07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, April 14, 2014

’என் மன வானில்’ செல்வி காளிமுத்து

போற்றியோ நமசிவாய!
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்,தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறு!

                  என் இனிய வலைச்சரம் நட்புக்களே!வெறும் மொக்கைகளையே இதுவரை எழுதிவந்த உங்கள் அன்புக்குரிய செல்வி(பாரதிராஜா பாணியில் படிக்கவும்) ,இன்று ஏதோ கொஞ்சம் அர்த்தமுள்ள பதிவுகளை எழுத  ...சாரி ..எழுத அல்ல அறிமுகப்படுத்தவுள்ளேன்.சான்றோர்களும் ஆன்றோர்களும் நிறைந்த இவ்வரிய வலைச்சரத்தில் , என்னை எழுதச்சொல்லி வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருக்கும் தம்பி தமிழ்வாசி ,அவருக்கு துணைப்போன  நாஞ்சில் மனோ அவர்கள் இருவருக்கும் என்  முதற்கண் வணக்கம்.அழைப்பு கொடுத்த ஆசிரியருக்கும் அடியேனின் வணக்கங்கள்!
                என்னைப்பற்றி சொல்வது ,அவ்வளவு சுலபம் அல்ல(அங்கே சொல்லும்படியா உருப்படி ஒன்னுமே இல்லையே)!.ஈரோட்டில் பிறந்து ,தனது தந்தையால் (தாத்தா ராமசாமி),மலேசிய திருநாட்டுக்கு அழைத்து வரப்பட்ட சாதாரண லாரி ஓட்டுனர் திரு.காளிமுத்து (அப்பா) ,கேரளாவில் பிறந்து வேலை நிமித்தமாக மலேசியாவில் குடியேறிய திரு.குஞ்சம்பு அவர்களின் மகள் திருமதி அமிர்தம் (அம்மா) அவர்களின் ஏழு பிள்ளகளில் ஐந்தாவது பெண் பிள்ளை அடியேன்!எங்களை ஈன்றெடுத்து, தமிழ்மொழியை கற்க செய்த என் பெற்றோர்களை முதலில் வணங்கி ,இந்த பதிவைத் தொடருகிறேன்.
                                                                 

         ஒரு  தோட்டத்தமிழ்ப்பள்ளியில் என் ஆரம்பகல்வியைத் தொடங்கினேன்.
பல்கலைக்கழகம் வரை போக ஆசைதான் (ஒழுங்காக படிச்சிருக்கனுமே?) வாய்ப்பும் வசதியும் வெகு தொலைவில் இருந்தமையால்,20 வயதிலே வேலைக்குச் சென்றேன்.மழலைக்கல்வி ஆசிரியையாக பொறுப்பேற்கும் முன்பு ,நான்  மலேசியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஜப்பானிய நிறுவனம்(குளிரூட்டி தயாரிப்பு) ஒன்றில் ஓர் சாதாரண ஊழியராகச் சேர்ந்தேன். வெளிநாட்டு வேலைப்பயிற்சி ,பதவி உயர்வு என்று படிப்படியாக   ரொம்ப பிசியான ஒரு டிபார்ட்மெண்ட்டில்(shipping dept) போய் உட்கார்ந்தேன்.உலகில் உள்ள ஐந்து கண்டங்களுக்கும் குளிரூட்டி ஏற்றுமதி துறையில் சுமார் 7 வருடங்கள் அனுபவம் பெற்றுக்கொண்டேன்.
            அங்கேதான் கணினி ,ஆங்கிலம் மற்றும் மனிதர்களின்’ நிறங்கள் ’என்று  பல விசயங்களையும் கற்றுகொண்டேன். நல்ல வருமானம் ஆனால் நிம்மதியில்லா வேலை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி என்றால் சும்மாவா?சதா வேலை வேலை.பிறகு பிள்ளைகளுக்காக அந்த வேலையைத் துறந்து ,வீட்டில் இருந்து வறுமையிலும் வாடினேன். பிள்ளைகள் கொஞ்சம் வளர்ந்த பிறகே ஆசிரியையாக  சேர்ந்தேன். ஆனாலும் கற்றல் கற்பித்தல்  ஏதாவது ஒரு வழியில் அரங்கேறிக்கொண்டுதான் இருந்தது.
            உண்மையைச் சொல்லப்போனால் வாசிக்கும் பழக்கமும் எழுதும் பழக்கமும்  எனக்கு வர முக்கிய காரணமாக விளங்கியது ,பெரிய பெரிய அறிஞர்கள் எழுதிய புத்தகமோ, ஆன்மீக புத்தகங்களோ ,ஆங்கில நாவல்களோ அல்லவே அல்ல.எங்கள் அண்டை நாடான சிங்கப்பூரில் இருந்து வந்த ’இந்தியன் மூவி நியூஸ்’  சினிமா இதழ்தான்.ஆம்!மாதா மாதம் அந்த இதழைப் படித்தால்தான் வேலை ஓடும் ,மூளை வேலை செய்யும் .அப்படி ஒரு பைத்தியம் .அதனைத் தொடர்ந்து , தமிழ்நாட்டில் இருந்து வந்த ‘பொம்மை’ இதழ் ,பிறகு ஆனந்த விகடன் ,குமுதம் போன்ற இதழ்கள்தான் என்னை வாசிப்பு உலகத்துக்கு இட்டுச் சென்றன.இன்னும் நான் ஆ.விகடனைப் பைத்தியமாய் படிப்பது பலருக்கு தெரிந்திருக்கும்.ஆங்கில இதழ் என்று இன்னமும் நான் வாசிப்பது Readers digest.
          மேலும் என் தமிழ்மொழியை  நான் வளப்படுத்திக்கொள்ள பேருதவியாக இருந்து வந்தது, எங்கள்  ஊர் உள்ளூர் பத்திரிக்கைகள் மற்றும் தொன்றுதொட்டு நான் விடாமல் கேட்டுவரும் எங்கள் ஊர் அரசு தமிழ் வானொலிதான்(மின்னல் பண்பலை).அது தவிர பேச்சாளர்கள் யாரும் பேசும்போது ,உற்றுக்கவனிப்பேன் (நமக்குதான் பிறர் வாயை நோக்கி இருப்பதே ஒரு பொழப்பாச்சே).எங்கள் ஊர் பத்திரிக்கை ஆசிரியரான திரு.ஆதிகுமணன் (தற்போது நினைவில் மட்டுமே வாழும்) அவர்தான்  என் எழுத்துலகின் முன்மாதிரி என்றும் சொல்லுவேன்.
           சில விசயங்களை அதாவது அரசியல் மற்றும் நியாயமான செய்திகளை (பயந்துகொண்டுதான்)தைரியமாக எழுத தூண்டியவை அவருடைய எழுத்துக்கள். அவரைப்பற்றி நிறைய விசயங்கள் நீண்டு கொண்டே போனாலும் ,எனக்கு திகில் நிறைந்த இரண்டு வரி ஒரு மர்ம கதையைச் சொல்லிய அவரை மறக்கத்தான் முடியுமா?அதாவது ’உலகின் இறுது மனிதன் ,நீங்கள்.ஓர் அறையில் தள்ளி பூட்டப்பட்டிருகும் போது,கதவு தட்டப்படுகிறது’.இது மாதிரியான விசயங்கள் மிக எளிதாய் எங்கள் பத்திரிக்கையில் எழுதி புகழ்பெற்ற பத்திரிக்கை ஆசிரியர். அவர் பாணி எனக்கு கொஞ்சம் கொஞ்சம் வரும்.புத்தகங்கள் ,மெடியாக்கள் ஒருபுறம் இருக்க முகநூல் மற்றும் வலைப்பூவில்  நான் கற்றது நிறையவே என்று கூற கடமைப்பட்டிருக்கேன் என்றால் அது மிகையாகாது.
          எப்போதாவது மலேசியா வானொலி மற்றும் பத்திரிக்கைக்களுக்கு அக்கடான்னு எழுதிக்கொண்டிருந்த என்னை முகநூலுக்கு அழைத்தது ஓர் உறவு (சைத்தான் எந்த ரூபத்தில் எல்லாம் வரான் பாருங்க?)அவுங்களை நீங்களும் இப்போ திட்டுவிங்களே? 2011 -இல் முகநூலுக்கு என் அக்காவால் கட்டாயப்படுத்தி இழுத்துவரப்பட்ட அந்த சமயம் நண்பர் கே.ஆர் விஜயனின் நட்பு அக்கா மூலம் கிடைக்கப்பெற்றேன். ’முகநூலில் சும்மா வெட்டியாக பொழுதைக் கழிக்காமல் ஏதேனும் உருப்படியாக எழுதுங்கள் டீச்சர்’ ,பதிவுலகில் பல நல்ல மனிதர்களைக் காணலாம்,நேரமும் அங்கே பயனான வழியில் கழியும்என்று என்னையும் ஒரு பதிவராக உருவாக்கிய பெருமை அன்பினிய நண்பர் திரு.கே.ஆர். விஜயனைச் சேரும்.
                      பதிவுலகம் என்பது ஏதோ பெரிய இடத்து சமாச்சாரம் என்கிற பயம் இன்னும் என்னுள் இருந்துகொண்டிருக்கிறது.எழுத்துலக ஜாம்பவான்கள்,இலக்கியவாதிகள்  வசிக்கும்   கூடாரம் என்பதுதான் பதிவுலகம்என்றே நான் நினைத்துகொண்டு ,என்னுள் தோன்றுவதை  கொஞ்சம் கிறுக்கி வச்சிட்டு போவேன்.ஒரு விசயத்தை ஆராய்ந்து நிறைய ஹோம்வெர்க் எல்லாம் செஞ்சி பிறகு எழுதுவது எனக்கு எப்போதுமே ஒத்து வராது(அதுக்கு கொஞ்சம் அறிவும் இருக்கனும் அல்ல?).சோ வெறும் அனுபவங்களை  மட்டும் எழுத்துக்களாக்க  எனக்கு ரொம்ப விருப்பம்!என் பதிவைப்படிக்கும் வாசகர்களுக்கு இது புரியும் என்று நினைக்கிறேன்.நேரம் கிடைக்கும்போது மட்டும் உட்கார்ந்து எழுதி அதை மீள்பார்வைக்கூட செய்யாமல் உடனே அரங்கேற்றிவிடும் பழக்கமும் உண்டு. ’என் மன வானில்’ என்ற தலைப்பில் நான் கிறுக்கிவைத்த எழுத்துக்களை வாசிக்க என் வலைத்தளத்தைப் பின்பற்றுங்கள் :
                                                      http://skselvi.blogspot.com/


19 comments:

  1. அம்மா... ஆரம்பமே இப்படி அசத்துறயம்மா... நண்பர் விஜயனுக்கும் நன்றிம்மா... (சிவாஜி பாணியில் படிக்கவும்) ஹிஹி...

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அருமையான அறிமுகம்
    முக நூலில் கலக்கும் எஸ்.கே தான் நீங்கள்
    என புகைப்படம் மூலம்தான் அறிந்தேன்
    மிக்க சந்தோஷம்
    விஜனுக்கும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete

  3. வணக்கம்!

    சித்திரைத் திங்களில் முத்திரை தான்பதித்து
    இத்தரை போற்ற எழுதுகவே! - நித்திரை
    நீங்கி உலகம் நிமிரட்டும்! இன்றமிழ்
    ஓங்கி வளரட்டும் ஓது!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete

  4. இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. அன்பின் இனிய புத்தாண்டு
    நல்வாழ்த்துக்கள்!..
    வாழ்க வளமுடன்!..

    ReplyDelete
  6. அன்பின் செல்வி காளீமுத்து - சுய அறிமுகம் நன்று - முதல் பதிவு அருமை - தொடர்க - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  7. சுய அறிமுகம் அருமை.

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  9. அக்கா, முதல் பதிவே சூப்பர். உங்களைப் பற்றி நிறைய தகவல்கள் அறிந்துகொண்டேன். கலக்குங்க...

    ReplyDelete
  10. வண்டி ஸ்டார்ட் ஆயிடுச்சி....................!

    ReplyDelete
  11. ஆரம்பமே நாலாவது கியர்ல தொடங்கிருச்சே இலியாஸ்...!

    ஆ...தமிழ் டீச்சரே இங்கே டீச்சரா வந்துட்டாயிங்க...வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  12. வணக்கம் டீச்சர் !

    ReplyDelete
  13. வணக்கம்! தமிழ்புத்தாண்டில் வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்ற தங்களுக்கு தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்! இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்! உங்கள் தளம் இது வரை சென்றதில்லை! சென்று பார்க்கிறேன்! நன்றி!

    ReplyDelete
  14. இனிய சித்திரைத் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  15. சிறப்பான சுய அறிமுகம்.
    தங்கள் வலைப்பூவிலிருந்து குறைந்தபட்சம் சுமார் ஓரளவு ஏறக்குறைய 5 பதிவுகளையாவது குறிப்பிட்டிருக்கலாமே?

    ReplyDelete
  16. சுய அறிமுகம் மிகவும் அருமை. வருக. வருக.

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. ஒரு ஆசிரியையே,ஆசிரியையாகப் பார்ப்பதில் மகிழ்ச்சி!//நல்லா இருக்கீங்களா டீச்சர்?

    ReplyDelete
  19. சிறப்பான சுய அறிமுகம். இதுவரை உங்கள் பதிவுகள் படித்ததில்லை. படிக்கிறேன். வாரம் முழுவதும் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது