07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, April 8, 2014

வித்தியாசமான பயணங்களும்..... அனுபவங்களும் !!

எனது வலைதளத்தை பொதுவாக எல்லோரும் பயண கட்டுரைகள் என்று வகைபடுத்துவதை நான் அதிகம் விரும்புவதில்லை, நீங்கள் கூர்ந்து கவனித்தால் அது ஒரு அனுபவங்களின் தொகுப்பு என்பது புரியும். ஒரு பயணத்தில் சாப்பிடுவது, தங்கும் இடம், சந்திக்கும் மனிதர்கள், சென்ற இடங்கள், அனுபவித்த அனுபவங்கள் என்று நிறைய இருக்கும், அதை செதுக்கி ஒவ்வொன்றையும் உங்களுடன் பகிர்ந்துகொண்டிருக்கிறேன். எனது பதிவுகளை படிக்கும் எல்லோரும் எப்படி இவ்வளவு வித்யாசமான இடத்தை அல்லது உணவகங்களை கண்டு பிடிக்கிறீர்கள் அல்லது வித்யாசமான அனுபவங்களை தேடி செல்கிறீர்கள் என்று கேட்பதுண்டு........ நீங்கள் புதியவராக இருந்தால் அப்படி என்ன வித்யாசம் எனது பதிவுகளிலும், பயணங்களிலும் இருக்கிறது என்பதற்கு ஒரு சாம்பிள் பாருங்களேன் !!இந்த முறை மூன்று நாள் மீட்டிங் என்று பெல்ஜியம் சென்று இருந்தேன். ஏர்போர்டில் இருந்து நான் டாக்ஸி எடுத்தபோதே அவர் அங்கேயா தங்குகிறீர்கள் என்று வியப்புடன் பார்த்தார். நான் அங்கே செல்லும் வரை அதை பற்றி தெரியாது ஆகையால் டாக்ஸி ஒரு தேவாலயம் முன்பு நின்றபோது நான் டிரைவரை பார்த்து இங்கு ஹோட்டல் எங்கே இருக்கிறது என்று கேட்க அவர் என்னை ஒரு புன்னகையுடன் பார்த்து இதுதான் ஹோட்டல் என்று தேவாலயத்தை காண்பித்தார் ! எனது பைகளை இறக்கி விட்டு நிமிர்ந்தபோது ஒரு தேவதூதன் சிலையாய் ஆசிர்வதித்து கொண்டு இருந்தார் !இடியாப்பம்..... இது நமது தமிழ்நாட்டில் அவ்வளவாக பேமஸ் இல்லை என்று சொல்லலாம். எந்த ஹோட்டல் சென்றாலும் இட்லி, தோசை, சப்பாத்தி, சாப்பாடு, வெண்பொங்கல், பூரி என்றுதான் இருக்கும். பஞ்சு போன்ற, வெள்ளையாய், நூல் போல இருக்கும் இடியாப்பம் அதற்க்கு தொட்டு கொள்ள குருமா அல்லது தேங்காய் பால் எல்லாம் கொடுக்கும் ஹோட்டல் என்பது மிகவும் குறைவே ! சிறு வயதில் அம்மா இடியாப்பம் செய்து அதற்க்கு தேங்காய் பால் ஊற்றி அதன் மேலே சீனி போட்டு சிறிது தேங்காய் துருவலையும் மேலே போட்டு  தரும்போது, ஒவ்வொரு வாய் எடுத்து வைக்கும்போதும் இருந்த அந்த சுவை இன்றும் நினைவுக்கு வரத்தானே செய்கிறது ?! வெளிநாடுகள் சென்று பல நாட்கள் தங்கும்போது, படத்திற்கு போவதை விட எங்காவது வித்தியாசமாக ஏதாவது ஷோ நடக்கிறதா என்று விசாரிப்பேன். இப்படியாக பல வேர்ல்ட் பெஸ்ட் ஷோ பார்த்து இருக்கிறேன்....ஆனால் எப்போதுமே மனதுக்குள் ஒரு ஏக்கம் இருக்கும், ஏன் நமது இந்தியாவில் இப்படி ஒரு வித்தியாசமாக செய்வதில்லை என்று. எப்போதுமே நமக்கு சினிமாதான் பொழுதுபோக்கு, அப்படி இல்லையென்றால் கர்நாடக சங்கீதம் அல்லது மேடை நாடகம், ஆனால் அதில் எல்லாம் ஒரு செயற்கை இருக்கும், ஒன்ற முடியாது. அப்படி இருக்கும் போதுதான், சிங்கப்பூரில் இந்த ஷோவை பார்த்தேன், அசந்துவிட்டேன். 


 
சீனா - ஒரு வித்யாசமான நாடு ! இன்றும் பசுமையாக நினைவிருக்கிறது, முதன் முதலாக அங்கு சென்று இருந்தபோது உணவிற்கு கஷ்டப்பட்டது ! அவர்களின் உணவு பொதுவாக வேக வைக்கபட்டிருக்கும், அவர்கள் எல்லாவற்றையும் சாபிடுவதாலும், அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்பதாலும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானேன். பல நாட்கள் கொலை பட்டினிதான், பிரட் வாங்கி வந்து சாப்பிட்டு காலத்தை ஓட்டினேன். பின்னர் அங்கு அடிக்கடி செல்ல ஆரம்பித்து, பின்னர் எல்லாவற்றையும்....... மீண்டும் சொல்கிறேன், எல்லாவற்றையும் சாப்பிட்டேன், என்ன டேஸ்ட்தெரியுமா ! இதன் சிறப்பு என்பது இவர்கள் மலையை குடைந்து அதன் நடுவே மன்னரை அடக்கம் செய்ததும், அவர்களின் தொழில் அறிவும், சிறிய டெரகோட்டா வீரர்களும்தான் ! ஒரு பெரிய மலை, அதை வெகு நேர்த்தியாக குடைந்து, அதன் நடு வரை சென்று அங்கு மன்னரையும், அந்த பாதையின் இரு பக்கங்களிலும் அவர்களின் குடும்பத்தையும் புதைத்து இருக்கின்றனர். அந்த மலையை குடைந்து எடுத்த நேர்த்தி உங்களை கண்டிப்பாக வியக்க வைக்கும்.


சிறுபிள்ளையாவோம் - சேமியா ஐஸ் !!

 
வாழ்க்கையில் மிக சிறந்த பகுதி என்பது நமது குழந்தை பருவம்தானே. நமக்கு வயது ஆக ஆக நாம் என்னதான் வளர்ந்தாலும் மனதில் அந்த குழந்தைப்பருவம் மட்டும் மாறாமல் இருக்கும் இல்லையா !! நான் என்னதான் வெளிநாடு, பல இடங்கள் சென்றாலும் அதில் எல்லாம் கிடைக்காத சந்தோசம் ஒரு குச்சி ஐஸ் பார்த்ததும் கிடக்கிறது என்பதுதான் உண்மை. எவ்வளவோ உணவகங்கள் சென்று ருசியாக நிறைய உணவு உண்டு இருந்தாலும் இருந்தாலும் ஒரு பஞ்சு மிட்டாய் கிடைக்கும்போது நிறைய சந்தோசம் கிடைப்பது நிஜம் இல்லையா. இப்படி நான் சென்ற பயணத்தில் சிறுபிள்ளை ஆகி இருந்திருக்கிறேன்......


மறக்க முடியா பயணம் - நிருத்யாகிரம், பெங்களுரு

ஒரு மலை கிராமம், அங்கு சுத்தமான காற்று, அங்கு ஒரு குருகுலம், காய்கறி, பழம் என்று எல்லாமே அவர்களே பயிர் செய்து கொள்கின்றனர், சுத்தமான கிராமத்து சூழல் என்றெல்லாம் இருந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும் ?! பெங்களுருவில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் நிருத்யாகிரம் (Nrityagram), என்னும் குருகுல முறையில் நாட்டிய பயிற்சி அளிக்கும் பள்ளி அப்படிதான் இருந்தது ! நிறைய பேர் என்னிடம் இதை பற்றி சொல்லி இருந்தாலும், சமீபத்தில்தான் அங்கு சென்று வர முடிந்தது. ஒரு அருமையான இயற்க்கை சூழல் இருக்கும் இந்த இடத்திற்கு சென்று வந்ததில் இருந்து உலகம் எவ்வளவு அழகு என்று தோன்றிக்கொண்டே இருந்தது.....!!


சோலை டாக்கீஸ் - வினோதமான ட்ரம்ஸ்

பதிவுகள் எழுதும் நண்பர்கள் தான் ரசித்த இசையை, பாடல்களை யுடியூப் வழியாக பகிரும்போது அதை ரசிப்பவன் நான். கடல்பயணங்கள்  தளத்திலும்  ஆரம்பத்தில் நான் இளையராஜா, ரகுமான் பாடல்களை "சோலை  டாக்கீஸ்" என்ற தலைப்பில் பகிர்ந்துக்கொள்ள ஆரம்பித்தேன். ஒரு முறை  ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகர் சென்று இருந்தபோது விக்டோரியா  மார்க்கெட்டில் சுற்றி கொண்டு இருக்கும்போது ஒரு இசை தவழ்ந்து வந்தது, மனதை என்னவோ செய்தது . சென்று பார்த்தபோது ஒரு தெரு கலைஞன் ஒரு வினோதமான வாத்தியத்தில் வாசித்து கொண்டு இருந்தான், ஆனால் அதில் இருந்து வந்த இசை அற்புதம் எனலாம், உங்களை அப்படியே கட்டி போடும் இசை ! நான் மீண்டும் சோலை டாக்கீஸ் எழுத ஆரம்பிக்கும்போது ஒன்று மட்டும் புரிந்தது...... உலகத்தில் பல வகையான இசை இருக்கிறது, இளையராஜாவும் - ரகுமானும் மட்டுமே இல்லை என்பது. 


என்ன நண்பர்களே, எனது தளத்தில் நான் எழுதும் பதிவுகள் எப்படியெல்லாம் இருக்கிறது என்று சாம்பிள் பார்த்துவிட்டீர்கள். சரி, அடுத்த பதிவில் வாருங்கள் எனது நண்பர்களின் பதிவுகளை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்..... அவர்களது பதிவுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம் !!

12 comments:

 1. படங்களுடன், தகவல்களுடன், முக்கியமாக நிஜ அனுபவங்களுடன் - அதற்காக எத்தனை சிரமங்களையும், சவால்களையும் சந்திக்கிறீர்கள் என்பதையும் அறிவேன்... உங்களின் ஒவ்வொரு பதிவும் சிறப்பு தான்... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. கவனிக்க : சிறுபிள்ளையாவோம் - சேமியா ஐஸ் !! and
  மறக்க முடியா பயணம் - நிருத்யாகிரம், பெங்களுரு - இவை இரண்டும் (வரிகள் அனைத்தும்) தளத்தின் மைய அகலத்திற்கு தாண்டி சென்றுள்ளது...

  ஆனாலும் அந்த நடனம் (போஸ்...? ஹிஹி) மிகவும் பிடித்திருக்கிறது...!

  ReplyDelete
 3. ஆஹா.... நாட்டியம் ஆரம்பமாகட்டும்!!!!!

  ReplyDelete
 4. தங்களுடைய பதிவுகள் ஒவ்வொன்றும் சிறப்பாக இருக்கின்றன.
  நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 5. தல, கலக்கறீங்க.. டான்ஸ் எல்லாம் பண்ணியிருக்கீங்களா.. சூப்பர்..

  ReplyDelete
 6. the music instrument name called Hang drum.
  i seen in Spain and Italy..

  ReplyDelete
 7. ஒவ்வொரு பதிவிலும் உங்களின் அசாத்திய உழைப்பு தெரிகிறது! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 8. ஆரம்ப அறிமுகமே அற்புதம்
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. சூப்பர் நண்பா... வாழ்த்துகள்...

  படங்களும் கொஞ்சம் எழுத்துக்களும் விலகிப் போயிருக்கு.... பாத்துக்கோங்க...

  ReplyDelete
 10. அட கிரிக்கெட் மேட்ச் highlights மாதிரி best எல்லாம் வருமோ !

  ReplyDelete
 11. சிறப்பான பதிவுகள், பாராட்டுகள்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது