07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, April 29, 2014

அனைவரும் பள்ளிக்கூடம் செல்லலாம் வாங்க :)மீண்டும் பள்ளிக்கு போகலாம் :)
                                                                                     

படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு! 
பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு' 
                               கண்ணதாசன்.
ஒரு நான்குவயது சராசரி குழந்தை ஒரு நாளைக்கு நானூறு 
கேள்விகளுக்கு மேல் கேட்கும் .!!
தனது வாழ்நாளில் 1368 கண்டுபிடிப்புகளை உலகிற்கு 
அறிமுகப்படுத்திய தாமஸ் ஆல்வா எடிசன் மூன்று மாதங்கள் 
மட்டுமே பள்ளிக்கூடம் சென்றாராம் .
பல பிள்ளைகளுக்கு பள்ளி என்றாலே ஒரு கசப்பு அனுபவம் ..
அப்படிப்பட்ட கசப்பான சூழ்நிலையில் வளர்ந்தவர் தான்
 ப்ரெடரிக் ப்ரோபெல் .ஆகவே தன்னை போலன்றி பிற்கால 
சந்ததியாவது சுமூகமான சூழலில் கல்வி கற்கணும் 
என்ற ஆவலோடு விளையாட்டு முறை கோட்பாடுகளை
 கொண்ட கிண்டர் கார்டன் பள்ளி முறையை கண்டுபிடித்தார் .
ஒரு குழந்தை தன்னை முழு மனிதனாக உருவாக்கிக்கொள்ளும் 
இடம் தான்ஆரம்ப பள்ளிக்கூடம் .அந்த இடம்  நாம் ஒரு பூங்கா 
அல்லது மலர்வனத்துக்குள்நுழையும்போது ஒரு இனிய 
சூழ்நிலை போல மனதுக்கு ரம்மியமாக இருக்க வேண்டும் .
அப்படிப்பட்ட சூழ்நிலையை ஏற்படுத்தி  திடமான வருங்கால 
சந்ததியை உருவாக்க ஆரம்பிக்கப்பட்டவை கிண்டர்கார்டன் 
பள்ளிகள் .திரும்பி பார்ப்பது எவ்வளவு ஆனந்தமான ஒரு அனுபவம் 
தெரியுமா :) நான் சொல்வது சந்தோஷமான தருணங்களை !
பலருக்கு நிச்சயமாக ஆட்டோகிராப் படத்தின் ஞாபகம் !
வருதே! ஞாபகம்  வருதே பாடல் மிகவும் பிடிக்கும் 
எனக்கும்  மிகவும் விருப்பமான பாடல் . எனக்கும் சேரனுக்கும் 
ஒரு ஒற்றுமை :)பள்ளி நினைவுகளை மீட்டியதில் .
எனக்கு  முதல் வகுப்பு எடுத்த ஆசிரியரின் 
பெயர் ..மல்லிகா ..இன்னொருவர் பெயர் உமா ..அவர்களின் 
இருவரது திருமணத்துக்கும் நாங்க அப்போ சேலம் சென்றோம் .
எப்படி ஒன்றாம் வகுப்பில் நடந்த விஷயம் எனக்கு இன்னும்
 நினைவு இருக்கு என்று இருவருக்கு (அதிரா ,கலை )
மட்டும் சந்தேகம் வரும் :)
எனக்கு அந்த இருவரின் மாப்பிளைகளுக்கும் அத்திருமணத்தில் உறவுக்கார்கள் போட்ட ஒரு ரூபாய் 
நோட்டு மாலை ஆளுயரத்துக்கு இருந்தது கூட இன்னும் 
நினைவில் இருக்கின்றது :)..
சின்னஞ்சிறு வயதில் சில விஷயங்கள் அழுத்தமாக மனதில்
 வேரூன்றிவிடும் ..அதனால்தான் பெரும்பாலானவர்களுக்கு 
அவர்கள் ஆரம்ப பள்ளிஆசிரியர்கள் இன்னமும் மனதில் 
சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார்கள்  ...இப்போ 
அந்த பாடலை பார்த்துக்கொண்டே             
                                                                   அப்படியே அப்படியே வரிசையில் வந்து ஆரஞ்சு மிட்டாய் 
எடுத்துக்கோங்க  :)

                                                                      


இப்ப என் கூட வாங்க உங்கள் அனைவரையும் அவரவர் 
பள்ளிக்கூடத்துக்கு மீண்டும் அழைத்து செல்கிறேன்   ..
                                                                

                                                 

நான் முதன்முதலா கின்டர்கார்டன் சென்ற அனுபவம் எனக்கு 
இப்பவும் நினைவிருக்கு ...ஆனா அந்த காலத்தில் 
படம் எடுப்பது போன்ற விஷயங்கள் இல்லாததால் அச்சம்பவங்களை 
மனதில் மட்டுமே அசை போடமுடிகிறது ..ஆனா ரோஷினி குட்டி 
அவங்க அம்மா இப்பவே பதிவில் 
அழகா அத்தனை நினைவுகளையும் சேமித்து வைத்திருக்கிறார் .

அதைப்போல சந்தனமுல்லை அவங்க பாப்பா பப்புவுக்கு எப்படி
எல்லாம் பள்ளி பற்றிய விவரங்கள் சேகரிச்சு இருக்காங்கன்னு 
இங்கே பாருங்க 

கீதமஞ்சரி 
ஆஸ்திரேலிய பள்ளி கல்விமுறையை விளக்கி இருக்காங்க 
..


தம்பி செங்கோவி ஸ்கூல் போலீசா இருந்த விஷயத்தை இங்கே 
சுவாரஸ்யமா சொல்லியிருக்கார் ..ப்ளே ஸ்கூல் பற்றி அவர் 
சொல்லியிருப்பது அவ்வளவும் உண்மை தெரு வீதிதான் நமக்கு 
play school அக்காலத்தில் .
நம்ம சகோதரி ராஜி பள்ளி வாழ்க்கை முழுவதையும் 
கவிதையாக வடித்திருக்கார் இத்தொடர்பதிவில் 

என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை !இப்போ 
இதெல்லாம் நடைபெற சாத்தியமுமில்லை !பின்னே 
இவர் படிக்கும்போது மூன்றாம் வகுப்புவரை மூன்று ரூபாய் 
தானாம் பள்ளிக்கட்டணம் !!!

என் குட்டி தம்பி இங்கே சின்ன சின்ன ஞாபகங்களை 
அழகா எழுதியிருக்கார் :)

இந்த பதிவர் P .E .வகுப்பில் புல்லு பிடுங்கினதை சொல்கிறார் 
நீ பரவாயில்லை தங்கச்சி :) நாங்க கிரவுண்ட் முழுதும் 
குப்பை பொறுக்குவோம் எங்க பள்ளியில்  .

இவரது பள்ளிக்கால நினைவுகள் வாசிக்கும்போது எனக்கு 
வலித்தது ...இன்பமும் துன்பமும் சேர்ந்ததே வாழ்க்கை .
எதை சொல்ல :(

அடுத்தது இவர் :) என் கண்ணில் இது மட்டும் பளிச்சினு 
தெரிந்தது ..பள்ளியில் பேசற பிள்ளைங்க பேர  எழுத 
சொன்னா எழுதி அப்படியே ஆசிரியர்கிட்ட கொடுக்கணும் :) 
அதை விட்டுட்டு ..மேலும் சென்று படிங்க இங்கே 

இவ்வளவு புத்திக்கூர்மை பதினோரு வயசிலேயேவா !!! 
இந்த பதிவர் பாருங்க ஆறாம் வகுப்பு படிக்கும்போதே தலைமை 
ஆசிரியரிடம் இன்னொரு நண்பியை அழைத்து கொண்டு போய் ஸ்கூல் அட்மிஷன்  வேண்டுமென கேட்டிருக்கின்றார் :) 


இவர் எழுதும் ஒவ்வொரு கதையின் 
கதா பாத்திரமும் அப்படியே தத்ரூபம் போலிருக்கும்  :)
இவர் கற்பனையாக எழுதினாலும் அச்சம்பவம் யாருக்கோ 
எங்கோ நிஜ வாழ்வில் நடந்திருக்கும் :)
மீண்டும் சாம்புவை அனைவருக்குமே பிடிக்கும் :)

அனைவரும் உங்களது பள்ளி நினைவுகளை திரும்பி 
பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கின்றேன் .உங்கள் 
பிள்ளைகளும் திரும்பி  பார்க்க உதவியாக SCRAP 
BOOKS செய்து வையுங்க ..
நன்றி நண்பர்களே நாளை  வேறொரு தலைப்புடன் 
உங்களை மீண்டும் சந்திக்கின்றேன் .

Angelin .

71 comments:

 1. ஹா! இது சரியில்லை!!! தப்பு ஆட்டம் அஞ்சூஸ். ;)) //குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...// ஆங்கில வலைப்பூ போட்டா சீனா ஐயா திட்டுவாங்க. :-)

  ReplyDelete
  Replies
  1. ஆஅவ் :) முதல் வருகைக்கு நன்றி இமா :) scrap book தமிழில் கிடைக்கலை ...பெற்றோருக்கு பயன்படுமேன்னு ஆங்கில தளத்தின் சுட்டி அளித்தேன் ..மூணு ஆரஞ்சு மிட்டாய் எடுத்துக்கோங்க ..சீனா அய்யா கிட்ட சொல்லாதீங்க :)

   Delete
  2. நோஓஓஓஓஒ இப்பவும் நியூசிலாந்து:) தான் முதல் பின்னூட்டமா????? நான் ஒத்துக்க மாட்டேன் இது திட்டமிடப்பட்ட சதி :)... றீஈஈஈஈஈஈச்ச்சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :) இப்போ நான் கூப்பிட்டது இமா றீச்சரை:).. இதையும் நானே சொல்ல வேண்டிக்கிடக்கே சாமீஈஈஈஈஈஈஈ:)

   Delete
 2. //அப்படியே அப்படியே வரிசையில் வந்து ஆரஞ்சு மிட்டாய்
  எடுத்துக்கோங்க :)//

  இன்று சீக்கிரமாகவே வந்து நிறைய மிட்டாய்களை அள்ளிக்கொண்டு விட்டேன். சூப்பர் டேஸ்ட் ;)))))

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் .பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி அண்ணா :)

   Delete
 3. //திரும்பி பார்ப்பது எவ்வளவு ஆனந்தமான ஒரு அனுபவம்
  தெரியுமா :) நான் சொல்வது சந்தோஷமான தருணங்களை !
  பலருக்கு நிச்சயமாக ஆட்டோகிராப் படத்தின் ஞாபகம் !
  வருதே! ஞாபகம் வருதே பாடல் மிகவும் பிடிக்கும்
  எனக்கும் மிகவும் விருப்பமான பாடல் ..//

  ஞாபகம் வருதே! .............. ஞாபகம் வருதே ...............
  http://gopu1949.blogspot.in/2012/03/1.html

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அண்ணா எனக்கும் நினைவிருக்கு உங்க அக்காவுடன் நீங்க பள்ளி சென்ற முதல் நாள் ..மிக இனிமையான நினைவுகள் அல்லவா

   Delete

 4. வணக்கம்!

  ஆரஞ்சு மிட்டாய் அளித்திட்ட ஏஞ்சலின்
  சீரறிந்து வாழ்துகிறேன்! செந்தமிழ் - பாராள
  வண்ண வலைச்சரத்தில் மின்னும் பதிவெழுதத்
  திண்ணம் புகழின் திறவு!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கவியுடன் சேர்ந்த இனிய வாழ்த்துக்கும் மிக்க நன்றி அய்யா :)

   Delete

 5. வணக்கம்!

  ஆரஞ்சு மிட்டாய்
  ஆம்
  ஆறு- ஐந்து மிட்டாய் எனக் கணகிட்டுக்
  பதினொன்று மிட்டாய் எடுக்கச் சென்றேன்
  எட்டு மிட்டாய்கள் இருந்தன.
  இன்னும் நான்கு மிட்டாய்கள் வேண்டும்
  நாளை அதிகமாகக் கொட்டி வைக்கவும்!

  ஆறுடன் ஐந்தும் இணைந்தால் பதினொன்று!
  ஊறும் சுவையில் உடலுயிரே! - கூறுகிறேன்
  எட்டுமிட்டாய் நானுண்டேன்! இன்னும் இரண்டிரண்டு
  மிட்டாய் கொடுங்க விரைந்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. நல்லா இருக்கு இந்தக் கருத்து.

   Delete
  2. மிக அருமையான இன்சுவை கவிதை ..ஆரஞ்சு சுவையினும் இனிதாக இருக்கு ..மிக்க நன்றி கவிஞர் ஐயா

   Delete
 6. ஆரஞ்சு மிட்டாய் - ஞாபகம் வருதே ஞாபகம் வருதே இனிய நினைவுகள்...

  இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. முதலில் உங்களுக்கு ஸ்பெஷல் நன்றிகள் சகோ ..பதிவை போட்டதும் நான் தூங்க போயிட்டேன் ..நீங்க அனைவருக்கும் வலைசர பதிவு பற்றி INFO தந்ததற்கு நன்றிகள் .வருகைக்கும் ஆரஞ்சுமிட்டாய் நினைவுகளை ரசித்ததற்கும் மென்றும் நன்றி

   Delete
 7. Super. Thanks for introducing me and other bloggers too. I have forgotten about Sambu, thanks 4 reminding me of my little hero " Sambu".

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி வானதி :) உங்க லிட்டில் ஹீரோ ரியல் லைப் ஹீரோவா தான் நான் இன்னமும் நினைக்கின்றேன் .எங்காச்சும் குட்டிபிள்ளைகளை பார்த்தா இது சாம்புவா இருக்குமோ இல்லை யாயா வாக இருக்குமோன்னு தோன்றும் :)

   Delete
 8. நிறைய பேர் தெரியாதவங்க இருக்காங்க... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தம்பி :)

   Delete
 9. ஆரஞ்சுமிட்டாய் ! ஆஹா!! அறுபது வருடங்களாக எனக்குப் பிடித்த மிட்டாய்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி கெளதம் அண்ணா :) ஆரஞ்சு மிட்டாய் சுவைக்கு ஈடில்லை ..நான் இந்தியா வரும்போது தவறாமல் வாங்கி பெட்டியில் முதலில் வைப்பது இந்த மிட்டாய்களை

   Delete
 10. இனிய தருணங்களை அசைபோடவைத்த
  அருமையான பதிவுகளின் அணிவகுப்புகளுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. இனிய பின்னூட்டத்திற்கும் வருகைக்கும் அன்பான நன்றிகள் ராஜேஸ்வரியக்கா .

   Delete
 11. ஆரஞ்சு மிட்டாய் - அதுவும் பல வண்ணங்களில்... இதற்காகவே வந்தது போலாகிவிட்டது!

  என் சரிபாதியான ஆதியின் வலைப்பூவையும் [கோவை2தில்லி] இன்றைய பதிவில் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி ஏஞ்சலின்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி வெங்கட் நாகராஜ் :) ரோஷினி அம்மா மிக அருமையாக உங்க மகளின் பள்ளி நினைவுகளை சேமிக்கிறாங்க ..நானும் அவங்களைப்போல எழுதி சேமிக்க நினைச்சிருக்கேன் ..ஆரஞ்சு மிட்டாய் ..பலரின் பள்ளி கால நினைவுகளை கொண்டு வந்து விட்டது :)

   Delete
 12. அறிமுகத்திற்குமிக்க நன்றி...அதுவும் அந்த ஆரஞ்சு மிட்டாய் ஸ்டில் ஸ்கூல் டேஸ்க்கே கொண்டு போகிறது!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி செங்கோவி :) ஆரஞ்சு மிட்டாய் போலவே கோலிகுண்டு வடிவில் ஒன்று கிடைக்கும் ..புளிப்பு சுவையுடன் அதுவும் இப்போ கிடைக்குதான்னு தெரில :)

   Delete
 13. திரும்ப கிடைக்காத இனிய தருணங்களை அழகாக எழுதியிருக்கிறீங்க அஞ்சு. அருமையாக தளங்களின் தொகுப்பு. பள்ளி நாட்களில் சாப்பிட்ட ஆரஞ்சு மிட்டாய் ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே. விருப்பப் பாடல்.பாராட்டுக்கள் அஞ்சு.
  அறிமுகப்படுத்திய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. பள்ளிகால நினைவுகள் பசுமையாக இன்னமும் இருக்கு ...ஆமாம் ப்ரியா சில நேரத்தில் அப்படியே இருந்திருக்ககூடாதா என்ற ஆதங்கம் வரும் ...

   Delete
 14. பாடசாலை ஞாபகங்கள் பசுமை மாறாதவை.ஆரஞ்சு மிட்டாய்.......ஹூம்......எங்கள் பிள்ளைகளுக்கு.......ஊஹூம்...........என்னத்த சொல்ல?புதிய பல பதிவர்கள் அறிமுகம் கிட்டியது,நன்றி தேவதைத் தங்கச்சி!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி யோகா அண்ணா :) ஆரஞ்சு மிட்டாய் தனியா எடுத்து வச்சிருக்கேன் உங்களுக்கு.. பள்ளிகால நினைவுகள் பசுமையாக இன்னமும் இருக்கு ..நான் அணிந்த உடை கூட நினைவிருக்கு முதல் நண்பி பெயர் மஞ்சு ,நண்பன் பெயர் பரணி :)

   Delete
 15. முன்னாடி வந்தவங்க(அவங்களுக்கு முன்னாடியே விடிஞ்சுடுது)மிட்டாயை சுருட்டிக்கிட்டு/சுட்டுக்கிட்டுப் போயிட்டாங்க!

  ReplyDelete
 16. நேற்று தேன் மிட்டாய் போல பகிர்வு, இன்று ஆரஞ்சுமிட்டாயா?மிக அருமை.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஆசியா :) வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .:) ஆரஞ்சு மிட்டாய் எனக்கு மிகவும் பிடிக்கும்

   Delete
  2. நாளைக்கு மிட்டாய் வாணாம்ம்.. அவித்த கோழி முட்டை தாங்க அஞ்சு:)

   Delete
  3. எனக்கு பால்க்கோப்பி தாங்கோ!ஹீஈஈஈஈஈஈ

   Delete
 17. அறிமுகங்கள் மிட்டாய் போல் தித்தித்து கொண்டுள்ளது.வாழ்த்துக்கள் ஏஞ்சலின்.தேன் மிட்டாய் ஆரஞ்சு மிட்டாய் போல் குச்சி மிட்டாய் சீனி மிட்டாய் ஜவ்வு மிட்டாய் என்று ஜாமாய்ங்க...:)

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஸாதிகா :) நான் இதற்க்கு சீனி ஜவ்வு மிட்டாய்தான் தர யோசிச்சேன் ..கிளாஸ் ரூம் அழுக்காககூடாதென்று
   ஆரஞ்சு மிட்டாய் கொடுத்தேன் :)

   வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

   Delete
 18. அன்பின் சகோதரி..
  நேத்து தேன் மிட்டாய்.. இன்னிக்கு ஆரஞ்சு மிட்டாய்.. நாளைக்கு கமர்கட்டா - இல்லே கடல உருண்டையா..

  என்னை மீண்டும் எனது பள்ளிக்குள் அழைத்துச் சென்றது தங்கள் பதிவு..

  //உங்கள் பிள்ளைகளும் திரும்பிப் பார்க்க உதவியாக..//

  நியாயமான கருத்து.. வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் ஐயா வருகைக்கும் கருத்துக்கும் :) ஆனா நீங்க சொன்ன ரெண்டும் இல்லை நாளைக்கு :)

   Delete
 19. //ஒரு நான்குவயது சராசரி குழந்தை ஒரு நாளைக்கு நானூறு
  கேள்விகளுக்கு மேல் கேட்கும் .!!///

  எனக்கொரு டவுட்டு :) அப்போ ஒரு “சுவீட் 16” குழந்தை :) (என்னைப்போல என வைத்துக் கொள்ளுங்கள்.. ஒரு உதாரணம் சொன்னேனாக்கும் :)) ஒரு நாளைக்கு எத்தனை கேள்விகள் கேட்கும் எனச் சொல்லுங்க அஞ்சு :)

  ReplyDelete
  Replies
  1. Garrrrr:) @vanathy i need your help please

   Delete
 20. வலையுலக அறிமுகங்கள் அத்தனையும் அருமை.. அனைவருக்கும்.. அதிராவின் வாழ்த்துக்கள்.

  நீண்ட கால இடைவேளைக்குப் பின், இப்படி எல்லோரும் கலகலப்பாக, அதே.. உற்சாகத்தோடு இப்பவும் எல்லோரும் பதிவெழுதிக் கொண்டிருப்பதை பார்க்க மிக்க மகிழ்வாக இருக்கு. விரைவில் எல்லோர் வீட்டுகும் போகோணும்.. ரீ குடிக்கத்தான்:)

  ReplyDelete
  Replies
  1. நண்பர்கள்ஸ் எல்லாரும் கெட்டிலை on பண்ணுங்க அதிஸ் உங்க வீட்டுக்கு வராங்க :)

   Delete
 21. ஜல் அக்கா நேற்று என்னை பக்கம் பக்கமா தேடியிருக்கிறா... மற்றும் கோபு அண்ணன், நேசன், அம்முலுவும் விசாரித்திருக்கினம்.... மிக்க மகிழ்ச்சி.

  ஆனா பாருங்கோ எங்கட றீச்சர் மட்டும் கண்டுகொள்ளவே இல்ல :( அஞ்சு ஒரு ரிசூ பிளீஸ்ஸ்ஸ்.. பிங் கலரிலதான் வேணும் :))... என்ன இண்டைக்கு என் சிஷ்யையின் அட்டகாசம் குறைஞ்சிருக்கே:).. இது நல்லதுக்கில்ல எனச் சொல்லிடுங்க அஞ்சு... எனக்கு ஒரேஞ் மிட்டாய் பிடிக்கும் :)

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அதிராவ் :) உங்க சிஷ்யை பிசியாம் ...நான்தான் படிப்புதான் முக்கியம் கலை நல்லா படி என்று சொல்லி வச்சேன் (இல்லன்னா இங்கே பட்டாசு சத்தம் கேட்டிருக்குமே )

   Delete
 22. மிச்ச மீதி இருந்த எல்லா ஆரஞ்சு மிட்டாய்யும் எனக்கே.... எடுத்துட்டேன்....

  என் ஸ்கூல் பதிவை பகிர்ந்தமைக்கு நன்றி அக்கா....

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பிரகாஷ் :)


   Delete
 23. ஸ்கூல் படிக்கும் போது ஐஸ் கட்டியை டம்ளரில் நிரப்பி ஒரு குச்சி வச்சு சர்பத் ஊத்தி, ஐஸை எடுத்து தருவாங்களே.... செம டெஸ்ட்ஆ இருக்கும்.....///// இதை உங்க ஞாபகத்துக்கு வரலியா? அக்கா...

  ReplyDelete
  Replies
  1. ஆங்!!! அது ஐஸ் ப்ரூட் .ஜிகர்தண்டா .. என்று சொல்வாங்க ..நினைவுக்கு வந்தது ..கிளாஸ் ரூம்ல ஐஸ் வழிஞ்சு ஓடுமே அதான் அதை சேர்க்கலை :)

   Delete
 24. பள்ளி ஞாபகங்களை கிளறிவிட்ட பதிவர் அறிமுகங்கள் சிறப்பு! அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க சுரேஷ் :) வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி

   Delete
 25. காலித் தட்டுதான் எனக்கா!?

  ReplyDelete
 26. வாங்க தலைவீ :) உங்களுக்கு தனியா ஒளிச்சு வச்சிருக்கோம் :)
  உங்க பதிவு //நான் சின்ன பிள்ளையா இருக்கும்போது // தலைப்பில் நீங்க எழுதுவீங்களே
  அப்பத்திலருந்து உங்களுக்கு கொடுக்க நிறைய சாக்லேட்ஸ் சேர்த்து வச்சிருக்கேன் :)

  ReplyDelete
 27. ஆரஞ்சு மிட்டாய் போலவே செமை டேஸ்ட் இன்று உங்கள் அறிமுகங்கள்....

  ReplyDelete
 28. வித்யாசமான ஸ்வாரஸ்யமான தொகுப்பு அக்கா! பாராட்டுக்கள். இணைப்புக்களுக்குப் போய்ப்படிக்க நேரமிருக்குமோ இல்லையோ தெரியல..இப்போதைக்கு இங்கே படித்துட்டேன். தெரியாத ஆட்கள் நிறைய இருக்கிறாங்க. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்!

  @மிஸ்.மியாவ்: அல்லோஓஓஓஓ மிஸ்.மியாவ்! எங்களையெல்லாம் நினைவிருக்கா உங்களுக்கு? ;)

  ReplyDelete
 29. வந்துட்டேன் .................

  ReplyDelete
  Replies
  1. வாத்துக்கூட்டம் வந்திட்டோம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!ஹீ

   Delete
 30. அப்படிப்பட்ட கசப்பான சூழ்நிலையில் வளர்ந்தவர் தான்///////////////////நானும் நானும்

  ReplyDelete
  Replies
  1. ஐயோஒ00000000 நான் பள்ளிக்கூடம் போகவில்லை!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

   Delete
 31. ஆஆஆஆஆஆஆஅ நானும் அறிமுகமே ....................

  ReplyDelete
 32. அருமையான் பாடல் ! அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்§ பாடசாலைக்காலம் தனித்துவம் தான்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நேசன்

   Delete
 33. பால்யத்தின் நினைவுகளை யாரால்தான் மறக்கவியலும்? அதிலும் பள்ளிக்கூட நினைவுகள் பசுமரத்தாணியல்லவா? அறிமுகப் பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். என்னுடைய பதிவையும் இங்கு அறிமுகப்படுத்தியிருப்பதற்கு மிக்க நன்றி ஏஞ்சலின். சிறப்பான அறிமுகத்துக்குப் பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கீதா

   Delete
 34. அனைவருக்கும் வாழ்த்துக்கள்....அந்த ஆரஞ்சு மிட்டாய் லேசா ஒரு புளிப்பு புளிக்கும் பாருங்க அடடா...!

  ReplyDelete
  Replies
  1. :)அமாம் .வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மனோ

   Delete
 35. சின்னஞ்சிறு வயதில் சில விஷயங்கள் அழுத்தமாக மனதில்
  வேரூன்றிவிடும் ..அதனால்தான் பெரும்பாலானவர்களுக்கு
  அவர்கள் ஆரம்ப பள்ளிஆசிரியர்கள் இன்னமும் மனதில்
  சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார்கள் //
  உண்மை , அழகாய் சொன்னீர்கள்.
  ஆரஞ்சுமிட்டாய் எடித்துக் கொண்டு சுவைத்துக் கொண்டு படிக்கிறேன்.
  வாழ்த்துக்கள் உங்களுக்கும் இன்றைய பதிவர்களுக்கும்.

  ReplyDelete
  Replies
  1. .வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கோமதி அக்கா

   Delete

தமிழ் மணத்தில் - தற்பொழுது