுகம்!


அதிகமான அரசியல் நிகழ்வுகளை படிக்கும் வாசகர்களுக்கு இந்த தளம் ஒரு முக்கிய நூலகம்!http://www.kodangi.net/2013/11/blog-post.html !அது கடந்து இந்த புத்தகம் இன்னொரு சுகம். வாங்கோ http://puththakam.blogspot.fr/2014/03/123-debt-first-5000-years.html  .

இந்த ஆத்மாவும் இப்போது அதிகம்  ஓய்வு...
http://www.athma.biz/2013/12/blog-post_6.html! இவhttp://www.surekaa.com/2011/11/blog-post_26.htmlரையும் வாழ்த்துவோம்!

 இந்த வார என் புலம்பல்களை ரசித்து/ சிரித்து/ பாராட்டிய  வலையுறவுகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் !

இந்த வாய்ப்பை தந்த சீனா ஐயாவுக்கு மீண்டும் மீண்டும் நன்றிகள்.

மீண்டும் விடைகேட்டும் போக விடாத ரகசியம் இதுவோ!நன்றி டெனில் நண்பா!

     

மேலும் வாசிக்க...

சண்டே என்றால் ரெண்டு!ஹீ

நன்றி சொல்லிப்போனாலும் நமக்காக ஒதுக்கிய  நேரம் இன்னும் இருப்பதும் இன்று வேலையில் உயர் அதிகாரி வாராமையும் இந்த உடன் பிறப்பை கொஞ்சம் அறிமுகம் செய்கின்றேன்!ஹீ விவாஹம் என்றால் தூக்கிக்கொண்டு ஓடுதல் என்று அர்த்தம்.http://vadakovaiouraan.blogspot.fr/  இந்த வால்ப்பையன் ஒரு நல்ல இன்னொரு படத்தை பகிரும் விதhttp://valpaiyan.blogspot.fr/2013/11/blog-post_24.htmlம் இது.இந்த மருத்துவர் பல நாடு அறிந்தவர் .

பல்சுவைப்பகிர்வு இவர்தளம்.http://hainalama.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/ இவரையும் மறக்க முடியுமோ!


இங்கேயும் புதுமை பல http://naachiyaar.blogspot.fr/2014/04/blog-post_12.html.
ரசிக்க 

                             பிடித்த வரிகள்§

எல்லோருக்கும்  தமிழ் அமுது தானே வலையில்.


மேலும் வாசிக்க...

எழுத்து எனக்கு தொழில் இல்லை!ஹீ

வலைசசரம் ஆசிரியர்  வாரம் முடியுமா என்று அன்பு ஆசான் சீனா ஐயா முதலில் அழைத்த போதும்! தமிழ்வாசிக்கு தனிமரம் ஒரு மொக்கை என்று தெரிந்து இருந்தாலும்! சீனாஐயா அழைத்த போது வலை மீது கொண்ட மோகம்  முடியாது நான் தனிமரம் இப்படித்தான் என்று சொல்ல முடியாவிட்டாலும் ஓம் என்றதன்  பயன் இப்படி

என்றாலும் ஒருவர் முகநூலில்
ஏனோ என்னையும் முகத்தில்
என் அவசர நிலை புரியாமல்!ஹீ
ஏனோ எனக்கு என் மேல் கோபம்!ழே!!!


எழுத்து என் ஆசை .அது ஏன் வந்தது!
எழுதும்  ஆசையில் முகம் தொலைந்தவன்
என்நட்பு!
என்றாலும் காதல் ஆசைக்கு நட்பு  இவன்!

எல்லோரும் போல இவனும்!
ஏன் இன்னும் இப்படி!
என்றாலும் என் கதையும்
எழுத்சசொல்லும் ஆதிரா போல
எனக்கும் வலையில்
என் அக்காள் அஞ்சலின், ராஜி. ஹேமா
என்று மட்டுமா? அம்பாளடியாள் தென்றல் சசிக்கலா
ஏன் தங்கை வாத்து என்று நம் குடும்பம் ஒருதொடர்
என்றாலும் .
எனக்கும் யோகா ஐயா,நாஞ்சில் மனோ .மகி .செங்கோவி, தனபாலன்
என்றும் நட்புடன் ரூபன் என்று இன்னொரு உலகம் இந்த
ஏதிலி வாழ்வில்!

 என்றாலும் என் சுயம் வலைக்காக
என்றும் இழந்து போனது இல்லை!
 எனக்கு வலை
என்றும் பொழுது போக்கு!

 எவர் காசிலும் பின்னூட்டத்துக்காக
என்றும் !ஒரு பியர் வாங்க்கிக்கொடுத்து
என் வலைக்கு வா என்று வலை வீசும்
ஏதும் இல்லா தனிமரம் இல்லை.
 பாரிசில் வாழும்


ஏதிலி நேசன்!

 ஏதோ ஒரு வழிப்போக்கன்\!
எடுத்து வளர்த்த என் மாமா முகமும் இன்றும்\
ஏனோ பார்க்க நினைக்காதவன்!
 என் பிடிவாதம் முகநூல் குழுமத்தில் நாறவில்லை!
ஏனோ வாக்கும் .பின்னூட்டத்துக்கும்!ஹீ
என்றாலும் இன்னும் தனிமரம் வாழுகின்றேன் 5 வருடம்
ஏதிலி தனிமரம் என்று!

ஏனோ இன்றும் 30 தாண்டி பித்து அது!
என் தேசம்  இலங்கையில் இலக்கிய கொம்பாக இருந்தாலும் !
என் சுயம் எழுத்துக்காக  தொலைக்கவில்லை
!என் வலையில் மின்நூல் இருக்கு!
ஏனோ பித்து கேப்டன் என்று முகநூலில் உதவி கேட்டாள்!
ஏதிலிபோல இருக்கும்  எல்லோருக்கும் கேப்ட்ன் போல ழே! ஒரு முகவரி தேவை
என்று சொல்ல மாட்டேன் !விரும்பினால் என் பாதை இப்படித்தான்
!
என்னைப்பற்றி என் தொடரில் தனிப்பதிவில் எல்லாம்
ஏனோ சொல்லும் ஆசையில் தான் எப்போதும்
என்னை படிக்காதவன் என்று
எல்லாப்பதிவிலும் சொல்லுகின்றேன்!

எழுத்தில் உழைத்து. திரட்டியில்
என் வாக்கினால் எழுதி கிழித்து.
எனக்கு கிடைத்த ஈரோவில்
என் பெயர் சிவநேசன் என்று
எழுதிச்செல்லும் சாமானிய  வாழ்க்கையில்
எனக்கு பாரிசிலும் இல்லை\ஒரு முகவரி !!

என் இன்னொரு நேசிப்பு ஊர் இலங்கை பதுளையிலும்
என் பெயர் இப்படி என்று!


ஏனோ  இன்றும் சொல்ல ஆசையில்லை!
எனக்கு குடியும் தெரியும்! குலத்தொழிலும் தெரியும்!!
 ஏதிலி எல்லாம் குடிகாரன் என்று!
 என்னை சீண்டியது போல
ஏனோ நண்பா!
 என்றும் யாரையும் தீண்டிவிடாதே!
ஏதிலி என்றாலும் இந்திய் தேசம் தராத முகவரி பாரிஸ்
எப்போதும் தந்து இருக்கு!
என்ன அவசரம் என்றால் வலையில் மீன் தேடுவது! முகநூலில்!
---------------------------------------- சாரி நீங்க பட்டதாரி என்றாலும்  எனக்கு!முகநூல் உறவை புரியாத!!!!

 வலையில் சில மீன்கள் இவர்கள்-http://rathinapughazhendi.blogspot.fr/2010/11/7.html

வலையில் இவர் தனிதுவம் இதையும் படியுங்கோ!http://muelangovan.blogspot.com
!ஹீ  இங்கேயும் ஓய்வு நேரத்தில் ஒரு ஆய்வு!http://thulasidhalam.blogspot.fr/2010/12/b-b.html

இன்னும் பலரை அறிமுகம் செய்ய ஆசை ஆனால் நேரமும் காலமும் ஏதிலிக்கு இன்னும் ஓட்டம் தான்.

 ! இந்த வாரம் என்னோடு வலைச்சரத்தில் தொடர் வருகைக்கு வந்த பலரில் என் நேசிப்பு யோகா ஐயா .திண்டுக்கல் தனபாலன் இருவருடன் .

இந்தவாரம் பகிர்வை தொகுத்த தனிமரம் நேசனும் விடைபெறுகின்றேன்!

கோபத்தில் யாராவது தத்து பித்துகாகி  நொந்தால் சாரி ஐயா நான் பின்னூட்டத்துக்கு யார் வலைக்கும் மொய்க்கு மொய் வைக்கும் சாமனி ஆசை கொண்டவன இல்லை!

 என் ஆசை பொழுது போக்கு தனிமரம் வலையில் முடிந்தால் சந்திப்போம்!
மேலும் வாசிக்க...

நதி போல ஓடிக்கொண்டேயிரு!!!!!!!!!!!

எழுதுவது ஒரு தனிக்கலை எல்லோருக்கும் வருவதில்லை இந்த ஆர்வம் எட்டைய புரத்து முட்டாசுக் கவிக்கும் எழுதிய காலத்தில் எறிந்த கற்கள் அதிகம் தான் அது வரலாறு.மேய்ச்சல் மைதானம் சொல்லும்!ஹீ இவருக்கு லிங்கு தேவையில்லை வலையில் மின்னல்வரி கணேஸ் மட்டுமா இப்ப வாத்தியார்!ஹீ
                                                 


 அது போல  பதிவுலகத்திலும் ஆசையில் வரும் பலர் பதிவாளர் ஆகிய பின் §


மூத்தவன் என்ற அதட்டல் , திரட்டியில் வாக்கு பின்னூட்டம் என்ற உருட்டல்,குழுமம் /குறூப் என்ற குழாய்யடிச்சண்டை,  தேசிய இனவாத ஆதரிப்பு /எதிர்ப்பு அரசியல் .சினிமா ஹீரோக்கள் என்று பிரியத்தில்  தன் நிலை கெட்டு போனவர்களையும் இந்த வலையுலகம் கண்டது .ஒவ்வொருத்தருக்கும் கிடைக்கும் வலையுறவுப்பயணம் ஒரு நதி போல அது தேடல் என்ற  ஒரு ஞானி  போல ! நாம் இதில் குளமாவதும் வற்றிப்போவதும் நம் தெளிந்த் பார்வையில் இருக்கின்றது.

.புதியவர்கள் வர வேண்டும் வாழ்வியலின் பரிமாணங்களை பலரும் பகிரட்டும். வாழ்த்துவதுக்கும் வாசிப்பதுக்கும் இங்கு பலர் உண்டு .

பின்னூட்டம் வருவது இவர் போல புயல் யார் உண்டு!

 இவரிடம் பிடித்தது பல பாடல்களை அருமையாக தொகுக்கும் விதம் கணனி அறிவும். பொதுக்கருத்தும் பின்னிய வரம் .பலருக்கு இவரின் சாமரம் தான் இன்று தனிமரம் போன்றோர் வலையில் ஆள் இல்லாத கடையில் பால்க்கோப்பி விற்பது!))))))))))))))))))))))))))
நன்றி மட்டும் சொல்லி இவரை அறிமுகம் செய்ய உத்தேசம் இல்லை!

 என் தொடரின் பாடல்களை ரசித்துப்பாராட்டுவது நம் இருவருக்கும் ஒத்த அலைவரிசை எனலாம்.
 இந்த வலைச்சரத்தில் இவரை நன்றியுடன்

 தஞ்சை என்றாலே வரலாறுதான் இவரும் ஒரு வரலாறுதான் துரை செல்வராஜீ !


இதையும் படிப்போம்!  ஒரு  வரலாற்றுத் தொடர் !http://thanjavur14.blogspot.fr/2013/12/10.html..
ஈழம்  இந்திய/இலங்கை அரசியல்வாதிகள் பலருக்கு தொட்டுக்கொள்ளும் ஊறுகாய் என்றாலும் காகித கப்பல்! இவர் இப்ப சம்சாரி அதனால் அதிகம் எழுதுவது இல்லை!ஹீ!
http://moongilvanam.blogspot.fr/2013/05/blog-post_4.html
 மலையகம் என்பது ஒரு கொதிக்கும் மாகடல் அதில் தனிமரமும் ஒரு வழிப்போக்கன் படகு போல  அங்கு பார்த்து நெஞ்சு பொறுக்காம்ல் எழுதிய என் தொடர் வலையில்  பலராலும்  பாராட்டி!

 மின்நூல் கண்டாலும் !
அச்சுக்காக இன்னும் முகநூலில் கேள்வியில் மூக்குடைந்தாலும் இடுகாட்டான் போல இன்னும் இருக்கின்றேன் நட்புடன் என்று  சொல்வது  போல  தனிமரம் வலையில் என்பதில்!


 நன்றியுடன் இந்த வலைச்சரத்தில் நேசன் தொலைத்த நூல் இது !!
//http://www.namathumalayagam.com/2014/04/blog-post_4079.html.

ஈழத்து கவி வரலாறு தனித்தும் இனி  எழுத்தில் இனவாதம் தொலைத்து எழுத தூய்மையுடன் வானொலியில் கவிதைக்கலசம் அறிவிப்பு செய்ய நினைக்கும் ஒவ்வொருஇனி வரும்  இலங்கை வானொலி அறிவிப்பாளர்கள் பலருக்கும் கவிதை நேசிப்புக்கும் இவர் மேமன் கவி!

http://mnmanas.wordpress.com/2010/07/06/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2/
!
அரசியல் என் அதிக விருப்பு அதையும் கமடி போல ரசிக்க! இது!ஹீ
http://www.vinavu.com/2014/03/26/azhagiri-expelled-from-dmk/

முகநூல் வருகை  இன்று முன்னம் வலையில் தெரியாத பல இதயங்களை கும்மி என்ற போர்வையில் இடை போட்டாலும் இவரும்  ஒரு படைப்பாளி!
http://www.theeraanathi.blogspot.fr/2013/09/blog-post_19.html.
வலையில் இப்ப இவர் ஓய்ந்தாலும் இவர் தொடர் போல என்னால் எழுத முடியாது !ம்ம் இவர்  எனக்கு உந்து சக்தி!http://poonka.blogspot.fr/2013/09/blog-post.html..
இவரும் சொல்லும் செய்தி படித்து மறந்து விட்டோம்!ஹீhttp://davidmeansbeloved.blogspot.fr/2014/04/blog-post_6073.html


உனக்கும் அன்பில் பலர் உண்டு தனிமரம் இது ரசிக்கும் பாடல் எழுதுவேன் விரைவில் !ஹீ! ஆமினா  குட்டிச்சுவர்க்கம்தொடர் பதிவு  அழைப்பு இன்னும் வலையில்!ஹீ
..


மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது